ஞாயிறு, 6 ஜூலை, 2014

அது ஒருபேய்க் காலம்

           
  அது ஒருபேய்க் காலம்  

நான் எனது கம்பேனியில் வேலை
 பார்த்து கொண்டிருந்தேன்.
இரவு 11மணி இருக்கும். .நான் அவசரமாக அந்த ஆர்டரை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் அகவே.

எனக்கு உதவிக்கு இரண்டு நபர்கள்….
முதலாம் நபர் சுந்தரம் ஆசாரி.   
இரண்டாம் நபர் அருள்.  இவன் சின்ன பையன்..
நான் வெல்டிங் அடிக்க, சுந்தரம் ஆசாரி பூ வளைக்க,…

அருள் எடுபிடியாக நின்று கொண்டிருந்தான். அது இரும்பினால் கிரில் செய்யும் வேலை….இரவு வேலையானதால் லைட்டை வெளியே (கம்பேனிக்கு பின்புறம் )காற்றோட்டமாக வேலை செய்து கொண்டிருந்தோம்……

சுந்தரம் ஆசாரிக்கு வயிற்று பிரச்சனை,ஆகவே…. கொஞ்சம் அப்படி போயிட்டு வந்திடுதேன்….என்று சொல்லி விட்டு .பக்கத்தில் இருக்கும் இருண்ட வனப்பகுதிக்கு சென்றார்..
அது முட் புதர்களும் பனை மரங்களும், வாதமடக்கி மரங்களும் ,நிறைந்த பகுதி,…
தூர்ந்து போன ஒரு கிணரும் உண்டு……பகலிலே சாதாரனமாக பாம்பு நடமாடும் இடம் …..அந்த காலத்தில் எங்கள் ஊரில் யார்வீட்டிலும் கழிவரை கட்ட படவில்லை. ஆகவே எல்லோருமே திறந்த வெளி கழிப்பரைதான்.

சரி அதுபோகட்டும்

சுந்தரம் ஆசாரி போன சிறிது நேரத்தில் தலை தெரிக்க ஓடிவந்தார்…..அவர் உடல் நடுங்கிய படி இருந்துது..

என்னை பார்த்து….. அண்ணாச்சி……அண்ணாச்சி…..

என்ன ஆச்சி….. ..நான் பதறியபடி கேட்டேன்

பேய்..பேய் ……   …….அவர் திக்கி திணரினார்

அருள் பயந்து விட்டான்…..கண்கள் கலங்கி அழும் நிலமைக்கி வந்து விட்டான்..
நான் ஒரு டம்ளரில் தண்ணீர் அவருக்கு கொடுத்தேன்……

அப்படியே குத்த வைத்து உட்கார்ந்து விட்டார்..
பின்பு காலை முன்னால் நீட்டி கையை பின்னால் தரையில் ஊன்றியபடி…….முச்சி வாங்கியது…
என்னதான் ஆச்சி…?
சுந்தரம் ஆசாரி சொல்ல ஆரம்பித்தார்..

நான் போனேன்..

போய் உட்கார்ந்தேன்..அவ்வளவு தான்..
சரட்டுன்னு…. பக்கத்துல ஒரு சத்தம்….
திரும்பி பார்த்தேன்.வெள்ள சீலை கட்டுன ஒரு பொம்பள ஆள் நடந்து போகுது…கால்ல சலங்க கட்டிருக்கு..சிலுக் சிலுக்கு…ன்னு
 .பிச்சிப்பூ வாசம் அப்படியே
என்ன வந்து ஆமுக்கிட்டு….

என்னால தாங்க முடியல …ஒரே ஓட்டமா வந்திட்டேன்.

ஓ… இதான் கதையா……

நான் சொன்னேன்…….அது வேற எதாவது இருக்கும் அண்ணாச்சி..

சுந்தரம் ஆசாரி திரும்பி என்னை பார்த்தார்..
அவர்கண்களில் கோபம் இருந்தது..
அது…….அடா போய்யா நீயும் உன் விளக்கமும் என்பதுபோல் இருந்தது….
நான் ஒன்றும் சொல்ல வில்லை.
பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த என் மாமா முழித்துகொண்டார்.
ஏற்கனவே இங்கு நடந்ததை அவர் கவனித்து கொண்டு தான் இருந்திருக்கிறார்.


அவர்………
…ஏம்பா இன்னைக்கி வெள்ளி கிழமை .அதுவுமா .நீங்க எதுக்கு அந்த பக்கம் போறீங்க…

.கோவில்பட்டியா  கிணத்து பக்கம் இப்பவா போறது…இத்தனை வருஷம் ஆகியும் அவா துடியா இருக்காப்பா…….

கோவில்பட்டியாள்……….

எனக்கு குப்பென்று வியர்த்தது….
பல வருடங்களுக்கு முன் அடித்து கொலை செய்யபட்டு அவளை அந்த கிணற்றில் தூக்கி போட்டுவிட்டார்கள்.அவள் சொந்த ஊர்  கோவில் பட்டி .ஆகவே அவளை கோவில் பட்டியாள் என்றே அழைக்கின்றனர்..
அவா செத்து 20 வருடம் இருக்குமே.
இப்பவும் நடமாடுதாளா..?
சே பேயாவது ஒன்னாவது…இவர் எதையோ கண்டு பயந்திருக்கிறார்…
ஆனால் ஒன்று…. இனிவேலை செய்யமாட்டார்.ஆக வேலை முடிந்தது.
சரி நாளை பார்ப்போம்..
அவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

நான் என் ஸ்கூட்டரில் சுந்தரம் ஆசாரியை அவர்வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டேன்.
அருள்….. தனியாக இருக்கமாட்டேன் ,என்னை வீட்டில் கொண்டுபோய் விடுங்கள் என்றான் .அவனையும் அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டேன்…
எனக்கு மகா எரிச்சலாய் இருந்தது.
நாளை பார்ட்டிகாரனுக்கு என்ன பதில் சொல்வது …
அடச்சே. ஒரு பேய் என்னபாடு படுத்துது..

எனக்கு திடீர் என்று ஓர் எண்ணம் வந்தது .

மணியை பார்த்தேன் சரியாக 1மணி .
நாமே போய் பேயை பார்த்தால் என்ன….
இன்று வெள்ளிக்கிழமை.எப்படியும் நடமாட்டம் இருக்கும்

ஆகவே போவது…
போய் பேயை பார்ப்பது என முடிவெடுத்தேன்..
 டார்ச் லைட்டை எடடுத்து கொண்டு அந்த வனப்பகுதியை நோக்கி சென்றேன்..

பக்கத்தில் போக போக மனது கனத்தது..
பயமாகவும் இருந்தது….
அதோ அந்த மரத்தின் அடிதான் சுந்தரம் ஆசாரி சொன்ன இடம்….

நான் பக்கத்தில் போக உண்மையாகவே பயந்தேன்…
.கடவுளை நினைத்தேனா..,
 அல்லது ஜெபித்தேனா என்று சொல்ல முடியாத மனநிலை..
நெருங்கிவிட்டேன்…
கும் இருட்டாக இருந்தது …
டார்சச்லைட்டை எடுத்து அந்த மரத்தைநோக்கி அடித்தேன்.ஆனால்…….. டார்ச்லைட் எரியவில்லை…இருள் திடிரென்று பன்றிகளின் கதறல் சத்தம்……

நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு
 தெற்கு பகுதியில் ராமன்வீடு..
அவன் பாம்பு பிடிக்கும் வேலை செய்பவன்…
ஏகப்பட்ட பன்றி வளர்க்கிறான்…
திடிரென்று மொத்த பன்றிகளும் அவன் வீட்டில்
இருந்து வீரிட்டு கத்த ஆரம்பித்தது…

அது அமைதியாய் இருந்த அந்த இரவு நேரத்தில்.. அந்த திடீர் கத்தல் எனக்கு தொண்டைக்குளி வரையில் அடைத்து கொண்டது…
கிழக்கு பக்கத்தில் இருப்பது போலிஸ்க்காரன் சின்னப்பன் தோட்டம்…
அந்ந தோட்டத்திலும் ஒரு கிணறு அதிலும் ஒருபேய் உண்டு.. .

சின்னப்பன் வீடு கட்டும் போது அந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மொட்டை பனை நின்று கொண்டிருந்தது
.இடிவிழுந்ததில் அது பட்டு மொட்டையாகி விட்டது.
அந்த பனையை வெட்டும்போது ,பனை வீட்டைநோக்கி சரிவது போல இருந்திருக்கிறது .
பனை வெட்டு படும் போது வீட்டில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பனையின் தலைப்பகுதியில் கயிறு கட்டுவதற்காக ஒருவனை மேலே போய் கட்ட சொன்னார்கள்…
அவன்  பனையின் உச்சிக்கு போய் கயிறு கட்டும்போது,
 திடிரென்று வெட்டப்பட்ட இடத்தில்இருந்து பனை முறிந்து விட்டது.
ஏற்கனவே பாதி வெட்டப்பட்ட பனை முறிந்து விழவும்..
பனையில் கயிறு கட்டப்போனவன் பனைமரத்துடன் தரையில் மோதவும் அந்த இடத்திலயே அவன் உயிர் பிரிந்து விட்டது….

செத்து போன  அவனை தூக்கி கொண்டுபோய் அவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் போட்டு விட்டார்கள்….அந்த கிணற்று பக்கத்தில் போவதற்கு எல்லோருக்குமே பயம்..
அந்த தோட்டத்தை காவல் காப்பவர் துரைராஜ் என்பவர்…
இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் கழித்து  உச்சி மதியம் ,.
துரை ராஜ் கிணற்று பக்கத்தில் இருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்..கிணற்றுக்குள் தொம் என்று சத்தம்.என்ன இந்த சத்தம் என்று கிணற்றை எட்டிப்பார்த்தார்…
நடுகிணற்றில் நீள தலை முடியுடன் ஒரு தலை மட்டும் மிதந்து கொண்டிருந்திருக்கிறது..நீளமான முடிகள் நாலுபக்கமும் தண்ணீரில் அலைபாய்ந்து கொண்டிருந்தது….எட்டிப்பார்த்த துரைராஜ் ஒரே ஓட்டமாக  அலறியபடி ஒடிவந்தார்…
வந்தவர் காய்ச்சலில் விழுந்தார் .ஒருமாதம் படுக்கையில் இருந்தார்.

அவரை பேய் அடித்துவிட்டதாக சொன்னார்கள்….

இன்னொரு பெண் பேயும் அந்த தோட்டத்தில் உண்டு..

சின்ப்பனுக்கு ஒரு மகள் இருந்தாள்.அவள் யாரையோ காதலித்து இருக்கிறாள். 
சின்னப்பன் அவளை வேறு ஒருவருக்கு கட்டி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவே. அவள் வயலுக்காக  வாங்கி வைதிதிருந்த பூச்சிமருந்தை  எடுத்து குடித்து செத்துவிட்டாள்…..

அதன்பின் சின்னப்பனால் அந்த வீட்டில் இருக்கமுடியவில்லை.அவளும் பேயாய் மாறி அவர்களை தூங்கவிடவில்லை..ஆகவேதான் புது வீடு கட்டினான்…
அந்த வீடுகட்டும் போதுதான் பனை ஏறினவன் பனையோடு செத்தது…
ஆக இரண்டு பெண்பேய்கள் ஒரு ஆண்பேய் ,முன்று பேய்களும் மிக துடியாய் இருப்பதாக பேசிக் கொள்வார்கள்…

எனக்கு இந்த நேரத்தில் தானா இந்த மொத்த கதைகளும் நினைவுக்கு  வரவேண்டும்
…..முன்று பேய்களும் மொத்தமாக வந்தால் என்னசெய்வது..
காற்று மெதுவாக வீசியபடி இருந்தது.
வானம் மேகத்தால் மூடபட்டு இருந்தது..
நிலவு இருந்தாலும் கருமேகங்கள் சூழ்த்ததால் லேசான ஒளி மட்டுமே  இருந்தது …
இப்போது நான் மரத்துக்கு பக்த்தில்போய்விட்டேன் ..
சுற்றிலும்’ பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை ..யாரோ என்னை கவனிப்பது போல் இருந்தது. ..
என்தோளில் மெதுவாக யாரோ தடவுவதுபோல இருந்தது…

எனக்கு பின்னால் யாரோ நிற்கின்றனர் என்பதாக உணர்ந்தேன்..திரும்பி பார்க்க முடியவில்லை..
சிலையாக நின்றிருந்தேன்…

இந்த நேரம்பர்த்து டார்ச் லைட் செயல் இழந்தது எனக்கு எரிச்சலாக இருந்தது….  ஒரு நிமிடம் காற்று அசைவற்று இருந்தது. மீண்டும் லேசாக வீசியது..
அப்போது சுந்தரம் ஆசாரி சொன்ன அதே கிளிங்…கிளிங்.. சத்தம்
திடுக்கிட்டு திரும்பினேன் ..
குப்பொன்று பிச்சிப்பூ வாசம் என்னை மூடியது..
முச்சு முட்டியது ..சுவாசிக்க முடியாத அளவு வாசம் முட்டியது….அப்படியே அசையாமல் நின்நு கொண்டிருந்தேன்.. 

.உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வியர்வை ஆராய் ஓடியது..
மெதுவாக கீழே உடகார்ந்தவன் தலையை தூக்கிமேலே பார்த்ததேன். 

திடிரென்று மேகம் விலக நிலவு பளீரென்று ஒளி கதிரை வீசியது .
இப்போது மரத்தில் மேல்பாகம் நன்றாக மிக நன்றாக தெரிந்தது .

அங்கே நான்பார்த்த காட்சி .. …

நான் அதிர்ச்சியில் உறைந்தேன்….
……..மரத்தில் ….. …..


நிலவின் ஒளி மிகத்தெளிவாக காட்டியது.
அந்த மரம் முழுவதும் வெண்ணிற பூக்களால்
நிறைந்திருந்தது..
அது மஞ்சணத்தி என்ற மரம்..
அது இரவில்தான் பூக்குமாம்.
எனக்கு இப்போது எல்லாமே தெளிவாயிற்று……
காற்று வீசும் போது வாசனை அதிகமாக வருகிறது…
அப்படியானால் என் தோளை தொட்டது…………
அதுவும் காற்றின் வேலைதான்…
  நீளமாக வளர்ந்த செடியின் இலை
காற்றில் அசையும்போது……

நான் கேட்ட  கிளிங் சத்தம்….

இப்போது எனக்கு பயமே இல்லை……
இந்த சத்தம் எப்படி வந்தது..

மீண்டும்……… அந்த சத்தம் கேட்டது..
  கிளிங்..கிளிங்..
நான் சத்தம்வந்த திசையை கூர்ந்து உன்னிப்பாக நோக்கினேன்

இரண்டு கண்கள் …….பிரகாசமான ஒளியுடன்

அது இருண்ட புதருக்கு உள்ளே தெரிந்தது…
என் டார்ச் லைட்டை
உள்ளங்கையில் ஓங்கி அடித்தேன்
.இப்போது எரிந்தது.

அந்த கண்களை நோக்கி டார்ச் லைட்டை அடித்தேன்.

அது கழுத்தில் மணிகட்டிய கருப்பு எருமைமாடு .
அசையாமல் என்னையே பார்த்தவாரு….

ஒரு பெண் நடந்து போனாள் என்று சொன்னது…………
 அது அவரின் மனக்கிலேசமாய் இருக்கும்..…
எனக்கு உற்சாகமாய் இருந்தது..
இதை
யாரிடமாவது சொல்ல வேண்டுமே….

வேகமாக என் மாமாவிடம் ஓடினேன் .
அவரை தட்டி எழுப்பி நடந்ததை சொன்னேன்..
..பேயும் கிடையாது ஒண்ணும் கிடையாது ...
நீங்க வந்து  அந்த மரத்தை பாருங்கள் 
அப்பத்தான் தெரியும் என்று கட்டாய படுத்தினேன்.

அவரும் அரை குறை மனதுடன் வந்தார்..
நாங்கள் இருவரும் மீண்டும் மரத்தை நோக்கி நடந்தோம்.

இப்போது மீண்டும் நிலவு மேகத்துக்குள் மறைந்து கொண்டது…

இருள் சூழ்ந்து விட்டது.ஆனாலும்
 டார்ச்லைட்தான் இருக்கே……..

மரத்தைநோக்கி நடந்தோம்

மரத்தின் அடியில் நின்று கொண்டு மேல்நோக்கி பார்த்தேன் .

இருட்டிற்குள் ஒன்றும் தெரிய வில்லை
டார்ச்லைட்டை அடித்தேன்
அது பழைய படியும் வேலை செய்யவில்லை….

மீண்டும் உள்ளங்கையில் தட்டினேன்.அது எரிந்தது.

.மரத்தின் உச்சியை நோக்கி அடித்தேன்…
           திடுக்கிட்டேன்…..
அங்கே மரம் மொட்டையாய் இருந்தது….
 ஒரு பூ கூட இல்லை. …

திடுக்கிட்டு மாமாவைப் பார்த்தேன் ..

அவர் கண்கள்…..
அது அப்போது பார்த்த மாட்டின் கண்களைப் போல் பிரகாசமாய் இருந்தது….

திடீரென்று மல்லிகைப்பூ வாசம் என்னை சூழ்ந்து கொண்டது.

போய் விடுவோம் என்று நினைத்து முன்னே நடந்தேன்.
என் பின்னால் என் மாமா நடந்துவரும் சத்தம்கேட்டது

.மெதுவாக பார்த்தேன்..அது மாமா இல்லை…
அந்த கருப்பு மாடு வந்துகொண்டிருந்தது..
அப்போ மாமா  அவர் கொஞ்ச தூரத்தில் சிறு நீர் கழித்து க்கொண்டிருந்தார்




சுந்தரம் ஆசாரி உண்மை பெயர் மணி ஆசாரி
அருளுக்கு இப்போது மிகப்பொரிய குழந்தைகள் உள்ளது
என் மாமா காலமாகிவிட்டார்.
கோவில்பட்டியாள் பற்றிய எல்லாமே உண்மை.
சின்னப்பன் தோட்டம் இப்போது வேறு ஒருவர் வாங்கிவிட்டார்
துரை ராஜ் இப்பவும் இருக்கிறார்.
பனை மரம் முறிந்து விழுந்து இறந்தது உண்மை சம்பவம்.

அன்று நான் பயந்து  உண்மை..
மஞ்சணத்தி மரத்தில்பூக்களைப்பார்த்தபின்
நான் திரும்பி வந்து  என் மாமாவிடம்  கூறினேன்.
அவரும் என்னோடு வந்து பார்த்து உறுதி செய்தார்..
ஆக இந்த கதையின் உண்மையான பேய் , அந்த சூழ்நிலைதான்….
.மின்சாரம் குறைவாக உபயோகபடுத்பட்ட அந்த நாட்களில் இருளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்துது…
பெரியவர்கள் சொல்லும்  கதைகளும்..,
 இருளின் ஆதிக்கமும் எல்லோருக்கும்  இரவில் பயத்தை உண்டு பண்ணியது…
எல்லோரும் பயந்தார்கள்

மொத்தத்தில் அது ஒரு
 பேய்க்காலம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக