புதன், 2 ஜூலை, 2014

தென்மலை காட்டில் திகில் அனுபவம்

தென்மலை காட்டில் திகில் அனுபவம்

தென்மலையில் புதிய ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட
இருந்ததால் நான், என் மகன் ,என் மனைவி ,மற்றும் நன்பர் ஜோசப் ஆகிய நால்வரும் கடந்த சனிக்கிழமை தென்மலை சென்றோம்….
திருநெல்வேலியில் இருந்து  சபை அங்கத்தினர்கள் இரண்டு வேனில் முதலில் சென்று விட்டார்கள்.நாங்கள் ஒரு மணிநேரம் பிந்தி அதாவது ஒன்பது மணிக்கு கிளம்பினோம்.

 தென்மலையை அடைந்தவுடன் நான் செல்போனில் பாஸ்டரை தொடர்பு கொண்டு பேசமுயற்சி செய்தேன்.
டவர் சுத்தமாக இல்லை….நால்வர் செல்போனிலும் டவர் இல்லை…
.சரி விசாரித்து பார்ப்போம் என்று முயற்சி செய்தோம் எதுவும் பலனில்லை….
.ஒரு கருப்பசாமி கோயில் பக்கத்தில்தான் சர்ச் இருக்கிறது என சொல்லியது நினைவுக்கு வரவே கருப்பசாமி கோயிலை தேட ஆரம்பித்தோம்….
ஏகபட்ட கருப்பசாமி கோயில்கள் ..ஆனால் சர்ச் இல்லை….

 என்ன செய்வது என்று காரில் மெதுவாக பயனித்து கொண்டே விசாரித்தோம்…பலனில்லை….
.அப்போது தென்மலையும் முடிந்து ,அடுத்த எஸ்டேட் வந்து விட்டது..
அப்போது ஒரு அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது.அதில் வென்சர்எஸ்டேட் என்று எழுதபட்டிருந்தது..
என் மகன் இத….இத….தான் எதிர்பார்த்தேன் என்பதுபோல்   இந்த இடம்தான் அது என்று உறுதியிட்டான்…
.சரிபோவோம் என்று அறிவிப்பு பலகை காட்டிய திசையில் எங்கள் கார் விரைந்தது….
போக போக வேகம் குறைந்து ,கடைசியாக பாதை போக முடியாத அளவு சேதமடைந்து இருந்ததால் காரை நிறுத்தி விட்டோம்…….
கண்ணுக்கெட்டிய ,காதுக்கெட்டிய ,தூரம்வரை யாரும் இல்லை.(சுடு குஞ்சுகூட இல்லை..)

தூரத்தில் ஒரு பைக் நின்று கொண்டிருந்தது ஆனால் சொந்தக்காரன் இல்லாமல் சோகமாய் நின்று கொண்டிருந்தது…..

இந்த பைக்காரனை விட்டால் வேறு வழியில்லை..ஆகவே காத்திருந்தோம்.எங்கிருந்தோ அவனும் வந்தான்….அவனிடம் விசாரித்ததில் நீங்கள் இப்படியே போனால் நான்கு கிலோ மீட்டர் தான்..
 .300மீட்டர் மட்டும் காரை எப்படியாவது உருட்டிவிட்டீர்கள் என்றால் அதன்பின் நல்ல சாலை உண்டு….நீங்கள் பாதை மாறி வந்து விட்டீர்கள்…வந்த பாதையில் திரும்பிபோனால் பத்து கிலோமீட்டர் போக வேண்டும்.

..நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு காட்டில் மறைந்து விட்டான்….
கீழே சாலை படுமோசம் ,நேரமாகிகொண்டே இருந்தது….என் மனைவி திரும்ப போக வேண்டாம்..300மீட்டர் தானே.வெறும் கார் மட்டும் முதலில் போகட்டும்.கடினமான இடத்தை தாண்டியவுடன் காரில் ஏறிக்கொள்ளலாம் என்றாள்.
சரி என முடிவு செய்து காரை முதலில் அனுப்பினோம்.
100அடி சென்று கார் நின்று விட்டது.டிரைவர் சொல்லிவிட்டார்…
குண்டுகல்மேல் கார் பயனிக்காது .இதற்கு மேல் வர மாட்டேன்  என்று கூறிவிட்டார்.

சரி ஒன்று செய்வோம்…..(மகனையும் நன்பரையும் பார்த்து என் மனைவி கூறினாள் )நீங்கள் காரில் திரும்பபோய் சுத்தி வாருங்கள் .நாங்கள் 4கிலோமீட்ரை நடந்தே கடந்து விடுவோம் .என்றாள், ….
உடனே அவர்களும் திரும்ப சென்று விட்டார்கள்…….

நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் ..ஆள் நட மாட்டம் …யாருமே இல்லை…எனக்கு அப்போதுதான் தவறு செய்து விட்டதாக உரைத்தது….
நாங்கள் போகும் வழி சரியானதா என்றும். தெரிய வில்லை…
.பாதை பயங்கர மோசம்….
யாருமே நடக்காத பாதையாக இருந்தது….செங்குத்தாக மேல்நோக்கி சென்றதால் எனக்கு மூச்சு வாங்கியது..
மெதுவாக தாகம் எடுக்க ஆரம்பித்தது…
தண்ணீர் இல்லை…
என் மனைவி சர்க்கரை வியாதி உள்ளவள்…அவள் தண்ணீர் கேட்டால் என்ன செய்ய….
அடுத்து எதாவது மிருகம் வழி மரித்தால் என்ன செய்வது….?

உடனே நீளமான கம்பை ஒடித்து கையில் வைத்து கொண்டேன்….பொதுவாக பயனத்தில் எப்போதும் டார்ச் லைட்டும் சிறிய கத்தி ஒன்றும் என்னுடனே இருக்கும்….
இரண்டும் இன்று மிஸ்ஸிங்..
கடவுளை நினைத்துகொண்டு மலையேறினோம்…
.மெல்ல மெல்ல மனைவி சோர்வானாள்..
கொஞசம் ஓய்வெடுப்போம் என கூறி ஒரு கல்லில் அமர்ந்தேன்.சட்டைதொப்பலாக வியர்வையினால் நனைந்து விட்டது….
மிருகங்களின் சத்தம் எதாவது கேட்கிறதா என்று கவனித்து கொண்டே வந்தேன் . ..மிக தூரத்தில் காட்டுபண்ணி நின்று கெண்டிருந்தது.
மீண்டும் பயனித்தோம்.வழியிலே ஒருமரத்தில் அண்டிபழம் பழுத்து கிடந்தது.கிழே கிடந்த சிலதை எடுத்து தின்றேன்…முதலில் இனித்தது பின்பு அதன் புத்தியை காட்ட ஆரம்பித்தது.தொண்டை கறிக்க ஆரம்பித்து தாகம் பயங்கரமாகியது…….

.பாதை முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது…..என் மகனை அனுப்பி விட்டது மடத்தனமாக பட்டது…இனி நாங்கள் எப்படி சந்திப்பது…..
ஒருவரோடு ஒருவர் பேசவில்லை..நடந்து செல்வது சிரமமாக இருந்தது

ஒரு வளைவு…..அதை தாண்டியவுடன் ஒரு அதிசயம்…..இரண்டு பெண்மனிகள் வந்து கொண்டிருந்தார்கள்…
ஆஹா…அவர்களை பார்ப்பது தேவ தூதனை பார்ப்பது போலிருந்தது…..

என் கோலத்தை பார்த்து சிரித்தார்கள்.
அவர்கள் எங்கள் பக்கமாய் வந்த உடன் ,தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டேன்….இல்லை என்றார்கள்…..சரி…..எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள் ..
நாங்களும் எங்கள் கதையை பறைந்தோம்(அவர்கள் மலையாளமும் தமிழும் கலந்து கதைத்தார்கள்..)….

.அவர்கள் சிரித்து கொண்டே ….ஓ….அந்த பள்ளிக்கா…..?(ஆலயம்..)

செல்போனில் உங்கள் பாஸ்டரிடம் பேசுகிறீர்களா..? என்றார்கள்……அதான் டவர் இல்லையே என்றேன்…
.அந்த பெண்மணி இடுப்பில் இருந்து ஒரு செல்போனை எடுத்து யாரிடமோ பேசினாள்…
அவள் சொன்னாள் ..நீங்கள் கொஞ்ச தூரம் போங்கள்…(இன்னுமா…)

அங்கே முன்று ரோடு சந்திக்கும் .அங்கயே இருங்கள் .உங்களை அழைத்து போக ஆள் வரும் என்றாள்……..அன்பர்களே  எப்படினாலும் கிளைமாக்ஸ் சீன்ல கடவுள் ஆள் அனுப்பி வச்சிடுதாரு  பாருங்க……சூப்பரான கடவுள்….

அதே போல் காத்திருந்தோம் .15 நிமிடம்கழித்து ஒரு தம்பி பைக்ல வந்தான் …
என் மனைவியை முதலில் அனுப்பிவிட்டு பின் நானும் அவனுடன் சென்றேன்…
.சர்ச் எவ்வளவு தூரம் என்றேன்..பக்கத்தில்தான் என்றான்……….(அடா போங்கடா….) 
ஆனால் சரியான தூரம்…….முதலில் அவன் எங்களை அவன் வீட்டுக்கு அழைத்து சென்றான்….அவன் தாயார் அன்புடன் வரவேற்றார்கள் .
குடிக்க தண்ணீர் வேண்டும் என்றேன்..முதலில் உட்காருங்கள் என்றார்கள் .நான் ஒரு சேரில் அமர்ந்தேன்……

சில நொடிகளில் பூமி  அசைவது போல் இருந்தது….படார் என்று சத்தம் .என் தலையில் யாரே சம்மட்டியால்  தாக்குவது போலிருந்தது….
சுதாரித்து பார்த்தாலல்  நான் அமர்ந்த சேர் சுக்கல் சுக்கலாக உடைந்துது போனது 
,நான் மலைபாம்பு போல்தரையில் விழுந்து கிட்ந்தேன் .

என் மனைவிக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை…….


அட கடவுளே……..தூக்குங்கடா………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக