செவ்வாய், 12 மே, 2015

மரணவாசல்...3ம்பாகம்



.         மரணவாசல் 3ம்பாகம்
(58).மனிதனே…..பூமியில் வாழும்போது இதைபற்றி நீ சின்னதாக நினைத்தாலே போதும்……..உங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியான தேவன் அங்கேயே இருக்கிறார்..என்ற சத்தம் கேட்டது….
.
இந்த சத்தம் கேடடதும் என்னோடு இருந்த ஐந்து தூதர்களும் தரையோடு தரையாக பணிந்து கொண்டு ..பரிசுத்தருக்கு மகிமை உண்டாவதாக என்றார்கள்.

நான் மட்டும் தொழுது கொள்ளாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன்..
.
என் நிலமை போகப்போக என்னவாகுமோ என்ற பயத்துடன்

பயம் ஒரு பக்கம் இருந்தாலும் என் மனதிற்குள்  வேறு ஒரு சிந்தனையும்  ஓடிக்கொண்டே இருந்தது….

.என்னை யார் பூமிக்கு அனுப்பி வைத்தது…?
.மீண்டும் பூமியில் இருந்து என்னை யார் பிடுங்கியது…?
.
.இடைப்பட்ட நாட்களின் என் வாழ்க்கையை  வைத்து ஏதோ விளையாடுகிறார்கள் என நினைத்தேன்…..

ஆனால் கேள்வி கேட்க முடியாது……கேட்டால் பதில் கிடைக்குமா என்றும் தெரியவில்லை..
கேட்டுத்தான் பார்ப்பது என முடிவு செய்தேன்.
.
நான் அந்த தூதனைப் பார்த்தேன்..
தூதன் என்னை பார்த்து ……..ம்….கேள் என்றான்
                                                                               



                                            

நான் கேட்பதற்கு ஆயத்தம் ஆனேன்.

பரிசுத்தர் உங்கள் மீதுவைத்திருக்கும் அன்பு அளவிட முடியாதது
ஆனாலும் நீங்கள் அவரை நம்புவதில்லை.
உன்னையே எடுத்துக்கொள்.
.உன் வாழ்க்கையில் நீ பெற்ற அந்த உடன்படிக்கையின் அடையாளம் உன் சுய முயற்சியினாலா கிடைத்தது ..இல்லையே..?
.
அது உனக்கு கிடைக்கும்படியான சந்தர்ப்பத்தை  பரிசுத்தர்உண்டாக்கி கொடுத்தார்.நீ அதற்கு கீழ்படிந்ததினால் அதை பெற்றுக்கொண்டாய்.

இதைப் போலத்தான் எல்லா காரியங்களுமே….
.
ஒவ்வொரு மனிதருக்கும் நல்லவற்றை  பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அளிக்கபடுகிறது.
ஆனால் நீங்கள் அறிவு என்ற ஒன்றை பயன் படுத்தி அதை தவற விட்டுவிடுகிறீர்கள்……
.
நான் சொன்னேன்.
.மனித அறிவு சாதாரணமானதல்ல..அதனால் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகள் நிறையஎன்றேன்

ஆனால் தூதனின் பதில் வித்யாசமாக இருந்தது.
உங்கள் அறிவு குறைவானது என்பதற்கு உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புக்களே உதாரனம் என்றான்.
.எனக்கு இது பிதற்றலாக தெரிந்தது..
தூதன் தொடர்ந்தான்……
61
ஏதேன் தோட்டம் உண்டாக்கபட்ட போது பூமி உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற இடமாக இருந்தது….ஆனால் இன்று..
.
பூமி கெடுக்கபட்டிருக்கிறது..
அதற்கு காரணம்……. உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புக்கள்….
உங்கள் கண்டுபிடிப்புக்கள் எல்லாமே பூமியை கெடுத்துப்போடும் கதிர் வீச்சுகளை கொண்டவை..
எல்லாமே சாபம் நிறைந்தவைகள்…..

ஆதாம் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் பரிசுத்தரே உங்களுக்கு சொல்லி கொடுத்திருப்பார்..
அதாவது செய்து காட்டி இருப்பார்….
.ஆதாமுக்கு உடையை செய்து காட்டியது போல….
.
அவர் மனிதனுக்கு ஒன்றைக் கொடுத்தால் அது மேன்மையானதாகவும் குறைவில்லாததாகவும் இருக்கும்….
.
உங்கள் அறிவு குறைவானது என்பதை ஒத்துக்கொள் என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை..
கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன்….என்வாழ்கையில் இனி என்ன நடக்கும் என்றேன்……
.
அதைபற்றி நான் ஒன்றும் கூறமுடியாது என்று சொல்லி விட்டு தூதன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.


62
இனி என் வாழ்க்கையை பற்றி நான் எப்படி முடிவு செய்யமுடியும்..ஆது எனக்கு புரியவில்லை என்றேன்…..

தூதன் என் முன்னால் இருக்கும் கண்ணாடி போன்ற திரையில் ஏதோ எழுதினான்.
அந்த கண்ணாடி திரையில் மெல்ல ஒரு படம் தெரிந்தது..
ஏதோ சினிமாப் படம் போல் இருந்தது.
ஒரு குழந்தை பிறக்கிறது..
அது அழுகிறது
ஒரு பணிப் பெண்..அந்த குழந்தையை எடுத்து கழுவி சுத்தம் செய்கிறாள்..
எனக்கு அலுப்பாயிருக்கிறது..இதையெல்லாம் நான் ஏன் பார்க்க வேண்டும்.

இப்போது அந்த பெண் அந்த குழந்தையை வெளியே தூக்கி செல்கிறாள்..அதை ஒருவரிடம் காட்டுகிறாள்.
அவர் அந்த குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார்….
.
இப்போது அந்த நபரை நான் கவனித்தேன்……அதுஅது..என் தகப்பனை போல தெரிகிறது

நான் நன்றாக கவனித்தேன்.
அந்த நபர் அருகில் ஒரு வயதான தாயார்…..அவர்கள் என் பாட்டி…….
அப்படியானால் இந்த குழந்தை நானா…?

இது நானா..?என்று தூதனிடம் கேட்டேன்..
ஆம் அது நீதான்….
63
அப்படியென்றால் என் மொத்த வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாஎன்றேன்
ஆம்……
இதில் பேசுகின்ற சத்தம் வருமா…?...என்றேன்
நிச்சயமாக..
தூதன் தொடர்ந்தான்……நீ பேசிய எல்லா பேச்சுக்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூதன் அந்த கண்ணாடி திரையில் ஏதோ எழுதினான்.
அதில் ஒரு கணக்குவந்தது
நான் அதிர்ந்தேன்..

பூமியில் நான் பேசிய மொத்த வார்த்தைகள். பற்றியது
இதில்
பரிசுத்தரை பற்றியது
மற்றவர்களை பற்றியது.
கோபத்தில் பேசியது
சோகத்தில் பேசியது..
வியாபார காரியமாக பேசியது..
பரியாசம் பண்ணி பேசியது..
மற்றவர்களுக்கு பரிந்துபேசியது..

மகிழ்ச்சியாய் இருந்த மொத்த நேரம்
சோகமாய் இருந்த நேரங்கள்……
மற்றவர்களுக்காக செலவழித்த நேரங்கள்…..
தனக்காக செலவழித்த நேரங்கள்……..
தூங்கிய மொத்த நேரம்.
விழித்திருந்த மொத்த நேரம்..
64
எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.என் வாழ்க்கை மொத்தமும் பட்டியலிட பட்டிருக்கிறது..

அதில் நான் கவலையோடு பார்த்த ஒரு காரியம்..

கடவுளுக்காக நான் பேசிய வார்த்தைகளும்.செலவழித்த நேரமும் மிக மிக  மிக கொஞ்சமாக இருந்தது
நான் அதிக சோகமானேன்……

பூமியில் வாழும் காலத்தில் அனைவரும் ஒரே பாதையில்தான் பயணிக்கிறார்கள்
அதுபணத்தை தேடும் பயணம்……
படிப்பு ..வேலை.. உழைப்பு…..எல்லாமே பணத்தோடுதான் சம்பந்தபடுகிறது….
இறப்புக்கு பின் இப்படி நெடிய பயணமும் ஒரு வாழ்வும் இருக்கும் என்று எவரும் அறிவதில்லை
.அப்படி அறிந்தவரிடம் எந்த பதற்றமான வாழ்க்கையும் நான் பார்த்தது இல்லை.
அனைவரின் மனமும் சமநிலையில்தான் இருக்கிறது
..உலக வாழ்க்கையில் அகப்பட்டு கிடக்கிறார்கள்…..

நான் இனி செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை

இனி என் விண்ணப்பங்கள் கேட்கபட மாட்டாது..ஆகவே அமைதியாய் இருப்பது நல்லது.
.

65
நான் எங்கள் வாகனத்திற்கு வெளிப்புறமாய் பார்த்துக் கொண்டே வந்தேன்.
நாங்கள பயணம் செய்யும்  பாதையை ஒட்டியும் தூரத்திலும்;நிறைய பாதைகள் தெரிந்தது
வெண்மை நிறத்திலும் பல வண்ணங்களிலும் அவைகள் காட்சி தந்தது….
.மற்ற இடத்தில் எங்கும் ஒரே இருள்

திடிரென்று எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது..
நான் அமைதியாய் இருந்தேன்..
அப்போது எதிரே தூரத்தில் மிக பிரகாசமான பறக்கும் தட்டு போல ஒன்று எங்கள் எதிராக வந்து கொண்டிருந்தது.

உச்சகட்டமான வேகம்….
கண்கள் கூசும் அளவுக்கு ஒளியை பாய்ச்சியபடி எதிராக வந்த அந்த தட்டு எங்கள் பக்கத்து டிராக்கில் வேகமாக கடந்து சென்றது
இதுவரை எல்லா வாகனமுமே ஒரே திசையை நோக்கித்தான் எங்களோடு சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இது மட்டும்  எதிர் திசையில் வருகிறதே..அது ஏன்…?

பேசாமல் தூதனிடம் கேட்டுவிடவேண்டியது தான் என முடிவு செய்தேன்….
என் முகத்தை தூதனுக்கு நேராக திருப்பினேன்
அப்போது எதிரே வந்த வாகனம் எங்களை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.
அதில் ஒருவர்.. கிடத்த பட்டிருந்ததை பார்த்தேன்..
எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது..இவர் யார்…?
66
நான் தூதனையும் கடந்து போன வாகனத்தையும் பார்த்து கொண்டிருக்கும்போது…….   தூதனே என்னிடம் கேட்டான்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.?
ஆம்..
சில நேரங்களில் இப்படி நடப்பதும் உண்டு..

எப்படி…?

அதாவது…..  அந்த நபர் பூமியில் இறந்து விட்டார்.. அவரை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள்…..

எனக்கு ஒரு சந்தேகம்
அது எப்படி அவரும் என்னைப் போல்தானே பயணம் செய்யவேண்டும்.அப்படியெனின் பூமியின் கணக்குப் படி பல நாட்கள் ஆகுமே….
.அதற்குள்  அங்கே சரீரத்தை அடக்கம் செய்து விடுவார்களே
இனி திரும்ப போனாலும் .அங்கே சரீரம் இருக்காதே ……….என்றேன்.

தூதன் சொன்னான்…….
மனிதனுக்கு ஆவி ஆத்துமா சரீரம் ..இவை மூன்றும் உண்டு.
உன்னை பொறுத்தவரை நீ ஆத்துமாவாய் இருக்கிறாய்..
உன் ஆவி தேவனிடத்தில் போய்விட்டது..
உன் சரீரம் பூமியில் புதைக்கபட்டு விட்டது..
66
நான் தூதனையும் கடந்து போன வாகனத்தையும் பார்த்து கொண்டிருக்கும்போது…….   தூதனே என்னிடம் கேட்டான்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.?
ஆம்..
சில நேரங்களில் இப்படி நடப்பதும் உண்டு..

எப்படி…?

அதாவது…..  அந்த நபர் பூமியில் இறந்து விட்டார்.. அவரை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள்…..

எனக்கு ஒரு சந்தேகம்
அது எப்படி அவரும் என்னைப் போல்தானே பயணம் செய்யவேண்டும்.அப்படியெனின் பூமியின் கணக்குப் படி பல நாட்கள் ஆகுமே….
.அதற்குள்  அங்கே சரீரத்தை அடக்கம் செய்து விடுவார்களே
இனி திரும்ப போனாலும் .அங்கே சரீரம் இருக்காதே ……….என்றேன்.

தூதன் சொன்னான்…….
மனிதனுக்கு ஆவி ஆத்துமா சரீரம் ..இவை மூன்றும் உண்டு.
உன்னை பொறுத்தவரை நீ ஆத்துமாவாய் இருக்கிறாய்..
உன் ஆவி தேவனிடத்தில் போய்விட்டது..
உன் சரீரம் பூமியில் புதைக்கபட்டு விட்டது..
..

67
அந்த நபரின் ஆத்துமா இங்கே வரவில்லை……லாசருவைப் போல அங்கேயே இருந்திருக்கிறது..
இப்போது நீ பார்த்தது அவருடைய ஆவியை……
..அது சரீரம் போன்ற ஒன்றில்(..பெட்டியில்..) அடைக்கபட்டு பூமியை நோக்கி போய் கொண்டிருக்கிறது .
இன்னும் சில நிமிடத்தில் அது பூமி போய் சேர்ந்து விடும் என்றான்…..

தூதன் மீண்டும் என்னைப் பார்த்து உனக்கு பூமிக்கு திரும்பி செல்ல ஆசையாய் இருக்கிறதா என்றான்….
நான் கொஞ்சம் யோசித்தேன்
….ம்…….இல்லை என்று சொல்லிவிட்டு வேறு பக்கமாக பார்த்து கொண்டேன்..

யோசித்து பார்த்தால் பூமியில் ஒன்றுமே இல்லையோ

எப்படி வாழ்ந்தாலும் .வாழ்க்கை முடிந்தபின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது.
.
அங்கே வாழும்போது எந்த தீவிர உணர்வும் இல்லை
நான்தான் அப்படி யெனின் என்னை சார்ந்த அத்தனைபேரும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்..

என்ன செய்வது….கடவுள்தான் இரக்கம் பாராட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்….
அப்போது தூரத்தில் ஒரு அதிசயம்..

தூரத்தில் ஒரு அழகிய பட்டணம் இருப்பது போன்ற தோற்றம்..
68
எங்கள் வாகனம் வேகமாக அதன் அருகே சென்றது.
.மிக உயர்ந்த கோபுரங்கள் இருப்பதை பார்த்தேன்..
எனக்கு வியப்பாக இருந்தது..

இப்போது அதன் அருகில் சென்று விட்டோம்
நான் கொஞ்சம் நிறுத்த முடியுமா..? என்று கேட்டேன்…..
அதற்கு தூதன்
நம்முடைய வாகனத்தை நாங்கள் இயக்கவில்லை..ஆகவே எம்மால் நிறுத்தவும் முடியாது….என்றான்

வேண்டுமானால் கேட்டு பார்க்கலாம் என்றான்
நான் சரி கேளுங்களேன்என்றேன்….
அவன் முன்பக்கத்தில் உள்ளவனிடம் ஏதோ கூறினான்..
அவன் அவனுக்கு முன்னால் உள்ள தொடுதிரையில் ஏதோ எழுதினான்..

அவ்வளவுதான்….எங்கள் வாகனம் நின்றுவிட்டது……
இப்போது அரைவட்டம் அடித்து மெல்ல அந்த நகரத்திற்கு மேலே சென்றது..
மிகவும் நெருக்த்தில் அந்த பட்டணத்தை பார்த்தேன்
ஒவ்வொரு கட்டடமும் அழகிய கற்களால் கட்டபட்டு இருந்தது..
அதுவும் பல வண்ணங்களில் மின்னியது…….அதன் நிறம் மாறி மாறி ஒளிர்ந்தது.

தானாக இயங்கும் தெருக்கள்……
வீதியில் மரங்கள் செடிகள் இருந்தன.
ஆனால் எல்லாமே  பல வண்ணங்கள்……
69
மெல்ல மெல்ல மொத்த நகரமும்  அதன் அமைப்பில் மாறுகிறது

அதாவதுநிரந்தரமாக எந்த கட்டடத்தின் நிறமோ அமைப்போ இருக்கவில்லை.

சில நிமிடததல் மொத்த நகரத்தின்  வடிவமே மாறிவிடுகிறது..

நான் வியந்து கொண்டே இருந்தேன்..

இதில் இருப்பவர்கள் யார்..? ன்று கேட்டேன்…..

தூதன் அமைதியாக ..நாங்கள் தான்..என்றான்
எனக்கு வியப்பாக இருந்தது…..
..உங்கள் நகரமா……..?
சூப்பர்வெகு அழகு என்றேன்……
தூதன் அதற்கு பதிலாக..இதெல்லாம் அழகல்ல………
…….(இப்போது எழுந்து பணிந்து கொண்டு  )……… உங்களுக்கு ……….பரிசுத்தர் கட்டிகொண்டிருக்கும் நகரம் இதைவிட ஆயிரம் மடங்கு அழகுள்ளது என்றான்

எங்களுக்காகவா…?
ஆம்பரிசுத்தர் பூமியை விட்டு வரும்போது  சொல்லிவிட்டுத் தானே வந்தார்……
சன்னமான குரலில்  நான் ஆம் என்றேன்……(.மறந்து விட்டேன்..)
ம்….தூதன் தொடர்ந்தான்…..அவருடைய அன்பிற்கு அளவு இல்லை.இது மொத்தமும் உங்களுக்குத்தான் .
.நாங்கள் உங்களுக்கு வேலையாட்கள்தான் என்றான்…..
70
எனக்கு சற்று பெருமையாக இருந்தது
எனக்குஇப்போது தூதர்களை பற்றிய பயம் போய்விட்டது…..

எங்கள் வாகனம் அந்த அழகிய பட்டணத்தை தாண்டி சென்று விட்டது.

நான் கேட்டேன்நாம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..

சீக்கிரமாக போய் விடலாம்……

எங்கே போகிறோம்

தூதன் கூறினான்…..பரதீசு..க்கு

அங்கே என்ன இருக்கும்…..எனக்கு கொஞ்சம் பயம் வந்தது..

அங்கே போய் பார் ….புரியும்என்றான்
நான் எதுவும் புரியாமல் குழம்பி போயிருந்தேன்..

பரதீசு என்றால் என்ன..?
குழம்புகிறேன்…..தூதனிடம் கேட்கலாமா……?...எதற்கு வீண் கேள்வி….
வரட்டுமே பார்க்கலாம்
….இங்கே நடப்பது எல்லாமே முடிவு செய்யபட்ட ஒன்றாய்த்தான்   இருக்கிறது.
பூமியில்  அவரவர் வழியை அவரவர் முடிவு செய்யும் உரிமை இருக்கிறது

..
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக