உயிரே,,உயிரே
மாலை ஐந்து மணிக்கு எனக்கு போனில் அழைப்பு வந்தது...
என் தாயார் இறுதி கட்டத்தில் இருக்கிறார்கள் உடனே வரவும் என்றார்கள்...என் தாயார் கர்த்தரின் வேலையை செய்தவர்கள்...எழுபத்தி ஐந்து வயதில் மரித்தார்கள்...கடைசி ஒருவருடம் நோய் தாக்குதலால் அதிக வேதனையை அடைந்தார்கள்...
ஒரு கட்டிலில் சாய்வாக அமரவைக்கப்பட்டிருந்தது...
நான் போய் பக்கத்தில் நின்று "அம்மா
" என்றேன் ...பதிலுக்கு "ம்" என்றார்கள்...அவ்வளவுதான்
ஒருமுறை மட்டுமே பதில் வந்தது...
பக்கத்தில் இருந்த என் சகோதரர்களும் அவர்கள் பிள்ளைகளும் என் குடும்பமும் சுற்றி நின்று கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்,
தலைக்கு பக்கத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன்...
ஒரு மிகப்பெரிய ஓட்டம் முடியப்பொகிறது...
காலும் கையும் கண்ணும் தங்களது இயக்கத்தை முடித்துக்கொண்டது,
மெல்லியதாய் மூச்சிக்காற்றின் சத்தம் மட்டும் வந்துகொண்டிருந்தது..
பின்பு அதுவும் அமைதியானது
நான் கவனித்தேன்
தலை ஒருமுறை வலது பக்கமா "விலுக்" கென இழுத்து பின்பு சரிந்து கவிழ்ந்தது
அவ்வளவுதான்..இனி அந்த உடலுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை...
உலகத்தின் சகல தொடர்பபையும் ஏதோ ஒன்று துண்டித்துப் போட்டது..
பல கோடி பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் எந்த அறிவியலும் அந்த உடலை இனிபேச வைக்க முடியாது..
கடந்த கால நிகழ்வுகள் பலதின் இரகசியங்கள் மறைந்துபோனது...
இனி என்ன நடக்கும்..
விலுக்கென இழுத்து உதறிவிட்டுப்போனது என்பதுதான் உயிரா?
அதுவேகமாக எங்கே போகிறது..
உயிர் என்பது ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் நிறைந்த வெறும் காற்றா?
நாங்கள் அழுதோம்
என் சகோதரன் கர்த்தரின் வேலையை செய்யும் ஊழியக்காரன்..அவன் தன் வேலையை செய்தான்
கண்ணீருடன் ஒரு பாடலைப்பாடி ஜெபித்க நாங்கள் அனைவரும் அந்த உடலை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தோம்
எழுபத்தி ஐந்து வருடம் துயரத்தை மட்டும் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு அனுபவிவித்தவர்கள் தங்களது ஓட்டத்தை முடித்து இயக்கமற்றுபடுத்துக் கிடந்தார்கள்
சகலராலும் கைவிடப்பட்டாலும் நாங்கள் உயிரோடு இருக்க அவர்கள் போராடிய போராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல...
அவர்களது வயதான காலத்தில் நோயில்லாமல் வாழ முடியவில்லை.
.உலகத்திலே சிறந்த மருத்துவம் பார்க்க என்னிடம் பணமும் இல்லை..
இதை நினைத்து இன்றுவரை கவலைப்படுவேன்...
உலகத்தில் இந்த வாழ்க்கையும் இதனால் ஏற்பட்ட உறவுகளும் விசித்திரமானது..
உயிர் என்றால் என்ன?
இறந்தபின் அது எங்கோ போகிறதா?
நியாத்தீர்ப்புவரை அதை யாரோ பாதுகாக்கிறார்களா?
இல்லை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வானவீதியில் அலைந்து திரிகிறதா?
போகும் உயிர் இறைவனோடு பேச,ஜெபிக்க முடியுமா?
நாம் போன அந்த உயிருக்காக கடவுளிடம் மன்றாட முடியுமா?
போதகர்கள் சொல்வது போல "'இங்கே கண்ணை மூடி அங்கே கண்ணை திறப்போம் "என்கிறார்களே.
அந்த வழி அத்தனை சுலபமானதா?
உலகத்தில் இந்த உடலில் நாம் எடுத்த திருமுழுக்கும் நற்கருணையும்
உயிரின் விண்ணக பயணத்தில் எவ்விதத்திலாவது உதவுகிறதா??
பூமியின் பாலின மோகத்தால் ஏற்பட்ட ஈர்பில் விளைவால் உண்டான சந்ததிகளால் அந்த உயிருக்கு ஏதாவது பலன் உண்டா?
மீண்டும் விண்ணகத்தில் நாம் நமது உறவுகளை நேசத்துடன் சந்திக்க முடியுமா?
அந்த சந்திப்பு காதலாகவோ,நேசமாகவோ,
பாசமாகவோ இருக்குமா?
இப்படி ஆயிரம் கேள்விகள் என்மனதை குடைந்து எடுத்தன..
இதற்கான விடையை வேதத்தில் தேடுனேன்..
என் அறிவுக்கு எட்டியபடி விடைகள் கிடைத்தது..
அது சரியானதுதான் என நான் வாதாடவில்லை..
இறுதியாப எல்லா கேள்விகளின் விடைகளையும் சேர்த்து ஒரு கதையாக எழுத முடிவு செய்து இரவு பகலாக என் கம்யூட்டரில் டைப் செய்தேன்..
Facebook ல் ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டேன்...சிலரோ,பலரோ படித்தார்கள், அதற்கு"" மரணவாசல்"என்று பெயரிட்டேன்..
இதை புத்தகமாக என்னால் வெளியிடமுடியுமா?
என்னை நானே கேட்டேன்,
உன்னால் முடியாது என என் மனது சொன்னது..
சரி நான் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல் வலுவிழந்து மறைந்து போனதைப்போல, இந்த கதையும் போகட்டும் என, அந்த கதையை ஒரு Folder ல் போட்டு மூடிவைத்தேன்..
பூமியில் நடக்கும் சகலவற்றையும்
கவனிக்கும் கர்த்தரின் கண்கள் இதையும் கண்டது என பின்நாளில் உணர்ந்தேன்,,,
சில வருடம் கடந்தது..
இந்த கதையை சகலரும் மறந்தார்கள்,
கர்த்தர் மறக்கவில்லை...
ஒரு நாள்......(தொடர்கிறேன்)
திருமதி கேர்லின் ஜெபத்துரை அவர்கள் என் தாயாரின் வயதை ஒத்தவர்கள்
,அனாலும் அவர்களை அக்கா என்றே அழைப்பேன். நான் மட்டுமல்ல அவர்களிடம் பழகிய அனைவருமே
அப்படித்தான் அழைப்பார்கள். காரணம் அவர்களது பழக்கம் அவ்வளவு தோழமையாக இருக்கம்.
என் தாயாருக்கு ஜெப தோழமையாக திருமதி கேர்லின் ஜெபத்துரை
அவர்கள் இருந்தவர்கள்.
அதிகமாக அவர்களோடு பழகிய நெருக்கம் எனக்கு இல்லை.
இந்தப்பதிவு திருமதி கேர்லின் ஜெபத்துரை அவர்களைப் பற்றியது…நுனிநாக்கில்
ஆங்கிலம் பேசும் பலரை எனக்கு தெரியும் .அப்படிப்பட்டவர்களுக்க ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு
தமிழ் தெரியுமா என்பது கேள்வி.?அக்கா அவர்கள் இரண்டு மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தது
மிகவும் அருமையானது
ஒரு நாள் அக்காவை காண நான் சென்றிருந்தேன்..அவர்கள் எழுதிய
பல புத்தகங்களை எனக்கு கொடுத்து இவைகளை படி என்றார்கள்..அவைகளை வாங்கிக் கொண்டு நான்
வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல்….
அக்கா நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றேன்..
என் குரல் மெலிந்து ஜிவனில்லாமல் இருந்தது.. காரணம் . அவர்கள்
நிறைய படித்தவர்கள். அங்கிலத்தில் புலமை பெற்றவர்கள். பொதுவாகவே அங்கில புலவர்கள் தமிழ்
எழுத்துக்களை மதிப்பதில்லை என்பது என் கருத்து. அனாலும் வாயை கொடுத்தாகிவிட்டது. இனிபின்வாங்கி
பிரயோஜனம் இல்லை.
சரி சொன்னது சொன்னதே..
நான் எதிர்பார்த்தபடி
அவர்கள் மறுத்து ஏதும் சொல்லாமல். அதை எனக்க படிக்க கொடு என்றார்கள்.
நானும் என் கம்யூட்டரில் இருந்து நகல் எடுத்து அவர்களிடம்
கொடுத்துவிட்டு பின் அதை பற்றி மறந்துவிட்டேன்.
ஒரு வாரம் இருக்கும்.
ஒரு நாள் எனக்கு அவர்களிடம் இருந்து போன் வந்தது.
உடனே வா என்றார்கள்..
போனேன்.
அதற்குள் என் கதையை பல பிரதி எடுத்து பலரிடம் படிக்க கொடுத்து
பலரின் அபிப்ராயம் பெறப்பட்டு இதை உடனே பத்தகமாக அச்சிட வேண்டும் என முடிவும் செய்யப்பட்டு
இருந்தது.
என்னிடம் விஷயத்தை
சொன்னார்கள்….
நான் என்ன பதில்
சொல்ல ?..அமைதியாக இருந்தேன்…
அடுத்து அவர்கள் சொன்னது என்னால்; நம்ப முடியாததாகவும் .
இது எப்படி சாத்தியம் என்றும் திகைத்து நின்றேன்.அதாவது கதை புத்தகமாக வெளிவரும் அதே
நாளில் ஒலி ஒளி நாடகமாகவும் வெளிவர வேண்டும் என்பது அக்காவின் விருப்பமாக இருந்தது
இது என்ன அதிசயம்.?
மூன்று வருடம் எந்த கதை எழுதப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்ததோ
. எதை நம்மால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தேனோ அந்த கதை இன்று புத்தகமாகவும்
ஒலி ஒளி நாடகமாகவும் வெளிவரப்போகறது ..
இதைப் படிக்கும் நீங்கள் ஒன்றை தெரிந்த கொள்ளுங்கள்.
இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.
அன்றய விழாவில் பங்கு
கொண்ட பலர் என் முக நூலிலே எனக்கு நன்பர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே எதையும் மிகைப்படுத்தியோ குறைத்தோ நான் எழுத முடியாது.
நான்; எழுதும் இவைகள் எல்லாமே உண்மையான வார்த்தைகள்..
நெல்லை பெருமாள்புரம் சிஎஸ் ஐ ஆலயத்தின் வாலிபர்கள் அக்காவின்
அன்பான அழைப்பிற்கிணங்க உதவிக்க வந்தார்கள்….
இரவு பகலாக அவர்கள் உழைத்தார்கள்.என் கதை நாடக வடிவில் ஆக்கப்பட்டு.
ஒலிப்பதிவும்செய்யப்பட்டது அந்த வாலிபர்களின் பங்கு போற்றப்பட வேண்டியது….
இதற்கிடையில்
புத்தகம் அச்சிட துத்துக்குடியில் ஒரு சகோதரி டைப் செய்து தர சென்னைக்கு அனைத்தும் அனுப்பப்பட்டு கதை
புத்தமாக அச்சிட வேலையும் ஆரம்பித்தது..
இவ்வளவும் நடக்கும் போது அக்கா அவர்கள் உடல் நலம் குன்றித்தான் இருந்தார்கள்.
இதை எப்படி வார்த்தைகளால் வர்ணிப்பது..
தியாகம் என்பது இதுதானே..
திருநெல்வேலி வாய் பேச முடியாதோர் பள்ளி மைதானம் வாடகைக்கு
அமர்த்தப்பட்டது.
பலருடைய உழைப்ப அதில்
இருந்தது.. அவர்கள் அழைப்பின் பேரில் பலரும் உதவிக்க வந்தார்கள்.
நூற்றுக்கும் அதிகமான பேர் கலந்த கொண்டு நடித்தார்கள்….
குறிப்பிட்ட நாளில் முதலில் புத்தகம் வெளியிடப்பட்டது. அடுத்து
மரண வாசல்கள் என்ற தலைப்பில் மிக பிரமாண்டமாக ஒலிஒளி நாடகமும் அரங்கேற்றமானது.
இரண்டாயிரம் பேர் கண்டு களித்தனர்.
முதலில் புத்தகம் அச்சிட செலவு
நாடகம் ஒலிப்பதிவு
செய்ய செலவு
ஒலி ஒளி அமைக்க செலவு
மைதானம் வாடகை அமர்த்த செலவு.
செலவ… செலவு… செலவு..
பணம் இரண்டு லட்சம் செலவானது..
நான் ஒதுங்கி நின்று
வேடிக்கைப் பார்த்தேன்
என்னிடம் யாரும் பணம் கேட்கவில்லை.
கேட்டால் கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை
. ஒரு வாடகை தாய் மன நிலையில் இருப்பது போல உணர்ந்தேன்.
அதிக நாள் கருவை சுமந்தேன்…
இரவு பகலாக கண்விழித்து வளர்த்தேன்
இன்று கர்த்தர் பலரின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்கிறார்.
மகிழ்ச்சியில் வாய் பொத்தி நின்றேன்.
அன்ப சகோதரர் முத்தமிழ்
அவர்கள் நடத்தம் கதிர் டிவி வலைத்தளத்தில் இன்றும் அந்த நிகழ்வு இருக்கிறது.
சகோதரன் முத்தமிழ் அவர்கள் என்னிடம் சொன்ன ஒரு காரியம். ஒரு
கதை நூலாகவும் ஒலி ஒளி நாடகமாகவும் அரங்கேற்றமாவது உண்மையில் அதிசயம் என்றார்..
ஒர சிறந்த அன்மிக கதைக்காக லட்சக்கணக்காய் தனத சொந்த பணத்தை
செலவு செய்த அக்கா கேர்லின் ஜெபத்துரை அவர்களை நா ன் எப்படி பாராட்ட!…அந்த நன்றிக்கடனை
எப்படி செலுத்த..!
ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மொத்த புத்தகங்களையும்
என்னிடமே தந்தார்கள்….அயுிரம் பத்தகங்களையம் இலவசமாக கொடுத்தது போலவே
பலருக்கும் கொடுத்து
தீர்த்தேன்.
அவ்வளவுதான் இனி எப்படி அச்சிட என் நினைத்தேன்.
கொஞ்ச நாளில் ஒரு தம்பி எனக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
அண்ணே மரணவாசல்கள் புத்தகம் இப்போது இருக்கிறதா.? என்றார்.
இல்லை என்றேன்…
மீண்டும் அச்சிட எவ்வளவு செலவு அகும் என்றார். தொகையை சொன்னேன்.
நான் தருகிறேன்.
மீண்டும் அச்சிடுங்கள் என்றார்..
சொன்னபடியே செய்தார். மீண்டும் அச்சிடப்பட்டு புத்தங்கள்
வந்தது. இப்போது எண்ணிடம் இருக்கிறது. அளவில்லாத ஆசீர்வாதங்களை கர்த்தர் அவருக்கு தருவாராக
சரி….
அருமை அக்கா கேர்லின்
ஜெபத்துரை அவர்கள் இப்போது நம்மிடம் இல்லை. அவர்களின் நல் அடக்கத்தின்போது நான் ஊரில்
இல்லை..சென்னையில் இருந்தேன்
அனாலும் என்ன.?
நம்மடைய வேதத்தின் நம்பிக்கையின்படியும் என் புத்கத்தில்
நான் எழுதிய படியும் என் ஒட்டம் இந்த பூமியில் முடியம் ஒர் நாள் வரும்.
அன்று அவர்களை கண்டு இவைகளை குறித்து பேசி மகிழலாம்.. யாருக்கு தெரியம் யாருடைய
வாழ்க்கை எப்போது முடியம் என்று.
உலகத்தில் இருக்கம்
நாள் வரையில் மற்றவர்களும் கர்த்தரும் நமக்கு செய்த நன்மைகளை நினைவில் நிறுத்துவோம்…அதுவே
சிறந்த பண்பாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக