வெள்ளி, 15 மே, 2015

மரணவாசல் கடைசிப் பாகம்(5)






                                       மரணவாசல் கடைசிப் பாகம்(5)










101
வெளியே வந்தபின் நான் மறுபடியும் கேட்டேன் அவர் எதுக்காக இப்படி ஆனார்..?

பரதீசின் மனிதன் என்னை ஊடுருவிப்பார்த்தான்

பின் அவனே சொன்னான்….அவர் மட்டுமல்ல நீயும் இப்படித்தான் ஆகப்போகிறாய் என்றான்……

எனக்கு கண்கள் இருண்டது..
என்னை பற்றி அந்த பரதீசின் ஆள் கூறியது எனக்கு பயமாகவும் கஷ்டமாகவும் இருந்தது….
நான் அவனிடம் ஏன் இப்படி நான் அடங்கி போக வேண்டும்
தூதன் இடைமறித்தான்…..நீ கட்டாயமாக அடங்கி போக வேண்டும் என்றுநான் சொல்லவே இல்லையே…..உன் நிலமை அப்படித்தான் இருக்கிறது.
ஒன்று ……..நீ மற்றவர்களை உன்னிடமாக சேர்த்து கொள்ளவேண்டும் அல்லது உன்னை மற்றவர்கள் தங்களிடமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
இரண்டும்; இங்கே நடக்கவில்லையெனின் உன் நிலமை என்ன வாகும்..யோசி….
நான் கூறினேன்..மற்றவர்கள் என்னை சேர்த்து கொள்ள நான் என்ன செய்யவேண்டும் ..?..என்றேன்……
102
அந்த பரதீசின் ஆள் கூறினான்…….உன் கேள்வியை கொஞ்சம் மாற்றிக்கேள்…
எப்படி…?
நான் என்ன செய்திருக்க வேண்டும்..? என்று கேள் என்றான்…
எனக்கு இதுவும் புரியவில்லை..சரி அவனிடமே கேட்டு விடுவோம் என்று………………………….நான் என்ன செய்திருக்கவேண்டும் ..? என்றேன்………
பரதீசின் ஆள் மெதுவாக கூறத்தோடங்கினான்..
அதற்கு முன்பு அவன் முகம் குப்பற விழுந்து பணிந்து கொண்டான்…
.எனக்கு புரியத்தொடங்கியது.அவன் கடவுளை பற்றித்தான் கூறப்போகிறான் என்று
.ஆகவே நானும் தலையை தாழ்த்தி பணிந்து கொண்டேன்….
பூமியில் நான் வாழும் போது கடவுளின் பெயரை எந்த பயமும் பணிவும் இல்லாமல் எத்தனை தடவை கூறி இருக்கிறேன்.
.இப்போது பயப்படுகிறேன்…
பரதீசின் ஆள் மெதுவாக பேசினான்.
பூமியிலே பரிசுத்தர் உங்களுக்கு சபை என்ற ஒன்றை ஏற்படுத்தி கொடுத்து இருந்தார்..
அதில் ஒரு அன்பின் கட்டளையை உங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருந்தார்.
அதாவது ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கொள்ளுங்கள் என்பதே அது..
103
ஆனால் சபைகளில் ஒருவர் பாரம் மற்றவரால் சுமக்க படுகிறதா..?
பாரத்தை சுமப்பது என்றால் என்ன .?இது மனது சம்பந்தப்பட்டது…
..ஒருவரின் துயரத்தை மற்றவர்கள் உணமையாய் உள்வாங்கி அதற்காக ஜெபிப்பது…..
அன்பினால் ஒருவருக்கொருவர் கட்டபட்டிருப்பது…
இப்படி கட்டபட்ட மனது பூமியில் மட்டுமல்ல… பரதீசிலும் கட்டபட்டிருக்கும்…
…பூமியிலே கட்டபடாத இதயம் பரதீசிலும் கட்டபடாமல் இருக்கும்…..
அவன் தொடர்ந்தான்
நான் கேட்கிறேன்..நீ யாருக்காகவாது  உண்மையாய் ஜெபித்துது உண்டா..?
உண்மையிலே அவர்களின் பாரத்தை நீ உள்வாங்கி இருந்தால்.. அவர்கள் உன்னோடு இங்கே தங்குவார்கள்.அல்லது உன்னை அவர்களிடமாய் சேர்த்துக் கொள்வார்கள்…என்றான்.
நான் யோசித்தேன்..நான் சபைக்கு ஆராதனைக்கு சென்றால் முடிந்தவுடன் பேசாமல் வந்து விடுவேனே…
…யாரிடமும் பேசுவது கூட இல்லயே…
 .அப்படியே பேசினாலும் என் அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி உள்ளவர்களிடம் ..ஹலோ… சொல்லுவேன் அவ்வளவே….
 வேறு  எனக்கு நினைவு தெரிந்தவரை நான் மற்றவர்களுக்காக துயரபட்டது கிடையாது…
104
ஆனால் இன்னொன்று…..
 இப்போது பூமியில் சபைகளில் என்ன நடக்கிறது.விசுவாசிகளின் துயரங்கள் மற்றவர்களுக்கு தெரிய படுத்த வாய்ப்பே இல்லையே…….
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
.பூமியில் சபைகளின் நிலமைகள் வேறு மாதிரிதான் இருக்கிறது…
சபையின்…தேவைகள் அறிவிக்கபடுகிறது……..பின் அவைகள் கணக்கிடபடுகிறது…..பின்பு அதை நிர்வகிக்கப்படுகிறது…
வரவு செலவு கணக்கு பார்க்கும் இடம் எப்படி சபை ஆகும்……
கர்த்தரை ஆராதிக்கிறோம்…..அதில் மாற்றுக்கருத்து இல்லை…..அவ்வளவே
..மனதின்.பாரங்கள் வாங்கபடுவதும் கொடுக்கபடுவதும் இல்லை..இல்லவே இல்லை.
நான் கர்த்தரை ஆராதித்ததால் பரதீசுக்கு வந்து விட்டேன்…..ஆனால் தனிமை தான் என்னை துரத்துகிறது…
எனக்கு திடீரென்று ஒரு ஆசை…
 எப்படியென்றாலும் என் மனைவி வரும் வரை  நான் காத்திருக்லாமே…….
நான் அந்த பரதீசின் ஆளிடம் சொன்னேன்…
..நீ சொல்வது எல்லாமே உண்மைதான்…..நான் யாருடைய பாரத்தையும் வாங்கவில்லை ..ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்றேன்..
105
யாரிடம்..? என்றான்……
என் மனைவி……என்றேன்….
அவன் மெதுவாக…மிக மெதுவாக  கூறினான்……..கணவன் மனைவி என்ற கட்டுகள் பூமியில் மரணமடைந்தவுடனே அது தானாக அவிழ்ந்துவிடும்…அந்த சொந்தம் பரதீசுக்கு வராது என்றான்.
நான் சொன்னேன் எனக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை இது தான் என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்து கொண்டேன்..
பரதீசின் ஆள் என் தலையை பாசத்துடன் தடவினான்…..முயற்சித்து பார் என்றான்.
அதன் பின் நாங்கள் பேசவில்லை.
என் மனதிற்குள் வேறு ஒரு கேள்வி எழுந்தது.
.என் மனைவியின் மரணத்தை பற்றி யாரிடம் கேட்பது……
..சரி அங்கு போய் பார்த்து கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்….
நான் போகும் பாதையில் எல்லாம் புதிய மாளிகைகள் தோன்றி இருந்தன..சிலவற்றில் வெளிச்சம் இருந்தது..
சில வெளிச்சம் இல்லாமல் இருந்தது…
வெளிச்சம் இல்லாத மாளிகையில் மனிதர்கள் அடங்கி போய் விட்டார்கள் .
பாவம் மனிதர்கள்
ஏன் இப்படி நடக்கிறது.
106
பூமியில் இதைபற்றி மிகப்பெரிய அளவு பேசப்படவில்லையே என்று நினைத்து கொண்டிருக்ம் போது.
தூரத்தில் மிகப்பெரிய விளம்பர போர்டு போல் ஒன்று இருந்தது.
அதில் பிரகாசமாய் சில எழுத்துக்கள் எழுத பட்டிருந்தது..
எங்கள் வாகனம் அதன் அருகில் சென்றதும் நான் அதை படித்தேன்….படித்ததும் திடுக்குற்றேன்..
ஏற்கனவே பூமியில் சொல்லப்பட்டு விட்டது.அதுவும் தேவ குமாரனே தமது வாயால் சொல்லி இருக்கிறார்..ஆனால் மனிதர்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை….இதோ அந்த வசனம்….
.(…லூக்கா 16:9…)நான் உங்களுக்கு சொல்கிறேன்…
நீங்கள் மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு சினேகிதரை சம்பாதியுங்கள்…..
இதை படித்தபின் வேறு நான் என்ன சொல்ல.
என் கடைசி முயற்சி …..
என் மனைவிக்காக காத்திருக்க போகிறேன்..
அவள் எப்போது வருவாள்..? அப்படி வரும்போது என்னோடு தங்குவாளா..?
தூரத்தில் என்னை இங்கு அனுப்பி வைத்த அந்த மண்டபம்..அல்லது அலுவலகம்…..அல்லது கூடாரம்…..ஏதோ…அது தெரிய ஆரம்பித்தது.
107
நான் மிகப்பெரிய  சோகத்தில் இருந்தேன்……என்னால் அசையக் கூட முடியவில்லை………………….
நான் அந்த மண்டபத்தை நெருங்கும் போது மிகவும் பயந்தேன்..யாரை கேட்பது..
என்ன கேட்பது…?
கேட்டால் என் கேள்விக்கு பதில் கிடக்குமா…?
சரி போய் கேட்கத்தான் வேண்டும்..எனக்கு வேறு வழி தெரியவில்லை..
அருகில் வந்து விட்டேன் .
நான் உள்ளே நுழையும் வாசலைத் தேடினேன்……
.முதலில் நான் வரும் போது இருந்த வாசலின் வடிவமைப்பு இப்போது இல்லை.
இங்கே எல்லாமே மாறிக் கொண்டுதான்  இருக்கிறது..
ஒரு வழியாக உள்ளே போகும் வழியை கண்டுபிடித்து விட்டேன்.
உள்ளே நூழைந்ததும் கவனித்தேன்.
எண்ண முடியாத இருக்கைகள்.. எல்லாவற்றிலும் யார் யாரோ அமர்ந்திருந்தார்கள்…
..நீளமான பெஞ்சுகள் ,டேபிள்கள்..
விசாரிக்க படுபவர்கள் ,விசாரிப்பவர்கள் ….விசாரிக்கும் பரதீசின்  ஆட்கள் எல்லோருடைய முகமும் கிட்டதட்ட ஒரு மாதிரிதான் இருந்தது….மீண்டும் தேடினேன்..
108
முன்பு என்னை விசாரித்த அந்த இடத்தை தேடினேன்…..கண்டு பிடிக்க கடினமாக இருந்தது.
அந்த மண்டபத்தின் கட்டமைப்பு தினமும் (..இங்கே நாட்கள் கிடையாது..) மாறிக்கொண்டுதான் இருக்கும் போல..
நான் நேராக அங்கே விசாரித்து கொண்டு இருக்கும் ஒரு பரதீசின் ஆளிடம் போனேன்.
அவன் என்னை கண்டதும் … விசாரணையை நிறுத்தி விட்டு     என்னைப் பார்த்து என்னவென்று கேட்டான்…
நான் அந்த பரதீசின் ஆளிடம் எனக்கு சில விபரம் தேவை என்றேன் .
என்ன விபரம் ..?என்று கேட்டான்…
என் மனைவி இங்கே எப்போது வருவாள் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று கூறினேன்….
அவன் என்னை உற்றுப் பார்த்தான்.
ஏன் இப்படி பார்க்கிறான்..? தெரியவில்லை ..
அந்த பரதீசின் ஆள் வேறு ஒரு திசையை சுட்டிக்காட்டினான்.
நான் திரும்பினேன்..
அவன் காட்டிய திசையில் ஒருவர் அமர்ந்திருந்தார்…..அவரும் பரதீசின் ஆள்தான்..ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தார்..
அவரிடம் போய் அவர் முன்னால் நின்றேன்..அவர் முதலில் என்னை அமரச் சொன்னார். நான் அமர்ந்தேன்…….
உனக்கு என்ன வேண்டும் ..?...என்றார்
109
நான் அவரிடம் என்மனைவி இங்கு எப்போது வருவாள் என்று தெரியவேண்டும் என்று கூறினேன்.
அவர் என்னை மீண்டும் உற்றுப்பார்த்தார்.அவர் கூறினார்…
பூமியின் சொந்தங்கள் இங்கே நிலை நிற்காதே என்றார்..
நான் அவரிடம்..அது எனக்கும் தெரியும் .ஆனால் இப்போது அதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்றேன்….
அவர் ம்……சரி பார்க்கலாம்..ஆனால் ஒன்று இது மிக துல்லியமாக இராது.
ஏனென்றால் மனிதர்களுக்கு பூமியில் அதிக சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கிறது..
ஆகவே அவர்கள் தங்கள் உயிரை தங்களின் காலத்திற்கு முன்பே முடித்து கொள்ளலாம்…..அல்லது வேறு யாராலோ கொல்லப்படலாம்…..இப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் மட்டுமே இங்கே நான் சொல்வது சரியாக இருக்கும் என்றார்
.
நான் அது சரிதான் என்றேன்…
அப்போது அவர் …சரி ..உன் மனைவி எப்போது இங்கே வருவாள் என்று பார்க்கலாம் என்றார்.
அவர் கையில் ஒரு படம் எடுக்கும் கருவி போன்ற ஒன்றால் என்னை படம் எடுத்தார்…

110
அவருக்கு வலது பக்கத்தில் ஒரு கம்யூட்டர் மானிட்டர் போன்ற ஒரு அமைப்பு இருந்தது.அதில் முதலில் என் புகைப்படம் வந்தது..அதன் பின் என் மனைவியின் முகம் தெரிந்தது…
அந்த படத்திற்கு கிழே ஏதோ எழுத்துக்கள்  ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பரதீசின் ஆள் அதை படித்து கொண்டே இருந்தார்.
அது அசைவற்று நின்றுவிட்டது….
அவர் என்னிடமாக திரும்பினார்….நான் அவர் முகத்தை கவனித்தேன்…..
அவர் பேச தொடங்கினார்…
….அவள் நீ பூமியில் இறந்த உடன் அவள் அதிக துயர பட்டிருக்கிறாள்…
.மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததினால் அவள் காலங்கள் கொஞ்சம் குறைந்து விட்டது..
மனிதர்களின் கவலைகள் அவர்கள் வாழ்நாட்களை குறைத்து விடும்
என்பதை அவர்கள் அறிவதில்லை…
.மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் வேத புத்தகத்தில் கவலைப்படாதிருங்கள் என்று பல முறை கூறி இருக்கிறதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
கவலை பயத்தை உண்டாக்கும் ...பயம் மரணத்தை கொண்டுவரும்….
கவலையும் பயமும் சகோதரர்கள் போல என்றான்……
நான் சரிதான் ஆனால்…
இதை பற்றி இப்போது பேசி எனக்கு எந்த லாபமும் இல்லை.என் மனைவி எப்போது வருவாள் அதை மட்டும் கூறுங்கள் என்றேன்….
111
அவர் என்னை பார்த்தபடி  …..உனது பூலோக கணக்குப்படி இன்னும் மூன்று நாட்கள் என்றார்…
எனக்கு ஒருபக்கம் சந்தோசமாக இருந்தது .மறுபக்கம் தவிப்பாகவும் இருந்தது…..
அப்போது அந்த மண்டபம் முழவதும் ஒரே பரபரப்பாய் இருந்தது. என்னவென்று பார்த்தேன்….
ஒரு ஆயிரம் பேர்கள் இருக்கும் .கும்பலாக வந்தார்கள்…
..அதாவது அவர்களை பரதீசின் மனிதர்கள் அழைத்து வந்தார்கள்…
அந்த ஆயிரம் பேர்களின் முகங்களும் மூடபட்டிருந்தது….அவர்களை வரிசையாக உட்கார வைத்தார்கள்  …
நான் என் பக்கத்திலிருந்த பரதீசின் ஆளிடம் இவர்கள் யார்..? என்றேன்.
பூமியிலே நடக்கும்  போரிலே அநியாயமாக கொல்லபட்டவர்கள்……
..அவர்கள் வாதிக்கபட்டிருக்கிறார்கள்..
 .பல நாட்கள் துயரத்தை அனுபவித்து சித்ரவதை செய்யபட்டு கொல்ல பட்டிருக்கிறார்கள்
ஆகவே அவர்களுக்கு அறுதலின் உடை இங்கே அளிக்கபடும்..
 .ஆது நியாத்தீர்ப்பு நாள்வரைக்கும் அவர்களிடம் இருக்கும்.என்றான்.
ம்….சரி நீ இப்போது என்ன செய்யப் போகிறாய் என்று என்னிடம் கேட்டான்.
நான் யோசித்தேன்
112
நான் தனியாக அங்கே போய் என்ன செய்ய…… பேசாமல் இங்கே இருந்து விட வேண்டியது தான்..
மூன்று நாள் தானே………
பரதீசின் ஆள் என்னை பார்த்துக் கொண்டே இருந்தான்..நான் பதில் கூறினேன் .
நான் இங்கேயே இருக்க போகிறேன் என்றேன்……
நீ இங்கயே தங்க முடியாது..உன் இடத்திற்கு போகத்தான் வேண்டும் என்றான்….
நான் அவனிடம் மூன்று நாள் தானே..இப்படி ஓரமாய் நின்று கொள்கிறேனே..என்றேன்..
அவன் பதில் சொல்லாமல் வேறுபக்கம் பார்த்துக் கொண்டான்..
எனக்கு உட்கார கூட இடமில்லாததை போல உணர்ந்தேன்.
எழுந்து அங்கே ஓரமாக நின்றேன்…என் மனைவியை நினைத்து கொண்டேன்..சீக்கிரமாக அவள் வந்தால் நல்லது..
அனைவரும் உள்ளே வரும் வழியை பார்த்தபடி நின்று கொண்டே இருந்தேன்
புதிது புதிதாய் நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள்…
வந்த உடனே பரதீசில் சிலருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கபடுகிறது.பலர் ஒன்று மில்லாமல் விசாரிக்க படுகின்றனர்…..
சிலருடைய முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.
பலர் வாடிய முகத்துடன்  அமர்ந்திருக்கின்றனர்…
113
எனக்கு மனது குழம்பி போய் இருக்கிறது….
.என் மனைவி எப்போது வருவாள் ..சரியாக தெரிந்தால் நன்றாக இருக்குமே….
நான் வாசலையே பார்த்து கொண்டிருந்தேன்……..
ஏற்கனவே நான் என் மனைவியை பற்றி விசாரித்த பரதீசின் ஆளிடம் போய் ……என் மனைவி வந்தால் எனக்கு தெரிவிக்கபடுமா…? என்று கேட்டேன்..
அவன் என்னை பார்த்து …..நிச்சயம் சொல்லப்படும்..நீ அந்த இருக்கையில் போய் அமரலாம் என்று எனக்கு ஒரு இருக்கையை சுட்டி காட்டினான்.
நான் போய் அமர்ந்தேன்.
.ஆகா ..தூக்கம் என்ற ஒன்று பூமியில் உண்டு… .அது இங்கும் இருந்தால் நன்றாக இருக்குமே……இங்கு தூக்கம் கிடையாது.
.தூங்குவது என்றால் ஒரே தூக்கம் தான்…..நியாயத்தீர்ப்பு வரை….
நான் மறுபடியும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..திடீரென்று ஒரு ஒரு பரதீசின் ஆள் என்னிடம் வந்தான்.
எனக்கு திக்கென்றது..
நான் ஆவலுடன் எதிர்பார்த்தது இந்த நேரத்தைதான்……
என்ன ..? என்று அவனிடம் கேட்டேன்
உன் மனைவி வந்து விட்டாள் என்றான்…..
எனக்கு பேச முடியவில்லை…..ஒரு மாதிரியாக சமாளித்தேன்…
114
எங்கே…? என்று…….சற்று உளரல் தொனியில் என் பேச்சு இருந்தது….
அவன் என்னைப் பார்த்து ….கொஞ்சம் நில் ..உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான்..
நான் நின்றேன்..
நீ உன் மனைவியிடம் அதிகம் பேசக்கூடாது…. அவள் பேசுவதற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும்..எந்த கட்டாய படுத்தலும் கூடாது..இது பூலோகம் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்.
நீ ஏதாவது குளறுபடி செய்தால் நாங்களே உன்னை அடக்கி(….அதாவது நிரந்தர அமைதி……)..விடுவோம் என்றான்…..
நான் பதில் சொல்லாமல் …ம்..என்று ..மட்டும் சொன்னேன்..
 என்னை ஒரு அறைக்குள்ளே அழைத்து சென்றான்….
அங்கே என் மனைவி இருந்தாள்…
…அழகான வெண்மை நிறத்தில் அவளது உடை இருந்தது.
உடையின் ஓரங்கள் தங்கம் போல மின்னிக்கொண்டிருந்தது…..அந்த வெண்மையான நிறம் மாறி வேறு நிறம் வந்தது. இப்படி மாறிக்கொண்டே இருந்தது….எல்லாமே அழகாய் இருந்தது.
அவளை சுற்றி நிறையபேர் நின்று கொண்டிருந்தார்கள் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.
நான் போய் அவர்களின் பின்னே நின்றேன்.
யாருமே என்னை கண்டு கொள்ளவில்லை..
திடிரென்று என் மனைவி என்னை பார்த்தாள்..சிரித்தாள்……
115
அவ்வளவுதான்…
வேறுபக்கம் பார்த்து வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
.அப்போது தான் ஒன்றைக் கவனித்தேன்….அவர்கள் எல்லோரும் என்மனைவியை தங்களோடு இருக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்….
என் மனைவி எந்த பதிலும் சொல்லவில்லை
நான் என் மனைவியிடம் மெதுவாக நெருங்கினேன்.
அவளை பேர் சொல்லி அழைத்தேன்…….என்னை தெரிகிறதா..? என்றேன்..
அவள் …..ம்..என்று சிரித்தாள்……
என்னுடன் தங்க வரலாமே என்றேன்….
அவள் ஒன்றும் சொல்லவில்லை ……சிரித்து கொண்டே மீண்டும் அவர்களிடம் மீண்டும் பேசிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் யார்
..பூமியில் இவர்கள் என்னவாயிருந்தார்கள்…அவர்களுக்கும் என் மனைவிக்கும் எப்படி இவ்வளவு பாசப்பிணைப்பு ஏற்பட்டது…..
என்னைத் தேடி யாருமே வரவில்லை..
ஒன்றை புரிந்து கொண்டேன் …..உண்மையான அன்புதான் பூமியை கடந்தும் வருகிறது…
.நான் யாரிடமும் பூமியில் உண்மையாக அன்பு செலுத்தவில்லை .ஆகவே இங்கு என்னையும் யாரும் நேசிக்கவில்லை..
116
அங்கே மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது .அவர்கள் அத்தனை பேரும் என் மனைவியுடன் உள்ளே போய்விட்டார்கள்…
நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன்..
இனி நான் என்ன செய்வது…
பேசாமல் என் மாளிகைக்கு திரும்பி விட வேண்டியது தான்..
அப்போது என்னிடமாக ஒரு பரதீசின் ஆள்வந்து நின்றான்…..என்னைப் பார்த்தான்..
இனி என்ன செய்ய போகிறாய் ..?என்றான்….நான் பதில் சொல்லவில்லை..பேசாமல் என் மாளிகையை நோக்கி நடந்தேன்…
இப்போதும் அதே சாலையில்தான் நடந்து கொண்டிருக்கிறேன்…
நிறைய மாளிகைகள் புதிதாக தோன்றி இருக்கிறது..இவர்கள் அனைவருமே பரிதபிக்கபட வேண்டியவர்கள்….
பூமியின் சிந்தனை வேறு பரலோகத்தின் சிந்தனை வேறு.
பூமியின் சொத்துக்கள் வேறு பரலோகத்தின் சொத்துக்கள் வேறு.
இதை சரிவர புரிந்தவர்க்குதான் பரதீசு இன்பமாக இருக்கும்..மற்றவர்களுக்கு என் கதிதான்.

நான் என் மாளிகைக்குள் வந்து விட்டேன்..
இனி என்ன செய்வது….இங்கே அயர்வு இல்லை.தூக்கம் இல்லை.
கண்கள் திறந்தபடி யோசித்தேன்…
117
அநித்தியமான பொருட்களினால் நித்தியத்தில் என்னை சேர்த்து கொள்ள அன்பையும அன்பானவர்களையும் சம்பாதிக்க தவறி விட்டேன்.
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை நியாத்தீர்ப்புவரை அமைதியாக …..அடக்கமாக இருக்கப் போகிறேன்….
நான் ஒரு இருக்கையில் சாய்வாக அமர்ந்தேன்….
முடிந்தது……நான் கண்களை மூடினேன்..
நான் அடக்கமாக போக வேண்டும் என்று நினைத்தேன்..
அவ்வளவுதான்……
என் கால்கள் மெல்ல மெல்ல உணர்வற்று போக தெடங்கியது.
.அடுத்து அது மேல்நோக்கி அதாவது என் கழுத்தை நோக்கிவர துவங்கியது.
கால் கை எல்லாம் கற்பாறை போல் உறைந்து போனது….
இப்போது என் கண்கள் மட்டும் பாக்கி இருக்கிறது.
அதுவும் மெல்ல மங்க துவங்கி விட்டது..
……..(…..மரண வாசல் முற்றிற்று…)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக