கிறிஸ்துமஸ் நற்செய்தி...
நான் இதுவரை கிறிஸ்துமஸ் செய்தி எதுவும் எழுதவில்லை..
நிறைய கிறிஸ்து பிறப்பை பற்றிய பாடல்கள் எழுதியிருக்கிறேன்….அதில் அதோ ஒரு நட்சத்திரம் என்ற பாடலில்…. 1.
வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரே
ஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரே
சின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்
அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் என…..இதொடர்கிறது..
இன்றும் அந்த ஞானிகளை பற்றி சிந்தித்தேன். அதனால் எழுதுகிறேன்..
..
கிறிஸ்துமஸ் செய்தி (2024)
1. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
இயேசு பிறந்த போது அவரைப் கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் வந்தார்கள். கிழக்கில் என்றால் அது எந்த நாடு என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லாதது..
இந்தியா என்று அடித்து சொன்னாலும் சரி ஆப்கானிஸ்தான் என்று அடிக்காமல் சொன்னாhலும் சரி. நமக்கு அதனால் ஒன்றும் இல்லை
…..
இப்போது சாஸ்திரிகளை கவனிப்போம்
…
சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தை புதிதாக பார்த்து இது யூதருடைய இராஜா பிறக்கும்போது உதிக்கின்ற ஒன்றல்லவா ? என்று நினைத்து உடனே நேராக கிளம்பி எரோதின் அரன்மணைக்கு வந்து விட்டர்கள்..அவர்கள் படித்த சாஸ்திரத்தில் அப்படி இருந்திருக்கிறது..நல்லது
---------------------------------------------------------------------
இந்த நட்சத்திரம் பற்றி….
எண்ணாகமம் 24:1717. அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
சரி…..
இந்த சாஸ்திரிகளின் முதல் பார்வை சரிதான்.
ஆனால் அவர்களின் அறிவு அவர்களை ஒரு கோளாராண இடத்தில் கொண்டு போய்விட்டது.
அது ஏரோதின் அரண்மனை..
அங்கே போய் நின்று கொண்டு தெனாவெட்டாக கேட்கும் கேள்வியைப் பாரங்கள்..
யூதருடைய இராஜா எங்கே..? அவர் இங்கே தானே பிறந்திருக்க வேண்டும்.
சொல்லுங்க..சொல்லுங்க..
சாஸ்திரிகள் கொஞ்சமும் அறியாத ஒரு காரியம்…
ஏரோது இராஜா யூதன் அல்ல. ஆகவே யூதருடைய இராஜா அங்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது..
------
இன்றைக்கு பலரின் வெளிப்பாடு இப்படி இருக்கிறது. உலகில் உள்ள அறிஞர்கள் பட்டியலில் இயேசுவையும் சேர்த்துவிட்டு அவர் இங்கேதான் இருக்கிறார்.
மற்ற அறிஞர்களை போலவே இயேசுவும் ஒருவர் என வாதிடுவது..
இந்த தேடலினால் எந்த பயனும் ஏற்பட போவது இல்லை..
சரி.. சாஸ்திரிகளின் தேடலில் முதல் தோல்வி முடிந்ததும் .
விதியில் இறங்கி சோகத்துடன் நடக்கின்றனர்.
சோகம்னா சோகம் அப்படி ஒரு சோகம்..
அப்புறமாக வானத்தை பார்த்து பழைய படியும் நட்சத்திரத்தை தேடுகின்றனர்
----------------------------------------------------------------------------------------------------மத்தேயு 2: 9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
அட .இதோ இருக்கு… பாரேன்… என்று நட்சத்திரத்தை பின் பற்றி சென்றனர்..
அப்போ இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் சாஸ்திரிகள் ஏரோது அரண்மனை வந்து சேர்ந்து “ பல்பு “வாஙகும் வரை நட்சத்திரத்தை பார்க்கவும் இல்லை அதை தேடவும் இல்லை..அதை தொடரவும் இல்லை
-
அதற்கப்புறம்தான் அந்த அதிசயம் நடக்கிறது…
---------------------------------------------------------------------------
அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது.
எல்லாமே சரிதான்.
ஆனால் ஒரு நட்சத்திரம் என்பது என் வீடு பாளையங்கோட்டையில் இருந்து பார்த்தாலும் உங்க வீடு திருச்சியில் இருந்து பார்த்தாலும் ஒரே இடத்தில் இருக்கிற மாதிரிதான் இருக்கும்..
ஆனால் இங்கு அந்த நட்சத்திரம் பிள்ளை இருக்கும் ஸ்தலம் வரை அதாவது அந்த இடம் வரை அவர்களுக்கு வழி காட்டி அதன் பின் அசையாமல் நின்றது. என வேதம் சொல்கிறது.
அப்போ அவ்வளவு பக்கத்தல தெரியுற மாதிரி வந்திருக்கிறது…
அதாவது ஒரு நூறடிக்கு மேலே தெரிகின்ற மாதிரிதான் இருந்திருக்க வேண்டும்..
இங்கே இவர்களின் அறிவு பூஜியம் ஆகிவிட்ட பின் கடவுளுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே நினைக்கிறேன்..அவர்கள் கண்களுக்கு மட்டும் அப்படி தெரிந்திருக்கலாம் அல்லவா?
இது ஒரு அதிசயம்.
--------------------------------------------------------------------------------------------
எப்படி இவ்வளவு திட்டமய்; சொல்கிறேன் என்றால் “நிற்கும் வரை” என்ற வார்த்தையை கவனியுங்கள்..அப்போ சாஸ்திரிகள் நட்சத்திரத்தை கடந்து கொஞ்ச தூரம் வரை சென்று.. அட ..”அது இங்கிட்டு வரலப்பா..அதோ அங்கே நிற்குது பாரு” என கூறிவிட்டு பிறகு Reverseல வந்திருக்க கூடும் என யூகிக்கிறேன்..
சரி எப்படியோ கண்டு பிடிச்சாச்சி.
இனி ஏரோதிடம் போய்; சொல்ல வேண்டும் அல்லவா..
அதுக்கும் ரெடியாயிட்டாங்க..
அப்போ என்ன நடந்தது..-
-------------------------------
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
இந்த வசனத்தில் தேவனால் “எச்சரிக்கப்பட்டு” என்ற வார்த்தையை கவனிக்கவும்…
---------------------------------------------
அடேய் .... திரும்பி பார்க்காம “மரியாதையா வேறு வழியாய் ஊர் போய் சேருங்க” கர்த்தர் உரக்க சொல்ல .
சத்தமில்லாம ஊர் போய் சேர்ந்தார்கள் என்று வேதம் நமக்கு சொல்லி முடிக்கிறது..
--------------------------------------------------------
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்…
அறிவு ரொம்ப அவசியம்..
ஆனால் அது கர்த்தரை தேடும் போது அதை ரொம்ப அடக்கி வாசிக்க வேண்டும்..
அறிவை Use பண்ணினால் அது ஏரோதுவிடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.
நீங்க அங்க இருந்து தப்பி பிழைப்பதே பொரும்பாடு ஆகிவிடும்..உங்கள் நம்பிக்கை தவறோ என சந்தேகத்தை எழும்பச் செய்யும்…
விசுவாசம் என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது..
அற்புதங்கள் என்பது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது..
ஒன்றுமில்லாமையில் இருந்து கர்த்;தர் உருவாக்குவார். இது அறிவியலால் ஒத்துக் கொள்ள முடியாது..
கடவுளின் வெறும் வார்த்தையால் உலகம் உண்டானது என்று அறிவியல் ஒத்துக் கொள்ளாது..
இயற்கையே சகலத்தையும் தானாக உண்டாக்கியது என நமக்கு கல்வி ஆறு நாளும் போதிக்கிறது.
ஏழாவது நாள் ஆலயத்தில் போய் கர்த்தர் வார்த்தையாலே வானத்தையும் பூமியையும் படைத்தார் என நம்புகிறோம்…இந்த படிப்பில் நாம் முனைவர் பட்டமெல்லாம் வாங்கி பெறுமையடைகிறோம்
.சரி.. இது வேறு விவாதம்..
பவுலடியார் சொன்னது போல உலக கல்வியிறிவை குப்பை என நினைக்கும் இடத்திற்கு நாம் வந்தால் நல்லது..
பிலிப்பியர் 3: 11. ..அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
பவுலடியார் அந்த காலத்தில் மிகப் பொரிய படிப்பை படித்தவர் என கூறுகின்றனர்..
.இன்னும் ஒரு காரியம் சொல்கிறேன்.
இயேசுவோடு
அவர் சீடர்கள் படகில் ஒரு முறை பயணம் செய்து கொண்டிருக்கும் போது புயல அடிக்கிறது.. படகு புயலினால் ஆடுகிறது..
வசனத்தை கவனிப்போம்..
மத்தேயு 8: 23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
-----------------------------------------------------------------------------------------------------
கடலில் பெருங்காற்று உண்டானால் அலைகள் எழும்பத்தான் செய்யும்..
அலைகள் எழும்பினால் படகு கவிழத்தான் செய்யும்.
படகு கவிழ்ந்தால் உயிர் போகத்தான் செய்யும்..
ஆக இந்த சூழ்நிலையில் சீடர்கள் அலறியது சரிதானே…
இது உலக நீதி..
ஆனால் கர்த்தரின் வார்த்தை வேறு விதமாக இருக்கிறது. சூழ்நிலையைப் பாராதே.. உன் அருகே அமைதியாய் தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்டவரைக்; கவனி என்கிறது.
இது மிக கடினமான காரியம்தான் .
ஆனால் ஒரு விசுவாசியின் பயிற்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என வேதம் நமக்கு சொல்கிறது..
1கொரி-3:19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
20. ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
1கொரிந்தியர்.1:27.. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
முடிவுரை…நாம் கர்த்தர் தெரிந்து கொண்ட பாத்திரமாக இருக்க வேண்டும் என்றால் விசுவாசத்தை முன் வைத்து உலக ஞானத்தை பின்னுக்கு தள்ளி விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்துவை பின் தொடர்வோமாக….
அடுத்து இயேசுவைக் காண வந்த மேய்ப்பர்களைப் பற்றியது..
--------------------------------------------------------------------------------------
லூக்-2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
(1)மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி…..ஒரு மேய்ப்பன் இரவில் எங்கு இருக்க வேண்டுமோ அங்கே இருந்தார்கள்..
(2)தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்..
தமது உடமைக்கு சரியான பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..
ஒரு மனிதன் உலகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் கடமையில் தவறாது இருப்பதே கர்த்தர் அவனிடம் நெருங்க ஒரு காரணமாக இருக்கிறது. அதை வேதம் பாராட்டவும் செய்கிறது..
-------------------------------------------------------------------------------------------
நீதிமொழிகள்-22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
--------------------------------------------------------------------------------------------
ஒன்று.. அவன் இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.அல்லது இராஜாவின் ஆட்கள் அவன் முன்பாக நிற்பார்கள்..
இங்கே நான் இரண்டாவதாக சொன்ன காரியம் நடந்தது..
லூக்கா 2: 9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்
---------------------------------------------------------------------------------------------
கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்..
பல மந்தைகள் அவ்விடத்தில் இருந்தது.
எல்லா மந்தைகளிடத்திலும் அதனதின் மேய்ப்பர்கள் இருந்தார்கள்.
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்,
அதுவும் அவர்களின் நடுவே கர்த்தரின் தூதன் வந்து நிற்கிறான்..
தூதன் வந்து நின்றவுடனே கர்த்தரின் மகிமை மேய்ப்பர்களை சுற்றி பிரகாசிக்கிறது.கவனிக்க வேண்டிய வார்த்தை..
அவர்களை..
எவர்களை..
மேய்ப்பர்களை..
தங்களை சுற்றிலும் பிரகாசம் வந்தவுடனே அவர்கள் “பயந்தார்கள்”
கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்
என்ன ஒரு அருமையான பதிவு..
ஒரு உண்மையான மனிதனிடத்தில் கர்த்தர் அன்பாகவும் நெருக்கமாகவும் இருக்கிறார். இதன் மூலம் அவன் வரங்களினால் பிரகாசிக்கிறான்.
பிரகாசிக்கும்
எல்லோருமே முதலில் கர்த்தருக்கு பயப்பட வேண்டும்..
அது கர்த்தருக்கு ஏற்ற பயம்…
இதற்கு நான் தகுதியானவான..? என்கின்ற பயம்..
நான் இருந்த இடம் ஒரு காடு.
என்னை சுற்றிலும் மிருகங்கள்தாள் இருக்கிறது..
நான் தனித்து இருக்கிறேன். ஆனால் கர்த்தரின் தூதன் வருகிறான் பின் வெளிச்சம் பிரகாசிக்கிறது.
நல்ல விஷயம்…
லூக்கா2:10.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
தூதன் எதற்காக மேய்ப்பர்களிடம் அனுப்பபட்டானோ அந்த காரியம் நிறைவேறுகிறது.
ஆம்.உலகின் மிகப் பெரிய நற்செய்தி சில சாதாரண மனிதர்களிடம் முதல் முதலாக தெரிவிக்கப்படுகிறது..
அவர்களுக்கு இயேசு எங்கே பிறந்திருக்கிறார் என்றும் மிக துல்லியமாக தூதன் தெரிவிக்கிறான்…
---------------------------------------------------------------------------------
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
இயேசுவை போய் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் என நினைத்தோ என்னவோ…நீங்கள் போய் பணிந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்படவில்லை..
இன்னும் ஒரு சம்பவத்தையும் பார்க்கலாம்..
லூக்கா24:28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் (எம்மாவு )சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
தனி மனித சுதந்திரம் ஏதேன் தோட்டம் முதல் சிலுவை வரை காக்கப்படுகிறது
-------------------------------------------------------------------
இங்கே மேய்ப்பர்களிடத்தில் போனால் “காண்பீர்கள்” என்று இலைமறைக்காயாக கூறப்படுகிறதை நாம் கவனிக்கலாம்…
சரி…நற்செய்தி சொல்லப்பட்ட உடனே என்ன நடந்தது..?
-------
13. அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
------------------------------------------------------------------------------------------------
அந்தசஷணமே..
உடனே ….பரம சேனையின் திரள்..அதாவது எண்ணிக்கைக்கு அடங்காத பெருங் கூட்டம் தோன்றி கர்த்தரை துதிக்கிறார்கள்…
மேய்ப்பர்கள்; திகைத்து நிற்கிறார்கள்..
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
இவைகள் நடந்து முடிந்த உடனே மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை மறந்து இயேசுவைக்காண விரைந்தார்கள்..
---------------------------------------------------------------------------------------
மாற்-8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
தனது கடமையை செய்யும்; ஒருவரை வேதவசனம் பாராட்டுகிறது.
அதே மனிதன் தனது வாழ்க்கையில் கர்;த்தரை முதன்மை படுத்த வேண்டிய இடம் ஒன்று வரும்போது அவன் கர்த்தர் பக்கமே நிற்க வேண்டும் என்றே வேதவசனம் நமக்கு போதிக்கிறது..
--
ஊழிய அழைப்பு உள்ளவர்கள் உலக வேலையை உதறுவது உத்தமம்…( இது எனது தனிப்பட்ட முடிவு )
சரி.. இப்போது மேய்ப்பர்கள் கதைக்கு வருவோம்..
தேவதூதன்; வந்தான்
நற்செய்தி சொல்லப்பட்டது
மகிமையை கண்டாகிவிட்டது
தூதர்கள் போய்விட்டர்கள்
இயேசுவையும் மேய்ப்பர்கள் கண்டு வணங்கியாகிவிட்டது.
ஓகே..எல்லாம் முடிந்ததா..இனி மந்தைக்கு திரும்பி விடலாமா?
நல்ல வாழ்க்கை.
நல்ல சம்பளம்.
அருமையான சபை.
வாரம்தோறும் நல்ல நற்செய்தி
மேலும் துதி தோத்திர பாடல்கள்..
வேறு என்ன வேண்டும்..?
ஆனால் மேய்ப்பர்கள் வேறு முக்கியமான ஒன்றை செய்தார்கள்..
அது
-------------------------------------------------------------------------------------
லூக்கா 2:17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவை நீங்கள் எப்படி அவரை கண்டீர்களோ அப்படியே மற்றவர்களுக்கு சொல்வது. இதனால் எத்தனை உள்ளங்கள் ஆச்சரியப்படும்…
இன்னும் இதை விளக்கNவுண்டிய அவசியம் இல்லை.
-------------------------------------------------------------------------------------------
தமது ஞானத்தை நம்பி வந்த சாஸ்திரிகளும் இயேசுவை தேடி வந்து கண்டார்கள்.ஆனால் யாரிடமும் அதை அறிவிக்க முடியாமல் தங்கள் வந்த வழியே திரும்பினார்கள்..
மேய்ப்பர்களோ ஊரெல்லாம் கர்த்தரை பிரசித்தம் பண்ணினார்கள்..
அனவைருக்கும் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தை Soulwinners சொல்கிறது..
நாங்கள் இயேசுவை அறிவிக்கும் இந்த வேலையைத்தான் செய்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக..
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக