திங்கள், 18 மே, 2015

மலர் டீச்சர்

                                                                       















                                                 மலர் டீச்சர்
 (1)                   
                                                             மலர். டீச்சர்

..மலர் டீச்சர் அந்த பரிட்சை பேப்பரை  பல முறை கூட்டி மதிப்பெண்ணை சரிபார்த்தாள்
ஒவ்வொரு முறையும் கூட்டுத்தொகை வேறு வேறாய் வருகிறது..
இது வரை இப்படி நடந்ததே இல்லை..

மலர்  டீச்சர் எட்டாம்  வகுப்புக்கு பாடம் நடத்துகிறாள்

.திருத்திய .பரிட்சை பேப்பரை மாணவிகளுக்கு கொடுத்து விட்டு அமர்ந்தாள்
.சில  நிமிடத்தில் நிறைய மாணவிகள் ….டீச்சர் எனக்கு டோட்டல்ல மார்க் குறையுதுண்ணு வந்து நிண்ணப்போ  மனசுக்குள்ள சுருக்குண்ணு  குத்தியது.

……தப்பு நடந்திருக்கு ……புரிந்து கொண்டாள் .உடனடியாக எல்லா பேப்பரையும் வாங்கி விட்டாள்

ஸ்டாப் ரூமுக்கு வந்து அனைத்தையும் சரிபார்க்க உட்கார்ந்தாள்..

ஆனால் ஒரு பேப்பரை முழுவதுமாக மதிப்பெண்ண கூட்டும் முன் மனது எங்கோ போய்விடுகிறது..
மனதை ஒரு நிலை படுத்த முடியவில்லை……..கொஞ்சநேரம் கண்ணை முடி தூங்கினால் நல்லது..

ஆனால் இது தனியார் பள்ளி.கெடுபிடிகள் அதிகம்..தூங்க முடியாதுபேசாமல் லீவு போட்டு விடலாமா..

ம்..வீட்டுக்கு போனால் இன்னும் டென்சன் அதிகமாகும்..
மலர் டீச்சர் தன் கணவனை நினத்தாள்….எல்லாம் அவனால் வந்த வினை

இரண்டு நாளாய் ஜெயமோகனுக்கு லேசான காய்ச்சல்

.ஜெயமோகன் மலர் டீச்சர் கணவன்….

அவன் தனியார் ரேடியோ நிலையத்தில் பொறுப்பான பதவியில் உள்ளவன்….

                                                                       
(2
)பொதுவாக  நமக்கு சளிபிடித்தல் மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரை எல்லாமே தூக்கம் வரக்கூடியதாகத்தான் இருக்கும்.
                                               
ஜெயமோகன் இரவு மாத்திரை போட்டுவிட்டு படுத்தவன் காலையில் வெகுநேரமாகியும் தூங்கி கொண்டே இருந்தான்.

மலர் டீச்சரும்  பாவம் தூங்கட்டும் என்று விட்டு விட்டாள்..

மலர் டீச்சர் தற்செயலாய் சமையல் அறையில் இருந்து பெட்ரரூமுக்கு போனாள்.
அங்கே ஜெயமோகன் செல்போன் சைலண்ட்  மோடில் உறுமிக் கொண்டிருந்தது..

ஜெயமோகனை எழுப்பவேண்டாம் என்று நினைத்து அந்தபோனை எடுத்து டச் ஸ்கிரீனில் லாக்கை விடுவித்து.
காதில் வைத்து.. ஹலோ சொல்வதற்குள்
மறு முனையில் இருந்து ஒரு பெண்ணின் அழகிய குரல்……

என்னப்பா இன்னும் முழிக்கலியா..? அப்பவே கால் பண்ணினேன்……குட் மானிங்ப்பா….ஓகே ஆபீஸ்ல பார்க்கலாம்பை….மா..

மலர் டீச்சருக்கு பயங்கர ஷாக்……..யார் இவள்.?
குட் மானிங் சொல்ல ஒரு காலா………?
வாப்பா போட்டு பேசுற அளவுக்கு உரிமையா…?
இவ்வளவு ஒட்டுதலா……?
ஆபீஸ்ல பார்க்கலாம்னா..?ஒரே ஆபீஸ்....அதாவது கூட வேலை பார்க்கிறவள்….

ஐயோ….. இத்தனை வருடம் சுமுகமாக பேய்கொண்டிருந்து வாழ்க்கையில் இடையில் புதிதாக ஒருத்தி வந்திருக்கிறாள்

.இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா….?
உடனே தட்டி எழுப்பி கேட்கவா..?

மலர் டீச்சர்  ஜெய மோகனை பார்த்தாள்.

ஜெய மோகன் அப்பாவியாய் தூங்கி கொண்டிருந்தான்


(3)
மெதுவாக சமையல் அறைக்குள் வந்தாள் .சமைக்க முடியவில்லை
                                                                       
அந்த பெரிய வீட்டில் அவனும் அவளும் மகள் இலக்கியா என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மட்டுமே.

இலக்கியாவுக்கு காலை எட்டுமணிக்கு ஸ்கூலுக்குஆட்டோ வந்து விடும்முதலில் அவளை அனுப்பி ஆகிவிட்டது.
இப்போது வீட்டில் இருப்பது மலர் டீச்சரும் ஜெய மோகன் மட்டும் தான்.
.
ஆகவே இப்போது .அந்த  செல்போன் பெண்ணை பற்றி கேட்கலாம்..

கேட்டால் என்ன நடக்கும்..?
எதாவது சொல்லி சமாளிப்பான்….
ஆனால் நாளையிலிருந்து தனக்கு சுத்தமாக எதுவும் தெரியாதபடி பார்த்து கொள்வான்.

இது சரியாய் வராது….
எப்போதும் போல இருந்து கொள்ள வேண்டும் .

மெதுவாக  கண்காணிக்க வேண்டும்.
சரி கண்காணித்து என்ன செய்வது…?
பல கேள்விகளும் முடிவு செய்ய முடியாதபடி பதில்களுமாக வந்து கொண்டிருந்தது.

ஜெயமோகன்  கண்விழித்தான்.
.பாத் ரூமுக்குள் சென்றுவிட்டான்….மலர் டீச்சர் ஜெயமோகனை நேருக்குநேர் பார்க்க பிடிக்கவில்லைஆகவே அவன் குளித்து விட்டு வரும் முன் மட மட வென்று கிளம்பி ஸ்கூலுக்கு வந்து விட்டாள்……

அன்று மாலை பள்ளி முடிந்து சாயங்காலம் வீட்டிற்கு சென்றாள்..

இரவு ஜெயமோகனிடம் இருந்து போன்வந்ததுதான் அவசரமாக சென்னை போவதாகவும்..அதற்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்து இருக்குமாறும் கேட்டுக்கொண்டான்.

(4)
இப்படி அடிக்கடி நடப்பது தான் .ஆனால் இன்று  மனதில் பல கேள்விகள் எழுகிறது

.கூட  யார் எல்லாம் போகிறார்கள் ….போய்விட்டு எப்போது வருவார்..
                                                                       


எல்லா கேள்விகளுமே முகம் தெரியாத அந்த பெண்ணை  சுற்றியே வருகிறது..
மாலையில் ஜெயமோகன் வந்தான் .
முகம் கருத்து இருந்தது….சரியாக பேசவில்லை..

போகும் போது நான் வர நான்கு நாட்களாகும் .ஆபிஸ்ல சின்ன பிரச்சனை….
வந்து சொல்றேன்..என்று கூறிவிட்டு சென்னைக்கு பறந்து விட்டான்….

மலர் டீச்சருக்கு பரிட்சை பேப்பர் திருத்த வேண்டும்.இரவில் திருத்துவதற்காக உட்கார்ந்தாள்..பேப்பரில் உள்ள எழுத்துக்கள் அடிக்கடி காணாமல் போய்கொண்டே இருந்தது

.இரரண்டு நாள் கழித்து திருத்தலாம் என்றால் அதுவும் முடியாது….

எல்லோரும் திருத்திய பேப்பர்களுடன்  பள்ளிக்கு வரும்போது தான் மட்டும் பிந்தி கொடுத்தால் பல கேள்விகள் மேல் இடத்தில் இருந்து வரும்

. மன குழுப்பத்துடன் திருத்திய பேப்பரில் மதிப்பெண் கூட்டுத்தொகையில் பல தவறுகள்……

நிறைய மாணவிகள் எழுந்து டீச்சர் எனக்கு மார்க் குறைவா இருக்கு.இவளுக்கு அதிகமா இருக்கு …..என்று பக்கத்து மாணவியை காட்டும் போது மலர் டீச்சருக்கு பக்..கென்றது..

உடனே அவசரமாக அனைத்து பரிச்சை பேப்பர்களையும் வாங்கி விட்டாள்..
ஸ்டாப் ரூமுக்குவந்து சரிபார்த்தாள்

ஆம் ….சரிதான் .நிறைய தவறுகள்இப்போது மறுபடியும் கூட்டி எழுதினால் சரியாகிவிடுமா..?..வேறு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.யாரை கேட்பதுகுனிந்து கண்களை மூடிக் கொண்டிருந்தாள்

திடீரென்று தன் தலையை இதமாக யாரரோ தடவுவது தெரிந்து திடுக்கிட்டு கண்விழித்தாள்..
கேத்ரின் மிஸ்  அருகில்..நின்று கொண்டிருந்தாள்

மலருக்கு பக் கென்றது………  (..தொடரும்..)
                                                                       







மலர் டீச்சர்(2)
                                                                         (5)
என்னம்மா உடம்புக்கு சரியில்லையா..?

ஒண்ணுமில்ல மிஸ் லேசா தலை வலிக்கு அதான்….

சரி ..இப்படி கொண்டா பேப்பரை…..என்ன மார்க் டோட்டல் செக் பண்ணனுமா..?

மலர் திடுக்கிட்டாள்.
 
கேத்தரின் மிஸ் உதவி செய்வது இப்போது சந்தோசமாக இருந்தாலும் நிறைய தவறுகள் இருந்தால் என்ன நினைப்பாங்க.

கேத்தரின் மிஸ் பேப்பர்களை தன் பக்கம் இழுத்து கொண்டு பேப்பர்களை சரி பார்க்க ஆரம்பித்தாள்..

மலர் டீச்சர் தன் தலை வலி நாடகத்தை தொடர்ந்தாள்.

டேபிளில் மெதுவாக கவிழ்ந்து படுத்து கொண்டாள்.

கேத்தரின் மிஸ்ஸை பற்றி நினைத்தாள்.
கேத்தரின் மிஸ் திருமணம் ஆகாதாவள்.ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருடம் மட்டுமே இருக்கிறது.

பள்ளியில் கேத்தரின் டீச்சருக்கு தனி மதிப்பு உண்டு கேத்தரின் டீச்சரை பள்ளியில் உள்ள அத்தனை மாணவிகளுக்கும் பிடிக்கும்..
அது மட்டு மல்ல தங்களின் தனிப்பட்ட பிரச்சனையை கூட   மிகவும் நம்பிக்கையாக கோத்தரின் டீச்சரிடம் சொல்லும் பிள்ளைகள் ஏராளம்.

                                                                    


 (6)
நிமிர்ந்த பார்வையுடன் காலை பூமியில் அழுத்தி நடக்கும் கேத்தரின் டீச்சர் மாணவிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ ஒரு சம்பவம்தான் காரணமாக இருந்தது.
ஐந்து வருடத்திற்கு முன் …..காலையில் பள்ளிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தாள் கேத்தரின் டீச்சர்.

பஸ்ஸில் ஒரு சீட்டில் பள்ளி மாணவியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் நல்ல கூட்டம்.
திடிரென்று பக்த்தில் நின்று கொண்டிருந்து ஒரு பையன் கேத்தரின் பக்கத்தில் இருந்து மாணவியிடம்  ஏதோ ஒன்றை அவள் கைகளை பிடித்து திணித்தான்.
அந்த பெண் திமிற அவன் தன்கையில் இருந்த பேப்பரை அந்த பெண்ணின் பையில் திணிக்க முயல… மீண்டும் அந்த மாணவி கத்திகதற அந்த பையனின் கை கேத்தரின் டீச்சர் முகத்தில் மோதியது.

கோபமான கேத்தரின் டீச்சர் எழுந்து அந்த பையனின் முகத்தில் ஓங்கி அறைந்தாள்……………….                       
.அவனுக்கு இது அவமானமாகி போனது..பதிலுக்கு கையை மடக்கி கேத்தரின் டீச்சர் முகத்தில் குத்தி விட்டான்.

பின்னால் நின்று கொண்டிருந்தத ஒரு பத்திரிக்கை காரன் செல்போனில் படமெடுத்து உடனே தன்  பேப்பர் நிறுவனத்திற்கு பார்வேர்டு பண்ணிவிட்டான் .
கேத்தரின் டீச்சர்  மூக்கில் இருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

கேத்தரின் கையால் துடைக்க அது முகமெல்லம் பட்டு மொத்தமும் இரத்தக்கறையாகி  முகம் பார்ப்பதற்கு விகாரமாகிவிட்டது.

இதை பார்த்த மற்ற மாணவிகள் பயத்தில் கத்திவிட்டனர்.
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தத டிரைவர் சத்தம் கேட்டு தன் சைடு கண்ணாடி வழியாய் பார்த்து ஒரளவு நிலமையை புரிந்து கொண்டார்
 பஸ்ஸை மெதுவாக ஓரமாக நிறுத்தினார்.

  (7)
அந்த சமயம் பார்த்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தனது ஜீப்பில் அங்கே வந்து கொண்டிருந்தார்.
பஸ்சுக்குள் எழுந்த கூச்சலும் குழப்பமுமாக  இருக்கிறது அது என்னவென்று டிரைவரிடம் கேட்டார்
.
.டிரைவர் …..ஒருபெண்ணை ஒருவன் அடித்துவிட்டான் முகமெல்லாம் இரத்தமாக இருக்கிறது என்று சொல்லவேவண்டியை பக்கத்திலிருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுபோக சொல்லிவிட்டு தானும் பஸ்ஸில் ஏறி என்னவென்று  விசாரிக்க ஆரம்பித்தார்.

கேத்தரின் டீச்சரை அடித்தவன் உள்ளுர் அரசியல்வாதியின் செல்லமகன்.

அவன்… இன்ஸ்பெக்டர் பஸ்ஸின் உள்ளே வரவும்… அவரை கண்டவுடன் நிலமை மோசமாகி விட்டது என்பதை புரிந்து கொண்டான்.

உடனே தன்செல்போனில் தன் அப்பாவின் மானேஜர் ஆறுமுகத்துடன் தொடர் கொண்டான்..
இதற்குள் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அவன் பக்கத்தில் வந்து அவன் சட்டையைபிடித்து முகத்தில் ஓங்கி அறைந்தார்.

தான் யார் என்பதை சொல்லவேண்டும்; என்று நினைத்தான்.
அதற்குள்  இன்ஸபெக்டரோடு வந்த போலிஸ்காரர்களும் அவனை பஸ்சுக்கு உள்ளே அடி பின்ன ஆரம்பித்தார்கள்.
மாணவிகள்  தங்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவட்டதாக நினைத்து அமைதலாயினர்

.பத்திரிக்கைகாரன் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தொடர்ந்து தன் பத்திரிக்கைக்கு செல்போன் மூலமாக படமாகவும் வீடியோவாகவும் அனுப்பிகொண்டே இருந்தான்.

பஸ் ஸ்டேசனில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது.

(8)
இன்ஸ்பெக்டர் கேத்தரின் டீச்சரிடம் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கி கொண்டார்.
அவள் ஒரு ஆசிரியை என்பதை அறிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் கேத்தரின் டீச்சருக்கு மருத்துவ வசதி பெறுவதற்கு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



கேத்தரின் டீச்சர் தனியார் மருத்துவ மனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றாள்.அங்கு முகத்தில் காயப்பட்டதின் விபரம் கேட்கபட்டு அங்கு உள்ள காவல் நிலையத்திலும் கேஸ் பதிவானது.

அன்று பள்ளிக்கு கேத்தரின் டீச்சர் பிந்தி வந்தாள் ..இதற்குள் பள்ளி முழுவதும் செய்திபரவியது..

ஆனால் அன்று மாலை பேப்பரில் கேத்தரின் டீச்சர் படத்துடன் செய்தி வெளியானது .அது எதிர் கட்சிக்கு ஆதரவான  பத்திரிக்ககை.ஆகவே கொட்டை எழுத்தில் இப்படி வெளியியிட்டது.

ஆளும் கட்சி அரசியல் பிரமுகர் மகன் அடாவடிச்செயல்.

ஓடும் பஸ்ஸில்  மாணவியிடம் சில்மிசம்..தட்டிக்கேட்ட ஆசிரியை முகத்தில் குத்தி கொலை செய்ய முயற்சி.
அவ்வளவுதான்..
அன்று இரவு தொலைகாட்சியில் இதை பற்றிய விவாதம் நடந்தது.அடுத்த நாள் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் கேமராவுடன் கேத்தரின் டீச்சர் வீட்டை முற்றுகையிட்டனர்.

கேத்தரின் டீச்சர் மிரண்டாள்.
வீட்டின் பின் வாசல் வழியாக வெளியே வந்து ஒருவாரம் லீவு போட்டுவிட்டு, தன் தங்கை கொடைக்கானலில்
ஆசிரியை யாக வேலை பார்க்கிறாள் அவளிடம் சென்றுவிட்டாள்.

(9)
யாரிடமும் தான் எங்கு போகிறேன் என்று கூறவில்லை.தன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்..

.ஆனால் பத்திரிக்கைகள் விடவில்லை. அன்று மாலையில் மீண்டும் அதையும் செய்தியாக வெளியிட்டது



;ஆசிரியை தலை மறைவா..?அல்லது கடத்தலா..,உயிருக்கு பயந்து ஓட்டமா…?அரசாங்கம் பதில் சொல்லவேண்டும்.என்று கேட்டது.

அடுத்த நாள் காலை ஆசிரியர் சங்கம் போராட்டத்தில்
                                                                       

குதித்தது.
பள்ளிகள் அடைக்கபட்டன.
ஆசிரியை தேடி ஒப்படைக்குமாறு கோர்ட்; உத்தரவிட்டது ..
போலிஸ்  கேத்தரின் டீச்சரை தேடத் துவங்கியது.

இதற்குள் பலரும் பலவிதத்தில் தேடி  கேத்தரின் டீச்சரை கண்டு பிடித்தார்கள்..
போலீசில் விபரம் சொல்லப்பட்டது.
போலீஸ் அரஸ்ட் செய்ய வேண்டாம் .நாங்களே கோர்ட்டில் ஆஜர் செய்கிறோம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் போசபட்டது

 கோர்ட்டில் கேத்தரின் டீச்சர் ஆஜர் ஆனாள்..

கோர்ட் விசாரித்தது  முடிவில் கேத்தரீனை பாராட்டியது.

அதற்குள் ஆளும் கட்சியில் இருந்து அந்த பிரமுகரின் பதவி பறிக்கபட்டுவிட்டது.

 (10)
ஆளும் கட்சி தாங்கள் மக்களுக்காக எதுவும் செய்வோம் என்று தினமும் பறைசாற்ற தொடங்கியது..

அது மட்டுமல்ல.அவர்மகனுக்கு எந்த உதவியும் செய்யமுடியாது என்று கட்சியின் மேலிடம் கையை விரித்து விட்டது.

இனி ஒரே வழி கேத்தரின் டீச்சரை சமாதான படுத்துவது தான் என அறிந்து அவளிடம் மன்னிப்பு கேட்க பலவிதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளபட்டன.

இறுதியாக கோர்ட் அந்த பையனுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை வழங்கியது.பல மகளீர் அமைப்புகள் கேத்தரின் டீச்சரை தொடர்ந்து பாராட்டிய வண்ணம் இருந்தன.

அந்த நிகழ்வுக்குபிறகு கேத்தரின் டீச்சர் அந்த பள்ளியில் கதாநாயகி ஆனாள்.
மாணவிகள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை நட்சத்திரம் ஆனாள்.

 உண்மையில் கேத்தரின் டீச்சர் நல்லவளே.

சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த கேத்தரின் தன் தங்கைகள் இரண்டு பேரையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தாள்.
எல்லா கடமைகளும் முடிந்தது என்று நினைத்து  இனி தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கையில்

திருமணமான   ஒரு தங்கை குழந்தை பெற்றுக்கொள்ள வீட்டுக்கு வந்தாள்.
அவளுக்கு ஆஸ்பத்திரி செலவு ஒரு தொகை யானது .
அடுத்து சில மாதங்களில் அடுத்த தங்கை தலை பிரசவத்துக்காக வீட்டிற்கு வந்தாள். இப்படி தொடரும்  கடமைகள் முடியவே இல்லை….

(11)
ஒரு நாள் உட்கார்ந்து தானும்  திருமணம் செய்து கொண்டால் என்னவென்று யோசித்தாள் .
வயது அப்போது முப்பத்தி ஐந்து.. .எந்த முடிவுக்கும் வர முடியாமல் எழுந்து விட்டாள்……
                                                                       

மலர் டீச்சர்  கேத்தரீனை பற்றி  நினைத்தது எல்லாமே உண்மை.
.



கேத்தரின் டீச்சர் பொறுமையாக எல்லா பேப்பரையும் பார்த்தாள்.
நிறைய தப்புக்கள் .அனைத்தையும் சரிபண்ணி ஒரே கட்டாக கட்டி மலரிடம் கொடுத்து விட்டு அமைதியாக தன் வகுப்புக்கு சென்று விட்டாள்.

மலருக்கு கேத்தரின் டீச்சரின் இந்த செயல் சற்று ஏமாற்றமாகவே இருந்தது.
கேத்தரின் எதாவது கேட்பாள் .அப்படி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள்.
ஆனால் கேத்தரின் அமைதியாக கடந்து சென்றது  இப்போது இன்னும் பயமாக இருந்தது.

சரிவரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டாள்.
மாலையில் பள்ளி முடிய  சரியாக நான்கு முப்பதுக்கு மணி அடிக்கபட்டது.

இனி வீட்டிற்கு போக வேண்டியது தான். ஜெயமோகன் வீட்டில் இல்லை.

சென்னைக்கு அவன் மட்டும் போய் இருக்கிறான அல்லது அவளும் கூட போயிருக்கிறாளா.?யாரிடம் கேட்பது

சே …..மீண்டும் மீண்டும் அதை பற்றியே சிந்தனை


(12)
வீட்டிற்கு கிளம்பியவள் இதைபற்றியே சிந்தித்து கொண்டு சுவற்றையே வெறித்து பார்த்தபடி இருந்தாள்..

அப்போது ஸ்டாப் ரூமுக்குள் நூழைந்த கேத்தரின் டீச்சர் மலரை கவனித்தாள் .

கேத்தரின் மெதுவாக மலர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

மலர்..

மலர் திடுக்கிட்டாள்..
என்னம்மா…? எதாவது பிரச்சனையா…?கேண்டீன்போகலாமா ஒரு காப்பி சாப்பிடலாமே..மெதுவாக காதுக்குள் கிசுகிசுத்தாள்  கேத்தரின்.
மலர் எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து .
சரி வாங்க போகலாம் என்றாள்….

                                                                       
கேண்டீனை அடையும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை.

கேண்டீனில் சக ஆசிரியைகள்  ஒருவரும் இல்லை .

எல்லா டீச்சர்களும் வீட்டிற்கு பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு ஒடிவிட்டார்கள்.

பாவம் இந்த டீச்சர்கள்

வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போதும் பதற்றம் தான்….பள்ளி முடிந்து வீட்டிற்கு போகும்போதும் பதற்றம் தான்.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியைகள் இப்படி பதற்றத்துடன் தினமும் வாழ்வது சரியாக இருக்காது.
ஆனால் இவர்களின் உண்மை நிலமை இப்படித்தான் இருக்கிறது.பதற்றம் உள்ள இடத்தில் நிதானம் இருக்காது.
                               (13)
நிதானம் இல்லாத இடத்தில் அறிவு எப்படி நிரம்பி இருக்கும்..
 அவர்கள் வேண்டும் என்று இப்படி செய்யவில்லை.ஆனால் யாருமே இதிலிருந்து விடுபட முயற்சிப்பதாகவும் தெரியவில்லை..
    சரி…. இதை விட்டுவிடுவொம்…….

இருவரும் ஒருடேபிளில் அமர்ந்தார்கள்.
டீ வந்தது.
கேத்தரின் மெதுவாக மலரை பார்த்தாள்…..என்ன மலர் உன்வீட்ல எதாவது பிரச்சனையா..

வீட்டில் என்பதற்கு பல அர்த்தம் உண்டேமலர் யோசித்தாள்
இவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள்.மலர் யோசித்தாள் எப்படியும் இதற்கு ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.

மெதுவாகம்…….என்றாள்….
கேத்தரின் அடுத்த கேள்வியை கேட்டாள்…… மலர் அதிர்ச்சியானாள்……
.(தெடரும்,,..)














                                (14)
               மலர் டீச்சர்..3

கேத்தரின் நிதானமாகத்தான் கேட்டாள்…
உன் புருஷன பற்றியா..?
மலருக்கு பக் கென்றது.எப்படி இவ்வளவு துல்லியமாக குறிவைத்து அடிக்கிறாள்..
மலர் கேத்தரீனை பார்த்தாள்.
கேத்தரின் கண் இமைக்காமல்  மலரை பார்த்த படியே இருந்தாள்.
மலர் தலையை கவிழ்த்து கொண்டாள்…..

கேத்தரினின் அடுத்த கேள்வி  துல்லியமாய் மலரை தாக்கியது.
யார் அவள்….?

மலர் நிலை குலைந்து போனாள்….இவள் என்ன தீர்க்கதரிசியா..?

                                                                       
ஒருவேளை அனுபவமாக இருக்கும்.
சரி இவ்வளவு குறிப்பாக சொல்லும் ஒரு நபரிடம் தன் பிரச்சனையை சொல்வது தவறில்லை என்று மலர் முடிவெடுத்தாள்.

ஜெய மோகனை பற்றி எல்லாவற்றையும் கூறி முடித்தாள்..
இப்போது மனதுக்குள் ஒரு சுமை குறைந்தது போல இருந்தது..
கேத்தரின் மெதுவாக பேசினாள்
மலர் உங்களுக்கு இப்போ என்ன வயதாகிறது.
முப்பத்தி எட்டு.
ஜெய மோகனுக்கு..?
நாற்பது..
வீட்ல அன்பா இருப்பாரா..?
இருப்பார்..
உங்க மேரேஜ் லவ் மேரேஜ் தானே.?
ஆமா….

(15)
நான் கேட்பது  என்னன்னா …..கல்யாணம் ஆன முதல் வருடத்தில் இருந்தது போல இப்போ இருக்கீங்களா..?

அப்போ இளமையாக இருந்தோம்.அப்ப போலவே இப்பவும் இருக்க முடியுமா மிஸ்..?

நீ என்ன சொல்ல வர்ரே..
வயசாயிட்லா….
யாருக்கு..?
                                                           

இரண்டு போருக்கும் தான்.?
யார் சொன்னா அப்படி..
யார் சொல்லணும். அதானே உண்மை..?
மத்தவங்க சொல்றது இருக்கட்டும் .நீ  என்ன நினைக்கிறே…..?கேத்தரின் இப்போது ஒருமையில் பேசுவது மலரக்கு பிடித்திருந்தது.

எத பற்றி.?
உன் வயதை பற்றி..?
நான் என்ன நினைக்க இருக்கு .எனக்கு வயசாகிவிட்டது என்று சொல்ல முடியாது…. ஆனால் நான் இளமையாக இல்லை .அதான் உண்மை.பதினைந்து வயசுல ஒரு மகள் இருக்கா..?

நீ இப்போ வயசை பற்றி பேசிறியா..? அல்லது உன் மகளை பற்றி பேசிறியா..?

 இரண்டும் தான்….
அதாவது உனக்கு சப்போட்டா உன் மகளையும் இழுக்கிறே அதானே

மலருக்கு புரியவில்லலை ..நீங்க இப்போ என்ன சொல்ல வாரீங்க…?


(16)
உனக்கு மட்டும் இல்ல எல்லா பெண்களுமே நீ நினைக்கிற மாதிரிதான் நினைக்கிறாங்க
அது தப்பு இல்ல..ஆனால் அதுல தான் சின்னதா  ஒரு பிரச்சனை இருக்கு..
என்னது.

வாழ்க்கையில நாம மட்டும் தனியா போகலியே கூடவே ஒருத்தன் வாரானே..? அவன் என்ன நினைக்கிறான் என்பதும் முக்கியமா படுதே

                                                                       

அவனுக்கும் தானே வயசாகும்…..

கேத்தரின் இப்போது அமைதியாக இருந்தாள்
பின் மீண்டும் மெதுவாக பேச ஆரம்பித்தாள்..ஒருவேளை அவன் தனக்கு வயதாகவில்லை தன் மனைவிக்கு மட்டும் வயதாகிவிட்டது என்று நினைத்தால்………..
அதெப்படி..?

இப்போ அதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணமே…?
உண்மையை எப்படி மறைக்க முடியும்..

மறைக்கிறாங்க.

உங்களுக்கு இன்னும் வயசாகல சார். அப்படியே இளமையா இருக்கீங்கன்னு ஒரு பொண்ணு சொன்னா அவன் என்ன செய்வான்

அத நம்ப கூடாது.

மலர்  நீ சொல்வது உண்மைதான்ஆனால் தான் இளமையாக இருப்பது யாருக்குதான் பிடிக்காது.


(17)
இளமையாக இருப்பது எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் இது பொய்தானே….இப்படி பொய்சொல்வதினால் என்னதான்  நடக்கபோகிறது…?

அதான்  நடந்திருக்கே.

எங்கே.?

உன் வீட்ல
மலருக்கு கொஞ்சம் புரிந்தது போல இருந்தது……

                                                                       
சரியாக கணித்துவிட்டாள் இனி மூடி மறைப்பதில் பயனில்லை……சரி

…..இவ்வளவு  சரியாக கணித்தவளுக்கு இதில் இருந்து மீள்வதற்கு வழி தெரியாமலா இருக்கும் .அதையும் கேட்டுப் பார்க்கலாமா..?
ம்..அதுவும் சரிதான் மிஸ்….இதுக்கு முடிவுதான் என்ன..?அவனிடம் விட்டுவிடுவதா..?அல்லது தெரியாத மாதிரி நடந்து கொள்வதா ..?

விட்டு கொடுக்க யார் சொன்னது ..? …தெரியாத மாதிரி எப்படி நடந்து கொள்ள முடியும்…?

கொஞ்சம் யோசிக்கணும்எப்படியும் உன் புருஷன் வர இன்னும் மூன்று நாட்கள் ஆகத்தானே செய்யும் அதற்குள் ஒரு முடிவு  பண்ணலாம்……

எனக்கு நிம்மதியே போயிட்டு மிஸ்
இதெல்லாம் என் மகளுக்கு தெரிந்தால் என்னவாகும்….

தெரியாதபடி நீதான் பார்த்துக்கொள்ளணும்..

ஒரே  ஆபீஸ்ல வேல பார்க்கிற வாய்ப்பு இருக்கிறப்போ  இந்த உறவு அவ்வளவு சீக்கிரமா விட்டுப்போகுமா என்ன..?

(18)
கேத்தரின் திகைத்தாள் ..மலர் சொல்வது உண்மைதான்….பகலெல்லாம் உறவாட வசதியான இடமாக பணி செய்யும் இடம் இருக்கும்ஆனால் இது தன்னோடு வேலை செய்யும் மற்றவர்களுக்கு தெரிந்தால் ஜெயமோகன் வேலைக்கு ஆபத்து வரத்தானே செய்யும்.
அதுவும் தவறாகி விடுமே….

கேத்தரின் மலரை இரக்கத்தோடு பார்த்தாள்….

.என்னதான் இந்தியபெண்கள் சுதந்திரமாக வாழ நினைத்தாலும் ஒரு நிமிடத்தில் புருஷனை வேண்டாம் என்று தள்ளி விட முடியாது..

மலர் டீச்சர் சுயமாக சம்பாதிப்பவள்.சொல்லப்போனால் அவள் கணவனை விட அதிகம் ஊதியம் பெறுபவள்புருஷனின் உதவி இல்லாமலே வாழ முடியும்..ஆனால் நாளை தன் மகளுக்கு கல்யாண பேச்சு வந்து விட்டால்……..
இவளை சமுகம் எப்படி பார்க்கும்..புருஷனை தண்டித்து விட்ட வீர பெண்மணி என்றா.? அல்லது சரியான முசுடு புடிச்சவா….ப்பா..? இவ குணம் பிடிக்காமத்தான் இவ புருஷன் வேற ஒருத்தி கூட தொடர்பு வச்சுகிட்டான்..
இவள மாதிரிதான் இவமகளும் இருப்பா….. என்றுதானே கேட்கும்…?

அதற்காக கள்ள தொடர்பு வைத்திருக்கும் ஒரு கணவனோடு காலம் எல்லாம் வாழ முடியுமா..?அவனோடு  முகம் பார்த்து பேச முடியுமா…?

இது மாதிரி பெண்கள் நடந்தால் இதை சமுதாயம் எப்படி பார்க்கும்….?

வாழ்க்கையில் எந்த முடிவும் தன்னால் எடுக்க முடியாத சூழ்நிலை வரும் போதுதான்   மனிதன் கடவுளைத் தேடுகிறான் ..

கேத்தரின் மலர் டீச்சரை பார்த்தாள் ,

(19)
மலர் புரிந்து கொண்டாள் கேத்தரின் ஏதோ சொல்ல வருகிறாள் என்று
கேத்தரின் சொன்னாள்……..மலர்  நீ  இந்து தானே..?
இல்ல..

அப்போ கிறிஸ்டீனா..?
இல்ல..மிஸ் நாங்க கடவுள் மறுப்பு கொள்கை உடையவங்க

…….கேத்தரினுக்கு என்ன சொல்வது என்று புரியவில்ல..?
மலருக்கு கடவுள் உதவி கிடைப்பதும் அரிதாகி விட்டது
எதுக்கு மிஸ் கேட்கிறீங்க..?
இல்ல மலர்  சில காரியம் நம்ம கையவிட்டு போகும்போது .அப்போ கடவுள் கிட்ட உதவி கேட்பது தவறே இல்ல

மலர் சிரித்தாள்….?எப்படி..கடவுளே என் புருஷனை திருத்தி என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுண்ணு  கடவுள்கிட்ட கெஞ்சணுமா..?இத விட என் புருஷன்கிட்டயே கொஞ்சிடலாமே..?

மலர் அவசரபட்டு இந்த காரியத்த நீ ஜெய மோகன்கிட்ட கேட்டா அடுத்த நிமிடமே…..இதன் வீரியம் குறைஞ்சு போயிடும்..
 ஒன்று
 மனைவிக்கு தெரிஞ்சு போச்சுண்ணு சொல்லி….ஒருவேளை ஒத்துகிட்டு..ஆமா மலர் எனக்கு அவள மறக்க முடியாது….அவா ரொம்ப நல்லவள்….உனக்கு அவளால எந்த தொந்தரவும் வராம பார்த்துகிடுதேன்.அப்படிண்ணு சொல்லிட்டாண்ணு வச்சுகிடுவோம்.அப்போ அதுக்கு மேல நீ என்ன செய்ய முடியும்

.வேணுமுண்ணா விவாக ரத்து செய்திடலாம்.

அதோடு இந்த பிரச்சனை முடிஞ்சிருமா..?


(20)
இரண்டு
நீ அவள பற்றி கேட்டதும்அவனும் பதறி..அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது..நான் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவன்.இப்படியெல்லாம் நடக்கமுடியுமா….? இது யாரோ வேணுமுண்ணு  செய்திருக்காங்க நான் விசாரிக்கேண்ணு உங்கிட்ட சொல்லிட்டு.மறுபடியும் உன் காதுக்கு வராமா பார்துகிட்டா .இந்த பிரச்னை முடிந்து விடுமா..?

அதனால நீ அவசரபடாதே ..யோசிப்போம் .பதறாம இரு……சரி கிளம்புவோம்
இருவரும் புறப்பட்டனர்.



மலர் யோசித்து கொண்டே பஸ்ஸில் பயணம் செய்தாள்..தான் அவசர பட்டு விட்டோமோ….கேத்தரின் டீச்சர் நல்லவள்தான்  என்றாலும் அவளுக்கு இது முன்றாவது மனிதரின் பிரச்சனை தானே

இதன் வேதனை வலியெல்லாம் எப்படி அவளால் உணர முடியும்……

ஒருவேளை பள்ளிக்கூடத்தில் தன்னைபற்றி மற்றவர்களிடம் பேசாவிட்டாலும் தன் உறவுகளிடத்தில் பேசலாமே..சே அவசரபட்டுவிட்டேன்…..

ஆனால் தன் மனதிற்குள் போட்டு பூட்டி வைத்து குமுறுவதை விட மற்றவர்களிடம் சொல்வதில் சிறிய நிம்மதி கிடைக்கத்தான். செய்கிறது

எப்படியும் தான் கேத்தரீனிடம் சொன்னது தவறா சரியா என்று புரியவில்லை..அவள் சென்ற பேருந்து ஒரு திருப்பத்தில் வேகத்தை குறைத்து திரும்பியது.அங்கே சுவரில் ஒரு வாசகம் பொரிய கொட்டை எழுத்தில் சிவப்பு கலரில்  எழுத பட்டு இருந்தது..

(21)
கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார்.

அது அவளோடு பேசியது போல இருந்தது

மலர் யோசித்தாள் .
.இவர் யார் எனக்கு ஆதரவு தர….இதெல்லாம் உண்மையா……கடவுள் என்பது கற்பனையா.அல்லது உண்மையா…
யோசித்து கொண்டே வீட்டிற்கு வந்து பூட்டியிருந்த கதவில் கையை வைத்தாள்.. கதவு தானாக திறந்து கோண்டது..
மகள் இன்னும் வந்திருக்கமாட்டாள்.அப்படியென்றால் எப்படி திறந்திருக்கும்.வீட்டிற்கு உள்ளே இருப்பது யாராய் இருக்கும்..?மலருக்கு மயக்கம் வருவது போல இருந்தது..



















                        (22)
                    மலர் டீச்சர்—4
கதவு மெதுவாக திறக்க..படபடக்கும் மனதுடன்..கதவருகே போய் நின்றாள்.
யாரையாவது துணைக்கு கூப்பிடலாமா..?...யோசித்தாள்….யாரை அழைப்பது..என்று நினைப்பதற்குள்…. சலவைக்காரன் வந்து அம்மா அயனிங் என்றான்..
அப்பாடா  …சரியாக சமயத்துல வந்திட்டான்….அவனைத் திரும்பி பார்த்தாள்.
.மலர் முகம் வியர்த்து இருண்டு இருந்தது.

சலவைக்காரன் திகைத்தான்…..பல வருட பழக்கம்…. ஆனால்.
அவன் இதுவரை மலரை இப்படி படபடத்த முகத்தோடு பார்த்தது இல்லை.
ஆகவே அவனே கேட்டான்….என்னம்மா ஆச்சு……

மலர் யோசித்தாள்……..சரி இவனை உதவிக்கு அழைப்பது நல்லதுதான்..
மலர் மெதுவாக பேசினாள்…….

இல்ல…… கதவு திறந்து இருந்தது……அதான் எப்படிண்ணு யோசிக்கிறேன்.
ஓ…..அதுவா …உங்க மகா வந்திருப்பா…….

மலர் குறுக்கிட்டாள்….   அவள் வரலியே…..

இப்போது சலவைக்காரனும் யோசித்தான்..
அம்மா நான் இதோ எதிர்த்தாப்லதான்  இருக்கேன்…இண்ணைக்கு நான் எங்கேயும் போகல……எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பே இல்ல…..கொஞ்சம் இருங்க .. நான் உள்ள போய் முதல்ல லைட்ட போடுதேன்…. அப்புறமா நீங்க வாங்க….

அவன் முதலில் வீட்டிற்குள் சென்றான்..
 ஒவ்வொரு சுவிட்சாக ஆண் பண்ணினான்.
(23)
வீடு பிரகாசமானது…….
இப்போது மலருக்கு தைரியம் வந்தது..
அவளும் உள்ளே வந்தாள் ….சுற்றிலும் பார்த்தாள் எல்லா சாமானும் அப்படியே போட்டது போட்டபடி கிடந்தது……..அல்லது இருந்தது..

சலவைக்காரன் மீண்டும்; கேட்டான்… ஏம்மா எதாவது காணாம போயிருக்கா..?... பாருங்க….

மலர் பீரோவை பார்த்தாள் .சாவிக்கொத்து அதிலேயே தொங்கி கொண்டிருந்தது.வேகமாக போய் திறந்து பார்த்தாள். உள் பக்கம் கலையாமல் அப்படியே இருந்தது…..

சலவைக்காரனை நன்றியோடு பார்த்தாள்..எல்லாம் சரியா இருக்கு.சரி நீ உட்காரு நான் டீ போட்டுத் தாரேன் என்றாள்..

சலவைக்காரன்  பரவாயில்லம்மா..நீங்க எனக்கு அயன் பண்ண துணியை எடுத்து வையுங்க நான் வாரேன் …என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
மலர் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்..

என்ன ஆச்சு எனக்கு….வீட்ட  பூட்டாமலேயே சென்றிருக்கிறேன்.

தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

காலடி சத்தம் கேட்கவே மலர் நிமிர்ந்து பார்த்தாள்.மகள் இலக்கியா வந்து கொண்டிருந்தாள்…
மலர்.. கேத்தரீன் டீச்சரை  நினைத்து கொண்டாள்.மகள் இலக்கியாவுக்கு ஜெயமோகனை பற்றிய  விஷயம் தெரியக்கூடாது….எப்போதும் போலவே இருக்க வேண்டும்..


(24)
முயற்சி செய்யவேண்டும்…..அடுத்து கடகடவென குளித்தாள் சமையலை முடித்தாள். மகளோடு சகஜமாக இருப்பது போல நடித்தாள்….
இலக்கியா படித்துவிட்டு சாப்பிட்டு விட்டு தூங்க ஆயத்தமானாள்..
மலர் அப்போதுதான் ஒன்றை கவனித்தாள் .ஜெய மோகன் லேப் டாப்
மேஜை மீது மூடியபடி கிடந்தது
அதை திறந்து பார்த்தால் என்னவென்று நினைத்தாள்…..

சரி இலக்கியா தூங்கட்டும் என்று காத்திருந்தாள்..
இலக்கியா தூங்குவதாக தெரியவில்லை.
மலர் சாதாரணமாக  திறப்பதை போல் லேப் டாப்பை திறந்து ஆண் செய்தாள்.
எதை தேட வேண்டும் தெரியவில்லை
பார்க்கலாம்…….லேப்டாப் ஒளிவிட தொடங்கியது..மவுசை நகற்றி ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள்..
போட்டோஸ் என்ற போல்டரை ஓப்பன் செய்தாள்…
நிறைய போட்டோக்கள்.எல்லாவற்றிலும் ஜெய மோகன் சிரித்த படி இருந்தான்…
ஏகப்பட்ட போட்டோக்கள் ..ஆண்களும் பெண்களுமாக பலர் இருந்தார்கள்……பெண்களை உற்றுப் பார்த்தாள்.
எல்லோருமே அழகாய் இருப்பதைப் போல் இருந்தார்கள்.

மலர் கண்களை மூடினாள்……நான் அழகாய் இருக்கேனா..?

மகள் இலக்கியாவை பார்த்தாள் .அவள் படுக்கையில் குறுக்காக படுத்து தூங்கி கொண்டிருந்தாள்..

மெதுவாக எழுந்து கண்ணாடி முன்னால்போய் நின்று கொண்டு தன்னையே உற்றுப்பார்த்தாள்.
.மீண்டும் அதே கேள்வி…..நான் அழகாய் இருக்கிறேனா…..?

(25)
சே .இது என்ன மடத்தனமான கேள்வி.முற்பத்தி ஒன்பது வயதில் அழகைபற்றி எப்படி நினைக்க முடியும்.
ஒரு காலத்தில் அவளை எல்லோரும் மிக அழகானவள் எள்று புகழ்ந்திருக்கிறார்கள்.
.ஜெயமோகன் இவளை வர்ணித்ததை இங்கே எழுத முடியாது..அப்படி பட்டவன் எப்படி இப்படி மாறினான்.

இப்போது மலருக்கு உண்மையாகவே சந்தேகம் வந்தது.நான் அழகாய் இருக்கிறேனா..?
மலர் கண்ணாடியில் தன்னை உச்சந்தலையில் இருந்து மெதுவாக பார்வையிட ஆரம்பித்தாள்…..
சுருள் சுருளாக நிறை முடிகள் அழகாய்தான் இருந்தது..
தலையை அவிழ்த்துவிட்டு சிலிர்த்து கொண்டாள்..தோள்களுக்கு பின்னே கூந்தல் விரிந்து நின்றது.

அது கொஞ்சம் உலர்ந்து காணப்பட்டது..இடையிடையே வெள்ளைக்கோடுகள் போல நரை தெரிந்தது..
முகத்தில் இமைகளுக்கு கிழே கண்களில் லேசான சருக்கம் தெரிந்தது..
கண்களின் கூர்மை பாதி தொலைந்திருந்தது..

மலர் லேசாக பெருமூச்சுவிட்டாள்…

வலது கையை  தூக்கி படுக்கை வசத்தில் நீட்டி பிடித்தாள் .முழங்கைக்கு மேல் தேள் பட்டை வரை  சதை கொஞ்சம் தொங்கி போயிருந்தது.
ஒருகாலத்தில் செதுக்கி வைத்த சிற்பம் போல இருந்த கைகள்..

புறங்கையை பார்த்தாள் விரல்களுக்கு மேலாக நிறைய சுருக்கங்கள்……..
இடுப்பும் வயிறும் கட்டுவிட்டது நன்றாக தெரிந்தது..
பாதங்களை பார்த்தாள்….விரல்கள் அழுக்காகி நகங்கள் பொலிவிழந்து இருந்தது..
(26)
மலருக்கு அழுகை வருவது போல இருந்தது..ஆனாலும் இன்னொரு நினைவும் வந்தது.
நான் என்ன அழகி போட்டிக்கா போகப் போகிறேன்….
.வயோதிகம் எல்லோருக்கும் வரக்கூடியது தானே.
பின்னே இப்படி உடம்பை தனித்தனியாக கணக்கு பார்ப்பது எவ்வகையிலும் நியாயம் இல்லை.
மலர் கேத்தரின டீச்சரை நினைத்துக்கொண்டாள்.

அவள் தன்னை குழப்பிவிட்டதாக நினைத்து கொண்டாள்….
கேத்தரீனை வெறுத்தாள்…
பின் நிதானமாக யோசித்தாள்..
கணவன் என்ற ஆணுக்காக ஒரு பெண் தினமும் மினுக்க முடியாது.மினுக்குவது மட்டும் வாழ்க்கை அல்ல…
வயதாக வயதாக அழகு போகத்தான் செய்யும்  இது ஆணுக்கும் பொருந்துமே..
தூக்கம் வருவது போல இருந்தது

லேப் டாப்பை அணைத்து விட நினைத்தாள்..ஏதோ நினைவு வந்தவளாக மீண்டும் ஒரு போல்டரை திறந்தாள்…
அங்கேயும் பல புகைப்படங்கள் ஜெயமோகனோடு பல பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
திடிரென்று மலர் கண்களில் ஒன்று சிக்கியது.
.யார் இவள்..? எல்லா போட்டாவிலும் ஒரு பெண் ஜெயமோகனை ஒட்டியபடி நின்று கொண்டிருந்தாள்…
வயது முப்பது இருக்கும் சிக்கென இருந்தாள்.
நல்ல நிறம்.அழகாய் சிரித்தாள்…..அவள் பக்கத்தில் ஜெயமோகன் வயதானவன் போலத்தான் தெரிந்தான்….நிச்சயம் இவளாகத்தான் இருக்கும்…என்னமாய் ஒட்டியபடி இருக்கிறாள்

சரி கண்டு பிடித்தாகிவிட்டது….இவள்தான் என ஊர்ஜிதம் செய்யவேண்டுமே..
(27)
கண்டுபிடித்து என்னசெய்வது….?மீண்டும்; குழப்பம் ..
ஜெயமோகன் இவளோடு சென்று விடுவானா..?
மனம் குமுற தொடங்கியது…சுவற்றை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் இருந்த கடிகாரம் இரவு பத்து என்பதை தெரிவிக்க பத்து முறை அடித்து ஓய்ந்தது.அதன்பின் அதின் ஒலி பெருக்கியில் இருந்து ஒருவசனம் சொல்லப்பட்டது. அது…

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரரிப்பார் .
மலர் கண்களை விரிவாக திறந்தாள்….இது எப்படி..?
இரண்டாம் முறையாக அதே வசனம்..ஒருவேளை அவர் என்னை கண்கானிக்கிறாரா..?அப்படியெனின்  கடவுள் உண்டா..?

யாரோ நெருக்கமாக  நின்று தன்னை கவனிப்பது போல மலர் உணர்ந்தாள்..யாராய் இருக்கும்..? இப்போது பயமாக இல்லை..அது கடவுளாக இருந்தால் நன்றாக இருக்குமே……..

என் பாரத்தை எப்படி அவரிடம் கொடுப்பது…கேத்தரீனை கேட்டாள் வழி சொல்வாள்..

அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்..லேப் டாப் அனைக்க படவில்லை.
மலர் அயர்ந்து விட்டாள்…
நாளை காலை கேத்தரினை பார்த்தவுடன் கர்த்தரை பற்றி கேட்க வேண்டும்  என்று முடிவு செய்தாள்…

தூக்கத்தில் கனவு கண்டாள்…. சந்தோசமாக வான வீதியில்
… பறந்தபடி.. பறந்தபடி… கடவுளை தேடித்.. தேடி அலைவது போல ஒரு கனவு….
                   (..தொடரும்..)

            மலர் டீச்சர்…5

(28)
பால்காரனிடம் பால் பாக்கெட்டை வாங்கிவிட்டு திரும்பிய மலர் தன் வீட்டு வாசல்படியை பார்த்து திடுக்கிட்டாள்.
ஒரு பாம்பு தன்தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.அது பாம்புதானா…?
நன்றாக கவனித்தபின் தெரிந்தது அது பாம்பு அல்ல பாம்பைபோல் இருக்கும் அரணை…மிகப் பெரியதாய் இருந்தது.

இது எப்படி வீட்டிற்குள் வந்தது.
இப்போது மலர் வெளியே இருந்து உள்ளே சென்றால்  அது வீட்டிற்குள் ஓடி சென்று எங்காவது மறைந்து விடும்…உள்ளே இருந்து யாராவது  அதை வெளியே விரட்ட வேண்டும்…

அல்லது வீட்டிற்கு வெளிப்புறமாக  பின்பக்கம் சென்று…. பின் வாசல் வழியாக உள்ளே சென்று …..அரணையை விரட்ட வேண்டும்….

.உள்ளே படுத்திருக்கும் இலக்கியாவுக்கு குரல் கொடுக்க முடியாது.அப்படியே அவள் விழித்து எழுந்து வந்தாலும் அவளால் நிச்சயம் இதை விரட்ட  முடியாது…
பயந்த சுபாவம் உள்ளவள்..

என்ன செய்வது….அந்த சமயம் பார்த்து பக்கத்து வீட்டு  ஆகாஷ்  கிரவுண்டுக்கு விளையாட போய்க் கொண்டிருந்தான்…அவனிடம் விபரத்தை சொன்னாள்…அவன் வீட்டின் பின்பக்கமாக சென்று மெதுவாக அரணையை வெளியே துரத்தினான்.

நிம்மதியாக மலர் வீட்டிற்குள் சென்றாள்..

ஒரு காரியத்தை மலர் தெளிவாக புரிந்து கொண்டாள். பிரச்சனை வரும்போது நிதானமாக இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.
(29)
ஆனால் பிரச்சனை வரும்போது மனது கலக்கம் ஆகிவிடுகிறது.
பின் எங்கே நிதானம் வரும்.இன்று காலையில் தன்னால் எப்படி இவ்வளவு நிதானமாக யோசிக்க முடிகிறது….
.தன் மனதை ஆழமாக பார்த்தாள்.மனம் அமைதியாக இருந்தது.எந்த கொந்தளிப்பும் இல்லை.
ஜெயமோகன் பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது.அந்த பெண்ணையும் ஓரளவு யூகிக்க முடிகிறது.
ஆனால் மனது நிதானம் அடைந்து அமைதியாகி விட்டதே.இது எப்படி.?.ஏதாவது தீர்வு கண்டு கொண்டேனா..?

மணி எழு ஆகிவிட்டது..விரைவாக வேலையை முடித்து பள்ளிக்கு கிளம்ப வேண்டும்..
மணி ஏழு ஆகிவிட்டது என்பதை பக்கத்து தேவாலய மணி சத்தமிட்டு கூறியது.அதோடு தொடர்ந்து ஒரு வாக்கியம் ஒலிபெருக்கியில் முழங்கியது…..அது

……..அப்போது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொள்ளும்..

மலருக்கு அதிசயமாக இருந்தது…தான் அமைதியாக இருந்ததற்கு இதுதான் காரணமா.?

அப்படியானால் எனக்கு இந்த அமைதி கடவுளால் கொடுக்கபட்டதா..?
பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது.
ஆனால் மனதில் சமாதானம் நிறைந்து இருக்கிறது.

இதை எப்படி மற்றவர்களிடம் கூறுவது…எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்குமா..?அப்படி அவர்களுக்கு மட்டுமே இந்த அனுபவம் இருந்தால்..இதை ஏன் மற்றவர்களுக்கு கூறவில்லை…..
மலர் சந்தோசமாக இருந்தாள்….
.ஜெயமோகன் வரட்டும்…..பார்த்து கொள்ளலாம் எதற்கு வீணா. க கலவரப்படவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

சத்தமாக பாடவேண்டும் போல இருந்தது..
குளித்து கொண்டே பாடினால் நன்றாக இருக்குமே…அது மட்டுமல்ல தண்ணீரை திறந்து விட்டால் தான்பாடுவது யாருக்கும் கேட்காது..ஆகவே நிம்மதியாக பாடலாம்.

சீக்கிரமாக குளியல் அறைக்குள் நுழைந்து தண்ணீரை திறந்து விட்டு விட்டு  பாட முயற்சித்தாள்..
 என்ன பாட்டுபாடுவது.
நிறைய சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது..
எதிலுமே மனது ஒட்டவில்லை…
கிறிஸ்தவ பாடல் எதாவது பாடலாமா..?இது வரை கிறிஸ்தவ பாடலை தனியாக…. ஹம்…. பண்ணினது கூட இல்லையே.
.மலர் உயர்நிலை படிப்பு வரை படித்தது கிறிஸ்தவ பள்ளியிலேதான்.ஆகவே எதாவது பாடல் நினைவுக்கு வருகிறதா என்று யோசித்தாள்.
ஒரு பாடல் லேசாக நினைவுக்கு வந்தது
அந்த பாடலின் பல்லவியின் வரிகள்  மட்டும் நினைவுக்கு வந்தது.
நன்றாக நினைவு படுத்தி பின் அதை பாட ஆரம்பித்தாள்.

 தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

மலருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

பாடலின் அர்த்தம் முழுமையாய் புரிந்தது…
இந்த பாடலை எழுதிய கவிஞன் எவ்வளவு நம்பிக்கையாய் கூறுகிறான்……
இறைவனிடம் அவன் கெஞ்சவில்லை
.எல்லாவற்றையும் உறுதியாக கூறுகிறான்……

மெதுவாக அழ ஆரம்பித்தாள்… .குளிக்கும் தண்ணீர் மலரின் கண்ணீரை மறைத்தது…
குளித்தவுடன் வேகமாக பள்ளிக்கு கிளம்பினாள்…….
இப்போது உலகமே புதிதாக தெரிந்தது….எல்லா பிரச்சனைக்கும் தன்னால் தீர்வு காண முடியும் என நினைத்தாள்….தான் தனியாக வாழவில்லை சர்வ வல்லமையுடைய ஒரு மேய்ப்பனுக்கு கிழே தான் இருப்பதாக நினைத்துக் கொண்டாள்….

நிமிர்ந்து உட்கார்ந்தாள்..
பள்ளியின் அருகே பஸ் நின்றதும் பஸ்ஸை விட்டு இறங்கிய மலர்
வேகமாக ஸ்டாப் ரூமை நோக்கி நடந்தாள்…

கேத்தரின் டீச்சரை தேடினாள்.
கேத்தரின் இன்னும் வரவில்லை….
அசெம்பிளி முடியட்டும் என காத்திருந்தாள்.
அப்போதும் கேத்தரின் வரவில்லை.மலர் தன்வகுப்புக்கு போய்விட்டாள்..மதியம் சாப்பாடு நேரம்வரை கேத்தரீனை மலர் பார்க்கவில்லை..

மதிய இடைவேளையில் கேத்தரீனை பார்த்தாள்..
கேத்தரின் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…

மலர் கேத்தரின் அருகே போய் உட்கார்ந்து தன் சாப்பாட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
.கேத்தரின் மலரிடம் மெதுவாக கேட்டாள்.
ஏதாவது விஷேசமா..?
மலர் இல்லையே….. ஏன் ..?என்றாள்…...
சந்தோசமா இருக்கிற மாதிரி .இருக்கே..

ம்…….ஏதோ..தெரியல சந்தோசமா இருக்கேன்.

கேத்தரின் புரிந்து கொண்டாள்.மலர் எதையோ மறைக்கிறாள்.சரி அவளே சொல்லட்டும் என விட்டுவிட்டாள்….

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மலர் செல்போன் சத்தமிட்டது.
போனை எடுத்து காதில் வைத்து ஹலோ சொன்னாள்…மறுமுனையில் ஜெயமோகன் பேசினான்…அவன் நாளை வந்து விடுவேன் என்றான்.அவன் குரல் ஏனோ கம்மி போயிருந்தது…….
மலர் சரி யென்றாள்…….

கேத்தரின் கவனித்து கொண்டிருந்தாள்…..
மலரே பேசினாள்…அவர் நாளை வாறாராம்…

கேத்தரின் தலையை மட்டும். ஆட்டினாள்…
மலர் கேத்தரீனை பார்த்து  ஒரு கேள்வி கேட்டாள்..கடவுள் நம்மை கண்கானிக்கிறாரா..?

கேத்தரின் வியப்பாக மலரை பார்த்தாள்……ஏன் திடீரென்று கடவுளைபற்றி பேசுகிறாள்…….சிலவினாடி மொளனம்..ஆம் கண்காணிக்கிறார்..அது குற்றம் கண்டு பிடிப்பதற்க்காக அல்ல..நமக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக……

மலர் எதிர் கேள்வி கேட்டடாள்…அப்போ ஆபத்தில் இருக்கும் எல்லோரையும் ஏன் அவர் காப்பாற்றவில்லை…
இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது..ஆனால் உதவி என்று கேட்டவர்களுக்கு உதவி செய்கிறார் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்……அதாவது என்னைப்போல….

உங்களைப் போலவா……மலர் சிரித்தாள்..
அப்போது ஒரு மாணவி கவலையான முகத்துடன் கேத்தரீனை பார்ப்பதற்கு அங்கு வந்தாள்…..
கேத்தரீனை பார்த்ததும் அழுதாள்..
கேத்தரின் அவளை சமாதான படுத்தி வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றாள்….
சில நிமிடத்தில் அந்த மாணவி சென்றுவிட்டாள்.கேத்தரின் திரும்ப வந்தாள்..

மலரை பார்த்து மலர் …..இங்கே நிறைய மாணவிகள் இருக்கிறார்கள் .ஒரு சிலருக்குதான் என் உதவி தேவைபடுகிறது அவர்கள் சுமையைத்தான் நான் சுமக்கிறேன் ….மற்றவர்கள் அவரவர் பிரச்சனையை அவரவர் சுமக்கிறார்கள்…

மலருக்கு ஓரளவு புரிந்தது..ஆனால் இயேசுவை பற்றி கேத்தரீனிடம் கேட்க வெட்கப்பட்டாள்…..

மாலையில் பள்ளி முடிந்ததும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு நேற்று கண்ணில்பட்ட அந்த வசனம் எப்போது வரும் என்று காத்திருந்தாள்….(…தொடரும்…)
















மலர் டீச்சர்(6)
ஜெயமோகன் அதிகாலை ஐந்து மணிக்குவந்தான்

.வந்தவன் ஒன்றும் பேசவில்லை…அவன்முகம் அசந்து போய் இருந்தது.

தன்னை ஏழுமணிக்கு எழுப்பி விட மலரிடம் கேட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்…..
சரியாக ஏழு மணிக்கு மலர் ஜெய மோகனை எழுப்பி விட்டாள்….

.எழுந்தவன் உடனடியாக தன் உதவியாளர் மாணிக்கம் அண்ணாச்சியை  போனில் அழைத்தான்…உடனே தன் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டு கொண்டான்…….மாணிக்கம் அண்ணாச்சி வயதானவர்

.நிறுவனத்தின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்.
அவர் ஜெயமோகனுக்கு உதவியாளர் என்பது பெயரளவுக்குத்தான்……அவராய் எந்த முடிவும் எடுக்கமாட்டார்…..
ஆனால் எடுக்க படும் முடிவுகள் மாணிக்கம் அண்ணாச்சி இல்லாமல் எடுக்க படுவதில்லை.
அடுத்த முக்கால் மணிநேரத்தில் மாணிக்கம் அண்ணாச்சி வீட்டுக்கு வந்தார்…
இப்போது மணி ஏழு நாற்பத்தி ஐந்து .எட்டு மணிக்கு பள்ளிக்கு மலர் புறப்பட வேண்டும்..ஆனால் ஜெயமோகன் ஏதோ கவலையுடனும் பதற்றத்துடனும்  இருப்பது தெரிந்தது…
ஏனோ மலருக்கு இன்று பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை.

மெதுவாக தன் செல்போனில் யாரிடமோ இன்று தனக்கு பள்ளிக்கு வரமுடியாது என்று கூறிவிட்டு.நிதானமாக ஜெயமோகனும் மாணிக்கம் அண்ணாச்சியும் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தாள்.
மாணிக்கம் அண்ணாச்சியிடம் ஜெயமோகன் கூறிக்கொண்டிருந்தான்..
..
எல்லோரையும் நீக்கி விட வேண்டுமாம்.. நிறைய யூத்த வேலைக்கு எடுக்க சொல்றாங்க…
..பழைய வாய்ஸ் யாரையும் வைக்க வேண்டாமுண்ணு சொல்றாங்க….

அதிலும் குறிப்பா பெண்களை எல்லோரையும் நீக்கணும்ண்ணு கண்டிப்பான உத்தரவு..
இத எப்படி அவங்க கிட்ட சொல்றதுண்ணுதான் எனக்கு தயக்கமா இருக்கு…

மாணிக்கம் அண்ணாச்சி மெதுவாக பேசினார்……

..என்ன செய்ய…
அனேகமா பெண்கள் எல்லோருக்கும் ஏழு அல்லது எட்டுவருஷம் சர்வீஸ் இருக்கும்..
இப்போ திடீர்னு வேலை இல்லன்னு சொன்னா ரொம்ப வருத்தபடுவாங்க.
.ஆனா இன்னும் ஒண்ணு நாம யோசிக்கணும்..
அவங்ககிட்ட நாம முதல்லயே இப்படி எப்போ வேணுமிண்ணாலும் நடக்கும்ணு சொல்லித்தான் சேர்த்திருக்கோம்…

இரண்டாவது
…வயது ஆக ஆக குரலும் மாறத்தான் செய்யும்…..நாம அதையும் பார்க்கணும்..நாம என்ன பண்ண முடியும்
…சரி ஒண்ணு செய்யுங்க .நீங்க இண்ணைக்கி ஆபீஸ்க்கு காலையில வர வேண்டாம்…
நான் ஏற்கனவே வாய்ஸ் செலக்ட் ஆகி இருக்கிறவங்கள மதியம் ஸ்டுடியோவுக்கு வரச்சொல்றேன்……
மதியம் நீங்க வந்த பின் அவர்களிடம் பேசலாம்…..பழையவர்களை காலையில் வேலைக்கு வந்தவுடன் அவர்களுக்கு விஷயத்த சொல்லி வைச்சிடுதேன்…..அவங்க அக்கவுண்ட் எல்லாம் உடனே செட்டில் பண்ண சொல்லிடுதேன்…

.எப்படியும் இண்ணைக்கி நம்ம ஆபீஸ் கொஞ்சம் பதற்றமாகவும் சோகமாகவும்தான் இருக்கும்….சரி அப்ப நான் புறப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு மாணிக்கம் அண்ணாச்சி கிளம்பிவிட்டார்…

மலருக்கு ஏதோ இனம் புரியாத சந்தோஷம்…

ஜெயமோகன் .நிறுவனத்தில் ஆட்களை கழிக்கிறார்கள்..இதில் அவளும் கரைந்து மறைந்து விடுவாளா….
ஜெயமோகன் மலரின் சொத்து.
அவனை எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாதே…சே..தேவையில்லாமல் எதற்கு அடுத்தவர்களின் வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள்…….

எல்லாமே விரைவாக நடந்து முடிந்து விட்டது… இவ்வளவு சீக்கிரத்தில் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை..
மலர் சமையல் கட்டில் உள்ள ஒரு ஸ்டுலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்…
சுவற்றை பார்த்த படியே இதை சிந்தித்து கொண்டிருந்தாள்..அப்போது தேவாலய மணி ஒன்பது என்பதை கூறிற்று…
அதை தொடர்ந்து வசனம் ……
..உன் தேவனாய் இருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து பயப்படாதே…. நான் உனக்கு துனை நிற்கிறேன்..என்று சொல்கிறேன்…

நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் வசனம் ஆழமாய் மலரின் இதயத்தில் பாய்ந்தது…….
மலருக்கு யாரும் கடவுளை பற்றி சொல்லவே இல்லை.

ஆனால் வசனம் உயிர் உள்ளது என்று மறுபடியும் உறுதி செய்யபட்டது..மலர் தலையை யாரோ தடவுவது போல உணர்ந்தாள்.

திடுக்கிட்டு முழித்தாள் .
ஜெயமோகன் அருகேநின்று அவள் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்…
என்ன மலர்..நீ இன்னும் ஸ்கூலுக்கு போகல…..உடம்புக்கு சரியில்லையா.? என்று கேட்டான்….
மலர் அவன் கையை பிடித்து கொண்டாள்…….எனக்கு ஒண்ணுமில்ல .நீங்கதான் காலையில வந்ததில இருந்து சரியா இல்ல..அதான் நான் லீவு போட்டேன் என்றாள்…
.ஜெயமோகன் தரையில் உட்கார்ந்தான்..
நல்ல காரியம் செய்தே..
இந்த மாதிரி நேரத்தில நீ பக்கத்தில இருக்கிறது நல்லது தான்……

ஜெயமோகன் அவன் ஆபீஸ் நிலவரத்தை கூறிக்கொண்டே இருந்தான்.
மலர் கேட்பது போல பாவனை செய்து கொண்டே இருந்தாள்…..ஆனால் அவள் மனம் மட்டும்

அந்த நான்கு வரிகளை திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருந்தது.

இதுதான்… அந்த நான்கு வரிகள்
….
தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ…
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே……………………………..
..(..முற்றும்..).

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக