சாலமோனின்
உன்னதபாட்டு
நேசம்
பிறந்தது
இதயம்
சுரந்தது
பொங்கும்
மது ரசம்
திராட்சை
பழம்தரும்
அதையும்
இது மிஞ்சும்
நேசம்
தினம் வெல்லும்
அழகான
முத்தம்
அன்பிற்கு
அடையாளம்
நேசரே
முத்தமிடும்
திராட்சை
ரசம்போல
தெவிட்டாத
உம்நேசம்
அது
இதை மிஞ்சம்,
அழகான
உம் பெயரே
சுகமான
பரிமளம்தான்
வாசனையில்
வாஞ்சையுள்ள
வஞ்சியர்கள்
கொஞ்சும் பெயர்
கன்னியரில்
கற்பனையில்
காலமெல்லாம்
உந்தன் பெயர்
தந்தமென
வென் கரத்தால்
தாவி
என்னை இழுத்துகொள்ளும்
அன்பரோடு
அறைக்குள்ளே
வருகின்றோம்
இழுத்து செல்லும்
எப்போதும்
என் இதயம் உன்னை சுற்றி
என்னாளும்
உம்நேசம் என்னை சுற்றி
இதை
சொல்லி வாழ்ந்திருப்போம் உம்மை போற்றி
உத்தமர்கள்
நேசிப்பார்கள் உம்மை ஏற்றி……
எருசலேமின்
இளஞ்செடியே…,
எங்குமுள்ள
கன்னியரே……,
கேளுங்கள்
.
பாருங்கள்.
கேதாரின்
கூடாரம் ..
சாலமோனின்
திரைச்சீலை…,!
இரண்டுமே
என்னைப்போல்……,
என்
நிறம் கருப்பு ,
அனாலும்
நான் அழகு…,
என்
சோகம் என்னோடு.
எதற்காக
கருப்பானேன் நீ கேளு-.
உடன்
பிறந்தோர் என் மீது கோபமுற்று.
தோட்டத்தை
காப்பாற்ற காவல் வைத்தார்.
உச்சி
வெயில் மேனியதை சுட்டுவிட ,
பச்சையான
உடல் முழுதும் கறுப்பாகி,
காத்திருந்தேன்
கறுத்தும் விட்டேன் .
என்
காவல் தோட்டத்தை காப்பாற்ற…!
என்
தோட்டம் இழந்தேனே என் சொல்ல..?
என்
சிந்தை என் மூச்சு எல்லாமே
என்
நேசர் களவாடி சென்றிட்டார்.
காதலரே
காதலரே எங்கு சென்றீர்
காதலியின்
சத்தமதை கேட்டுக் கொள்ளும்.
உந்தன்
இடம் தெரியாமல் திரிகின்றேன்
உச்சி
வெயில் நேரம் வர வாடுகிறேன்.
உமது
மந்தை உமது செயல் எங்கு உண்டு.
எங்கும்தேடி
அலைகின்றேனே மையல் கொண்டு.
உம்
தோழர்களின்
மந்தைகளை
நானும் கண்டு
தூர
நின்று ஏங்குகிறேன்
மனதில் கொண்டு
அங்கும்
உம்மை காணவில்லை
என்ன செய்வேன்
ஏங்கும்
என் மனதினிடம்
என்ன சொல்வேன்.
பூலோக
பெண்களிலே நீ அழகி.
புலவர்கள்
கவி பாடும் சுந்தரி நீ.
நான்
போன இடம் நீயும் அறிந்திடவே.
நலமான
வழி ஒன்று சொல்வேன் கேள்.
மந்தைகளின்
காலடியை கவனித்து வா
மந்தைகளும்
மடங்கும் இடம் நீ அறிவாய்.
அந்த
இடம் அன்பின் இடம் ஆகவே நீ
அழகான
உன் குட்டிகளை மேய விடு
பார்வோனின்
இரதத்தோடு பறந்து வரும்
பரிகள்
பவுஞ்சுக்கு ஒப்பிடுவேன்
சிலிர்த்தது
ஓடும்
சிறகடித்து
பறந்து வரும்
காற்றினிலே
செட்டைகளை
விரித்துவிடும்
அன்பே
பிரியமே
அது
போல் நீ
எழுந்து
நடந்து வந்தால்
இதயமெல்லாம்
பறந்து விடும்
அன்பே
பிரியமே
அது
போல் நீ
அடுக்கடுக்காய்
ஆபரணங்கள்
அதனுள்ளே
உள் கழுத்து
அழகென்ற
அழகன்றோ
அது
உந்தன் நிழல் அன்றோ
கண்ணை
இழுத்திடும் ஆபரணம்
கன்னம்
அதில் படும் ஒளிதரும்
ஆலய
கோபுரம் உன் கழுத்து
அன்பே
அதுவே பேரழகு
அவர்
மீது நான் சாய்ந்தேன்
என்
வாசம் அவரோடு
அவர்
பந்தி இருந்தாலும்
என்
வாசம் அவரோடு
என்
மார்பின் நடு மீது
எப்போதும்
சாய்ந்தாடும்
என்
ஸ்தனம் இரண்டோடு
எப்போதும்
உறவாடும்
செண்டாக
அவர் இருப்பார்
எந்நாளும்
என்னோடு.
சின்ன
கிளை பரப்பி
சீராக வளர்ந்து வரும்
எங்கேதி
ஊர் தோன்றும்
தோட்டத்தின்
மருதோன்றி
அதனாலே
பூச்செண்டு
அது
போல என்நேசர்
என்
பிரியமே என் ரூபவதியே
உன்
கண்கள் ஒரு சாயல்
அது
தான் புறாவைப்போல்
எந்நாளும்
வாடாது
உறவுதான்
மாறாது.அதுவே
பசுமை
நம் மஞ்சம்
பனித்துளிகள்
தங்கிவிடும்
பள்ளத்தாக்கில்
மலர்களிலும்
சாரோனின்
ரோஜாவும்
லீலியும்
நானே தான்.
உலகெல்லாம்
மனிதர் கூட்டம்
உயிர்கள்
எல்லாம் உலவி வரும்
கடும்
குணங்கள் அவை முள்ளாம்
அவைகளுக்குள்
இவள் மலராம்..
என்
நேசம் இவளோடு என்றாகும்
ஏனேன்றால்
நான் அறிவேன் இவள் காயம்.
அசைந்தால்
குத்தும் இவள் சுற்றம்.
இருந்தாலும்
இசையும் இவள் இதயம்.
இதனால்
என் இதயம் இவளோடு,
இசைவாக
மலர்ந்ததன்று இது உண்மை.
என்
நேசர் எனக்கென்றும் கிச்சிலி மரம்போல
என்
ஆசை எந் நாளும் அவரோடு.
அசையாமல்
அவர் மீது சாய்ந்திருப்பேன்.
அழகான
மரம் தரும் நிழல் போல.
அவர்
குணமே இனிதாகும் என்பேன் நான் .
அது
தானே அவர்கனி சுவைப்பேன் நான்
நெஞ்சத்தில்
இனிப்பாக எந்நாளும்.
கொஞ்சத்தான்
வேண்டும் அவரோடு.
ஓர்
நாளில் அழைத்து சென்றார் அவரோடு.
ஓய்வாக
அமர்ந்திருந்தேன் நெஞ்சோடு,
எனக்கென்று
இனிதாக எதை எதையோ ,
கொண்டு
வந்து படையலிட்டார் என் முன்னே.
விருந்து
சாலை அதன் பெயரே அறிந்திட்டேன்.
பறந்து
வந்து மூடியதாய் அன்பைக் கண்டேன்..
என்நாளும்
அவர் நினைவே என் சோகம்.
எப்படியோ
என் இதயத்தில் அவர் வாசம்.
திராட்சை
ரசத்தால் தேற்றுங்கள் .
கிச்சிலி
பழத்தால் ஆற்றுங்கள்.
அவர்
நினைவாய் என் இதயம் எந்நாளும்.
ஏங்குதே
அதனாலே என் சோகம் .
கார்
முகிலின் கருங்கூந்தல் அசைந்தாட.
அவர்
கரம் தான் என் தலையின் கீழ் தாங்க
இடது
கை இது என்று நான் காண.
வலது
கரம் கொண்டு எனை மூட.
அவர்
நினைவாய் என் இதயம் எந்நாளும்.
ஏங்குதே
அதனாலே என் சோகம் .
என்னவளின்
மனம் தானாய் விழிக்குமட்டும்
எழும்பாமல்
விழிக்காமல் இவள் தூங்க
வெளி
மானும் மரை மானும் மீதானை.
எருசலேமின்
கன்னியரே உனைத்தானே.
துயிலுகிறாள்
என்னவளும் .
தூங்கட்டும்…தூங்கட்டும்.
யாரும்
எழுப்பாதீர்.
எருசலேமின்
கன்னியரே…!
துயிலுகிறாள்
என்னவளும்
தூங்கட்டும்
தூங்கட்டும்
யாரும்
எழுப்பாதீர்
எருசலேமின்
கன்னியரே
வெளியே
தழைமேயும்
வெளிமானும்
மரை
மானும்
அங்கும்
இங்குமாக
அசைந்தே
ஒலி எழுப்பி
அவளை
எழுப்பாமல்
அமைதியாய்
இருப்பீர்காள்.
இது
என் கட்டளையாம்
அதிகாலை
நேரம் வந்ததே
அன்போடு
கண்விழித்தேன்
அதோ
வருகின்றார்
அவரேதான்
யார்
இவரோ..?
தென்றல்
முழவதுமாய்
பூ
வாசம் வீசிவரும்
ஜன்னல்
திறந்திருந்தால்
சுகமான
வாசம் வரும்,
வெள்ளைப்போளமுடன்
சாம்பிராணி வாசமுமாய்
தன்னை
வசமாக்கி
தந்தாரே
என்நேசர்…
உடலெல்லாம்
ஒரு வாசம்
உலகெங்கும்
கண்டதில்லை
உலகின்
வாசமெல்லாம்
ஒன்றேதான்
என்நேசர்
அவர் மானோ
மரைகுட்டியோ..!
மலர்ந்த
முகம் காட்டுகிறார்;
மயங்குகிறேன்
நாள் முழுதும்
மாரி
காலம் சென்றது
மழை
பெய்து ஓய்ந்தது
பூமியின்
மீதெங்கும்
புது
பூக்கள் மலர்ந்திடும்
காட்டுக்
குருவிகள் கானம் தினம் பாடும்
அத்திமரம்
காய்திருக்கு
திராட்சை
பூத்திருக்கு
என்
ரூபவதியே என்னோடு வா
உன்
சத்தம் என் இன்பம்
உன்
முகரூபம் அழகின் இலக்கணம்
நாம்
தோட்டத்திற்கு போவோம்
நரி
கூட்டத்தை விரட்டுவோம்
என்நேசரே
பகல்
போகட்டும்
நிழல்
சாயட்டும்
கன்மலையின்
மானைப்போல் நீர் வாரும்…
(….2ம்
அதிகாரம் முற்றிற்று…...
(…3ம்
அதிகாரம்..)
அல்லி
மலர்ந்திடும்
அழகறவே
பார்த்திருக்கும்
நடுச்சாமம்
வரும்நேரம்
நான்
தேடிப் பார்த்தேனே
படுக்கை
முழுவதிலும்
பார்வையை
செலுத்திட்டேன்
என்
நேசர் அங்கில்லை
என்
செய்வேன் என் செய்வேன்
நெஞ்சு
படபடக்க
நினைவெல்லாம்
தெரித்து விட
வாசல்
நான் தாண்டி
வந்தேனே
வீதிக்கு
அங்கேயும்
இங்கேயும்
அலைமோதி
அலைந்தேனே
நினைத்த
இடத்தில்
நிற்பார்
என்றிருந்தேனே
பேசி
மகிழ்ந்த இடம்
பேரன்பு
கொண்ட இடம்
பார்த்து
ரசித்த இடம்
சேயாக
அழுததுவே
உற்று
பார்த்திருப்போம்
உலகையே
மறந்திருப்போம்
சுற்றம்
யாருமில்லை
என்றேதான்
நினைத்திருப்போம்
நிமிடம்
தாண்டியதை
நினைவிலே
மறந்திருப்போம்
நேரம்
ஓடியதைதான்
எண்ணி அழுதிருப்போம்
இன்று
பிரிந்திருப்போம்
என
எண்ணி பார்க்கவில்லை
இவ்வாறு
தேடுவேன்
என்றே நான் எண்ணவில்லை
ஊமையாய்
மனது அழ
ஊராரை
கேட்டுபார்க்க
ஆமைபோல்
தலை திருப்பி
அங்கிங்கு
நான்தேட
ஊர்
காவலர் தெரிந்தனரே
ஓடிப்போய்
கேட்டேனே
அன்பு
நேசரை
அவர்களும்தான்
காணவில்லை
என்ன
நான் செய்ய என்றே
எண்ணி
எண்ணி நொந்து கொண்டேன்.
தெய்வ
தரிசனமாய்
தேனருவி
காட்சியென
தென்
பட்டார் என்நேசர்
என்
முன்னே என் கண்ணில்
புயலாய்
பறந்து வந்து
பொதிந்து
விட்டேன் என் உடலால்.
கைகள்
இரண்டோடு
கவனமாய்
இனைத்துக்கொண்டு
என்
வீடு
என்பெற்றோர்
என்தாயின்
அறைக்குள்ளே
என்னவரை
அழைத்துசென்று
அன்பாலே
முழுக்காட்டி
அவரைத்தான்
கொண்டு வந்தேன்
சாலமோனின்
மஞ்சத்தை
சொல்லவேண்டும்
சொல்லவேண்டும்
யுத்தகளம்
செல்லும்
மொத்த
வீரர்களும்
இரத்தம்
தனை குடிக்கும்
வாளும்கேடகமாய்
எப்போதும்
காவல் காப்பார்
என்நேரமும்
விழித்திருப்பார்
அன்பர்
சென்றுவர
அழகான
ஒரு ரதம் தான்
என்னை
அழைத்துவர
நேசம்
என்னும் சமுக்காளம்
தூண்கள்
வெள்ளியாகும்
தட்டை
பொன்னாகும்
ஆசனம்
இரத்தாம்பரம்
அதில் அமருவார்
அழகுடனே
என்நேசர்
சியோனின்
கன்னியரே
சென்றுதான்
பாருங்களேன்
சாலமோனின்
திருமணநாள்
சென்று
பாருங்கள்
பொன்
முடி சூடி
பொலிவுடன்
இருப்பார்
பாருங்கள்
கன்னியரே
பாருங்கள்..
தலையை
மூடும் முக்காடு
நடுவில்
தெரியும் கண்கள்
அது
புறாவின் கண்களா…?ஆம்
வெண்புறாவின்
கண்கள்.
என்
புறாவின் கண்கள்
அவளின்
அழகிய கூந்தல்.
மலையில்
தழை மேயும் வெள்ளாடு
கீழிருந்து
மேலாக
மேலிருந்து
கீழாக
அலை
அலையாய் குதிபோடும்
அழகாக
அது ஓடும்
தூரமாய்
நான் பார்த்தேன்
உன்
கூந்தல் அதுபோல……
இனிதான
கோடாய்
இசைவான
இதழ்களும்
இனிப்பான
திகட்டாத
சிவப்பான
நூலாக
விரிந்து
மூடினால்
பிறக்கின்ற வாக்காக
பிளந்தால்
கசிந்திடும்
சிவந்த
மாதுளமாய்
நிமிர்ந்த
கழுத்து
நேர்கொண்ட
பார்வை
வீரர்களின்
கேடகம் போல்
தாங்கி
நிற்கின்ற
தாவீதின்
கோபுரம் உன் கழுத்து
ஒழுகிடும்
பனியில்
ஓடிடும்
வெளிமான்
மலர்ந்திடும்
லீலியின்
மத்தியில்
மரை மான்
குதிக்கும்
குதுகலிக்கும்
குறிப்பாக
முகம் பார்க்கும்
இதைப்போல்
ஸ்தனங்கள்
இரண்டும்
ஆனதே
அந்தி
சாய்ந்து விடும்
அழகான
மாலை வரும்
அது
வரையில் நான் இருப்பேன்
மலை
முகட்டில் சாய்ந்திருப்பேன்
இதயம்
சோர்ந்திருந்தால்
இசையாக
நீ இருப்பாய்
என்
பிரியமே
முழுமையான
அழகி நீ
அழகான
சிகரத்தில்
அமர்ந்திருப்பாய்
என்னோடு
லீபனோனின்
குளிர்ச்சியில்
எர்மோனின்
உச்சியிலே
என்னுயிரே
நீ இருப்பாய்
ஆபத்தான
பல இடங்கள்
நான்
இருப்பேன் உன்னோடு
திகிலாய்
நி இருந்தால்
துகிலாய்
நான் இருப்பேன்
உணர்வுகளின் உச்சியில் நீ
உன்னிப்பாய்
என்னைப் பார்
இப்போது
தெரிந்திருப்பாய்
என்னவளே
சகோதரியே
நீதான்
என் இரத்தம்
நீதான்
என் இதயம்
தாரம்
தாயாக மாறுவாள்
மங்கை
தங்கையாக மாறுவாள்
இது
அன்பின் நிலைப்பாடு
அனுபவத்தால்
தெரிந்திடுவாய்.
உயிரின்
நேசத்தில்
உருவாகும்
காதலது
உணர்வை
புரிந்து கொண்டால்
உருவேறும்
நிறைவாகும்.
நேர்கொண்டு
நான் பார்த்தேன்
நேர்கோடாய்
மின்னலொன்று
என்
இதயம் தாக்கிவிட்டு
எங்கோ
சென்று மறைந்து விட
என்ன
அது என பார்த்தேன்
விண்ணில்
அல்ல மின்னல்
உன்
கண்ணில் வந்தது
கவர்ந்து
கொண்டாய் கவர்ந்து கொண்டாய்
கண்களுக்கு
கீழேதான்
கண்டேனே
சரப்பணி
சங்கு
கழுத்தில்தான்
சாய்ந்தாடும்
முத்தாக
கவர்ந்துகொண்டாய்
கன்னமிட்டாய்.
பொங்கிடும்
திராட்சரசம்
இன்பம்தரும்
ஏங்கிவரும்
என் இதயம்
உனைத்தேடும்
பரிமளதைலங்களில்
வாசம் உண்டு
நேசங்கள்
மலர்வதிலும் வாசம் உண்டு.
மலர்களில்
தேன் இல்லை
மணவாட்டியின்
உதட்டில் உண்டு
நாவின்
கிழே நானும் கண்டேன்
தேனும்
பாலும் திகட்டாமல்
லீபனோன்
வாசலிலே
லீலி
மலர் வாசனைப்போல்
என்னவளின்
துகில் முழுதும்
எடுப்பான
வாசனை தான்
நீ
அடைக்கபட்ட தோட்டம்
மறைவு
கட்டப் பட்ட நீறுற்று
முத்திரிக்க
பட்ட கிணறு
அழகான செடி கொடிகள்
அசைந்தாடும்
மருதோன்றி
கனி
மரங்கள் கண்ணடிக்கும்
நளதங்கள்
நாணமிடும்
குங்குமம்
தூபவர்க்கம்
குதுகலமாய்
கோலமிடும்
நான்தானே
தோட்டம்
நன்றாக
பார்த்துகொள்ளும்
வாடை
காற்றே வா
வடக்கின்தென்றலே
வா
நேசர்
வருகின்றார் தோட்டம்பார்க்க
என்
கனிகள் அவருக்கு
நேசர்
வருகின்றார் தோட்டம் பார்க்க
நேசத்தின்
சிங்காரம் அவருக்காக….
உடன்
பிறந்தாள் பாசம்போல்
உயிர்
கொடுத்தாய் என்னவளே
கொஞ்சம்
கேளு என் குரலை
கொஞ்சமல்ல
கொஞ்சமல்ல
சினேகிதரே
கேளுங்கள்
பாலோடு
மதுரசமும்
தேனோடு
தேன் கூட்டையும்
சுவைத்து
குடித்தேன்
சுந்தர
தோட்டத்தில்
வெளியே
பனித்தூறல்
மெல்லியதாய்
சிறு சாரல்
கண்ணை
முடிக்கொண்டு
கண்ணயர்வேன்
என நினைத்தேன்…
மெல்லியதாய்
ஓர் சத்தம்
மென்மையாக
கேட்டதுவே
புறாவே
உத்தமியே
புறமாக
நிற்கின்றேன்
துறலில்
நனைகின்றேன்
துரிதமாய்
கதவைத்திற…
உடைகளை
களைந்து விட்டேன் –இனி
உடுத்துவது
எப்படியோ….!..?
பாதங்களை
கழுவிவிட்டேன்
பாழ்படுமே
கீழ்மிதித்தால்
வெளியே
சத்தமில்லை
வேறொன்றும்
கேட்கவில்லை
காதலர்
கைவிரலை
கதவிடுக்கில்
காட்டி நின்றார் .
பாதி
திறந்த கண்ணில்
பார்த்துவிட்டேன்
அவர் விரலை
ஏக்கம்
என்மனதில்
எரிமலைபோல்
பொங்கிற்று .
இதயம்
அவருக்காய்
இன்னிசைத்தான்
பாடியதே
மெல்லிய
பூங்காற்றாய்
சால்வையால்
மூடிக்கொண்டு
கதவின்மேல்
கைப்பிடியை
காதலர்க்காய்
நான் திறந்தேன் .
விரல்கள்
பட்டவுடன்
வெள்ளைப்
போளம் வாசனையும்
விரல்களின்
மேல் வடிந்ததுவே.
கதவை
திறந்து விட்டேன்
காதலர்தான்
அங்கில்லை……!
என்நேசர்
அங்கில்லை
எங்கேயோ
போய் விட்டார்
என்ன
செய்திடுவேன்
என்னசொல்லி
அழைத்திடுவேன்
கூறிய
வார்த்தைகள்
கூறாக
நின்றதுவே
நேசரின்
சத்தம் தான்
நேராக
பாய்ந்ததுவே
இதயம்
பிளக்கும் வண்ணம்
இரவினிலே
கூப்பிட்டேன்
எதிரொலிதான்
வந்ததுவே
என்நேசர்
வரவில்லை
புத்தி
கலங்கி விட
புயலாக
பாய்ந்து சென்றேன்
சித்தம்
கலங்கி மயங்கி விட
சிறுமையுடன்
தேடிச்சென்றேன்
விரிந்த தலையும்
கலைந்த
தேகமும்
குழைந்த
சொல்லும்
குன்றிய
முகமும்
சித்தம்
தடுமாறும்
பித்தாய்
சென்றேன்
ஊரை
காவல் காப்போர்
ஓடிவந்து
அடித்திட்டார்
சால்வையை
பிடுங்கிவிட்டு
மேல்
முழுதும் காயம் தந்தார்
எருசலேமின்
குமரிகளே
என்நிலையை
பார்த்தீரோ
என்னவரை
கண்டுகொண்டால்
என்
நிலையை எடுத்துரைப்பீர்
என்
மனது முழுவதுமே
ஏக்கமான
ஓர் சோகம்
எங்கிருந்தோ
ஒரு மேகம்
முடியதே
என் தேகம்
நேசம்
வைப்போர் சோகமதில்
மோசமான
நிலையும் காண்பீர்
நேசம்
வைத்தேன் என் நிலையை
நேசரிடம்
கூறுங்களேன்
புலம்புகின்ற
ரூபவதி
புலம்பாமல் ஒரு பதிலை
புரியும்படி
கூறிவிடு
ஊருக்குள்ளே
ஆயிரம் பேர்
என்னவரை
போல உண்டு
உன்னவரும்
என்னவரை
எதை
மிஞ்சி நிற்கின்றார்
அப்படித்தான்
அவரிடமும்
அதிசயமாய்
என்ன கண்டாய்
ஆண்களெல்லாம்
ஒன்றுதானே
அதிசயிக்க என்ன கண்டாய்
புலம்புகின்ற
ரூபவதி
புரியும்படி
பதிலைச் சொல்லு
கேளுங்கள்
கன்னியரே
கேளுங்கள்
கூறுகிறேன்…(…..இன்னும் பாடுவேன்..)
உன்னவரைப்
போல
ஊரினில்
ஆயிரம்பேர்
என்னவரோ
எப்போதும்
ஆயிரத்தில்
அவர் ஒருவர்
சிவப்பாய்திருமேனி
வெண்மை
கலந்தோட
பகட்டாய்
தலையெல்லாம்
தங்க
மயமாக
முகடாய்
தலை மயிரும்
சுருள்
சுருளாய் கருப்பாக
முன்னே
பதிந்திருக்கும்
ஒளிமலராய்
கண்ணாக
கன்னங்கள்
கந்த வர்க்கம்
இதழ்களோ
லீலி புஸ்பம்
நின்றால்
கசிந்து வரும்
வெள்ளை
போளம் வீசிவிடும்
கரங்களோ
படிகப்பச்சை
கல்பதித்த
பொன் வளையல்
அங்கம்
இரத்தினங்கள்
அதிலேதான்
இந்திரநீலம்
அழகான
யானை தந்தம்
அதிசயமாம்
அவர் அங்கம்
உயரமாய்
எழுந்து நின்றார்
உரமான
கால்களைத்தான்
கேதுரு
மரம் என்பேன்
வெள்ளைக்கல்
தூண்கள் என்பேன்
என்றுமே
இன்பம் தரும்
இனிப்பான
கனி ரசம் போல்
எப்போதும்
இனித்திடுமே
என்னவரின்
வாய்தானே
ஒன்றல்ல
இரண்டல்ல
ஓராயிரம்
பேர் அல்ல
பார்த்தேன்
பலபேரை
பதினாயிரம்
பேருக்குள்ளே
..இவர்
போல் எவருமில்லை
எருசலேமின்
குமரிகளே
பெண்களிலே
நீ அழகு
உண்மையில்
நீ பேரழகு
என்ன
சொன்னாய் கன்னிகையே..?
எங்கே
சென்றாரோ உன்னவர்.
உன்னை
தனியாக
ஒருநாளும்
விடமாட்டோம்
இப்போதே
நாங்களும்தான்
இனிதாக
தேடுவோமே
லீலி
புஷ்பம் மலர்ந்திருக்கும்
முல்லையென
பூத்திருக்கும்
இனிமையாக
பார்த்திருப்பார்
தனிமையாக
சென்றிருப்பார்
கந்தவார்க்க
பாத்திகளை
காணவுமே
சென்றிருப்பார்
என்றும்
அவர் எனக்கு
என்நாளும்
நான் அவர்க்கு
லீலி
புஷ்பம் நடுவினிலே
நிற்பாரே
என்னவரும்
அழகான
பட்டணமாம்
ஆண்டவரின்
சீதனமாம்
எருசலேமின்
வடிவமாம்
என்னவளின்
ரூபமாம்
திர்சாலின்
அழகொளியாம்
திரண்ட
படையழகாம்
படையின்
மேல் கொடியழகாம்
கொடியைப்போல்
இவள் அழகாம்
எதிரி
உனக்கு நானல்ல
என்னை
விட்டு கண் திருப்பு
தோற்றுவிட்டேன்
அவைகளிடம்
தோல்விதனை
ஒப்புக்கொண்டேன்.
கீலேயாத்
மலைகளிலே
தழைமேயும்
வெள்ளாடு
துள்ளிக்குதித்து
வரும்
கொழுத்து
பருத்திருக்கும்
திரும்பி
நீ நடந்தால்
கருங்குழல்
குதிக்கிறது
ஆடுகளின்
குதியாட்டம்
அற்புதமாய்
கண்டேன்
திரை
போடும் முக்காடு
சிறைப்படுத்தும்
உன் முகத்தை
வெடித்த
மாதுளம் போல்
என்னமாய்
ஜொலிக்கிறது
எனக்கென்று
அறுபதுபேர்
எல்லாமே
ராஜ வம்சம்
மற்றுமொரு
எண்பதுபேர்
மனம்
ஆற்ற எனக்குண்டு
இவள்
தாய்க்கு ஒரு பிள்ளை
இவள்தான்
அப்பிள்ளை
அன்னைக்கு
இவள் அருமை
அன்புடனே
இவள் பெயரை
அனைவருமே
வாழ்த்தினரே
முகில்
வந்து கூடும்
முகம்காட்டும்
நிலவு
பெரிதாக
ஒளிரும்
கதிரவனாய்
தோன்றும்
கன்னியவள்
இவள் யார்..?
புறவிகள்
பாய்ந்து செல்லும்
புயலாய்
படைபறக்கும்
கொடிகள்
அசைந்தாடும்
கொடிபோல
இவள் யார்…?
பள்ளத்தாக்கில்
கனி காண
மாதுளத்தின்
பூ காண
திராட்சையின்
துளிர்காண
வாதுமையின்
தோட்டத்திற்கு
வாஞ்சையாய்
நான் போனேன்
என்னவளே
திரும்பி வா
சூலமித்தியே
திரும்பிவா
அதிவேகம்
இது காட்டும்
அம்மினதாபின்
பொன் ரதமாம்
என்மனமும்
அதன் முன்னே
என்னமாய்
பறக்கிறது
உன்னை
நினைக்கிறது
உனக்காக
வாழ்கிறது
உன்னை
பார்க்கவேண்டும்
உன்னோடு
பேசவேண்டும்
ஏன்
அங்கே பார்க்கிறீர்கள் ..?
என்னவளைத்
தேடுகிறீர்கள்
இரண்டு
சேனைக்கு இவள் சமமே
எப்போதும்
இது நிஜமே
அதிகாரம்—7
அன்பான
பெண்ணரசி
அரசனின்
குமாரத்தி
காலணிதான்
உன் காலில்
காவலாய்
இருக்கையிலே
கண்கள்
படும்… அது அழகில்
காண்போரை
மயக்கிடுமே
மெலிதான
மெல்லிடை
அழகிய
பூசணம்
சிறு
இடையில் மேலேதான்
சின்னதாய்
நாபிதான்
திராட்சை
ரசம் கொண்ட
வட்ட
கலசம் என்பேன்
வெளிமானின்
சிறுகுட்டி
துள்ளி
குதித்தோடும்
இளமையின்
இரு ஸ்தனம்
இதைபோல்
என சொல்வேன்
கோபுரமாய்
கழுத்தை கண்டேன்
கொழுத்த
யானை தந்தம்
கன்னத்தின்
மேல் இருக்கும்
கண்களை
என்ன சொல்வேன்
தண்ணீர்
ததும்பி நிற்கும் தடாகம்
வேறு
என்ன…!
தமஸ்கு
திசை காட்டும்
லீபனோனின்
கோபுரமாய்
தத்தை
இவள் நாசி
தங்கமாய்
ஜொலிக்கிறது
கார்
கூந்தல் அலை பாயும்
கன்னியவள்
தலையதுவும்
கர்மேல்
மலை போல
கம்பீரம்
காட்டுதடி
மெல்ல
நீ நடந்தால்
சின்ன
இடை அசைவில்
அரசனும்
மதிமயங்கி
அங்கேயே
நிற்பானே
உன்னை
நினைத்தால் இன்பமயம்.--.உன்
உருவம்
அசைந்தால் அழகு மயம்
நிமிர்ந்த
நடை
நேர்
கொண்ட பார்வை
பனைமரமாய்
உன் சாயல்
திராட்சை
குலை தொங்கும்
தின்னமாய்
உன் ஸ்தானம்
பெண்ணுக்கொரு
வாசம் உண்டு
மண்ணுக்கொரு
வாசம் உண்டு
நாசியிலே
உன் வாசம்
நானறிவேன்
என் உயிரே
கிச்சிலி
பழமதாய்
கிறக்கி
விடும் அதன் வாசம்
உன்
உயரம் பனை மரம்தான்
உயரத்தை
நான் பிடிப்பேன்
மெலிதாய்
பேசிடுவாய்
மென்மையான
குரலிடுவாய்
துயிலுகின்ற
வாய் பேச
துனையாவும்
திராட்சை ரசம்
அதுபோல
நீயாவாய்
அன்பே
என்னவளே
நான்
அவருக்கு
அவர்
பிரியம் நானேதான்
வாரும்
நேசரே
வயல்
வெளி போகலாம்
கிராமத்தில்
தங்குவோம்
மண்
வாசம் அறிந்திடுவோம்
காலையில்
கண் விழிப்போம்
கனியுடன்
திராட்சை மலர் காண்போம்
திராட்சை
பூத்ததோ
மாதுளை
மலர்ந்ததோ
கண்டிடவே
நாம் போவோம்
அப்போது
நான் வருவேன்
அங்கேயே
எனைத்தருவேன்
என்
வாசல் உமக்காக
என்நாளும்
உமக்காக
தூதாயிம்
பழ வாசம்
வாசலிலே
வந்து வீசும்
வாரும்
என் நேசரே
வந்தால்
நான் தருவேன்.
நேசரே
என் சொல்வேன்
என்
சோகம் எடுத்துரைப்பேன்
என்
தாய்க்கு நீர் மகன் ஆனால்
வீதியிலே
முத்தமிடுவேன்
எதிர்ப்போரும்பேச
மாட்டார்
எனை
என்றும் தூற்ற மாட்டார்
உடலல்ல
நம் நேசம்
உள்ளம்தான்
நமதாகும்
என்
தாயின் வீட்டிற்கு
என்னவரை
அழைத்து செல்வேன்
மாதுளம்
பழரசமாய்
மன்னவா
நான மாற
போதனை
நீர் செய்வீர்
பேதையாய்
நான் கேட்பேன்
இடக்கை
என் தலை கீழ்
வலக்கை
அரவணைக்கும்
துயிலுகிறாள்
என்னவளும்
தூங்கட்டும்
தூங்கட்டும்
அவளாய்
விழிக்குமட்டும்
அசைஒன்றும்
கூடாது
எருசலேமின்
கன்னியரே
என்
ஆணை இது தானே
எப்போதும்
கேட்பீரே..
உம்மை
ஈன்றவள் துயரம்தான்
வேதனை
அவள் சொந்தம் தான்
அதனாலே
உம்வாழ்வும்
ஆகாயம்
கீழ் இருக்க
கிச்சிலி
மரத்தடியில் கண்டேனே உம்மைத்தானே
அவர்
மேல் சாய்ந்து கொண்டு
அழகாய்
வருகிறாளே
இதயத்தின்
முத்திரை நீர்
எந்நாளும்
மறக்கவேண்டாம்
மரணத்தை
போல் உந்தன் நேசம்
மறக்காததால்
நான் சோகம்
தினமும்
தகிக்கின்றது
தழலாய்
எரிகின்றது நேசம் வலியது
மிகவும்
கொடியது
வெள்ளம்வந்தாலும்
ஒரு
நாளும் பிரியாது
தண்ணீர்
அடித்தாலும்
தானாகவிலகாது
சொந்தம்
கொள்வோர் முன்
சொத்தெல்லாம்
சிறு தூசி
நேசம்
கொள்வோர் முன்
காசெல்லாம்
பதரைப்பொல்
நமக்கொரு
சோகம் உண்டு
நம்தாயின்
மகளுண்டு
அவளுக்கு
அழகான
ஸ்தனங்கள்
தானில்லை
பெண்
கேட்போர் வரும்நாளில்
என்
செய்வோம் என் சொல்வோம்
அவள்
ஒரு மதிலானால்
அழகாக
கட்டிவிடலாம்
கேதுருவின்
கதவானால்
பாங்காக
இணைத்திருப்போம்
ம்………………………………………………..
நான்
மதில்தான்
என்
ஸ்தனங்கள் கோபுரம்தான்
என்நேசர்
கண்களிலே
என்மேலே
இரக்கம் கண்டேன்
சாலமோனின்
தோட்டம் உண்டு
பாகாலின்
ஆமோனிலே
தோட்டத்தை
ஒப்படைத்தார்
தோட்டக்காரன்
காவல் காத்தான்
என்
தோட்டம் என் முன்னே
சாலமோனே
உனக்குத்தான்
ஆயிரமும்
உனக்குத்தான்
காவலிருப்போருக்கு
இருநூறுதான்
இயற்கையின்
தோட்டத்திலே
என்னவளே
நீயிருப்பாய்
நேசர்
கேட்கிறார்
நிதமும்
பார்க்கிறார்
நேசரே
வாரும்
மலை
மீது செல்வோம்
கந்தவர்க்கம்
காண்போம்
வெளிமானும்
நீரே
மரை
மானும் நீரே
(சாலமோனின்
உன்னத பாட்டு முற்றுப் பெற்றது..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக