வெள்ளி, 15 மே, 2015

மரணவாசல் 4ம்பாகம்





                                                              மரணவாசல் 4ம்பாகம்



71
பூமியை விட்டு கடந்து சென்றால் மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை..
இப்போது எங்கள் பயணம் அமைதியாக இருந்தது.
.ஒரு காரியத்தை கவனித்தேன்
.நான் என் வல பக்கத்திலும் இடபக்கத்திலும் பார்த்தேன்.
பல பாதைகள்..(டிராக்குகள்..)
எல்லாம் ஒரே மையப் புள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இது எதை காட்டுகிறதுஎங்கள் பயணம் முடியப்போகிறது..
அதாவது பரதீசு நெருங்கி விட்டது……எங்கள் வாகனம் வேகம் எடுத்தது.
வாகனத்தின் உள்ளே அமைதி
.நான் எனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறேன்….கருப்பு திரையில் மின்னும் புள்ளிகளாக கோளங்களும் நட்சத்திரங்களும் மின்னிக் கொண்டிருந்தது.எனக்கு மேல் பகுதியில் எதுவும் தெரியவில்லை..இருட்டு……
இப்போது முன்னால் பார்க்கிறேன்….
.ஏதோ மிகப்பெரிய கோட்டைச் சுவர் போல் தெரிகிறது.
அதன் உயரத்தை என்னால் கணிக்க முடியவில்லை.ஏனேனில் அந்த சுவரின் மேல்பக்கம் முடிவில்லாமல் மேல்நோக்கி சென்று கொண்டே இருந்தது.
இப்போது மிகவும் நெருங்கி விட்டோம்..
72
அதோ ஒரு வாசல் தெரிகிறது
எல்லா பாதைகளும் அந்த வாசலின் முன்னே தன் பயணத்தை முடிக்கிறது……
எங்கள் வாகனம் அதன் முன்னே  போய் நின்றது..
அந்த இடம் மிகப்பெரிய மைதானம் போல் இருந்தது.ஆயிரக்காணக்கான வாகனங்கள் முன்னே வரிசையாக நிறுத்தபட்டு இருந்தது..
இருளின் மைந்தர்கள் சர்வ சாதாரனமாக நடமாடிக் கொண்டிருந்ததார்கள்
எல்லாம் ஒழுங்காக இருந்தது.
அந்த மைதானத்தில் சுற்றிலும் தேவ தூதர்கள் கைளில் மிஷின்கன் போன்ற ஒன்றை வைத்தபடி நின்று கொண்டிருந்தர்கள்……
இருளின் மைந்தர்கள் சிலரை சங்கிலி போன்ற ஒன்றால் கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
தேவ தூதர்கள் அவர்களை தங்கள் வசம் ஏற்றுக்கொண்டு முதலில் அவர்களை  உள்ளே அழைத்து போனார்கள்..
எங்கும் அமைதியாக இருந்தது……
எங்கள் வாகனத்தின் அருகே ஒரு தூதன் வந்தான்
என்னோடு கூட இருந்த தூதர்களிடம் ஏதோ பேசினான்……இவர்களும் பதிலுக்கு ஏதோ பேசினர்கள் பின் அந்த தூதன் போய்விடவே இவர்களும் அமைதியானார்கள்..
73
எங்கள் வாகனம் ஒரு ஓரமாக நிறுத்தபட்டது….
நான் வாசலின் முகப்பை கூர்ந்து கவனித்தேன்….
.அந்த வாசல் கதவு மிகப்பெரிய கோட்டையின் கதவு போலிருந்தது..
முழுவதும் தங்கத்தால் செய்யபட்டது போல தகதக வென மின்னிக்கொண்டிருந்தது….
ஒவ்வொருவராய் உள்ளே அனுப்பபட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான் எனக்கு எப்போது அழைப்பு வரும் என்று காத்திருந்தேன்
தற்செயலாய்….வாசலின் மேல் பக்கத்தை கவனித்தேன் .அங்க மிகப்பெரிய கடிகாரம் ஒன்று பொருத்த பட்டிருந்தது..
பூமியில் உள்ள கடிகாரங்கள் பணிரெண்டு பாகங்களாக  பிரிக்கபட்டிருக்கும்.
ஆனால் இந்த கடிகாரத்தில் ஆயிரம் பகுதிகளாக பிரிக்கபட்டிருந்தது..
நான் நினைத்துக்கொண்டேன்….இவர்களுக்கு ஆயிரம் வருடம் ஒருநாள் போலும்…..
அங்கு திடீரென்று ஒரே பரபரப்பு காணபட்டது
நான் உற்றுக் கவனித்தேன்…….அந்த கோட்டை வாசல் மெல்ல திறக்கபட்டது.
அதன் உள்ளே இருந்து பளீரென்று வெளிச்சத்தை வீசிக்கொண்டு ஒரு விமானம் போன்ற ஒரு வாகனம் வெளியே வந்தது……
அந்த விமானத்தில் இறக்கைள் முழுவதும் வைரத்தால் செய்யபட்டது போல் மின்னிக்கொணடிருந்தது.
74
அந்த விமானத்தின் உள்ளே அனேகர் அமர்ந்து இருந்தனர்
எல்லோருமே; பிரகாசமாக இருந்தனர்.முகத்தில் சந்தோசம் ஜொலித்தது…,..அந்த வாகனம் முதலில் மெதுவாக கிளம்பி பின் வேகமாக முன்னோக்கி பாய்ந்து சென்று மறைந்தது…..
நான் இவர்கள் யார் ..?என்று என் பக்கத்திலிருந்த தூதனிடம் கேட்டேன்..
இவர்கள் பூமியில் இருக்கும் போது பரிசுத்தரை முழுமனதாய் ஆராதனை செய்தவர்கள்..
இப்படி சொல்லிவிட்டு அவன் தன் தலையை  மிகவும் தாழ்த்தி  பணிந்து கொண்டான்
சரிஇப்போது எங்கே போகிறார்கள் என்று கேட்டேன்…..
தூதன் கூறினான்……..
நாங்கள்  (..தூதர்கள்..) எல்லோருமேபூமியில் நீங்கள் பரிசுத்தரை ஆராதனை செய்வதை காண மிகவும் ஆர்வமானவர்கள்……ஆகவே முடிந்த அளவு  ஆராதனையில் நாங்களும் பங்கு கொள்வோம்..
பூமியின் முறைப்படி இன்று ஞாயிற்று கிழமை
ஆகவே தூதர்களோடு இங்கு இருக்கும் பரிசுத்தவான்களும் போகிறார்கள்…..அதாவது பூமிக்கு போகிறார்கள்….
ஆராதனை செய்யவா…?


75
இங்கு உள்ள பரிசுத்தவான்களுக்கு அங்கு போய் ஆராதனை செய்ய உரிமை இல்லை…..
துதர்களாகிய நாங்கள் இங்கு மட்டும் ஆராதிப்போம்
அனால் .பரிசுத்தவான்கள் எங்களோடு பூமியில் ஆராதனை நடப்பதை காண வரலாம்..
அதற்கு மட்டுமே; அவர்களுக்கு அனுமதி கொடுக்கபடும்…..
நான் நினைத்தேன்…..ஆராதனை அவ்வளவு முக்கிமானதா…?
நான் முழுமனதாய் ஆராதனைக்கு போனதாக நினைவு இல்லை..
எவ்வளவு பெரிய பாக்கியத்தை இழந்துவிட்டேன்……
என் மனதிற்குள் அழுவதை போல உணர்ந்தேன்….ஆனால் இங்கு என் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.
நான் நினைத்தேன்   …மனிதர்களே……. நீங்கள்  ஆராதனையை அசட்டை செய்யாதிருங்கள்…..பூமியிலும் வானத்திலும் நடக்கும் ஒரே காரியம் பிரிசுத்தர்க்கு ஆராதனை செய்வதுதான்
அது மட்டுமல்ல.
.தேவ தூதர்கள் பூமியல் நடக்கும் ஆராதனையை உற்றுப்பார்க்கும் போது பரிசுத்தவான்களும் அவர்களோடு பார்ப்பதற்கு அனுமதியும்  இருக்கிறது
மறு ரூப மலையில் இயேசுவோடு நின்ற பரிசுத்தவான்களை நினைத்து கொள்ளுங்கள்….உணர்வற்ற நிலையிலும் பரிசுத்தவான்களுக்கு இது உன்னத நிலையே..
76
என்னால் இந்த இரகசியத்தை ஒருவரிடமும் கூற முடியாது….என்று நினைத்தேன்…..
அப்போது எங்கள் வாகனத்தில் சிறிய ஒலி பெருக்கி மூலமாக ஒரு சத்தம் கேட்டது….
மானிடனே………..
பரிசுத்தர் ..மனிதர்களுக்கு தேவையான எதையுமே மறைக்கவில்லை…..அவர் நியாத்தின்படிதான் நியாயம் தீர்ப்பார்.மறை பொருளாய் இருக்கிறதை பற்றி யாரும் கவலை படவேண்டாம்.
..மானிடனே………………… இன்னும் சிறிது நேரத்தில் உன் முறை வரும்
.உன்னை அழைத்து போக ஆட்கள் வருவார்கள்உன்னை நீ திடப்படுத்திக்கொள். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலைக்கொடு
..நீ  கேட்கும் கேள்விகளுக்கும் இங்கே பதில் தரப்படும்….
எனக்கு மனம் தண்ணீராய் வடிந்து விட்டது.
நான் தனிமையாய் இருப்பதைப்போல் உணர்ந்தேன்பூமியில் இதைப்போன்றதொரு உணர்வு எனக்கு வந்ததே இல்லை..
இனி அடுத்து என்ன நடக்கும்
…..இது எனக்கு இருளின் பள்ளத்தாக்கா…?
 அல்லது மகிழ்ச்சியான இடமா தெரியவில்லை..
நேரம் போய்க் கொண்டே இருந்தது……எப்போது என்னை அழைப்பார்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டிருந்தேன்……












77
அனேக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன…….திடீரென்று எங்கள் வாகனத்தின் உள்ளே ஒரு அறிவிப்பு….
நீங்கள் அழைக்கபடுகிறீர்கள்
அவ்வளவுதான் ..என்னோடு இருந்த தூதர்கள் சுறு சுறுப்பானார்கள்
என்னை அழைத்து கொண்டு அந்த பெரிய கோட்டை கதவு பக்கமாக சென்றார்கள் .
.கதவு தானாக திறந்து கொண்டது..
முதலில் தூதர்கள் சென்றார்கள் …..கடைசியாக நானும் உள்ளே  சென்றேன்.
கதவு அடைக்கபட்டுவிட்டது
அதன் உள்ளே மிகப்பெரிய அரங்கம் போலிருந்தது..நிறைய இருக்கைகள்.
இருக்கைகளுக்கு நடுவாக அகலமான ஒருபாதை
அந்த கூடாரம் மிக நீளமானது….அதன் அடுத்த பக்கத்தை அதாவது அதன் முடிவை என்னால் பார்க்க முடியவில்லை
தூதன் என்னை அழைத்து கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்த்தினான்
அவன் சொன்னான்
இங்கேயே நீ இருக்க வேண்டும்…..அவர்கள் உன்னை அழைக்கும் வரை..
நான் கேட்டேன்இதுதான் பரதீசா…..?
78
இது பரதீசு அல்ல ……. நீ இருப்பது அதன் நூழைவு வாயிலில்.உன்னை இங்கே விசாரித்து உனக்கான இடத்திற்கு அனுப்புவார்கள்
.உன்னை விசாரிக்கும் வரை நீ இங்கயே இரு….
நாங்கள் வருகிறோம் என்று சொன்னான்
ம்……பழைய படியும் தனிமை
யாரிடம் என்ன பேசுவது..எல்லோருமே எனக்கு அன்னியர்கள்.
 நான் மற்றவர்களை கவனித்தேன்…..எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி அல்ல
என் பக்கத்தில் இருந்த ஒருவரை கவனித்தேன் அவர் உடலெல்லாம் முள்ளாய் முளைத்திருந்தது….அதனால் மிகுந்த அவதிபட்டுக்கொண்டிருந்தார்
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
பாவமாக இருந்தது..
அவரும் என்னை திரும்பிபார்த்தார்
.அவர் ஆணா..?இல்லை பெண்ணா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லைஒரு மாதிரி சாம்பல் நிற அங்கியால் மூடபட்டிருந்ததால் என்னால் கணிக்க முடியவில்லை
இங்கே பாலுணர்வு என்பது சுத்தமாக கிடையாது


79
பாலுணர்வு என்பது பூமியில் மனித உடல் சம்பந்தபட்டது
உடலை இழந்த உயிருக்கு பாலுணர்வும் அதோடு சேர்ந்து வரும் பாசமும் நேசமும் இங்கு இல்லை
அவர் என்ன பார்த்து மெல்லியதாய் சிரித்தார்…….
தான் கொரியாவில் இருந்து வருவதாக கூறினார்.
அடுத்து இங்கு மொழி ஒரு பிரச்சனை அல்ல.
பூமியில் எல்லா மொழிகளும் காற்றில் ஒலி அதிர்வை பயன் படுத்தி சத்தம்  என்ன ஒன்றின் மூலமாக ஒரு மனிதர் மற்ற மனிதரிடம் தம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
பூமியில் வாய் பேச முடியாத ஊமைகள் தங்கள் கை சைகையினால்
மற்றவர்களிடம் பேசுகிறார்கள்.
இங்கு காற்று கிடையாது.
ஆகவே இங்கு பேசுதல் என்பது வேறுவிதமாக இருக்கிறது….
.அவர்கள் நம்மிடம் சொல்ல நினைப்பதும், நாம் அவர்களுக்கு சொல்ல நினைப்பதும் தெளிவாக புரிகிறது
.இதுவும் ஒருவகையான விஞ்ஞானமே….அதை என்னால் விளக்க முடியவில்லை….
அந்த கொரியன்…..தான் மிகப் பெரிய அரசாங்க பதவியில் இருந்ததாகவும் பதவியில் இருந்த காலத்தில் பலரை தன அதிகார சக்தியால் மிக கடுமையாய் தண்டித்ததாகவும் சொன்னார்.
நான் சொன்னேன் .நியாயமான கண்டிப்பு அவசியம் தானே என்றேன்
80
அவர் சொன்னார்..
நியாமானது என்றால் அவசியமே…..ஆனால் நான் செய்தது நியாயப்படி அல்ல……மமதை யால்
என் மனம்போல செய்தேன்இதனால் பாதிக்கபட்டவர்கள் பலபேர்.
என் செயல்பாடு அவர்கள் வாழ்ககையை முள்ளாய் ஆக்கியது
.இது தெரிந்தும் என் குணத்தை நான் மாற்ற விரும்பவில்லை
.என் உயிர் போனதும் என்னை சுற்றி ஒரு முள் கூடாரமே உருவாகி இருந்ததை கண்டேன்..
என்னை இங்கே கொண்டு வர தூதர்கள் கொஞ்சம் சிரம பட்டர்கள்….என்றார்.
அவர் படும் வேதனையை பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்த்து கொண்டேன்
..இன்னொரு காட்சியும் கண்டேன்..
அதாவது ஒரு தடித்த மனிதர் நடந்து வந்து கொண்டிருந்தார்….அவருக்கு தலை மட்டுமே வெளியே தெிரிந்தது
மற்ற எல்லா பாகங்களும் மூடப்பட்டிருந்ததுஅதுவும் பணத்தால்  …
.அதிக பாரத்தோடு காலை இழுத்து இழுத்து நடந்து வந்து கொண்டிருந்தார்.
நிச்சயமாக அவரால் உட்காரவோ படுக்கவோ முடியாது..
,இங்கு எங்கு பார்த்தாலும் கொடுமையாக இருக்கிறது
81
இந்த பணத்தாலான உடம்பிற்கு என்ன அர்த்தம்…..யாரிமாவது கேட்க வேண்டும் போல் இருந்தது
திடிரென்று மிகப்பெரிய பாடற்குழுவின் பாட்டு சத்தம் கேட்டது….
அது தேவனை புகழ்ந்து பாடும் ஒரு பாடல் .
சத்தம் வந்த திசையை  பார்த்தேன் ஒரு நபர் நடந்து வருகின்றார்.
.அவருக்கு முன்பாகவும் பின்பாகவும்  பல தூதர்கள் பாடிக்கொண்டே வந்தார்கள்…..
எனக்கு முன்னே சில அடி தூரம் வந்து அந்தக் கூட்டம் நின்றது..
ஒரு தூதன் உரக்க இப்படிக் கூவினான்….
பூமியில் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றின இந்த மனிதனை பரதீசு வரவேற்கிறது என்றான்
.எல்லோரும் ஆரவாரித்தார்கள்..
பின்பு அனைவரும் போய்விட்டார்கள்
அவரும் தனித்து விடப்பட்டார்.
இப்போது அந்த நபரை கவனித்தேன் .அவர் உடல் முழுதும் வைரம் பதித்து வைத்த மாதிரி மின்னியது..
பார்ப்பதற்கு கண்கள் கூசியது…..அந்த சமயம் என் பக்கமாக ஒரு தூதன் கடந்து சென்றான்..நான் அவனை கை காட்டி அழைத்தேன்
அவன் என்னவென்று என் அருகில் வந்தான்…..

82
நான் அந்த வைரத்தால் ஆன அந்த நபரை பார்த்து அவருக்கு நேராக என் கைகளை நீட்டினேன்.
தூதன் கேட்டான்அவரை உனக்கு தெரியுமா..?என்றான்.
தெரியாது யார் அவர் என்றேன்…….
அவர் பூமியிலே பரிசுத்தர் பெயரில் பாடுகளை அனுவித்தவர்…..அவர் அங்கு உடம்பில் பட்ட அடிகள்தான் இன்று வைரம் போல மின்னுகிறது என்றான்..
நான் உடனே திரும்பி தூரமாய் நின்று கொண்ணடிருந்த பணத்தாலான மனிதனைப் பார்த்தேன்..
தூதன் அவனா…….?
அவன் பணத்திற்காக தன்னை விற்றுப்போட்டவன்…… ….பண ஆசை அவனுக்குள்ளே வளர்ந்து அவனை மூடிப்போட்டது என்றான்.
தூதன் போய்விட்டான்.
என் நிலமை கொஞ்சம் பரவாயில்லை…….
.அப்போது திடிரென்று என் பெயர் வாசிக்கபட்டது
எங்கிருந்தோ தூதன் ஒருவன் வந்தான் என் கைகளைப் பிடித்து அந்த கூட்டத்தை ஊடுருவி அழைத்து சென்றான்..
அங்கே நீளமான  ஒரு மேஜை போட பட்டிருந்தது..
அதாவது நீளத்தை அளவிட முடியவில்லை  ..மேஜையின் முடிவை என்னால் காண முடியவில்லை..

83
பலர் வரிசையாக அமர்ந்து எதிரே உள்ளவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்
என்னையும் அழைத்து சென்று ஒருவர் எதிரராக உட்கார வைத்தார்கள்….
நான் எதிரே அமர்ந்தேன்….
அந்த தூதனின் பின்பக்கத்தில் நான் பார்ப்பதற்கு வசதியாக ஒரு கண்ணாடி திரை இருந்தது..
அதில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது….நான் அதைக்கவனித்தேன்……
அது என்னைப் பற்றிய படம்தான்..
என் சிறு வயது முதல் பூமியில் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வும் ஒன்று விடாமல் நேரம் காலம் மணி இவற்றை காட்டிக்கொண்டே படம் நகர்ந்து கொண்டிருந்தது
இப்போது எதிரே இருந்த அந்த நபர்..(..தூதன் என்று சொல்ல முடியாது..அவர்கள் பரலோகத்தின் வேலை ஆட்கள்..)…என்னைப் பார்த்தார்..
நான் பயத்தில் நடுங்கினேன்
என்னால் பேச முடியவில்லை
.நான் எனக்கு முன்னால் இருந்த அந்த பரதீசின் ஆளை கவனித்தேன்
..நல்ல உயரம் .ஆணோ பெண்ணோ..அறிய முடியரத ஒரு உருவம்.
.நல்ல அழகாய் இருந்தான்
இப்போது என்னைப் பார்த்தான்……….. சினேகமாய் சிரித்தான்..
84
அப்பாடா புன்னகைக்கிற ஒரு தூதனை..
 அல்லது பரலோக வாசியை
அல்லது மேலோகத்தானை முதல் முதலில் இப்போதுதான் பார்க்கிறேன்…..
என்னைப்பார்த்து கேட்டான்……..பெயர்..
சொன்னேன்.
உன்னோடு கொண்டு வந்த பொருள் இதுதானா என்று பார்..?…..
அவன் காட்டிய திசையில் ஒரு கண்ணாடி பெட்டி இருந்தது.. அதின் உள்ளே என்னுடைய மாளிகை சிறு பொம்மைபோல்  இருந்தது..
நான் ஆம் என்றேன்….
மீண்டும் புன்னகைத்தான்…..
பதிலுக்கு நான் சிரிக்கவில்லை
.அடுத்து என்ன சொல்லப் போகிறானோ…?.திக்..திக்..திக்
பூமியில் இருந்து வரும்போது உனக்கு சொல்லப் பட்டபடி நீ கொண்டு வந்த இந்த பொருளோடு நீ இங்கே வாழலாம்….
எத்தனை காலம்…?...................…இது நான்..
நியாயத்தீர்ப்பு நாள்வரை   ..
அதன் பின்…..என்ன நடக்கும்……
அதன் பின் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள அதோ ஒருவர் இருக்கிறாரே அவரிடம் பொய் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..என்றான்..
85
அந்த நபர் சுட்டிக்காட்டிய திசையில் யாருமே இல்லை.
நான் குழப்பத்துடன் மீண்டும் என் அருகில் இருந்த பரதீசின் ஆளை பார்த்தேன்…..
அவன் ….என்ன..? என்றான்
அங்கே ஒருவரும் இல்லையே ..என்றேன்அதற்கு பரதீசின் ஆள்
அங்கே ஒருவர் இருக்கிறார்..ஆனால் உன்னால் அவரை காண முடியவில்லை….
அப்படியென்றால் இதற்கு என்ன பொருள்….?
இப்போது உனக்கு சொல்லபடவேண்டிய அசியம் இல்லை.என பொருள்..
.நேரம் வரும்போது சொல்லப்படும்
..அது மட்டுமல்ல நீ அவரிடம் போய் உன்னுடைய எல்லா சந்தேகங்களையும் எப்போது வேண்டுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
.ஆனால்.உன் கேள்வி சரியானதாய் இருந்தால் அவர் உன் கண்களுக்கு தெரிவார்.
தேவையில்லாத எந்த கேள்விக்கும் இங்கே பதில் கிடைக்காது
நான் நினைத்துக்கொண்டேன் .வித்தியாசமான நிர்வாகம்
..அப்போது .
எனக்கு பக்கத்தில் ஒரு பூலோக வாசி ஒருவர் வந்து அமர்ந்தார்..
86
என்னைப் போலவே இருந்தார்
ஆனால் அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பது போல் காணப்பட்டார்அவர் முகம் மிகபிரகாசமாக இருந்தது
அவருக்கு முன்பதாகவும் ஒரு பரதீசின் ஆள் வந்து அமர்ந்தார்
என்னிடம் கேட்கப் பட்ட கேள்வியைப் போலவே அவரிடமும் கேட்க பட்டது.
அவரும் அவர் கொண்டு வந்த பொருளை கண்ணாடி பெட்டியில் பார்த்து..மிகுந்த சந்தோசமாக கொஞ்சம் சத்தமாகஆம்..ஆம் என்று சத்தமிட்டார்.
நான் அப்படி என்னதான் அந்த பெட்டிக்குள் இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன்….
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
அந்த கண்ணாடி பெட்டியின் உள்ளே ஒரு பழைய கிழிந்த வேத புத்தகம் இருந்தது
இந்த கிழிந்து போன வேத புத்தகத்தை பார்த்தா இவ்வளவு சந்தோசம்..ம்..எனக்கு புரியவில்லை.
ஆனால் அடுத்து  அங்கே நடந்த நிகழ்வு எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது….
அந்த பூலோக மனிதருக்கு அவருடைய வேத புத்தகம் அவர் கையில் கொடுக்கபட்டது…. அவர் வேத புத்தகத்தை கையால் வாங்கிய உடனே..
அவர் உடல் மின்னலைப் போல ஒளி வெள்ளத்தால் மின்னியது….
87
எங்கிருந்தோ பல தேவ தூதர்கள் தோன்றினார்கள்…..அங்கே மிகுந்த ஆரவாரம் காணப்பட்டது…..
ஒரு அலங்காரமான இரதம் கொண்டு வரபட்டது..
அந்த இரதத்திலே அந்த பூலோக மனிதன் பத்திரமாக ஏற்றப்பட்டார்.
அவர் இரதத்தில் அமர்ந்த உடன் ஒரு தூதன் மிக சத்தமாக கூறினான்..
பூமியிலே பரிசுத்தரின் வேதத்தை நேசிப்பவர்களுக்கு பரதீசில் இவ்விதமாக கனப்படுத்த படுவார்கள்………
இதை சொல்லி முடிக்கவும் மிக அழகான பாடல் இசையுடன் அந்த இரதம் மெதுவாக உள்ளே சென்று மறைந்தது….
நான் அதிர்ச்சியுடன் இருந்தேன்.
.இப்படி தெரிந்திருந்தால் என்னிடம் விலையேறபெற்ற வேதாகமம் நிறை உண்டு எல்லாவற்றையும் கொண்டு வந்திருப்பேன்…..
சரி இனி இதை நினைத்து என்ன பயன்
நான் எனக்கு முன்னே இருந்த பரதீசின் ஆளைப் பார்த்து கேட்டேன்….
வேத பத்தகத்தை   கொண்டு வந்தால் இவ்வளவு மரியாதை கிடைக்குமா..?என்றேன். அதற்கு அவன்
நிச்சயமாக
அவர் கையில் மட்டுமல்ல மனதிலும் வேதத்தை கொண்டு வந்திருக்கிறார்…..என்றான்
நான் மனதிலாஎப்படி என்றேன்…?
88
அவருடைய உடல் பிராகாசித்ததை கவனித்தாயா..?
அது அவருக்கு உள்ளே இருந்த வேத வசனங்கள்.
.அவர் வேத வசனத்தை தினமும் தியானித்து.. தியானித்து.. அவருக்கு உள்ளான மனிதன் வளர்ந்து வளர்ந்து….இங்கே வந்தவுடன் வெளியரங்கமாகி விட்டான்இதில் இரகசியம் எதுவுமில்லை என்றான்….
நான் யோசித்தேன் என்னிடமும் வசனம் இருக்குமே…..எனக்கு தெரிந்த வசனங்களை ஒன்று விடாமல் யோசிக்க ஆரம்பித்தேன்..நிறைய வசனங்கள் ஞாபகத்திற்கு வந்தது
நான் உடனே கேட்டேன்.
.என் மனதிற்குள்ளும் நிறை வசனங்கள் இருக்கிறதே..? என்றேன்
அந்த பரதீசின் ஆள்…….அப்படியா  சரி பார்த்து விடுவோம் என்றுகூறி….என்னை உள் பக்கமாக அழைத்து சென்றான்.
.அங்கே ஒரு இருக்கை காணப்பட்டது.
.அதில் என்னை உட்கார வைத்தான்….என் தலையில் ஏதேதோ கருவிகளைப் பொருத்தனான்.
பின் எனக்கு முன்னால் இருக்கும் வெள்ளைத் திரையை உற்றுப்பார்த்தான்.நானும் அதை பார்த்தேன்…..அதில் என் மனதில் உள்ள வசனங்கள் எல்லாம் மங்கிய ஏழுத்தாக தெரிந்தது…..
ஏன் இவ்வளவு மங்கலாக தெரிகிறது என்று கேட்டேன்…..


89
அந்த பரதீசின் ஆள் என்னைப் பார்த்து
உன் மனதில் வசனம் விதைக்கபட்டது உண்மைதான்..ஆனால் அது வளரவில்லை
அதாவது நீ அதை வளரச்செய்யவில்லை..
எனக்கு புரியவில்லை என்றேன்…..
அந்த பரதீசின் ஆள் சொன்னான்……
உனக்கு புரியும்படி சொல்கிறேன்
…..உனக்கு பூமியில் பல விஷயங்கள் தெரிந்திருக்கிறது…..அதைப்போல் இந்த வேத வசனமும் தெரிந்திருக்கிறது.அவ்வளவே….
 வசனத்திற்கு முக்கித்துவம் கொடுத்து உன் வாழ்க்கையை நீ அமைக்கவில்லை
ஆகவே வேத வசனம் உன் வாழ்க்கையில் செயல்படவில்லை.அதாவது வளரவில்லை..
நான் ஒத்துக்கொண்டேன்..உண்மைதான்..பூலோக வாழ்வில் வசனத்திற்கு நான் முதலிடம் கொடுக்கவில்லை..அன்று (…பூமியில்…)அது எனக்கு தேவையில்லாததுபோல் தெரிந்தது..
சரி இப்போது என்ன செய்ய
..நான் உள்ளே பேகலாமா..? என்னை அழைத்து செல்ல தூதர்கள் வருவார்களா..? என்று சோகமாக கேட்டேன்.
தூதர்கள் வருவார்கள்….
 ஆனால் நீ பரதீசின் உள்ளே போக முடியாது
90
ஏனேனின் நீ கொண்டு வந்திருக்கும் இந்த மண்ணாலான பொருளை வைப்பதற்கு இங்கு தனி இடம் உண்டு…..
ஆகவே நீ அங்கேதான் தங்கவேண்டும்…..என்றான்….
சே…..நான் இதை எதற்காக கொண்டு வந்தேனோ..? என்று வேதனை பட்டேன்…….
முடிந்தது நீ போகலாம் என்றான்..
எங்கே  .?நான் திருப்பி கேட்டேன்..
வா..என்னோடு என்று ஒரு சத்தம் என்பின்னால் கேட்டது.
 நான் திரும்பி பார்த்தேன்.
.இரண்டு தேவ தூதர்கள் என் மாளிகை பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
நான் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்….
அந்த மிகப்பெரிய விசாரணை மண்டபத்தில் இருந்து என்னை வெளியே அழைத்து கொண்டு வந்தார்கள்
எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது..
பரதீசின் உட்புறத்தை காண முடியவில்லைநான் நிமிர்ந்து பார்த்தேன்.என் வலப்புறத்தில்  மிகப்பெரிய சுவர் இருந்தது.
அதற்கு அந்த பக்கத்தில் பரதீசு இந்த பக்கத்தில் நான்….
நான் என்னுடன் வந்த பரதீசின் ஆட்களிடம்  பரதீசின் உட்புறத்தில் என்ன இருக்கிறது ..?என்றேன்
91
அவர்கள் பதிலே பேசவில்லை
நான் அவர்கள் கூடவே நடக்க ஆரம்பித்தேன்..நாங்கள் ஒரு மிகப்பெரிய விசாலமான சாலையை வந்தடைந்தோம்..
அது நீண்ட பாதையாக இருந்தது..
இரண்டு பக்கத்திலும் நீண்டு உயர்ந்த மரங்கள்.வண்ணமயமான பூக்கள் ,எங்கும் அழகாய் இருந்தது..
ஆனால் ஆட்கள் நடமாட்டமே இல்லை .
நாங்கள் நடந்து கொண்டே இருந்தோம்.
ஓரிடத்தில் நின்றோம்..
அந்த பாதையில் ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது.அது தட்டையாக இருந்தது.அதில் வாகன ஓட்டியை தவிர வேறு யாரும் இல்லை.

அந்த வாகனம் எங்கள் பக்கத்தில் வந்து நின்றது..நாங்கள் அதில் ஏறி அமர்ந்தோம் இப்போது அது கிளம்பியது..
என்னோடு வந்த பரதீசின் ஆட்கள் என்னிடம் ….நீ பார்த்துகொண்டே வா….
எந்த இடத்தில் உன் மாளிகையை எங்கே வைக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அங்கேயே வைக்கலாம்….. இடத்தை நீயே முடிவு செய்யலாம் என்றான்..

நான் என்ன சொல்ல முடியும்.?.புதிய இடம் ….சுற்றிலும் .ஆட்களே இல்லையே…..
92
கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மாளிகை வந்தது.
அது விளக்குகளாலால் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்தது..
அதன் உட்பக்கமாக பார்த்தேன் யாருமே இல்லை…..
ஆட்களே இல்லாத இவ்வளவு பெரிய மாளிகையா……

நாங்கள் போய்க்கொண்டே இருந்தோம்..

நானும் பார்த்துக்கொண்டே வந்தேன்..

ஒரு இடம் கொஞ்சம் அதிக அழகாக இருந்தது..சரி இங்கயே தங்கலாம் என்று நினைத்தேன்..
நான் நினைத்த உடனே எங்கள் வாகனம் நின்று விட்டது…..

நாங்கள் இறங்கி விட்டோம் .அந்த வாகனம் போய்விட்டது.
பரதீசின் மனிதர்கள் தங்கள் கையில் இருந்த பெட்டியை கீழே வைத்தார்கள்.

அடுத்த வினாடியே அங்கே என் மாளிகை பிரமாண்டமாய் உருவாயிற்று

எனக்கு சந்தோசமாய் இருந்தது

93
சரி வேறு என்ன வேண்டும் என்றார்கள்…..?
நான் ஒன்றும் சொல்லவில்லை…..மாளிகைக்கு உள்ளே சென்று பார்த்தேன்.

நான் பூமியில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் இங்கேயும் இருந்தது.

பரதீசின் மனிதர்கள் புறப்பட ஆயத்தமானார்கள்.

வாசல்வரை போய் அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.
அவர்கள் போய்விட்டார்கள்
நான் என் மாளிகைக்கு உள்ளே வந்தேன்.

தனிமை

யாருமே இல்லை..என் மனைவி இருந்தாலாவது அவளோடு பேசிக்கொண்டிருக்கலாம்..

பூமியில் வாழும் காலத்தில் நான் அவளோடு அதிகம் பேசாதது எனக்கு இப்போது வருத்தமாய் இருந்தது….

94
என் படுக்கையில் போய் படுத்தேன்….
தூக்கம் வரவில்லை.
.
இங்கே தூக்கம் கிடையாது.

.இரவு  பகல் இல்லை

தென்றல் காற்று இல்லை..

பேசுவதற்கு யாரும் இல்லை

நான் யாரிடமாவது பேச வேண்டுமே..தலை வெடித்துவிடுமே..எத்தனைக்காலம் பேசாமல் அமைதியாய் தனிமையில் இருப்பது இது தான் இங்கு தண்டனையா..?..ஒரு வேளை பரதீசின் உட்புறத்தில் எல்லோரும் சந்தோசமாக இருப்பார்களோ..?

.சே…. என்ன ஒரு முட்டாள்தனமான யோசனையில் என் மாளிகையை கொண்டுவந்தேன்..
வேத புத்தகத்தை கொண்டு வந்த அந்த மனிதரை நினைத்தேன்.
ம்…….இப்போது என்ன செய்ய……எல்லாம் என் மடத்தனம்….

95
என் மனைவி எப்போது இங்கே வருவாள் .?அவளுக்கு ஆயுட் காலம்
முடிந்திருக்குமா…?
பிள்ளைகளை இனி நான் பார்க்கமுடியுமா..?
என் பிள்ளைகளை பற்றி அதிக கவலை பட்டேன்.உலக தேடலில் முழ்கி கிடக்கிறார்கள்..
அறிவியல் என்ற ஒன்றை பிடித்துகொண்டு ஆத்துமாவைப் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை.
இதற்கு காரணம் நான்தான்..

என் தகப்பனார் எனக்கு ஒரளவு வழிகாட்டினார்.அதனால் நான்  திரு முழுக்கு பெற்றுக் கொண்டேன்.

என் பிள்ளைகளுக்கு நான் அது கூட செய்யவில்லைகுற்றம் என்மீதும்.. இருக்கிறது
இப்படி தனிமையிலே சிந்தித்து கொண்டிருப்பதை விட வெளியே போய் வரலாம் என்று நினைத்தேன்.

வெளியே வந்து பார்த்தேன் வழக்கம் போல் சாலை வெறிச்சோடிக் கிடந்தது
ஆனால்  ஒரு அதிசயம்
.என் வீட்டுக்கு எதிர் புறம் புதிதாக ஒரு மாளிகை வந்திருந்தது.
96
நான் அதன் அருகில் போய் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
அருகில் சென்றேன்

..கமான்டர் AK.மிஸ்ரா என்று ஒரு போர்டில் எழுதபட்டிருந்தது.

நான் வெளியில் நின்று கொண்டுஸார்…..என சத்தமிட்டேன்…..
ஒருவரும் வரவில்லை..
கொஞ்ச நேரம் ஆனாது…….ஒருவர் உள்ளே இருந்து வந்தார்….

நான் இப்போது ஓய்வாக இருக்கிறேன்.
.உங்களுக்கு என்ன வேண்டும்…?
..நீங்கள் என்னிடம் பேசவேண்டும் எனின் முன் கூட்டியே என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்..

அடப்பாவமே….இந்த மனிதருக்கு இங்குள்ள நிலமை கொஞ்சமும் தெரியவில்லை.

இங்கே என்ன ஓய்வு.தேவை இவருக்கு ..?
.எப்போதுமே ஓய்வுதானே….
அடுத்து இவரிடம் பேச அனுமதி வாங்க வேண்டுமாம்……
97
இங்கு தான் யாருமே இல்லையே
.யாரிடம் போய் அனுமதி கேட்பது.
இங்கே..வந்த பூமியின் மனிதர்கள் அனைவரும் இங்கு சரிசமமே
..இது புரியாமல் இவர் இருக்கிறார்….
அவர் உள்ளே பேய்விட்டார்..

சுத்தம்…..
இந்த மனிதரை பார்த்ததுக்காக நான் நிறையவே வருத்தப் பட்டேன்.

எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை
.நிறைய குழப்பங்கள்
இங்கு எனக்கு தெரிந்தவர் யாருமே இல்லை..இருப்பவர்களும் பேச மறுக்கிறார்கள்….
மீண்டும் என்னை இங்கு அனுப்பி விட்ட இடத்துக்கேதான் போகவேண்டும்
இங்கே எப்படி நான் இருக்க முடியும்….அழ வேண்டும் போல் இருந்தது..
இப்படி நான் நினைத்து கொண்டிருக்கையில்ஒரு வாகனம் அதே சாலையில் வந்து கொண்டிருந்தது.

நான் அதை பார்த்து கையசைத்து நிறுத்தினேன். அது நின்றது…..
98
இந்த வாகனத்தை ஒருவன் இயக்கி கொண்டிருந்தான்
..நான் அவனைப்பார்த்து இதில் வரலாமா ..?என்றேன்..
சரி என்று தலையசைத்தான்……

நான் ஏறி அமர்ந்தேன்

இந்த வாகனம் எங்கே போகிறது ,.?என்றேன்

நீ எங்கிருந்து வந்தாயோ  ..அந்த இடத்திற்குதான் போகிறதுஅது சரி..நீ ஏன் திரும்பி செல்கிறாய்? …என்றான்
எனக்கு கொதிப்பாகிவிட்டது

சே இது என்ன இடமோ….?.ஒரே மயான அமைதியாக இருக்கிறது.மனிதர்கள் யாருமே இல்லையே என்றேன்….
அவன் அமைதியாக…. இது உன்னுடைய பூமி அல்ல.
.இது பரதீசு..

இது உனக்கு நீதி வழங்கப்படும் முன் நீ இருக்கவேண்டிய
இடம்











99
உனக்கு இங்கே பிடிக்கவில்லை என்றால் அடக்கம் ஆகிவிடு அதுதான் நல்லது  என்றான்..இதை சொல்லும் போது அவன் முகம் கோபத்தால் சிவந்தது..…
அடக்கமா……அப்டியென்றால்…?
அந்த பரதீசின் மனிதன் ஒரு வீட்டை சுட்டிக் காட்டினான்.
அந்த வீட்டை நானும் பார்த்தேன்.

அந்த வீடு நான் முதலில் பார்க்கும் போது வெளிச்சமாக இருந்த வீடு..

இப்போது இருளாக இருந்தது…..
அந்த வீடு ஏன் இப்போது இருளாகிவிட்டது ..?...என்றேன்
அதில் இருந்தவர் அடக்கமாகி விட்டார் ..என்றான்…..

எங்கள் வாகனம் அந்த வீடு பக்கத்தில் வந்ததும். நின்றது.
வாகன ஓட்டியும் நானும் இறங்கினோம்
பரதீசின் மனிதன் முன்னால் சென்றான்.. நான் பின்னால் சென்றேன்.
நாங்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்தோம்..யாருமே இல்லை.
இன்னும் உள்ளே சென்றோம்அங்கே ஒரு மனிதர் கட்டிலில் படுத்திருந்தர்..
அவர் அசைற்று கிடந்தார்..
100
நான் பக்கத்தில்போய் பார்த்தேன் .அவர் உடம்பு கல்போன்று இருகி போயிருந்தது
இவர் அடக்கமாகி விட்டார் என்று மறுபடியும் சொன்னான்.
எனக்கு புரியவில்லை.
இங்கேதான் மரணம் கிடையாது..பின் இவர் எப்படி இறந்தார்..? என்றேன்.
அதற்கு அவன் ..இப்போதும். இவர் மரணமடையவில்லை அடங்கி இருக்கிறார்

நான் கேட்டேன் அப்படியென்றால் இவர் விழிப்பாரா….?

ம்…..பிரதான தூதனின் எக்காளள சத்தம்
கேட்கும் போது இவர் விழிப்பார்...

அது வரைக்கும் இவர் இப்படித்தான் இருப்பார்…. என்றான்

நான் கேட்டேன்..
இவர் எதுக்காக இப்படி ஆகிவிட்டார் என்றேன்
நாம் முதலில் வெளியேறுவோம் அதன்பின் இதைபற்றி பேசலாம் என்றான் ….
நாங்கள் வெளியே வந்தோம்….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக