சனி, 16 ஆகஸ்ட், 2014

உச்சி முடி

                                    உச்சி முடி

தீப்பெட்டி …..என்ற ஒன்று இந்தியாவுக்குள் வருவதற்கு முந்திய காலத்தில்


வீரகேசவன் அயர்ந்த தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தான்.

கெட்ட கனவு அவன் தூக்கத்தை கலைத்து விட்டது.
உடலெல்லாம் வியர்த்திருந்தது.
அட…..ச்….சே………. .எழுந்து உட்காந்தான்.
பக்கத்தில் இருந்த கலயத்தை எடுத்து அதில் இருந்த தண்ணீரை குடித்தான்.

இப்போது தூக்கம் கண்களில் சுத்தமாக இல்லை.

நேரம் என்ன இருக்கும்…?

வெளியே முற்றத்திற்கு வந்து வானத்தை பார்த்தான்.
தூரத்தில் ஜாமக்கோழி கூவிய சத்தம் தெளிவாக கேட்டது.
வானத்தில் வெள்ளிகளை இடமறிந்து கணக்கிட்டான்.
இப்போது நடுச்சாமம்.

நிலவின்  பளிச்சென்ற வெளிச்சத்தில் இரவு.. பகல் போல் இருந்தது.

வீரக்கேசவன் தனியாள்.

வீரக்கேசவன்  சிறு வயதில் காணாமல் போய் விட்டான் என்று ஊரார் கை கழுவி விட்டுவிட்டனர்.

அவர்கள் மறந்து முப்பது  வருடம் கழித்து அதே ஊருக்கு மீண்டும் திரும்பி வந்தான்
 
முப்பது வருடத்தில் அவன் தாயும் தந்தையும் இறந்து போயிருந்தனர்.

அவர்கள் இருந்த வீடும் யாரும் கவனிப்பாரின்றி சிதிலம் அடைந்து சரிந்து கிடந்தது.

ஊருக்கு வந்த வீரகேசவனிடம் யாருமே மிக தீவிரமாய் விசாரிக்கவில்லை.

 அவன் வீட்டையும் அவனையும் ஒரு பொருட்டாக யாருமே நினைக்கவில்லை.

அவன் வீட்டு பக்கத்தில் இருக்கும் நாவிதன் ராசமணிமட்டும் அன்புடன் விசாரிப்பான்.ராசமணி மனைவி பெயர் பொன்னம்மா.இவளை பற்றி பின்பு பார்க்கலாம்.

வீட்டை புதுப்பித்து கட்டிவிட்டு பூட்டிச்சாவியை ராசமணியிடம் கொடுத்துவிட்டு மேலும் இரண்டுமாதம் காணாமல் போய்விட்டான் வீரகேசவன்.
ஒருநாள் வீர கேசவன்…… ஒரு மிகப்பெரிய மாட்டுவண்டியை வளர்த்தியான ஒட்டங்காளைகள் இழுத்துவர  ஊருக்குள் நுழைந்தான்.

அதுவரை அதைப் போல் ஒரு மாட்டுவண்டியை ஊரில் எவரும் பார்த்ததில்லலை .
பார வண்டி போல்நீளம்..இரண்டு மிகப்பெரிய சக்கரம்.மூங்கில் கழியை  வளைத்து அழகான கூண்டாக செய்து அதில் பொருத்தி இருந்தார்கள்…வண்டியை சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகள்…

யாரோ கேட்டார்கள்..இந்த வண்டிய எங்க ராசா செஞ்சே..?

மலையாளத்தில(கேரளா..) போய் செய்திட்டு வந்தேன்..

அவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான்.

யாரும் அவனிடமும் பேசுவதில்லை.

வீரக்கேசவன் இருபது வருடம் கேரளாவில் தான் வாழ்ந்தான் .

மகேசமுனி என்ற வைத்தியன் ஒருவனிடம் வேலை செய்தான்.
மகேசமுனி வீரகேசவனை தன் பிள்ளையாகவே பார்த்தான்.

சித்து வேலைகளை முதலில் வீரகேசவன் அவனிடம் கற்றுக் கொண்டான்.

எட்டு திக்கையும் ஒரு நாளிகைநேரம்…. அதாவது இருபத்தி நான்கு நிமிடம் கட்டி வைக்கமுடியும்…..அந்த நேரத்தில் அவன் எது வேண்டுமானாலும் செய்து விடலாம்.

மோகினி பிசாசையும் .முனிகளையும் எச்சிப்பேய்களையும் …
எப்படி கட்டுவது.அவைகளை ஏவுவது எப்படி.?அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான்.

ஆனால் மகேசமுனியின் மரணம் பயங்கரமாக இருந்தது.

மகேசமுனி ஒரு காட்டேரியை(.முனிகளில் வேகம் கூடியது..) கட்டுவதற்காக நடுச்சாம பூஜையில் இருந்தான். சேவலின் தலையை சீவி பலி கொடுத்து காட்டேரியை கலயத்தில் அடைக்கும்நேரத்தில் கலயம் கை தவறி கீழே விழ கடுமையான வேகத்தில் காட்டேரி மகேச முனியை  அடித்து வீழ்த்தியது.

காலையில்…. மகேசமுனி இறந்து கிடந்தான்..

.வீரகேசவன் போய் பார்த்தான்.

மகேச முனியின் வாய் வழியாக குடல்கள் தொங்கி கொண்டிருந்தது.
அப்படியே போட்டுவிட்டு ரயிலேறி ஒரிசாவுக்கு போய்விட்டான்.

ஒரிசாவில் மகேச முனியின் தமயன் சந்திரஜித்  இருந்தான்.. அவனும் அங்கேபேய் ஓட்டும்வேலை செய்து கொண்டிருந்தான்.

வீரகேசவன் சந்திரஜித் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.

 தன்னை ஏற்றுகொள்ளுமாறு வேண்டினான்.
என்ன வேண்டும் என்று கேட்டான்.
வர்ம கலைகள் சொல்லித் தர வேண்டும் என கெஞ்சினான்.

மீண்டும் பத்து வருடம் இடைவிடாத பயிற்சியில் வீரகேசவன் வர்ம அடி முறைகள் அனைத்தையும் கற்று ஊருக்கு கிளம்பும்போது சந்திரஜித் வழிமறித்தான்.

தன் அண்ணனை வீர கேசவன்தான் கொன்றது என யாரோ அவனுக்கு சொல்லி விட்டார்கள்.
வீரகேசவன் எவ்வளவு சொல்லியும் சூரி கத்தியோடு பாய்ந்து வந்த சந்திர ஜித்தை
வீரகேசவன் கால்மடக்கி தடுத்ததில் அது பலத்த அடியாக மாறி சந்திரஜித்தின் தலையை உடைத்து விட்டது.
தலையின் மேல்பாக ஓடு தனியாக கழண்டு விட்டது.அந்த இடத்திலே சந்திர ஜித்செத்து விட்டான்.

வீரகேசவன் ஊர் வந்து சேரும்போது  வியாபாரியாகத்தான் வந்தான்.

திருநெல்வேலி கூலக்கடை பஜாருக்கு சரக்கு கொண்டு வரவேண்டும்.

அந்த காலத்தில் குலசேகர பட்டணம் .மணப்பாடு .பெரிய தாழை இந்த ஊர்களுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

குலசேகர பட்டணத்திற்கு வள்ளத்தில் கடல்மார்க்கமாக வரும் பொருட்கள் அனைத்துமே கூலக்கடை பஜாருக்கு வந்து விடும்.

வாசனைத்திரவியம் துணிவகைகள்.தங்கம் வெள்ளி அனைத்துமே வரும்.

கூலக்கடை பஜாருக்கு பக்கத்தில் இன்று தங்க நகை கடைகள் இருப்பதின் காரணம் இதுதான்.
இது அந்நாளைய தொடர்பு.

வீரக்கேசவன் இன்று இரவே மணப்பாடு போக வேண்டும் என தீர்மானித்திருந்தான்..

நடுச்சாமம் வண்டியில் ஏறினால் நாளை உச்சி மதியம் மனப்பாடு கடற்கரை அடையலாம்.

வண்டியை தயார்செய்ய மாட்டை அவிழ்க்க கொட்டகைக்கு போகும்போது எதிரே இருந்த மொட்டைப் பனையில் ………சாக்குருவி………ஒன்று……………..…சா…வ்…..சா…வ் …………………..என கத்தியது……
.வீரக்கேசவன் அந்த பனையை பார்த்த வண்ணம் அதிர்வுடன் நின்றான்.


   
ஆந்தை ஒன்று வீரக்கேசவனுக்கு வலப்புறத்தல் இருந்து இடது பக்கமாக பாய்ந்து   சென்றது.
 வேப்பமரத்தில் தூங்கி கொண்டிருந்த பறவைகள் திடீரென்று கலைந்து கூச்சலிட்டு பின் அமைதியாயின …

வானத்தை பார்த்தான்..

இறைவனே……. இங்கு என்ன நடக்க போகிறது…?

என்னைக் கண்டவுடன் இவைகள் ஏன் நிதானம் இழக்கின்றன..?

என்னிடம் என்ன சொல்ல பிரயாசப்படுகின்றன..?

வீரக்கேசவன் முற்றத்தை துடைப்பம் கொண்டு துப்புரவு செய்தான்.

தண்ணீர் தெளித்தான்.

ஒரு பலகையை எடுத்து முற்றத்தின் நடுவில் போட்டு.. பலகையில் அமர்ந்து கண்களை மூடினான்.

அகில உலகத்தை ஆட்கொண்டுள்ள மாபெரும் சக்தியாம் இறைவனிடம் தன் மனதை ஒருமுக படுத்தி அங்கே நிறுத்தினான்.

என்ன சொல்ல போகிறாய்..பரம்பொருளே…..?

எனக்கு ஆபத்தா..?...

இல்லை என்னைச் சார்ந்தவர்களுக்கு ஆபத்தா..?

நான் மீண்டு வருவேனா..?

காட்ட வேண்டுமே…....காட்ட வேண்டுமே…....காட்ட வேண்டுமே..

வீரக்கேசவனின் கண்கள் இருளில் முழ்கியது.
நினைவு தப்பியது.

ஆழ்நிலை மயக்கத்தில் அமிழ்ந்தான்.

அந்தரத்தில் மிதக்கிறான்.

ஆள் உயர நாகம் ஒன்று…
.. வலம் இருந்து இடமாகவும் ….இடமிருந்து வலமாகவும்
நகர்ந்து நகர்ந்து வழி மறிக்கிறது…
வீரகேசவன் அசையாமல் நிற்கிறான்.
கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டிய நாகம் தலையை மெதுவாக கீழே போட்டு தரையோடு தரையாக படுக்கிறது.
வீரகேசவன் அதன் தலையில் வலதுகாலால் மிதித்து அதன் வாலை பிடித்து தூக்குகிறான்…..


வீரகேசவனுக்கு முழிப்பு வந்து விட்டது.

மீண்டும் வானத்தை பார்த்து கையெடுத்து வணங்கினான்.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் தயை செய்யும் அருளே… என்னை காத்துக்கொள் அப்பனே..
சரி …..

வருவது நாகம் என்று சொல்லப்பட்டது.

நாகம் ..சைத்தானின் அடையாளம்..

மனிதனை கண்டால் பயந்து ஓடும்.

மனிதன் அதை கண்டால் நடுங்குவான்.

ஆனால் விஷயம் தெரிந்தவன் ஓடும் பாம்பின் வாலை பிடிப்பான்.

வீரகேசவனுக்கு புரிந்து விட்டது .

ஏதோ கெட்டஆவி ஒன்று தன்னை தாக்க வருகிறது.

பேய்களை விரட்டுவதற்கு தைரியம் இருந்தால் போதுமானது.

அவைகள் விலகி விடும்.

பயந்தவனின் உடலில் குடியேறி அவனை மரணம் வரைக்கும் வழிநடத்தும்.

வீரக்கேசவன் பயந்தவன் அல்ல.

 வருவது எப்பேர்பட்ட முனியாய் இருந்தாலும் சரி
இன்று இரண்டில் ஒன்று பார்ப்பது என முடிவுடன் கிளம்பினான்.

.
 எடுக்க வேண்டிய  எல்லா பொருட்களையும் சரியாக எடுத்து வைத்தான்.

வலது கை பக்கமாக வேல் கம்பை வண்டியில் சொருகினான்.
இடது கைபக்கம் சுருள் வாளை வாக்காக கட்டி வைத்தான்.

சுருள்வாள் என்பது.பத்து நீளமான தகடுகள் .
சுமார் எட்டு அடிநீளம் உள்ளவை .ஒரே கைப்பிடியில் தொங்கி கொண்டிருக்கும்.கயிறு போல ஆடும்.சரியான முறையில் சூழற்றி வீசினால் தீப்பொறி பறக்கும்.

சுருள்வாளால் ஒருமுறை எதிரியை தாக்கினாலே போதும்.

அவன் உடம்பில் பல பாகங்கள் காணாமல் போகும்.

வீரகேசவன் சுருள்வாளை வீச ஆரம்பித்தால் இரண்டு நாளிகை.. அதாவது முக்கால் மணிநேரம் வேகம் குறையாமல் வீசுவான்..

வண்டியில் தான் அமரும் இருக்கையின் கிழே விச்சருவாள் ஒன்றையும்..
இடுப்பிலே சூரிக்கத்தி ஒன்றையும் .எடுத்து வைத்து கொண்டான்.

காஞ்சர மரத்தின் குச்சிகள் கொஞ்சம் இடுப்பில் முடிந்து கொண்டான்.

தண்ணீர்  குடத்தை வண்டியில் அடியில் கட்டி தொங்கவிட்டான்.

கேப்பை மாவுடன் அகத்தி கீரையை  போட்டு வேகவைத்த கூழ் பானையை வண்டியின் உள்ளே ஓரமாக வைத்து அதை வண்டியுடன் கட்டிவிட்டான்.

மாட்டுக்கு தேவையான அளவு ..வைக்கோலை வண்டியின் மேல்பாகத்தில் போட்டு  வைத்தான்.
மாட்டிற்கு தண்ணீர் காட்டி வண்டியில் பூட்டினான்.

எல்லாம் சரிதானே ……என்று மனதுக்குள்  கணக்கிட்டு கொண்டு மெதுவாக வண்டியை கிளப்பினான்.

நான்குநேரி வழியாக திசையன்விளை போய் அங்கேயிருந்து மணப்பாடு போக வேண்டும்.
இதில்… ரெட்டியார் பட்டியை தாண்டிவிட்டால் கள்ளர் மடம் என்ற ஒரு இடம் உண்டு.(அது இப்போதும் இடிந்த நிலையில் இருக்கிறது..) அதை தாண்டுவது மிககடினம்.

திருடர்கள் கூட்டமாக வழிமறித்தால் இருக்கும் பொருளையும் அத்னையையும் கொடுத்துவிட்டு தலை தப்பினால் போதும் என்று வரவேண்டும்.அல்லது எதிர்த்து போராட வேண்டும்.

இதற்காகவே மங்கை நகரில் இருந்து.(. திருநெல்வேலியின் பழைய பெயர்..) போகும் வண்டிகள் மொத்தமாக புறப்படும்

ஒன்றன்பின் ஒன்றாக இருபது முப்பது வண்டிகள் சென்றால் பாதுகாப்பாய் இருக்கும்.
ஒருவண்டிக்கு இரண்டு நபர் என்றாலும் மொத்தம்அறுபது பேர் செல்வது பாதுகாப்பான விஷயம்.

வீரக்கேசவனுக்கு இப்படி பயணம் செய்வது நன்றாக தெரியும் என்றாலும் .இன்று தனியாக செல்லவே விரும்பினான்.

இதற்கு காரணம் உண்டு.
(1)  நிலவு பட்டப் பகல் போல் ஒளி வீசுகிறது.
(2)  தான் படித்த வர்ம கலைகளை சோதிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்த வேண்டும்.
(3)  சிலம்பு கலையை கற்றதின் பயனை அடைய வேண்டும்
(4)  இளமை மறைவதற்குள் இதை செயல் படுத்தி பார்க்கா விட்டால் பின் முதுமையில் இவற்றால் எந்த பயனும் இல்லை

பளீரென்ற நிலவு வெளிச்சத்தில் வீரகேசவன் வண்டி கம்பீரமாக சென்று கொண்டிருந்தது.

மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை.. ஜல்…ஜல்…..ஜல்…என்று வெகு தூரத்திற்கு கேட்டது.

மாடுகளை விரட்டாமல் அதன் போக்கிலே ஓடவிட்டான்…

எப்படியும் மணப்பாடு போவதற்கு நாளை மதியம் ஆகிவிடும்…..

கள்ளர் மடத்திற்கும் ரெட்டியார் பட்டிக்கும் இடையில் வண்டி போய் கொண்டிருந்தது

வீரகேசவன் தன்னை சுற்றிலும் பார்வையை செலுத்திகொண்டே வந்தான்..எதாவது ஆள் நடமாட்டம் இருக்கிறதா …என்று கவனித்தான்.

ஒன்றும் இல்லை

காற்று மேற்கில் இருந்து ஊளையிட்டு கொண்டு வேகமாக வீசியது.

திடிரென்று மாடுகள் மிரண்டன.

வண்டி கொஞ்சம் வேகமெடுத்து பாய்ந்தது.

வீரகேசவன் கயிற்றை இழுத்து பிடித்து மாடுகளை அடக்க முயற்சிததான் முடியவில்லை..

பிச்சிப் பூ வாசம் திடிரென்று அவனை தாக்கியது.

காற்றின் ஊளைச் சத்தமும்.மாடுகளின் மிரட்சியும் அவனுக்கு பயத்தை கொடுத்தன.

சுண்ணாம்பு இருக்கா….
சுண்ணாம்பு இருக்கா…

முதலில் இந்த சத்தத்தை  வீரகேசவன் கவனிக்க வில்லை

பின்பு தெளிவாக பக்கத்தில் கேட்டது

சுண்ணாம்பு இருக்கா….?
சுண்ணாமபு இருக்கா…?

வண்டிக்கு இடது புறம் இருந்து சத்தம் வந்தது.

இந்த ஜாமத்தில் யார் வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்பது…?

திரும்பி பார்த்தான்.

வெள்ளை ஆடையில் சிவந்த நிறமுள்ள ஓர் இளம்பெண் வண்டி கூடவே வந்து கொண்டிருந்தாள்..

சுண்ணாம்பு இருக்கா..?
சுண்ணாம்பு இருக்கா…?

வீரகேசவன் தன் இடுப்பில் இருந்த சூரிக்கத்தியை உருவினான்


                                      















வெள்ளை ஆடையுடன் இரவு நேரத்தில் நடுக்காட்டில் வரும் இந்த பெண்ணை பார்த்ததும் வீரக்கேசவனுக்கு புரிந்து விட்டது.

இது பெண்ணல்ல.கெட்ட ஆவிகளின் வேலைதான்.
 எதிரி யார் என்று தெரிந்து விட்டது…
இனி வெற்றி கொள்வது எளிதான விஷயம்.

பார்க்கலாம் …யார் வெற்றிபெற போவது என்று..

சூரிக்கத்தியில் சுண்ணாம்பை தடவினான்.

வண்டியை நிறுத்தினான்.

இடபக்கமாக திரும்பி சுண்ணாம்பை அவளிடம் நீட்டினான்.

நீட்டிய படி அவள் கால்களை கவனித்தான்.

இடுப்பில் இருந்து  கீழ் நோக்கி பார்வையை செலுத்தியவன் திடுக்கிட்டான்.
இடுப்புக்கு கீழே ஏதோ புகை போலிருந்தது ..உடலின் அமைப்பு எதுவும் இல்லை.

அவள் தன் கையை வீரக்கேசவன் பக்கமாக நீட்டினாள்…

 வீரக்கேசவன் சூரிக்கத்தியால் அவளின் உள்ளங்கையில் நடுப்பக்கத்தில் நச்சென்று குத்தினான்.
இடுப்பில் இருந்த காஞ்சரை மரத்தின் குச்சியை அவள் நடு உச்சி மண்டையில் வலது கையால் அழுத்தி அடித்தான். மின்னல் வேத்தில் இது நடந்து முடிந்தது…..

உடனே அந்த மோகினி பேய் தன் சுய ரூபத்தை காட்ட ஆம்பித்தது.

பயங்கர சத்தத்துடன் .பல..பல உருவம் எடுத்து..கடைசியாக மலைப்பாம்பாய் உருவம் எடுத்து தரையில் உருண்டு புரண்டது..அமைதியாக அதைகவனித்து கொண்டிருந்தான் வீரக்கேசவன்..

மோகினிப்பேய் ஒரு வழியாய் அலறி முடித்து இறுதியாக தான் எடுத்த பெண் உருவத்தை அடைந்தது.

வீரக்கேசவன் அதன் பக்கத்தில் போனான்

எழும்பு

எழுந்து நின்றது.

கிழக்கே பார்த்து நில்

கிழக்கு நோக்கி நின்றது.

வீரக்கேசவன் அதன் தலையில் கைவைத்து கேட்டான்.

நீ யார்..?

மஞ்சரி….கேரளம்

எதற்கு என்னை வழிமறித்தாய்.?

உன்னை கொல்வதற்கு

ஏன் என்னை கொல்ல வேண்டும்…?

பழிவாங்க வேண்டும்..

நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்…?

நீ ..அல்ல..உன் குருநாதன். மகேச முனி..அவன் என் கழுத்தை அறுத்து இரத்தததை பிடித்தான்.
என் அக்காவை ….நிறை மாத சூலியை ...வாழை இலையில் கிடத்தி வயிற்றை கிழித்து
உயிருடன் சிசுவை வெளியே எடுத்தான்.

வீரக்கேசவன் இடைமறித்தான்… எனக்கு என்னவிதத்தில்  இதில் பங்கு வருகிறது…இது நடக்கும் போது நான் அங்கு இல்லையே…..

மோகினி கோபத்துடன் கேட்டது….நீ இருந்திருந்தால் தடுத்திருப்பாயோ..?

நிச்சயமாக தடுத்திருக்க முடியாது..

நான் அவனுக்கு வேலைக்காரன்.
நான் என்ன செய்திருக்க முடியும்.

நீயும் பங்காளிதான்.
அவன் கற்றுத் தந்த வித்தைகள் அத்தனையும் உன் உடலில் இருக்கிறது. மகேச முனியின் மறு அவதாரம்தான் நீ……உன்னை கொல்வதில் தப்பே இல்லை..

நிறுத்து…..

எப்படியாயினும் உன்னை ஜெயித்து விட்டேன். .இந்த நொடியில் இருந்து ..நீ என் அடிமை…
இன்னும் ஐந்து வருடம் நீ அமைதியாய் என்னுடன் இருக்கவேண்டும்.
என் பொருளை பாதுகாக்க வேண்டும்.
என்னை கவனிக்க வேண்டும்.
எனக்கோ… என் பொருளுக்கோ ..என்னை சார்ந்தவர்களுக்கோ எதாவது கேடு நினைப்பாயானால்……..

உன்னை கலயத்தில் அடைத்து கடலில் அமிழ்த்தி விடுவேன்.

நீ காலா காலத்துக்கும் அங்கேயேதான் இருக்கவேண்டும்.

இதை வீரக்கேசவன் கூறும் போது மோகினி நடுங்கியது.

ஆவிகளுக்கு கடலில் கட்டபட்டு கிடப்பதுதான் மிக கொடுரமான விஷயம்.
யார் கட்டி அமிழ்த்தினானோ.அவன்தான் அதை அவிழ்க்கவேண்டும்.

கடலில் அமிழ்த்திய மானிடன் இறந்து போய் விட்டால் இந்த ஆவிகளும் கடலுக்கு அடியிலே கை கால் முடங்கி இருக்கவேண்டும்.
இது முடிவில்லாத தண்டனையாகும்.

வீரக்கேசவன் தொடர்ந்தான்..

நீ எனக்கு விசுவாசமாக நடந்து கொண்டால் ஐந்து வருடம் கழித்து உனக்கு விடுதலை அளிப்பேன் .உன் இஸ்டபடி வான வெளியில் உள்ள உன் இனத்திற்கு போய் சேரலாம்.

அதோடு இன்னொரு காரியமும் உண்டு.

என் காலம் முடிந்து நான் இந்த உடலை விட்டு மேலுலகம் போகும்போது நீயோ உன் இனமோ என்னை வழிமறிக்க கூடாது.

அதற்கு நீ சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்….

மோகினி சத்தியம் என்றது.

மோகினியை பார்த்தான் வீரக்கேசவன்

மோகினி அழகியல்ல …பேரழியாக நின்று கொண்டிருந்தாள்..

வண்டியில் ஏறு என்றான். வண்டியில் ஏற்றிவிடுமாறு கேட்டது மோகினி…

வீரக்கேசவன்..அதட்டினான் ..நடிக்காதே ஏறு என்றான்.

வன்டியில் ஏறி அமர்ந்தது.வண்டி தன் வழியே மீண்டும் புறப்பட்’டது.

மோகினியின் உச்சிமண்டையில்  இருக்கும் காஞ்சரை முளையை யாரும் பிடுங்காதவரை அது சாதாரன பெண்தான் .

ஆனால்……..முளை  பிடுங்க பட்டால்..

அது தன் கோபத்தை  காட்ட ஆரம்பிக்கும்.அந்த கோபம் மகா பயங்கரமாயிருக்கும்

.வீரக்கேசவன் மதியம் ஒரு மணிக்கு மணப்பாடு சென்றடைந்தான்..எப்போதும் போல் கடற்கரை சுறு சுறுப்பாக இருந்தது.

சலீம்பாயை தேடிச்சென்றான்.
கடற்கரையில் இருக்கும் நல்ல தண்ணீர்  கிணற்று பக்கத்தில் சலீம்பாயை கண்டு பிடித்தான்..
சலிம்பாய் சோர்வுடன் இருந்தார்.
வீரக்கேசவனை ஆவலுடன் தழுவிக்கொண்டார்.
நல்ல நேரத்தில் தான் நீ வந்தாய்.

சரக்கு வந்திருக்கிறது.அவ்வளவும் மஞ்சள் நிலவு.(தங்க கட்டிகள்).உடனே இதை கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் எப்படி ..?
திருட்டு  கூட்டத்திற்கும் இது தெரிந்து விட்டது. வண்டியை மடக்கி வழிப்பறி பண்ண அவர்களும் தயாராய் இருக்கிறார்கள்.
சரக்கை விற்றால்தான் பணத்தை திருப்பி அடைக்க முடியும்.

மங்கை நகர் வரை இதை எப்படியாவது கொண்டு செல்ல வேண்டும்.

இங்கு யாரை நம்பி ஒப்படைப்பது என்று தவித்து கொண்டிருந்தேன் நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்

பேசிகொண்டிருக்கும் போதே வண்டியைக்கு உள்ளே இருக்கும் மோகினியை சலிம்பாய் கவனித்து விட்டார்.

வீரக்கேசவன் அது யாரு..?

சலிம்பாய் மோகினியை பார்த்து கை நீட்டினார்.

நீட்டிய கையை  சலீம்பாயால் மடக்கமுடிய வில்லை.

மோகினி சிரித்தாள்.(..





வீரக்கேசவனுக்கு நிலைமை புரிந்தது.
மோகினியை கடுப்புடன் பார்த்தான்.
மோகினி சிரித்தாள்.
பின்பு சலீம்பாயை பார்த்தாள் .
கை சரியானது.
சலீம்பாய்க்கு ஒன்றும் புரிய வில்லை.அவர் மோகினியின் அழகில் சொக்கிப்போய் நின்று கொண்டிருந்தார்.

சலீம்பாய் மோகினியை பற்றி கேட்டால் என்ன சொல்வது..என யோசித்து கொண்டிருந்தான் வீரக்கேசவன்.

வீரக்கேசவன் நினைத்தபடியே சலீம்பாய் அவளை பற்றி கேட்டார்.
அது யார் கேசவா..? உன்  மனைவியா..?இவளை எதற்காக வியாபாரம் செய்யும் இடத்திற்கு கூட்டிகொண்டு வருகிறாய்….இது அவளுக்கும் உனக்கும் நல்லதல்லவே..

பாய் அத விடுங்க  .என்ன கொண்டு போகணும் .சீக்கிரம் வண்டியில் ஏற்றினா ஊர் போய் சேருவேன்….

சலீம்பாய் அவனை அழைத்து கொண்டு போய் இரண்டு பெட்டிகளை காட்டினார்.
இவைகளில் தங்கம் இருக்கிறது.பக்கத்தில் இருக்கும் மூட்டைகளில் வாசனை திரவியங்கள் இருக்கிறது.இவ்வளவுதான் ..

இந்த சரக்கை கூலக்கடை மாயாண்டி செட்டியாரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டால் போதும்.
.சீக்கிரம் கிளம்பு…
வீரக்கேசவன் பெட்டியை தூக்கி பார்த்தான் எழுபது பவுண்டு இருக்கும் ..இவ்வளவும் தங்கமா..?

என்ன விலை இருக்கும்…மனதுக்குள் கணக்கு ஓடியது..

கள்ளர்களுக்கு விபரம் தெரிந்தால் நிச்சயம் வழிமறிப்பார்கள்.

சலீம்பாய் அருகில் வந்து.
உன்வண்டியில் இருக்கும் பெண்ணும் இந்த தங்கமும் விலை மதிக்க முடியாதவை.பத்திரமாக ஊருக்கு கொண்டு போய் சேர்த்துவிடு..

வீரக்கேசவன் மனதிற்குள் சிரித்து கொண்டான் .

சலீம்பாய்க்கு  மோகினியை பற்றிய மயக்கம் போகவில்லை.அவள் யாரென்று தெரிந்தால் அலறிவிடுவார்………ம்……இப்போது அமைதியாக இருப்பது நல்லது.

வீரக்கேசவன் கூறினான்…
பாய் இந்த சரக்குகளை வண்டியில் கொண்டு போய் வைக்க சொல்லுங்கள்.
நான் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியது இருக்கிறது ..அதுவரை உங்கள் ஆட்களை வண்டிக்கு காவல் இருக்கச் சொல்லுங்கள்..

கேசவா…வண்டியில் இடம் இருக்கிறது என்று .வேறு யார் பொருளையும் வண்டியில் ஏற்றிவிடதே…
உனக்கு வேண்டிய பணம் நான் தருகிறேன்.
.நீ விரைவாக செல்ல வேண்டும்.அது தான் முக்கியம்
 சரி என்ன வாங்கபோகிறாய்..?

ம்….சேவல்….

சேவலா………..உன் ஊரிலே கிடைக்காததா..?

அப்படி அல்ல பாய்..
நான் தேடுவது சதாரண சேவல்  அல்ல..சண்டைசேவல்..

சரி சரி சீக்கிரம் வந்து விடு.

வீரக்கேசவனுக்கு தெரியும் மோகினியோடு பயணம் செய்யும்போது சேவல் கைவசம் இருப்பது நல்லது.

மோகினிக்கு பயங்கர தாகம் வந்தால் இரத்தம் குடித்தால்தான் அது அடங்கும்.

வழியில் வேறு எதாவது கெட்ட ஆவிகள் வழி மறித்தால் சேவலை மந்திரித்து அதன் தலையை அறுத்து அவைகளுக்கு கொடுத்து விட்டு தப்பி விடலாம்.

எலுமிச்சை பழமும் .தேங்காயும் அவைகளுக்கு பிடித்தமானவை .இவைகளை காட்டி அவைகளை போக்கு காட்டலாம்.

வழியில் கொம்மட்டிக்காய் இருந்தால் அவைகளை பறித்து மோகினிக்கு தரவேண்டும்.
கொம்மட்டிக்காய் பேய்களுக்கு பிரியமான உணவு.

சந்தையில் அலைந்து திரிந்து  ஒரு கொழுத்த சேவல் வாங்கினான்

தேங்காய் எலுமிச்சைபழம் இவைகளை சிறு பொட்டலமாக கட்டி வைத்துகொண்டான்.

வேறு என்ன வேண்டும்.யோசித்தான்….. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

வண்டியை நேக்கி வந்தான் .

மோகினி வண்டிக்குள் இல்லை.
பக். கென்றது

போய் விட்டதா…?

சுற்றி சுற்றி பார்த்தான் சற்று தூரத்தில் மோகினி இரண்டு வாலிபர்களோடு பேசிக்கொண்டிருந்தாள் .வாலிபர்கள் இவளிடம் ஏதோ முக்கியமான பிரச்சனையை பேசுபவர்கள் போல் பேசிக்கொண்டிருந்தார்கள் .
விரக்கேசவன் அருகில் போனான்.
அவர்கள் இருவரும் அவளிடம் கேரள நாட்டை பற்றி விபரம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இவள் சிரித்து சிரித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க ….அவர்களோ மயக்க நிலையில் அதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வீரக்கேசவனை அந்த வலிபர்கள் பொறாமையுடன் பார்த்தார்கள்.

மெதுவாக மேகினியின் கரத்தை பற்றி வண்டிக்கு அழைத்தான்.
மோகினி திரும்பி நடந்தாள்..

வீரக்கேசவன் கேட்டான் மோகினியிடம்..

என்ன இது.

எது

அவர்களிடம் என்ன பேச்சு என்றேன்.

ஓ………அவள் சிரித்தாள்

உனக்கு பொறாமையா..?

அடக்கடவுளே….பெறாமையா?….எனக்கா…? ..உன்னை யாரென்று தெரியாமல்.அவர்கள் வழிகிறார்கள்…இதிலே எனக்கென்ன பொறாமை…

மோகினியின் கண்கள் சிவந்திருந்தது..
நீ இரண்டு நாளிகை கழித்து வந்திருந்தால் இருவரையும் காலி செய்து இரத்தததை குடித்திருப்பேன்.

நான் உனக்கு மட்டுமே கட்டுப்பட்டவள் .மற்ற மானிடனுக்கு அல்ல.

வீரக்கேசவன் கூறினான்…...ஐயோ பாவம்..அவர்கள் உனக்கு என்ன துரோகம் செய்தர்கள்.
அவர்களை ஏன் கொல்ல வேண்டும்..

எனக்கு பசிக்கிறது… எனக்கு பசிக்கிறது…… எனக்கு பசிக்கிறது..மோகினி அழ ஆரமபித்தாள்…..

என் இரத்தத்தையெல்லாம் தரையில் சிந்திவிட்டானே உன் ஆசான்..

நான் தாகமாகவும் பசியாகவும் இருக்கிறேன்… எனக்கு பசிக்கிறது… எனக்கு பசிக்கிறது..அழ ஆரம்பித்தாள்.
ஒரு முதியவர் திரும்பிப் பார்த்தார்

பசியெடுக்குன்னு அந்த பிள்ளை அழுது ..அதப் பார்த்துகிட்டு சும்மா இருக்கியே …அந்த கடையில போய் எதாவது வாங்கி கொடப்பா..அந்த பெரியவர் அதட்டினார்

வீரக்கேசவன் அவரை பார்த்து சரியென தலையாட்டினான்.

பின்மோகினியின் காதில் உனக்காக ஒருசேவல் வாங்கிவைத்திருக்கிறேன்.முதலில் அதை சாப்பிடு என்றான்.

மோகினியின் கண்கள் பிரகாசித்தது.
எங்க இருக்கு…எங்க இருக்கு..

வண்டியில இருக்கு தாரேன் …வா என்றான் .
வேகமாக வண்டியை அடைந்ததும வண்டியின் முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் துணி போட்டு மறைத்தான்.

மோகினி தன் சுய உருவம் அடைந்தாள்.
விகாரமான முகமும் ..காய்ந்து போன உடலும் கொண்ட மோகினியை பார்ப்பதற்கு விரக்கேசவனுக்கு பாவமாயிருந்தது.

மோகினி அவசர அவசரமாக சேவலின் தலையை பிய்த்து எறிந்தாள்..அதன் இரத்தத்தை ஒரு சொட்டு சிதராமல் உறிஞ்சி குடித்தாள்…
..பயங்கரமான முகத்துடன் வீரக்கேசவனைப் பார்த்து சிரித்தாள்.

.மீண்டும் அழகியானாள்…

சக்கையாய் போன சேவலை வீரக்கேசவன் தூர எறிந்தான்.

மாடுகளை பூட்ட தயாரானான்.

மேகினியிடம் கூறினான் ...
பெட்டியில் தங்கம் இருக்கிறது .பத்திரமாக ஊருக்கு கொண்டுபோய் …..சேர்க்க வேண்டியவர்களிடம் சேர்த்தால் நிறைய பணம் கிடைக்கும்….அதில் உனக்கு ஒரு ஆடுவாங்கி தருகிறேன்…..

மோகினி பெட்டியை முகர்ந்து பார்த்தாள்..பின்பு கூறினாள்

அந்த பாய் உன்னை ஏமாற்றிவிட்டான்

எப்படி சொல்கிறாய்..?
பெட்டிக்குள் தங்கம் மட்டுமல்ல வேறு இரண்டு பொருள் இருக்கிறது..
வீரக்கேசவன் திகைத்தான்…

பெட்டிக்குள் என்ன இருக்கிறது..?

கொஞ்சம் தங்கம்

நிறைய அபினும் கஞ்சாவும்

வேறு…? வீரக்கேசவன் பயந்துவிட்டான்

பாடம் செய்ய பட்ட மனித தலை ஒன்று….

வீரக்கேசவனுக்கு தலை சுற்றியது. மோகினியை பார்த்து கேட்டான்.
நீ என்னை ஏமாற்றவில்லையே.

என் தலை மீது சத்தியம்..

வீரக்கேசவனுக்குபாய் மீது சரியான கோபம் வந்தது
நேராக சலீம்பாயிடம் போனான்.

பாய் கேள்விக்குறியுடன் அவனை பார்த்தார்
நீ இன்னும் போகவில்லையா…?

வீரக்கேசவன் சலீம்பாயின் மிக அருகில் சென்று…
காதோடு…………………………பாய் பெட்டிக்குள் என்னவெல்லாம் இருக்கு…..?

சலீம்பாய்ககு குப்பென்று வியர்த்தது.
 ம்  ..அதுல தங்கம் இருக்கு..

பொய் சொல்லாதீங்க பாய்..பெட்டிக்குஉள்ள  என்ன இருக்கு..?

நான் தங்கம் மட்டும்தான் இருக்கு என்கிறேன்…..நீ என்னதான் சொல்றே..

பெட்டிக்குள் மனித தலை இருக்கு..வீரக்கேசவன் குளறினான்

சலீம்பாய்  கோபமானார்.
என்னடா சொல்ற…மெல்லினம் வல்லினமானது…
ஏதோ பார்த்தவன் மாதிரி பேசுறே.எங்கிட்ட இதுவரைக்கும் இப்படிபேசினது யாருமே இல்ல .இப்ப அத நீ நிருபிக்கவில்லயெனின் .உன்தலை இங்கேயே உருளும்.

சலீம்பாய் வேகமாக பக்கத்தில் இருந்த வாளை உருவினார்…

அதே சமயம் மோகினி அங்கே வரவும் ..வீக்கேசவனும் சலீம்பாயும் அதிர்ச்சியடைந்தனர்.

அவள் கையில் ஒரு பெரிய மலையாள வெத்திலை விரிக்கபட்டு அதன் நடுவில்
மை தடவபட்டு இருந்தது.
வெத்திலையை சலீம்பாய் பக்கமா நீட்டினாள்..
சலீம்பாய் அதை உற்றுப்பார்த்தார்.

வெத்திலையின்  நடுவில்…. அடைக்கபட்ட பெட்டியில் உள்ள தங்கமும்.
அபின் பட்டையும்..
கஞ்சா இலைகளும்..
வெட்டப்பட்ட மனித தலையும் தெரிந்தது……(தொடரும்..)

சலீம்பாய் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
முதலில் அவருக்கு மோகினி மீது சந்தேகம் வந்தது.

இவள் பெண்ணா இல்லை பேயா..?இதை எப்படி தெரிந்து கொள்வது.
இப்போது அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் அல்ல..
சலீம்பாய் வீரக்கேசவனைப் பரிதாபமாக பார்த்தார்…
வீரக்கேசவா உண்மையாகவே எனக்கு.. உள்ளுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியாது.

இப்போ நீ மைபோட்டு காட்டுற .

. நம்பத்தான் செய்யணும்..
ஆனாலும் இத வச்சி உறுதி செய்ய முடியாது..ஒரு கொல்லன வச்சி திறந்து பார்த்திடலாம் ..என்றார்...சலீம்பாய்.

வீரக்கேசவன் அமைதியாய் இருந்தான் .

மோகினி வீரக்கேசவனை ஒரு ஒரமாக இழுத்து சென்று அவனிடம் சொன்னாள்.

இந்த பெட்டி திறக்கபட்டால் இந்த சலீம்பாய் சாவது உறுதி….

அது மந்திரத்தால் வெட்ட பட்ட தலை..

யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் இரத்தம் கக்கி சாவார்கள்.

இந்த தலை எங்கேயிருந்தாலும் தொடர்ந்து சாவு நடந்து கொண்டே இருக்கும்.
ஆகவே பெட்டி திறக்கபடாமல் இருப்பது நல்லது..

வீரக்கேசவனுக்கு சலீம்பாயை பார்க்க பாவமாய் இருந்தது.
எப்படி இருந்தாலும் இத்தனை வருடம் பழகிய மனிதன்…………...ஒருவேளை இது அவருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்………..

மெதுவாக சலீம்பாய் அருகில் போனான் வீரக்கேசவன்…
……..பாய் விடுங்க ..எனக்கென்னமோ நீங்க பெட்டியை திறக்கிறது சரியில்லண்ணு தோணுது…

……விட்டுடுங்க ….நான் நீங்க சொன்ன மாதிரி இந்த பெட்டியை கூலக்கடை பஜாருக்கு கொண்டு போய் கொடுத்துருதேன்.
நீங்க… இது உங்க பெட்டிதாண்ணு ஓலை நறுக்கில் எழுதி தரணும்….வழியில யாராவது வழிமறித்து கேட்டால்…அப்போது நான் காட்டவேண்டியது இருக்கும்…இதுக்கு சம்மதம்ண்ணா கொண்டு போறேன்…..

சலீம்பாய் யோசித்தார்.
வீரக்கேசவன் சொல்வதும் சரியாகத்தான் பட்டது .
அப்படியே செய்து விடலாம் என முடிவு செய்தார்…
ஆனாலும் அவருக்கு வீரக்கேசவன் போகும் முன் அந்த பெண்ணை பற்றிய விபரம் அவனிடம் கேட்டு விட வேண்டும் என துடித்தார்.

சரி…கேசவா நீ சொல்றபடி செய்திடலாம்… என கூறி…. ஒரு ஒலை நறுக்கை  எடுத்து  எழுத்தாணியால் …….
 இந்த பெட்டியும் உள்ளே இருக்கும் பொருளும் தன்னுடையது என்றும் இதில் யாதொரு வில்லங்கம் வந்தாலும் தானே அதற்கு பொறுப்பு என்றும் எழுதி வீரக்கேசவன் கையில் கொடுத்தார்.

வீரக்கேசவனை சலீம்பாய் பக்கத்தில்   தனியே இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று……வீரக்கேசவா  தப்பா நினைக்காதே…….. இந்த பெண் உனக்கு இப்போது மனைவி இல்லலைத்தானே..

வீரக்கேசவன் ஆம்….என்று தலையசைத்தான்..
நீ கேட்கும் விலை தருகிறேன் அவளை என்னிடம் விட்டுவிடேன்………

சலீம்பாய்…. அவள் விற்பனை பொருள் அல்ல…
இதை பற்றி இனியொருமுறை பேச வேண்டாம் சலீம்பாய்..
……………………சலீம்பாய் மௌனமானார்.

அதே சமயம்…… மோகினி ஒரு மரக்கட்டையின்மேல் உட்கார்ந்து கொண்டு வேடிக்ககை பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் எதிரே.. சிறிய கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த மதிவதனன் மோகினியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவனுக்கும் கொள்ளையன் சங்கரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு…சங்கரனுக்கு இரகசிய தகவல் அனுப்பும் சிலரில் மதிவதனனும் ஒருவன் .

சரியான தகவல் கொடுத்தால் அதற்கு தகுந்த  பணம் கிடைக்கும்.
மோகினியை பார்த்தவுடன் .அவளைபற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.மோகினிக்கு திருமணம் ஆகவில்லை என்பதையும் தெரிந்து கொண்டான்.அது மட்டுமல்ல வீரக்கேசவனுடன் சரக்கு கொண்டு போகிறாள் என்றும்..அந்த சரக்கு விலை மதிக்க முடியாத சரக்கு என்றும் தெரிந்து கொண்டான்.
கொள்ளயைடிக்க போகும் சரக்குக்கும் …..
கொள்ளையாக போகும் மோகினிக்கும் ஈடாக தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று மனதிற்குள் கணக்கு போட்டு பார்த்து கொண்டான்.

வீரக்கேசவன் சலீம்பாயிடம் இருந்து விடைபெற்று வண்டியில் மாட்டை பூட்டி  மெதுவாக திருப்பி நிறுத்தினான்.
மோகினியை ஒரு கை கொடுத்து தூக்கி வண்டியில் ஏற்றி விட்டான் வண்டி உருளத் தொடங்கியது..
மணப்பாட்டை விட்டு அடர்ந்த தேரிக்காட்டுக்குள் வண்டி நுழைந்தது..

பாதையில் .இரண்டு பக்கமும் நாட்டு உடை வளர்ந்து பாதையை மறைத்து கொண்டிருந்தது.

மதிவதனன் கொடுத்த விபரத்தை தெரிந்து கொண்டு ..கொள்ளையன் சங்கரன் தனது ஆட்களுடன் மற்றொரு வண்டியில் பின் தொடர்ந்தான்.
சங்கரன் வண்டி மிகச்சிறியது.
ஆனால் வேகமாக ஓடக்கூடியது.
வண்டியில் கூண்டு கட்டி.முன்னும் பின்னும் அடைக்கபட்டிருக்கும்…

சிறிய கூண்டு வண்டிக்குள் பத்து ஆட்கள் வேல்கம்புகளோடு இருப்பார்கள்.
வழி மறித்த வண்டியை ஒரு நாழிகைக்குள் சங்காரம்பண்ணி விட்டு மீண்டும்; வண்டிக்குள் ஏறி கொஞ்சதூரம் பயணப்பட்டு ஆங்காங்கு இறங்கி காணாமல் போய்விடுவார்கள்.
அவரவர்களுக்கு சேரக்கூடிய பங்க அவரவர்க்கு வந்துசேரும்.
எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள்.

வீரக்கேசவனுக்கு மனதுக்குள் ஏதோ ஒன்று கவனம்…கவனம்…என்றுகூவிக்கொண்டிருந்தது.
மோகினியை பார்த்தான்.
மோகினி கண்கள் சொருகி வாய் பிளந்த நிலையில் இருந்தாள்

திடுக்கிட்டான் வீரக்கேசவன்..

வீரக்கேசவன் வண்டியை நிறுத்தி ஒரு எலுமிச்சபழத்தை எடுத்து அவள் உச்சியில் வைத்து ஓங்கி அடித்ததான் .

மோகினி மெதுவாக கண்விழித்தாள்.

என்னைக் கட்டிவிட்டார்கள் ……என்னை கட்டிவிட்டார்கள் …….என்று முனங்கினாள்..
யார்……?...என்று வீரக்கேசவன் கேட்டான்.

சலீம்பாய்….சலீம்பாய்…..மோகினி முனங்கினாள்
வீரக்கேவன் சிலிர்த்தான்…

சலீம்பாய் தன்வேலையை காட்டிவிட்டார்..இப்போது என்னசெய்வது என நினைத்து கொண்டிருக்கும்போது..கொள்ளையன் சங்கரன் வண்டி வீரக்கேசவனை கடந்து சென்றது.

அந்த வண்டி போகும் வேகத்தை சந்தேகத்தோடு பார்த்தவன். வலது கையால் சுருள் வாளை பிடித்து இழுத்தான். அது வீர்….. என சத்தத்துடன் வெளியே வந்து பல முனைகள் கொணட நீண்ட நாக்குகளாய் தொங்கி ஆடியது…
எதற்கும் தயார் என நினைத்து…… மனதை ஒருமுக படுத்தினான்.

வீரக்கேசவன் வண்டியை விட்டு இறங்கி .மாடுகளை முதுகில் தட்டி சாந்தபடுத்தி விட்டு..வண்டிக்கு முன்பக்கமாக போய் நின்று கொண்டு முன்னால் போகும் கொள்ளையன் வண்டியை பார்த்தான் .

கொள்ளையன் வண்டி நின்றது .
பத்து பேர் இருக்கும் ……..வண்டியில் இருந்து குதித்து இறங்கினார்கள். நேராக வீரக்கேசவனை நோக்கி ஓடி வந்தார்கள்.

வீரக்கேசவன் சுருள் வாளை தலைக்குமேல் ஒரு முறை சுழட்டி விட்டு ….கால்களை பூமியில் அழுந்த ஊன்றி கொள்ளையர்களின் தாக்குதலை சமாளிக்க தயார் ஆனான்…

மோகினி மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள்..
பின் சிரித்தாள்… இன்று இரத்தம் கிடைக்கபோகிறது…அதுவும் வேண்டிய மட்டும்……..
(தொடரும்)..




வீரக்கேசவன் தன்னை நிலை நிறுத்திய அடுத்த வினாடி எட்டுதிசையையும் பதினாறு கோனத்தையும் கட்டிவிட்டான்
மேலிருந்தும்
 கீழிருந்தும்
 பக்கவாட்டில் இருந்தும்
 எதிர்புறத்தில் இருந்தும்
 பின்புறத்திலிருந்தும்
 யாதொறு கெட்ட ஆவிகளின் கேடும்… மனிதர்களால் உண்டாகும் ஆபத்தும் தண்ணை தாக்க கூடாது..இது அண்ட சராசரத்தையும் படைத்த இறைவன் மீது ஆணை..ஆணை..ஆணை.

கண்ணை திறந்து எதிரே பார்த்தான்

வண்டியில் இருந்து  இறங்கினவர்களில் ஒருவன் படு வேகமாக முதலில் ஓடி வந்தான்.

அவன் கையில் நீளமான வேல்கம்பு …வரும் வேகத்தை சட்டென்று நிறுத்தி ..
கையில் உள்ள வேல்கம்பை வீரக்கேசவன் நெஞ்சுக்கு குறிபார்த்து வேகமாக வீசினான்..

வேல்கம்பு நேர் கோட்டில் வீரக்கேசவன் நெஞ்சை பிளந்து விட பாய்ந்து வந்தது.

வீக்கேசவன் தன் கையில் உள்ள சுருள்வாளை ஒரு முறை ஆகாயத்தில் சுழட்டி பின் அந்த வேல்கம்பை கவ்வி பிடிக்குமாறு சுருள் வாளை வீசியடித்தான் .
வேல்கம்பு குறிப்பிட்ட எல்கைகுள்ளே நுழையவும் சுருள்வாள் அதை சுழட்டி பிடித்தது தூர வீசியது.

வேல்கமபை வீசியவன் முரடன் மட்டுமல்ல சரியான முட்டாளும்கூட..

வேல்கம்பை வீரக்கேசவன் சுருள்வாள் விலக்கியதை பார்த்தவுடன் மிகவும் கோபமுடன் வீரக்கேசவனை நோக்கி பாய்ந்தான்.
இம்முறை வீரக்கேசவன் சுருள்வாளை கீழிருந்து மேல்நோக்கி சுழட்டி இழுக்கவே அது அந்த முரடனின் உடலை பாதத்தில் ஆரம்பித்து நெற்றிவரை நீளவாட்டில் பல இடங்களில் பிளந்து விட்டது.

ஒரே சமயத்தில் உடலின் பல பாகங்கள் பிளக்கபட இரத்தம் பீறிட்டு பாய்ந்தது.
என்னவெனறு யோசிக்கும் முன்னே தன் நினைவை இழந்தான் அந்த முரடன் .

இன்னும் நான்குபேர் ஒரே நேரத்தில்  கும்பலாய் வீரக்கேசவன் மீது பாய்ந்தனர்..

ஆதே சமயம் மூன்று பேர் வண்டியில் இருந்து இறங்கி பக்கத்தில் இருந்த காட்டுக்குள் பாய்ந்தனர்.

வீரக்கேசவன் கொஞ்சம் பின்னால் நகர்ந்து  கையை வேகமாக சுழுட்ட வீரக்கேசவனை சுற்றிலும் தீப்பொறிகள் பறந்தன.
பல முனை கொண்ட அந்த சுருள்வாள் வீரக்கேசவனை சுற்றி கோட்டைபோல் சூழன்றது.
பாய்ந்து வந்த அந்த நால்வரும் அவனுக்கு முன்னால் வேகத்தை குறைத்தால்  அது கேவலமானதாகும் என நினைத்து நீட்டிய வேல் கம்புகளுடன் சுருள் வளையத்துக்குள் வந்து விட்டனர்.
வீரக்கேசவன் ஓரு காலை தரையில் ஊன்றி மருகாலை பக்கவாட்டில் மிதித்து தன் மொத்த உடம்பையும் நின்றபடியே சுழல விட்டான் .

வேகமெடுத்த சுருள்வாள் வீரக்கேசவன் உடலின் சூழற்சியையும் தன்வசமாக்கியதால் பங்கரமாக சுழல ஆரம்பித்தது.

சுருள் வளையத்துக்குள் நுழைந்த நால்வரும் இமைப்பொழுதில் சின்னாபின்னமாகி போனர்கள் .
திரண்ட மாங்காயை கத்தியால் நீளவாக்கில் கிழித்தால் எப்படி இருக்குமோ அப்படி நால்வரின் உடலும் சிதைக்கபட்டது…

வெளியே வந்த அனைவரும் வீழ்ந்தனர்.

இனி வண்டிக்குள் யாராவது இருகின்றார்களா..?

கண்களை இடுக்கி கொண்டு கூர்மையாக பார்த்தான்  .கொள்ளையர்கள் வண்டியில் மறைக்கபட்ட திறையில் உள்ளே இருப்பதாக தெரியவில்லை

வீரக்கேசவன் வண்டியை நோக்கி கத்தினான்…….யாராவது வண்டிக்குள்ள இருக்கீங்களா…?இருந்த வெளியே வந்திடுங்க..நான் விட்டுடுதேன்…நீங்க என்னை தாக்காத வரை நானும் தாக்கமாட்டேன் .

யாரும் வரவில்லை

சரி.. இனி நடப்பதற்கு நான் பொருப்பல்ல.

கீழே கிடந்த ஒரு வேல்கம்பை அதன் முனையில் ஓங்கி மிதித்தான்.
கம்பின் மறுமுனை துடித்து எழுந்தது.. .எழுந்த வேல்கம்பை பிடித்து  வண்டியை நோக்கி வீசி எறிந்தான்.
வண்டிக்கு உள்ளே இருந்து பன்றி போல் ஒரு உறுமல் சத்தம்.
கொஞ்ச நேரத்தில் அந்த சத்தம் அடங்கியது.
பின் மெதுவாக கவனமாக கொள்ளையன் வண்டிக்கு அருகேபோய் .கொஞ்சம் பக்கவாட்டில் நின்று கொண்டு உள்ளே பார்த்தான்.
பொறிய பூத உடலுடன் ஒருவன் மல்லாக்க கிடந்தான் .அவன் நெஞ்சில் வேல்கம்பு குத்தியபடி நின்று கொண்டுஇருந்தது.

எல்லாம் முடிந்தது

கீழே விழுந்து கிடந்தவர்கள் பிழைப்பது என்பது மிக அரிதான காரியம்..

வழிமறித்து கொல்ல வந்தால் வேறு என்னசெய்வது.
ஒரு நொடி தன்னை காப்பாற்றிய கடவுளுக்கும் சிலம்பு கலையை சொல்லிக் கொடுத்த ஆசானையும் நன்றியுடன் மனதிற்குள் நினைத்தான். பின் வண்டியை நோக்கி திரும்பினான்.
வண்டிக்குள் மோகினி இல்லை..சுற்றிலும் பார்த்தான்.
வீரக்கேசவனுக்கு திகைப்பு எங்கே போயிருப்பாள்.தற்செயலாய் கீழே பார்த்தவன் திகைப்படைந்தான்

இரத்த துளிகள் வண்டி பக்கத்தில இருந்து காட்டுக்குள் சென்றதை கவனித்தான்..
என்னதான் நடந்தது என்று நினைத்து கொண்டிருக்கும் போது மரங்கள் அசையும் சத்தம்கேட்டது.வீரக்கேசவன் சுருள்வாளுடன் தன்னை திடப்படுத்தினான்.
சத்தம் மிக அருகே கேட்டது..கிழைகளை விலக்கி கொண்டு மோகினி வந்து கொண்டிருந்தாள்.வந்தவள் வீரக்கேசவன் அருகில் வந்து நின்றாள்.
வீரக்கேசவன் அவளை ஏற இறங்க பார்த்தான்.
நீ மயக்கத்தில்தானே கிடந்தாய்..?

ஆமா..?
பின் எப்படி மயக்கம் தெளிந்தது..?
மோகினி சொன்னாள்…நீதானே கட்டவிழ்த்து விட்டாய்…..என்றாள்..

நானா…வீரக்கேசவன் திகைத்தான்  …ஓ.. நான்கு திசைகளையும் கட்டுமு;போது இவளுக்கு தானாகவே சலீம்பாய் கட்டிய கட்டு அவிழ்ந்து விட்டது.

அது சரி இது என்ன இரத்த கறை….

மோகினி தொடர்ந்தாள்…..அது மூன்று பேர் வந்து  அந்த பெட்டியை தூக்கினார்கள்..

வீரக்கேசவன் அவளை தடுத்தான்.
நிறுத்து……..அவன் விளங்கி கொண்டான்..

கொஞ்சம் அசந்தா நம்மையே விழுங்கிவிடுவாள்….
.இவளை வைத்து சமானிப்பது எவ்வளவு கடினம்.

ஊருக்கு போய் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து கொண்டு சரி வண்டியில் ஏறு என்றான்.மீண்டும் வண்டி வேகம் எடுத்தது…

வீரக்கேசவனுக்கு இப்போது மீண்டும் ஒரு கவலை வந்தது.

மோகினியின் உச்சியில் அறையப்பட்டிருக்கும் காஞ்சர முளை பிடுங்கபட்டால் மோகினியை யாரும் அடக்கமுடியாது.
தன் வீட்டுக்கு பக்கததில் வசிக்கம் பொன்னம்மா மகா சாதுவாச்சுதே…

..அவள் இதை பற்றி தெரியாமல் இவளுக்கு உதவி விட்டால்..கடவுளே ..
அப்படி நடக்ககூடாதே…

வீரக்கேசவன் மெதுவாக தலையை திருப்பி மோகினியை பார்த்தான்.

மோகினி வீரக்கேசவன் நினைப்பதை தெளிவாக படித்துக் கொண்டிருந்தாள்.

தனக்கு பொன்னம்மா மூலமாக ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து கொண்டு வீரக்கேசவனை பார்த்து புண்ணகைத்தாள்.
மோகினி எதற்காக இப்போது சிரிக்கிறாள் என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் வீரக்கேசவன்.



வீரக்கேசவனும் மோகினியும் ஊர் வந்து சேரும்போது மாலை கருக்கலாகி விட்டது.

கூலக்கடை பஜாருக்கு சென்று பொருட்களை ஒப்படைத்து விட்டு .தன்வீட்டுக்கு திரும்பினான் வீரக்கேசவன்.

வண்டியில் இருந்த மாட்டை அவிழ்த்து கொட்டகையில் கட்டிவிட்டு .முகம் கை கால் கழுவி துடைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தான்.

பசி எடுக்கிறது

எதாவது சமைக்கவேண்டும் .

மோகினி மனித உருவில் இருந்தாலும் இவள் பெண் அல்ல.

அவளுக்கு வேண்டியஇரத்தம் நேற்று சண்டையில் கிடைத்து விட்டது.
இன்னும் இரண்டு மூன்று நாளுக்கு எந்த தொந்தரவும் பண்ணமாட்டாள்..

மோகினியை பார்த்தான்.அவள் கேட்டாள் என்ன பசிக்கிறதா..?
ஆம் என்றான்…

சமைக்கட்டுமா என்றாள்…

வீரக்கேசவன் சிரித்தான் …சமைப்பதா…..நீயா…?


மோகினி அவனைப்பார்த்து கேட்டாள்….ஏன் எனக்கு சமைக்க தெரியாதென்று நினைத்தாயா..?
நான் மனுஷியாக இருக்கும் போது நன்றாக சமைப்பேன்.

இப்போது என் நிலைமையை பார்….இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறி விட்டேன் ..
எல்லாம் உன் ஆசானால்தான்…..
என்னை கொன்று விட்டானே….?அழ ஆரம்பித்தாள்.

வீரக்கேசவனுக்கு பாவமாக இருந்தது.

இவளுக்கு உதவி செய்யலாமா என்று நினைத்தான்..
 அடுத்த அமாவசைக்கு இவளுக்கு விடுதலை கொடுத்து விடவேண்டும் என மனதில் தீர்மானித்தான்.
இவன் நினைக்கவும் அது மோகினிக்கு தெரிந்தது.

வீரக்கேசவனை இரக்கத்துடன் பாத்தாள்..

அட..சே நல்ல மனிதன்…முடிந்தால் இவனுக்கு உதவி செய்யவேண்டும் என நினைத்து  அங்கே இருக்கும் பானைகளை பார்வையிட்டாள்.

என்ன தேடுகிறாய் .?என்றான் வீரக்கேசவன்

அரிசி….

அதோ அந்த பானையில் இருக்கிறது..

மோகினி  அரிசியை எடுத்து ஒரு பானையில் வைத்து ,தண்ணீரை கூடவே ஊற்றி .அடுப்பில் மேல் பானையை வைத்தாள்.

வீரக்கேசவன் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கால்கள் இரண்டையும் அடுப்புக்குள் நீட்டி வைத்தாள்.
தீ குப்பென்று பிடித்து  தக தக வென்று தீ எரிந்தது.

இரண்டு நாளிகைக்குள் உணவு தயார் ஆகிவிட்டது.

பூதங்களை வைத்து அணைகள்  கட்டபட்டதை வீரக்கேசவன் அறிந்திருந்தான்.

ஆனால் பூதங்கள் அதிகாலை கோழி கூவும் முன்னே போய்விடும்.

மோகினி அப்படி அல்ல
 இவள் செயலாற்றலை நன்றாக கண்காணிக்க வேண்டும்.
கொஞ்சம் தவறினாலும் தனக்கு கேடாகிவிடும் என வீரக்கேசவனுக்கு நன்றாக தெரியும்.

மோகினி தூங்க மாட்டாள்.

என்ன செய்வது .வீரக்கேசவனுக்கு தூக்கம் கண்ணை சூழற்ற ஆரம்பித்தது.
மோகினியை பார்த்தான் .

மோகினியை ஒரு மூலையில் உட்காரவைத்து
அவளை சுற்றி ஒரு வட்டம்போட்டு அதற்குள்ளயே அவள் இருக்கவேண்டும் என்று அவளை கட்டினான்..
மோகினி வாய் பிளந்த நிலையில் சிலைபோலானாள்,
இனி காலைவரை அவள் அசைய மாட்டாள்.
வீரக்கேசவன் நிம்மதியாக தூங்கினான்.

காலையில் எழுந்து முதல் வேலையாக மோகினியை அவிழ்த்து விட்டான்.
அதன் பின் பொன்னம்மாவை பார்க்க சென்றான்..

பொன்னம்மா …அவள் வீட்டை பெருக்கி கொண்டிருந்தாள்.

வீரக்கேசவனை கண்டதும் பொன்னம்மா…
வாங்கய்யா……

பொன்னம்மா ..உம்புருசன் ராசமணி எங்கே.?

வீட்டுக்கு பின்னால் நின்ற ராசமணி வீரக்கேசவன் சத்தத்தை கேட்டவுடன் வீட்டின் முன் பாகத்திற்கு வந்தான்…
வந்தவன் வீரக்கேசவனைப் பார்த்து

வாங்கய்யா…….என்றான்.

வீரக்கேசவன் கூறினான்..

பொன்னம்மா…… ராசமணி…….இரண்டு பேரும் நல்லா கேட்டுக்காங்க

…நான் என் வீட்டுக்கு ஒரு மலையான பொம்பளைய கூட்டிட்டு வந்திருக்கேன்.
இன்னும் ஒரு மாதத்துக்கு இங்கதான் இருப்பா…
அவாகிட்ட நீங்க இரண்டுபேரும் ஜாக்கிறதையா பழகணும்.
அவா பார்க்க அழகா இருப்பா. ஆனா மகா பயங்கரமானவா..

நெருங்கி பழகாதீங்க..இப்போதைக்கி நான் அவ்வளவுதான் சொல்ல முடியும்..என்றான்

வீரக்கேசவன் போய் விட்டான்…

பொன்னம்மாவுக்கு மோகினியை உடனே பார்த்து விட வேண்டும் என ஆசையுடன் அவளை பார்க்க  தீர்மானித்தாள்

பொன்னம்மா ஒரு பேதை..வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள்..

வீரக்கேசவனுக்கு அதனால்தான் பொன்னம்மா மீது இரக்கம்

வீரக்கேசவன் பொன்னம்மா வீட்டில் இருந்து நேராக குளத்திற்கு சென்று விட்டான்.

பொன்னம்மா வீரக்கேசவன் வீட்டுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
உள்ளே மோகினி இருப்பது தெரிந்தது..
இன்னும் அருகே போனாள்.

மோகினியை பார்த்து பொன்னம்மா அசந்து விட்டாள்

என்ன அழகு…சிவந்தமேனியும் ..நீண்ட கூந்தலும் எடுப்பான கண்களும் கொண்ட இவளையா வீரக்கேசவன் ஆபத்தானவள் என்று கூறினான்.
பொன்னம்மாவுக்கு நம்ப முடியவில்லை.

மோகினி வெளியே வந்தாள்…..பொன்னம்மாவை பார்த்து சிரித்தாள்.
பதிலுக்கு பொன்னம்மாவும் சிரித்தாள்.

அம்மாவுக்கு எந்த ஊரு..?..பொன்னம்மா கேட்டாள்.

கேரளம்….உள்ள வாங்க ..எதாவது வேணுமா…..,

பொன்னம்மா  திகைத்தாள்…….. என்ன கேட்பது ….எதாவது கேட்கவேண்டுமே…!

சும்மா வந்தேன் என்றால் எப்படி..?

தீ வேணும்..
(அந்த காலத்தில் தீயை பத்திர படுத்தி அடுப்பில் வைத்திருப்பார்கள்..தீ யை ஒருவருக்கொருவர் கொடுப்பதை ..மிகப்பெரிய தானம் என்றும் சொல்வார்கள்..)

உள்ள வாங்க தாரேன் ….என்றாள் மோகினி..

பொன்னம்மா சுற்றும் பார்த்தாள் பக்கத்தில் ஒரு சில்லாட்டை(..பனையில் உள்ள ஒரு பொருள்..)கிடந்தது.
அதை எடுத்து மோகினியிடம் நீட்டினாள்.
மோகினி சில்லாட்டையை வாங்கிக் கொண்டு பொன்னம்மவை பார்த்தாள் .

பொன்னம்மா சிரித்தாள்.

சில்லாட்டையை மோகினி தன் வாயருகே கொண்டு போய் மெதுவாக ஊதினாள்.

வாய்க்குள் இருந்து தீ ஜீவாலை வெளியே பாய்ந்தது…

சில்லாட்டையில் தீப் பிடித்து கொண்டது..

இதை பார்த்த பொன்னம்மாவுக்கு பேச்சு வரவில்ல.
அப்படியே உறைந்து விட்டாள் …

வீரக்கேசவன் கூறியது சரிதான் எனபட்டது .
இந்த பெண் அழகாளவள் மட்டுமல்ல ஆபத்தானவள் என்பது உன்மைதான் என ஒருமாதிரியாக பொன்னம்மா புரிந்து கொண்டாள்.

தீயைகொடுத்த மோகினி…… இவளை எப்படி பயன்படுத்தி தன்தலையில் உள்ள காஞ்சர முளையை பிடுங்குவது என யோசித்து கொண்டிருந்தாள்..

தீயை வாங்கிய பொன்னமாவோ இதையாரிடமாவது கூறவேண்டுமே..இல்லையெனின் தன் தலை வெடித்து விடுமே என நினைத்து கொண்டாள்.

அடுத்தவீட்டு கதை கேட்பதற்கு ஆவலாக காத்திருக்கும் பெண்களில் பிரதானமானவள் ……ஒத்தவீட்டுக்காரி மரகதம்மாள்தான்…

மரகதம்மாள் வீடு அந்த ஊரில் தனியாக இருந்ததால் அதை ஒத்தவீடு என அழைத்தார்கள்.

மரகதம்மாளைத் தேடி பொன்னம்மாள் வேகமாக சென்றாள்

மரகதம்மாள் அந்த ஊரிலேயே பணக்காரி ஆனாலும் பண ஆசை அவளை பாடாய்படுத்தியது….
.வட்டிக்கு பணம் கொடுப்பதிலும் கொடுத்த பணத்தை வட்டியோடு வாங்குவதிலும் மகா கெட்டிக்காரி.
ஒரு முறை ஒரு ஜோசியன் அவள் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும் குறிப்பிட்டநேரத்தில் அது மேலே வரும் என்றும் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அதில் இருந்து மரகதம்மாளின் தூக்கம் தொலைந்தது.

எப்பவும் தேட்டத்திலேயே பழியாய் கிடந்தாள்.

 பொன்னம்மாவின் மூலமாக  மரகதம்மாளின் புதையல் ஆசை ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை…..(தொடரும்..)

மரகதம்மாளை பொன்னம்மா காணும்போது காலை எட்டு மணி இருக்கும்….

 மரகதம்மாள் அப்போதுதான் கண் முழித்து முகம் கழுவி இன்று யாரிடமெல்லாம் வட்டிப்பணம் வாங்குவது என்று தன் மனதில் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தாள்..

பொன்னம்மாவை பார்த்த மரகதம்மாள்..

என்ன பொன்னம்மா ஒரே சிரிப்பாணியா இருக்கு….. என்ன விஷயம் என்றாள்.

பதிலுக்கு பொன்னம்மா .

.என்னத்த சொல்லம்மா….ஊருக்குள்ள என்னலாமோ நடக்கு…என்றாள்..

மரகதம்மாளுக்கு காலையிலே மனதிலே கலக்கம் வந்தது.தனக்கு பணம் தரவேண்டியவர்கள் யாராவது செத்துதொலைந்து விட்டார்களா..? இவள்  அப்படி எதை பார்த்துவிட்டாள்..

என்ன பொன்னம்மா  காலையிலே அப்படி என்னதான் பார்த்து விட்டாய்  சொல்லேன் கேட்கிறேன்…..என்றாள் மரகதம்மாள்.

பொன்னம்மா நெருக்கமா உட்கார்ந்து கொண்டாள்.

நம்ம வீரக்கேசவன் இருக்காருல்ல அவரு ஒரு மலையாளத்தள கூட்டிக்கிட்டு வந்திருக்காரும்மா…

சரி இப்ப அதுக்கென்ன..?

அவரு.. காலங்காத்தாலே எங்கிட்டவந்து சொன்னாரு …
பொன்னம்மா பொன்னம்மா…. .நான் ஒரு மலையாளத்தாள கூட்டிட்டு வந்திருக்கேன் ..நீ அவாகிட்டே ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கோண்ணு சொன்னாரும்மா

நானும் இதென்னடா புது கதையா இருக்கு பொம்பளைக்கு பொம்பள எதுக்கு ஜாக்கிரதையா நடக்கணும்…. அப்போ இதுல ஏதோ சூட்சமம் இருக்குண்ணு சொல்லி உடனே அவரு பின்னாலயே போயி அவள பார்க்கபோனேன்.

சரி அப்புறம்…..

அந்த பொம்பள  செக்கச்செவேருண்ணு இருக்காம்மா …..அப்படி ஒரு அழகு..

சரி..அப்புறம்

நானும் சரி அவாகிட்ட எதாவது பேச்சு கொடுப்போமேன்னு சொல்லி……..
எம்மா….. தீ வேணுமுண்ணு சும்மா கேட்டேன் ….

சரிண்ணு அவளும் சொன்னா…..

நான் பக்கத்தில கிடந்த சில்லாட்டைய எடுத்து நீட்டினேம்மா ..அவா கையில வாங்கி வாய் பக்கத்தில வச்சி லேசா ஊதுனாம்மா…….

அப்புறம் ….

பொன்னம்மா நடுங்கினாள்…….அவா வாய்க்குள்ள இருந்து தீயா வந்திச்சிம்மா….நான் அப்படியே நடுங்கிட்டேன்.

மரகதம்மாளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை பின்பு நிதானமாக சிந்தித்ததில் ஓரளவு புரிந்து கொண்டாள்.

ஏன் பொன்னம்மா..அவா என்ன மந்திரவாதியா…?

தெரியலம்மா ..ஆனா அவா பொம்ள இல்லம்மா…ஏதோ… மோகினி மாதிரி அழகும்மா..

சரி…..பொன்னம்மா இந்தா நேற்று நீ கேட்ட பணம்..எடுத்துக்கா…

பொன்னம்மா பணத்தை எடுத்து கொண்டாள்.

பொன்னம்மா நான் அவள பார்க்கணுமே…

நான் அங்க வந்து அவள பார்க்கிறது சரிபட்டு வராது.நீ அவள எப்படியாவது இங்க கூட்டிகிட்டு வாயேன்.

பொன்னம்மா யோசித்தாள் …முடியாது என்று சொல்ல முடியாது..

தேவை இல்லாத சிக்கலில் தான்  மாட்டிக்கொண்டதாக நினைத்து வருந்தினாள் பொன்னம்மா.ஆனாலும் என்ன செய்வது

.மரகத்தமாள் பணக்காரி ஆச்சுதே.   அவளை எப்படி பகைத்து கொள்வது…

வேறு வழியில்லை ….எப்படியாவது  அந்த மலையாளத்துக்காரியை சம்மதிக்கவைக்கவேண்டும் என முடிவு செய்தாள்…

மதியம் மூன்று மணிவாக்கில்  மோகினியை பார்ப்பதற்கு பொன்னம்மா சென்றாள்…

வீரக்கேசவன் வீட்டுக்கு அருகில் சென்றவுடனேயே வீட்டுக்குள்ளிருந்த மோகினி பொன்னம்மாவை பார்த்து சிரித்தாள்.

உள்ளே வரச்சொன்னாள்..
மோகினி தலையை விரித்து போட்டு கொண்டு முடியில் சிக்கெடுத்து கொண்டிருந்தாள்.

பொன்னம்மா போய் மோகினி அருகில் உட்கார்ந்து கொண்டு….மோகினியின் முடியை ரசித்துபார்த்தாள்.
ஆடேயப்பா …

எவ்வளவு முடி இருக்கும்மா உங்களுக்கு….
பொன்னம்மா ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள்.

நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் பொன்ம்மாவின் கழுத்துபகுதியை மோகினி ஆவலாய் பார்த்து கொண்டிருந்தாள்…
சரியாக குரல்வளையில் கடித்தால் எப்படி இருக்கும் என்று மனதில் தீர்மானம் பண்ணிக்கொண்டிருக்கும்போது….

பொன்னம்மா மோகினியின் தலையில் கை வைத்து  பேன் பார்க்க ஆரம்பித்தாள்…

.மோகினி சந்தோசத்தின் உச்சத்துக்கு போய்விட்டாள்…

.எப்படியும் இப்போது பொன்னம்மா தன் தலையில் அறைய பட்டிருக்கும் காஞ்சர முளையை பார்ப்பாள்..
அவள் அதைபற்றி விசாரிக்கும் போது எதையாவது சொல்லி முளையை பிடுங்க வைக்கவேண்டும்….
பொன்னம்மா முளையை பிடுங்கிய மறு நிமிடமே பொன்னம்மாவின் ஈரக்குலையை உருவிவட வேண்டும் என்று மோகினி முடிவு செய்தாள்..

மோகினி நினைத்த மாதிரியே நடந்தது.

கைகளால் முடியை பிரித்து கொண்டே பேனை தேடிக்கொண்டே இருந்த பொன்னம்மா மோகினியின் நடுமண்டையில் அறைபட்டிருந்த காஞ்சர முளையை கண்டு ஒருகணம் திகைத்து..

அம்மா இது என்னம்மா..நடு மண்டையில ஏதோ கம்பு மாதிரி இருக்கு..

மோகினி உஷார் ஆனாள்….ஆமா பொன்னம்மா .இப்பத்தான் நிலைகம்பில் இடிச்சிட்டேன்.

பயங்கரமா வலிக்குது…..தயவு செய்து அதை பிடுங்கி விட்டுடேன்….

அப்படியாம்மா….இதோ பிடுங்க பார்க்கிறேன்.

எப்படியாவது இதை பிடுங்கி மோகினியின் தோழமையை பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் பொன்னம்மா இருந்தாள்.

இன்னும் சில வினாடிகளில் எல்லாம் தலைகீழாய் மாறப்போகிறது என்று மோகினி நினைத்து கொண்டிருந்தாள்.

பொன்னம்மா மோகினியின் தலையிலுள்ள முடிகளை நன்றாக விலக்கி தன் கூர்மையான நகத்தின் உதவியினால் அந்த முளையை பற்றிபிடித்து வெயியே இழுக்கும் அதே நொடியில்………
பொன்னம்மா……………………….வெளியில் இருந்து ஒரு சத்தம்


பொன்னம்மா தன்கையை எடுத்து கொண்டாள் .

மோகினியின் கண்கள் தீப்பிளம்பாக மாறியது….(



பொன்னம்மா திடுக்கிட்டது உண்மைதான்.
அந்த சத்தத்திற்கு உரியவள் மரகதம்மாள்தான் என்பது பொன்னம்மாவுக்கு நிச்சயமாக தெரிந்தது..

இந்த அம்மா எதுக்கு இப்போ வரனும்..பென்னம்மா குழம்பினாள்.

மரகதம்மாள் மீண்டும் வெளியே நின்று கொண்டு …..பொன்னம்மா …என்று கத்தினாள்.

பொன்னம்மா வேகமாக வெளியே ஓடினாள்.

மோகினி தலையை கவழ்ந்த படி கோபத்தில் கண்கள் சிவக்க உட்கார்ந்து கொண்டிருந்தாள்…..
இன்றோடு இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என உறுதியாய் இருந்தாள்.

அதற்குள் பொன்னம்மா மரகதம்மாளை வீட்டிற்குள் அழைத்து வந்து விட்டாள்.

மோகினி நிமிர்ந்து பார்த்தாள் மரகதம்மாளை.

மரகதம்மாவும் மோகினியை   நேருக்கு நேர் பார்த்தாள்.

பொன்னம்மா மோகினியை பற்றி சொன்னதில் எந்த தவறும் இல்லை…

மோகினி நல்ல அழகிதான்.
அந்த வட்டாரத்திலே இவளைப்போல் ஒரு அழகியை பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே.அதே சமயம் இவள் பெண்னா.?என்ற சந்தேகமும் மரகதம்மாவின் இதயத்தில் வந்தது.அதை இன்றே சோதித்து பார்த்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தாள்..

பொன்னம்மா மரகதம்மாளை உட்காரச்சொன்னாள்…..

மரகதம்மாள்  பதிலுக்கு….பரவாயில்ல..இருக்கேன்……….நடந்து வந்ததன்லா..அதான் ..தாகமா இருக்கு…கொஞ்சம் தண்ணி கிடைக்குமா…

.மோகினியை பார்த்தாள்……

மோகினி தண்ணீர் கொண்டு வரப்போனாள்….

பொன்னம்மாவுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை…காரியங்கள் கைமீறி போய்க்கொண்டிருக்கிறது…….

தான் மட்டும் தனியாக நின்று என்ன செய்ய முடியும்.நடப்பது நடக்கட்டும் வேடிக்கை பார்க்க மட்டுமே இப்போது தான் செய்யக்கூடியதாக பொன்னம்மா நினைத்தாள்.

பெரிய செம்பில் தண்ணீர் கொண்டு வந்து மோகினி மரகதம்மாளின் கையில் கொடுத்தாள்..
தண்ணீரை ஆவலுடன் வாங்கிய  மரகதம்மாளின் கை பிசகி செம்பு தரையில் விழுந்து விட்டது.

தண்ணீர் மோகினியின் காலில் கொட்டி தரையில் படர்ந்தது.

மரகதம்மாள் வேண்டுமென்றுதான் இதை செய்தாள்.

ஆனாலும் பதறியபடி …ஐயோ தண்ணீர் கொட்டிட்டே ..என்று அங்கலாய்த்தாள் மரகதம்மாள்.

மோகினி எதுவும் சொல்லவில்லை…..வேறு தண்ணீர் கொண்டுவர செம்புடன் மீண்டும் சென்றாள்.

மோகினி போகும் போது மோகினியின் பாதங்களை ஆவலுடன் கவனித்தாள்
மரகதம்மாள்………

மோகினியின் பாதங்கள் கீழே கொட்டியிருந்த தண்ணீரில் மிதித்துதான் சென்றது.ஆனால் கால்தடம் தண்ணீரை கடந்ததும் பூமியில் பதிய வில்லை…

பேய்களுக்கு பூமியில் கால்தடம் பதியாது என்பது மரகதமாளுக்கு தெரிந்ததுதான்.

ஆக..மோகினி சாதாரன் மனுஷி அல்ல…..ஆனாலும்… சரி..பேசிப் பார்ப்போம் என் முடிவுக்கு வந்தவளாய்….மீண்டும் தண்ணீரை குடித்துவிட்டு…
பொன்னம்மா சொன்னா ….

 உன்னை பற்றி அதான் நேர்ல பார்த்திட்டு போகலாமுன்னு வந்தேன்..

என்னை பற்றி என்ன சொன்னாள்…..

உனக்கு என்னை பற்றி என்ன தெரியவேண்டும்…

.இப்படி கேள்வி மோகினியிடம் இருந்து வரலாம் என எதிர் பார்த்து இருந்த மரகதம்மாவுக்கு மோகினி எதுவும் சொல்லாமலிருந்தது பெருத்த ஏமாற்றமாயிருந்தது.

மரகதம்மாவே மோகினியிடம் கேட்டாள் .உனக்கு எந்த ஊரும்மா….?

கேரளம்….

வீரக்கேசவன் உனக்கு சொந்தமா..?

இல்ல..
எதுக்காகம்மா இங்க வந்திருக்க….நான் தெரிஞ்சிக்கலாமா…?

தெரியவேண்டாம்…….

மோகினியின் இந்த பதில் மரகதம்மாளுக்கு முகத்தில் யாரோ அறைந்தது போலிருந்தது.ஆனாலும் சமாளித்து கொண்டாள்.

அதுக்காக இல்லம்மா…..உனக்கு மந்திரம் தந்திரமெல்லாம் தெரியுமுன்னு பொன்னம்மா சொன்னா  அதான் தெரிஞ்சிகிடலாமேன்னு கேட்டேன்.

உனக்கு பில்லிசூனியம்.. வைக்க… எடுக்க… தெரியுமா..?

தெரியாது……

பில்லி சூனியம் எதுக்கு வைப்பாங்க…?..இது மோகினி

மரகதம்மாவுக்கு எரிச்சலாய் இருந்தது..
அதனால் அவளும் கோபமாக பதிலை சொன்னாள்…

.பில்லி சூனியம் எதுக்கு வைப்பாங்க ..யாரையரவது தீர்த்து கட்டனுமுன்னா பில்லிசூனியம் வைப்பாங்க..?

தீர்த்து கட்றதுக்கு எதுக்கு பில்லிசூனியம் ..நாங்களே அத செய்திடுவோம்…

மரகதம்மாவுக்கு திக்கென்றது.
அதாவது கொலை……..

ஆமா …நீங்களும் அததான சொல்றீங்க…

நான் சொல்றது  பேயை வைத்து கொலை செய்றது……நீ.. சொல்றது மாதிரி எல்லாராலும் முடியமா..?

உங்களுக்கு யாரை கொல்லனும் சொல்லுங்க…
மரகதம்மாவுக்கு வியர்த்தது..

எனக்கு யாரையும் கொல்ல வேண்டாம்…..

அதான் உனக்கு பில்லி சூனியம் தெரியாதுன்னு சொல்றியே……அப்போ நான் என்னத்த சொல்ல…ம் அப்போ நான் போகட்டுமா…..

இந்த பொன்னம்மா பேச்ச கேட்டு வந்தது தப்பா போச்சு…
பொன்னம்மா என்ன சொன்னா..?
உனக்கு மந்திர தந்திரம் தெரியுமுன்னு சொன்னா..?
ஆமா தெரியும்…..?

தெரியுமா……?

ஆமா உங்களுக்கு என்ன செய்யனும்  அத சொல்லவே இல்லியே.

ஓ..அப்படியா…மரகதம்மாவுக்கு தாம சங்கடமான் சூழ்நிலை…..சொல்லவா வேண்டாமா..?

இல்ல .சொல்றேன்..ஆனா பென்னம்மா இருக்காளே என்பதுபோல் பொன்னம்மாவை பார்த்தாள் மரகதம்மாள்.

மோகினி புரிந்து கொண்டாள்.

பொண்ணம்மாவை நோக்கி தனது இடதுகை ஆள்காட்டி விரலால் காட்டினாள்.

பொன்னம்மா மூன்று முறை சூழன்று கீழே பொத்தென்று விழுந்தாள்.

மோகினி பொன்ம்மாவின் கழுத்தில் காலைவைத்து அழுத்தியபடி மரகதம்மாவை பார்த்து
இப்போ சொல்லுங்க என்றாள்.

மரகதம்மாவுக்கு மூச்சு முட்டியது.கண்ணெதிரே பொண்ணம்மா சூழண்டு விழுந்தது.ஒருபக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் கலக்கமாகவும் இருந்தது.

சொல்லுங்க..

மோகினியின் வார்த்தை இப்போது கரகப்பாய் மாறி இருந்தது…கண்கள் சிவந்திருந்தது
மரகதம்மாள் நன்றாக பயந்து விட்டாள்….பு….புதையல் இருக்கு..

புதையல் இருக்கா..?

ஆமா..

யார் சொன்னா..?

ஜோஸ்யன் சொன்னான்…….அத எடுக்கனும்..

எடுத்துறலாம்

என்ன செலவானாலும் தந்திடுதேன்.

பணமா..?

ஆமா…?

பணமெல்லாம்வேண்டாம்…

அப்போ  சும்மாவா…

ஆமா…

மரகதம்மாவுக்கு சந்தோசம் முகம்வழியாய் கொப்பளித்தது…அப்போ எப்போ வருவே..?

எங்க .வரனும்..?

அதான் புதையல் எடுக்க…..

வாரேன் அதுக்கு முன்ன நீங்க எனக்கு ஒரு வேலை செய்யனும்..

என்னது செய்யனும்…

என்தலையில் அறையபட்டிருக்கும் இந்த முளையை பிடுங்கனும்..

மரகதம்மாள் மெதுவாக தலையை எட்டிப் பார்த்தாள்…

காஞ்சர முளை……….அப்படின்னா இவள் பெண் அல்ல…..மோகினி…
நீ  பெண் இல்லையா..

மோகினி பதில் சொல்லவில்லை………ம்….பிடுங்கு………….

மோகினியின் குரலில் கடுமை கூடியிருந்தது…
மரகதம்மாள் பொனனம்மாவை பார்த்தாள்.

பொன்னம்மா காலை விரித்து…. வாய் பிளந்த நிலையில்… கண்கள் திறந்தபடி …தலையை விரித்து  பயங்கரமாக தரையில் கிடந்தாள்….

இங்கிருந்து தப்ப இப்போது ஒரே வழி……….யோசித்தாள் மரகதம்மாள்

மரகதம்மாள் மோகினியை பார்த்து சொன்னாள். ..நீ எனக்கு புதையலை எடுத்து தா நான் இதை பிடிங்கி விடுகிறேன் என்று நடுங்கியபடி கூறினாள்..

இல்ல….. இப்போ புடுங்கு..நாளைக்கு நான் உனக்கு புதையல் எடுத்து தாரேன்..


மரகதம்மாள் மோகினியிடம்……நீ எனக்கு உதவி செய்தால் உனக்கு வேண்டியதை செய்து உன்னை நல்ல முறையில் அனுப்பி வைக்கிறேன் நாளை காலையில் என் தோட்டத்திற்கு வந்து விடு என்றாள்……

மரகதம்மாளை இப்போதைக்கு தனக்கு கீழ்படிய வைக்கமுடியாது என்பதை உணர்ந்தாள் மோகினி 

மோகினிக்கு கடுங்கோபம் வந்தது.
கீழே கிடந்த பொண்ணம்மாவின் நடுவயிற்றில் ஓங்கி மிதித்தாள்.பொன்னம்மா ரப்பரால் செய்யபட்ட பொம்மைபோல் துள்ளி எழுந்து நின்று விட்டாள்.

எழுந்த பொன்னம்மாவுக்கு நன்றாக உணர்வு வந்துவிட்டது….

.மரகதம்மாளை பார்த்து என்னம்மா நிற்கிறீங்க உட்காருங்க என்றாள் பொன்னம்மா..

மரகதம்மா பொன்னம்மாவை வியப்பாய் பார்த்தாள்…பொன்னம்மா நீ சும்மா இரு..
சரிம்மா நாம நாளைக்கு பார்ப்போம்…..நான் போகிறேன் என்று மரகதம்மாள் வெளியே பாய்ந்து ஓடினாள்.

அவளை தொடர்ந்து பொன்னம்மாவும் போவதற்கு தயாரானாள்.

மோகினி அவளை இழுத்து நிறுத்தினாள்.

கீழே விழுந்ததில் பொன்னம்மாவின் பின்தலையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

.மோகினிக்கு அந்த இரத்த வாடை மிகவும் பிடித்திருந்தது……

பொன்னம்மாவின் தலையை கவனித்து கொண்டிருந்த மோகினிக்கு அப்படியே அவளை முறித்து விடலாம் என்று நினைத்தாள்..

ஆனால் வீரக்கேசவனை நினைத்து பயந்தாள்.

மோகினியின் தலையில் இருக்கும் காஞ்சர முளை பிடுங்கபடாதவரை மோகினி அங்குதான் இருக்கவேண்டும்.

பொன்னம்மாவை தான் கொன்றுவிடலாம்..பின் அது வீரக்கேசவனுக்கு தெரிந்தால்  வீரக்கேசவன் தன்னை  கலயத்தில் அடைத்து கடலில் அமிழ்த்தி விடுவான்..

பின் மீளவே முடியாமல் போய் விடும் ..

ஆகவே இப்போதய சூழ்நிலையில் இதை விட்டு விடலாம் என முடிவு செய்தாள்..

ஆகவே பொன்னம்மாவை விட்டு விட்டாள்……

.பொன்னம்மா போன சிறிது நேரத்தில் வீரக்கேசவன் வந்து விட்டான்.

வீட்டிற்குள் தண்ணீர் சிந்தி இருப்பதை கவனித்தான்.

ஆனால் மோகினியிடம் எதுவும் கேட்கவில்லை…மோகினி வழக்கம்போல அமைதியாய் இருந்து விட்டாள்.

மறு நாள் வீரக்கேசவன் சந்தைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டான்…

மோகினிக்கு இருப்பு கொள்ளவில்லை …

.பொன்னம்மாவை எதிர் பார்த்து காத்துஇருந்தாள்.

பொன்னம்மா வருவாளா மாட்டாளா..?

பொன்னம்மா வந்து விட்டாள்….

வந்ததும் வராததுமாய்……..அம்மா… உங்கள மரகதம்மா தோட்டத்துக்கு கூட்டிகிட்டு வரச்சொன்னாங்க ……

.பொன்னம்மா அவசர படுத்தினாள்.

மோகினி வேண்டும் என்றே……..போகலாம் பொன்னம்மா..இப்ப என்ன அவசரம்….என்று கூற….

பொன்னம்மா பதறினாள் ……

.இல்ல அம்மா  இன்னும் ஒரு மணி நேரத்துல நல்ல நேரம் போயிட போகுதாம்…………………….அதான் உங்கள அவசரமா மரகதம்மா கூட்டிகிட்டு வரச்சொன்னாங்க என்றாள்……

மோகினி தனக்குள் சிரித்து கொண்டாள்….

சாகுறததுக்கு நல்ல நேரம் பார்க்கிற ஒரே பெண் இந்த மரகதம்மாதான் என நினைத்தாள்

சரி வாறேன் என்று சொல்லிவிட்டு…..தலையை சேலையால் முடிக்கொண்டு பொன்னம்மா முன்னே போக மோகினி.பின்னால் நடந்து போனாள்.


தோட்டம் ஊரைவிட்டு சற்று ஒதுக்கு புறமாக இருந்தது…

.தோட்டத்திற்குள் நுழைந்ததும் அங்கே கட்டபட்டு இருந்த நாய்கள் பயங்கரமாக அலறியது.

.மோகினி இதை கவனித்தாள்.

ஆனாலும் ஒன்றும் தெரியாதவள் போல் மெதுவாக மரகதம்மாள் அருகில் சென்று தன் தலைமீது இருக்கும் சேலையை  விலக்கினாள்.

மரகதம்மாள் மோகினியை பார்த்தாள்……..

 என்ன அழகான பெண்….என நினைத்து கொண்டாள்..

அடுத்த வினாடியே ஐயோ….  இது பேய் அல்லவா என பதற ஆரம்பித்தாள்.

எப்படி இருந்தாலும் தனக்கு புதையல் வேண்டுமே…என்னசெய்வது…

மோகினி மரகதம்மாவின் பக்கத்தில் போய் அமர்ந்தவுடன்….

மரகதம்மாள் மோகினியின் கையை பிடித்து கொண்டாள்…எப்படியாவது எனக்கு புதையல் வேணும் …..அதான் இண்ணைக்கி வேலக்காறங்க  எல்லரையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன் ………...கெஞ்சினாள்…………………மரகதம்மாள்

மோகினி சுற்றும் முற்றும் பார்த்தாள் .உண்மைதான் யாரும் இல்லை..

பொன்னம்மாவுக்கு எதுவும் புரியிவில்லை

..மோகினி தன் தலையை மரகதம்மாவிடம்  காட்டினாள்…

ம் …………..பிடுங்கு….

நீ எனக்கு முதல்ல புதையல காட்டு……அத பார்த்துட்டு பிடிங்கி விடுறேன்..

மோகினி நிமிர்ந்து மரகதம்மாவை பார்த்தாள்………. .அவள் கண்கள் இரத்த சிவப்பாக இருந்தது.

மரகதம்மாள் பிடிவாதமாக இருந்தாள்.

மோகினியின் சிவந்த கண்களை பார்த்த பொன்னம்மாவுககு பயத்தில் எதுவும் புரியவில்லலை ……....பேசாமல் மாமரத்தடியில் ஒளிந்து கொண்டாள்.

மோகினி சொன்னாள் ………..சரி நான் காட்டுகிறேன் .

.ஆனால் புதையலை பாத்தவுடன் என் தலையில் உள்ள காஞ்சர முளையை பிடுங்க வேண்டும்…

சரி ………..என்றாள் மரகதம்மாள்.

மோகினி எழுந்து தோட்டத்திற்கு வடக்கு பகுதிக்கு சென்றாள்..பூமியை ஆர்வமாகவும் கூர்மையாகவும் பார்த்துக் கொண்டே சென்றவள் …………..ஒரு இடத்தில் நின்றாள்…பின்பு மரகதம்மாளை அந்த இடத்திற்கு அழைத்தாள்..

மரகதம்மாள் ஓடிப்போய் மோகினி பக்கத்தில் நின்று கொண்டாள்.

மோகினி கையை நீட்டி ஒரு இடத்தை காண்பித்தாள்………….. .அந்த இடத்தை மரகதம்மாள் உற்றுப்பார்த்தாள்.

.மரகதம்மாளின் கண்கள்  ஆச்சரியத்தால் மின்னியது..

பத்தடி ஆழத்தில் ஒரு கொப்பரை நிறைய தங்க ஆபரணங்கள் நிரம்பி இருந்ததை கண்டாள்….

மோகினியின் கைகளை பிடித்து கொண்டாள்……..

ஐயோ ..மேல வரலியே ..என்ன செய்றது…….?

மோகினி தன் தலையை காட்டினாள்……நான் பேசியபடி காட்டி விட்டேன்..இப்போ பிடுங்கு…

மரகதம்மாளுக்கு  கோபம் எங்கிருந்து வந்ததோ…..கத்திவிட்டாள்…..

அது எங்கயோ இருக்கு …எனக்கு மேல வரணும்..மேல வரட்டும் …அப்போ பிடுங்கறேன்..

மோகினியும் கத்தினாள்……சரி ….இதோ..வருது..

அது வந்த உடனே முதல்ல என் தலையில இருக்கிற காஞ்சர முளைய பிடுங்குறே……
அதுக்கு பிறகு நீ அந்த புதையலுக்கு இரத்த அபிஷேகம் செய்ற..அப்பத்தான் அது உணக்கு கிடைக்கும் புரியுதா……!

மோகினி சொன்னது  மரகதம்மாளுக்கு காதில் பாதிதான் விழுந்தது.

மரகதம்மாள் புதையலையே பார்த்து கொண்டிருந்தாள்….

மோகினி புதையலை நோககி கையை காட்டினாள்..
புதையல் மேல்நோக்கி வர ஆரம்பித்தது….

பூமிக்கு மேலே தன் தலையை மட்டும் காட்டியவாறு நின்று விட்டது.

மரகதம்மாள் புதையலை நோக்கி பாய்ந்தாள்..

மோகினி அவளை இழுத்து பிடித்து கொண்டாள்….

தன் தலையை காட்டி …ம்…..பிடுங்கு..

முடியாது… நான் புதையலை எடுத்துட்டுதான் பிடுங்குவேன்….மரகதம்மாள் என்ன சொல்கிறோம் என்ற உணர்வில்லாமல் பிதற்ற ஆரம்பித்தாள்.

மோகினியின் கோபம் அவள் வாயில் இருந்து தீயை கக்கியது.

.மரகதம்மாளின் கையை பிடித்து தூக்கி ஆகாயத்தில் ஒரு முறை சுற்றி நச்சென்று பூமியில் வைத்தாள்.

மரகதம்மாளுக்கு சுய நினவு வந்து விட்டது.

மோகினியின் முகத்தை பார்த்தாள்..அது கோபத்தால் இரத்த சிவப்பாய் இருந்தது….
ம் பிடுங்கு..மோகினி அதட்டினாள்..

மரகதம்மாள்  பயந்து போய் காஞ்சர முளையை பிடுங்கி விட்டாள்.

அவ்வளவுதான்…..

மோகினி நிமிர்ந்து நின்றாள்….அவள் உயரம் கூடிக்கொண்டே போனது. இருபது அடிஉயரம் வரை நிமிர்ந்து நின்றாள்…

மோகினியின் .உடல் கருத்து விட்டது…

முகம் கோரமாக ஆகியது….மிகப்பெரிய வவ்வால் போல நின்றாள்.

மரகதம்மாவை பார்த்து கோரமாக உறுமினாள்.   கீழே இருந்த மரகதம்மாளுக்கு

என்னசெய்வது என்று தெரிவில்லை..

மோகினியின் கால்களுக்கு கிழே மரகதம்மாள் இருக்கிறாள்…..

மோகினி மரகதம்மாளின் நெஞசில் ஓங்கி மிதித்தாள்..மரகதம்மாளின் வாய்வழியே  இரத்தம்  கொப்பளித்து பீச்சியடித்தது…

.பீச்சியடித்த இரத்ததுளிகள் புதையலில் மேல் போய் விழுந்தது..

புதையல் தரைக்கு மேல் வந்து நிலையாய் நின்று விட்டது…

மோகினி வானத்தை அன்னாந்து பார்த்தாள் ..

விரிந்து பரந்த வானத்தை நோக்கி பறந்து சென்றுவிட்டாள்….

மோகினி மிதித்த ஒரே மிதியில் மரகதம்மாள் உயிர் போய்விட்டது….

புதையல் கொப்பரை தரைக்கு மேலே வந்து தனித்து நின்றது.

அதில் உள்ள அபரணங்கள் சூரிய ஒளியில் பிரகாசித்தது…..

பென்னம்மா மெதுவாக மாமரத்தை விட்டு வெளியே வந்தாள்…….

மோகினி வானத்திற்கு பறந்து போனதை பார்த்துகொண்டுதான் இருந்தாள்.

மரகதம்மாள் தரையில் இரத்தம் கக்கி இறந்து கிடந்ததை  பக்கத்தில்போய் பார்த்தாள்….

.தூரத்தில் கொப்பரை நிறைய தங்க ஆபரணங்கள்  யாரும்தேடாத நிலையில் இருந்தது.

பொன்னம்மா நினைத்தாள்…

.மரகதம்மாள் இறந்து போனதை ஓடிப்போய் ஊருக்கு சொல்லவா…

.அல்லது முதலில் இந்த  புதையலை எங்காவது ஒழித்து வைக்கவா……

அந்த பேதை எதுவும் செய்யாமல் அல்லது தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்……

நீங்கள் யாராவது பொன்னம்மாவுக்கு உதவி செய்யுங்களேன்…

தூரத்தில் வீரக்கேசவன் வந்து கொண்டிருப்பது பொன்னம்மாவுக்கு தெரிந்தது…..

…(முற்றும்..)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக