ஞாயிறு, 20 ஜூலை, 2014

என்னை பலி செலுத்த …விலை பேசினார்கள்…!

 என்னை பலி செலுத்த …விலை பேசினார்கள்…!
💚💚💚💚💚💚💚💚❤❤❤

நான் உயரத்தில் இருக்கிறேன்.
சுமார் இருபத்தி ஐந்து அடி உயரத்தில் தொங்கிகொண்டிருக்கிறேன்.
எனக்கு எதிர் புறம்… பாண்டே.ஜீ… நீளமான குழாயில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இது பீஹார் மாநிலத்தில் உள்ள புக்காரோ இரும்பு தொழிற்சாலையின் உள்ளே நடந்த சம்பவம்.
புதிதான கட்டமைப்பில் உருவாக்கபடும் ஒரு மிகப்பெரிய செட்டில்  வாயு(GAS..) செல்வதற்கு குழரய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
நான் (WELDER)ஆக வேலை பார்ப்பதால் இப்படி அந்தரத்தில் தொங்கி கொண்டுதான் வேலை செய்ய முடியும்.
ஒரு கூண்டு ஒன்று இருக்கும். அதை முப்பதடிக்கு மேலே எப்படியாவது கட்டி தொங்க விடுவார்கள்.
யாருக்குமே எந்த பாதுகாப்பும் இல்லை.
அவரவர் பாதுகாப்பு அவரவர் கையில்.
ஒரு முறை நான் வெல்டிங் அடித்து கொண்டிருக்கும்போது நான் நிற்பதற்காக கட்டபட்ட கூண்டின் கயிறு வெல்டிங் பற்றவைக்கும் போது ஏற்படும் தீ சிதறலில் தீப்பிடித்து எரிந்து திடீரென்று ஒரு பக்கமாக கவிழ்ந்து விட்டது..
நான் வெல்டிங் கேபிளை விட்டு விட்டு ஒரு கையால் எதிரே உள்ள  இரும்பு உத்திரத்தை பிடித்து தொங்கி விட்டேன். எப்படியோ பிழைத்தேன்.
தினமும் மனிதர்கள் சாவது அங்கு சாதாரணம்.
நல்ல வேளை இன்று நான் சாகவில்லை… என்று வேண்டுமானால் சந்தோசபட்டு கொள்ளலாம்.
பிஹார் மாநிலத்தில் பருவ நிலை மாறுவதை நன்றாக உணரலாம்..
காற்று காலத்தில் நம்ம ஊர் ஆடிமாத காற்றை விட அங்கு பயங்கரமாக காற்று வீசும்..
மழை காலத்தல் கடுமையான மழை பெய்யும்
.குளிர்காலத்தில் சரியான குளிர் அடிக்கும் .
வெயில் காலத்தில்…. சூட்டில் மூக்கில் இருந்து இரத்தம் கசியும்.
ஒரு நிகழ்சி
புக்காரோ இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து விட்டு மாலை வீடு திரும்பி கொண்ருந்த இருவரை ..யாரோ எப்போதே செட்டின் மேல்புறத்தில் போட்டு வைத்திருந்த இரும்பு தகடு  ஒன்று காற்றால் தூக்கபட்டு பறந்து வந்து வீட்டுக்கு போய் கொண்டிருந்த இருவர்மீதும் வேகமாக பாய்ந்து இரண்டு துண்டாக துண்டித்து போட்டது.
கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது.
தொழிலாளர்கள் டீயை குடித்து கொண்டே சாதாரணமாக இதையும் பேசி முடித்து விடுவார்கள்.
இன்னொரு முறை
 ஒரிசாவில் இருந்து வேலைக்கு வந்திருக்கும் ஆதிவாசிகள் அதிகம்பேர் நான் வேலை பார்த்த கம்பெனியில் இருந்தார்கள்.அவர்களில் ஒருவன் என் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தான்.
அந்த செட்டில் தலைக்கு மேல் over head crain அங்கும் இங்குமாக  போய்க்கொண்டிருந்தது.
திடிரென்று அது சாத்தி வைக்கபட்டிருந்த மிப்பெரிய இரும்பு ஏணியை எங்கள் மீது தள்ளி விட்டு விட்டு போய் விட்டது. உயரத்தில் இருந்து வேகமாக சரிந்த ஏணி என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆதிவசியின் தலையில் விழுந்தது.
ஏணியின் படிகளுக்கு இடையில் இருக்கும் சதுரமான ஓட்டையில் அவன் தலை நூழையவே இருண்டு தோள்களிலும் ஏணியின் இரண்டு குழாயும் வேகமாக மோதி நின்றது.இருபது அடி உயரமுள்ள ஏணி வேகமாக விழுந்தால் நிலமை எப்படி இருக்கும் .இரண்டு தேள்களும் வீங்கி பல நாட்கள் அவன் வேலைக்கு வரவில்லை.
இப்படி தினமும் சாவோடு விளையாடி கொண்டிருக்கும் நிலையில் நானிருந்தோன்.
இரண்டு குழரய்களையும் வெல்டிங் முலமாக நான் பற்ற வைத்து இணைக்க வேண்டும்.
நான் இணைத்து முடிக்கும் வரை அனைவருக்கும் ஓய்வு.
என் பக்கத்தில் பாண்டேஜி ஒரு பைப்பில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.
மற்றவர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு கைனி தடவிக் கொண்டிருந்தார்கள்.
கைனி என்பது ஒருவகையான புகையிலை.அதோடு சுண்ணாம்பையும் சேர்த்து நன்றாக கசக்கி பின் மெதுவாக சுண்ணாம்பை ஊதிவெளியே தள்ளிவிடவேண்டும்.ஃ
இப்போது மீதம் இருக்கும் புகையிலையை எடுத்து வாயில் உதட்டுக்கும் பற்களுக்கும் இடையில் வைத்து கொள்ள வேண்டும்.கொஞ்ச நேரத்தில் தாடையின் நரம்புகள் மூலமாக தலைக்கு கிண்ணென்று போதை ஏறும்.
பின் அரை மணிநேரம் அந்த மயக்கத்தில் இருக்கலாம்.
ஒருவர் கைனி கசக்கும்போது தன் பக்கத்தில் இருக்கும் மற்றவர்க்கும் சேர்த்தே கசக்கவேண்டும்.தன்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு புகையிலை இல்லையெனின்.
தூரமாகப்போய் தனக்கு மட்டும் கசக்கலாம்.
இது அங்கு எழுத படாத விதி..
இப்போது நான் வேலையை ஆரம்பித்தேன் .
தீப்பொறிகள் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.
தற்செயலாக கீழே எட்டிப்பார்த்தேன்.
கீழே ஒரே கூட்டமாக நின்று எதையே பேசிக் கொண்டிருந்தார்கள்.நான் என் பக்கத்தில் இருந்த பாண்டேஜியிடம்
..பாண்டேஜி..என்ன அங்கே…?.என்றேன்.
அவரும் தெரியலியே..என்று சொல்லி விட்டு கேட்டுப்பார்க்கிறேன் என்று சத்தமாக.
ஹியா…ஹோ……ஹியா வுவ்வா……?ஃ(ஹோ…..என்ன .. அச்சுஃ…..?)
அங்கிருந்து பதில் வந்தது
ஹரே…. ஸ்யாம் பாபுக்கி  ஆக்ஸிடன்ட் ஓகையாஹை…….(சியாம் பாபுவிற்கு விபத்து நடந்து விட்டது..)
மீண்டும் பாண்டே…..சத்தமாக………..
கைசே..ரே…….(எப்படி…ப்பா.)
பதில் வந்தது
ஹரே….பாய். மோட்டார் சைக்கிள்.மே……( மோட்டார் சைக்கிளில் போகும்போது..)
சியாம்பாபு என் கம்பேனி முதலாளிகளில் ஒருவர்.அப்போது இருந்த ராஜ்துத் …மோட்டார் சைக்கிளில்  உச்சவேகத்தில் செல்வார். எப்படியோ விபத்து நடந்து விட்டது.
மேஸ்திரிகள் உடனே அவரை பார்ப்பதற்கு விரைந்தனர். சரி இன்று வேலை அவ்வளவுதான்.
நான் என் வேலையை முடித்து விட்டு கயிற்றின் வழியாக கிழே இறங்கினேன்.
மற்றவர்கள் மற்ற பொருட்களை எடுத்து ஸ்டோர் ரூம்பில் வைக்கவும் வாட்ச்மேனிடம் ஒப்படைக்கவும் சென்றுவிட்டார்கள்.
நான் என் தலையில் இருந்த தொப்பியை கழட்டி வைத்து விட்டு கையில் மாட்டி இருந்த கிளவுசையும் கழட்டினேன்…
அப்போது ஜெயராம் அங்கே வந்தான்..அவன் ஒரிசாவை சேர்ந்த ஆதிவாசி….என்னைப் போல் வெல்டிங் வேலை செய்பவன்.என்னிடம் பாசமாக இருப்பான்.
ஒரு பீடியை பற்றவைத்து கொண்டு.என்னிடம் கேட்டான்.
ஹரே தும் கர் ஜாரஹாஹை..கியா..?(..நீ ஊருக்கு போறியாம்மே…அப்படியா..?)
ஆமா ..என்றேன்.
வாபஸ் ஆயகா…. கியா..?( திரும்பி வருவியா..?
நான் சொன்னேன்………நஹி..பாய்ஸாப்…..நஹி ஆயங்கே…(இல்லை சகோதரனே திரும்பி வரமாட்டேன்….)
தப்..ஏக் பர் அமாரா கர் ஆ.ஜாவ்..( அப்படின்னா என் வீட்டுக்கு ஒருதடவை வந்துவிட்டு போ….(விருந்துக்கு..)…….)
அச்சா ஜி.ஆயங்கே…..லேக்கின்..( நல்லது வருகிறேன் ..ஆனால்..)
நான் அவனை பார்த்தேன்..
அவன் என்னைபார்த்து….ஹியா….(என்ன…வென்றான்.)
துமாரா கர்..மே ஹம்..கோ..மொவ்வா சராப் மிலேகா..
ஜெயராம் என்னை அதிர்வுடன் பார்த்தான்.
நான் அவனிடம் கேட்டது.

உன் வீட்டில் எனக்கு மொவ்வா சாராயம் கிடைக்குமா..?

ஜெயராம் எனக்கு மொவ்வா சாராயம் தருகிறேன்  என்றான்  ..நானும் சரி என்றேன்…ஜெயராம் போய்விட்டான்…
அடுத்த நாள் சனிக்கிழமை…நான் என்னோடு கூட என் அறையில் தங்கியிருந்த  ஜெசுபாதம் என்பவனிடம் .நான் இன்று இரவு வரமாட்டேன் .என்னோடு வேலை பார்க்கும் ஜெயராம் வீட்டுக்கு போகிறேன் என்றேன்.
ஜெசுபாதம் என்னை ஒரு மாதிரி பார்த்தான்….
ம்…….ஜெயராமா…?எந்த ஊர்க்காரன்…..?
ஒரிசா  ஆதிவாசி……
இது சரிப்படாது…கவனம் அவ்வளளவுதான் நான் சொல்ல முடியும்..என்றான்…

நான்….அதெல்லாம் ஒண்ணுமில்ல..பார்த்து கொள்ளலாம்..என்றேன்.
அதன்பின் ஜெசுபாதம் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
வழக்கம் போல் சனிக்கிழமை வேலை முடிந்தவுடன் ஜெயராம் என்னிடம் வந்தான்…
வா போகலாம் என்றான்…
பாண்டே இதை கவனித்தார்.
நான் ஜெயராமோடு பயணப்பட்டேன்.
நான் எனது சைக்கிளிலும் ..ஜெயராம் அவனது சைக்கிளிலும் போய்க்கொண்டிருந்தோம்.
எனக்கு மனதுக்குள் ஏதோ தவறு செய்கிறோம் என்ற உள்ளுணர்வு உறுத்தி கொண்டிருந்தது.
நண்பன் வீட்டுக்கு விருந்துக்கு போவது எப்படி தவறாகும்..?
எனக்கு நானே பதில் சொல்லிக்கொண்டேன்.

புக்காரோ நகரத்தை விட்டு ஜெயராம் என்னை அழைத்து  போகும் பாதை விலகி சென்றது.
வெகுதூரம் ஒத்தையடி பாதை. அடுத்த அரை  மணி நேரத்தில் ஒரு காட்டை அடைந்தோம்
சிறிய பள்ளத்தாக்கு…
புதர்கள் நிறைந்த பகுதி..அதையும் தாண்டி சென்றால் குடிசைகளாக ஒரு ஐம்பது வீடுகள்.
எல்லாமே குடிசைகள்தான்..
வீடுகளில் சோறு பொங்குவதற்கு அடுப்பில் தீவைக்கபட்டு அதன் புகை மெதுவாக அங்கே எழும்பிக்கொண்டிருந்தது.
அப்போது சில பெண்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தனர்  .
நான் கவனித்தேன்…எந்த பெண்ணின் மார்பும் மறைக்கபடவில்லை.
அரை நிர்வானமாக இருந்தனர்.
அங்கே யாரும் அதை தப்பாக நினைக்கவும் இல்லை.
தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவும் இல்லை.
ஜெயராம் வீட்டில் அவனைத் தவிர யாரும் இல்லை..
அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தேன் .மனைவியும் பிள்ளைகளும் ஒரிசாவுக்கு சென்றுவிட்டார்கள் வருவதற்கு ஒருமாதம் ஆகும் என்றான்.
அவனே சமையல் செய்தான்.
மின்சார வசதியே இல்லாத அந்த காட்டு பகுதியில் இருள் வேகமாக மூடியது.
பின் சிறிது நேரத்தில் நிலவின் வெளிச்சம் பிரகாசிக்க ஆரம்பித்தது.
நாங்களும் சாப்பிட்டு முடித்தோம்.
நான் அவனிடம் மொவ்வா சாராயத்தை நினைவு படுத்தினேன்
கட்டாயம் வேண்டுமா என்றான்…..ஆமா என்றேன்.
சரி வா.. என்னை வெளியே அழைத்து சென்றான்….. அவசர பட கூடாது அமைதியாய் இரு என்றான்..
நான் அவனை புரியாமல் பார்த்தேன்.
ஜெயராம் சொன்னான்..
இங்கு அன்னியர் யாரும் வருவதில்லை.அப்படியே வந்தாலும் வெளியே வரமாட்டார்கள்.அதற்கு பலகாரணம் இருக்கிறது..பரவாயில்லை நீ வா என்றான்..
நானும் அவனும் பல குடிசைகளை தாண்டி சென்றோம்.
கடைசியாக ஒரு குடிசைக்குள் நுழைந்தோம்.அங்கே அடுக்கி வைக்கபட்டுள்ள பானையில் இருந்து சாராயம் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது.
அந்த குடிசைக்கு சொந்தக்காரி ஒரு கிழவி.
அவளிடம் ஜெயராம் ஆதிவாசி பாஷையில் ஏதோ கூறினான் அவள் பதிலுக்கு ஏதோ கடுமையாக கூறினாள்.
ஜெயராம் பதிலுக்கு ஏதோ கூறினான்.கிளவி சாந்தமானாள்.
என்னை பரிவாக பார்த்தாள்..
பின் ஒரு பெரிய தம்ளரில் சுடச்சுட  மொவ்வா சாராயத்தை என்னிடமாக நீட்டினாள்.
நான் வாங்கி கொண்டேன் ..
இந்தியில் நன்றி என்றேன்.
அவள் விகாரமாக சிரித்தாள்.
ஜெயராம் குடிக்கவில்லை..
நானும் ஜெயராமும் வெளியே வந்தோம்
அதற்குள் சில நபர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.
ஏதோ பேசிக்கொண்டே……….இருந்தனர். ஒருவழியாக பேசி முடித்தனர்.ஜெயராமும் நானும் திரும்ப ஆரம்பித்தோம்
எனக்குள் போன மொவ்வா சாராயம் தன்வேலையை காட்ட ஆரம்பித்தது .எங்கோ ஆகாயத்தில் மிதந்தேன்…
நேராக நடக்கமுடியவில்லை.அகல கால்கள் வைத்து  தள்ளாட ஆரம்பித்தேன்.
டும்..டும்...டும் என சத்தம்கேட்டு திரும்பி பார்த்தேன்.
பெண்கள் கூட்டமாக ஒருவர் தேளில் ஒருவர் கையை போட்டு கொண்டு வட்ட வடிவத்தில் நின்று கொண்டு நம்ம ஊரு கும்மியடி பாட்டு மாதிரி பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தர்கள்.
ஒரே சாராய நாற்றம் .
எல்லோருமே குடிப்பார்களோ என்னவோ..?அவர்களின் பாடலின் மெட்டு எனக்கு பிடித்திருந்தது.
..(….பல வருடம் கழித்து ஆண்டவர்க்கு என்னை ஒப்புக்கொடுத்தபின் நான் எழுதிய …..நோவா தாத்தா பேழைய பார்த்து.. கேலி செய்தனராம் மக்கள் கிண்டல் செய்தனராம்…………..என்ற பாடலின் முதல் இரண்டு வரிகள் இந்த ஆதிவாசிகளின் ராகமே….)

போதை தலைக்கேற எப்படியோ ஜெயராம் வீட்டிற்கு..மன்னிக்கவும்… குடிசைக்கு வந்து விட்டேன்.காலையில் எழுந்ததும் பயங்கரமான தலை வலி..
ஜெயராம் தலை வலிக்குது  என்றேன்….
ஆமா….இப்படி குடித்தால்  தலை வலிக்கத்தான் செய்யும்..என்றான்.
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வேறு எதோ கூட சேர்த்து தந்தான்.குடித்த சில நிமிடத்தில தலை வலி போய் விட்டது.
காலை சாப்பாடாக ரொட்டி செய்து தந்தான்.
அதை நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஐந்து பேர் குடிசைக்குள் நுழைந்தனர் .
நீளமா கத்திகள்.. கையிலும் சிலர் இடுப்பிலும் சொருக பட்டிருந்தது.
வந்தவர்கள் சாப்பிட்டுகொண்டிருந்த என்னை சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள்.
ஜெயராம் அவர்களிடம் முதலில் சாதாரனமாக  பேசினான்.
பின்பு சத்தமாக பேசினான்..எல்லாமே ஆதிவாசி மொழியில் இருந்ததால்
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் ஹிந்தியில் ஜெயராமிடம் ..
ஜெயராம் என்ன விசயம்..?ஹிந்தியில் பேசுங்களேன் எனக்கும் புரியும் என்றேன்.
அவன் பேச்சை சட்டென்று நிறுத்தி என்ன பார்த்தான் ..
அனைவரும் அமைதியாயினர்.
ஜெயராம் சொன்னான்…
உன்னை எங்கள் தெய்வத்துக்கு நரபலி செலுத்த கேட்கிறார்கள் .நான் மறுக்கிறேன்.. என்றான்.
எனக்கு எப்படி இருந்திருக்கும்……..யோசித்து பாருங்கள்….
நான் சீக்கிரமாக சாப்பிட்டு முடித்தேன்…அவர்கள் ஏதோ அவனிடம் சத்தம்போட்டு விட்டு சென்றுவிட்டார்கள்.
அதற்கு பின் ஜெயராம் என்னிடம் அதிகம் பேசவில்லை.
என்னை பலிசெலுத்த அனுமதிக்காததால் அவர்கள் இனத்தில் அவனுக்கு எதாவது சங்கடமோ என்னவோ….
என்னோடு அவன் கிராமத்தை கடந்து. பள்ளத்தாக்கை கடந்து ,பல குழிகளை கடந்து மெயின் ரோடு வரும் வரை என்னோடு வந்தான்.
என்ன பத்திரமாக அனுப்பி வைத்தான்.
கழுத்து அறுபட்டு தலைவேறு உடல்வேறாக ஆகியிருப்பேன்….கர்த்தருடைய இரக்கத்தால் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.

சங்கீதம்..18:5. பதாள கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது.மரண கண்ணிகள் என்மேல் விழுந்தது.
   தேவன் என்மேல் வைத்தஇரக்கம் மகா பெரியது








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக