பனஞ்சோறு---PANANCHORU
பனஞ்சோறு
----------------------
இரவு எட்டுமணி இருக்கும் ,நான் என் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன்.
நான் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் நூழைய பைக்கை திருப்பவும் ,தமிழ்நாடு அரசு மின்சாரத்தை நிறுத்தவும் (பவர் கட்)சரியாக இருந்தது.
மொத்த ஊரையும் இருள் சூழ்ந்து கொள்ளவே என் வாகனத்தின் ஹெட்லைட் பிரகாசித்தது..
திடீரென்று பைக்கின் குறுக்கே ஒரு உருவம் பாய்ந்தது…நெடு நெடுவென்று வளர்ந்த அந்த உயரமான உருவம் முன்னும் பின்னும் தள்ளாடியது…
.குடிகாரபயலுவ……..நான் மனதிற்குள் திட்டி தீர்த்தேன்……
இப்போது என் வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த உருவத்தை யார் என்று பார்த்தேன் ..ம்…..
அவன் தாமஸ்……
அவனும் என்னை அடையாளம் கண்டுகொண்டான்..(ஒரே ஊர் காரனாச்சே..)……
என்னை பார்த்து ..சிரித்தான்…
…சிரித்தான் என்று கூறுவதைவிட இளித்தான் என்றுதான் கூறவேண்டும்…..
இளமையை தொலைத்த உடலும்… ,குடித்து கெடுத்த முகமும் …அவன் பற்கள் விகாரமாக…இருந்தது அது ருஷ்ய கதைகளில் வரும் ஓநாயை எனக்கு நினைவு படுத்தியது..தள்ளாடி தள்ளாடி இருட்டில் மறைந்து விட்டான்.
அவன் போய்விட்டாலும்……எனக்கு அவனோடு நான் சிறுவயதில் தின்ற பனஞ்சோறு நினைவுக்கு வந்தது….
ஏன் இது இப்போது நினைவுக்கு வருகிறது…தெரியவில்லை
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்
..கிராமத்தின் எல்லா இலட்சணங்களும் எங்கள் ஊருக்கும் உண்டு…
குளம் உண்டு .வாய்க்கால் உண்டு ..கிணறுகள் உண்டு…
ஏகப்பட்ட மரங்கள் உண்டு…யார் வீட்டிலும் காம்பவுன்ட் சுவர் கிடையாது..ஆகவே எங்கு போக வேண்டுமோ அந்த திசையை நோக்கி குறுக்கே எளிதாக செல்லலாம்…
என் நிலம் ஏன் இதற்குள் வந்தாய் .?என யாரும் கோபப்பட மாட்டார்கள். ஊரை சுற்றி பனங்காடு… .சரியாக சொல்ல வேண்டும் எனின்.. நம்மால் ஊடுருவி பார்க்க முடியாது. .அவ்வளவு நெருக்கமாக பனை மரங்கள்…..
அந்த…நிலங்கள் எல்லாமே சாய்பு மார்களுக்கு சொந்த மானது…ஆனால் இந்த பனைகளின் ஏக போக உரிமை மட்டும் எங்களுக்கு தான்..
முதலில் நுங்கு சீசன் ஆரம்பமாகும்....இராவோடு இராவாக கள்ள நூங்கு வெட்டப்படும் .
.அதாவது….நடுச்சாமத்தில் பனையேறி நுங்கு குலையை கயிற்றில் கட்டி மெல்ல மேலிருந்து கீழே இறக்குவார்கள்…
சத்தம் இல்லாத களவு….
அடுத்து அதன்பின் நுங்கு பழுத்து பனம்பழம் ஆகும்…
நாங்கள் காலை ஐந்து மணிக்கு கண் முழித்து ஒவ்வொரு பனையாய் தேடி போவோம்.
கிழே விழுந்து கிடக்கும் பனம் பழம்கள் எங்கள் சொத்தாகும்….பொறுக்கிய பனம்பழத்தை மனல்போட்டு முடி கிழங்காக்கி,அதை பொங்கலுக்கு பிடுங்கி விற்று காசாக்குவோம்.
காற்று காலங்களில் இந்த பனைகள் போடும் சத்தம் பயங்கரமாய் இருக்கும். காற்று வேகமாக வீசம்போது, காய்ந்த ஓலைகள் பனையோடு மோதி சல சலவென்று சத்தம் எழுப்பும். அதுவும் ஒரே சமயத்தில் நூற்று கணக்கான பனையில் இருந்து ஒலி எழுப்பினால் எப்படி இருக்கும்..
கடல் ஓங்காரமிட்டு வருவதை போல இரைச்சலாக இருக்கும்…
வீட்டிற்கு விருந்தாடி வருபவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து காலையிலே அவர்கள் இரவில் பயந்ததை சொல்லி சொல்லி சிரிப்பார்கள்……
மின்சாரம் எங்கள் ஊருக்கு வந்த நாள் நாங்கள் எவ்வளவு சந்தோசபட்டோம் என்றால் ..அதை சொல்லி முடியாது….
.மின் விளக்கு மாட்டபட்ட அந்த கம்பத்தை தந்தி போஸ்ட் என அழைத்தார்கள்..(தந்திக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..)
..பெரியவர்களும் சிறுவர்களும் இரவு சாப்பாட்டை அந்த மின்விளக்கின் வெளிச்சத்திலே சாப்பிட்டு விட்டு பின் அங்கேயே நீட்டி நிமிர்ந்து(தூங்கி..)விடுவார்கள். அவ்வளவு சந்தோசம்…….
மின் வெளிச்சத்தில் சிறுவர்களாகிய நாங்கள் விதவிதமான விளையாட்டுகளை கண்டு பிடித்து விளையாடி மகிழ்ந்தோம்.
எல்லா விளையாட்டுமே மண்ணோடு சம்பந்தபட்டதாகவே இருந்தது. முடிவில் மண்ணை அள்ளி ஒருவர்மீது ஒருவர் வீசி களிப்படைந்தோம்...
வெள்ளை அடிக்கபட்ட சுவரு போலத்தான் எங்கள் உடல் முழுவதும் இருந்தது….
என் வீட்டில்தான் மின்பொறியாளர் முதல்முதலில் பியுசை பொருத்தி லைட்டை எரிய விட்டார்….
அது எங்களுக்கு மிகப்பெரிய கொளரவத்தை அந்த நாளில் கொடுத்தது….
என் தகப்பனார் அந்த நிகழ்வை சிலேகித்து கொஞ்சம் செட்டப் பண்ணி மிகைபட மற்றவர்களுக்கு எடுத்து திரித்து கூறுவார்….
எல்லார் வீட்டிலும் சாயங்காலம் ஆனதும் முதலில் லைட் போடுவதற்கு முன் சுவிச் பக்கத்தில் சென்று கண்களை மூடி ஜெபம் செய்து விட்டுதான் லைட்டை போடுவார்கள்..அது எதற்கென்று இந்நாள்வரை எனக்கு தெரியவில்லை
எப்படியோ மின்சாரமும் வந்தது .
கிராமம் மெல்ல மெல்ல தன் சுய ரூபத்தை இழக்க ஆரம்பித்தது……
ஊரை சுற்றி இருந்த பனங்காட்டை ஒரு சாய்பு யாரிடமோ விற்றுவிட ,வாங்கியவர்கள் முதலில் பனைகளை வெட்ட ஆரம்பித்தார்கள். பனைகள் வெட்டபட்டு தரையில் விழும்போது அலறி…………ஓ…..வென்ற ..சத்தம் எழுப்பி விழும்……
.ஒவ்வொரு முறையும் அது தொம்..தொம் ..மென்று விழும்போது… எனது தாத்தா அந்த பனையை வெட்டுபவனையும் , விற்றவனையும் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்…
ஆனால் சிறுவர்களுக் கென்னவோ அதுவும் கொண்டாட்டம்தான் . ஏனென்றால். பனங் குருத்து (இளம் ஓலை) இலவசமாய் கிடைக்கும்…தின்றால் ருசியாக இருக்கும்.. அடுத்து பனையை நான்கு துண்டங்களாக பிளப்பார்கள். பின்பு செதுக்கி வளையாக்கி வண்டியில் ஏற்றுவார்கள்…..
நாங்கள் துண்டாகி கிடக்கும் பனையின் உள் மத்திய பகுதிமேல் கவனம் செலுத்துவோம்……அதுதான் பனம் சோறு…..அதை வெட்டி வைத்து கடித்து தின்போம் ..சிலது உப்பு காய்த்து கிடக்கும், சிலது இனிக்கும்……இனிக்கின்ற பனையை அதன்பக்கத்திலே உட்கார்ந்து வெட்டி வெட்டி தின்று வாய்வலித்த பின்தான் இடத்தை காலி செய்வோம் ..
அப்படி பட்ட ஒரு நாளில்தான் தாமஸ் என்னிடம் வந்தான்…பனஞ்சோறு வெட்ட போவோமா…….என்று கேட்டான்…ம்……போவோம் என்றேன்…..
அருவாள எடுத்துகிட்டு வா.. என்றான்……
நான் என் தாத்தாவின் உடைமையான பாளை அரிவாளை எடுக்க போனேன்…..அந்த அரிவாள் என் தாத்தா பனை தொழில் செய்யும்போது அவர் உபயோகபடுத்தியது…..லேசில் மற்றவர்களுக்கு தரமாட்டார்….
.சரி எடுத்தாச்சி………
கோதர் பாய் கடையை தாண்டி சென்றோம்.
கடையில் அவித்த சீனி கிழங்கு ஒரு தட்டில் குவியலாக வைக்க பட்டிருந்தது..நான் தாமசை பார்த்தேன் ..தாமஸ் வானத்தை பார்த்து கொண்டிருந்தான்…எனக்கு தாமசை பார்க்க பாவமாக இருந்தது.அவன் ரொம்ப அமைதியானவன்….ஒரு ஓலை குடிசைதான் அவன் வீடு….
சாய்வாக இறக்கபட்ட கூரை..
..சின்ன தின்னை.
அதன் அருகே அடுப்படி……
தாமஸ் அம்மா பாளையங்கோட்டையில் உள்ள கண்தெரியாதோர் பள்ளியில் தோட்ட வேலை செய்து எதோ சம்பாதிக்கின்றார். தாமஸ் தகப்பனார் கல் உடைக்கும் வேலை செய்வார்…..இரண்டுநாள் வேலை செய்வார் .நான்கு நாள் சும்மா இருப்பார் .கையில் இருக்கும் காசை குடித்து அழிப்பார்..
ஆகவே தாமஸ் வீட்டீல் நிரந்தர பட்டினிதான்..
இரவு சாப்பாடு நிச்சயம் உண்டு..காலையில் பழைய கஞ்சி இருந்தாலும் இருக்கும்..மதியம்’ பட்டினிதான்…..இந்த விபரம் எனக்கு பிந்திய நாட்களில்தான் தெரிய வந்தது…
ஆக…..கோதர்பாய் கடையை ஏக்கத்துடன் கடந்தோம்…ஒரு விதமாய் பனை வெட்டப்படும் இடத்தை அடைந்தோம்.
.அது உச்சி மத்தியானம்…பல சிறுவர்களும் சில பன்றிகளும் பிளந்து கிடந்த பனையின் சோற்றை தின்று கொண்டிருந்தார்கள்….
தாமஸ் ஒரு பன்றியை விரட்டினான் …..பன்றி திங்காத இடத்தில் ஒரு வெட்டுவெட்டி பனஞ்சோற்றை தின்று (சுவைத்து..)பார்த்தான்
..தூ..என்று துப்பி விட்டு வேறு பனைக்கு சென்றான் …
.இப்படி பல பனைகளை சோதனை செய்து முடிவில் தாமஸ் முகம் மலர்ந்தது..
நானும் அவனும் அந்த பனையின் அருகே உட்கார்ந்து வாய் வலிக்க தின்றோம்..
தாமஸ் அவன் கழுத்தில் இருந்த துண்டை விரித்தான்…
நான் வேகமாக பனையை வெட்ட ஆரம்பித்தேன்.
ஓங்கி ஒரு போடு….
அரிவாள் ஆழமாக இறங்கியது..
வெளியே இழுத்தேன் ,அது வர மறுத்தது…
பக்கவாட்டில் அசைத்து பார்த்தேன் ..டப் பென்ற சத்தம்வந்தது….
.எனக்கு திக் கென்றது.அரிவாளை கஷ்டபட்டு வெளியே எடுத்தேன் .அரிவாளின் கூர்மையானஅடிப்பகுதியில் கீறல் விழுந்து இருந்தது…
..எனக்கு உடம்பு சில்லிட்டது..
செத்தேன்..
தாத்தா இன்று கொன்று போடுவார்..
என்ன செய்வது..
தாமஸ் ......போதும் என்றேன் ..
அவனுக்கு அந்த பனையை விட்டு வர மனம் இல்லை..அவன் அரிவாளை வாங்கி கொஞ்சம் வெட்டினான்..
எனக்கு மனதுக்கள் பயமாக இருந்தது….இன்னும் அதிகமாய் அரிவாள் சேதம் ஆகிவிடக்கூடாதே…ஆகவே நான் அரிவாளை வாங்கி கொண்டேன் .
தாமஸ் அவன் துண்டில் வெட்டபட்ட பனஞ்சோற்றை கட்டி தலையில் வைத்து கொண்டு நடந்தான்;;
.நான் என் வீடு நோக்கி நடந்தேன் .அவன் அவன் விட்டுக்கு சென்று விட்டான்…
என் விட்டில் என் தாத்தா தயாராய் இருந்தார்…….
அருவாள எங்கல……..இங்க கொண்டா…
..நான் கொடுத்தேன்..
அவர் கையில் வாங்கியதும் கண்டு பிடித்து விட்டார்…
கோபத்தால் கண்கள் சிவந்தது…
அருவாள உடைச்சிட்டா வந்திருக்க…?…..கையில் அகப்பட்ட மட்டையை எடுத்து என்மீது அடித்தார்..நான் லாவகமாக தப்பி விட்டேன் .கோபம் உச்சகட்டத்தை அடைந்தது.
மீண்டும் மட்டையை என்னை நோக்கி வீசினார்….நான் குனிந்து தப்பினேன் .இனி இங்கே இருப்பது ஆபத்து என உணர்ந்தேன்.குறுக்கு வழியாக தாமஸ் வீட்டை அடைந்தேன்.
தாமஸ் அந்த ஓலைக் குடிசையில் காலை மடக்கிகொண்டு சுவற்றில் சாய்ந்து உட்காந்து கொண்டிருந்தான்….இரண்டு கால்களுக்கு இடையே பனஞ்சோறு துண்டின் மீது இருந்தது.
தாமஸ் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல கண்கள் மூடிய நிலையில் இருக்க ,வாய் மட்டும் பனஞ்சோற்றை அசை போட்டு அதன் சாற்றை விழுங்கி சக்கையை துப்பி கொண்டிருந்தது….
நான் மெல்ல..தாமஸ் ..என்றேன்..
பாதி கண்களை திறந்து என்னை பார்த்தான் .
சாப்பிட்டியா ..?என்றேன்..
அவன் பேசவில்லை.மெதுவாக கண்களால் பனஞ்சோற்றை காட்டினான்.
மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்..
வாய் மட்டும் தொடர்ந்து வேலை செய்தது.
நான் பக்கத்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன்..எனக்கும் பசித்தது…இனி என் வீட்டீல் என்னைத் தேடும்வரை நான் காத்திருக்வேண்டும்…..
என் பாட்டி தெருவில் நின்று கொண்டு சத்தமாக…….ஏ…..லே……....சாலமோ………..ன்…….என்று கூப்பிடும் வரை
நான் காத்திருக்கவேண்டும்…..
எனக்கு பசித்தது……தாமஸ் சாப்பிட்டு கொண்டிருக்கிறான் ….நானும் மெதுவாக பனஞ்சோற்றின் ஒரு துண்டை எடுத்து கடித்தேன்..அது உப்பு கரித்தது….
ஆனால் தாமஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை…..அவனை பொறுத்தவரை ………அவன் சாப்பிட்டுகொண்டிருக்கிறான்.........…பனஞ்சோறு……

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக