இம்மானுவேலின் தலையில் அவன் உட்கார்ந்து இருக்கும் சீட்டின் ஓரத்தில் இருக்கும் கம்பி இடித்துக் கொண்டிருந்தது.
தூக்க கலக்கத்தில் அந்த வேதனையை தாங்கிக் கொண்டான்
அவன் பயணித்த வேன் திருநெல்வேலி டவுன் லாலா சத்திர முக்கை தாண்டி தெற்கு பக்கமாக திரும்பியது.
அவன் கை கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி அதிகாலை ஒன்று.
முக்கூடலில் சினிமா இன்னிசை நிகழ்ச்சி முடித்துவிட்டு அவர்கள் குழுவாக திரும்புகிறார்கள்...
இம்மானுவேல் அந்த
குழுவில்கிட்டார் வாசிப்பவன், தேவைபட்டால் பாடவும் செய்வான். அவனுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லை.
அவன் மனைவியும் முன்பு கச்சேரியில் பாடியவள்தான். திருமணம் முடிந்த பின் அவள் மேடையில் பாடுவதை நிறுத்தி விட்டாள்.
ஒருவன் வருமானத்தில் ஏதோ குடும்பம் ஓடுகிறது.
வேன் ஒரு டீக்கடை முன் நிற்கிறது.
சிலர் டீ குடித்தபின் சிகிரெட்டை பற்ற வைத்து புகையை இழுத்து ஆகாயத்தில் ஊதி ஏதோ சுகமான இன்பம் பெறுகிறவர்கள் போல நடித்துக் கொண்டிருந்தார்கள்.….
அவனும் ஒரு காலத்தில் இப்படி ஊதினவன்தான்.அவன் மனைவி கண்டிப்பினால் அதை விட்டுவிட்டான்.
சிகிரெட் ஊதுவதில் அங்கே ஒரு போட்டி நடக்கிறது.
டிரம்மர் சதீஷ் சேட்டைக்கார பையன். அவன் தபேலா சங்கரிடம் போட்டி வைக்கிறான். அதாவது ஒரு கையில் சிகிரெட், மறு கையில் டீ தம்ளர்.
முதலில் சிகிரெட் புகையை ஒரு தம் உள்ளே இழுக்க வேண்டும். பின் ஒரு மடக்கு டீயை
குடிக்க வேண்டும்.பின்பு சில வினாடிகள் கழித்து உள்ளே போன புகையை வெளியே விடவேண்டும்.
இதை சதீஷ் சாதாரணமாக செய்து காட்டுகிறான். இப்போது சங்கரும் அதைப்போலவே செய்து காட்ட முயற்சிக்கிறான்.இருமல் வந்து திணறுகிறான். வாய்
வழியாகவும் மூக்கு வழியாகவும் புகை சிதறுகிறது.
எல்லோரும் சிரிக்கிறார்கள்…
இம்மானுவேல் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.
அவனுக்கு சிரிப்பு வரவில்லை…
எல்லோரும் வேனில் ஏறுகிறார்கள்.
இம்மானுவேலும் வேனில் ஏறி அமர்கிறான்.
மீண்டும் சிரிப்பு ,
காரணமில்லாமல் கத்துகிறார்கள். சந்தோஷம் போல நடிக்கிறார்கள்
இங்கே நட்பாக பழகுவதும் சிரிப்பதும் உண்மையில் நட்பினால் அல்ல.
எல்லாமே காகித பூக்கள்.
ஒரு உதாரணத்தை சொல்லலாம்.
அவன் குழு தலைவர் மகனுக்கு திருமணம் நடந்தது. அவர் நினைத்தார்: ஆர்டிஸ்ட் எல்லோரும் வருவார்கள் இலவசமாக கச்சேரி வைத்து விடலாம் என்று.
ஆனால் ஒருவரும் அன்று வரவல்லை.அவன்
மட்டுமே கிட்டாரோடு போய் நின்றான்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கன்கிராஜிலேஷன் என்ற ஆங்கில பாட்டை பாடி துவக்கி வைத்தான்.
காசு.காசு.காசு, காசு மட்டுமே இவர்களுக்கு தெரிந்த ஒன்று..
ஏதோ பேசிகொள்வார்கள் ,சிரித்துக்கொள்வார்கள். அவ்வளவே .
நட்பு என்று எதுவும் இங்கே இல்லை….
காசு மனிதனை நடிக்கவைக்கிறது.
அதற்கு நட்பு என்று பொய்யாய் பெயர் சொல்கிறது.
அது பாசம் காட்டுவது போல நடிக்கிறது.
உதவி செய்வது போல நடிக்கிறது.
அதிகமாய் புகழுகிறது. ஆனால் காசு வராது என்றால் எல்லாமே மறைகிறது.
வேறுபக்கம் முகத்தை திருப்புகிறது. யாரோ என்று ஒதுங்கி போய்
விடுகிறது.
முன் காலத்தில் மனிதன் இயற்கையோடு ஒட்டி இருந்தான். அவனுக்கு
காசு முக்கியமாக இல்லை.மழை பெய்தால் சாப்பாடு கிடைக்கும்.ஆகவே உயிர் வாழ இயற்கையை நேசித்தான்.
அதனிடம் பல வகையில் பாசம் காட்டினான்.அந்த பாசத்திற்கு பண்டிகை
என்று பெயர் சூட்டினான்..
இன்று மேல் அதிகரியின் தயவு இருந்தால்தான் காசு கிடைக்கும்.
காசு இருந்தால்தான் உயிர்வாழ முடியும்
ஆகவே நடி..நிறைய நடி.நன்றாக நடித்து காசு சம்பாதி.
உண்மை முகத்தை காட்டுபவர்கள் கோபக்காரார்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இம்மானுவேல் கோபக்காரன்தான்.அவனுக்கு நடிக்க பிடிப்பதில்லை.
அவன் வீடு வந்துவிட்டது. மெயின் ரோட்டில் இறக்கி விடுகிறார்கள் .
அவன் இறங்கி நடந்து வீட்டை நோக்கி போகிறான்.
அவன் ஊர் ,நகரமாக மாறிக்கொண்டிருக்கும் ஒருகிராமம்.
தெரு அமைதியாக தூங்குகிறது..
நாய்கள் இம்மானுவேலைக் கண்டவுடன் எழுந்து குரைக்கவா, வேண்டாமா :என்று யோசிக்கிறது.
தெரிந்தவன்தான் வருகிறான் என்றவுடன் மீண்டும் சுருண்டு தூங்குகிறது.
அவன் வீட்டின் அருகில் வந்துவிட்டான். இது அவன் முன்னோர் கட்டிய வீடு.
ரொம்ப பழையது. அவன் வருமானத்திற்கு புதிய வீடு கட்டுவது என்பது கனவுதான்.
வீட்டிற்கு அருகே வந்து விட்டான்….
கதவில் கைவைத்து மெதுவாக தட்டுகிறான்.
அவனுக்கு இப்படி மெதுவாக தட்டுவதில் ஒரு இன்பம் இருக்கிறது.
விரலை மடக்கி கதவில் டொக்..டொக்… இரண்டு தட்டில் அவன் மனைவி என்ன ..?.என்று சத்தம் கொடுப்பாள்…
மனைவி தூங்காமல் தனக்காக காத்திருக்கிறாள் என்று நினைப்பதில் அவனுக்கு ஒருசுகம்.
அவன் தட்டுகிறான்……
டொக்..டொக்..டொக்….டொக்………பதில் வரவில்லை..
மீண்டும் கொஞ்சம் வலுவாக தட்டுகிறான்…
பதில் இல்லை.
அவனுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது..
எப்போதுமே இரண்டு முறை தட்டினாலே
அவன் மனைவி என்ன ..?.என்று சத்தம் கொடுப்பாள்…
.
சின்னதாய் ஒரு குழப்பம்
உடலுக்கு சரியில்லாமல் மயக்க நிலையில் இருக்கிறாளா.?
கதவிடுக்கில் வாய் வைத்து அவள் பெயர் சொல்லி கூப்பிடுகிறான்….
யாழினி…..யாழினி….
இது அவள் பெயர்.. யாழினியின் தகப்பனார் தமிழ் ஆசிரியர்..ஆகவே இப்படி ஒரு பெயர்….
பதில் வரவே இல்லை.
உள்ளே எட்டிப் பார்த்தால் தெரிந்து போகும் .
வீட்டை சுற்றி வந்து, அடைத்திருந்த ஜன்னல் கதவில் கை வைத்து தள்ளுகிறான்.
அது திறந்து கொண்டது.
படுக்கை தெளிவாக தெரிகிறது.
அவன் மனைவி அங்கு இல்லை.
உள்ளே எட்டிப் பார்த்தால் தெரிந்து போகும் .
வீட்டை சுற்றி வந்து, அடைத்திருந்த ஜன்னல் கதவில் கை வைத்து தள்ளுகிறான்.
அது திறந்து கொண்டது.
படுக்கை தெளிவாக தெரிகிறது.
அவன் மனைவி அங்கு இல்லை.
அவனுக்கு பகீர் என்று மின்னல் தாக்குவது போல உணர்வு.
குப்பென வியர்க்கிறது.
எங்கே போய்விட்டாள்..? ஒரு வேளை சுகம் இல்லாமல் மருத்துவ மனைக்கு சென்று விட்டாளா..?
பக்கத்து வீட்டில் கேட்டால் தெரியும்.
யோசித்தவாறு மீண்டும் முன் வாசல் அருகில் வருகிறான்.
நின்று யோசிக்கிறான்…..
எப்படி கேட்பது…?
வேண்டாம் .சற்று பொறுத்து
கேட்போம்.
இப்போது வீட்டுக் கதவை திறக்க வேண்டும்.
எப்படி திறப்பது !
வீட்டு சாவியை தேட வேண்டும்.
மீண்டும ஜன்னல் அருகே போய் உள்ளே உற்றுப் பார்க்கிறான்.
வீட்டின் உள் கதவு சாத்தபட்டிருக்கிறது.வெளிக்கதவு மட்டும் உள் பக்கமாக பூட்டப் பட்டிருக்கிறது.
வெளிக் கதவை திறப்பது வெகு சிரமம் இல்லை.
கதவுக்கு அருகில் வந்து, நிலைக்கு மேல் கையை விட்டு கொஞசம் தம் பிடித்து விரலை உள்ளே செலுத்தி ,விரலால் நெம்பி தாப்பாளை விடுவிக்கிறான்..
கதவு திறந்து கொள்கிறது.
இம்மானுவேலுக்கு யாழினி மேல் கோபம் வந்தது….
எதாவது காரியம் நடந்திருந்தால் உடனே அவனுக்கு செல்போனில் பேசி இருக்கலாம்.
ஏன் அப்படி செய்யவில்லை..யோசித்தவாறு படுக்கையில் மேல் உட்காருகிறான்…
படுக்கை விரித்தவாறு இருக்கிறது. செல்போன் தலையணைக்கு பக்கத்தில் இருக்கிறது.
அவனுக்கு குழப்பமாக இருக்கிறது.
வெளியே வந்து நிற்கிறான்.
பக்கத்து வீட்டில் கேட்கலாமா..? அப்போது திடிரென்று பக்கத்து வீட்டு வெளி லைட் எரிகிறது.
கதவை திறந்து யாரோ வருகிறார்கள்.
சிறு பிள்ளை ஒன்று வெளியே வருகிறது.ஓரமாக சிறுநீர் கழிக்கிறது….அந்த பிள்ளயைின் பாட்டி அருகே நிற்கிறாள்.
அவன் மெதுவாக அருகே செல்கிறான்.
பாட்டி இம்மானுவேலை பார்க்கிறாள்.ஆனால் எதுவும் சொல்லாமல் உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டாள்…
அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது…
இவர்களுக்கு தெரியாமல் எதுவும் இங்கு நடக்க வாய்ப்பில்லையே!
அவன் இருப்பது சிறு குடியிருப்புகள் நிறைந்த பகுதி.
எல்லோர் வீட்டில் நடப்பதும், எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இம்மானுவேல் வீட்டில் என்ன நடந்தது.?
பேசாமல் உள்ளே போய் கதவை அடைத்துக்கொண்டான்.
என்ன செய்வது..?
அவள் செல்போனை செக் பண்ண வேண்டும்.
யாருக்கு கடைசியாக பேசினாள்.? பார்க்கிறான்..
நேற்று அவள் தம்பியுடன பேசி இருக்கிறாள்.அதன் பின் கடைசியாக இம்மானுவேலிடம்
தான் இரவு பத்து மணிக்கு பேசி இருக்கிறாள்.
வேறு விபரம் இல்லை…
படுக்கையில் சரிகிறான்…..கடவுளே…
திகிலுடனும் ,பயத்துடனும்
எப்படியோ தூங்கி
இருக்கிறான்.
காலை ஆறு மணிக்குதான் விழிப்பு வந்தது..
எழுந்து வெயியே வந்து தெருவைப் பார்க்கிறான். எல்லோரும் சகஜமாக இருக்கின்றனர்.குறிப்பாக பக்கத்து வீடுகளில் யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை..
இது அவனுக்கு இன்னும் பயமாக இருக்கிறது.
என்ன நடந்தது?
ஒருவேளை ஊருக்கு போய்விட்டாளோ..?
“யாழினி’ கன்யாகுமரியை சேர்ந்தவள்……
இம்மானுவேல் யாழினி அம்மாவுக்கு போன் செய்கிறான்…
ஏதோ கேட்டு சமாளித்து விட்டு போனைக் கட் பண்ணி…யோசிக்கிறான்.
யாழினி
அம்மா அதாவது அவன் மாமியார்..சாதாரணமாக பேசுகிறார்.
அவன் மனைவியை பற்றி எதுவும் கேட்கவில்லை..அவன் இன்னும் குழப்பமடைகிறான்.
கடைசியாக அவர் பேசியதுதான் அவன் தலையில் சம்மட்டி அடியாய் விழுந்தது.
யாழினி எப்படி இருக்கிறாள் ?
நன்றாக இருக்கிறாள் என்று சொல்லி சமாளித்துவிட்டான்….
இப்போ என்ன செய்வது?
பக்கத்து வீட்டுக்கு இந்த விஷயம் தெரியால் இருப்பது நல்லது அல்ல.
நாளைக்கு யாழினியை பற்றி எதாவது விபரீதமாக கேள்விப்பட்டால் , ஏன் உடனடியாக யாரிடமும் சொல்லவில்லை என்ற கேள்வி வரும்.
ஆனால் இதை யாரிடம் எப்படி ஆரம்பிப்பது.
ஒரு பெண்ணிடம் சொன்னாலே விஷயம் ஊருக்குள் தீயாய் பரவி விடுமே.
அக்கம் பக்கத்து பெண்களை பற்றி கொஞ்சம் யோசித்தான்.
மங்களம் அக்காதான் சரியான ஆள். யாழினி அவளிடம்தான் அதிக ஒட்டுதலாய் இருப்பாள்.அவளிடமே கேட்கலாம்…என்று முடிவுடன் அவள் வீட்டுக்கு போனான்.
மங்களம் அக்கா வீட்டை பெருக்கிக் கொண்டிருந்தாள்..இம்மானுவேலை கண்டவுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…
அக்கா..!
என்ன மானு…(அங்கு எல்லோரும் அவனை அப்படித்தான் அழைப்பார்கள்..)
அக்கா யாழினி வந்தாளா..?
இல்லியேப்பா..
அக்கா..நேத்து நைட் கச்சேரி போயிட்டு நான் வர்றப்போவே அவள் விட்ல இல்லக்கா..
இதை சொல்லி முடிப்பதற்குள் வாய் காய்ந்து நாக்கு உளறியது.
ஏன்னப்பா சொல்ற! மங்களம் விக்கித்தாள்
ஆமாக்கா, யாழினியை காணோம்.
என்னப்பா…நேத்து நைட்ல அவா எங்கிட்ட பேசிகிட்டுதானே படுக்கப் போனா….
ஒன்னும் புரியலியே….ஒருவேளை ஊருக்கு போயிருப்பாளோ..?
மங்களம் யோசித்தாள்,
இம்மானுவேல் பதில் சொன்னான்..அவா அம்மாகிட்ட பேசினேன் க்கா…
என்ன சொன்னாங்க..?
ஒன்னும் புரியலியே….ஒருவேளை ஊருக்கு போயிருப்பாளோ..?
மங்களம் யோசித்தாள்,
இம்மானுவேல் பதில் சொன்னான்..அவா அம்மாகிட்ட பேசினேன் க்கா…
என்ன சொன்னாங்க..?
நான் யாளினியை பற்றி கேட்கல....சும்மா விசாரிச்சேன்.பதிலுக்கு அவங்க யாழினியை நல்லா இருக்காளான்னு கேட்டாங்க.,
ஐய்யோகடவுளே…மங்களம் படபடத்தாள்.
யாளினி நல்ல பிள்ளைப்பா.வெளியே போய் நல்லா தேடு..நாலு பேருகிட்ட விசாரி.
அதுக்கு அப்புறமா ஒரு முடிவ எடு…நாலு போரு நாலுவிதமா பேசுவாங்க..ஜாக்கிரதைப்பா..
ஐய்யோகடவுளே…மங்களம் படபடத்தாள்.
யாளினி நல்ல பிள்ளைப்பா.வெளியே போய் நல்லா தேடு..நாலு பேருகிட்ட விசாரி.
அதுக்கு அப்புறமா ஒரு முடிவ எடு…நாலு போரு நாலுவிதமா பேசுவாங்க..ஜாக்கிரதைப்பா..
மங்களத்திடம் சொல்லியாகிவிட்டது. இனி ஊர் முழுக்க செய்தி பரவலாம் .
சரி..முடிந்தது இங்கும் இல்லை.எங்கு போய் தேட?
யாழினி அழகானவள்…..மேடை பாடகியாய் இருக்கும்போது அவளுக்கு பல இரசிகர்கள்.ஆனாலும்
சரி..முடிந்தது இங்கும் இல்லை.எங்கு போய் தேட?
யாழினி அழகானவள்…..மேடை பாடகியாய் இருக்கும்போது அவளுக்கு பல இரசிகர்கள்.ஆனாலும்
இம்மானுவேல் தன் காதலை சொன்னவுடன்.அவளும் சம்மதித்தாள்.
யாழினியின் தகப்பன் ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இம்மானுவேல் வேறு வேலை தேடிக்கொண்டு கச்சேரியிலும் வாசிப்பேன் என்று உறுதி கொடுத்த பின்தான் திருமணத்திற்கு சம்மதித்தார்.
யாழினியின் தகப்பன் ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இம்மானுவேல் வேறு வேலை தேடிக்கொண்டு கச்சேரியிலும் வாசிப்பேன் என்று உறுதி கொடுத்த பின்தான் திருமணத்திற்கு சம்மதித்தார்.
யாழினி வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்திருப்பாளோ.!
இப்படி நினைக்கும்போதே மனது கசந்தது.
சே அப்படியெல்லாம் இருக்காது.
ஒருவேளை வேறு யாராவது ஏற்கனவே அவளை ஒருதலையாய் காதலித்திருந்தவன் இப்போது ஆள் வைத்து கடத்தி இருப்பானோ!
சே… இப்படியெல்லாம் யோசிக்கவே கடினமா இருந்தது.
இப்படி நினைக்கும்போதே மனது கசந்தது.
சே அப்படியெல்லாம் இருக்காது.
ஒருவேளை வேறு யாராவது ஏற்கனவே அவளை ஒருதலையாய் காதலித்திருந்தவன் இப்போது ஆள் வைத்து கடத்தி இருப்பானோ!
சே… இப்படியெல்லாம் யோசிக்கவே கடினமா இருந்தது.
அவன் மூன்று வருடம் அதே காதலுடன் இருந்திருப்பானா..? ஒருவேளை பழிவாங்க இப்படி செய்திப்பானோ…?
அப்படியானால் அது யாராக இருக்கும்.
யாழினியை இதற்குமுன் யாராவது காதலித்திருப்பார்களா.? அதை பற்றி யாரிடம் கேட்பது?
யாழினி இருக்கிறாளா இல்லை செத்துவிட்டாளா.?
எங்கே போய் தேடுவது..? துக்கம் அழுகையாய் வந்தது.
அப்படியானால் அது யாராக இருக்கும்.
யாழினியை இதற்குமுன் யாராவது காதலித்திருப்பார்களா.? அதை பற்றி யாரிடம் கேட்பது?
யாழினி இருக்கிறாளா இல்லை செத்துவிட்டாளா.?
எங்கே போய் தேடுவது..? துக்கம் அழுகையாய் வந்தது.
யாழினி முதலில் பாடிக்கொண்டிருந்த இசை குழுவின் தலைவர் முத்து அண்ணனிடம் கேட்டால் தெரியும்.
முத்து நல்ல மனிதர்.
கோபம் என்பது அறியாதவர்.எல்லோரையும் சமமாக பாவிக்க தெரிந்த நல்ல மனிதர்….
முத்து நல்ல மனிதர்.
கோபம் என்பது அறியாதவர்.எல்லோரையும் சமமாக பாவிக்க தெரிந்த நல்ல மனிதர்….
அவர் இப்போது கச்சேரி எடுத்து நடத்தவில்லை. பக்கவாதம் அவரை படுக்கையில்போட்டு விட்டது.
மெதுவாக எழுந்து நடமாடுகிறார்.
அவரை போய் பார்த்தால் விபரம் தெரியும்….
இம்மானுவேல் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு
முத்து அண்ணனை தேடிப்போனான். முதலில் அவரைப் பற்றி விசாரித்துவிட்டு மெதுவாக யாழினியை பற்றி சொன்னான்.
மெதுவாக எழுந்து நடமாடுகிறார்.
அவரை போய் பார்த்தால் விபரம் தெரியும்….
இம்மானுவேல் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு
முத்து அண்ணனை தேடிப்போனான். முதலில் அவரைப் பற்றி விசாரித்துவிட்டு மெதுவாக யாழினியை பற்றி சொன்னான்.
முத்து அதிர்ந்தார்.
என்ன தம்பி சொல்ற.யாழினி நல்ல பொண்ணுப்பா
.அவ என் மகள் மாதிரி.நீ நினைப்பது போல ஒன்றும் நடந்திருக்காது.
ஆனா அவள் காணாமல் போனது மற்றவர்களுக்கு தெரிந்தால் நாக்கு கூசாமல் பல விதமா பேசுவாங்க.
கச்சேரில பாடுற பொண்ணுதானே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் என்பார்கள்…
என்ன செய்ய..உலகம் இப்படித்தான்..
நீ இதை தாங்கத்தான் செய்யனும்.
என்ன தம்பி சொல்ற.யாழினி நல்ல பொண்ணுப்பா
.அவ என் மகள் மாதிரி.நீ நினைப்பது போல ஒன்றும் நடந்திருக்காது.
ஆனா அவள் காணாமல் போனது மற்றவர்களுக்கு தெரிந்தால் நாக்கு கூசாமல் பல விதமா பேசுவாங்க.
கச்சேரில பாடுற பொண்ணுதானே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் என்பார்கள்…
என்ன செய்ய..உலகம் இப்படித்தான்..
நீ இதை தாங்கத்தான் செய்யனும்.
எனக்கு மனசுக்குள்ள அவளுக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னு தோணுதுப்பா,
நீ அவ கூட சண்டைகிண்ட போடலியே.
சே… எங்களுக்குள்ள இது வரைக்கும் சின்ன மனக்கசப்பு கூட வந்ததில்லையே…
இவரிடம் எந்த தகவலும் இல்லை.ஆனால்’ ஊராருக்கு தானே
நீ அவ கூட சண்டைகிண்ட போடலியே.
சே… எங்களுக்குள்ள இது வரைக்கும் சின்ன மனக்கசப்பு கூட வந்ததில்லையே…
இவரிடம் எந்த தகவலும் இல்லை.ஆனால்’ ஊராருக்கு தானே
வலிய போய் தகவல் சொல்வது போல இருந்தது.
இம்மானுவேல் மதியம் இரண்டு மணிக்கு வீட்டீற்கு வந்தான்.
வீட்டு வாசலில் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.
நிறைய பேர் அதிலிருந்து இறங்கி கொண்டிருந்தனர்.
உற்றுக் கவனித்தான்.அது.மாமியார்..அடுத்து யாழினியின் அண்ணன்.
இன்னும் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள்.
அனைவர் முகத்திலும் கலவரத்தின் சாயல் இருந்தது. இம்மானுவேல் பயந்தான்.
இம்மானுவேல் மதியம் இரண்டு மணிக்கு வீட்டீற்கு வந்தான்.
வீட்டு வாசலில் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.
நிறைய பேர் அதிலிருந்து இறங்கி கொண்டிருந்தனர்.
உற்றுக் கவனித்தான்.அது.மாமியார்..அடுத்து யாழினியின் அண்ணன்.
இன்னும் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள்.
அனைவர் முகத்திலும் கலவரத்தின் சாயல் இருந்தது. இம்மானுவேல் பயந்தான்.
இவர்கள் எதுக்கு இங்கே வந்தார்கள்…
தற்செயலாக வந்தார்களா இல்ல யாழினி காணாமல் போனது தெரிந்து வந்தர்களா.
கலவரத்துடன் அவர்களை நெருங்கினான் இம்மானுவேல்..
முதலில் யாழினியின் அண்ணன்தான் பேசினான்..
யாழினிக்கு என்ன ஆச்சு..?
தற்செயலாக வந்தார்களா இல்ல யாழினி காணாமல் போனது தெரிந்து வந்தர்களா.
கலவரத்துடன் அவர்களை நெருங்கினான் இம்மானுவேல்..
முதலில் யாழினியின் அண்ணன்தான் பேசினான்..
யாழினிக்கு என்ன ஆச்சு..?
சாராய வாடை முகத்தில் அடித்தது.குடித்துவிட்டு வந்திருக்கிறான். அப்படியென்றால் சண்டை போடவேண்டும் என்பது அவன் நோக்கமாக இருக்கலாம்..இப்போதுதான் நாம் அமைதியாக இருக்கவேண்டும் என்று நினைத்தான்..
இம்மனுவேலின் அமைதி யாழினி அண்ணனுக்கு இன்னும்
இம்மனுவேலின் அமைதி யாழினி அண்ணனுக்கு இன்னும்
கோபத்தை ஏற்படுத்தியது…
யாழினிக்கு என்ன ஆச்சு..அவன் கத்தினான். மெல்ல கூட்டம் கூடியது..ஊரார் உற்சாகமாக சண்டையை காண ஆவலானார்கள்.சுற்றி நின்று கவனித்தார்கள்.
மங்களம் அக்கா இடையில் வந்தாள்.
யாழினிக்கு என்ன ஆச்சு..அவன் கத்தினான். மெல்ல கூட்டம் கூடியது..ஊரார் உற்சாகமாக சண்டையை காண ஆவலானார்கள்.சுற்றி நின்று கவனித்தார்கள்.
மங்களம் அக்கா இடையில் வந்தாள்.
என்ன ஆச்சுண்ணு அவனை ஏன் கேட்கிறீங்க..அவன் கச்சேரிக்கு போயிட்டு சாமத்தில வந்திருக்கான் .
வந்ததும் கதவை தட்டுனா இவள் இல்ல…
அதுதான் எங்கிட்ட காலையிலே வந்து சொன்னான்
வந்ததும் கதவை தட்டுனா இவள் இல்ல…
அதுதான் எங்கிட்ட காலையிலே வந்து சொன்னான்
…நான்தான் அவனை தேடிப்போக சொன்னேன்….வெளியே போயிட்டு இப்பத்தான் வந்திருக்கான்.
அதுக்குள்ள நீங்க வந்து நிக்கீங்க.
ஆமா உங்களுக்கு எப்படி இந்த விஷயம தெரியும்..?
அதுக்குள்ள நீங்க வந்து நிக்கீங்க.
ஆமா உங்களுக்கு எப்படி இந்த விஷயம தெரியும்..?
மங்களம் சத்தமாக பேசினாள் . அதுகோபமா இல்ல நடிப்பா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மாதிரி சமயத்தில் சத்தமிடுதல் எதிரியை பயப்பட செய்யும்.சத்தம் ஒரு வகையான பெலனே.அது ஒரு ஆயுதம். சண்டையில் யார் அதிகமாக கத்துகிறர்களோ அவர்கள் பக்கமே
இந்த மாதிரி சமயத்தில் சத்தமிடுதல் எதிரியை பயப்பட செய்யும்.சத்தம் ஒரு வகையான பெலனே.அது ஒரு ஆயுதம். சண்டையில் யார் அதிகமாக கத்துகிறர்களோ அவர்கள் பக்கமே
ஜெயிக்கும். பெண்களுக்கு இது புரிந்த ஒன்று.
அங்கே வந்திருந்த பெண்களும் இதே முறையை பின்பற்றினார்கள்.
சத்தமிட்டார்கள்.அழுதார்கள்..கத்தினார்கள்
அங்கே வந்திருந்த பெண்களும் இதே முறையை பின்பற்றினார்கள்.
சத்தமிட்டார்கள்.அழுதார்கள்..கத்தினார்கள்
தெரியாம எங்க போகும்?…எங்களுக்கும் நாலு சனம் இந்த ஊருல இருக்கத்தான் செய்யுது:
நான் அப்பவே சொன்னேன்…கச்சேரி பன்றவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி கெடுக்காதீங்கண்ணு.கேட்கல.இப்போ அனுபவிக்கிறாங்க…..ஒப்பாரி வைத்தாள்.
மங்களம் அக்கா வேகமாக திருப்பி தாக்கினாள்.
நான் அப்பவே சொன்னேன்…கச்சேரி பன்றவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி கெடுக்காதீங்கண்ணு.கேட்கல.இப்போ அனுபவிக்கிறாங்க…..ஒப்பாரி வைத்தாள்.
மங்களம் அக்கா வேகமாக திருப்பி தாக்கினாள்.
கச்சேரில பாடிக்கிட்டு இருக்கிறவள கச்சேரிக்காரன்தான் கல்யாணம் முடிப்பான்…..
நீங்க அதை பத்தி இப்ப பேசி என்ன செய்ய போறீங்க…
உங்க பொண்ணு காணாம போனது நிசம்…
முதல்ல அத தேடிப் பாருங்க.
அதவிட்டுட்டு அது சூத்த இது சூத்தண்ணு போசாதீங்க..
நீங்க அதை பத்தி இப்ப பேசி என்ன செய்ய போறீங்க…
உங்க பொண்ணு காணாம போனது நிசம்…
முதல்ல அத தேடிப் பாருங்க.
அதவிட்டுட்டு அது சூத்த இது சூத்தண்ணு போசாதீங்க..
இம்மானுவேலின் மாமியாயார் ஓவென அழ ஆரம்பித்தார்..கூட வந்திருக்கின்ற பெண்கள் அவளை சமாதானப்படுத்தினர்..மொத்தத்தில் அங்கு சத்தம் அதிகமானது..
இம்மானுவேலின் வீட்டிற்குள் வந்தவர்கள் யாரும் போகவில்லை.
ஆத்திரம் தெருவில் சண்டையாய் மாறி சத்தம் அதிக மானது.இம்மானுவேல் பேசாமல் இருந்தான்.
மங்களம் அக்கா அவனுக்கு சப்போர்ட் பண்ணி சத்தத்தை உயர்த்தினாள்.அவளும் கத்தினாள்..
ஆத்திரம் தெருவில் சண்டையாய் மாறி சத்தம் அதிக மானது.இம்மானுவேல் பேசாமல் இருந்தான்.
மங்களம் அக்கா அவனுக்கு சப்போர்ட் பண்ணி சத்தத்தை உயர்த்தினாள்.அவளும் கத்தினாள்..
இது வரைக்கும் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மங்களத்தின் புருஷன் மனோகரன்அதிரடியாய் தன் வாயை திறந்தான்.
அவன் சத்தம் ஏற்கனவே அதிரும். மெதுவாக பேசவே தெரியாதாவன்..
அவன் சத்தம் ஏற்கனவே அதிரும். மெதுவாக பேசவே தெரியாதாவன்..
இங்க பாருங்க .இங்க வந்து சத்தம் போடுறத நிப்பாட்டுங்க .
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடுங்க.
அவங்க விசாரிப்பாங்க.நீங்க வெளியூர்காரங்க உங்க கஷ்டம் எங்களுக்கும் புரியுது. அனால் அதுக்காக வார்த்தையை விட்டுறாதீங்க. அது இரண்டு பேருக்கும் நல்லதில்ல..மனோகரன் சொன்னது நியாயமாக பட்டது.அவனின் சத்தம் அவர்களை அடக்கி அமர்த்தியது.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடுங்க.
அவங்க விசாரிப்பாங்க.நீங்க வெளியூர்காரங்க உங்க கஷ்டம் எங்களுக்கும் புரியுது. அனால் அதுக்காக வார்த்தையை விட்டுறாதீங்க. அது இரண்டு பேருக்கும் நல்லதில்ல..மனோகரன் சொன்னது நியாயமாக பட்டது.அவனின் சத்தம் அவர்களை அடக்கி அமர்த்தியது.
.கூட்டம் அமைதியானது..
இம்மானுவேலுக்கு மகா பெரிய அவமானமாய் இருந்தது….ஊரே தன் முகத்தில் துப்புவது பால உணர்ந்தான்.வெட்கி தலை குனிந்தான்.பார்வை மங்கலாய் தெரிந்தது.கண்களில் எப்போதும் கண்ணீர் தேங்கியே இருந்தது
இம்மானுவேலுக்கு மகா பெரிய அவமானமாய் இருந்தது….ஊரே தன் முகத்தில் துப்புவது பால உணர்ந்தான்.வெட்கி தலை குனிந்தான்.பார்வை மங்கலாய் தெரிந்தது.கண்களில் எப்போதும் கண்ணீர் தேங்கியே இருந்தது
மங்களம் அவர்களை அவள் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றாள்…சீக்கிரமாக அவர்களுக்கு காப்பி போட்டுக் கொடுத்தாள்.. இம்மானுவேலின் வீட்டிற்குள்ளே அவர்கள் யாருமே போகவில்லை..
மங்களத்தின் புருஷன் சட்டையை மாட்டிக்கொண்டு வந்து இம்மானுவேலையும் யாழினியின் அண்ணனையும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனான்.
.போலிஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது…இம்மானுவேல் பயந்தான்.
.போலிஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது…இம்மானுவேல் பயந்தான்.
ஸ்டேஷன் வாசலில் இரண்டு போலிஸ் காரர்கள் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர்…மற்ற போலிஸ்காரர்கள் அவரவர் எதாவது வேலையை செய்து கொண்டு இருந்தார்கள் . கொஞ்ச நேரத்தில் பரபரப்பு அடங்கியது.
ஸ்டேஷன் அமைதியானது..அந்த அமைதிக்கும் இம்மானுவேல் பயந்தான்.
நேற்று சரியான தூக்கம் இல்லை. .முகச்சவரம் செய்து கொள்வில்லை. யோசித்து யோசித்து முகம் சுருங்கி போய் இருந்தது. முடி கலைந்திருந்தது.
ஸ்டேஷன் அமைதியானது..அந்த அமைதிக்கும் இம்மானுவேல் பயந்தான்.
நேற்று சரியான தூக்கம் இல்லை. .முகச்சவரம் செய்து கொள்வில்லை. யோசித்து யோசித்து முகம் சுருங்கி போய் இருந்தது. முடி கலைந்திருந்தது.
போலிஸ் ஸ்டேஷன் முன் ஒரு வெள்ளை நிற அம்பாஸிடர் கார் வந்து நின்றது.அதிலிருந்து போலிஸ் டிபூட்டி கமிஷனர் (டிசி..) இரவீந்தரன் இறங்கி வந்தார்..
மிடுக்கான நடையுடன் வந்தவர் நேரே ஒரு அறைக்குள் போய் விட்டார்..இப்போது ஸ்டேஷன் இன்னும் கொஞ்சம் பரபரப்பு குறைந்தது போல இருந்தது.
போலிஸ்காரர்கள் சகஜ நிலைக்கு வந்தார்கள்.
மிடுக்கான நடையுடன் வந்தவர் நேரே ஒரு அறைக்குள் போய் விட்டார்..இப்போது ஸ்டேஷன் இன்னும் கொஞ்சம் பரபரப்பு குறைந்தது போல இருந்தது.
போலிஸ்காரர்கள் சகஜ நிலைக்கு வந்தார்கள்.
மங்களத்தின் புருஷன் மனோகரன் ஹெட் கான்ஸ்டபிள் ரங்கராஜனிடம் போய் சார் என்றான்.
ரங்கராஜன் நிமிர்ந்தே பார்க்கவில்லை.
எதையோ எழுதிக்கொண்டிருந்தார். குனிந்தபடியே என்ன என்று கேட்டார்.
ரங்கராஜன் நிமிர்ந்தே பார்க்கவில்லை.
எதையோ எழுதிக்கொண்டிருந்தார். குனிந்தபடியே என்ன என்று கேட்டார்.
சார் ஒரு கம்ப்ளைணட் கொடுக்கனும் .
என்ன விஷயம்?.
அந்த பையனின் பெண்டாட்டி நேற்றில் இருந்து காணவில்லை சார்..
ரங்கசாமி மெதுவாக தலையை தூக்கி இம்மானுவேலை பார்த்தார்.பின்பு மீண்டும் தலையை குனிந்து எழுத ஆரம்பித்தார்.
கொஞ்சம் பொறுங்க..டிசி வந்திருக்கார்.அவர்கிட்டயே கம்ளைண்ட கொடுத்திடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தார்..
டிபுட்டி கமிஷனர் இரவீந்தரன் சென்னையில் இருந்து இப்போதுதான் நெல்லைக்கு மாற்றுதலாகி வந்திருந்தார். நேர்மையானவர்.
ஆனால் கோபக்காரர்..சிபாரிசு என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று.
ஆனால் கோபக்காரர்..சிபாரிசு என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று.
ஹெட்கான்ஸ்டபிள் ரங்கசாமி வயதானவர்.
பல சிக்கலான கேஸ்களை எல்லாம் சந்தித்தவர்.
இரவீந்தரன் நெல்லைக்கு வந்த சில தினங்களிலேயே ரங்காமியை பற்றி புரிந்து கொண்டார்.
இரங்கசாமி எப்போதாவதுதான் தன் வீட்டுக்கு போவார்.எப்போதும் போலிஸ் ஸ்டேசனில்தான் இருப்பார்.இதை பற்றி டிசி இரவீந்தரன் அவரிடமே
ஒருநாள் கேட்டார்.
பல சிக்கலான கேஸ்களை எல்லாம் சந்தித்தவர்.
இரவீந்தரன் நெல்லைக்கு வந்த சில தினங்களிலேயே ரங்காமியை பற்றி புரிந்து கொண்டார்.
இரங்கசாமி எப்போதாவதுதான் தன் வீட்டுக்கு போவார்.எப்போதும் போலிஸ் ஸ்டேசனில்தான் இருப்பார்.இதை பற்றி டிசி இரவீந்தரன் அவரிடமே
ஒருநாள் கேட்டார்.
ஏன் ரங்கசாமி.நீங்க ஏன் வீட்டிற்கு போவதே இல்லை.
ரங்கசாமி அமைதியாக சொன்னார்.என் பிள்ளைங்க எல்லாம் பெரியவங்கள் ஆகி திருமணமாகி வெளியூர்ல செட்டில் ஆயிட்டாங்க ஐயா…
மனைவி இறந்து ஐந்து வருஷம் ஆச்சு..இப்பா வீட்ல யாரும் இல்ல ..நான் ரிட்டேர்டு ஆவதற்கு இன்னும் மூன்று வருஷம்தான் இருக்கு.
.அது வரைக்கும் ஸ்டேஷன்லேயே இருந்திடுததுன்னு முடிவு பண்ணிட்டேன்….இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை..ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம் நான் நினைச்சா கூட இங்க வரமுடியாதே…
டிசி.இரவீந்தரன் இரக்கப்பட்டார்.
ரங்கசாமி அமைதியாக சொன்னார்.என் பிள்ளைங்க எல்லாம் பெரியவங்கள் ஆகி திருமணமாகி வெளியூர்ல செட்டில் ஆயிட்டாங்க ஐயா…
மனைவி இறந்து ஐந்து வருஷம் ஆச்சு..இப்பா வீட்ல யாரும் இல்ல ..நான் ரிட்டேர்டு ஆவதற்கு இன்னும் மூன்று வருஷம்தான் இருக்கு.
.அது வரைக்கும் ஸ்டேஷன்லேயே இருந்திடுததுன்னு முடிவு பண்ணிட்டேன்….இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை..ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம் நான் நினைச்சா கூட இங்க வரமுடியாதே…
டிசி.இரவீந்தரன் இரக்கப்பட்டார்.
போலிஸ் வேலை என்பது கடினமானது.மொத்த நகரமும் தூங்கும்போது போலிஸ் விழித்திருக்க வேண்டும்…
நகரம் விழிக்கும்போது போலீசும் கூடவே காவல் காக்க வேண்டும்…
.பெரிய அதிகாரி முதல் கான்டபிள்வரை எல்லோரும் வேலையிலேதான் இருக்க வேண்டும்..
இரக்கம் என்பது இங்கு இல்லவே இல்லை….
எப்போதும் விரட்டலும் மிரட்டலும் ஓடுதுலும் தான்...
நகரம் விழிக்கும்போது போலீசும் கூடவே காவல் காக்க வேண்டும்…
.பெரிய அதிகாரி முதல் கான்டபிள்வரை எல்லோரும் வேலையிலேதான் இருக்க வேண்டும்..
இரக்கம் என்பது இங்கு இல்லவே இல்லை….
எப்போதும் விரட்டலும் மிரட்டலும் ஓடுதுலும் தான்...
சாதாரண கான்ஸ்டபிளை சப்இன்ஸ்பெக்டர் மிரட்டுவார்.
சப்இன்ஸ்பெக்டரை இன்ஸ்பெக்டர் மிரட்டுவார்.
இன்ஸ்பெக்டரை.அசீஸ்டன்ட கமிஷனர் மிரட்டுவார்.
அசீஸ்டன்ட் கமிஷனரை டிஸ்ட்ரிக் கமிஷனர் மிரட்டுவார்.
டிஸ்டிக் கமிஷனரை டிஐஜி மிரட்டுவார்..
டிஐஜியை மந்திரி விரட்டுவார்…
மந்திரியை முதல் அமைச்சர் மிரட்டுவார்..
முதல் அமைச்சரை நீதிமன்றம் மிரட்டும்…
நீதிமன்றம் சட்டத்திற்கு அடங்கும்…
சட்டம் மக்களுக்காக அனைவரையும் மிரட்டும்.
சப்இன்ஸ்பெக்டரை இன்ஸ்பெக்டர் மிரட்டுவார்.
இன்ஸ்பெக்டரை.அசீஸ்டன்ட கமிஷனர் மிரட்டுவார்.
அசீஸ்டன்ட் கமிஷனரை டிஸ்ட்ரிக் கமிஷனர் மிரட்டுவார்.
டிஸ்டிக் கமிஷனரை டிஐஜி மிரட்டுவார்..
டிஐஜியை மந்திரி விரட்டுவார்…
மந்திரியை முதல் அமைச்சர் மிரட்டுவார்..
முதல் அமைச்சரை நீதிமன்றம் மிரட்டும்…
நீதிமன்றம் சட்டத்திற்கு அடங்கும்…
சட்டம் மக்களுக்காக அனைவரையும் மிரட்டும்.
அதிகாரத்திற்கு அதிகாரம் தொனியில் வேறுபாடு இருக்கும்..
ஆனால் மிரட்டல் என்பது ஒன்றுதான்.
இது ஒரு சங்கிலி போல தொடர் மிரட்டல் ..
ஆனால் மிரட்டல் என்பது ஒன்றுதான்.
இது ஒரு சங்கிலி போல தொடர் மிரட்டல் ..
இரவீந்தரன் இரங்கசாமியை அழைத்தார்.
இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் எல்லாம் எங்கேயா.?
இப்போதான் ஒரு கேஸ் விஷயமா போனாங்க ஐயா.
வெளியே நிற்கிறவங்க யாரு?
இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் எல்லாம் எங்கேயா.?
இப்போதான் ஒரு கேஸ் விஷயமா போனாங்க ஐயா.
வெளியே நிற்கிறவங்க யாரு?
அவங்க கம்ளைண்ட் கொடுக்க வந்திருக்காங்க,அவரு மனைவியை காணுமாம்…
வரச்சொல்லு.
வரச்சொல்லு.
இம்மானுவேல்,அவன் மனைவியின் அண்ணன், ,மனோகரன்,உள்ளே போய் வரிசையாய் நின்றார்கள்..
இரவீந்தரன் அவர்களைப பார்த்தார்.என்ன விஷயம்.?
மனோகரன் மெதுவாக… சார் இவரோட ஒய்ப காணலா..அதான் கம்ளைண்ட் கொடுக்கலாம்னு வந்தோம்.
மனோகரன் மெதுவாக… சார் இவரோட ஒய்ப காணலா..அதான் கம்ளைண்ட் கொடுக்கலாம்னு வந்தோம்.
எப்போ இருந்து காணல?
நேத்து நைட்ல இருந்து சார்,
நேத்து நைட்ல இருந்து சார்,
இதுல யார் அவா புருஷன்..?
நான்தான் சார்..?
நான்தான் சார்..?
இரவீந்தரன் முறைத்தார்:
என்ன பண்ணிண உம் பொண்டாட்டிய..?
என்ன பண்ணிண உம் பொண்டாட்டிய..?
சார் நான் ஒன்னும் பண்ணலசார்.திடீர்னு காணாம பாயிட்டா சார்...இம்மானுவேல் பயத்தில் உளறினான்
இரவீந்தரன் சொன்னார்:
ஓஹோ.. சரி நீ போய் வெளியே இரு.
இம்மானுவேல் வெளியேறினான்..
ஓஹோ.. சரி நீ போய் வெளியே இரு.
இம்மானுவேல் வெளியேறினான்..
அடுத்து விசாரனையை தொடர்ந்தார்…நீ யாருய்யா?
நான் அவரு பக்கத்து வீட்டுகாரன் சார்..
நான் அவரு பக்கத்து வீட்டுகாரன் சார்..
அவங்க இரண்டு போரும் சண்டை போடுவாங்களா?
இல்ல சார், அவங்க சண்டை போட்டு நான் பார்த்ததே இல்ல சார்.
சரி நீயும் வெளியே போய் உட்காரு.
சரி நீயும் வெளியே போய் உட்காரு.
நீ யாருய்யா.?
சார் நான் அந்த பிள்ளைக்கு அண்ணன்சார்.லேசாக அழுதான்…
சார் நான் அந்த பிள்ளைக்கு அண்ணன்சார்.லேசாக அழுதான்…
ஏன்யா அழுறே…நீயும் எதையாவது மறைக்கியா.உன் தங்கச்சி முன்னால யாரையாவது லவ் பண்ணி இருக்காளா..?
அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது சார்.
அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது சார்.
சரி… வெளியே இருக்கிற இரண்டு பேரையும் உள்ளே கூப்பிடு.
இருவரும் உள்ளே வந்தார்கள்…
இருவரும் உள்ளே வந்தார்கள்…
இரவீந்தரன் பேசினார்…
பக்கத்து வீட்டுக்காரன் நல்லதா சொல்றான்.
புருஷன் என் பொண்டாட்டி ரொம்ப நல்லவா என்கிறான்…அண்ணனும் அது மாதிரியே சொல்றான்.ஆனா அவா காணாம போயிட்டா.?
பக்கத்து வீட்டுக்காரன் நல்லதா சொல்றான்.
புருஷன் என் பொண்டாட்டி ரொம்ப நல்லவா என்கிறான்…அண்ணனும் அது மாதிரியே சொல்றான்.ஆனா அவா காணாம போயிட்டா.?
நீங்க எல்லாம் விளையாடுறீங்களா..
இரவீந்தரன் கோபப்பட்டர்.
போலீஸ்காரன் கடவுள் இல்ல.உள்ளத சொன்னா உங்களுக்கு நல்லது.நாங்களே கண்டுபிடிச்சா உங்களுக்கு கஷ்டம்….
இரவீந்தரன் கோபப்பட்டர்.
போலீஸ்காரன் கடவுள் இல்ல.உள்ளத சொன்னா உங்களுக்கு நல்லது.நாங்களே கண்டுபிடிச்சா உங்களுக்கு கஷ்டம்….
ரங்கசாமி…
டீசி.இரவீந்தரன் அழைத்த உடனே ரங்கசாமி உள்ளே வந்தார்.
இவங்க மூனு பேர்கிட்டேயும் விசாரிச்சு கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க.
ஒருத்தனும் உண்மையை சொல்லமாட்டுங்கிறாங்க.நாம விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிச்சா தானா உண்மை எல்லாம் வரும்..
இவங்க மூனு பேர்கிட்டேயும் விசாரிச்சு கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க.
ஒருத்தனும் உண்மையை சொல்லமாட்டுங்கிறாங்க.நாம விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிச்சா தானா உண்மை எல்லாம் வரும்..
இரவீந்தரன் கோபப் படுவதுபோல பேசினார்.ஆனால் இது உண்மையாக கோபம் அல்ல.
இந்த கோபம் இப்போது ரங்கசாமியின் விசாரிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.உண்மையின் சாயல் எங்காவது வெளிப்படும்.
போலீசுக்கு அதுபோதும்.
ரங்கசாமி தெளிவாக விசாரித்தார்..விசாரிக்கும் போதும் இம்மானுவேல் அழுதான்…
ரங்கசாமி இவன் பொய் சொல்லவில்லை என்று உறுதியாக நம்பினார்..
போலீசுக்கு அதுபோதும்.
ரங்கசாமி தெளிவாக விசாரித்தார்..விசாரிக்கும் போதும் இம்மானுவேல் அழுதான்…
ரங்கசாமி இவன் பொய் சொல்லவில்லை என்று உறுதியாக நம்பினார்..
மூவரிடம் கையெழுத்து வாங்கபட்டது.
அவர்கள் சென்ற சில நிமிடத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஹரி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அவர் வரவும் ஸ்டேஷனுக்குள் தொலைபேசி அலறவும் சரியாய் இருந்தது.
அவர்கள் சென்ற சில நிமிடத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஹரி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அவர் வரவும் ஸ்டேஷனுக்குள் தொலைபேசி அலறவும் சரியாய் இருந்தது.
டிசி இரவீந்தரன் ஸ்பீக்கிங்..மறு முனையில் என்ன சொல்லப்பட்டது என்று தெரியவில்லை….இரவீந்தரன் நெற்றியில் வேர்வை துளிர்த்தது.
போனை கீழே வைத்துவிட்டு தன் முன்னால் நிற்கும் சப் இன்ஸ்பெக்டர் ஹரியை பார்த்தார்..
சென்னையில் இருந்து நம்ம DIG பேசுினாரு.மந்திரி திலகர் பிஏவுடைய அம்மாவ நேற்றில் இருந்து காணுமாம்: இங்கேதான் டவுனில் வீடாம்.உடனே விசாரிக்கணுமாம்… அத என்னண்ணு உடனே பாருங்க.
சென்னையில் இருந்து நம்ம DIG பேசுினாரு.மந்திரி திலகர் பிஏவுடைய அம்மாவ நேற்றில் இருந்து காணுமாம்: இங்கேதான் டவுனில் வீடாம்.உடனே விசாரிக்கணுமாம்… அத என்னண்ணு உடனே பாருங்க.
ஹரி சரியென்றார்.போலீசில் உயர் அதிகாரி சொல்லும்போது சரி என்றுதான் சொல்ல வேண்டும்.மறுப்பு சொல்லக் கூடாது.அங்கே எஸ் சொல்லிவிட்டு அதனால் உண்டாகும் கோபத்தை தனக்கு கிழே இருப்பவர்களிடம் கொட்ட வேண்டும்.இதுவும் ஒரு சங்கில் தொடர் போல நீளும்..
என்னத்த பண்ண… சரியா தூங்கி மூணு நாள் ஆச்சி இப்போ உடனேபோய் விசாரிக்கணுமாம்.ஹரி ரங்கசாமியிடம் சொன்னார்.
சிலநேரம் பதவியைவிட ஆளின் மதிப்பக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கிறது.
ரங்கசாமியிடம் சப் இன்ஸபெக்கடர் ஹரி பேசியதும் இப்படித்தான்.
சிலநேரம் பதவியைவிட ஆளின் மதிப்பக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கிறது.
ரங்கசாமியிடம் சப் இன்ஸபெக்கடர் ஹரி பேசியதும் இப்படித்தான்.
ரங்கசாமிக்கு ஏதோ வித்யாசமாக பட்டது…ஸ்டேஷனுக்கு வெளியே புதிய ஆட்கள் தலை தெரிந்தது. மெதுவாக உள்ளே வந்தனர்.ரங்கசாமி அவர்களை பார்த்தார்.
சார் ஒரு கம்ளைண்ட் கொடுக்கணும்.
சார் ஒரு கம்ளைண்ட் கொடுக்கணும்.
என்ன?
எங்க பாஸ்டரை காணும்…
எப்போ இருந்து ?
நேற்று இரவில் இருந்து..
இன்பெக்டர் ஹரி கொஞ்சம் அதிர்ந்தார்..
எங்க பாஸ்டரை காணும்…
எப்போ இருந்து ?
நேற்று இரவில் இருந்து..
இன்பெக்டர் ஹரி கொஞ்சம் அதிர்ந்தார்..
அன்று இரவுக்குள் இருபது புகார் மனு வந்தது .எல்லார் மனுவிலும் வயதும் தொழிலும் வேறு வேறாய் இருந்து.
ஆனால் எல்லோருடைய புகாரிலும் ஒரு ஒற்றுமை இருந்தது அது ,ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி இரவு அவர்கள் காணவில்லை என்பதே..
ஆனால் எல்லோருடைய புகாரிலும் ஒரு ஒற்றுமை இருந்தது அது ,ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி இரவு அவர்கள் காணவில்லை என்பதே..
இஸ்பெக்டர் ஹரி எல்லா புகார் மனுவையும் படித்து பார்த்து குழப்பமடைந்தார்.
எல்லோருமே இரவு படுக்க செல்லும் முன் மற்றவர்களிடம் பேசி இருக்கிறார்கள்.
எல்லோருமே இரவு படுக்க செல்லும் முன் மற்றவர்களிடம் பேசி இருக்கிறார்கள்.
எல்லோரும் ஒரே ஜாதியையோ ஒரே வயது உடையவர்களோ அல்ல.பின் எப்படி ஒரு இரவில் மொத்தமாக காணாமல் போயிருப்பார்கள்…
.ஏசி பீட்டர் பத்து நாள் லீவு போட்விட்டு போய்விட்டார்.
.ஏசி பீட்டர் பத்து நாள் லீவு போட்விட்டு போய்விட்டார்.
நாளை மறுநாள் வருவார்.அதற்குள் எதாவது செய்தாகணும்.
அந்த மந்திரி திலகர் பிஏ அம்மாவை பற்றி முதலில் விசாரிக்க வேண்டும்…
சேரில் சோர்வாக சரிந்தார்.
அந்த மந்திரி திலகர் பிஏ அம்மாவை பற்றி முதலில் விசாரிக்க வேண்டும்…
சேரில் சோர்வாக சரிந்தார்.
ரங்கசாமி இன்ஸ்பெக்டர் ஹரியை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு இருந்தார்
.டீ வாங்கிட்டு வர சொல்லவா சார். இது
.டீ வாங்கிட்டு வர சொல்லவா சார். இது
ஹரிக்கு பிடித்திருந்தது.ஒரு தகப்பனைபோல பல சமயங்களில் ரங்கசாமி நடந்து கொள்வார். கைதிகளிடம் கூட இரக்கம் காட்டுவார்..வழக்கமாக ஸ்டேசனுக்கு வரும் கைதிகளும் அவரிடம் பல உண்மைகளை செல்லி விடுவார்கள்.அது அவரின் அன்புக்காகவே.
கொஞ்சநேரத்தில் சேரைவிட்டு எழுந்த இன்ஸ்பெக்டர் ஹரி, தன்னோடு இரண்டு கான்ஸ்டபிள்களுடன் விரைந்து வெளியேறினார்
ரங்கசாமி இம்மானுவேலின் மனுவை மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தார்..
இம்மானுவேலோடு கச்சேரி செய்யும் ஆர்டிஸ்ட் பெயரும் வயதும் போன் நம்பரும் தெளிவாக எழுதப்பட்டு இருந்தது..
இம்மானுவேலோடு கச்சேரி செய்யும் ஆர்டிஸ்ட் பெயரும் வயதும் போன் நம்பரும் தெளிவாக எழுதப்பட்டு இருந்தது..
முதலில் தபேலா சங்கரை தேர்ந்தெடுத்தார்.அதற்கு காரணம் இருக்கிறது.வயது நாற்பத்தி ஐந்து..
இந்த வயதில் பாதி தைரியமும் பாதி வேகமும் இருக்கும்.
லேசாக உண்மையை வரவழைத்து விடலாம்..
இந்த வயதில் பாதி தைரியமும் பாதி வேகமும் இருக்கும்.
லேசாக உண்மையை வரவழைத்து விடலாம்..
ஹலோ …நான் ஹெட் கான்ஸ்டபிள் ரங்கசாமி பேசுறேன்…நீங்க தபேலா சங்கரா..?
சங்கருக்கு சரியாக புரியவில்லை..என்ன.?…..என்னது.
ரங்கசாமிக்கு லேசாக எரிச்சல்வந்தது.
சங்கருக்கு சரியாக புரியவில்லை..என்ன.?…..என்னது.
ரங்கசாமிக்கு லேசாக எரிச்சல்வந்தது.
ஹலோ நீங்க உடனே ஸ்டேஷனுக்கு வாங்க ..உங்கள விசாரிக்கணும்….
சங்கருக்கு வியர்த்தது……என்ன தப்பு பண்ணினோம்.
என்ன விஷயம் சார்.?
அது ஸ்டேஷனுக்கு வாங்க தெரிவிக்கிறோம்…
சங்கருக்கு வியர்த்தது……என்ன தப்பு பண்ணினோம்.
என்ன விஷயம் சார்.?
அது ஸ்டேஷனுக்கு வாங்க தெரிவிக்கிறோம்…
ஹெட் கான்ஸ்டபிள் ரங்கசாமிக்கு தெரியும்: அதிரடியான விசாரிப்புதான் உண்மையை உடனே வெளியே கொண்டு வரும்.
போனில் விபரம் சொன்னால் தகுந்த பொய்யுடன் சாதாணமாக வருவான்..
அவன் இப்போதே பதற்றமாகவே இருப்பது நல்லது என்று ரங்கசாமி நினைத்தார்.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சங்கர் ஸ்டேஷனுக்கு வந்தான்….
அவன் இப்போதே பதற்றமாகவே இருப்பது நல்லது என்று ரங்கசாமி நினைத்தார்.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சங்கர் ஸ்டேஷனுக்கு வந்தான்….
ஹெட் காண்ஸ்டபிள் ரங்கசாமி பிஸியாக இருந்தார்.கோர்ட்டுக்கு அனுப்பவேண்டிய சகல ரிக்கார்டுகளையும் ஒழுங்கு செய்தார்.
ரிமாண்ட் கைதிகளை யார் யாரெல்லாம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வது என் பட்டியலிட்டார்.ஒரு வழியாக எல்லாம் முடிந்தது..மணியைப் பார்த்தார்
ரிமாண்ட் கைதிகளை யார் யாரெல்லாம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வது என் பட்டியலிட்டார்.ஒரு வழியாக எல்லாம் முடிந்தது..மணியைப் பார்த்தார்
காலை பத்து முப்பது. இனிதான் காலை சாப்பாடே சாப்பிட வேண்டும்.
இதற்குள் மூன்று டீ குடித்தாகிவிட்டது..சரி இனி மாலை வரை கொஞ்சம் ஓய்ந்து இருக்கலாம்….குளித்துவிட்டு வேறு யூனிபார்ம் அணிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சேரில் இருந்து எழுந்தார்..அவர் எழுந்து கொள்வதற்கும் சங்கர் வந்து நிற்ப்பதற்கும் சரியாக இருந்தது..
இதற்குள் மூன்று டீ குடித்தாகிவிட்டது..சரி இனி மாலை வரை கொஞ்சம் ஓய்ந்து இருக்கலாம்….குளித்துவிட்டு வேறு யூனிபார்ம் அணிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சேரில் இருந்து எழுந்தார்..அவர் எழுந்து கொள்வதற்கும் சங்கர் வந்து நிற்ப்பதற்கும் சரியாக இருந்தது..
ரங்கசாமி கண்களாலே என்னவென்று கேட்டார்..
சார். என்பெயர் சங்கர்..என்ன ஏதோ விசாரிக்கணும்ணு கூப்பிட்டடிருந்தார்கள் என்றான்..
ரங்கசாமி புரிந்து கொண்டார்..எந்த சங்கர்… கச்சேரி……
ஆமா சார்.
இப்படி உட்காருங்க..விசாரிப்பாங்க..என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
சங்கருக்கு புரியவில்லை, யார் விசாரிப்பார்கள் .யாரிடம்போய் கேட்பது.. .அங்கு கிடந்த ஒரு பெஞ்சில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான்
..
சார். என்பெயர் சங்கர்..என்ன ஏதோ விசாரிக்கணும்ணு கூப்பிட்டடிருந்தார்கள் என்றான்..
ரங்கசாமி புரிந்து கொண்டார்..எந்த சங்கர்… கச்சேரி……
ஆமா சார்.
இப்படி உட்காருங்க..விசாரிப்பாங்க..என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
சங்கருக்கு புரியவில்லை, யார் விசாரிப்பார்கள் .யாரிடம்போய் கேட்பது.. .அங்கு கிடந்த ஒரு பெஞ்சில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான்
..
ஸ்டேஷனில் பலர் வருகிறார்கள் போகிறார்கள்.யாரும் இவனை ஏறிட்டு கூட பார்க்கவில்லை….என்ன செய்ய..? போய்விடவா..போனால் திரும்பியும் கூப்பிட மாட்டார்களா.?திரும்ப விசாரிக்கும் போது கேபம் கொப்பளிக்காதா..? கொஞ்சநேரம் காத்திருக்க கூடாதோ என்று செவிட்டில் அறைந்தால் என்ன செய்வது..
நல்ல வேளை இன்று காலையில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் இருந்தது ..பனிரெண்டு மணிக்கு ரங்கசாமி மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தார்..
சேரில் போய் உட்கார்ந்து இம்மானுவேலின் மனுவை எடுத்து டேபிள் மீது வைத்துவிட்டு சங்கரை கவனித்தார்.
சேரில் போய் உட்கார்ந்து இம்மானுவேலின் மனுவை எடுத்து டேபிள் மீது வைத்துவிட்டு சங்கரை கவனித்தார்.
சங்கர் எரிச்சலாக இருப்பது தெரிந்தது… அது நல்லதுதான்
.அவன் கோபப்பட வேண்டும்.அப்போதுதான் தானும் கோபத்தில் கேள்விகள் கேட்க வசதியாய் இருக்கும்.
சங்கர் கோபத்தில் பதற்றமானால் நிறைய உண்மைகள் வெளிவரும்…..சங்கர் ரங்கசாமியை கவனித்துக் கொண்டிருந்தான்.
.அவன் கோபப்பட வேண்டும்.அப்போதுதான் தானும் கோபத்தில் கேள்விகள் கேட்க வசதியாய் இருக்கும்.
சங்கர் கோபத்தில் பதற்றமானால் நிறைய உண்மைகள் வெளிவரும்…..சங்கர் ரங்கசாமியை கவனித்துக் கொண்டிருந்தான்.
ரங்கசாமி சேரில் முன்னால் கால்களை நீட்டி சோம்பல் முறித்துக்கொண்டு சங்கரை அழைத்தார்.
சங்கர் எழுந்து வந்தான்…
நேராக சங்கரின் கண்களை பார்த்தபடி யாழினியை எத்தனை வருடங்களாக தெரியும்.
.சங்கர் மிரண்டான்..யாழினியா.? யார் அது..?
சங்கர் எழுந்து வந்தான்…
நேராக சங்கரின் கண்களை பார்த்தபடி யாழினியை எத்தனை வருடங்களாக தெரியும்.
.சங்கர் மிரண்டான்..யாழினியா.? யார் அது..?
உங்க கூட கச்சேரியில கிட்டார்
வாசிக்கிறாரே அவர் ஒய்ப்..
சங்கருக்கு லேசாக புரிந்தது..ஓ..அந்த
யாழினியா..? சார் அவங்கள பார்த்து பல வருஷம் இருக்கும்…அவங்க கச்சேரியில் இப்போ பாடுறது
இல்ல..ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால பார்த்திருக்கேன் …எப்போவாவது பேசி இருக்கலாம்..வேற
பழக்கம் எல்லாம் கிடையாது சார்.
அப்போ யாழினிக்கு வேறு யாரு
கூடல்லாம் பழக்கம்…?
சங்கருக்கு வாலும் தெரியவில்லை
தலையும் புரியவில்லை.
எதுக்கு இந்த சம்பந்தம் இல்லாத
கேள்வி..
சங்கர் மெல்லியதாய் கோபப்பட்டான்…சார்
அவங்க யாரு கூட எல்லாம் பழக்கம்ணு எனக்கு எப்படி சார் தெரியும்.?
ரங்கசாமியும் கோபப்பட்டார்…ஒரு
கச்சேரியில பாடி இருக்கீங்க.பழகி இருக்கீங்க…இப்போ விபரம்கேட்டா எதுவும் தெரியாதுண்ணா
எப்படி.?
சங்கர் பயந்தான் பின்பு நிதானமானான்.
சார் யாழினிக்கு இப்போ என்ன
ஆச்சு..?
அவளக்காணேம்ணு அவ புருஷன்
கம்ளைண்ட் பண்ணி இருக்கான்….விசாரிச்சு பார்த்ததில உங்களுக்குதான் அவகூட பழக்கம் இருந்திருக்குண்ணு
தகவல் கிடைச்சிருக்கு…ஆனா நீங்க அவள பார்த்து பல வருஷம் ஆச்சுண்ணு சொன்னா எப்படி?..ரங்கசாமி
பொய்தான் சொன்னார்.
சங்கர் நிலை குலைந்தான்..
ஒன்னு பண்ணுங்க அவளுக்கு வேற
யாரு கூடல்லாம் பழக்கம் இருந்திச்சுண்ணு சொல்லுங்க..அதையும் விசாரிக்கோம்…ம்..யோசியுங்க.
ரங்கசாமி உண்மையும் பொய்யுமாக
சங்கர் மீது கொட்டினார்..
சங்கர் யோசித்தான்….யாழினியை
காணோம்ணு இப்போ வரைக்கும் யாரும் தன்னிடம் சொல்லவில்லையே.
யாரு கூடவாவது ஒடிப்போயிருப்பாளோ…
எதாவது நடந்து கொலை செய்யப்பட்டிருப்பாளோ!.
.நம்மள யாரு இப்படி இதில மாட்டி விட்டது. …..ச் சே..இப்போ என்ன
செய்வது..யேசித்தான்….
சார்… அவா நல்ல பொண்ணு சார்.அப்படி யாரு கூடவும் அவ பழகினது
கிடையாது….இம்மானுவேல் கூட முறைப்படி பொண்ணு கேட்டுத்தான் கல்யாணம் பண்ணினான் சார்.
ரங்கசாமி இடைமறித்தார்..இம்மானுவேல்
லவ் மேரேஜ்ணு சோல்றான்…நீங்க அரேன்ஜிடு மேரேஜ்ணு சொல்றீங்க.
சங்கர் சோர்வாக..அத பத்தி
எனக்கு தெரியாது சார்..எனக்கு தெரிந்தத சொல்லிவிட்டேன் அவ்வளவுதான்…
ரங்கசாமி யோசித்தார்…ஒன்றையும்
சங்கரிடம் இருந்து பிடுங்க முடியவில்லை….சரி இப்போ போங்க .தேவைபட்டா மீண்டும் கூப்பிடுகிறோம்
என்று சொல்லி சங்கரை அனுப்பிவிட்டார்..
3
இன்ஸ்பெக்டர் ஹரி மந்திரி திலகர் பிஏ வீட்டை கண்டுபிடிக்க கொஞ்சம் அதிகமாகவே சிரமப்பட்டார்..
திருநெல்வேலி டவுணில் ஒரு ஓரமாக அந்த வீடு இருந்தது…கதவு பூட்டபட்டு
இருப்பதுபோல தோன்றியது. உள்ளே ஆள் இருப்பதுபோலவும் தெரிந்தது..காலிங் பெல்லை அழுத்தினார்
நாற்பது வயது பெண் ஒருத்தி கதவை திறந்தாள்..
சிவந்த நிறம். உடம்பெல்லாம் கொழுப்புக்கள் நிறைந்த
பளபளப்பு.
பணக்கார தன்மை முகத்தில் தெரிந்தது..வாலிபத்தில்
அழகியாக இருந்திருப்பாள். ..நிமிர்ந்து நிற்க முடியவில்லை போல இருந்தது.
முதுகு தண்டில் வலியாய் இருக்குமோ .போலீசை கண்டு
எந்த பயமும் அவள் கண்களில் தெரியவில்லை.அப்படியென்றால் இங்கு ஏற்கனவு போலீசை எதிர்பார்த்துதான்
இருந்திருக்கிறார்கள்….
ஹரி உள்ளே போனார்..? எப்படி
ஆரம்பிப்பது…நீங்க ….யாரு…?
நான் ராஜ ராஜன் அக்கா…
ராஜ ராஜன் யாரு..?
அதுதான் சார் .என் தம்பி.அவன்தான்
மந்திரி திலகர்கிட்ட பிஏவாக இருக்கான்….
ஹரி ஒரு சேரில் உட்கார்ந்தார்.
மற்ற இரண்டு காண்ஸ்டபிளும் நின்று கொண்டிருந்தர்கள்…
ராஜ ராஜன்தான்
அவர் பெயரா…?..உங்க பேரு…?
வளர்மதி
..
சரி ,நீங்க
எதாவது கம்ளைண்ட் கொடுத்திருக்கீங்களா.? விபரத்தை அவளே சொல்லட்டும்
என்று காத்திருந்தார்..
இல்ல சார்
.நான் உடனே தம்பிக்கிட்டே நடந்தத சொல்லி விட்டேன்.அம்மாவுக்கு என்ன ஆச்சுண்ணே தெரியல.
.இப்போது லேசாக அழுதாள்….
அம்மா பெயர்..?
பொன்னுத்தாய்….
சரி…என்ன
நடந்தது விபரமாக சொல்லுங்க..
காண்ஸ்டபிள்
அவங்க சொல்லச் சொல்ல அத எழுதி அவங்ககிட்ட கையெழுத்து வாங்கிக்காங்க..
சார்..அம்மா
நைட்ல சாப்பிட மாட்டாங்க.ஒரு டம்ளர், பாலும் ஒரு வாழைப் பழமும் மட்டும்தான் சாப்பிடுவாங்க:
அத நான்தான் கொண்டு போய் கொடுத்தேன்.
கொண்டு போய்ண்ணா..எங்க…?
அவங்க பெட்ரும்க்கு.
சரி,
அவங்க அத சாப்பிட்டுட்டு
படுத்திட்டாங்க. நான் கதவை சாத்திட்டு வந்திட்டேன்….காலையில் காப்பி கொண்டு போனேன்….அங்க
அம்மா இல்ல…காப்பியை வைத்துவிட்டு வந்திட்டேன்…அவங்க பாத்ரூம் போயிருப்பாங்களோண்ணு
நினைச்சேன்…
அப்புறமா கொஞ்ச நேரம் கழித்து
போனேன்..அப்பவும் அம்மா இல்ல..எனக்கு கொஞ்சம் திக்குண்ணு இருந்தது. ஒருவேளை பக்கத்து
வீட்டுக்கு எதுக்காவது போயிருப்பாங்களோண்ணு போய் பார்த்தேன்.அங்கேயும் இல்ல
மீண்டும் வளர்மதி அழ ஆரம்பித்தாள்.
அம்மா இருந்த ரூம்ப காட்டுங்க….ஹரி
எழுந்து கொண்டார்…
உள் வீட்டுக்குள் அழைத்து
போனாள்..நிறைய அறைகள்..மொத்தத்தில் அந்த இடம் இருட்டாக இருந்தது.
அம்மா அறை
ரொம்ப உள்ளார இருந்தது…அதுக் அப்புறம் சமையல் அறை….வெளிப்புற வாசல் இல்லை…
அம்மா அறையை
வளர்மதி திறந்தாள்…
ஓரமாக ஒரு
ஜன்னல் இருந்தது.அது திறந்திருந்ததால் அந்த அறை வெளிச்சமாய் இருந்தது.
ஒரு கட்டில்
அதில் சுத்தமாக விரிக்கப்பட்டு இருந்த விரிப்பு :அதில் ஒரு நைட்டி கிடந்தது.
இது யாருடையது.?
அம்மா இரவில் மட்டும் நைட்டி போடுவாங்க..
அப்போ இப்போ இது இங்க கிடக்கே…அப்போ
வேற டிரஸ் பண்ணிட்டு காலையிலே கிளம்பி போயிட்டாங்களா..?
இல்ல சார்..மத்த எந்த டிரஸ்சையும்
அவங்க எடுக்கல்ல..எல்லாமே பீரோலஇருக்கு சார்…
ஹரிக்கு ஒன்றும் புரியல….
அவங்களுக்கு வயசு என்ன
இருக்கும்…?
என்பது ஆகப்போகுது..
நல்லா நடப்பாங்களா.? இல்ல
சார்.முட்டில வலி இருக்கு..அதுக்கு ட்ரீட்மண்ட எடுத்துகிட்டு இருக்காங்க..
ஹரி குழம்பினார்…எந்த பக்கம்
போனாலும் முட்டிக்கிட்டு இருக்கே..
நீங்க அவங்க காணாம போனத
பத்தி என்ன நினைக்கீறீங்க..?
நாங்க என்னத்தா சார் நினைக்க.
அம்மா எல்லோர் கிட்டேயும் அன்பா பழகுவாங்க..அவங்களுக்கு எதிரியீண்ணு யாருமே இல்லியே..
ஹரி கிளம்பினார்.
.சரிம்மா..நாங்க வாரோம்..அந்த
அறைய பூட்டியே வையுங்க.எதையும் கலைச்சிராதீங்க…பெரிய ஆபீசர் வந்து சோதனை செய்வாங்க…..
காண்ஸ்டபிள் வளர்மதியிடம்
கையெழுத்து வாங்கினார்..
உங்க கூட வேறு யார்லாம்
இருக்காங்க..?
என் மகள் இருக்கா..? அவா
இஞ்சினியரிங் படிச்சிகிட்டு இருக்கா..லீவுல வருவா..இப்போ நான் மட்டும்தான் இருக்கேன்.
எனக்கும் இப்போ பயமா இருக்கு…?
போலீஸ் காவல் போட சொல்லவா..?
வேண்டாம் சார் வீணா கலவரமாயாயிடும்.
இன்ஸ்பெக்டர் ஹரி வெளியே
வந்து ஜீப்பில் ஏறினார்..கான்ட்ஸ்டபிள்களும் அமர்ந்தனர்.
ஹரி நினைத்தார்..இங்கே
என்பது வயசு கிளவி காணாம போயிட்டா…எந்த துப்பும் இல்ல.
அங்கே ஒருத்தன் பொண்டாட்டிய
காணோம்னு சொல்றான், இன்னும் ஒருவன் கிழட்டு பாஸ்டரை காணும்கிறான்.
என்னதான் நடக்குது…
ஒரு விஷயம் மட்டும் இடித்தது..அதாவது
காணாமல் போன எல்லோருமே இருபது வயதுக்கு மேல் உள்ளவர்கள்….குழந்தைகள் இதில் இல்லை….போலீஸ்
ஜீப் வண்ணார் பேட்டை முக்கு வரும்போது தற்செயலாய் அங்கு கடையில் தொங்கி கொண்டிருக்கும்
நீயூஸ்பேப்பர் வால் போஸ்டரை ஹரி கவனித்தார். திடுக்கிட்டார்.
பொது பிரச்சனையை போலீஸ்காரன்
மட்டுமே தன் பிரச்சனையாய் பார்க்கிறான்.
கடவுளே .பிரச்சனை பெரிசாகும்போல
தெரியுதே..காண்ஸ்டபிள்களும் பார்த்தனர்..
கொட்டை எழுத்தில்
நெல்லையிலும் தமிழகத்திலும்
நிறைய பேர்களை காணோம்…. பொதுமக்கள் அச்சம்…..பள்ளிக்கு சென்ற
பிள்ளைகள் வீடு திரும்புமா..? பெற்றோர்கள் கேள்வி..?
இந்த சமயம் பார்த்து ஏசி பீட்டர்
லீவில் போயிட்டரே….ஹரிக்கு அசீஸ்டண்ட கமிஷனர்
பீட்டருடைய துணை தேவைபட்டது.
.அப்போது போலீஸ் வயர்லெஸ் மைக்கில்
ஹரியை உடனே டிசி அழைக்கிறார் என்று தகவல் சொன்னது….
சப் இன்ஸ்பெக்டர் ஹரிக்கு எரிச்சலாய்
வந்தது..போலீஸ் ஜீப் வாண்ணார் பேட்டையில் இருந்து திரும்பி ஹைகிரவுண்டில் இருக்கும்
டிசி.ஆலுவலகம் நோக்கி பறந்தது…
4
டிஎஸ் பி ஆபிஸ் பரபரப்பாக இருந்தது. இன்ஸ்பெக்டர்
ஹரி சோர்வாக டிசி அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
விரைப்பாக சல்யூட் அடித்துவிட்டு
பக்கவாட்டில் கவனித்தார்.அங்கே ஏசி பீட்டர் உட்கார்ந்து இருந்தார். பீட்டர் அங்கே இருப்பது ஹரிக்கு ஆறுதலாய் இருந்தது…
டிசி. இரவீந்தரின் இன்ஸ்பெக்டர்
ஹரியிடம் கேட்டார்: என்ன ஆச்சு நீங்க போன காரியம்..?
ஹரி விவரித்தார்:அந்த அம்மாவுக்கு
எண்பது வயசு ஜயா. அவங்க
நைட்ல சாப்பிட்டு விட்டு படுத்திருக்காங்க, காலையில அவங்க மகள் போய் பார்த்திருக்காங்க.
அங்க அந்த அம்மா இல்ல..அந்த அறைக்குள்
மற்றவங்க போக முடியாது. அது உள் வீட்டுக்குள் இருக்கிறது.. இரவீந்தரன் மேலும் ;கேட்டார்:
சரி, மத்த கேஸ்ல எதாவது துப்பு கிடைச்சிதா..?
எல்லாமே
ஒரே மாதிரிதான் ஜயா இருக்கு… ஆகஸ்டு பதிமூன்றாம்
தேதி இரவுதான் எல்லோரும் காணாமல் போயிருக்காங்க..
இதுல
ஒரு கம்ளையிண்ட் மட்டும் வாபஸ் ஆகி இருக்கு ஐயா..!
இரவீந்தரன்
நிமிர்ந்து பார்த்தார்….
மேலப்பாளையம்
தமிழ் செல்வி என்ற பொண்ணை காணலைண்ணு ஒரு கம்ளைண்ட் வந்திருந்தது.அது லவ் மேட்டர்ணு
வந்து வாபஸ் வாங்கிகிட்டாங்க ..
ஹரி மெதுவாக சத்தத்தை குறைத்து கொண்டார்.
இரவீந்தரன்
தொடர்ந்தார்:
பீட்டர்
நீங்க கெஞ்சம் இந்த கேஸ்களை தீவிரமாக கண்காணியுங்க..அதற்குள் ஒரு காண்ஸ்டபிள் வந்து
இரவீந்தரனிடம் பவ்வியமாக காதுக்குள் ஏதோ சொல்லி விட்டு போய்விட்டான்..
ஸ்…வந்துட்டானுக…..மெதுவாக சொன்னார். யார்.? என்று எதுவும் தெரியாமல் ஹரியும் பீட்டரும் விழித்தனர்.டிசி
இரவீந்தரனே சொன்னார்..
பத்திரிக்கைகாரங்க வந்திருக்காங்க…ம்..இருக்கிற
பிரச்சனையில இது இன்னும் கூட ஒரு பிரச்சனை…
டிசி இரவீந்தரன் எழுந்து மெதுவாக
வாசலுக்கு சென்றார். அங்கே ஒரு இருபதுபேர் கையில் கேமரா ,நோட்டு பேனவுடன் நின்று கொண்டிருந்தனர்..
நிருபர்கள் மொத்தமாக குட் ஆப்டநூன் சார் என்றார்கள்…
பதிலுக்கு இரவீந்தரனும் .ம் என்று
தலையசைத்தர்..
நிருபர்கள் கேள்விகளை வீச ஆரம்பித்தனர்.
சார்,திருநெல்வேலியில
நூற்றுக்கணக்கானோரை காணோம் என்கிறார்களே.உண்மையா சார்.
அதெல்லாம்
இல்ல …ஒரு பத்துபேரை காணோம்.இது சாதாணமாக எப்போதும் நடக்க கூடியதுதான்…சீக்கிரமா கண்டு
பிடிச்சிருவோம் .
சார்
மத்த டிஸ்டிரிக்லயும் காணோம்னு சொல்றாங்களே சார்..
அத பற்றி எனக்கு தெரியாது..?
சார் இங்கிலீஸ் சேனல்ல கூட நீயூஸ்
வருது சார்.ஆகஸ்டு பதிமூன்றாம் தேதி உலகத்தில் நிறைய பேரை காணோமாம்.அப்படி என்னதான்
நடந்திடுச்சி .கொஞ்சம் சொல்லுங்களேன்…
டிசி.இரவீந்தரன் கொஞ்சம் கோபமானார்.
நிருபர்களுக்கு பல செய்திகள் தெரிந்திருக்கிறது:ஆனாலும் தன் வாயிலிருந்து கிடைப்பவற்றை
செய்தியாக்க துடிக்கிறார்கள்…
இவர்களிடம் மாட்டிக்கொள்ள கூடாது.,
இப்போது என்னால’ எதுவும் சொல்ல
முடியாது இன்னும் பத்துநாள் கழித்து வாங்க,முழுதாக எதாவது செய்தி இருந்தால் சொல்கிறேன்…
சார்.ஏலியன்ஸ் வந்து அள்ளிக்கிட்டு
போயிட்டாங்கன்னு ஒரு செய்தி வருதே சார்
இது கிண்டலா இல்ல புதிய செய்தியா
என்று ஒரு விணாடி குழம்பினார்..
அதற்குள் அடுத்த நிருபர்…சார்
ஏலியன்ஸா… இல்லன்னா இயேசுநாதர் வந்து பரலோகத்திற்கு கொண்டு போய்விட்டார் என்று எடுத்துக்
கொள்ளலாமா…?நிருபர்கள் மொத்தமாக சிரிக்க டிசி இரவீந்தரன் மெதுவாக உள் அறைக்குள் சென்றார்..
இன்ஸ்பெக்டர்
ஹரியும் ஏசி பீட்டரும் டிசி இரவீந்தரனை தொடர்ந்து உள்ளே சென்றனர்.
நிருபர்கள்
தங்களுக்கு எந்த செய்தியும் கிடைக்காத ஏமாற்றத்தில் கிடைத்த செய்தியை உருவேற்றி பத்திரிக்கைகளில்
போட தயார் ஆனார்கள்…. பின் கலைந்து சென்றார்கள்..
உள் அறைக்குள் சென்ற டிசி இரவீந்தரன்
ஹரியை பார்த்து:ஓகே ஹரி நீங்க போகலாம்….எதாவது செய்தி கிடைத்தால் உடனே எனக்கு சொல்லுங்க.
ஹரி கிளம்பினார்..
பீட்டர்
என்ன செய்வது என்று குழம்பி போய் உட்கர்ந்து இருந்தார்.
இரவீந்தரன்
தொடர்ந்தார். இங்க மட்டும் இல்ல இந்திய முழுவம்
அல்லது உலகம் முழுவதும் நிறை பேர் காணாம போயிருக்காங்க…
முதல்ல
அரசாங்கம் இதை வெளியே சொல்லாதே என்று சொல்லியது.ஆனா..இப்போ நிலைமை எல்லோருக்கும் தெரிய
ஆரம்பித்துவிட்டது.
மொத்தமாக
எல்லா இடத்திலும் இந்த பிரச்சனை இருப்பதால் நமக்கு மேலிடத்து அழுத்தம் குறைவாக இருக்கும்,
சரி அது
என்ன.? ஏலியன்ஸ் விவகாரம்.ஒருவேளை அது உண்மையா இருக்குமோ.உண்மையாகவே இரவீந்தரன் கவலைப்பட்டார்.
பீட்டர்
பதில் சொல்லமுடியாமல் தவித்தார்..இருந்தாலும் அப்படி எதுவும் இருக்காது சார்.
இயேசுநாதர்
அள்ளிகிட்டு போயிட்டாரோன்னு ஒருத்தன் கேட்டானே.அதபத்தி
நீங்க என்ன சொல்றீங்க..ஏன்னா இது உங்க மத சம்பந்த பட்டது.இப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு
இருக்கா என்ன..?
பீட்டர்க்கு
வியர்த்தது.
டிசி
இரவீந்தரன் விளையாட்டாய் கேட்கிறாரா அல்லது சீரியஸா கேட்கிறாரா என்று தெரியாமல் குழம்பிபோய்
இருந்தார்.
என்ன
பீட்டர் உங்களைத்தான் கேட்கிறேன்….
சார்.அது
வந்து … அப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது சார்..
எப்படிபட்ட
நம்பிக்கை..?
அதாவது இயேசு கிறிஸ்து மறுபடியும்
வருவார் என்கிற நம்பிக்கை.
அவர் வரட்டும் மிஸ்டர் பீட்டர்…இப்போ
அது பிரச்சனை அல்ல .இருக்கிற மக்களை அள்ளிக் கொண்டு போவர் என்று ஒருவன் சொன்னானே.அதைப்
பற்றி…,?
பீட்டர்
வியர்வையில் நனைந்து இருந்தர்.
ஆமா சார்
,இயேசு கிறிஸ்து பூமிக்கு வரும் முன்னே பூமியில் இருக்கும் நல்லவர்களை முதலில் வானத்திற்கு
அழைத்துக் கொள்வார் என்று ஒரு நம்பிக்கை…
நல்லவர்களையா..?அல்லது கிறிஸ்தவர்களை மட்டுமா…?இரவீந்தரன் சிரித்தார்..
அது தெரியல சார்..ஆனால் இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை
மிஸ்டர் பீட்டர் , ஒரு துப்பும் கிடைக்காமல் போனால் நாம் இந்த
ரூட்டிலேயும் போய் பார்ப்போம்…இரவீந்தரன்மேலும் சிரித்தார்…
பீட்டர் இத நீங்க நம்புறீங்களா..?
எதை சார்.?
இயேசு கிறிஸ்து மனிதர்களை வானத்துக்கு
அழைத்துக்கொள்வார் என்பதை.
பீட்டர் கொஞ்சம் அமைதியாகி பின்பு
தைரியமானார்…ஆமா சார்,நான் நம்புகிறேன்…..
எப்படி..?
இயேசு கிறிஸ்து பூமியில் பிறப்பார்
என்று அவர் பிறப்பதற்கு முன்னதாகவே எழுதபட்டு பின் அதன் படியே நடந்தும் விட்டது.அதுபோல
இதுவும் நடக்கும்.
அப்போ நீங்க ஏன் போகல, உங்களை
ஏன் இயேசு கைவிட்டுவிட்டார்..?
சார் கடவுள் விரும்பும் அளவுக்கு
நான் நல்லவானாக இல்லைண்ணு அர்த்தம் சார்..
நேரடியாக
பீட்டர் இப்படி சொன்னதும் டிசி இரவீந்தரன் மொளனமானார்..
ஜயம் சாரி மிஸ்டர் பீட்டர்…ஓகே
நாம இதபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.. நீங்க போலாம்..
ஏசி பீட்டர் வெளியே போனதும் இரவீந்தரன்
தன் மேஜை டிராயரை திறந்து அதில் இருந்த ஒரு பைபிளை வெளியே எடுத்தார் .பின்பு புரட்டி
பார்த்துவிட்டு ஏதோ யோசனை செய்தார்.பின்பு மறுபடியும் மேஜைக்குள்ளேயே வைத்து விட்டார்….
5
இரவு ஒன்பது மணி.
டிபுட்டி கமிஷனர் இரவீந்தரன் தனது குவாட்டர்ஸ்
முன்னால் இருந்த முற்றத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக
பாடிக்கொண்டிருந்தார்..
கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன் ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே..
அச்சம்
என்பது மடமையடா
அஞசாமை
திராவிடர் உடமையடா
டிசி இரவீந்தரனுக்கு ஒரு பழக்கம் உண்டு, மிகப்பெரிய பிரச்சனையில்
ஊரே அல்லாடும்போது இவர்மட்டும் தனியாக வேறு எதாவது ஒன்றில் மனதை செலுத்துவார். சிலமணிநேரம்
இப்படி கழியும்….அவருக்கு பழைய சினிமாப் பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
ஒரு மிகப்பெரிய சரித்திர பின்னணியை சாதாரன பாடல் மூலமாக சொல்லும்
போது அது எளிமையாக எல்லோருக்கும் சென்று அடைகிறது, என்று தனக்குத் தானே வியந்து
கொள்வார்..
இசையை பற்றி அவருக்கு அதிகம் தெரியாது.ஆனால் அதை தெரிந்து கொள்ள
அவருக்கு ஆவல் அதிகம்….இன்று பாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு வேறு ஒரு எண்ணம்
வந்தது.
மனைவியை காணோம் என்று பூகார் கொடுத்த இம்மானுவேல் அவருக்கு
நினைவுக்கு வந்தான்.அவனிடம் இந்த இசையை பற்றி கேட்டால் என்ன என்று நினைத்தார்.
தன் உதவியாளனை அழைத்தார்.இன்ஸ்பெக்டர் ஹரியை கூப்பிடு என்றார்.சில
விணாடிகளில் போலிஸ் மைக்கில் ஹரி வந்தார்.
அந்த இம்மானுவேல்…அதான் ஒய்பை காணோம்னு கம்ளையிண்ட்
கொடுத்திருந்தான்ல அவன உடனே என்கிட்ட அழைச்சிகிட்டு வரமுடியுமாண்ணு பாருங்க…பத்து
மணி வரைக்கும் கிடைக்கலைண்ணா விட்டிருங்க..
இன்ஸ்பெக்டர் ஹரிக்கு குழப்பமாக இருந்தது. அது என்ன பத்து மணி
வரைக்கும் கெடு..
சரி நமக்கு எதுக்கு இந்த கேள்வி..என்று நினைத்துக்கொண்டு ஒரு
காண்ஸ்டபிளிடம் விஷயத்தை சொன்னார்.
அவன் பைக்கில் இம்மானுவேல் வீடுநோக்கி பறந்தான்.
இம்மானுவேல் படுத்திருந்தான்..
அடுத்த பத்து நிமிடத்தில் இம்மானுவேல் டிசி இரவீந்தரன் முன்னால் நின்று
கொண்டிருந்தான்…..இம்மானுவேலை இரவீந்தரன் கவனித்தார்.
ஷேவ் செய்து பல நாட்கள் ஆன முகம்..அழுக்கான சட்டை..இம்மானுவேலை
பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது இம்மானுவேலை உட்காரச் சொன்னார்..
.தன் உதவியாளிடம் இம்மானுவேலுக்கு டீ கொடுக்க சொன்னார்.
இம்மானுவேல் சகஜ நிலைக்கு கொண்டு வர இரவீந்தரன் விரும்பினார். இப்போது சங்கீதத்தை பற்றிய அவரின் தேடல்
மறைந்து போனது.
இம்மானுவேல் தனக்கு முன்பதாக இருக்கும் பெரிய அதிகாரி சாதாரண
உடையில்(சீருடை இல்லாமல்) இருந்தாலும் சற்று தூரத்தில் துப்பாக்கியுடன் இருக்கும்
காவலர்களை பார்த்தபோது அதிகம் பயந்தான்…
இம்மானுவேல் டீ குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த
இரவீந்தரன் கேள்வியை கேட்க துவங்கினார்.. எத்தனை
வருஷமா கச்சேரியில ஆர்டிஸ்டா இருக்கீங்க.. மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்..
டிசி
இரவீந்தரனுக்கு அந்த வசனம் தெளிவாக கேட்டது..இப்படி ஒரு வசனம் பைபிளில் இருக்கிறதா..?
அதை பார்க்க வேண்டுமே என்று நினைத்தார்.ஆனால்
தன்னிடம் வீட்டில் பைபிள் இல்லை.மேலும் அந்த வசனம் எங்கே இருக்கிறது என்ற
விபரமும் தெரியாது .ஸ்பீக்கரில் இருப்பிடம் சொல்லப்பட்டது.அனால் அது புரியவில்லை.
ஆகவே நாளை காலை
பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு தூங்கி விட்டார்.
காலை பத்து மணிக்கு வளர்மதி வீட்டுக்கு முன்னே
டீபுட்டி கமிஷனர் இரவீந்தரன் நின்று கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் இருந்து
ஒரு அம்மா எட்டிப் பார்த்தார்கள்..
பொண்ணுத்தாய் அம்மா காணாமல் போன விஷயம் மெதுவாக அந்த
தெரு முழுக்க பரவி இருந்தது..போலீஸ் ஜீப் நின்றதும் பலர் வீட்டில் இருந்து எட்டி
எட்டி பார்த்தபடி இருந்தனர். யாரும் பக்கத்தில் வரவில்லை.
டிசி.இரவீந்தரனுக்கு பக்கத்தில் இன்ஸ்பெக்டர்
ஹரியும் ஏசி பீட்டரும் நின்று கொண்டிருந்தாகள்….
வளர்மதி கதவை திறந்து கொண்டு வாசலில் நிற்கும்
இவர்களை எப்படி உள்ளே அழைப்பது என்று குழப்பத்தில் இருந்தாள்..
அப்போதுதான் குளித்து தலையை துவட்ட பெரிய டவலால் தலையை சுற்றி கட்டி
இருந்தாள்...வளர்மதி பழைய சினிமா நடிகையை நினைவு படுத்தினாள்...இரவீந்தரன்
வளர்மதியை நோக்கி சென்றார்.
வளர் மதி வீட்டிற்குள் அழைத்து
சென்றாள்…
பொன்னுத்தாய் உங்க அம்மாவா..?
ஆமா சார்.நாங்க இரண்டுபேரு . அம்மா
எங்கூட இருக்காங்க. சென்னயைில் தம்பி
மந்திரிகிட்ட பிஏவா இருக்கான்…
உங்க அம்மா கடைசியாய் படுத்திருந்த ரூம்மை
பார்க்க வேண்டுமே…
உள்ள வாங்க. வளர்மதி அழைத்துச் சென்றாள்…பல
இருட்டு அறைகளை தாண்டி ஒரு வெளிச்சமான அறை. ஒரே ஒரு கட்டில். சுத்தமாக விரிக்கபட்ட
படுக்க விரிப்பு.
இரவீந்தரன் யோசித்தார் ..இந்த அறையில் இருந்து
கடத்துவது முடியாத காரியம்…..டீசி இரவீந்தரன் பார்வை அந்த அறையை உண்னிப்பாக
கவனித்தது..
நான் ஒரு போலிஸ்காரன்..மக்களுக்கு பாதுகாப்பு
அளிப்பவன்..நான் நம்பிக்கை தளர்வது நல்லது அல்ல.
.குற்றங்களை தடுக்க, அல்லது செய்த குற்றத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்கும்
பொறுப்பு உள்ள ஒரு அதிகாரி… ஆகவே .கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் இப்போது
தனக்கு உதவி செய்ய வேண்டும்.ஏனேன்றால் கடவுளின் வேலையைத்தான் பூமியில் போலீஸ் காரர்கள் செய்து
கொண்டிருக்கிறார்கள்….அது பாதுகாப்பது, குற்றத்திற்கு தண்டணை வாங்கி தருவது.
அந்த அறையில் மூலையில் ஒரு மர பீரோ கதவு
மூடப்பட்டிருந்தது…..
அந்த பீரேவை திறங்க..
பீரோ திறக்கபட்டது. சேலைகள் அடுக்கி வைக்கபட்டிருந்து..இரண்டு
சேலைக்கு நடுவில் ஒரு சின்னதாய் ஒரு கேப்.உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போல தெரிந்தது.
இரவீந்தரன் மொதுவாக இரண்டு சேலைக்கும் நடுவில் விரல்களைவிட்டு
பிரித்து பார்த்தார்.உள்ளே கருப்பாக ஏதோ சிறிய பெட்டிபோல ஒன்று, இன்னும் அகலமாய் விரித்து
பார்த்தார். அது பெட்டி இல்லை என தெரிந்தது.அது
ஒரு புத்தகம்….இப்படி மறைத்து வைக்க கூடிய அளவுக்கு அப்படி என்ன இந்த புத்தகத்தில்
இருக்க போகிறது.
மெதுவாக அந்த புத்தகத்தை வெளியே இழுத்தார்.அது ஒரு பழைய
பைபிள்..
இரவீந்தரனுக்கு வியர்த்தது.
ஹரிக்கு எதுவும் புரியவில்லை…பீட்டருக்கு சுமாராய்; புரிந்தது…
வளர்மதி வியர்வையில் நனைந்து
மீண்டும் குளித்துக்கொண்டிருந்தாள்……
இது என்ன பைபிள்…? நீங்க கிறிஸ்டியனா..?
வளர்மதி கொஞ்சம் குழப்பத்துடன் பதில் அளித்தாள்… நாங்க கிறிஸ்டியன்
இல்ல.இது எங்க அம்மாவுக்கு யாரோ கொடுத்ததா சொல்வாங்க. அப்போ இத படிச்சிகிட்டு
இருக்கிறத பார்த்திருக்கேன்
இரவீந்தரன் பைபிளை பரித்தார் பைபிளில் ஒரு இடத்தில் ஒரு துண்டு
காகிதம் சொருகபட்டிருந்தது.பைபிள் விரிக்கபட்டது.ஒரு பெரிய அடைப்பு குறிக்குள் ஒரு
வசனம் குறிக்கபட்டிருந்தது…இரவீந்தரன் மெதுவாக படித்தார்..
1.
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
ம்…..அதை பீட்டரிடம்
காட்டினார்..பீட்டர் படித்துவிட்டு பைபிளை மூடினார்.வளர்மதிக்கு எதுவும்
புரியவில்லை..
இரவீந்தரன் சொன்னார்.இந்த
பைபிளை நான் எடுத்துச் செல்கிறேன் என்றார்.வளர்மதி குழப்பத்துடன் தலையை
ஆட்டினாள்…….
போலீஸ் ஜீப்புக்கு வந்த
டிசி இரவீந்தரன் பைபிள் முன் பக்கத்தை பார்வையிட்டார்.அதில் கர்த்தரின் ஊழியன் வேத
நாயகம் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது..
இந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி
இருக்கிறதே.இரவீந்தரன் இன்ஸ்பெக்ட்டர் ஹரியை அழைத்து வேதநாயகம் என்ற பெயரில்
எதாவது கம்ளையிண்ட் இருக்கா. என்று கேட்டார்..
ஹரி..ஒரு நிமிடம்
யோசித்துவிட்டு ஆமா ஜயா… ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி காணாமல் போய் விட்டவர்களில் அவரும் ஒருவர் .அவர் ஒரு
பாஸ்டர்.
டிபுட்டி கமிஷனர்
இரவீந்தரன் தீர்மானமாய் ஒன்றை நம்பினார்.இதில் ஏதோ ஒரு காரியம்
இருக்கிறது.கடைசிவரை இதை கண்டுபிடித்து தீருவது என்ற முடிவுக்கு வந்தார்..
பீட்டரிடம் சொன்னார் .பீட்டர் நீங்க இன்று இரவு ஏழு மணிக்கு என்
குவாட்டர்ஸ்சுக்கு வாங்க இதை பற்றி உங்க கிட்ட பேச வேண்டும் என்றார். பீட்டர் சரி
யென்று தலையை ஆட்டினார்.ஹரிக்கு ஒன்று
புரிந்தது:. டிபுட்டி கமிஷனர் வேறு ஒரு ரூட்டில் துப்பறிகிறார்.
சரி நடக்கட்டும் என்று கவனிக்காதவர் போல இருந்து கொண்டார்.
7
போலீஸில் பொரிய அதிகாரிகளுக்கும்
ஓய்வு நேரம் என்பது கிடையாது. எந்த நேரமும் அலாட்டாக இருக்க வேண்டும்..ஊர் தூங்கும்
போது விழிப்பாய் இருக்கவேண்டும்.ஊர் விழித்துக் கொண்டால் போலீசும் செயல்படவேண்டும்..எந்த
நேரமும் குற்றத்தின் பிண்ணனியை பற்றியும் குற்றத்தை பற்றியும் யோசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.. மக்கள் சமாதானமாய் இருக்கவேண்டும்
என்றால் போலீஸ் சமாதானம் இல்லாமல் இயங்க வேண்டும். எல்லா நாட்டுக்கும் இந்த விதி பொறுந்தும்.
டிசி இரவீந்தரன் அவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்..ஏசி
பீட்டர் சற்று தூரத்தில் ஜீப்பை விட்டு இறங்கி இரவீந்தரன் இடம் வந்து சல்யூட் அடித்துவிட்டு
பக்த்தில் இருக்கும் சேரில் அமர்ந்தார்.
இரவீந்தரன் பேச ஆரம்பித்தார்.
பீட்டர்; நாம இப்போ பேச போவது
முக்கியமான விஷயம்..எனக்கு சில உண்மைகள் தெரியவேண்டும்..
இஸ்லாமியரும், யூதர்களும், கிறிஸ்தவர்குளும் கடவுள் பூமிக்கு வருவார் என்று
நம்புகிறார்கள்.
ஆனால் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் கூடுதலாய் கடவுள் வருகைக்கு தாம் வரும் முன்னே
சிலரை பூமியில் இருந்த தன்னிடம் எடுத்துக் கொள்வார் என் நம்புவது ஏன்…?
பீட்டருக்கு பைபிளை பற்றி அதிகம்
தெரியாது..ஆகவே இப்படி கேள்விக்கொல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இருந்தாலும்
ஏதோ பதில் சொன்னார்..
ஆமா…அது கிறிஸ்தவர்கள் நம்பிக்கை
.ஆனால்.எதற்காக என்று எனக்கு தெரியவில்லை..
இரவீந்தரனின் அடுத்த கேள்வி பீட்டருக்கு
கொஞ்சம் கடினமாய் இருந்தது. பைபிளில் எந்த இடங்களில் இதை பற்றி எழுதி இருக்கிறது..
பீட்டர் கொஞ்சம் கவலையோடு பதில்
அளித்தார்..எனக்கு இதை பற்றி சரியாக தெரியாது.ஆனாலும் தானியேல் என்ற புத்தகத்திலும்
வெளிப்படுத்தின விஷேசம் என்ற புத்தகத்திலும் எழுதி இருப்பதாக நினைக்கிறேன்.
வேறு விபரம் எதாவது.?இது இரவீந்தரன்
நான் சின்ன வயதில் எங்கள் ஆலயத்தில்
ஒருவர் வந்து பெரிய படங்கள் வரைந்து “இரண்டாம்
வருகை” இதை பற்றி மூன்று நாள் பிரசங்கம் செய்திருக்கிறார்..அப்போது கேட்டதுதான்.அதன்பின்
இதை பற்றி கேள்வி படவில்லை.பல வருடங்கள் ஆகிவிட்டது.சமீப காலத்தில் சர்ச்களில் இதைபற்றிய
எந்த தகவலும் இல்லை.
இப்போது உள்ளவர்கள் ஏன் இதை பற்றி பேசவில்லை.?
தெரியவில்லை. ஒருவேளை இதை நம்பாமல்
இருக்கலாம்.அல்லது இதை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பில் இதை விட்டிருக்கலாம்..?
ஆக கிறிஸ்தவர்கள் மறந்த ஒரு விஷயத்தை
போலீஸ் கையில் எடுத்திருக்கிறது..இரவீந்தரன் சிரித்தார். பீட்டர் சிரிக்கவில்லை.. பீட்டருக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது.என்னதான்
போலீஸில் வேலை பார்த்தாலும் தான் ஒரு இறை நம்பிக்கை உள்ளவன்தான்
, அனால் எந்த மதத்தில் இருக்கிறோமோ
அதை பற்றி அறிவு ஒருவனுக்கு இருக்க வேண்டுமல்லவா, தன்னிடம் அப்படி இல்லாதது வருந்தக்கூடியது
தானே.என்று நினைத்துக் கொண்டார்.
இரவீந்தரன்
தொடர்ந்தார்..சரி அன்று உங்களுக்கு இதை போதித்த அந்த நபர் பெயர் தெரியுமா.?
பீட்டர்
கொஞ்சம் யோசித்து விட்டு அவர் பெயர் பாக்கியநாதன் சார்.
அவர்
இப்போது எங்கே இருக்கிறார்.அவரை நான் உடனே பார்க்வேண்டும்…
பீட்டருக்கு
வியர்த்தது. சார் அவர் ஒரு கேசில் சம்பத்தபட்டு ஜெயிலுக்கு போய்விட்டார்.இப்போது அவர்
ஜெயிலில் இருக்கிறாரா அல்லது வெளியே வந்து விட்டாரா என்பது தெரியாது.
எந்த
ஊர் ஜெயிலில் இருந்தார்…
பாளையங்கோட்டை.
நல்லதாக
போய்விட்டது.என் நன்பன்தான் இங்கே அதிகாரியாக இருக்கிறான்..பாக்கிய நாதனை கண்டுபிடிப்பது
சுலபம்.
சரி பீட்டர்.. நீங்கள் போகலாம்.. ஒரு
நிமிடம் பீட்டர். இயேசுகிறிஸ்துவின் வருகை அல்லது இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல்
பற்றி நீங்கள் பைபிளில் எந்த புத்தகத்தில்
இருக்கிறது என்றீர்கள்…
பீட்டர்
அப்போதுதான் கவனித்தார் .இரவீந்தரன் இருந்த சேருக்கு பக்கத்தில் ஒரு ஸ்டுலில் ஒரு பைபிள்
வைக்கபட்டிருந்தது.
அது நேற்று
காணாமல் போன பொண்ணுத்தாய் வீட்டில் இருந்து எடுத்து வந்தது..
தானியேல் என்ற புத்தகத்திலும்
வெளிப்படுத்திய விஷேசம் என்ற புத்கத்திலும் சார்..
கடவுள் மனிதனை எதற்காக கடத்த வேண்டும்.அதாவது
பிரிக்கவேண்டும்.?..அப்படி என்ன அவசியம் வந்தது.
கடத்தபட்ட மனிதர்களின் கதி என்னவாக
இருக்கும்..?
கடவுளுக்கு பூமியின் மனிதர்களை
கண்டு பயமா.?
மீண்டும் கடத்தபட்ட மனிதர்கள்
பூமிக்கு வருவார்களா.?
பூமியின் அரசாங்கங்கள் இயேசுவை
வரவேற்குமா அல்லது எதிர்க்குமா,?அப்படி எதிர்த்தால் போலீஸ் இலாக கடவுள் பக்கம் நிற்குமா
மனிதர்கள் பக்கம் நிற்குமா..?
இப்போது இருக்கும் பூமியில் இயல்பு
வாழ்க்கையை ஏன் கடவுள் கொடுக்க வேண்டும்..?
காணாமல் போனவர்களின் இழப்பு அந்த
குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய நஷ்டம். இதற்கு கடவுள் பொறுப்பேற்பாரா..?இப்படி பல போலீஸ்தனமான
கேள்விகள் இரவீந்தரன் மூளையில் உதித்தது
சரி..முதலில் பாக்கியநாதனை கண்டுபிடிக்க
வேண்டும்.
மணியை பார்த்தார் .இரவு எட்டு
மணி..தன் செல்போனில் பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டண்ட் மதியழகனுக்கு போன் செய்தார். டிசி.இரவீந்தரனின் வேகம் பீட்டருக்கு
பயத்தை உண்டு பண்ணியது.. பீட்டர் எழுந்து
சல்யூட் அடித்துவிட்டு நகர்ந்தார். இரவிந்தரன் சத்தமாக தன் நன்பன் மதியழகனிடம் பேசிக்கொண்டிருந்தார்..பீட்டர்
நகர்ந்ததும். இரவீந்தரன் பாக்கிநாதன் என்ற பிரசங்கியாரை பற்றி மதியழகனிடம் கேட்டார்.மதியழகன்
என்ன பதில் கூறினாரோ தெரியவில்லை.இரவீந்தரன் பக்கத்தில் இருந்த வெள்ளைத்தாளில் ஏதோ
குறித்துக்கொண்டார்.. அடுத்த நாள் வேறு ஒரு
பயங்கரம் நடந்து..அன்றில் இருந்து உலகம் மாறியது…
8
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று… வெளிப்படுத்தல் விஷேசம்.8:7
மல்லிகா தன் ஸ்கூட்டியை
ஓங்கி மிதித்தாள். அது பல முறை மிதி
வாங்கியபின் மெல்ல உறுமி அடங்கியது. மீண்டும் ஓங்கி மிதித்தாள் . இப்போது சீராக இயங்கியது.
ப்ளோரா …என்று மல்லிகா கூப்பிட்டாள்… ப்ளோரா
மல்லிகாவின் தோழி. இருவரும் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி இருக்கிறார்கள்..இருவரும்
வேறு வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.
மல்லிகாவின் காதலன்
ஜாண்பால் ,அவன் கிறிஸ்தவன் , ப்ளோராவின் தூரத்து சொந்தம். ப்ளோராவின் மூலமாக ஜாண்பால்
மல்லிகாவுக்கு அறிமுகமானான்.
.இருவரின் காதலுக்கும் ஒரே தடை மதங்கள்தான். ஜாண்பால் கிறிஸ்தவன். மல்லிகா வேறு மாதம். ஜாண்பால் கிறிஸ்தவனாய்
இருந்தாலும் பைபிளை வாசித்ததே இல்லை என்பதை விட அவனுக்கு சொந்தமாக ஒரு பைபிள் கூட இருந்ததில்லை.
ஆனால் என்னதான் பெயர்
ஜாண்பால் கிறிஸ்தவனாய் இருந்தாலும் வேறு மதத்தில் உள்ள பெண்ணை எப்படி திருமணம் செய்வது
என்று யோசித்தான். மல்லிகா சொன்னாள் உங்கள் நம்பிக்கைக்கு நான் எந்த
இடைஞ்சலும் பண்ணமாட்டேன் அதுபோலவே நீங்களும் இருந்தால் போதுமானது என்றாள்
.ஜாண்பாலுக்கு இது
சரியாக படவில்லை. ஒரு
வீட்டில் இரண்டு மதங்கள் எப்படி இருக்க முடியும் . நாளை பிள்ளைகள் பிறந்தால் அது எந்த கடவுளை பின்பற்றும்.. ஒன்று சிலை வழிபாடு கூடாது
என்கிறது மற்றது அதை அரவணைக்கிறது. ஒன்று
ஒரு பிறவிதான் என்கிறது. மற்றது அப்படி இல்லை என்கிறது. ஜாண்பால் மற்ற சாமி படங்களுக்கு இடையில் இயேசு
கிறிஸ்துவும் நெற்றியில் சந்தன பொட்டும் கழுத்தில்
ஜவ்வாது மாலையுடன் இருப்பதாக கற்பனை செய்து
பார்த்தான் .சிரிப்பாய் வந்தது. சிரித்துவிட்டான்
என்னவென்று மல்லகா கேட்டாள்.விஷயத்தை சொன்னான்.மல்லிகா ஜாண் பாலின் தொடையில் வலுவாக
கிள்ளினாள். ஆக எந்த முடிவும் எடுக்க முடியாமல் இவர்கள் திருமண
நாள் தள்ளிப்போனது. ஆனால் நிதானமாக இருவரும் இருந்தார்கள். பொறுப்பான நன்பர்களாய் வாழ்ந்தார்கள்..
சரியாக ஒன்பது முப்பதுக்கு
இரயில்வே கேட் மூடி விடுவான். அதற்குள் அந்த இடத்தை தாண்டி விட வேண்டும்….ஆனால் ப்ளோரா
எப்போதும் லேட்டாகவே கிளம்புவாள்…தினமும் மல்லிகா ப்ளோராவை திட்டுவாள்… ஸாரி மாமியாரே… நான் கிளம்பிட்டேன்
என்று ப்ளோரா கிண்டலாக பதில் சொல்லுவாள்…இன்றும் அப்படியே நடந்தது..ப்ளோரா சீக்கிரமாக
வந்து தொலை…:அங்கே இரயில்வே கேட் அடைச்சிடுவான் என்று மல்லிகா கத்தினாள்…ப்ளோரா வேகமா
ஓடி வந்தாள்..
இருவரையும் சுமந்து
கொண்டு ஸ்கூட்டி விரைந்து ஓட ஆரம்பித்தது..இரயில்வே கேட் மூடுவதற்காக சிவப்பு விளக்கு
போடப்பட்டு பீப்…பீப்.என்று மெல்லியதாய் அதில் இருந்து சத்தம் வர தொடங்கும் போது மல்லிகா
ஸ்கூட்டி அந்த இரயில்வே கேட்டை தாண்டியது…இரயில்வே கேட்டை தாண்டியதும் இருவரும் சிரித்துக்
கொண்டார்கள்… மல்லிகா நினைத்தாள்:அம்மாவுக்கு
போன் பண்ணவே இல்லியே. தன் போண் ரீ சார்ஜ் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.மெதுவாக
பக்கத்தில் இருக்கும் ஒரு மொபைல் ரீ சார்ஜ் கடையை நோக்கி ஸ்கூட்டியை விட்டாள்...
ஸ்கூட்டி பக்கத்தில்
ப்ளோரா நின்று கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருந்தாள். வானம் கொஞ்சம் இருண்ட
மாதிரி தெரிந்தது. ப்ளோரா வானத்தை அண்ணாந்து பார்த்தாள்…..மேக மூட்டம் இல்லை . ஆனால் வெயில் குறைந்து மந்தாரமாக இருக்கிறதே
அது எப்படி.? என்று யோசித்துக் கொண்டே மேகத்தில் எதையோ தேடினாள். அப்போதுதான் மேலே வெகு தூரத்தில் வெண்மையாக அடர்த்தியாக
பனித்துளிகள் போல ஏதோ ஒன்று மொத்தமாக பூமியை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டாள்.
எல்லா திசையிலும் அது நிறைந்து காணப்பட்டது..வெள்ளைப் போர்வையாக கீழ்நோக்கி வந்து கொண்டு
இருந்தது. ப்ளோரா தலையை நன்றாக
தூக்கி கவனித்தாள்..ஆம் அது கீழ் நோக்கி வந்து கொண்டே இருந்தது.
இப்போது நன்றாக தெரிகிறது.சூரிய வெளிச்சத்தில் அவைகள் மின்னியது.முப்பது அடி
தூரத்தில் வந்து விட்டது. ப்ளோரா யோசித்தாள்.மழைத் துளிகள் இப்படியா மெதுவாகவா இறங்கும்.! ப்ளோராவின் யோசனைகள்
முடியும் முன்னே அவள் முகத்தில் அந்த துளிகள் இறங்கி அமர்ந்தது. கையிலும் உடம்பிலும்
சில இடத்தில் பனித்துளிகளாக ஒட்டியது…முகத்தில் பட்ட துளிகள் ப்ளோராவுக்கு சில் லென்று
குளிர்ந்தது.அவள் அதை இரசித்தாள்.
.இது இரண்டு வினாடிகள்தான்.. அடுத்து லேசாக சுட்டது. ப்ளோரா சிலிர்த்தாள்..இது
என்னவாக இருக்கும் என்று நினைக்கும் முன்னே அவள் முகத்தில் பட்ட அத்தனை துளிகளும் ஒன்று
சேர ஒரு நேரத்தில் ப்ளோராவின் பின்னந் தலையின் மையப்பகுதியை நோக்கி குறுக்காக பாய்ந்தன.. நூறு ஊசிகளை
மொத்தமாக முகத்தில் குத்தினால் எப்படி இருக்குமோ அது போல விருட்டென்று வேகமாக பாய்ந்தது. ப்ளோரா
வீல் என்று அலறினாள். தூரத்தில் இருந்த
மொத்த மனிதர்களும் ப்ளோராவைப் பார்த்தார்கள். கடைக்குள் இருந்த மல்லிகாவுக்கும் ப்ளோராவின்
சத்தம் மெதுவாக கேட்டது. ப்ளோரா சரிந்து கொண்டிருப்பதை
பார்த்த மல்லிகா ப்ளோராவைநோக்கி ஓடிவந்தாள்.. ப்ளோராவின் உடலெங்கும் கொப்பளங்கள் வெடித்தன..
இதற்குள் சாலையில்
நின்று கொண்டிருந்த பலரும் அலறினார்கள்.. அலறல்கள் நாலாபக்கமும் கேட்டன. பலர் சரிந்து கிழே விழுந்தனர் இரண்டு சக்கரத்தில்
வாகனத்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் வண்டிகளை தவறவிட்டு ரோட்டில் வழுக்கி விழுந்தனர். விரைவாக வந்து கொண்டிருந்த
கார்கள் சடர்ண் பிரேக் அடித்து நின்றது.. சிலது முன்னால் போய் இடித்து கொண்டு நின்றது..கலவரம்போல
சாலை மாறியது.எங்கும் ஓலங்கள்.
மல்லிகா ப்ளோராவைத்
தூக்கினாள்..ப்ளோரா முகம் கோரமாக ஆகி வீங்கி போயிருந்தது..தொடர்ந்து மொத்த ஊரும் அலறியது.
என்ன நடந்தது என்று
யாருக்கும் தெரியவில்லை .என்னவென்று கேட்டால்
யாரும் பதில் சொல்லத் தெரியவில்லை. உதவி உதவி என்று பலரும் பல விதமாய் கேட்டார்கள்.கடைசியாய்
இது போலீஸ் காதுகளிலும் விழுந்தது. போலிஸ் மைக் விடாமல் கத்தி கட்டளையை பிறப்பித்தது
.
டிபுட்டி கமிஷனர்
இரவீந்தரன் என்னவென்று கேட்டார்: பல இடங்களுக்கும் போலீஸ் பறந்தது. சாலையில்
போன எல்லோருமே இந்த கோரத்திற்கு ஆளானார்கள்….
இந்த பயங்கரம் மொத்த
ஊரில் மட்டுமல்ல உலகமெங்கும் ஒரே நேரத்தில் நடந்தது..மருத்துவ மனைகளை மக்கள் கூட்டம் நெருக்கியது..
எந்த மருந்து போட்டாலும் உடலில் வெடிப்பு அடங்க மறுத்தது..மருந்து கடைகள் பல
புதிய மருந்துக்களை மக்களுக்கு சொன்னார்கள். எதை
சொன்னாலும் மக்கள் வாங்கினார்கள். மருத்துவ கவுன்சில் கூடி விவாதித்தது.அரசாங்கம்
பயப்பட வேண்டாம் என செய்தி ஒளிபரப்பியது.. மக்கள் பயத்திலே வீட்டிலே
அடங்கி கிடந்தார்கள்.. வானத்தில் இருந்து அமிலத்துளிகள்
வந்தன என்று யாரூ ஒருவர் சொல்ல மொத்த உலகமும் அது உண்மைதான் என்றது.
இந்த நோய் மற்றவர்களையும்
தொற்றுகிறது என்ற புரளியும் பரவியது.
இது உண்மையா
என கண்டறிய யாருமே முன் வரவில்லை. மருத்துவ செவிலியர் தங்களுக்கும் இந்த நோய் வந்து
விட்டது என்று பொய் சொல்லி வீட்டில் இருந்த கொண்டார்கள்.. செவிலியர் இல்லாமல் தாங்களால்
எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.. அரசாங்கம்
மருத்துவர்களை பயமுறுத்தியது….
சாதாரணமாக வானம் இருண்டுவிட்டாலும்
மக்கள் பயத்தில் அலறினார்கள். பயத்தில் செத்துப் பிழைத்தார்கள்.
தூரல் வீழும் என்று
தெரிந்தாலே பள்ளிகள் விடுமுறை அறிவிக்கபட்டது.
மீண்டும் ஒரு நாள் சரியாக எட்டு மணிக்கு அமில மழை பெய்தது. இப்போது வேலைக்கு
போய்விட்டு வீட்டிற்கு திரும்பும் பெரியவர்களும் ,கணவனுடன் ஷாப்பிங் செல்லும் பெண்களும்,பிள்ளைகளும்
இந்த தாக்குதலுக்கு ஆளானார்கள்.வீதியெங்கும் ஓலமாக கேட்டது…இந்தியாவில் இரவாய் இருக்கும்போது
அமெரிக்காவில் பகலாய் இருந்தது. இப்போது அடி அங்கே பலமாய் விழுந்தது..பூமியின் சொர்க்கம்
என் அழைக்கப்பட்ட அமெரிக்கா, நரகத்தின் வாய் போல அலறியது..யாருமே தப்பவில்லை.எல்லா
நாடுகளும் அஞ்சி நடுங்கின. இதற்கு யார்
காரணம் என்று தெரிய துடித்தது.ஆனால் எதுவும் அகப்படவில்லை.இரவும் பகலும் உலகமக்கள்
திகிலால் மூழ்கி கிடந்தனர்..இதில்
பலர் மரணமடைந்தனர். தூக்கி புதைக்க உறவுகள் வரவில்லை. நோய் தாக்கிய கோரமான
அந்த முகங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கியது… போலீஸார் குடும்பங்களும்
இதில் பாதிக்கபட்டு இருந்ததால் பாதி போலீஸார் பணியில் இல்லை..கட்டுப்பாடு இல்லாமல்
நாடுகள் தாறுமாறக சிதைந்தது.காட்டில் பணியாற்றிய இரணுவத்தினர் அமில தாக்குதலால் சிதைந்து
போனார்கள்..மறுபடியும் அப்படி நேராது என்பதற்கு யார் பொறுப்பேற்பது என்று கேட்டார்கள்..முக்கியமாக
இந்த அமில தாக்குதல் யாரால் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலை தேடி உலகம் முழவதும்
ஒற்றர்கள் சல்லடையாக சலித்தனர்.ஆனால் எந்த பதிலும் எள் முனையளவு கூட கிடைக்கவில்லை.
நமது நாட்டில் இது
எப்படி நடந்தது என்று பலரும் பலவிதமாய் பேசினார்கள்… மாநில அரசுகள்
மத்திய அரசை கண்டித்தது.
மத்திய அரசு தங்கள் பக்கத்து நாட்டீன் மீது பழியைப் போட்டது. உலகநாடுகள் ஒன்றை
ஒன்று சந்தேகப்பட்டன.
இந்தியா பாகிஸ்தானை
வசைபாடியது. பாகிஸ்தான் இது
இந்தியாவின் அயோகியத்தனம் என்றது…ஆனால் இரண்டு நாட்டிலும் மக்கள் படும அவதியை தொலைக்காட்சி
மூலமாக தெரிந்து கொண்ட மக்கள் அதன் பின் இந்த குற்றச்சாட்டு பொய் என்று நம்ப துவங்கினர். அமெரிக்காவை
ரஷ்யா சந்தேகித்தது.அமெரிக்கா சீனாவை சந்தேகித்தது.சீனா அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சந்தேகித்தது.
அரபு நாடுகள் இஸ்ரேல்
மேல் குற்றம் சாட்டியது. ஆனால்
இஸ்ரேல் அமைதியாக இருந்தது.காரணம் அங்கு ஒரு சதவீதத்தைதான் இந்த நோய் தாக்கி இருந்து.
காரணம் அந்த நாட்டின் பாதுகாப்பு அப்படி இருந்தது.
எதிரிகள் எப்போது
வேண்டுமானாலும் இஸ்ரேல் மேல் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற காரணத்தால் இஸ்ரேல் நாட்டின்
மொத்த பகுதியையும் ராடர் சாதனத்தின் மூலம் துல்லியமாக கண்காணிக்கபட்டு கொண்டே இருக்கும்படி
இஸ்ரேல் செய்திருந்தது. .வானத்தில் இருந்து மெல்லியதாய் இந்த கோரமான பனித்துளிகள் இறங்கும்போது
அது தானாகவே படம் பிடிக்கபட்டு இதில் இரசாயனக் கலவை இருக்கிறது என்று அறிந்து உடனடியாக
இஸ்ரேல் தேசமெங்கும் அபாய சங்கு ஒலிக்க ஆரம்பித்து. இந்த அபாயகரமான துளிகள் பூமியை
வந்து அடையும் முன்பே மக்கள் பல இடங்களில் பதுங்கி கொண்டனர்..
சிலர் மட்டுமே இதில்
சிக்கி கொண்டனர்.அவர்களை பத்திரமாக இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு
வந்து விட்டது. ஆகவே இஸ்ரேல் அமைதியாக அடுத்த தாக்குதலுக்கு தன்னை தயார் படுத்தியது.
இஸ்ரேலின் பொறுமை மற்ற நாடுகளுக்கு எரிச்சலை ஊட்டியது..இந்த பொறுமையின் இரகசியம் மற்ற
நாடுகளுக்கு புரியாததால் அவைகள் மொத்தமாக இஸ்ரேல் மேல் கடுப்பாகி இருந்தது.
.உலகம் கொந்தளிக்க
ஆரம்பித்தது..கலவரம் வெடித்தது.கட்டுப்பாடு இல்லாமல் உலகமே தன்னைத்தானே தாக்கிக் கொண்டது..
ஒரு மாதம் ஆகியும்
எந்த முன்னேற்மும் இல்லாமல் உலக மக்கள் மொத்தாக அலற துவங்கி இருந்தனர். யார்,
யாருக்கு சமாதானம் சொல்ல..
தொலைக்காட்சி பெட்டிகள் செயல் இழந்தன. .
காரணம் அதில் ஆடல் பாடல் வந்ததால் தொலைக்காட்சி நிலையங்கள் மக்களால் அடித்து
நொறுக்கபட்டன. சினிமா உலகம் ஸ்தம்பித்தது. படப்பிடிப்பு நிறுத்த பட்டது. கேளிக்கை நிகழ்ச்சிகள்
முற்றிலும் தடை செய்யபட்டடது.
அரசு அலுவலகங்கள் பெயருக்கு இயங்கியது.அரசியல் தலைவர்களை மக்கள் வெறுத்தனர்.
யார் முலமாக இதில் இருந்து மீட்பு வரும் என்ற
ஏக்கத்தில் தவம் கிடந்தனர். தினமும் சாவு மட்டுமே செய்தியாக வந்து கொண்டே இருந்தது
ஒரு நாள் இரவு இதற்கு நிவாரணம் கண்டுபிடிக்கபட்டது என்றும் இதனால் மக்கள்
சுகமடைகின்றனர் என்றும் எல்லா தொலைகாட்சியிலும் திடிரென்று அறிவிக்கபட்டது…
உலக நாடுகள் இனி பயப்பட தேவையில்லை என்றும் இதை பற்றி டாக்டர் ரூடால்ப் (Dr. Rudolf ) இரவு
பத்து மணிக்கு தொலைக்காட்சியில் பேசுகிறார் என்றும் செய்தி வெளியானது..
உலக மக்கள் ஆவலாய் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து
இருந்தனர்.ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் வித்யாசம் இருந்தது. சில இடத்தில் இரவும்
சில இடத்தில் பகலுமாய் இருந்தாலும் மக்கள் இதை பொறுட்படுத்தவே இல்லை.. மின்சாரம்
தடைபடக் கூடாது என்ற கவலைமட்டும் அவர்களிடம் இருந்தது. டிவி நிலையங்கள் தானாய் இதை
ஒளிபரப்ப முன்வரவில்லை என்றும், அது யாராலோ கட்டாய படுத்தபட்டது என்றும் ,. பின்
பல நாட்கள் கழித்து மக்களுக்கு தெரிந்தது.
9
அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். (
வெளிப்படுத்தின விஷேசம்13:3.)
தென் அமெரிக்காவின் கீ…..ழ் பகுதியில் ,பிரிட்டீஷ் ஆதிக்கத்தில்
இருக்கும் ஒரு குட்டித் தீவு.இதில் மொத்த மக்கள் தொகையே இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்போர்தான்….
இந்தியாவில் பகலாய் இருக்கும்போது இங்கு இரவாய் இருக்கும்.ஆகவே உலகம்
அமில துளிகளால் பாதிப்புக்கள்ளாகும்போது இந்த தீவும் பாதிப்புக்குள்ளாகியது….அங்கு
இரவாய் இருந்த படியால் அதிக சேதம் இல்லை…
அங்கு இருக்கும் டாக்டர்
ரூடால்ப் (Dr. Rudolf )
இதற்கான மருந்தை கண்டுபிடித்து இந்த அமிலதாக்குதலுக்கு உட்பட்டவர்களை
குணமாக்கினார்.அதுவும் இருபத்தினான்கு மணிநேரத்தில் முழுவதும் சுகமானது.என்ற
செய்திகளை டிவி பெட்டிகள் சொன்னது.
டிவி பெட்டியில் டாக்டர் ருடால்ப் தோன்றவும் உலகம்
மொத்தமும் மூச்சை உள்வாங்கி அமைதியானது.. அவர் பேசினார்.அவரவர் பேசும் மொழியில்
அந்த பேச்சு தானாக மொழிபெயர்ப்பானது..
என் அருமை உலக பொதுமக்களே…இன்று உலகம் மிகப்பெரிய
சிக்கலில் சிக்கி தவிக்கிறது.இனி வரும் காலத்திலும் இப்படித்தான் இருக்கும் என்பது
என் கணிப்பு…ஆனாலும் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். இப்போது முதலில் உங்களை
தாக்கி இருக்கும் இந்த பயங்கர நோய்க்கு மருந்து என்னிடம் இருக்கிறது.
என்னை நீங்கள் நம்புவதற்காக இந்த நோய் தாக்கபட்ட ஒருவர்
எப்படி குணமடைந்தார் என்பதை இப்போது காணலாம். அதன்பின் நான் பேசுகிறேன். என்று
சொல்லி முதல் பகுதி ஒளிபரப்பு முடிந்தது.
இரண்டாவது
காட்சி ஆரம்பமானது..
நோய்
தாக்குதலுக்கு உண்டான மக்கள் பயங்கரமாக அலறுகிறர்கள்….
டாக்டர்
ருடால்ப் தலைமையில் மருத்துவ குழுவினர் ,நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு
சிகிச்சை அளிக்கிறார்கள்..சில மணிநேரத்திலேயே நோயாளிகள் உடலில் மாற்றம்
ஏற்படுகிறது.
இப்போது மீண்டும்
டாக்டர் ருடால்ப் திரையில் தோன்றுகிறார்.நான் உலக மக்களை
நேசிக்கிறேன்…உங்கள் அரசாங்கம் என்னை அனுமதித்தால் நானே வந்து உங்களுக்கு உதவி
செய்ய காத்திருக்கிறேன்..
நான் கேட்பது எல்லாம் ஒரு ஒரு அனுமதி மட்டுமே..
அதாவது
உங்கள் நாட்டில் நான் எப்போதும் வந்து போகுமாறு உங்கள் நாட்டின் குடிமகன்
உரிமை….அதாவது ஒரு நாட்டின் குடிமகனுக்கு
உள்ள சகல உரிமையும் எனக்கு தந்தால் அடுத்த சில மணிநேரங்களில் நீங்கள்
குணமடைவீர்கள்…..நீங்கள் குணமாவது உங்களை ஆள்பவர்களின் முடிவைப்பொறுத்தது.
அவ்வளவே .திரையில் இருந்து டாக்டர் ருடால்ப் மறைந்தார்.
நாட்டு மக்கள் கொந்தளித்தார்கள்.அவர் என்ன கேட்கிறார்
.சாதாரண குடியுரிமைதானே. அதை கொடுப்பதால் நமக்கு என்ன குறைந்து விடப்போகிறது..
அதை
தொடர்ந்து உலகமெங்கும் விவாதம் இதைப்பற்றியே நடந்து..பலரும் இதை ஆதரிக்கவில்லை…
அவசரத்துக்கு உதவாத டாக்டர் ருடால்ப் மனித தன்மை அற்றவர் என்றது…
பலர் அரசாங்கம்தான் மனித தன்மையை மறந்து இருக்கிறது என்றார்கள்..
இதற்கிடையில் பிரிட்டீஷ் அரசாங்கம் டாக்டர் ருடால்ப் பை
பற்றி விசாரிக்க தொடங்கியது.அவர் உண்மையில்
டாக்டரே இல்லை என்று கண்டு பிடித்தது.அவரை கட்டாயபடுத்தி அந்த மருந்தை வாங்கினால்
என்ன என்று யோசித்தது.இதற்குள் உலகமெங்கும் மிகப்பெரிய புரட்சி ஆரம்பமானது.எல்லாமே
டாக்டர் ருடால்ப்க்கு சாதகமாக இருந்தது.ஆப்பிரிக்கா கண்டத்தில்உள்ள சின்ன சின்ன
நாடுகள் டாக்டர் ருடால்பை ஆர்வமாக வரவேற்றன..அந்த நாட்டு மக்கள் குணமடைந்து
எழுந்து நடப்பது போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஔிபரப்பபட்டன..
சீனா முதலில் டாக்டர் ருடால்பை வரவேற்றது..மிகப் பெரிய
நாடான சீனா டாக்டர் ருடால்பை ஏற்றுக் கொண்டதும் நிறைய நாடுகள் அவரை ஆர்வமாக
வரவேற்றன.
சீனா தனது நிலையை எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்
கொள்ளும் வல்லமை பெற்றது.ஆகவே அது டாக்டர்
ருடால்ப் பற்றி அது எந்த கவலையையும் கொள்ளவில்லை..
ஆனால் உலகின் ஜனநாயகநாடுகள் கவலைப்பட்டன. இந்த கவலை
மக்கள் போராட்டத்தின் முன் எடுபடாமல் போனது.
அகவே டாக்டர் ருடால்பை அவர் கேட்டதின் படியே குடியுரிமை
அவருக்கு சகல நாட்டிலும் கொடுக்கபட்டது .உலகத்தில் எல்லா நாடுகளும் இதை செய்து
முடித்தது.
இஸ்ரேல் நாடு இவரை அங்கீகரிக்வில்லை.அங்கு பாதிக்கபட்ட
மக்கள் என்னவானார்கள் என்ற செய்தியும் யாருக்கும் தெரியவில்லை.
டாக்டர் ருடால்ப் மொத்த உலக நாடுகளுக்கும் சொந்தமானார்.
டாக்டர் ருடால்பை தான் சொன்னபடியே எல்லா நாட்டிற்கும்
தனது மருந்தை அனுப்பி வைத்தார்.உலக மருத்துவ கவுன்சில் அந்த மருந்தை சோதித்து அறிய
முயற்சி செய்தது.ஆனால் அவர்களால் அதன் மூலக்கூறுகளை கண்டறிய முடியவில்லை.வேறு வழி
இல்லாமல் டாக்டர் ருடால்பையும் உலக மருத்துவ கவுன்சில் மருத்துவராக அங்கீகரித்து
கொண்டது..
உலக மொத்த ஜனத்திற்கும்
கதாநாயகன் ஆனார்…மக்கள் அவர் புகைப்படத்தை தங்கள் வீட்டில் மாட்டி வைத்தனர்.
அந்த புகைப்படம் , டாக்டர்
ருடால்ப் தொலைக்காட்சியில் கடைசியாக கையசைத்தபடி நின்றாரே,அது போல இருந்தது .
எல்லோரும் வெற்றியின் அடையாளமாக இரண்டு விரல்களை
உயர்த்திக் காட்டுவார்கள் ஆனால் டாக்டர் ருடால்ப் தனது மூன்று விரல்களை உயர்த்திக்
கொட்டியது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது..
உலக நாடுகளுக்கு புரியாத புதிர்.
(1) இவர்
மருத்துவராக எந்த அமைப்பிலும் பங்கு பெறவில்லை.சாதாரண விவசாயி என்றுதான் இவரை
பற்றிய குறிப்புகளில் கண்டு பிடித்தார்கள்.
(2) கொலைகார
அமிலதாக்குதல் யாரால் நடைபெற்றது என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை
(3) இனி
இப்படி நடந்தால் மீண்டும் ஒரு மனிதனை நம்பி இருக்க முடியுமா.?
(4) தான்
கண்டு பிடித்த மருந்துக்கு பதிலாக வெறும் குடியுரிமையை மட்டும் கேட்ட டாக்டர்
ருடால்பின் பின்னணி என்ன.?இவைகளுக்கு பதில் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்ல.
டாக்டர் ருடால்பை கைது செய்ய திட்டமிட்டார்கள்…இது
பத்திரிக்கையில் கசியவே மக்கள் கொந்தளித்துவிட்டார்கள்.. ஆகவே அரசாங்கம் அவரை கைது
செய்யாமல் விட்டு விட்டுஅமைதியாயிற்று. ஆனாலும் டாக்டர் ருடால்பை காணவேண்டும்
என்று மொத்த உலக மக்களும் அடம் பிடிக்கவே ,மிண்டும் டாக்டர் ருடால்ப்
தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றினார்.
உலக மக்களுக்கு தன்னுடைய பாதுகாப்பு எப்போதும் உண்டு
என்றும் எதை பற்றியும் நீங்கள கவலைப்பட வேண்டாம் என்றும் இன்னும் சிலநாட்களில்
உங்கள் சகல பிரச்சனைக்கும் தன்னால் முடிவு காண முடியும் என்றும் உலகத்தை
சொர்க்கமாக தன்னால் மாற்றிக்காட்ட முடியும் என்றும் கூறினார்..
மக்கள்
ஆரவாரித்தார்கள்.இறுதியாக தன் மூன்று விரல்களை உய்ர்த்தி காட்டி விடைபெற்றார்.
விரல்களை
கவனித்தவர்கள் அதிர்ந்தனர்.
அந்த விரல்களில்
மெல்லியதாய் 666என்ற இலக்கம் வரையப்பட்டு இருந்தது..
10
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. (பைபிள்…வெளிப்படுத்தின விஷேசம்13:16,17,)
ப்ளோரா மெல்ல சுகமானாள்.
மல்லிகா ப்ளோராவை நன்றாக கவனித்தாள்….
மல்லிகாவுக்கு மருத்துவ
மனை வீட்டிற்குபோகலாம் என்று கட்டளையிட்டது
வீட்டிற்கு
வந்து சரியாக ஒரு மாதம் ஆனது.ப்ளோரா மீண்டும் சுகவீனமானாள்..
காய்ச்சல்
நெருப்பாய் கொதித்தது. அதிகாலையிலே ப்ளோரா மெல்ல முனங்கினாள்..பின்பு சத்தம் அதிகமாகி அலறத் துவங்கினாள்.
மல்லிகாவுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.
தெருவுக்கு
போய் ஒரு ஆட்டோவை கொண்டு வந்து ப்ளோராவை பக்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றாள். அந்த இருபது நிமிடத்திற்குள் புளோரா உடல் கறுத்து உடலில் சுருக்கு விழ தொடங்கியது.. மருத்துவர்கள் புளோராவை கவனித்துக்
கொண்டிருக்கும்
போதே நிறைய பேர்கள் ப்ளோராவைப்
போலவே மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்கள்.
மருத்துவமனை நிரம்பி வழிந்தது.
மருத்துவமனை கேட்ட தொகையை மக்கள் கட்டினார்கள்..ஆனால்
ஒருவரும் சுகம் பெறவில்ல என்றதும் மக்கள் கொதிப்பானார்கள்…
அன்று மாலையில் செய்திதாளிலும் தொலைக் காட்சியிலும்
இந்த செய்தி மக்களை அதிரச் செய்தது. உலகம் முழுவதும் இந் காய்ச்சலினால் மக்கள் கருகுகின்றனர்
என்றது.
…யாரெல்லாம் அமில தாக்குதலுக்கு ஆளானார்களோ அவர்களைத்
தான் இந்த காய்ச்சல் மீண்டும் தாக்கி இருக்கிறது ,அப்படியானால் இது டாக்டர்
ருடால்ப் கொடுத்த மருந்தின் எதிர் வினையாக இருக்கலாம் என்றும் கூறியது.
.மக்கள் என்ன
செய்வது என்று தெரியாமல் முழித்தார்கள்.
அரசாங்க மருத்துவர்கள்
இந்த கொள்ளைக்கார காய்ச்சலை நிறுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர்..
அன்று இரவு டாக்டர்
ருடால்பிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியானது.
மக்கள்
மகிழ்ந்தனர்.
அதாவது டாக்டர்
ருடால்ப் பெயரில் மருத்துவமனைகள் உலக மெங்கிலும் திறக்கப்படும் .இதற்கு அந்தந்த
நாட்டு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்..என்றது
உலக நாடுகள் வேறு
வழி இல்லாமல் அதற்கும் சரி என்றது. டாக்டர் ருடால்ப் தனியாக மருத்துவ மனைகளைத்
திறந்தார்.எப்படி இவ்வளவு சீக்கிரம் இதை செய்ய முடிகிறது என்று அரசாங்கம்
நினைப்பதற்குள்…அவசர அவசரமாக மிகப் பெரிய ஹோட்டல்கள் மருத்துவமனையானது..
இலவசமாக மருத்துவம்
பார்க்கபட்டது.ஆனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படவில்லை.
ப்ளோரா சுய நினைவு
இழந்தாள்…சுத்தமாக கறுத்து கூனி குறுகி படுக்கையில் கிடந்தாள்… மனித
ரூபம் கலைந்தது. முடி உதிர்ந்து மொட்டை தலையானாள். ஒரு நாள் டாக்டர் ருடால்ப்
மருத்துவர்கள் ப்ளோராவை கோழியை தொலி உரிப்பது போல உச்சந்தலையில் இருந்து
உள்ளங்கால்வரை ப்ளோராவின் தொலியை உரித்து
எடுத்தர்கள்.இப்போது வேறு முகமும் வேறு உடம்புமாக ப்ளோரா இருந்தாள்..
இப்படி புளோராவுக்கு மட்டுமல்ல.
நோய் கண்ட அனைவரின் கதியும் இதுதான்.. உலகமெங்கும் மனிதர்கள்
உருமாற்றம் அடைந்தனர்.முக அடையளம் மறைந்தது
.அது மட்டுமல்ல உடலின் அழிக்க முடியாது என்று நினைத்த கைரேகைகளும் இயந்திரங்கள் அடையாளம்
காண உதவும் கண்களின் கறுவிழியின் உட்பாகமும் மறைந்து போயிற்று.கைகள மொழுக்கொன்றிருந்து.கண்கள்
வெள்ளையாய் பார்ப்பதற்கு பயங்கரமாய் பேய்த்தனமாய் இருந்தது.
மல்லிகாவுக்கு ஒரு
நாள் ப்ளோராவை காண்பதற்கு அனுமதி அளிக்கபட்டது.கண்ணாடி ஜன்னல் வழியாக மல்லிகா பார்த்தாள்..அங்கே
ப்ளோராவைப் போல கொஞ்சம் உருமாற்றமும் அடைந்து மொட்டைத் தலையாய் படுத்திருந்த ஒரு உருவத்தை பார்த்தாள்.
மல்லிகாவுக்கு
அழுகை பீறிட்டுவந்தது.அப்போது வேறு ஒன்றையும் மல்லிகா கவனித்தாள்..அங்கே
படுத்திருந்த அனைவருமே மொட்டை தலையாய்த்தான் இருந்தார்கள்.ஒரு நோயாளி மல்லிகாவை
பார்த்தான்.அவன் கண்களை பார்த்த மல்லிகா விக்கித்து நின்றாள்.
டாக்டர் ருடால்ப்
தனது நோயளிகளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.நீங்கள் என்னை நேசித்தால் நான்
உங்களுக்கு எந்த காலமும் உதவி செய்ய ஆயத்தமாய் இருக்கிறேன்.
.நீங்கள் என்
ஆட்களாய் இல்லாதபட்சத்தில் நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்.
உங்கள்
அரசாங்கத்திடம் போய் உதவி கேளுங்கள்என்றார்.
இது மக்களுக்கு
நியாயமாக பட்டது.
ஒன்றுக்கும் உதவாத
அரசாங்கத்தை நம்புவதைவிட டாக்டர் ருடால்ப் பக்கம் இருப்பதே நல்லது என
நினைத்தார்கள்.
டாக்டர் ருடால்ப்
இதை பொது அறிவிப்பாக வெளியிட்டார்.இனி இலவச சிகிச்சை என்னை சார்ந்தவர்களுக்கு
மட்டுமே .அதாவது நீங்கள் என்னை சார்ந்து கொண்டால் வாழ் நாள் முழுவதும் உங்களுக்கு மருத்துவமும்
மேலும் பல உதவிகளும் இலவசம் என்றார்.
மேலும் பல உதவிகள்
என்ன வென்று அவர் சொல்லவே இல்லை.ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஆள் ஆளுக்கு
வேறுவிதமாய் புரிந்து கொண்டார்கள்.அரசாங்கம் திணறியது. இவரை எப்படி தடுப்பது என
தெரியாமல் விழித்தது.
இறுதியாக என்பக்கம்
இருப்பவர்களை நான் இனம் கண்டு கொள்ள உங்களுக்கு அடையாளம் கொடுக்கப்படும் அந்த
அடையாளம் உங்கள் உடலில் பதிக்கபடும்..
அதை
பதித்தபின் நீங்கள் கவலை பட வேண்டாம்.ஏனென்றால்
அந்த அடையாளம் எந்த காலமும் அழியாதபடி
உங்கள் நெற்றியில் பதிக்கப்படும்.
நெற்றியில் வேண்டாம் என்றால் கைகளில் பதிக்கபடும்.
அது பதிக்கபடும் போது எவ்வித வலியும் இராது.
“டாக்டர் ருடால்ப் மருத்துவமனை”
யில் யார் வேண்டுமானாலும் பதித்துக் கொள்ளலாம்…அது பதிந்த உடனே உங்கள தலையை சுற்றி
ஒரு கதிர் வீச்சு ஆரம்பமாகும்.அது உங்கள எல்லா தாக்குதலில் இருந்தும் உங்களை
பாதுகாக்கும்…என்றார்..
இரண்டாவது முக்கிய அறிவிப்பு டாக்டர் ருடால்ப்
புகைப்படம் ஒன்றும் இலவசமாக தரப்படுகிறது.இந்த படத்தின் மேன்மை என்ன வென்றால் இதை
நீங்கள மக்கள் கூடும் இடத்தில் மாட்டி வைக்கவேண்டும். அது உயரத்தில் இருந்து ,மக்களை
பார்க்கும் வண்ணம் மாட்டப்பட வேண்டும்..கூடி இருந்த மக்களுக்கு எதாவது ஆபத்து
என்றால் டாக்டர் ருடால்ப் படத்தில் உள்ள ஒலி அதிர்வு கருவி மூலம் டாக்டர் ருடால்ப்
மருத்துவ குழுவுக்கு தெரிவிக்கபட்டு உடனடி மீட்பு குழ அந்த இடத்திற்கு விரைந்து
வரும்..
இதுவும் இலவசம் தான்.ஆனால் இது வீடுகளுக்கு இல்லை.மக்கள்
கூடும் சந்தை வெளி, தியோட்டர்கள், பார்கள்,நடன அரங்குகள்,
தேவாலயங்கள்,கோயில்கள்,மசூதிகள்.மற்றும் மக்கள் கடவுளை தொழக்கூடிய சகல இடத்திலும்
என்றது.
அடுத்த தாக்குதல் சீக்கிரமாக நடக்கலாம் .
இயற்கை சீறுகிறது. அல்லது இறைவன் சீறுகிறான். எதுவாய்
இருந்தலும் நான் அடக்குவேன்.என்னோடு நாம்
அதை அடக்குவோம்.என்று முழங்குங்கள்..ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றது அந்த
அறிக்கை..
மக்கள் டாக்டர்
ருடால்ப் மருத்துவமனையில் குவிந்தார்கள்.
நெற்றியில் முத்திரைய பதித்து விட்டு சாதனையாளர்களாக
மகிழ்வுடன் வெளியே வந்தனர். யார் பதித்தனர் யார் பதிக்கவில்லை என்று யாருக்கும்
தெரியவில்லை
சகலரும் பதித்தார்கள் .பாதுகாப்பு முக்கியம் என்று
அவர்கள் நினைத்தார்கள்.ஆனால் அதன் மூலம் தாங்கள் அடிமைகளாகப் போகிறோம் என்பதை
மறந்து போயினர்..
சில நாளில் எல்லாம் அமைதியானது..
ஒரு நாள் எல்லா நோயாளிகளும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்
. வீதிகளில் மொட்டை தலையும் வெள்ளை விழிகழுமாய் நிறைய
பேர் அலைந்தது பயங்கரமாய் இருந்தது..
ப்ளோராவும் வீட்டிற்கு வந்தாள்..வீட்டிற்கு வந்தவள் புதிதாக
சேலை உடுத்தி முகத்தை கழுவி பவுடர் போடுவதற்கு கைளில் பவுடரை தட்டினாள்.அப்போது
தான் உள்ளங்கையை கவனித்தாள்.அங்கு எந்த ரேகையும் இல்லாமல் கை மொழுக்கென்று
இருந்தது.கையையும் தலையையும், கருமை இல்லாத விழிகளையும் பார்த்து புளோரா விம்மி
விம்மி அழ ஆரம்பித்தாள்..
11
மல்லிகாவுக்கு
புளோராவின் அழுகை சோகத்தை தந்தது.
பக்கத்தில்
போய் முதுகை தடவி விட்டாள்.ப்ளோராவின் தலையை கவனித்தாள்.மெல்லியதாய் முடி முளைக்க துவங்கி
இருந்தது.
முடி
வளரும் வரை விக் எதாவது வைத்துக் கொள்ளலாமே .ப்ளோராவிடம் இதைப் பற்றி சொன்னாள்….ப்ளோரா
மெதுவாக யோசித்தாள்.இதுவும் நியாயமாகபட்டது.
சரி
என்றாள்….
இருவரும்
கடைவீதிக்குபோய் கொஞ்சம் கடினப்பட்டு விக் செய்யும் இடத்தை தேடிப்பிடித்து ஒரு விக்
வாங்கி தலையில் கவிழ்த்தினாள்.
ப்ளோராவுக்கு
இந்த துயரத்திலும் சிரிப்பாய் இருந்தது. மல்லிகா சொன்னாள்..
ப்ளோரா .சர்ச்சுக்குபோய் விட்டு போகலாமா .?என்றாள்.
ரொம்ப நாள் ஆயிற்றே.சும்மா போய் பிரேயர் பண்ணிட்டுபோகலாமே என்றாள்… மல்லிகாவும் சம்மதித்தாள்.மல்லிகா
கிறிஸ்தவள் அல்ல.இருந்தாலும் ப்ளோராவுக்காக சரி என்றாள்…
ஆட்டோவில் சர்ச்சுக்கு போய் இற்ங்கும் போது கவனித்தார்கள். சர்ச்சில் இன்று ஏதோ விஷேசித்த கூட்டம்
போல.நிறைய பேரு வந்து கொண்டிருந்தார்கள். மல்லிகா சொன்னாள்.இன்று ஏதோ விஷேசம்
போல. கொஞ்ச நேராம் பார்த்துவிட்டு போய்விடுவோம்
என்றாள். ப்ளோராவும் சரி யென்றாள்.சரியாக
முப்பது நிமிடததில் சர்ச்சில் பிராத்தனை ஆரம்பமானது.
சூட் கோட் போட்ட பலர் மேடையில் தோன்றினார்கள்..
கிட்டார்களும் டிரம் சத்தமும் காதை பிளந்து கட்டியது..
பூமியில்
நடந்த கொடுமைகள் எதுவும் அங்கு தெரியவில்லை…மக்கள் மகிழ்ந்து இருந்தனர்.மல்லிகாவுக்கு
கொஞ்சம் வித்யாசமாய் தெரிந்தது.. பாடல்கள் இடையே நடனமும் அரங்கேறியது.மேடையில்
நிற்பவர்கள் ஆட ஆரம்பித்தனர்.மற்றவர்களை தங்களோடு ஆடுமாறு வற்புறுத்தினர்.
கிழே இருப்பவர்கள்
மெதுவாக
இடுப்பை அசைத்து,கால்களை தூக்கி ஆட ஆரம்பித்தனர்.
பாடல்
வேகம் எடுக்க துவங்கியது.. பலர் மெய் மற்ந்து
ஆட ஆரம்பித்தனர்.மல்லலிகா மெதுவாக வெளீயே போய் விடலாமா என்று யோசித்தாள்…சுற்றி நின்று
பலர் ஆடுவதால் வெளியே வர முடியவில்லை.தேவாலயம் வேறு மாதிரி ஆனதையும்,இங்கு நடப்பது
ஆராதனை அல்ல என்பதையும் மல்லிகா உணர்ந்தாள்
ப்ளோராவை
பார்த்தாள் ப்ளோரா ஏதோ மயக்கத்தில் இருப்பதுபோல காணப்பட்டாள்.ஆனால் அவளும் வேகமாக ஆடிக்
கொண்டிருந்தாள். மல்லிகாவுக்கு புரிந்தது. இவர்கள் ஒரே மனதாக இருக்க யாரோ தூரத்தில்
இருந்து இயக்குவது போல இருந்தது.
அப்போது திடீர் என்று மின்சாரம் தடைபட்டது.சத்தம்
வலுவிழந்ததால் ஆட்டம் நின்றது..
மல்லிகா
இருட்டில் தடுமாறினாள்..அப்போதுதான் ஒரு காரியம் கண்ணில் பட்டது.
யாருடைய
நெற்றியில் எல்லாம் டாக்டர் ரூடால்ப் முத்திரை பதிக்கபட்டதோ அந்த முத்திரை 666என்று பளிச்சென்று இருட்டில் ஒளிர்ந்தது..
மல்லிகா
சுற்றும் முற்றும் பார்த்தாள்.அனேகமாக எல்லோருடைய நெற்றியிலும் அது மின்னியது..திடீரென்று
இதை கவனித்த மக்கள் ஒரு நிமிடம் மொளனமானார்கள்..
அடுத்த
நொடி அங்கே மிகப்பெரிய ஆரவாரம் எழுந்தது.டாக்டர் ரூடால்ப்பற்றி யாரோ புகழ்ந்து பாட
மொத்த கூட்டமும் பாட துவங்கியது.மின்சாரம் வரவில்லை.இப்போது மின்சாரம் இல்லாமலேயே பாட்டு
அரம்பமாகியது.
ஒருவர்
பாட மற்றவர்கள் திரும்ப பாட ஆட்டமும் ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் இருவரும் இருக்கும்
இடம் நகர்ந்து ஒரே குழுவாக ஆகிவிட…
மல்லிகாவுக்கு
இது தவறு என்று தெரிந்து ப்ளோராவின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்….ப்ளோரா
திமிறினாள்…மல்லிகா முழு பெலத்தோடு ப்ளோராவை வெளியே கொண்டு வந்தாள்.
வெளியே
வந்தவுடன் ப்ளோரா அமைதியானாள்..மல்லிகா வியர்வையில் குளித்துவிட்டாள். வெளியே வந்து ஆலயத்தின் உள்ளே கூர்மையாக
பார்த்தான்.
ஆலயத்தின் உள்ளே,கொஞ்சம் மேலே டாக்டர் ரூடால்ப் படம்
மாட்டப் பட்டிருந்தது.அது அந்த இருட்டில் தெளிவாக மின்னிக் கொண்டிருந்தது..மிகப்பெரிய
666 என்ற எழுத்து பின்பக்கம் இருக்க அதின் முன் டாக்டர் ரூடால்ப் சிரித்துக் கொண்டிருந்தார்
93
டீபுட்டி கமிஷனர் இரவீந்தரனுக்கு பல பிரச்சனைகள்…முதலில் மனிதர்கள் காணாமல்
போயிருந்தார்கள்..அதை பற்றி எந்த தடயமும் இன்னும் கிடைக்கவில்லை.இதன் பின் அமில மழை
பெய்தது .அதுவும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் , அதில் பாதிக்கபட்ட ஒருவரை கூட உலகத்தில்
உள்ள மருத்துவரால் குணமானமாக்க முடியவில்லை.எங்கிருந்தோ டாக்டர் ரூடால்ப் தோன்றினார்.இவரை
பற்றிய எந்த விளக்கமும் எவராலும் சரியாக இன்று வரை கூற முடியவில்லை.
அதற்குள் அமில தாக்குதல் நடந்தவர்களுக்கு முழு உடம்பும் பாம்பு சட்டையை
கழட்டுவதுபோல மொத்தமாக உரிந்து விட கைரேகையும் கண் கருவிழியும் மாயமாய் மறைந்து விட்டது.அதை தொரடர்ந்து
அனைவருக்கும் நெற்றியில் இலவசமாக முத்திரை பதித்து விட்டார்கள்..மக்கள் இதை ஏற்றுக்
கொண்டாலும் உளவுத்துறை இதை வேறு விதமாக பார்த்தது.அதாவது நெற்றியில் முத்திரை பதிக்கபட்டவர்கள்
அனைவரும் ஒரு குறிப்பிட்ட காந்த அலையால் இயக்கபடுகிறார்கள்.
இவர்களை தூரத்தில் இருந்தே தங்கள் இஷ்டப்படி இயக்க முடியும்.
அப்படி இயக்கி தாங்கள் விரும்புகிற படி முத்திரை
பதித்தவர்களை யோசிக்கவோ செயல் படுத்தவோ முடியும் என்கிறது உளவுத்துறை.
இப்படியே போனால் இதற்கு முடிவுதான் என்ன, விடை தெரியாமல்
முழித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று அவருக்கு
ஒரு யோசனை தோன்றியது. ஏசி.பீட்டர் சொன்னது போல பாக்கியநாதனை சந்தித்தால் என்ன.? ஆனால்
பிரசங்கியார் பாக்கியநாதன் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாது என்று தனது நன்பன்
ஜெயில் சூப்ரண்டெண்டு மதியழகன் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஆனால் ஒரு விஷயம்
அவருக்கு தெரிந்து இருந்தது. பிரசங்கி பாக்கியநாதன் சொந்த ஊர் புதுப் பெட்டி கிராமம்
என்றும்.அங்கு போய் விசாரித்தால் என்ன.?என்று முடிவெடுத்தார்.
அடுத்து புதுப்பெட்டி கிராமம் எந்த போலிஸ் ஸ்டேசன் கண்ரோலில்
வருகிறது என்று பார்த்து அந்த ஊரின் போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டளை கெடுத்தார்.பாக்கிய
நாதனை பற்றி முழு விபரமும் தேவை என்றும் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து
சொல்லவும் ஆணையிட்டார்.அடுத்த ஒரு மணிநேரத்தில் பாக்கிய நாதனின் இருப்பிடம் தெரிந்து
விட்டது.
கள்ளி மலை என்ற காட்டுபகுதியில்
ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கி அதில் குடியிருப்பதாக செய்தி சொன்னது.
செய்தி கிடைத்ததும்.இரண்டு
போலீஸ் காவலர்களோடு கள்ளிமலைக்கு பயணமானார் டீசி இரவீந்தரன்…
தகவலின் படி அந்த
தோட்டத்தை கண்டுபிடித்தார்.நான்கு ஏக்கர் இருக்கும்.வாழை பயிரிடபட்டிருந்தது.உள்ளே
யார் இருக்காங்க என்று பார்த்துவிட்டுவர போலீஸை அனுப்பினார்..
போலீஸ் பார்த்துவிட்டு
வந்து ஒரு வயதானவர் மட்டும் இருக்கிறார் என்றார்..
இரவீந்தரன் உள்ளே சென்றார். ஒரு கயிற்று கட்டிலில் ஒரு தாடி வைத்த மனிதர்
உட்கார்ந்து கொண்டிருந்தார்.இரவீந்தரன் போய் அவர் அருகில் நின்றார்.
தாடிக்காரார் இவரை ஏறிட்டுபார்த்தார் ஆனால் கலவரப்படவில்லை.
அது வயது கொடுத்த முதிர்ச்சி அல்லது தைரியம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்
கொள்ளலாம்.இரவீந்தரனுக்கு இவர் பழைய கைதி என்று உள் மனது சொன்னது.
ஆனாலும் மரியாதையுடன் நீங்கள்தான் பாக்கிய நாதனா என்றார். தாடிக்காரர்
தலையை அசைத்துவிட்டு தன் கட்டிலுக்கு கீழே கையை கொடுத்து ஒரு சங்கை எடுத்து பூம் என்று
ஊதினார்.காடு அதிர்ந்தது..அடுத்த சில வினாடிகளில்
கறுப்பாய் ஒருவன் ஒரு புதரில் இருந்து வெளிப்பட்டான்.அவன் போலீஸை பார்த்ததும்
கொஞ்சம் பயந்தது போல தெரிந்தது.ஆனாலும் பாக்கியநாதன் பக்த்தில் போய் நின்றான்.அவனிடம்
காதில் ஏதோ சொன்னார் .அவன் போய்விட்டான்…சில வினாடிகளில் திரும்பவும் வந்தான்.
மரத்தால் ஆன இரண்டு ஸ்டூல் கொண்டு
வந்து போட்டுவிட்டு போய்விட்டான்..இப்போது இரவீந்தரன் அதில் உட்கார்ந்தார்.
மீண்டும் கேட்டார்.
நீங்கள் பாக்கிய நாதனா.? இப்போது தாடிக்காரர்
ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு கொஞ்சம் பொறுங்கள் என்று கையால் சைகை செய்தார்.
மறைந்த கறுப்பன் மீண்டும்
வந்தான். கையில் நான்கு இளநீர் காய்கள் இருந்தது. அதனை அறுவாளால் சீவி ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான்.இரவீந்தரன் வாங்கிக்
கெண்டார்.பாக்கியநாதன் வேகமாக குடித்தார்.பின்பு தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரும்பித்தார்.இப்போது
அவர் குரல் கணீரென்று இருந்தது..
ஆமா ..நான் தான் பாக்கியநாதன்… எனக்கு தொண்டை இப்போது அடிக்கடி கெட்டிக்
கொள்கிறது.
வயதாகிவிட்டது அல்லவா…அதனால் தான் இளநீர் குடித்துவிட்டால் கொஞ்ச நேரத்திற்கு
சரியாக இருக்கும்…சரி.. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
இரவீந்தரனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை..பாக்கிய நாதனை
உற்றுப்பார்த்தார்..நீங்கள ஒரு காலத்தில் கிறிஸ்தவ போதகராய் இருந்தீர்களாமே.?
ஆமா.
அப்போது உலகத்தின் முடிவை பற்றியும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை
பற்றியும் போதனை செய்வீர்களாமே.?
ஆமா
இதை பற்றி கொஞ்சம்பேசவேண்டும்…
எதைபற்றி.?
இரண்டாம் வருகையை பற்றி.
ம்…எனக்கு அது மறந்து போய்விட்டது.ஜெயில் வாழ்க்கை எல்லாவற்றயும் மறக்கடித்துவிட்டது..
சிலவற்றை நினைவு படுத்த முடியுமா..
கேளுங்கள் .முயற்சிக்கிறேன்….
இரகசிய வருகை எப்படி இருக்கும்.?
பாக்கியநாதன் கண்களை மூடீ யோசித்தார்.இரண்டு கண்களில் இருந்தும் கண்ணீர்
கசிந்து கன்னங்களில் வடிந்து.கட்டிலில் கிடக்கும் துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
இரகசிய வருகை இரகசியமாக இராது.?
இரவீந்தரன் ஆச்சரியபட்டர்.
அவர் வரும்போது எல்லோருக்கும் அது தெரிந்தே இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன் என்ன நடக்கும்..?
எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும்..
யார் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்…?
கடவுளுக்கு பிடித்தமானவர்கள்.?
யார் கடவுளுக்கு பிடித்தமானவர்கள்…?
கடவுளின் சொல்படி நடந்தவர்கள்..அல்லது நடக்க முயற்சி செய்தவர்கள்..
கடவுள் என்ன சென்னார்.?
அது வேதத்தில் இருக்கிறது.?
பைபிளிலா…?
ஆம்
பைபிள் தெரியாதவர்கள்.அல்லது கேள்வி படாதவர்களுக்கு.?
மனதில் மனசாட்சியாக கொடுக்கபட்டிருக்கிறது.
மன சாட்சி மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறதே.ஹிட்லருடைய மனசாட்சியின் படி
அவன் செய்த கொலைகள் நியாயமானது.
யார் சொன்னது.அவனுக்கு தெரியும் தான் கொலைதான் செய்கிறோம் என்று…
எல்லாவற்றயும் நியாயத்தின் படி நியாயம் விசாரிக்கிறவர் கடவுள்.
சிலரை மட்டும் நேசிப்பது நியாயமான ஒன்றா.?இரவீந்தரன் கேட்டார்
பாக்கியநாதன் சற்று நிதானித்து விட்டு… உலகத்தில் சிலர் மட்டுமே அவரை
நேசிக்கிறார்களே.
நேசத்தை எப்படி காட்டுவார்கள்.?
செய்கையில் காட்டுவார்கள்..
செய்கை எப்படி இருக்கும்..?
வெளியரங்கமாய் இருக்கும்..
இரவீந்தரனுக்கு வியர்த்தது.சரி .இனி கேட்டுவிட வேண்டியதுதான்..இரகசியமாக
எடுத்துக் கொள்ளப்படுதல் நடந்துவிட்டதா.?
நடந்து விட்டது என்று நினைக்கிறேன்….
எப்படி ?
போலீஸ் தேடு தேடு என்று தேடியும் ஒரு துப்பும் கிடைக்காமல்தானே என்னை
தேடி வந்திருக்கிறது.அதுவும் முன்னாள் கைதியிடம்..
இரவீந்தரனுக்கு கொஞ்சம் அவமானமானது போல தெரிந்தது..
சரி.பரவாயில்லை..சரி இனி என்ன நடக்கும்.
.அவன் வெளிப்பட்டு விட்டானே.? பாக்கியநாதன் சொன்னதும்
இரவீந்தரன் யோசித்தர்
யார் அவன்…?
அவனே அந்திகிறிஸ்து..
அவனை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது..
அவனை அடையாளம் கண்டுபிடிப்பது எளிது.
(1) அவன் உலக மக்களுக்கு நம்பிக்கையான இரட்சகன் போல இருப்பான்
(2) மக்கள் அவன் பக்கமாக இருபார்கள்.
(3) நெற்றியில் அவன் முத்திரையை பதிப்பான்.
(4) உலக அரசாங்கத்தின் முன்பாக தனக்கென்ற அதிகாரத்தை சட்டப்படி பெறுவான்.
(5) கடைசியாக மொத்த உலகத்தையும் தன் அதிகாரத்திற்குள’ கொண்டு வருவான்..
(6) இதை கடைசியாக செய்வான் அதன்பின் நீங்கள் அவனுக்கு தொண்டு செய்வீர்கள்.
(7) ஆனால் இஸ்ரேல் இதற்குள் அடங்காது
(8) அது தனித்து நிற்கும்
(9) இயேசு கிறிஸ்து என்ற பெருடைய ஆண்டவர் ஒலிவ மலையில் தமது சேனைகளுடம் இறங்குவார்.
(10)
அந்த வேகத்தில் மலை பிளக்கும்.
(11)
உலகம் ஆண்டவர் கைவசமாகும்…நீங்கள் ஆண்டவருக்கு
எதிரியாவீர்கள்…..
எல்லாம் முன் கூட்டியே சொல்லப் பட்டுவிட்டது.
என்னைப் போல கண் இருந்தும் காணாமல் போனவர்கள் கைவிடப்படுவார்கள்…அவர்
நீதியின் படி அரசாளுவார்.என்று சொல்லிவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்..
பாக்கியநாதனை பார்க்க இரவீந்தரனுக்கு பாவமாக இருந்து.
சரி அழட்டும் என்று நினைத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியே வந்தார்
இரவீந்தரன்.
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.(வெளிப்படுத்தின விஷேசம்-13:15
மத்திய அரசு தேர்தலை
அறிவித்தது.கட்சிகள் மொத்தமாக அவரவர் மக்களுக்கு செய்யும் உதவிகளை விலாவாரியாக செய்திதாளிலும்
தொலைக் காட்சியிலும் சொல்லியது.ஆனால் மக்கள் அதிக மகிழ்ச்சி அடையவே இல்லை.
திடீரென்று ஒருநாள்
டாக்டர் ரூடால்ப் செய்திதாளில் ஒரு அறிவிப்பு கொடுத்தார்.
நாமே அரசாளுவோம்..என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது.என் அருமை மக்களே.நீங்களே
உங்களை அரசாளுங்கள்…உங்களை பாதுகாக்காத கட்சிகள் மீது உங்கள் நம்பிக்கையை ஏன் வைக்கவேண்டும்.உங்களை
சாவில் இருந்து காப்பாற்றியது நான்தான்.நீங்கள் அதற்கு நன்றிக்கடன் பட்டவர்கள் தானே
இன்னும் வரப்போகும் காலங்களில் இதைவிட பெரிய அழிவு வர காத்திக்கிறது.அப்போதும் நான்
உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன்…
உலகத்தில்; பலநாடுகள் இருந்தாலும்.எல்லா நாட்டிற்கும் நான் பொதுவானவன்…நீங்கள்
என்னுடையவர்கள் ,நான் உங்களுடையவன்…ஒரே சிந்தனை ஒரே கொள்கை..நம்மோடு இராதவர்கள் நமக்கு
தேவையில்லாதவர்கள்….நமக்கு நாம்தான் முக்கியம்...நம்மை அழிக்க நினைப்பது இயற்கையானாலும்
இறைவன் ஆனாலும் அவர்கள் நமது எதிரிகள்.நாம் வெற்றி பெற ஒற்றுமையாய் இருப்போம்..
அவ்வளவுதான்.வீதிக்கு
வீதி டாக்டர் புதிய கட்சிக் கான கொடியும் சின்னமும் மக்களே ஏதோ ஒரு முறையில் தயார்
செய்தார்கள்.ஆனால் அதிகாரமற்று இருந்தது.
மற்றகட்சிகள் பதுங்கின.எப்படி
இவர்களை எதிர் கொள்வது என்று யோசித்தார்கள்.
13
டாக்டர் ரூடால்ப்
எப்படி எல்லா இடத்திலும் தேர்தலில் நிற்பார்,? அவரை தடை செய்தால் என்ன என்றும் யோசித்தார்கள்..ஆனால் டாக்டர் ரூடால்ப் தேர்தலில் மனுதாக்கல் செய்யவே
இல்லை, சாதாரண நபர்கள் சுயேட்சையாக ஒவ்வொரு
ஊரிலும் மனு தாக்கல் செய்தார்கள். யாரும் டாக்டர் ரூடால்ப் பெயரை கூறவே இல்லை.தேர்தலுக்கான
சின்னம் தங்களுக்கு 666 என்ற இலக்கத்தை சின்னமாக தரவேண்டும் என்று மொத்தமாக கோரிக்க
வைக்கபட்டது. தேர்தல் கமிஷன் யோசித்தார்கள். நீங்கள் கட்சியாக பதிவு செய்தால் இதை தரலாம்
என்று யோசனை சொல்லவே அடுத்த நாள் “கடல்சிங்காசனம்”
கட்சி என்று பெயர் பதிவு செய்பட்டது
கட்சியின் பெயர்---கடல்(மேல்)சிங்காசனம். (எசேக்கியல்28:2)
கட்சியின் சின்னம்.—666
கொடியின்----- நிறம்.சிவப்பு.
நடுவில் கறுப்பு வட்டத்தில் சிவப்பு ஆப்பிள்.அதை சுற்றி இருந்தாற்போல ஒரு பாம்பு..
இதை உலக நாடுகளில்
இதை மொத்தமாக பிரகடன படுத்த பட்டது
டாக்டர் ரூடால்ப் கட்சியினர் எந்த பிரச்சாரமும் செய்வில்லை.இது மற்ற கட்சிகளுக்கு
வியப்பாய் இருந்து. மேடை போடவில்லை. கட்சி கூட்டம் நடத்த வில்லை.பத்திரிக்கை விளம்பரம்
கொடுக்க வில்லை. தொலைக்காட்சியில் விவாதம் நடத்தவில்லை. பின் எப்படி ஜெயிப்பார்கள்
என்று குழம்பினார்கள்….
இதைவிட பெறும் நெருக்கடி என்னவென்றால் எல்லா கட்சியிலும், நெற்றியில்
அடையாள முத்திரையை வாங்கியவர்கள் இருந்தர்கள்.அவர்கள் டாக்டர் ரூடால்ப் கட்சியை பற்றி
ஒன்றுமே சொல்லவில்லை.இதுவும் பரியாத புதிராக இருந்து.
ஆனால் டாக்டர் ரூடால்ப் வேறு ஒரு காரியம் செய்தார்.
இதை வாசிப்பவர்கள் ஒன்றை மனதில் வைக்கவும்: டாக்டர் ரூடால்ப் என்பது ஒரு
தனி மனிதர் அல்ல.அவரை சுற்றி ஒரு கூட்டம்.
இருக்கிறது. அது அவருக்காக இரவும் பகலும் வேலை செய்கிறது.உலகத்தை பல கூறுகளாக பிரித்து மனிதர்கள் தூங்கும்நேரம் கணக்கிடப்பட்டது.
அயர்ந்து தூங்கும் வேலையில் அவர்கள் தலையில் பதிக்கபட்ட முத்திரையின் மூலமாக அவர்களுக்கு
திருப்பி திருப்பி கட்டளைகள் பிறப்பிக்கபடுகிறது.
அவர்களுக்கு சொன்ன செய்தி இதுதான், இப்போது நீங்கள் எந்த கட்சியிலும்
சார்ந்து விடாமல் அமைதியாய் இருங்கள் .நீங்கள் டாக்டர் ரூடால்பின் இரகசிய ஆள்…
நாங்கள் சொல்வதுபடிதான் நீங்கள் செய்ய வேண்டும். கீழ்படியுங்கள் ..கீழ்படியுங்கள்….கீழ்படியுங்கள்….நாம்
புதிய இராஜ்ஜியம் படைப்போம்.
நீங்கள் கீழ்படியாவிட்டால் கொல்லப்படுவீர்கள்.அதுவும் பயங்கரமாக இருக்கும்..உங்கள்
உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும்…யாரும் ஆற்ற முடியாத கெப்பளங்கள் தோன்றும்…
அழுகி நாற்றம் எடுக்கும்..வதைக்கபடுவீர்கள்.உங்கள் பிள்ளகைளும் குடும்பமும்
சாகடிக்கபடும்..டாக்டர் ரூடால்ப் சர்வ வல்லமை படைத்தவர்.
இப்படி எதுவும் நடக்க கூடாது எனின் நாங்கள் சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி
செய்யுங்கள்…
------------------------------------------------------------------
ப்ளோராவின் தலையில்
முடிகள் மெல்ல வளர்ந்து வந்தது.அந்த சர்ச்சில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் ப்ளோரா
அதிகம் பேசுவது இல்லை..அமைதியாக இருந்தாள் முக்கியமாக சிரிப்பது இல்லை.இது மல்லிகாவுக்கு
வியப்பாய் இருந்தது.
ப்ளோரா ஒரு வெகுளிப்பெண். அவள் சாதாரண
காரியத்திற்கும் சிரிப்பவள். இப்போது இந்த மாற்றம் ஏன்
என்று புரியமாமல் மல்லிகா குழம்பினாள்…ஒரு நாள் இரவு ப்ளோரா திடீரென்று சத்தமாக அழத்தொடங்கினாள்…மல்லிகா
திடுக்கிட்டு
என்ன ப்ளோரா என்ன நடந்தது.?
அவங்க என்ன கொன்ணுருவாங்களாம்..
அவங்கன்னா யாரு.?
அது தெரியல.ஆனா கண்ண மூடினா உடனே வந்திடுதாங்க.?
கனவிலா?
இல்ல சும்மா கன்ணை முடினாலே வாராங்க.
சரி இப்போ கன்ணை முடு…
ப்ளோரா கண்ணை மூடினாள்..
இப்பா வாந்தாங்களா.?
இதோ வந்திட்டாங்க.
முகம் தெரியுதா.?
இல்ல .முகம் கறுப்பாய் இருக்கு…
சரி..என்ன சொல்றாங்க…..
ப்ளோரா அமைதியாக இருந்தாள்.பின்பு மெதுவாக சிரித்தாள்.அது
பயங்கரத்தை அடக்கியதாய் இருந்தது.
அவங்க …அவங்க.. உன்ன கொல்ல சொல்றாங்க…குலுங்கி குலுங்கி
சிரித்தாள்
மல்லிகா மிரண்டாள்..ஆனாலும் தைரியமாய்…என்னது என்னயா.?
ஆமா.
எதுக்காம்
நீ எங்க ஆள் இல்லியாம்.
உங்க ஆள்னா.என்ன அர்த்தம்…?
அது தெரியல
சரி கண்ணை திற.
அது முடியாது…திறக்க கூடாதுண்ணு உத்தரவு..
நீ கண்ண திறக்க போறியா இல்லயயா..?
முடியாது..நீயாரு
என்ன சொல்றதுக்கு .
இப்போது ப்ளோராவின் குரல் தடித்து இருந்தது.அது ஆண் குரல்போல இருந்தது..
மல்லிகாவுக்கு பயம்
கலந்த கோபம் வந்தது.
அடா அறிவு கெட்டவளே
முதலில் கண்ணை திற.மல்லிகா கோபப்பட்டாள்
இப்போது ப்ளோரா கண்ணை
திறந்தாள்.அதுவும் மிகப் பெரிதாக விரித்து திறந்தாள்.பேய்போல முகம் இருந்தது.கண்களில்
கறுப்பு புள்ளி இல்லாததால் மிக பயங்கரமாக இருந்தது..மொத்தமாக வெள்ளையாய் இருந்தது..
மல்லிகா பயந்தாள்.
ப்ளோரா வெடிசிரிப்பு
சிரித்தாள்..
மல்லிகா பார்த்துக்
கொண்டு இருக்கும்போதே ப்ளோரா மயங்கி சரிந்தாள் மல்லிகா முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.
ப்ளோரா எதுவும் தெிரியாதது போல எழுந்து உட்கார்ந்தாள்..மல்லிகாவுக்கு ப்ளோராவிடம் நட்பாக
பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்…
இனி இவளிடம் பாதுகாப்பாய் இருப்பதுதான் நல்லது…சரி விடியட்டும் என பெட்டில்
ஓரமாக படுத்துக் கொண்டாள்.
தூக்கம் வர மறுத்தது.
அயர்ந்து தூங்கும் போது புளோரா கத்தியால் கழுத்தில் சொருகிவிட்டால் என்ன
செய்வது.
இல்லை இனி தூங்காமல் இருப்பதுதான் நல்லது.
படுக்கையில் சரிந்த மல்லிகா ஏன் இப்படி நடக்கிறது…
சில மாதங்களுக்குள் மொத்த உலகமும் ஒரு மனிதனின் கைப்பிடிக்குள் வந்து
விட்டதே
.கடவுளே என்று பயந்தாள்..பயந்தாள் என்ன செய்வது.
தலையணைக்கு பக்கத்தில் ப்ளோராவின் பைபிள் இருந்து.
அதை எடுத்து விரித்து படித்தாள்.
ரொம்ப பொடிதான எழுத்துக்கள்.
தமிழில் வேறு ஒரு மொழி நடை..
நிறைய வார்த்தைகளில் சிலது புரியவில்லை .
சிலது ரொம்ப பழைய வார்த்தைகள்..
தூக்கம் கண்ணை கட்டியது.ஆனால் தூங்க பயமாய் இருந்தது.
பைபிளை சும்மா கடைசி பக்கம் வரை புரட்டினாள் .தற்செயலாய் ஒரு வசனம் மல்லிகாவின்
கண்களில் பட்டது.திடுக்கிட்டாள்.
14
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு…(வெளிப்படுத்தின
விஷேசம்.13:18.)
மல்லிகாவுக்கு சம்மட்டியால் யாரோ தலையில் அடிப்பதுபோல இருந்தது.
எத்தனை தெளிவாக பைபிளில்
எழுதப் படடிருக்கிறது.
இதை ஏன் ப்ளோரா கவனிக்கவில்லை…
நிறைய கிறிஸ்தவர்கள்
வெளிப்படுத்தின விஷேசத்தை படிப்பதே இல்லை என்பது மல்லிகாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இன்னும் ஆவலாக மற்ற வசனங்களையும் படித்தாள்.
ஓ இவ்வளவும் நடக்கும்
என்று வேதபுத்தகத்தில் ஏற்கனவே எழுதபட்டிருக்கிறது.
சரி இதை பற்றி காலையில்
ஒரு முடிவுக்கு வரலாம். ஓரளவு விடை தெரிந்துபோல இருக்கிறது. என்று நினைத்தவுடன் மல்லிகாவின்
மனது சமாதானமானது.
ப்ளோராவை பார்த்தாள்..ப்ளோரா
நிம்மதியாக தூங்குகிறாள்….தூங்கட்டும் என்று நினைத்துவிட்டு ஒரு தலையணையை தூக்கி நெஞ்சின்
மீது வைத்துக் கொண்டு அப்படியே கண் அயர்ந்தாள்.
திகில் கனவுகளாக வந்து
கொண்டிருந்தது.
திடிரென்று தன் நெஞ்சில்
யாரோ ஓங்கி மிதிப்பது போல உணர்வு.அம்மா என்று அலறி விழித்தாள் மல்லிகா. முகத்துக்கு
எதிரே ப்ளோரா கத்தியால் ஓங்கி குத்த வருவது தெரிந்தது.
மல்லிகாவால் நம்ப
முடியவில்லை.
ப்ளேராவின் முதல்
கத்தி குத்து மல்லிகாவின் நெஞ்சில் வைத்திருந்த தலையினயை துளைத்து பின் அதற்கு கீழே
இருந்த பைபிளை துளைத்து முழுவதும் துளைக்க
முடியாமல் கத்தியில் பாய்ச்சல் பைபிளின் தடிமனால் தடை செய்யப்பட்டது.
ஆனால் கைகளின் வேகம் மல்லிகாவின் நெஞ்சில் தாக்கியது.
மல்லிகா உஷார் ஆனாள்..
ப்ளோராவை உதறினாள்.ப்ளோரா தடுமாறி மல்லிகாவின் வலது பக்கத்தில் சரிந்தாள்.
மீண்டும்
மல்லிகாவின் நெஞ்சில்
கத்தியை சொருக முழு பெலத்தோடு அடுத்த தாக்குதலுக்கு ப்ளோரா தயாரானாள்.
விழித்துக்கொண்ட மல்லிகா தன் காலை மடக்கி சரியாக ப்ளோராவின் முகத்தில்
ஓங்கி மிதித்தாள்
மிதி வாங்கிய ப்ளோரா வேகமாக பின் நோக்கி தள்ளப்பட்டு பின்னந் தலை பக்கத்தில்
உள்ள சுவரில்மோதியது.
ப்ளோரா மயங்கி சரிந்தாள்….
இனி இவளோடு ஒன்றாய்
இருப்பது கடினம் என்று நினைத்து தனக்கு வேண்டிய சில துனிமணிகளை எடுத்து ஒரு பெட்டியில்
வைத்துக்கொண்டு வேகமாக கிளம்பினாள் மல்லிகா.
போகும் முன் ப்ளோராவின்
மூக்கில் முன் விரல் வைத்து மூச்சுக்காற்று சரியாக வருகிறதா என்று பார்த்தாள் .நன்றாகவே
வருகிறது.
மல்லிகா வேகமாக வெளியேறினாள்..
சாலையில் நின்று கொண்டு
எதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்தாள்.தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது.
பக்கத்தில் வரவும்
கைகாட்டி அதை நிறுத்தினாள்.ஆட்டோ நின்றது.ஏறி உட்கார்ந்தவுடன் மல்லிகாவுக்கு ஒரு யோசனை
தோன்றியது.ப்ளோராவை பற்றி போலீஸில் பூகார் கொடுத்தால் என்ன.? அதுதான் சரியென நினைத்தாள். ஆட்டோ டிரைவர்
எங்க போகணும் என்று கேட்டான்…டீபுட்டி கமிஷனர் அலுவலகத்திற்கு என்றாள்…
இப்போ ஆபிஸில ஆள்
இருக்காதே, என்றான் ஆட்டோ ஓட்டுனர்.
அப்போ டீசி வீட்டுக்கு
போங்க.
அங்க எல்லாம் போய்
மனு கொடுக்கலாமா.?
இது ரொம்ப அவசரம்.
சரி உங்க இஷ்டம்…
ஆட்டோ டீபுட்டி கமிஷனர்
வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மல்லிகா சாலைகளை கவனித்தாள் வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் போய் கொண்டிருந்தது.அதிகாலையில்
இத்தனை வாகனங்களா..?
ஆட்டோ டிரைவரிடம்
கேட்டாள்..இன்றைக்கி ஏதாவது விஷேசமா : என்று கேட்டாள் மல்லிகா
விஷேசமா…!ஆட்டோ டிரைவர் பெரிதாக சிரித்தான். சிட்டியில எங்க பார்த்தாலும்
கொலைகள். சுமார் பத்தாயிரமாவது
காலியாகி இருக்கும். இனிமே
எல்லாம் எங்க கண்ட்ரோல்ல வந்திடும் பாருங்க.என்றான்…
“எங்க “ என்பதற்கு
என்ன அர்த்தம் ? இவன் யார்.புரியாமல் மிரண்டாள் மல்லிகா…
மல்லிகாவுக்கு புரியவில்லை..என்ன
இவன் உளர்றான்….அவனிடமே கேட்டாள்.
புரியல உங்க கண்ட்ரோல்லன்னா…?
ஆட்டோ டிரைவர் மீண்டும்
சிரித்தான்..இங்க பாருங்க. நாங்கன்னா… அது இதுதான்.தன் சட்டை பையிலிருந்து டாக்டர்
ரூடால்ப் படத்தை காண்பித்தான்..
மீண்டும் சிரித்தான்…நீங்க
போலீஸ்ல கம்ளைண்ட் கொடுக்க போறிங்களா.?ஒன்னும் நடக்காது.போலீஸ்ல முக்கால்வாசிப்பேரு
எங்க ஆளுங்க…உங்களால ஒண்ணும் செய்ய முடியாது..
தன்னைப்பற்றி இவனுக்கு
எப்படி தெரியும் என்று நினைப்பதற்குள் அவனே சொன்னான்.. உங்கள பாலோ பண்ண சொல்லி எங்களுக்கு
உத்தரவு. நான் தற்செயலாய் வரல.
எல்லாமே தலைவர் ஆணைதான்.
மல்லிகா கொஞ்சம் தைரியமாய்
மீண்டும் அவனிடம் கேட்டாள் .யாரு சொல்றாங்கண்ணு இப்படி வேலை செய்றீங்க.. இப்படி செய்தால் உங்கள் செலவுக்கு யார் பணம் கொடுப்பாங்க..?
பணமா..? அவன் மீண்டும்
சிரித்தான்…. அது
செல்லாம போய் எவ்வளவு நாள் ஆச்சு. எனக்கு எல்லாமே பிரிதான். ஆட்டோவுக்கு
பெட்ரோல் போடப் போனா அங்கும் பிரி…
பேங்குக்கு டியூ கட்டப்போனா
அங்கும் பிரி.
எல்லாமே எங்க ஆட்கள்தான்…. கேள்வி கேட்க
முடியாது.?அப்போ பேங்க் சீக்கிரம் திவாலாகிவிடுமே..மல்லிகா பதறினாள். திவாலாகட்டும் :அது எப்படி
போனால் என்ன.?
மனிதர்கள் கடவுள்
கிட்ட பிரேயர் பண்ணி காத்திருக்கணும். ஒரு
வேளை அது நடக்கலாம் நடக்காமலும் பேகலாம்.ஆனால் டாக்டர் ருடால்ப நினைச்சி நமக்கு வேண்டியத
கேட்ட அடுத்த பத்து நிமிடத்திற்குள் அது நடக்கும்…உலகம் முழுவதும் ஒரே கொள்கை ஒரு ஆட்சி…
மல்லிகா வாயடைத்துப்
போனாள்…
என்ன நம்ப முடியலியா..?
இப்போ உங்க கிட்ட எவ்வளவு பணம் இருக்கு.?
இரண்டாயிரம் இருக்கு.?
உங்களுக்கு இப்போ
ஐம்தாயிரம் வேணுமிண்ணா என்ன செய்வீங்க .?
யாருகிட்டயாவது கடன்
கேட்பேன்…
ஆனா நான் அப்படி அல்ல
.தலைவர நினைச்சி எனக்கு பணம் கேட்டா உடனே கிடைக்கும். இப்போ பாருங்க…
டிரைவர் தன் சட்டைபையிலுள்ள போட்டோவை எடுத்தான்.அதை பார்த்தபடி சொன்னான்….தலைவா எனக்கு
இப்போ பத்தாயிரம் வேணும்…உதவி செய் தலைவா…
ஆட்டோ சென்று கொண்டிருக்கிறது.
சில நொடிகளில் ஒரு கார் வேமாக வந்து ஆட்டோவை மறித்து நிப்பாட்டுகிறது. அதிலிருந்து
ஒரு பணக்காரர் இறங்குகிறார்.
ஆட்டோ டிரைவரிடம் சில இரண்டாயிரம் நோட்டுகளை கொடுக்கிறார். எதுவும் பேசவில்லை.வந்தது
போலவே காரில் ஏறி வேகமாக சென்று விடுகிறார்.
ஆட்டோ டிரைவர் மல்லிகாவை
பார்த்து சிரிக்கிறான். பார்த்தீங்களா. எனக்கு தகவல் வந்தா நானும் இதை மற்றவர்களுக்கு
கொடுத்து விடுவேன். கண்ணெதிரே
கடவுளை பார்க்கிறேன்…இனி தேர்தல் வரப்போகுது. நாங்கதான் ஜெயிப்போம் பின்பு மொத்த அரசாங்கமும்
எங்க கையிலதான்… உலகம் முழுவதும் ஒரே கொள்கை ஒரு ஆட்சி…
அதிகாரம் வந்த உடனே
முதல் வேலை கடவுளையும் தேவாலயங்களையும் ஒழித்துக் கட்டுவதுதான். கடவுளாம் கடவுள்.. இதற்குள்
டிபுட்டி கமிஷனர் வீடு வந்து விட்டது. மல்லிகா வேகமாக உள்ளே நிழைந்தாள்..காவலுக்கு
நின்ற போலீஸ்காரன் மல்லிகாவை கண்டவுடன் சினேகமாக சிரித்தான்..என்ன ஐயாவ பார்க்கணுமா.?அவனையும்
மல்லிகா சந்தேகித்தாள்
ஆமா.
உள்ளே போங்க..
மல்லிகா உள்ளே போனாள்
டிசி இரவீந்தரன் வீட்டில்
முதல் அறை அலுவலகம் போல இயங்கி கொண்டிருந்தது.டிசி இரவீந்தரன் போலிஸ் மைக்கில் ஏதோ
பேசிக் கொண்டிருந்தார்.உட்காரச் சொன்னார்.என்னவென்று கேட்டார்.மல்லிகா ஒன்று விடால்
இரவீந்தரினிடம் சொல்லி முடித்தாள்..
இரவீந்தரன் பதில்
சொல்ல துவங்கினார்.
இண்ணைக்கி மட்டும் நடந்த கொலைகளுக்கு அளவே இல்லை..ஊர் மொத்தமாக அலறிக்
கொண்டிருக்கிறது. போலீஸ்
வீடுகளிலும் இப்படி நடந்திருக்கிறது. எங்களால என்ன செய்ய முடியுமோ அதைச்
செய்வோம். யார் எந்த பக்கம் இருக்காங்கண்ணு கண்டு பிடிக்கவே முடியல்ல.
நீங்களும் நெற்றியில அந்த முத்திரையை போட்டிருக்கீங்களா,?
இல்லை என்றாள் மல்லிகா.
அதுதான் இப்போ பிரச்சனை. முத்திரை பதித்தவங்க ஹாய இருக்காங்க . பதிக்காதவங்க
பாடுதான் திண்டாட்டம்…ஒண்ணு செய்யலாமே. நீங்களும் அந்த முத்திரையை
பதிச்சிக்காங்களேன். அது உங்களுக்கு பாதுகாப்புத்தானே.
மல்லிகா தீர்மானமாக சொன்னாள்.அது முடியாது சார்.
ஏன் ?
அவங்க செயல்பாடுகள் அரசாங்கத்துக்கு எதிரானது.
இரண்டாவது கடவுளுக்கும் எதிரானது..
இரவீந்தரன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
கடவுளுக்கு எதிரானது என்று எப்படி சொல்றீங்க..
நேற்று தற்செயலாய் ஒரு பைபிளை படித்தேன் சார்.அதுல
இதை பற்றி துல்லியமாய் போட்டிருக்கு சார்.
இரவீந்தரன் வியப்பாய்
பார்த்தார்.
முத்திரை பதிக்கபடவில்லையெனில்
சாவு நிச்சயம்..
மல்லிகா தைரியமாய்
சொன்னாள்… சாவு வரட்டும் பரவாயில்லை. இந்த பேய்க் கூட்டத்தில் சிக்கிவிடக்கூடாது.
சார் நீங்க அந்த முத்திரையை
பதிச்சிருக்கீங்களா.? மல்லிகா கேட்டு விட்டு பயந்தாள். ஒரு உயர் அதிகாரியிடம் இப்படி
பேசலாமா என்று யோசித்தாள்…ஆனால் டிசி இரவீந்தரன் அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல்
பதில் சொன்னார்.
நான் சொன்ன சாவு எனக்கும்
சேர்த்துதான்.என்றார்.
மல்லிகா திடுக்கிட்டாள்.
இனி யாரிடம் போய் உதவி கேட்பது.சரி நடப்பது போல நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு
டிபுட்டி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே
வந்தாள்…
சாலையில் நடந்து கொண்டு
யோசித்தாள் இனி எங்கு செல்வது!.பட்டனத்தில் இருப்பதை விட கிராமத்தில் அதிக பாதுகாப்பு
இருக்குமே.ஆகவே தனது சொந்த கிராமத்துக்கு போய்விடுவது நல்லது என்று நினைத்துக் கொணடு
நடக்க ஆரம்பித்தாள்..
15
(அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.(வெளிப்படுத்தின விஷேசம்.14:9,10 )
தேர்தல் வேலைகள் நாடு
முழுவதும் மும்மராரக நடந்து கொண்டிருக்கும் போது சொந்தங்களாலும் பழகியவர்களாலும் கொலை கொலை செய்யபட்டவர்கள் எண்ணிக்கை கோடிக்காணக்காக
இருந்தது. இறந்த
அத்தனை பேரும் நெற்றியல் முத்திரை பதிக்காதவர்கள். இது மொத்த ஜனத்தையும் பயத்துக்குள்ளாக்கியது.
யார் மீது யார் நடவடிக்கை எடுப்பது!.இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஏதோ சிலர்மீது அரசாங்கம்
நடவடிக்கை எடுத்தது. தேர்தல் சுமுகமாக நடந்தது.மக்கள் சிலர் பயந்தார்கள் .நெற்றியில்
முத்திரையை பதித்தவர்கள் எந்த பயமும் இல்லாமல் இருந்தார்கள்..தேர்தல் முடிவு கடல் சிங்காசனம்
கட்சிக்கு சாதகமாக இருந்தது.ஓரிரு இடத்தில் மற்றவர்கள் ஜெயித்தாலும் ஜெயித்த பின் மொத்தமாக
கட்சி மாறி கடல் சிங்காசனம் கட்சிக்கு வந்தார்கள்…
எதிர்ப்பாளர்கள் இல்லாமல்
போகவே விடிவெள்ளி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் அசூர பெலமாக ஆட்சியில் அமர்ந்து..
டாக்டர் ரூடால்ப் உலகப் பிதாவாக உயர்த்தப்பட்டர்.
உலகத்தில் ஜனநாயக
முறையில் எங்கெல்லாம் அரசாங்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் கடல் சிங்காசனம் கட்சி எளிதாக
ஆட்சியை கைப்பற்றியது.
மன்னர்கள் அரசாளும்
அரபுநாட்டில் இன்னும் எளிதாக முடிந்தது.
நெற்றியில் முத்திரை பதிக்காத அரசர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.அதை
தொடர்ந்து மற்றவர் ஆட்சிக்கு வந்தால் .அவர் டாக்டர் ரூடால்பின் ஆளாக இருந்தார்.உலகம் ஒரே குடையின் கீழ் வந்தது. நிர்வாகம் பல நாடுகள் பெயரில்
இருந்தாலும் அரசுக்கு கட்டளை இடுபவர் ஒருவரே.அவர் டாக்டர் ரூடால்ப்.
உலக அரசாங்கங்கள்
தங்கள் கீழ் வந்த உடனே எல்லா மக்களுக்கும்
ஒரு கட்டளை பிறப்பித்தது. இனி எந்த விழா நடந்தாலும் முதலில் டாக்டர் ரூடால்பின் புகழைக்கூறும் பாடல் பாடவேண்டும். அதன்பின் அவரின்
சிலையையோ அல்லது அவரின் படத்தையோ வணங்கி ஆராதனை செய்ய வேண்டும்.
குறிப்பாக கடவுளை தொழுது கொள்ளும் எல்லா இடத்திலும் இப்படி நடக்க வேண்டும்.
இது அரச கட்டளையாக பிரகடனப்படுத்தியது.
மிகப் பெரிய காரியமாக, நாட்டில்
இருக்கும் மொத்த பணமும் செல்லாது என அறிவித்தது. இனி பணத்தால் எதையும் வாங்க முடியாது
எனவும் அறிவித்தது.
உலகம் அனைத்திற்கும் ஒரே வங்கி.அதன்
மூலம்தான் சகலத்திற்கும் பணம் என்கிற மதிப்பு அனுப்பப்படும். ஒருவனுக்கு கொடுக்கும் தொகை அவன் நெற்றியில்
உள்ள முத்திரை மூலமாக வங்கியில் வரவு வைக்கப்படும் .தேவையான பொருளை கடையில் வாங்கி
விட்டு நெற்றியில் ஒரு கருவியை வைத்து தேவையான தொகையை கடைக்காரன் கணக்கில் வரவு வைத்துக்
கொள்ள வசதி செய்யப்பட்டது. ஆனால் நெற்றியில்
முத்திரை இல்லாதவர்கள் கடையில் பொருட்கள் வாங்கவோ விற்கவோ முடியவில்லை. முத்திரையை
பதிக்க விரும்பாதவர்கள் மலையை நோக்கி போய்
கிராமங்களில் வாழத் துவங்கினர். அதில் அனேகமாக கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள்..ஒரு
சிலர் மட்டுமே வேறு மதத்தினர்.
கிறிஸ்தவர்களில் பலர் முத்திரையை
பதித்து விட்டு நிம்மதியாக கர்த்தரை மறந்து விட்டார்கள். ஓடி ஒளிந்த கிறிஸ்தவர்கள்
தங்களுக்குள் இருந்த சபை பாகுபாட்டை மறந்தார்கள்… இப்போது நடப்பது இயேசு கிறஸ்துவுக்குவின் கொள்கைக்கு
விரோதமானவர்கள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டார்கள். அது சமயம் உலகத்தில் உள்ள கிறிஸ்தவ
சபைகள் எல்லாம் டாக்டர் ரூடால்பின் ஆழுகைக்குள் வந்தது.. கிறிஸ்தவ தலைவர்கள் டாக்டர் ரூடால்பை புகழ்வதில்
தங்கள் நேரத்தை செலவழித்தாகள். அதற்காக அவர்களுக்கு
நிறைய பணமும் வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்குள்…ஆராதனை ஒழுங்கு முறைகள் மாற்றப்பட்டன… ஆலயத்தின் நான்கு பக்கமும் டாக்டர் ரூடால்ப் புகைப்படங்கள்
பெரிதாக மாட்டப்பட்டன..அந்த படத்திற்குள் இரகசியமாக காமிராக்கள் ஒளித்து வைக்கப் பட்டிருந்தது.
டாக்டர் ரூடால்பை புகழும் சமையத்தில் அது பிடிக்காமல் முகம் சுழிக்கும் நபர்களை கண்கானித்தர்கள்.
அவர்கள் சாலை விபத்தில் இறந்து போனதாக காட்டப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டாகள். அவர்களை
நம்பி இருக்கும் குடும்பமும் நடுத்தெருவில் நின்றது. அரசாங்கம் அவர்களுக்கு
உதவ மறுத்தது.மிக மிக தாழ்மையுடன் அரசாங்க அதிகரிகளிடம் கெஞ்சினால் ஒருவேளை சில சலுகைகள்
கிடைக்கலாம். இல்லாத பட்சத்தில்
உணவு இன்றி எந்த வருமானமும் இல்லாததால் அந்த குடும்பம் மெல்ல மெல்ல சாகத்தொடங்கும்.
வாலிபர்கள் போதை நிறைந்தவர்களாய் வீதியில் வலம் வந்தார்கள்.தவறுகள் சாதாரணமாயின.
இடைவிடாத துயரத்தை
அனுபவித்த கிறிஸ்தவர்கள் அடாந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்து கிடைத்த கீரைகளையும்
காட்டு காய்களையும் பறித்து உண்டு பிழைக்க போராடினார்கள்..
பணத்திற்கு பதில் பண்டமாற்று முறையை பயன் படுத்தி
கடினமாக வாழத்தொடங்கினர்..
மலை கிராமத்தில் இதைப்போலவே
பலர் புதிதாக வந்தனர். முத்திரை பதிக்காதவர்களை அந்த கிராமத்தினர் அரவனைத்தனர்.
ஒரு நாள் அதற்கும்
பெரிய தடை வந்தது.அங்கு புதிதாக குடியேறிவர்கள். ஒரு நாள் ஞாயிற்று கிழமையன்று அவர்கள்
ஒரு இடத்தில் கூடிஜெபம் பண்ண ஆரம்பித்தார்கள்..
ஒருவர் எழுந்து நின்று
இது கடைசிக்காலம். நாம் இயேசுவுக்காக வாழவேண்டும் என்ன பாடுபட்டாலும் நெற்றியில் டாக்டர்
ரூடால்பின் முத்திரையை பதிக்க கூடாது என்று
பிரசங்கம் பண்ணினார். அன்று ஒன்றும் நடக்கவில்லை.ஆனால் அடுத்தவாரம் இதேபோல கூட்டம்
நடந்தது.
கூட்டம் துவங்கிய
உடனே ஒரு ஜீப்பில் போலீஸ் வந்து இறங்கியது.
கூட்டத்தை பார்வையிட்டுக் கொண்டு அமைதியாக நின்றது. முதல் பாட்டு பாடி முடிந்தவுடன்
போலீஸில் ஒருவர் சொன்னார் நீங்கள் உலப்பிதா டாக்டர் ரூடால்பின் புகழை முதலில்
பாடி இருக்க வேண்டும், இது அரசாங்க கட்டளை
என்றார். நீங்கள் மீறி
விட்டீர்கள்..
கூட்டம் அமைதியாக
இருந்தது. இப்போதும் உங்களுககு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது.முதலில் நம்
கண்முன் இருக்கும் “வாழும் கடவுள் உலக இரட்சகர் “டாக்டர் ரூடால்பை பற்றி புகழ்ந்து
பாடுங்கள்
அப்படி நீங்கள் பாடாவிட்டால் தேச அவமதிப்பு குற்றம்
உங்கள மீது சுமத்தப்படும்.இதனால் சிறைவாசமோ அல்லது வேறு தண்டனையோ கிடைக்கும் என்றார்.
மீண்டும் கூட்டம் அமைதியாக இருந்தது. சரி உங்கள் முடிவுப்படி
உங்களை தேசப்பிதாவை அவ மதித்த காரணத்திற்காக கைது செய்கிறேன் என்று சொல்லி அத்தனை பேரையும்
ஒரு வண்டியில் ஏற்றி கொண்டு போனார்.ஆனால் அதன் பின் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர்களை ஆப்பிரிக்காவின்
அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அனுப்பட்டதாக பின்பு தகவல் வெளியானது.உலகம் முழுவதும் ஒரே
அரசாங்கமாக ஆகிவிட்டதால் நாடு கடத்துவது சாதாரணகாரியமாய் இருந்தது.கேள்வி கேட்பார்
யாருமே இல்லை.
கிராமத்திலும் டாக்டர்
ரூடால்பின் இரகசிய ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த உடனே கிராமத்தினர் தாங்களாகவே
முன் வந்து தங்கள் நெற்றியில் இரகசிய முத்திரையை
பதித்துக் கொண்டனர்.
குற்றம் சுமத்தபட்ட ஆட்களின் நிலை பரிதாபமாக இருந்தது.அழகிய பெண்களை நிர்வாண
படுத்தி அசிங்கபடுத்தினர்.பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.அமில மழை பொழிவதற்கு கடவுள்தான்
காரணம் என்றும் அப்படிபட்ட அழிவில் நம்மை பாதுகாத்தவர் டாக்டர் ரூடால்ப் என்ற இரட்சகர்
என்றும்.இதை ஏற்றுக் கொள்ளாத மனிதர்கள் மனித குலத்தின் எதிரிகள் என்றும் தொலைக் காட்சியிலும்
செய்தி தாளிலும் வந்து கொண்டேஇருந்து.
இப்படி தண்டிக்கபட்டு நாடு கடத்தபட்ட கிறிஸ்தவர்கள்
மொழி தெரியாத வேறு ஊர்.அல்லது அடர்ந்த காடு என்று போனால்.வாழ்க்கை கடினமாகி
நோய்பட்டு சாவதை தவிர வேறு வழியில்லை…
டாக்டர் ரூடால்ப் இவர் விஞ்ஞானத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். பல
காரியங்கள் விஞ்ஞானத்தால் செய்தாலும் அது மற்றவர்களால்
கண்டுபிடிக்க முடியாதபடி இருந்ததால் மக்கள் அவரை கண்டு பயந்தார்கள்..
டாக்டர் ரூடால் சிறைச்சாலையை மூடிவிட்டார் .கைதிகள் அனைவருக்கும்
விடுதலை அளித்தது.
தேவையில்லாத கைதிகளுக்கு
முத்திரையில் பணம் பரிமாராதபடி சீல் வைக்கப்பட்டது.இதனால் எதுவும் வாங்க முடியாமலும்
சாப்பிட முடியாமலும் காட்டுபக்கம் ஒதுங்கினார்கள்
மற்ற கைதிகள் அனைவரும்
நெற்றியில் முத்திரை பதிக்கபட்டு அரசாங்க விசுவாசிகளாய் வெளியே வந்தனர்.நெற்றியில்
முத்திரை பதிக்கபடாத மக்களின் பொருளை கொள்ளையடிக்கவும்
கொலை செய்யவும் அவர்களுக்கு இரகசியமாக ஆலோசனை கொடுக்கப்பட்டது..முத்திரை பதிக்காதவர்கள்
வாழ்க்கை எல்லா பக்கமும் நொறுக்கபட்டது..
மல்லிகாவுக்கு .தன்
காதலன் ஜான் பாலிடம் பேசியே ஒருவருடம் ஆகி இருந்தது…
உலகத்தில் நடந்த குளறுபடியில் தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டு கேட்கபட்டது.சந்தேகத்திற்கு
இடமாக யாராவது பேசினால் அதன்பின் உயிரோடு வாழ்வது கடினமாகபட்டது..
ஜான்பாலை பார்ப்பதற்கு
நகரத்திற்கு மல்லிகா வந்திருந்தாள்…அவளுக்கு பைபிளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..
பைபிளில் உள்ளது சத்தியமான வார்த்தை என்பதை தெரிந்திருந்தாலும் இன்னும் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால்
யாரிடம் போய் கேட்பது..வசனம் கிடைக்காத காலத்தில் இருக்கிறோம் என்பது அவளுக்கு தெரியாது..
கிருபையின் வாசல்
அடைக்கபட்டு விட்டது என்றும் அவளுக்கு தெரியாது. உபத்திரவ
காலமும் மகா உபத்திரவ காலமும் சேர்ந்து பேயாட்டம் போடும் காலத்திலே தான் வாழ்வது மல்லிகாவுக்கு தெரியாது. இரட்சிப்பை தவறவிட்ட
பல கிறிஸ்தவர்கள் மத்தியில் மல்லிகா போன்ற சாதாரணமானவர்கள் இப்போது இயேசு கிறிஸ்துவை
தேடுவது அதிசயமான ஒரு நிகழ்வு.. ஒரு வசனத்துக்கு விளக்கம் தரக்கூட
யாரும் இல்லை.
யாரிடமாவது பைபிளை
பற்றி சந்தேகம் கேட்டால், கேட்கும் அவன் ஒற்றனாக
இருந்தால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும். பொய்
குற்றம் சாட்டப்பட்டு வாழ்க்கை அழியும்..
ஆனாலும் ஆலயத்திற்கு
சென்றால்தான் யாராவது உண்மை ஊழியனை கண்டு கொள்ளலாம் என்று மல்லிகா துனிவாக நினைத்தாள்.. ஆலயம் இயேசு
கிறிஸ்துவுக்கு எதிராக செயல் படும் இடமாகிவிட்டது என்பதை ஓரளவு அவள் உணர்ந்தாள்..
ஞாயிற்று கிழமை கோயிலுக்கு போகலாமா என்று கேட்டாள். ஜாண் பால் இப்போது
நிலமை சரியில்லை.நீயும் நானும் முத்திரை பதிக்காதவர்கள என்று எளிதாக கண்டு பிடித்து
விடுவார்களே என்றான்.
எனக்கு பைபிளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்றாள்.
ஜாண் பால் அதிர்ந்தான். அதில் உனக்கு என்ன தெரியவேண்டும் என்றான்.
நிறைய… ஒருவேளை அங்கு போனால் யாராவது பைபிளை பற்றி தெரிந்தவர்களை கண்டு
பிடிக்கலாமே, என்றாள்.
தனக்கும் பைபிளை பற்றி
தெரியும் உனக்கு என்ன சந்தேகம் , என்று கேட்பதற்கு ஜாண்பாலுக்கு தைரியம் இல்லை. இதை
நினைத்து ஜாண்பால் வெட்கப்பட்டான்.கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.
சரி ,காலையில் போகலாம் தயாராய் இரு என்றான். ஆனால் அடுத்த நாளில் நடக்க போகும்
பிரளயத்ததை பற்றி அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
16
மல்லிகாவும் ஜாண்பாலும்
சிறிது பதற்றத்தோடு ஆலயத்திற்கு போனார்கள்.. ஆட்கள் வேகமாக வர
ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் ஆலயம் நிரம்பியது.மல்லிகாவுககு லேசலாக தலை வலிக்க
ஆரம்பித்தது. காரணம் மெல்லியதாய் மது வாடை வீசிக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். ஜாணிடம் எனக்கு மயக்கமாய் வருகிறது
என்றாள். கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தார்கள்..
ஆராதனை ஆரம்பமாகியது. மல்லிகா ஏற்கனவே
பல தடவை ஆராதனைக்கு வந்திருக்கிறாள் அப்போதெல்லாம் ஒரு வித பக்தியாகவும் மன அமைதியாயகவும்
இருந்த இடம் இன்று வேறு விதமாய் காட்சியளித்து..
பாஸ்டர் பேச ஆரம்பித்தார்
முதலாவதாக ,உலக பிதாவாக டாக்டர் ரூடால்ப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அவர்தான் உண்மையான உலக இரட்சகர்… கடவுள் மக்களை எப்படி வதைப்பார். அமில மழையை பொழியச்
செய்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் , ஆனால் அதிலிருந்து மக்களை காப்பாற்றிய டாக்டர்
ரூடால்ப்தான் உண்மையான இரட்சகர் என்றார். கூட்டம்
ஆரவாரித்தது. சந்தோஷமே
நமது வாழ்வின் முக்கிய குறிக்கோள்….
நம்மை கலங்கபண்ணும் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வருவோம்….
மிக முக்கியமாக நாம் நமது கையிலிருக்கும் பைபிளை தூக்கி எறிவோம்.நமக்காக புதிய
வேதபுத்தகம் வரப்போகிறது. இனி அதுதான் நமது வேதம் என்ற கூறவும் பைபிள் தூக்கி வீசப்பட்டது.அவர்கள்
திட்டமிட்டே பைபிளை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று மல்லிகாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மல்லிகாவுக்கு மயக்கமே வந்து
விட்டது.. ஆலயத்திலும் டாக்டர்
ரூடால்ப் ஆட்கள் ஆக்கிரமித்து விட்டார்கள்.
இனி என்ன செய்வது.கண்ணீர்வடித்தாள். .மீண்டும் ஒரு பேரிடி அங்கு
ஏற்பட்டது….
இப்போது ஒரு வயதான
ஒரு போதகர் மேடை ஏறினார்..அவர் அமைதியாக கூட்டத்தை பார்த்தார்.கூட்டம் அமைதியானது..
அருமையானவர்களே…
இப்போது உலகத்தில் நடப்பதை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம்
நீங்கள் புரிந்திருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்து பூமிக்கு இரண்டாம் முறை வருவது நிச்சயமாகிவிட்டது. அவர் இப்போது
மத்திய வானில் இருக்கிறார். தம்முடையவர்களை
தம்மிடமாக ஏற்கனவே சேர்த்துக் கொண்டுவிட்டார்.
எண்ணை இல்லாத கன்னிகைகள் போல நானும், என்னைப் போல சிலரும், நீங்களும் ,கைவிடபட்டவர்கள்
ஆனோம். இப்போதும் நமக்கு ஒரு
சந்தர்ப்பம் கொடுக்கபட்டிருக்கிறது இப்போதாவது இதை நாம் பயன்படுத்த வேண்டும் ….. …
என்அருமை ஜனங்களே நீங்கள் போற்றும் டாக்டர் ரூடாப் மனிதனே அல்ல அவன் அந்தகாரலோகாதிபதியின்
ஆவியை உடையவன். ஏதேன் தோட்டத்தில் வலுசர்ப்பம்
வேடம் போட்டவன் .இவன் கட்சியின் சின்னமே இதற்கு சாட்சி.. இவனை
நம்பாதீர்கள். இதுவே
கடைசிக்காலம் இவனை புறம்பே தள்ளுங்கள்..உங்கள் பாவத்திற்காக கண்ணீர் சிந்துங்கள். ஒருவேளை
ஆண்டவர் இரக்கம் காட்டுவார்.
அவ்வளவுதான் ஆலயத்தில் உள்ள கூட்டம் கோபத்தால் கொந்தளித்து.
ஏய் கிழட்டு பிசாசே
டாக்டர் ரூடால்ப்பை குறை கூற உனக்கு எந்த தகுதியும் கிடையாது…
அடியுங்கள் அவனை.
கிழட்டு பேயை கொல்லுங்கள். ஒன்று
சேர அந்த போதகர் மேலே பாய்ந்தார்கள். மல்லிகா வெளியே ஓடி வந்துவிட்டாள். ஆலயத்திற்குள்
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. சில வினாடிகளில் அந்த
வயதான போதகரை அடித்து துவைத்து இரத்தத்தால் குளிக்க வைத்து அவரை இழுத்துக் கொண்டு தெருவில்
வீசினார்கள்…
.போதகர் தனியாக தெருவில் கிடந்தார். யாரும் அவரை காப்பாற்ற வரவில்லை…மல்லிகா
தைரியமாக ஓடிச்சொன்று, உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து அதில் அந்த போதகரை தூக்கி ஆட்டோவில்
போட்டு கொண்ட பின் யோசித்தாள்
.எதாவது மருத்துவ
மனைக்கு கொண்டு போகலாமா? வேண்டாம் , அங்கும் டாக்டர் ரூடால்பின் ஆட்கள் இருப்பர்கள்..ஆனால்
முதலில் இவருக்கு முதலுதவி செய்யவேண்டும் அது தன்னால் முடியும் ஆகவே இவரை தனது வீட்டிற்கு
கொண்டு போக வேண்டும் என்று நினைத்தாள்.. ஜாண் பால் அமைதியாக மல்லிகா சொல்வதை செய்தான்…
வீடு வந்ததும் பத்திரமாக இறக்கி வீட்டிற்குள் போதகரை தூக்கி கொண்டு போக
ஆட்டோ டிரைவர் ஒத்தாசை செய்தான். ஆனால் அவன் போகும்போது மல்லிகாவை பார்த்து சொன்னான்..உங்கள்
எல்லோருக்குமே நாள் குறித்தாகி விட்டது. சாவதற்கு தயாராய் இருங்கள்.
டாக்டர் ரூடால்பின் முத்திரையை நெற்றியில் பதித்தால் ஒருவேளை உங்களை உயிரோடு
விடலாம்.இல்லயென்றால் சாவு நிச்சயம் என்றான்..
மல்லிகா ஒன்றும் சொல்லவில்லை.உள்ளே கொண்டுபோய் போதகரை படுக்க வைத்து முதலுதவி
செய்தாள் .
போதகர் மெல்ல பெலனடைந்தார். எதாவது அவசர செய்தி இருக்குமா என்று ஜாண்பால்
தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தான்.
அங்கு விபரித காட்சி ஓடிக் கொண்டிருந்து..
ஏதோ ஒரு நாட்டில்
ஒரு மைதானத்தில் கும்பலாக ஆட்கள் நிறுத்தப்பட்டு
இருக்கிறார்கள். இப்போது நேரடி ஒளிபரப்பு என்று திரையில் எழுத்து வருகிறது..
அறிவிப்பு கேட்கிறது.
அவரவர் மொழியில் மொழி மாற்றம் தானாய் செய்யப் படுகிறது.
இவர்கள் நமது உலப்பிதாவான
டாக்டர் ரூடால்ப் அவர்களை ஏளனம் செய்தவர்கள். நெற்றியில் முத்திரையை பதிக்காதவர்கள்.
பைபிளை ஒழித்து வைத்து படித்தவர்கள்.இவர்கள் கடவுள் என்று ஒருவரை வணங்குகிறார்கள்.அந்த
கடவுள் சீக்கிரம் வரப்போகிறாராம் வந்து நமது
உலகப்பிதவான டாக்டர் ரூடால்ப் அவர்களை அழிக்க போகிறாராம்….இந்த சதிகாரர்களை என்ன செய்யலாம்
சொல்லுங்கள்….
கூட்டம் கூச்சலிட்டது..
கூட்டத்தினர் என்ன
சொல்கிறார்கள் என்று புரியவில்லை.தொலைக்காட்சியில் எழுத்துக்கள் வலம் இருந்து இடமாக
ஓடியது.அவர்களை கொல்லச் சொல்கிறார்கள் என்றது..
இப்போது டாக்டர் ரூடால்பின்
உதவியாள் திரையில் தோன்றினான்…
இதுவரை நீங்கள் கண்டிராத
ஒரு அதிசயத்தை நமது உலப்பிதா டாக்டர் ரூடால்ப் செய்து காட்ட போகின்றார். அது வானத்தில்
இருந்து நெருப்பு வந்து இவர்களை சாம்பலாக்கும்..என்றான்….
மல்லிகாவுக்கு மூச்சே
நின்றுவிடும்போல இருந்தது.கையிலிருந்த மருந்து குவளையை அப்படியே வைத்துவிட்டு டிவியை
கவனிக்கலானாள்.
கூட்டம் கத்திக் கொண்டே
இருந்தது. பாவம்
அந்த ஆட்கள்.சாந்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள். திடிரென்று வானம் இருண்டது..
உயரத்தில் மிக தூரத்தில்
ஒரு சின்ன ஒளிவட்டம் தெரிந்தது.அது பக்கத்தில் வர வர பெரிதாகி கொண்டே வந்தது.இப்போது
நிலவு போன்று வட்டமாக தெரிந்தது.இதோ பக்கத்தில் வந்து விட்டது..
அந்த வெளிச்சம் அங்கு
கூடி இருந்த எல்லோர் மேலும் பட்டு பிரதிபலித்தது..இப்போது அது நெருப்பு பந்தாக கண்ணுக்கு
தெரிந்தது.
இதோ விழுகிறது….
.மொத்த கும்பலும்
அலற கூட முடியவில்லை எல்லோரும் எரிந்து சாம்பலானானாகள்..அதாவது வேடிக்கை பார்த்தவர்களும்
எரிந்து சாம்பலானார்கள்.
மல்லிகாவுக்கு அதிர்ந்தாள்..அழுதாள்….
எப்படி எல்லோரும் எரிந்து விட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம்,?
புகை காடாய் தெரிந்த காட்சி மறைந்தது
மீண்டும் டாக்டர்
ரூடால்பின் உதவி ஆள் திரையில் தோன்றினான்…அவன் சிரித்துக் கொண்டே வந்தான்.
என்ன பார்க்கிறீர்கள்
நம் உலகப்பிதா டாக்டர் ரூடால்ப் தாம் சொன்னதை செய்து காட்டிவிட்டார் பார்த்தீர்களா.! அதுதான் அவரின் பெலன்… மனிதர்கள் எவரும்
அவருக்கு எதிர்த்து நிற்க முடியாது… வானத்தில் இருந்து அக்கினியை கூட அவரால் வர வழைக்க
முடியும் . ஒருவனும் எதிர்க்க முடியாது…..ஏன் அந்த கடவுள் கூட இதற்கு விதி விலக்கல்ல..
மீண்டும் சத்தமாக
சிரித்தான் ஹா .ஹா…ஹா..ஹா…
என்ன பார்க்கிறீர்கள் ?…
அவர்கள் கூடவே மற்றவர்களும் எரிந்து சாம்பலானார்களே அதை நினைக்கிறீர்களா,!
அவர்களை
பற்றி கவலைபடாதிருங்கள்.அந்த இடத்தில் நீங்கள் இல்லாமல் போனதற்கு சந்தோஷப்படுங்கள்..
சரி நேரமாகிறது.வருகிறேன் மீண்டும் இதைப்போன்ற வெரி இன்ட்ரஸ்டிங்கான நிகழ்ச்சியில்
உங்களை சந்திக்கிறேன்..அது வரை உலகப்பிதாவான
டாக்டர் ரூடால்ப் அவர்களின் கண்காணிப்பு உங்களோடு இருப்பதாக வணக்கம்…
16
தொலைக்காட்சியில் பழையபடியும் டாக்டர் ரூடால்ப் பெருமைகளை விளக்கி நிகழ்ச்சிகள்
வர ஆரம்பித்தன.மல்லிகா தொலைக்காட்சியை ஆப் செய்து விட்டு அந்த காயம் பட்ட போதகரை கவனிக்க
ஆராம்பித்தாள்…..இப்போது அவர் எழுந்து உட்கார்ந்தார்.குடிக்க தண்ணீர் கேட்டார்.மல்லிகா
கொடுத்தாள்…
அவர் மெதுவாக பேச
ஆரம்பித்தார்..
நீயாரம்மா..? அவர்
கேட்டார்.
நான் மல்லிகா.இவர்
ஜான்பால்..
அவர் உன் கணவரா.?
மல்லிகா திணறினாள்..இப்போதைக்கு
அப்படி இல்ல.ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம் ,இப்போதய நிலவரத்தை பார்த்தால்
இனி திருமணம் என்பது கனவிலும் நடக்காது போல தெரிகிறது.
போதகர் மீண்டும் பேசத்தொடங்கினார்.
மல்லிகா, நீ அவர்களின்
முத்திரையை பதித்திருக்கிறாயா,?
மல்லிகா இல்லயென்று
தலையை ஆட்டினாள்.
,நீ ஏன் அந்த முத்திரையை
பதிக்கவில்லை.?
அது சாத்தானின் முத்திரை
என்று கண்டு கொண்டேன் .
எப்படி?
தற்செயலாய் ஒரு நாள்
பைபிளை படித்தேன்…
சரி அதில் படித்து
என்ன தெரிந்து கொண்டாய்.?
பெரிதாக எதுவும் தெரிந்து
கொள்ளவில்லை. ஆனால் பைபிளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.
இதை ஜாணிடம் கேட்டிருக்கலாமே..
மல்லிகா மௌனமாய் இருந்தாள்.
ஜாண் பேசினான்.எனக்கு வசனங்களை
விளக்கும்அறிவுக்கு வேத அறிவு கிடையாது..
ஓ….அப்படியானால் வேதத்தை
பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்.
சொல்லப் போனால் தெரிந்தது
என்று ஒன்றுமே இல்லை.இப்போது காலம் கடந்துவிட்டது.ஆனால் இயேசு கிறிஸ்துவுக்காக என்ன
நடந்தாலும் சரி.அதை தாங்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
மகிழ்ச்சி தம்பி.
நானோ வயதானவன்…சாவு வரும் நாள் இயற்கையாகவே எனக்கு பக்கத்தில் இருக்கிறது.ஆனால்
நீங்கள் அப்படி அல்ல.வாழ வேண்டிய பிள்ளைகள்.உங்களின் தியாகம் மிகப்பெரியது.
ஒரு நாள் பைபிள புரட்டி பார்த்ததற்கே இவ்வளவு நம்பிக்கை என்பது என்னால்
புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.
மல்லிகா குறுக்கிட்டாள். இனி என்ன நடக்கும்.என்பதை பற்றி எனக்கு கொஞ்சம்
விளக்கமாக கூறுங்கள் ஐயா.
வயதான போதகர் மூச்ச இழுத்துவிட்டுக் கொண்டார்.பின்பு நிதானமாக சொல்ல ஆரம்பித்தார்..
இது பல ஆயிரம் ஆண்டுகளின் போராட்டம்..
கடவுள் உலகத்தில் முதல் மனிதனை படைத்த போது இந்த போராட்டம் துவங்கியது.மனிதனையும்
மனுஷியையும் கடவுள் தன் கைளினால் உண்டாக்கிய காரணம் அவன் பழுதில்லாமல் இருக்க வேண்டும்
என்பதற்காகவே.
அவர்கள் பழுதில்லாமல் தான் ஏதேன் தோட்டத்தில் உலாவினார்கள்.உடலில் பழுதை
ஏற்படுத்த முடியாததால், சாத்தான் ,ஏவாள் மூலமாக அவர்கள் மனதில் பழுதை உண்டாக்கி அவர்கள்
உடலையும் பாழ் படுத்தினான்.
மல்லிகா குறுக்கிட்டாள்..மன்னிக்க வேண்டும்,ஐயா எனக்கு இரண்டு சந்தேகம். ஒன்று
சாத்தான் சாதாரணமாக வீழ்த்த கூடிய அளவுக்கு சாதாரன மனதை உடையவர்களாகவா கடவுள் அவர்களை
படைத்தார்.?
இரண்டாவது , மனதின்
மூலமாக உடலை எப்படி பாழ்படுத்த முடியும்..?
போதகர் மல்லிகாவை
கூர்ந்து பார்த்தார்.
உனக்கு மட்டுமல்ல
உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உன் முதல் கேள்விக்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டுதான்
இருக்கின்றனர்.
ஆனால் அதை வேத புத்தகத்தில்
தேடாமல் சுய அறிவில் தேடுகின்றனர்.ஆகவே பதில் இன்று வரை கிடைக்கவில்லை.
வேத புத்தகத்தில்
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கடவுள் இப்படி எழுதி வைத்திக்கிறார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஒரே காரியத்தை மூன்றாக
பிரித்து சொல்கிறார்
முதலில் தேவனாகிய
தானே “மனிதனை படைத்தது, என்ற உரிமையை நிலை நாட்டுகிறார்.
இரண்டாவது
தேவன் தம்முடைய சாயலாகவே
சிரூஷ்டித்தார்.
இங்கே சாயல் என்பது
என்ன? உதாரனமாக ஆகாயவிமானத்தின் இறக்கைகள் பறவைகளின் இறக்கையின் சாயலுக்கு ஒப்பாக இருக்கிறது.. அதாவது பறவைகளின் இறக்கைகள் என்ன
வேலை செய்கிறதோ அதைப்போலவே ஆகாய விமானத்தின் இறக்ககைளும் அதைப் போல்உள்ள வேலையை செய்கிறது.
மனிதன் தேவ சாயலாக
இருக்கிறான் என்றால்..கடவுள் என்ன செய்கிறார்.!
ஒன்றை .உருவாக்குவது.
அதை பாதுகாப்பது. பின் பொருக பண்ணுவது. தேவை இல்லயெனின் அதை அழிப்பது.இவை எல்லாவற்றையும்
சுயமாக முடிவெடுத்து தாமே செய்து முடிக்கும் அதிகாரம் கடவுளைப் போலவே மனிதனுக்கும்இருந்தது.
.
அதாவது சுய சித்தம்.அதாவது
விடுதலையோடு கூடிய சுதந்திரம் மனிதனுக்கு இருந்தது..
மேற் கூறிய இரண்டு
குணங்களும் ஆணுக்கும் பொறுந்தும் பெண்ணுக்கும் பொறுந்தும்..
இரண்டாவது உனது கேள்வி
என்ன.?
மனது மூலமாய் உடலை
பாழ்படுத்த முடியுமா?
முடிந்தது.
அதாவது மரணம் என்ற ஒன்றை ஆதாம் ஏவாளின் மீறுதல் மூலமாக அவர்கள் தானாகவே
பெற்றுக்கொண்டார்கள்..
மரணம் எப்படி ஒரு சாதாரண மனிதனுக்குள் வர முடியும். என்றால் மனித உடல் நாள் பட நாள் பட தானாய் கெட்டு கடைசியாக
செத்து மடிகிறது.
அதற்கு மரணம் என்று பெயர்.
மனிதன் நீண்டகாலம்
வாழ்வதற்கு படைக்க பட்டவன். அவன் அவன் மூளையின் செயல்திறனை வைத்தே கூறிவிடலாம்..வெறும்
எண்பது ஆண்டுகள் வாழ்வதற்காக படைக்கப்பட்டது போலவா மனித முளை இருக்கிறது.?
கெட்டுப் போன மனதின் சிந்தனை கெட்டவையாகத்தானே இருக்கும் .ஆகவே முதல்
கொலை பூமியில் விழுந்தது.
காயின் தன் சொந்த தம்பியை கொலை செய்தான்..
சாத்தான் ,ஆதாம் ஏவாள் என்ற மனிதர்களை
அவர்கள் வாழ் நாட்களை கொலை செய்து(குறைத்து) அவர்களை மரணத்திற்கு வழி நடத்தினான்.
இரண்டாவது காயின் கெட்ட சிந்தனையின் வெளிப்பாடாய் தன் சகோதரனை கொலை செய்தான்..
மல்லிகா மீண்டும்
குறுக்கிட்டாள்…
கடவுள் ஏன் அந்த கொலையை
தடுக்கவில்லை..
போதகர் அமைதியாக இருந்ததார்.
இந்த கேள்வியை இப்படி
மாற்றி கூட கேட்கலாம்..கடவுள் ஏன் ஆபேலை காப்பாற்றவில்லை.
உலகத்தில் எத்தனை
ஆபேலை இப்படி காப்பாற்ற முடியும்.
காயீனை அழிப்பது எளிதானதா.?
ஆபேலை காப்பாற்றுவது எளிதானதா..? காயின் அழிந்தால் ஆபேல் காப்பாற்ற படுவானே.இது மனித
சிந்தனை..
ஆனால் கடவுள் காயீன்மேலும்
அன்பு செலுத்துபவர்.அவனை அழிப்பதைவிட அவனையும் திருத்தலாமே என்று நினைத்தார்.காயினை
திருத்துவது என்றால் அவனுக்குள் இருக்கும் சாபத்தை நீக்கிவிட்டால் அவனும் நல்ல மனிதன்தானே.
ஜாண் பால் இப்போது
ஒரு கேள்விகேட்டான்..
எப்படியும் மனித படைப்பு
விஷயத்தில் கடவுள் தோற்று விட்டார்தானே.?
போதகர் அவசரமாக பதில்
அளித்த்தார்…இல்லை மனிதன் முழு சுதந்திரமானவன் என்று அதன் மூலம் நிறுபித்தார்.
அன்று அந்த கனியை ஆதாம் ஏவாளிடமிருந்து வாங்கி உண்ணும் போது
அதை தட்டி பறித்திருந்தால் இன்று வேறு கேள்வி வரும்..
ஆதாம் ஏவாளுக்கு முழு
உரிமை உலகத்தில் கொடுக்க படவில்லை.அவர்கள் ஒரு கட்டளைக்கு உட்பட்டுதான் இருந்தார்கள்.அதை
மீறும்போது தடுக்க பட்டார்கள்.என்றும் சொல்லப்படும் ..
சரியோ தவறோ… சுதந்திரம்
என்பது இரண்டையும் செய்ய அதிகாரம் பெற்றது.. …
எப்படி இருந்தாலும் ,ஆபேலைப் போல நல்லவர்கள் சாவது
கடவுளுக்கு விருப்பமானதா..?
மல்லிகா கேட்டுவிட்டு மொனமானாள்….
நல்லவரோ கெட்வரோ யார் சாவதும் ஆண்டவருக்கு பிரிமானதல்ல..
நமக்கு நாம் வாழும் உலகம் பரந்து விரிந்து இருப்பதாக நினைக்கிறோம்..ஆனால்
அண்டவெளியை நோக்கிப்பார். அது மகா விஸ்தீரமானது அதற்கு முன் உலகத்தின் பரப்பளவு கடுகைப்
போல சின்னதாய் இருக்கிறது.
அது போலவே உலகத்தின் வாழ்நாள் எண்பது வருஷம் நம் கண்களுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால் நித்திய நித்தியமாக
கோடிக் கணக்கான வருடங்கள் வாழப் போவதை நினைத்தால் இது அற்பமானது. ஆபேல்கள் இங்கே இறப்பது
சாதாரணமானது. இப்படி சில நேரம் நடப்பதை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்..அது நித்தியத்தை
நினைத்து.
மல்லிகாவுக்கு வேறு
சந்தேகம் வந்தது..அது என்ன நித்திய வாழ்வு.?
போதகர் கொஞ்சம் தண்ணீர்
குடித்துக்கொண்டார்.
இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கும் போது ஒரு வார்த்தையை
அடிக்கடி பயன்படுத்தினார்.அந்த வார்ததை நித்திய ஜீவன்…அதாவது அழிவில்லாத உயிர்..அந்த
அழிவில்லாத உயிரை நீ பூமியிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்..
ஒரு உயிர் இருக்கும்போது
இன்னொரு உயிரை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்..?
போதகர் சொன்னார்:உதாரணத்துக்கு ஒரு வேலைக்கான கேம்பஸ் இண்டர்வியூ நடக்கிறது
என்று வைத்துக்கொள்.
அங்கே சில தேர்வுகள் வைக்கப்படும்..
எதற்காக.? வேறு ஒரு இடத்தில்
ஒருவேலையில் சேர்வதற்காக,
இந்த தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக ஒரு வேலைக்கான ஆணையை ஒரு காகிதத்தில்
எழுதி அவர்கள் கையில் கொடுத்து விடுவார்கள்.
இந்த ஆணையை பெற்றவர்கள் அதன் பின் பல நாட்களோ.அல்லது சில மாதங்கள் களித்தோ
அவர்கள் குறிப்பிட்ட தேதியில் அந்த வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம்.
ஆனால் கிடைத்திருக்கும் ஆணை மிக முக்கியம்..அது போல பூமியில் நாம் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டால்,அதாவது அந்த நிச்சயத்தை பெற்றுக் கொண்டால்.மறு உலகில் நித்திய
வாழ்வை பெறலாம்.
மல்லிகாவுக்கு கண்களில் கண்ணீர் வந்தது.
இதை பற்றிய எதுவும் தெரியாமல் எத்தனை வருடம் பாழ் படுத்திவிட்டோம்.ஜாண்பால்
மிக துயரமடைந்தான்.
காலங்கள் முடிந்து விட்டது என்று வருந்தினான்.
மனிதர்கள் பூமியில் எப்படி அந்த நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வது.?
இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தார் என்றும் அவர் நமக்காக இரத்தம் சிந்தி
மரித்தார் என்றும்.பின் மூன்றாம் நாள் உயிர்த்து பரலோகம் சென்று நமக்காக பிதாவின் வலது
பக்கத்தில் உட்கார்ந்து அனுதினமும் நமக்காக பரிந்துபேசுகிறார் என்று நம்பினால்போதும்.
இப்படி நம்பினால் நித்திய ஜீவன் கிடைக்குமா…?
போதகர் கண்களை மூடியபடி சொன்னார். இப்படி முழுமனதாக சொன்னால் பாவ மன்னிப்பின்
நிச்சயம் மனதில் தெளிவாய் தெரியும்.
அதுவே இரட்சிப்பின் அடையாளம்..
அதுதான் நித்திய ஜீவனை பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பத்திரம்..
மல்லிகா வேகமாக குறக்கிட்டாள்…அப்படியானால்
இப்போதும் கிடைக்குமா..?
இல்லை மகளே..போதகர்
விம்மி விம்மி அழத்தொடங்கினார்..
மல்லிகா இவர் இப்போது
ஏன் அழுகிறார் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
போதகர் அழுது முடித்து
கண்களை துடைத்துக் கொண்டு சொன்னார்.
கிருபையின் வாசல்
அடைக்கபட்டு விட்டது.
பரிசுத்த வான்கள்
மத்திய வாணத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.இது அந்திகிறிஸ்துவின் அரசாட்சியின்காலம்…
மல்லிகாவும் அழத்
தொடங்கினாள்….அப்படியானால் நமக்கு இனி மீட்பே இல்லையா.?
போதகர் தைரியமாக சொன்னார்..இப்போது
நமக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.அது கர்த்தருக்காக உறுதியாய் நிற்பது.
சாத்தானின் முத்திரையை
நெற்றியில் பதிக்காமலிருப்பது.இதனால் மரணம் வந்தாலும் உறுதியாய் நிலை நிற்கவேண்டும்..என்னைப்போல
என்றார். இது நமக்கு
கொடுக்கபட்டிருக்கும் கடைசி சந்தர்ப்பம்..
மல்லிகா இப்போது தெளிவானாள். ஜாண்பால் நிமிர்ந்து
உடகார்ந்தான்…நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும் உறுதி அவர்கள் கண்களில் தெரிந்தது.ஒரு அசாதாரண அமைதி
அந்த அறையில் வந்தது.
சில விணாடிகளில் அந்த அமைதியும் சமாதானமும் சிதைந்தது.
17
கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
ஜான்பால் கதவை திறந்தான். ஐந்து போலீசார்
அறைக்குள் தடதடவென நூழைந்தார்கள். அவர்களில் ஒருவன் சட்டையில் பீட்டர் என்று எழுதி
இருந்து. ஜாண் கவனித்தான், அந்த ஆள் இன்ஸ்பெக்கடர் என்று தெரிந்து கொண்டான்..ஆனால்
அவர் பார்வை கொடுரமாக மாறி இருந்தது..
உங்களை கைது செய்கிறோம்.
ஜாண் பால் இதை எதிர் பார்த்துதான் இருந்தான்,ஆனாலும்
ஏன் எங்களை கைது செய்கிறீர்கள் என்று கேட்டான். அரசாங்க குற்றவாளிக்கு நீங்கள் ஆதரவளித்தது
குற்றம்.
யார் அரசாங்க குற்றவாளி.?
இவர் தான் என்று பீட்டர் அந்த வயதான போதகரை காட்டினான்.
ஜாண் அதற்கு பின் எதுவும் கேட்கவில்லை.
பீட்டரோடு வந்த இன்னொரு போலீஸ் ஆபீசர் மல்லிகாவை பார்த்து இவள் யார் ,என்று
என்று கேட்டான்.
அவன் பார்வையும் பேச்சும் ஜாணுக்கு பிடிக்கவில்லை.
அவள் என் மனைவியாக போகிறவள்.என்றான்…
அது சரி. இப்போது
அவள் யார்.?
இப்போது அவள்.என்
காதலி.
இது யார் வீடு ?.
மல்லிகா இப்போது பதில்
சொன்னாள். நான்
வாடகைக்கு எடுத்து இங்கே தங்கி இருக்கிறேன்.
எங்கே வேலை செய்கிறாய்..?
இப்போது வேலையில்
இல்லை.எப்படியும் வேலைக்கு போய் விடுவேன்.
அந்த போலீஸ் ஆபீசர்
எரிந்து விழுந்தான்…நீவேலைக்குபோ அல்லது போகாமல் சம்பாதி அதைபற்றி எனக்கு கவலை இல்லை.
வேலை இல்லாத ஒருத்தி ஒரு தனியறையில் ஒருவனோடு வாழ்கிறாள் என்றால் அதற்கு
என்ன அர்த்தம்.
உன் மீது விபச்சார வழக்கு பதிய இதுவே போதுமானது.
ஜாண் இடைமறித்தான். சார் நான் இங்கே எங்கே தங்கி இருக்கிறேன் ? .எனக்கு என் வீடு வேறு இடத்தில் இருக்கிறது.
அந்தபோலீஸ் ஆபீசர் கிண்டலாக சிரித்தான்.. ஓ..நீ அடிக்கடி வந்து போகிறவன்.சரிதான்…
நான்தான் தப்பாக சொல்லிவிட்டேன்.நீங்கள் ஜென்மத்துக்கும் கைதிகளாகத்தான்
இருக்க போகிறீர்கள்.
மற்ற போலீசாரை பார்த்து அவன் கத்தினான்.
இந்த நாய்களை இழுத்து கிட்டு
வாங்க.
ஜாண் ,போதகரை கைத்தாங்கலாக
அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தான். போலீஸ் வாகனத்தில் ஏற்றப் பட்டார்கள்.
இனி என்ன நடக்கும். போலியாக பெயருக்கு எதாவது விசாரணை நடக்கும்.
அதன்பின் நாடு கடத்தப்படலாம்.
சிறைச்சாலையில் அடைக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம்.
என்ன வேண்டுமானாலும் நடக்கும்..ஆனால் மல்லிகா திடமாய் இருந்தாள்..
அதிக பட்சம் என்ன நடக்கும் மரணம்தானே.
இந்த பேய்களின் கூட்டத்தில் சேர்வதை விட கடவுள் பெயரால் சாவது நல்லது
என்று நினைத்தாள்.
ஜாணுக்கு மல்லிகாவை
நினைத்து கவலையாக இருந்தது.
பாவம் மல்லிகா .
மல்லிகா இவர்களிடம்
சிக்கி அவஸ்தைபடுவது துயரமாக இருந்தது.ஒரு காரியம் அவன் மனதில் கசப்பாய் இருந்தது
.அது தன்னை பற்றியதே.
ஒரு முறை பைபிளை படித்த
மல்லிகாவுக்கு இவ்வளவு பற்று இயேசுகிறிஸ்துவின் மேல் இருக்கும் என்றால் பிறவிலேயே கிறிஸ்தவனாய்
இருக்கும் தனக்கு எவ்வளவு பற்று கிறிஸ்து மேல் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் இதுவரை பெயருக்கு கூட பைபிளை அவன் படித்தது இல்லை.
அதுதான் கசப்பாய் இருந்தது.ஆனாலும் கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அது இயேசு கிறிஸ்துவுக்காய்
ஜீவனை கொடுப்பது.
கிருபையின் வாசல்
அடைக்கபட்ட பின் இரட்சிப்பு இல்லை.சுயமாய்தான் நிரூபிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..
.பரவாயில்லை.
மல்லிகாவே தைரியமாய்
இருக்கும் போது தான் கலங்க கூடாது என்று நினைத்தான்..
இப்போது எங்கே கொண்டு செல்கிறார்கள்.
போலீஸ் வாகனத்தின் கதவு மூடி இருந்ததால் அவனால் இடத்தை சரியாக கணிக்க
முடியவில்லை.
இறுதியாக போலீஸ் வேன் நின்றது.
கதவு திறந்தது.
மல்லிகா சுற்றும் முற்றும் பார்த்தாள் .
அது டிபுட்டி கமிஷனர் இரவீந்தரன் அலுவலகம்…
கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவரை பார்த்து நிறைய
நாட்கள் ஆகிவிட்டது. அவரும்
அந்த சாத்தானின் முத்திரையை பதித்திருப்பாரோ என்னவோ.
எப்படி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான் என முடிவுக்கு வந்தாள்
.
மூவரையும் டிசி இரவீந்தரன் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவர் மல்லிகாவை
தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. மல்லிகா பயந்தாள்..
அருகில் நிற்கும் போலீஸ்காரானிடம் என்ன வழக்கு என்றார்.
அரசாங்க எதிரிக்கு ஆதரவு கொடுத்தது.
அடுத்து
அந்த பெண் நடத்தை கெட்டவள்.என்றான்..
எல்லாமே பொய் என்று டிசி இரவீந்தரனுக்கு தெரியும். ஆனாலும் என்ன செய்வது..டாக்டர்
ரூடால்ப் என்ற சாத்தானிடம் உலகமே சிக்கி சீரழியும் போது இவர்கள் எம்மாத்திரம். எந்த
விதத்திலும் தான் உதவி செய்ய உதவி செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை..
ஆனால் கொஞ்ச நேரம் யோசிக்க வேண்டும். அதுவரை இவர்களிடம் பேசலாம் அதுவும்
அதிகாரமாய் இருக்க வேண்டும்.
தன்னை சுற்றி நிற்கும் போலீஸார் அத்தனை பேரும் அந்த சாத்தானின் முத்திரையை
நெற்றியில் பதித்தவர்கள். அவர்கள் சந்தேகபடாதபடி நடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
போதகரை பார்த்துக்
கேட்டார்.
என்ன பெரியவரே அடுத்து
உங்கள கடவுள் என்ன செய்ய போகிறார்.?
வயதான போதகர் தள்ளாடியபடி
நிற்க முடியாமல் தரையில் உட்காரப் போனார். அவரை உடகாரக் கூடாது என்று அடிக்க ஒரு போலீஸ்காரன்
ஒடிவந்தான்.
ம்.. நில்..டிசி இரவீந்தரன்
அவனை தடுத்தார்.
நீங்க எல்லாம் வெளியே
போய் நில்லுங்க,போலீஸ் வெளியேறியது.
போதகருக்கு கொஞ்சம்
தண்ணீர் கொடுத்தார்.
யாராவது இதை பார்த்தால்
தனக்கு பிரச்சனைதான்…ஆனாலும் பரவாயில்லை.
போதகர் பேச ஆரம்பித்தார்.இயேசு
கிறிஸ்து சீக்கிரம் வருவார்.
இரவீந்தரன் கோபப்படுவதை போல கத்தினார். அதைத்தான் இரண்டாயிரம் வருஷமா
இதத்தானே சொல்லிகிட்டே வாறீங்க. இப்போ என்ன ஆச்சு பார்த்தீங்களா.?
போதகர் நிதானமாக பதில் சொன்னார்.
இப்போ என்ன ஆச்சு. அவர் சொல்லிய அத்தனையும் நடந்துவிட்டது.அதற்கு எங்கள்
வேதமே சாட்சி.
ஒன்றே ஒன்றுதான் பாக்கி அவர்
வரவேண்டும் அவ்வளவே.
பூமியில் அப்படி என்னதான் நடந்திருக்கு. இது இரவீந்தரன்.
போதகர் நிதானமாக பதில்களை அடுக்கினார் .
(1)தேவ ஜனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்
(2)பூமியில் வாதை ஊற்றப்பட்டது
(3)பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் தன்னை டாக்டர் ரூடால்ப் என்று உலகுக்கு
வெளிப்படுத்தியது.
(4) மொத்த பூமியையும் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தது.
(5) தானே உலக இரட்சகர்
என்று சொல்லிக்கொண்டு உண்மையான கடவுளுக்கு விரோதமாக ஆராதனையை தடை செய்து.
(6) முதல் பகுதியில்
கர்த்தரால் கைவிடபட்ட விசுவாசிகளை எளிதான துயரத்தை கொடுத்தது.
(7)இப்போதோ உச்ச கட்டாக
விசுவாசிகனை கொன்று குவிக்கிறது.
இனி எல்லா முடிந்தது..
போதகர் சொல்லி முடிக்கும்முன்
அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அவசர செய்தி ஒன்று ஒளிபரப்பானது.
அதாவது இஸ்ரேல் நாட்டு
ஒலிவ மலையில் ஏலியன்ஸ் வந்து விட்டார்கள்.
ஆனால் பூமி மக்கள்
யாரும் கவலைப்பட வேண்டாம் .டாக்டர் ரூடால்ப் தலைமையில் அவர்களை அடித்து துரத்துவோம்
என்று செய்தி வெளியானது.
போதகரும் பார்த்தார்.
அந்த மலையை காண்பித்தார்கள்.
ஒலிவ மலை அக்கினியாய் ஜொலித்தது.
அது….அது..ஒலிவ மலை தானே என்று சத்தமாக போதகர்….. கேட்டார். இரவீந்தரன்
ஆம் என்றார். போதகர் ஆவேசமாக எழுந்து நின்றார்…
போதகர் கத்தினார், கதறினார்,
வந்து விட்டார்.. என் ராஜா வந்து விட்டார்… என் மீட்பர் வந்து விட்டார்…என் இரட்சகர்
வந்து விட்டார்… எனக்கு ஒரு
பைபிள் வேனுமே.
ஆஹா அற்புதமான காட்சி. எனக்கு ஒரு பைபிள்
வேனுமே என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.
இரவீந்தரன் மெதுவாக தன் மேசையில் இருந்து கானாமல் போன பொன்னுத்தாயின்
பைபிளை எடுத்துக் போதகர் கையில் கொடுத்தார்.
போதகர் அவசர அவசரமாக வேத புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.
.(சகரியா14:4 )
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்
போதகர் பைபிளின்
கடைசி வரியை வாசிக்கும்பொது ஒலிவ மலை இரண்டாக பிளந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்…
போதகர்… அல்லே…லூயா…
என்று கத்தினார்.
இரவீந்தரன் வாயடைத்துப்
போனார்
மல்லிகா முழுங்காலில்
நின்று அப்படியே குப்புற விழுந்தாள்.
ஜாண் பால் கண்கள்
கண்ணீரை கொட்டியது.ஓடிப்போய் மல்லிகாவை தூக்கினான்.
போதகருக்கு புதிய
பெலன் வந்து விட்டது .எழுந்து நின்று விட்டார்.
என் மீட்பர் வந்து
விட்டார். என் இரட்சகர் வந்து விட்டர். அவர் இராஜாவாக இருக்கிறார். இனி உங்கள் சட்ட
திட்டங்கள் எங்களை ஒன்றும் செய்யாது. போதகர் போட்ட சத்தத்தில்
அந்த கட்டடம் அதிர்ந்தது. போலீஸார் ஓடி உள்ளே வந்தனர்….அவர்களும் தொலைக்காட்சியை பார்த்து
அதிர்ந்தவாறு நின்றனர்…
இப்போது தொலைக்காட்சி
பெட்டியில் ஒலிவ மலை தீப்பிடித்து எரிந்து பின் அணைவது போல இருந்தது. அங்கே இன்னொரு
அற்புதம் நடந்து இருந்தது. அதாவது அந்த மலையில் மிக மிக உயரமான அதாவது ஆயிரம் அடி உயரம் உள்ள ஒருகட்டடம் தோன்றி இருந்தது.அது மின் விளக்குகளால்
பிரகாசித்து. கண்கள் கூசியது.இப்போது தெளிவாக தெரிந்தது. இதுவரை அப்படிபட்ட ஒரு கட்டடத்தை
யாரும் காணவில்ல. சுற்றிலும் மின் காந்த அலைகள்போல ஒன்று வளையம் வயைமாய் வந்து கொண்டே
இருந்து..புதிரான வாகன்ங்கள் காற்றில் நான்கு பக்கமும் பறந்து சென்றது..அதை தூதர்கள்
இயக்குவது நன்றாக தெரிந்து.
ஆனால் உள்ளே வெள்ளை
வெளோர் என்று ஆடைகள் அனிந்து நிறைப்பேர் அதில் பயணம் செய்தனர்…
தொலைக்காட்சி பெட்டியில்
அவசர செய்தியாக “பூமியை
ஆக்கிரமிக்க வந்திருக்கும்
வேற்று கிரக வாசிகளோடு யுத்தம் செய்ய சகல நாடுகளும் திரண்டது.என்று செய்தி வந்தது..
போதகர் கத்தினார்… போங்கடா….போங்கடா
.அர்மகெதோன்
இடத்தில்தான் உங்கள் கதை முடியப்போகிறது என்றார்..
இரவீந்தரன் நினைத்தார்.
தான் கடவுள் பக்கமா இல்லை இந்த சாத்தான் டாக்டர் ரூடால்ப் பக்கமா.?
பணியில் இருந்தால்
நிச்சயமாய் கடவுளுக்கு எதிராகத்தான் போரிட வேண்டியது இருக்கும்… தமக்கும் இது கடைசி
வாய்ப்பு நீதியின் பக்கத்தில் நிற்பதுதான் நல்லது..
அப்போது போலீஸ் மைக்
அலறியது…..
மக்களை திரட்ட டாக்டர்
ரூடால்ப் உத்தரவு..பூமியை காப்பாற்றுவோம்….வேற்று கிரக வாசிகளை விரட்டுவோம் என்றது.
இரவீந்தரன் பீட்டரை
அழைத்தார். இவர்களை என்ன செய்வது…
பீட்டர் சொன்னான்…யுத்தம்
துவங்க போகிறது .இவர்களை எங்கே போய் பாதுகாப்பது என்றான்..
இரவீந்தரன் சொன்னார்,
இவர்களை விட்டு விடுவோம், யுத்தம் காலத்தில் இவர்களை கவனிப்பது கடினம் என்றார்.
பீட்டர் முகம் சிவந்தான்,
கோபத்தில் அவன் நெற்றியில் பதித்திருந்த 666முத்திரை மின்னியது..
பேசாமல் இவர்களை சுட்டு
தள்ளிவிட வேண்டியதுதான் என்றான்.
இரவீந்தரன் பேசவில்லை..நிறைய
யோசித்தார்… DGPயிடம் பேசிவிட்டு
இவர்களை விடுதலை செய்ய வேண்டும்… பீட்டர் சாத்தான் ரூடால்ப் ஆள் என்பது நிரூபணமாகிவிட்டது.
இனி அவனிடம் பேசி பிரயோஜனமில்லை…சரி இவர்களை DGPயிடம் கொண்டு போ என்று சொல்லிவிட்டு
குனிந்து பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.
ஆனால் திடீரென்று
பீட்டர் ஆவசமானான்…அவன் முகம் விகாரமாகியது…..உர்ர்ர்ர்ர் என்று உருமினான்…அவன் உடல்
முறுக்கி திமிறியது. சடாரென்று தன் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான்….அந்த
குண்டுகள் மல்லிகாவையும், ஜாணையும் ,போதகரையும்,தாக்கியது, சுருண்டு விழுந்தார்கள்….பின்பு
இரவீந்தரனை நோக்கி திரும்பினான்….அதற்குள் டிசி இரவீந்தரன் தன் ரிவால்வாரால் பீட்டரை
குண்டுகளால் துளைத்து விட்டார்..
. இனி இங்கே இருப்பது
ஆபத்து என்று அறையை விட்டு வெளியே வந்தார்.
அவர் அம்பாஸிடர் காரில்
ஏறி உட்கார்ந்தர். டிரைவர் ஓடி வந்து காரை ஸ்டார்ட் பண்ணினான். DGP ஆபீஸ் போ என்றார்..
சரி யென்று காரை நகர்த்தினான்..வேகமாக கார் நகர்ந்தது. ஆனால் கார் வேறு திசையில்
திரும்பியது. இரவீந்தரன் டிரைவரை பார்த்து..ஏய்…எங்க போற…என்று கத்தினார். டிரைவர் திரும்பி பார்த்தான்.அவன் முகம்
கோணலாகி பீட்டர் முகம்போல விகாரமாய் இருந்தது. இரவீந்தரன் அவசரமாக தன் இடுப்பில்
இருந்த துப்பாக்கியை தேடினார். அது அங்கு இல்லை. அவசரத்தில் அலுவலகத்தில் விட்டு விட்டு
வந்ததை உணர்ந்தார்.
.
ஆஹா தவறு நடந்து விட்டது என்று
நினைக்கும் முன் துப்பாக்கி வெடித்தது… அமைதியாய்
இருந்த சாலையில் துப்பாக்கி குண்டின் சத்தம் எதிரொலித்தது.அதுவும் மூன்று முறை….அம்பாசிடர்
கார் யூ டென் அடித்து திரும்பியது.
( காலம் கடைசியாகி விட்டது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக