கிறிஸ்து பிறப்பை பற்றிய எனது இரண்டாவது செய்தி(2024)
---------------------------------------------------------------------------------------------------------
லூக்கா 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
கிறிஸ்து பிறப்பை பற்றி மேய்ப்பர்களுக்கு தூதனால் சொல்லப்பட்ட செய்தி இதுதான்.. சரி இதை மேய்ப்பர்கள் எப்படி புரிந்து கொண்டனர்.?
-------------------------------------------------------------------------------------------
லூக்கா2:. 16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 17கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
அவைகளைக் குறித்து…
.
.எவைகளை குறித்து .?அதாவது தூதன் வந்தது.
செய்தி சொன்னது.
அந்த செய்தியில் “இரட்சகர்” என்று குறிப்பிபடப்பட்டது..
தூதன் சொன்னது போல மேய்ப்பர்கள் சென்று கிறிஸ்துவை கண்டது…
இதை ஒரு கோர்வையாக சொல்லப்பட்ட போது ஆடே..அப்படியா.? ஆச்சரியமா இருக்கே என்று வியந்துவிட்டு மற்றவர்கள் கடந்து சென்று விட்டார்கள்..
நாமும் கூட கிறிஸ்து பிறப்பு நாளில் ஆலயத்தில் போதகர் பிரசங்கம் பண்ணும் போது
…எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்… என்று தூதனால் சொல்லப்பட்டது என்று சொல்லும் போது..பிரசங்கியார் தனது முகத்தை மலர்ந்த விதமாக வைத்திருப்பார்…
நாமும்; சிரித்த வண்ணமாக முகத்தை வைத்துக் கொள்ளபிரயாசப்படுவோம்…
பரலோகத்தை பற்றி பிரசங்கம் செய்யும் போதும் முகத்தை மலர்ந்த விதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இது எழுதப்படாது சட்டம்..
உண்மையில் பரலோகத்ததை பற்றி நமக்கு எதுவும் தெரியாது..
----------------------------------------------------------------------------------------------
யோவான் 3:12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
------------------------------------------------------------------------------
நாமே ஏதோ கற்பனையில் உதித்ததை வைத்து மகிழ்ச்சியடைகிறோம்…
தங்கத்தாலான சாலைகள்….
பளிங்கு நதிகள..
ஜீவ விருட்சத்தின் கனிகள் நிறைந்த மரங்கள்.
அப்புறமா எப்போதும் பாடல்கள்….
இப்படி நாம் கேள்விப்பட்டதை வைத்து எல்லாம் புரிந்தது போல ஒரு பாவனை செய்து கொள்வோம் . அவ்வளவே
பளிங்கு நதியில் அந்த கல்லில் போய் மோதினால் மண்டை என்னவாகும்..
பசியே இல்லாத ஓரு நாட்டில் கனிகள் இருந்து என்ன இல்லாமல் போனால் என்ன.?
இப்படி எல்லாம் யோசிக்கிறதே பாவமாச்சுதே..என்பார்கள்..
இயேசு பரலோகத்தை பற்றி என்ன சொன்னார் என்று கவனித்தால்..நாம் கணித்து வைத்திருக்கும் பரலோகத்திற்கும் உண்மை பரலோகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது..
சரி…எப்படியோ நாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரு காரணம் நமது அறிவுக்கு எட்டியபடி சிந்தித்து மகிழ்சியாயிருக்க வேண்டியது தான்..
சிறுவர்களுக்கு பரலோகத்தை பற்றிய ஒரு பாட்டு
-
ஓர் வெண்ணங்கி
ஓர் பொண்முடி
ஓர் வாத்தியம்
ஒரு மேல் வீடு
ஓயா இன்பம்
எனக்குண்டு மோட்சத்தில்…..மோட்சம் இவ்வளவுதான் ..
( இது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்றால் அது நல்லதே )
இதைப் போலவே மேப்பர்களுக்கு சொல்லப்பட்ட செய்தியில் ஒரு பகுதி….
எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை..
அதாவது இந்த செய்தி கேட்ட எல்லோருக்கும் அது மகிழ்ச்சியை அளிக்குமாம்….உண்மையில் அப்படி நடந்ததா..? என்பதே எனது கேள்வி.
-
கிறிஸ்து பிறப்பை பற்றிய முதல் செய்தி மரியாளுக்கு கிடைத்து. அந்த தாய் மகிழ்ந்தார்களா..?
லூக்கா 1:29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால்.. கலங்கி,… இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
--------------------------------------------------------------------------------------------------
இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பின் நிலையைப்பாருங்கள்
மத்தேயு 1:18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அடுத்து
இயேசுவைக் காண வந்த சாஸ்திரிகள் நிலையோ படுமோசமாக இருந்தது..
மத்தேயு 2:12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
சாஸ்திரிகள் திரும்பி escape அகி போகும்போது மட்டும் ஏரோதின் கையில் அகப்பட்டிருந்தால் அவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
நாம் பேச்சி வழக்கில் சொல்வோமே….
..சாஸ்திரிகளின் தோலை உரித்து தொங்கவிட்டிருப்பான்…
-
எப்படியோ தப்பித்துவிட்டார்கள்…நல்லது ..
ஆக மரியளின் சந்தேஷம் எப்படி இருந்தது என விளங்கவில்லை..
இது சிலுவை மரம் வரை தொடர்ந்தது..
மௌனமாகவே காலத்தை கடந்து முடித்தார்கள்.
யோசேப்பின் நிலமை படுமோசம்..அவன் நல்ல மனிதன்..நீதிமான்..
ஏரோதின் நிலையோ பயங்கரம்.
பல ஆயிரம் குழந்தைகளின் உயிரை பறித்த கொலைகாரனாகிவிட்டான்..
ஆனால் மேய்ப்பர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளித்தது. அவர்களால் சொல்லபட்ட செய்தியை கேட்வர்களும் மகிழ்ந்தார்கள்..இது உண்மை
-
சில காரியங்கள் கர்த்தரால் வெளிப்படுத்தப்படும் போது எல்லோராலும் அதை வெளியே சொல்ல முடிவதில்லை..
உதாரணமாக சாமுவேலிடம் கர்த்தர் பேசியதை ஏலியிடம் சாமுவேல் சொன்னான்.ஆனால் ஏலி அதை யாருக்கும் சொல்ல முடியவில்லை..
ஒரு செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்கிறார்கள்…இங்கே நான் சொல்லப்போவதும் அதுதான் ..
….எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி..
எல்லா ஜனம் என்றால் அது பூமியில் எல்லோருக்குமா?..அந்த எல்லோர் என்ற கூட்டத்தார் யார்.? என்பதே என் கேள்வி..
பூமியில் உள்ள அனைவருக்கும் என்றால் இந்தியாவில் கர்த்தரின் ஊழியர்கள் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது ஏன்? அந்த எல்லோருக்கும் என்பது இவர்களுக்கு இல்லையா?
ஆப்பிரிக்க கண்டத்தில் ஆதிவாசிகள் மத்தியில் உயிர் நீத்த கர்த்தரின் ஊழியர்களை கொன்றவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கவில்லையா.?உலகெங்கும் இப்படித்தானே இருக்கிறது
அதிகம் சொல்வானேன்…
இன்றய யூதர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பெயர் மகிழ்ச்சியை தரவில்லையே.அப்படியென்றால் அந்த “எல்லா ஜனம்” என்பது யார்.?
மேய்பர்களிடம் சொல்லப்ட்ட ஒரு வார்த்தையில் அவர் இரட்சகர் என்று அறியப்படுகிறது..
மீட்பர் அல்லது காப்பாற்றுபவர்.
ஏதோ ஒரு இக்ட்டில் இருந்து விடுவிப்பவர்.
நமக்காக போராடுபவர்.அது தானே இந்த வார்த்தையின் பொருள்….
மேய்ப்பர்களிடம் 'இரட்சகர்' என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால்…அவர்களின் பதில் எப்படி இருக்கும்
அவர்கள் கானகவாசிகள். உலகில் எந்த அரசாங்கம் ஆண்டாலும் மேய்ப்பர்களை அதிகம் துன்புறுத்தாது..
மேய்பர்களால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட போவதும் இல்லை..
ஒரு வேளை அன்றய ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற பிறந்தவர் என நினைத்திருக்கலாம்..
அவ்வளவே..
சாஸ்திரிகள் போல திட்டமாக ஒரு முடிவோடு போனவர்கள் அல்ல…
இந்த' இரட்சகர்' என்பதை இயேசு கிறிஸ்துவை குழந்தையாக கண்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்தால்..
----------------------------------------------------------------------------------------------------
லூக்கா 2: 25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26. கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------சிமியோனின் கருத்து…
(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி,
(2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமை
(3) சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
உம்முடைய இரட்சணியம்
(4) இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளம்.
இந்த சிமியோன் சாதாரண ஆள் அல்ல.அவனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவனுடையதும் அல்ல.காரணம்….25ம் வசனத்தில் சொல்லப்பட்டது போல “அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.”
-----------------------------------------------------------------------------------------------------பரிசுத்த ஆவியானவர் இரட்சகர் என்ற வார்த்தைக்கான பொருளை இலைமறைக் காயாக சொல்லிக் கொண்டே வருகிறார்..
நாம் ஆலயத்தில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று வாசிக்கப்பட்வுடன் எல்லாம் புரிந்தது போல மகிழ்ந்திருப்போமே. அப்படி அந்த நாட்களில் யாரும் புரிந்து கொள்ளவில்லை..
நாமே முழுவதும் புரிந்து கொண்டு விட்டோமா.? என்பது அடுத்த கேள்வி.
ஒருவேளை சிலுவை மரணக் காலங்களை கடந்து நாம் இருப்பதால் 75 சதவீதம் நாம் புரிந்தது உண்மைதான்…
---------------------------------------------------------------------------
சரி..இனி அடுத்து யார் என்று கவனிப்போம்
லூக்கா2:36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
அன்னாளில் பேச்சின் முழுமை நமக்கு கிடைக்காததால் இதை விட்டு விடலாம்…ஆக இப்படியே காலங்கள் நகர்கிறது..
-
யோவான் ஸ்நானகன் .இந்த மர்ம முடிச்சிக்கு ஒரு சிறிய விளக்கம் கொடுக்கிறார்..
லூக்கா3:17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
.இயேசு கிறிஸ்துவை குறித்து யோவான் ஸ்நானகனின் விளக்கம் இதுவும் உவமையாகவே இருக்கிறது.
(1)தூற்றுக் கூடை இயேசுவின் கையில் இருக்கிறது..
(2)கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்;
(3)பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்
இரண்டு கூட்டத்தார் இங்கே இருக்கிறார்கள்..
களஞ்சியத்தில் சேர்கக்ப்படும் ஒரு கூட்டம்
பதர்களான அக்கினிக்கு இரையாக்கப்படும் மற்றொரு கூட்டம்..
இதில் “எல்லா ஜனம்” என்பது இங்கு யாரை குறிக்கிறதோ
அவர்களுக்கு மகிச்சியளிப்பதுதான் இயேசுவின் பிறப்பின் செய்தி.
மற்றவர்களுக்கு நிச்சயமாக இல்லை..
இறுதியாக இயேசுகிறிஸ்துவே இதை பற்றி சொல்கிறார்..
-
மத்தேயு 13: 37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
நல்ல விதைகள் ஒரு கூட்டத்தார்
களைகள் ஒரு கூட்டத்தார்
.
இந்த காலத்தில் இந்த இரண்டு கூட்டத்தாரைப் பற்றிய செய்திகளை ஆலயத்தில் நிறைய கேட்டிருப்பீர்கள்….
ஆகவே “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும”; என்ற வார்த்தைக்கு ஆழமான பொருள் உண்டு.. சாதாரணமான எல்லா ஜனம் அல்ல.இவர்கள் வேறு கூட்டத்தார்
இன்னும் அதிகமான விளக்கங்களை கர்த்தர் உங்களுக்கு நீங்கள் தியானிக்கும் போது உங்களுக்கு அருள்வாராக…முடிவாக அப்போஸ்தலனாகிய பவுலடியாரின் வார்த்தைகளோடு முடிக்கிறேன்..
-
51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56. மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58. ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியிளிக்கிறதா இல்லையா என்று உங்களை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்..
தூதன் சொன்ன' எல்லோருக்கும் 'என்ற கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்க கர்த்தர் உதவி செய்வாராக….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக