2025பதிய வருடத்திற்கான நற்செய்தி....
----------------உலகில் நிம்மதியாக வாழும் மக்கள் நிங்கள் என்றால் இதை படிக்க தேவையில்லை.
---------
புதிய வருடத்திலாவது ஒரு விடுதலையை கர்த்தர் கொடுத்தால் நன்றாக இருக்குமே என எண்ணும் யாராக இருந்தாலும் இதை படியுங்கள்.
ஒரு வேளை இதன் மூலமாக ஆறுதலை பெற வாய்ப்பு இருக்கிறது.
ஒருவருக்கொருவர் ஆறுதலான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது நல்லதுதான்.
--------------------------------------------------------------------------
1தெச-5:11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
சரி இனி விஷயத்திற்கு வருவோம்.
நமக்கான அடிமைத்தனமும் துயரமும் சமாதான குறைவும் வருவது அனேகமாக நமது கடந்த கால வாழ்க்கையின் பிரதி பலனாகவே இருக்கலாம்.
சில நேரம் நமக்கு எந்த தொடர்பும் இல்லாத பிரச்சனையில கூட நாம் சிக்கி தவிக்கலாம்.
நோய்களின் துயரமும் அப்படியே..
எது எப்படி இருந்தாலும் இன்று விடுதலை தருவது கர்த்தரின் கரத்தில் இருக்கிறது என்பது நூறு சதவீதம் உண்மை.
இஸ்ரேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக மாற்றப்பட்டபின் விடுதலைக்காக ஏங்கினார்கள். ஆனால் ஒரு காரியத்திற்காக அவர்களின் விடுதலைப் பயணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது ஒரு குறிப்பிட்ட நாளில் விடுதலை பயணம் துவங்கியது..
யாத்திராகமம்12;:;7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
-----------------------------------------------------------------------
புதிய வருடம் பிறக்கப் போகிறது. நிச்சயமாக விடுதலையடைவீர்கள். ஆனால் அதற்கான ஆயத்தமான ஆட்டுக் குட்டியின் இரத்தம் உங்கள் வீட்டு நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்க வேண்டும் என்பது முதல் விதியாக இருக்கிறது.
-------------------------------------------------------------------------------
2கொரி-3:17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவர் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பின் நிச்சயம் உள்ளவர்களாக மாற வேண்டும் என்பது தேவ சித்தமாக இருக்கிறது..
புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
ஆகையால்இ நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியேஇ புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்லஇ துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரி.5:7-8).
-----------------
கசப்பு என்பது மரணத்தையும் பாவத்தையும் குறிக்கிறது…
வாழ்க்கையில் கிறிஸ்துவால் மீட்பை அல்லது விடுதலையை பெற கிறிஸ்துவின் பாடு மரணங்களை நினைத்து நமது கசப்பான பாவ வாழ்க்கை நினைப்து அவசியமாக இருக்கிறது.
யாத்திராகமம்12:41
நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்த ஜனம் விடுதலை பயணத்தில் புறப்பட்டது.
உண்மையாகவே இப்படி நடக்கத்தான் செய்யும்…
நமது சத்தம் தேவ சமுகத்தில் நிச்சயம் கேட்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் அதற்கான வேளை வரும் வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது..
சரி புறப்பட்டுவிட்டோம்..
இனி நாம் வழி நடக்கும் இடமோ வனாந்திரம். மொத்த ஜனமோ பல லட்சம்.
. ----
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
------
விடுதலை கிடைத்த பின் நமக்கு ஏற்படும் கவலை இதுதான்..
.இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். முதலாவது பகலில் வெயில் தாக்கம் ஏற்படாதவாறு உங்களை பாதுகாக்க மேக ஸ்தம்பமும் இரவில் வெளிச்சத்திற்காக அக்கினி ஸ்தம்பமும் ஏற்பாடு செய்த தேவன் உங்களுக்கான மன்னாவை தரவும் ஆயத்தமாக இருக்கிறார்..
கன்மலையாகிய கிறிஸ்துவில் இருந்து தண்ணீரை குடிப்பீர்கள்.
--
இது நடைமுறை வாழ்க்கையில் அதிசயமானது..
இந்த வாழ்க்கையை பூமியில் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் முதல் நபர் அல்ல..
இப்படி நடப்பதற்கு வாய்பபே இல்லை என்பது விஞ்ஞானம், அதை நடத்திக் காட்டுவது விசுவாசம்..
தங்கள் வாழ்க்கை தங்கள் முடிவு என எண்ணினால் அந்த முடிவுக்கு கர்த்தர் காரணம் அல்ல.
என் வாழ்க்கை கர்த்தரின் கரத்தில் என எண்ணினால் எல்லா நாளும் சுகமான நாளே..
எதிர்வரும் நாட்களில் என்வெல்லாமே நடக்குமோ நாம் அறியோம்.
எல்லாவற்றிலும் நாம் செய்யக் கூடிய ஒரு விண்ணப்பம் .
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,
எப்போதும் நான் வீராதி வீரன், சூராதி சூரன் என மார்தட்டாமல் ஆண்டவரே என் பெலவீனத்தில் உமது பெலன் தாங்க வேண்டுமே என வேண்டுவோமாக.
நிச்சயமாக
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர் நமது வாழ் நாள் முழுவதும் நம்மை தாங்குவார்.
கவலைபடவேண்டாம் புதிய வருடத்தை கர்த்தரின் கரத்தினில் எதிர்பார்ப்போம்.
நலமாக வாழ வழி செய்வார் ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக