சனி, 2 ஆகஸ்ட், 2014

திரை ( சிறுகதை...சாலமன்..)

                       திரை
                         சிறுகதை (1)
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு கிழக்கும் மேற்குமாக பார்த்து கொண்டிருந்தான் சார்லஸ் என்ற சரவணன்..
வள்ளியூரை தாண்டி ஒரு காட்டுக்குள் ஒரு கம்பெனி.
அங்கு தான் போகவேண்டும்…
 மாதம்15000 சம்பளம் என பத்திரிக்கையில் போட்டிருக்கிறார்கள்…
அது ஒரு பைப் கம்பெனி..அதற்கு ஹைபிரசர் வெல்டர் தேவை படுவதாக தகவல் ..அதற்காக பஸ் நிறுத்தத்தில் நிற்கிறான்..
அந்த பஸ் ஸ்டாப்பிற்கு பக்கத்தில் ஒரு தேவாலயம்…
இன்று செவ்வாய்கிழமை..ஆனாலும் அங்கு நிறைய பேர் அதற்குள் போக்கும் வரத்துமாக இருந்தனர்…
அங்கு போய்விட்டு  பஸ் ஏறுவதற்காக வந்த ஒருவரிடம்…. சரவணன் என்ற சார்லஸ் விசாரித்தான் .
என்ன ஸார்  இன்னைக்கி சர்ச்சில எதாவது விஷேசமா….?
அவர் விளக்கினார்…
எங்க பாஸ்டர் வெளிநாட்டுக்கு போகப் பேகிறார்.
திரும்பி வர சில நாட்கள் ஆகும் ..அதனால சர்ச் விசுவாசிகளை குடும்பம் குடும்பமாக ஜெபித்து விட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.
அதான் எல்லோரும் போறாங்க…
சார்லஸ்என்ற சரவணனுக்கு மனதுக்குள் சின்ன ஆசை……….. நாமும் போய் ஜெபம் செய்தாலென்ன…!


அவன் தாய் ஒரு கிறிஸ்தவள் …அப்பா இந்து….ஆகவே தான் சார்லஸ் என்ற சரவணன் ஆனான்….
அவன் அப்பா வைத்தபெயர் சரவணன் …ஆகவே நாமும் இனி அப்படியே அழைப்போம்…
சரவணன் நினைத்தான்…….. போய்தான் பார்ப்போமே……என்னதான் நடந்து விடும்.
பாஸ்டரை பார்த்தவுடன் ஸ்தோத்திரம் …சொல்லவேண்டுமே….சொல்லிப்பார்த்தான்..
தோஸ்ரம்.  .அட…ச்சே…....இப்படி இருக்குமோ…ஸ்தோஸ்ரம்…..ம்கும்;;…..
பக்கத்தில் இருப்பவர் உதவியை நாடலாமா…..?
வேண்டாம்…
எப்படியும் சமாளிக்கலாம்……
மெதுவாக ஆலயத்துக்குள் நுழைந்தான்.
சரவணனின் தயக்கமான பார்வையும் தள்ளாடும் நடையும் அவனை புதியவன் என காட்டிக் கொடுத்தது
நிறைய போர் அங்கும் இங்குமாக போய்க் கொண்டிருந்தனர்.
ஜெபம் நடக்கும்  அறிகுறி எதுவும் இல்லை..
ஒருவேளை இனிமேல்தான் நடக்குமோ…!
அப்படியெனின் இன்டர்வியூக்கு நேரம் ஆகிவிடுமே……என்ன செய்வது.
அதற்குள் ஒருவர் வந்து விட்டார்..
அவர்  அவனிடம்.     PRISE THE LORD பிரதர்…
சரவணனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை .தலையை ஆட்டினான்..

அவர் அவனிடம்… என்னவேண்டும் பிரதர்…….நீங்கள் புதிதா..?….நான் உங்களை இதுவரை பார்த்தது இல்லையே..
ஆமாம் நான் புதிதுதான்.

என்ன விஷயமா வந்தீங்க..
ஜெபம் பண்ணிட்டு போகலாமுன்னு வந்தேன்.

ஒரு இன்டர்வியுவுக்கு போறேன்.
அவர் சுற்றும் பார்த்து யாரையோ அழைத்தார்..அந்த நபரும் பக்கத்தில் வந்தார்..
இவர் அவரிடம்… சரவணனை காட்டி..
இந்த பிரதர் இன்டர் வியூவுக்கு போகணுமாம் ஜெபம்பண்ண வந்திருக்காங்க ..நீங்க ஜெபம் பண்ணி அனுப்புங்க பிரதர்..
சரவணனுக்கு இது பிடிக்கவில்லை..
அவன் வந்தது பெரிய பாஸ்டரிடம் ஜெபம் பண்ண..
இவர்களை பார்த்தால் தன்னை விட கொஞ்சம் வயதில் மூத்தவர்கள்.
அப்படியானால் பெரிய பாஸ்டர் எங்கே……?  சுற்றிலும் கண்களை சூழலவிட்டான்.
அதற்குள் அவர்கள் ஜெபிப்பதற்கு தயாரானார்கள்..
ஓகே……உங்க பெயர் என்ன பிரதர்..
சரவணன்
ஓ…அப்போ நீங்க கண்வெர்டர்டு கிறிஸ்டியனா..?
சரவணன் முழித்தான்
நீங்க இரட்சிக்கபட்டிருக்கீங்களா பிரதர்…?
எந்த சபைக்கு போறீங்க..?
புரியல…?
அதாவது மீட்க பட்டிருக்கீங்களா..?
சரவணனுக்கு இந்த மொழி புதிதாய் இருந்தது…...இரட்சிப்பு….. இதுவரையும் கேள்விபடாத ஒரு வார்த்தை.
அடுத்ததாக மீட்கபட்டீர்களா..? தீயணைப்பு படையினரை பற்றி செய்திதாளில் படிக்கும்போது இந்த… மீட்கபட்டனர்….என்ற வார்த்தையை படித்திருக்கிறான்..

தன்னையாரும் எதிலிருந்தும் மீட்க வில்லையே …..குழம்பினான் சரவணன்..
அவர்களும் குழப்பினார்கள்.
.சரி எப்படியோ ஜெபம் செய்து அனுப்புவோம் ..என்ற முடிவுக்கு வந்தனர்…
சரவணன் இடை மறித்தான்……..நான் பெரிய பாஸ்டரை பார்க்கணும்..
சரவணனுக்கு இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தது.
அவர்களும் சளைத்தவர்கள் இல்லை…
……நீங்க…...வேற எதாவது ……பாஸ்டர்ட சொல்லணுமா..?
இல்லைங்க  ஜெபம் பண்ணணும்..
அதான் நாங்க பண்றோமே  பிரதர்.
இல்லியே …..எல்லாருக்கும் பெரிய பாஸ்டர் ஜெபம்பண்ணி விடுவதாகல்லா சொன்னாங்க…
யாரு சொன்னாங்க…?… தொனி  கொஞ்சம் கடுமையாக இருந்தது
சரவணன் விடுவதாக இல்லை..
இங்க உள்ளவங்கதான் சொன்னாங்க
ஓ அதுவா  ..
அவங்க இந்த சர்ச் விசுவாசிங்க . அதான் அவங்க பாஸ்டரை பார்த்து ஜெபம் பண்ணிட்டு போறாங்க..
அப்போ மத்தவங்களுக்கு  பெரிய பாஸ்டர் ஜெபம் பண்ணமாட்டாரா..?
இந்த கேள்வி கொஞ்சம் சிக்கலானது….

அப்படி இல்ல பிரதர்.  இன்னைக்கி முடியாது . ….அவ்வளவுதான்…
.ஒன்னு பண்ணுங்க…. ..நீங்க திருநெல்வேலியில எந்த பகுதி …?
43வது வார்டு
ஐயோ அது இல்லீங்க……மத்திய பகுதியா.?. கிழக்கு பகுதியா?….தெற்கு பகுதியா..?வடக்கு பகுதியா..?
தெரியலை
அவர்கள் இருவரும் வேரு ஒருவரை பெயர் சொல்லி அழைத்தனர்.
பால் பிரதர் இங்க கொஞ்சம் வாங்க..
பால் பிரதர் வந்தார்
இவங்க பாஸ்டரை பார்த்து ஜெபம்பண்ணணும்ணு சொல்றாங்க .
.பட்  நம்ம சபை இல்ல..
எந்த சபை..?
ஒரு சபையும் இல்ல…..இப்பத்தான் கண்வெர்ட் ஆயிருக்காரு.
யாரு மூலமா ஆனாரு.?
ஞானஸ்நானம் எடுத்தாச்சா பிரதர்.?
பால் பிரதர் பயங்கர வேகமா இருந்தார்..
யாரு மூலமா இரட்சிக்கபட்டீங்க….?
மீண்டும் அதே வார்த்தை….
.சரவணன் கேட்டான்……அது என்னதுங்க இரட்சிப்பு..?
பதில் வந்தது…………
.அதாவது …இரட்சிப்புன்னா .மீட்புன்னு அர்த்தம்….
.மீண்டும் அதே வார்த்தை.. ……. எனக்கு புரியலைங்க….?

ஓ… அப்போ நீங்க இரட்சிக்கபடவே இல்லையா,,ஃ?
குழப்பத்தில் இருந்தான் சரவணன்..
பால்பிரதர் சரவணனிடம் நீங்க கவலையே படவேண்டாம் ..உங்களுக்கு இரட்சிப்புன்னா என்ன மீட்புன்னா என்னன்னு சொல்லித்தரோம்
உங்களுக்கு எந்த ஊர்.?
சரவணன் சொன்னான்.
ஓ..அது நெல்லை மத்திய பகுதி..அதுக்கு  கண்காணியாக உங்க ஊர்க்காரர் ஜோசப்தான் இருக்கார்……………….ஜோசப் உங்களுக்கு தெரியுமா…?
தெரியாது…?
அவர தெரியாதா..?..............ஆச்சரியமா கேட்டார் பால் பிரதர்..

ஜோசப் என்னவேலை பார்க்கிறார்…… இது சரவணன்
அவர் கொத்தனாரா இருந்தார்… இப்போ கர்த்தர் அவர பில்டிங் கான்ராக்டராக  மாற்றி இருக்கார்..
ஓ………….
அவர நீங்க பார்க்கணும் ..
சரவணனுக்கு ஆத்திரமாக வந்தது….
என்னங்க ..நீங்க என்னமோ சொல்றீங்க .நான் பாஸ்டரை பார்த்து ஜெபம் பண்ணணும் அவ்வளவுதான்..
பால் பிரதர் உஷார் ஆனார்..
இது என்ன வம்பா போச்சி……………பாஸ்டரை அவ்வளவு சீக்கிரமா பார்க்கமுடியுமா.?.
இன்னைக்கி பாஸ்டர் ஏகத்துக்கும் பிஸி….
இப்போ பாஸ்டரை பார்க்க முடியாது என்று சொல்லவும் முடியாது.
ஆனா இவர பாஸ்டர்கிட்ட கூட்டிகிட்டு போகவும் முடியாது….
.என்ன பண்ண …என்று விழி பிதுங்கி நின்றார் பால்பிரதர்.

பால்பிரதர் யோசித்து கொண்டிருக்கும் போது இரண்டு நபர்கள் இவர்களை கடந்து சென்றனர்.
மிகவும் நேர்த்தியான உடை .இருவர் கைகளிலும் ஐ போன் இருந்தது.
பார்த்தாலே தெரிந்தது.வசதியானவர்கள் என்று.
அவர்கள் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை…ஆனால் பலரும் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
வந்தவர்களில் ஒருவர்..பாஸ்டர் இருக்காங்களா..,?
ஆமா ஸார்….
ஒருவர் மேடை அருகே ஓடினார்…
அங்கே பல அறைகள் இருந்தது .அதில் ஒரு கதவு திறக்கபட்டது.
உள்ளே இருந்து பளிச்சென்ற வெள்ளை உடை அணிந்த ஒருவர் வெளியே வந்தார்.
சரவணன் அவரை பார்த்தான்…
இவர்தான் பெரிய பாஸ்டராக இருக்கணும்..
 பக்கத்தில் நின்று கொண்டிருந்த பால்பிரதரை பார்த்தான்.
பால்பிரதர் சப்த நாடியும் ஒடுங்கிபோய் நின்று கொண்டிருந்தார்.
எல்லோருமே அமைதியாகி விட்டனர்
பாஸ்டரை கண்டவுடன்   அந்த இருவரும்  மிகவும் சத்தமாக ……… ஹலோ பாஸ்டர் …..என்று சொல்லி கொண்டு பாஸ்டரை தழுவிக்கொண்டனர்.
சரவணனுக்கு இது வித்தியாசமாக இருந்தது..
பொதுவா கிறிஸ்தவங்க  ஒருவருக்கொருவர் பார்க்கும் போது…  ஸ்தோத்திரம்… சொல்லுவாங்க…..இல்லன்னா ஆங்கிலத்தில் PRISE THE LORD..ண்ணு சொல்லுவாங்க
ஆனா இங்கே எதுவம் இல்லாம…. ஹலோ… சொல்றாங்க..
பாஸ்டர் அவர்களை அழைத்து கொண்டு உள் அறைக்கு சென்றுவிட்டார்.
பால்பிரதர் நார்மல் ஆகிவிட்டார்.
பால்பிரதர் தொடர்ந்தார்……
.பார்தீங்கள்ல  ………. பெரிய பெரிய ஆளுங்க வாராங்க.
அதனால இன்னைக்கு பாஸ்டர நீங்க பார்க்க முடியாது…
இன்னொருநாள் வாங்க……அதாவது உங்க ஊர் ஜோசப் மூலமா வந்தீங்கன்னா பாஸ்டர நேரடியா பார்க்கலாம்..
எல்லாத்துக்கும் ஒரு ஒழுங்கு இருக்குல்லா பிரதர்
சரவணன் பால் பிரதரை பார்த்தான்….
ஒரு ஜெபம் பண்றதுல இவ்வளவு சிக்கல் இருக்கா..?
ஜெபம் பண்றதுல எந்த சிக்கலும் இல்ல பிரதர்..நீங்க பாஸ்டரை இப்போ பார்க்கணும்ங்றீங்களே…. அதான் சிக்கல்.
முன்னக்கூட்டியே அதற்கான அனுமதி வாங்கி இருக்கணும்…சரி பிரதர்….நான் ஜெபம்பண்ணி விடட்டுமா…..
சரவணன் பால் பிரதரை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்

ம்…….நீங்க இரட்சிக்கபட்டிருக்கீங்களா..?
பால்பிரதர் தினறிவிட்டார்……ஆமா …ஏன் பிரதர்..?
உங்க பாஸ்டர் இரட்சிக்கபட்டிருக்காரா..?
இந்த கேள்வி பால் பிரதரை கோபத்துக்குள் ஆக்கியது..
மிஸ்டர்….. நீங்க என்ன கேட்கிறீங்க யாரை பார்த்து கேட்கிறீங்க கொஞ்சம் யோசிச்சி பேசுங்க..
சரவணன் தொடர்ந்தான்…….ஐய….இதுக்கு போய் இப்படி கோப படுறீங்க…நீங்க என்னைய கேட்டீங்க நான் உங்கள கேட்டேன் இதிலென்ன தப்பு..

தப்புதான்….ஒரு பாஸ்டர பார்த்து இப்படி கேட்டிருக்ககூடாது…
ஓ..அப்போ அது அவ்வளவு மோசமான வார்த்தையா..?
பால்பிரதர் சமதானமானார்……..உங்களுக்கு இரட்சிப்புன்னா என்னன்னு பரியவைக்கணும்…வாங்க நாம அப்ப உட்கார்ந்து பேசலாம்..
சரவணன் மணியை பார்த்தான்……நேரமாகிவிட்டது.
பால்பிரதரை பார்த்து………………இல்ல எனக்கு நேரமாகி விட்டது நான் கிளம்புகிறேன் .என்று சொல்லிவிட்டு வாசலை பார்த்து வந்து கொண்டிருந்தான்.

தான் அங்கு வந்திருக்ககூடாதோ என்று நினைத்தான்..
வெளியே இவர்களின் முகம் ஒரு மாதிரியும் உள்ளே வேறு மாதிரியாகவும் உள்ளதே…...என நினைத்து கொண்டே நடந்து வந்தவன் காலில் ஒரு கல் இடறியது..
இரண்டு கால்களும் வாரப்பட்டு மொத்தமாக புழுதியில்…. முகம் நிலத்தில் மோதுமாறு விழுந்தான்.
விழும்போது அவனை அறியாமல்.. இயேசுப்பா..என்று அலறினான்..
கீழே விழுந்தவன் முகத்தை தூக்கி பார்த்தால் ..அது ஒரு மரத்தடி..
நிழலுக்காக மரம் நடபட்டு ...அந்த மரம் வளர்ந்து சின்னதாக நின்று கொண்டிருந்தது.
அந்த மரத்துக்கு அடியில் ஒரு பிச்சைக்கார கோலத்தில் ஒரு முதியவர் கால்மடக்கி உட்கார்ந்து கொண்;டிருந்தார்..
சரவணன் விழுந்தது அவரின் முன்பாக…..
முதியவர் சரவணனை பார்த்து……
.இயேசப்பா என்னவேணுமுண்ணு கேட்கிறார் சொல்லு..
நக்கல்…….(சரவணன் மனக்குள்..).
நீதானப்பா இயேசப்பாண்ணு கூப்பிட்டே…..
சரவணன் எழுந்து நின்றான் ..
முதியவர் அவனிடம் ஒரு துண்டு பிரதியை நீட்டினார்..
அதில் ……நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ ..குமாரனில் பிதா மகிமை படும்படியாக அதைச்செய்வேன்..( யோவா..14:13..)
அந்த துண்டு பிரதியில் உள்ள பொருள் சரவணனுக்கு சரியாக புரியவில்லை…ஆனாலும் அதை மடக்கி தனது பைக்குள் வைத்து கொண்டான்…….










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக