சனி, 30 ஆகஸ்ட், 2014
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
புதன், 27 ஆகஸ்ட், 2014
எடை மேடை
எடைமேடை..(1)
ஒவ்வொரு சபையும்
அதற்கென்று சில கொள்கைகளும் கோட்பாடுகளும் வைத்து கொண்டுதான் செயல்படுகின்றன…
அதன் கொள்கைகள்
காலப்போக்கில் சில மாறுதல்களை சந்திக்கிறது..
மாற்றங்கள் நடந்துகொண்டுதான்
இருக்கிறது…
ஒரு சபையின் கொள்கை
என்பது பல மனிதர்களின் வாழ்கை முறையை மாற்றகூடியது…
ஒரு மனிதனுடைய
வாழ்க்கை முறை சமுதாயத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது.
அது நல்லவிதமாகவும்
இருக்கலாம் கெட்ட விதமாகவும் இருக்கலாம்.
சபைக்குள் என்னதான்
சொல்லபடுகிறதுஅல்லது நடக்கிறது….?
போதனைகள் சொல்லபடுகிறது.
அந்த போதனை தனி மனிதனுடைய சிந்தனையாக இருந்தாலும் அவன் போதிக்கிற விஷயம் அந்த சபையின் கொள்கைகளை சார்ந்துதான் இருக்கவேண்டும்.
அதை மீறி போதனை
செய்தால் அந்த இடத்தில் இருந்து அந்த மனிதன் வெளியேற்றபடுவான்.
.இதுதான் நடைமுறையில்
உள்ள வழக்கம்.
அதே மனிதன் வெளியே
போய் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு .அவர்களுக்கு தன் கொள்ளைகளை கோட்பாட்டை
போதிக்கலாம்…அவர்களும் அந்த போதனையை ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் அந்த கொள்கைகளை
பிரதிபலிக்கலாம்…
.மற்றவர்களை பாதிக்காத
எந்த கொள்கையும் நாட்டில் இருப்பது தவறில்லை…
தமிழ்நாட்டில்
கத்தோலிக்கர்களும்..புராட்டஸ்டேன்ட் காரர்களும் தங்கள் தங்கள் கொள்கையின்படி வளர்ந்து
வந்த காலகட்டத்தில் புதிய கொள்கையுடனும் புதிய சிந்தனையுடனும் புதிதாக ஒரு இயக்கம்
தமிழகத்தில் துவங்க பட்டது.
அதற்கு பெந்தேகோஸ்தே இயக்கம் என்று பெயர் வைக்கபட்டது….
அது அன்று மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு மிகபெரியது.
இன்று வரை இது
செயல்படுகிறது.ஆனால் பல உருமாற்றங்களுடன்….
…
நான் பல முறை இதைபற்றி யோசித்தது உண்டு…ஆரம்ப காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் வளர்ந்தது மிக மிக ஆச்சரியமான காரியமே..
நான் பல முறை இதைபற்றி யோசித்தது உண்டு…ஆரம்ப காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் வளர்ந்தது மிக மிக ஆச்சரியமான காரியமே..
(1)சிறந்த ஆலயம் அவர்களுக்கு இல்லை(…கட்டுமானம்..)
ஏதோ ஒரு வாடகை
வீட்டில் கூடி ஆராதிப்பார்கள்…..
மிக படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் அப்போது விசுவாசிகளாக அவர்களிடம்
இல்லை..
எளிய மக்கள்தான்
விசுவாசிகள்…
(2) கடுமையான உபதேசங்கள்.
.நகை போடக்கூடாது…
மருந்து எடுக்க
கூடாது…..
ஆராதனைக்கு வெள்ளை
ஆடைதான் உடுத்தவேண்டும்……
திருமணமான பெண்கள்
தாலி அணியக்கூடாது.
அந்த காலத்தில்
இது எப்படி இருந்திருக்கும்.நினைத்து பாருங்கள்..
.மற்றவர்கள் இவர்களை
ஏளனம் செய்தனர்..
வெறுப்பாய் பார்த்தனர்.
பெந்தேகோஸ்தே விசுவாசியானதால்..அவர்கள் குடும்பத்தினரே இவர்களை ஒதுக்கி வைத்தார்கள்..
(3)அல்லேலூயா சத்தமாக
கூறவேண்டும்…
அந்நியபாஷை பேசவேண்டும்….
இப்படி எல்லாமே
புதிதாகவே இருந்தது..
இந்த கொள்கைகளை
மக்கள் ஆவலாக ஏற்றுக்கொண்டு அலை அலையாய் சபையில் சேர்ந்தார்கள் என்று கூறமுடியாது….ஊருக்கு
ஒருவர் இரட்சிக்கபட்டார்….
(4)கத்தோலிக்கர்களும்
புராட்டஸ்டான்ட் காரர்களும் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்து வந்த போது பெந்தேகோஸ்தேகாரர்கள்
. மூழ்கிதான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்ற புதிய உபதேசத்தை கொண்டுவந்தார்கள்……
அதுவும் ஊர் அறிய உலகறிய ஆற்றில் அல்லது வாய்க்காலில் வைத்து ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.
இப்படி கடுமையான
உபதேசத்தில் விசுவாசிகள் மிக குறைவாக சபையில் சேர்ந்தார்கள்.
ஒரு சபையில் நூறுபேர்
இருந்தால் அது மிக மிக பெரிய சபையாக கருதபட்டது.
அப்போதய பாஸ்டர்களுக்கும்
ஏழ்மைக்கும் (..பசிக்கும் …)நெருங்கிய தொடர்பு இருந்தது.
ஒரு வேஷ்டி சட்டையுடன் ஊழியத்தில் நிலைத்தவர்களும் உண்டு…
என்னதான் பொதுமக்கள்
பெந்தேகோஸ்தே காரர்களை கிண்டல் செய்தாலும் அடி மனதில் ஒரு சின்ன பயம் இருந்து கொண்டுதான்
இருந்தது…
காரணம் இவர்களின்
ஜெபமும் தியாகமுமே..
அந்த காலத்தில் பெந்தேகோஸ்தே சபையை …விசுவாசிகள் FAITH HOME என்றுதான் அழைத்தார்கள்…
ஏனேனில் உண்மையாகவே
அது விசுவாச வீடுதான்..
காலையில் சாப்பாடு
இருக்கும் மதியம் யாராவது அரிசி கொண்டு கொடுத்தால்தான் சமைக்கபடும்.
இல்லையெனின் பட்டினிதான்..
பாஸ்டர் பால் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்…
.
அவர் பசி தாங்காமல் ஈரமான துண்டை வயிற்றில் சுற்றிகொண்டு ஜெபித்து கொண்டே இருப்பாராம்….அதிசயமாய் எப்படியாவது இரவுக்குள் சாப்பாடு கிடைக்குமாம்.
அவர் பசி தாங்காமல் ஈரமான துண்டை வயிற்றில் சுற்றிகொண்டு ஜெபித்து கொண்டே இருப்பாராம்….அதிசயமாய் எப்படியாவது இரவுக்குள் சாப்பாடு கிடைக்குமாம்.
ஆகவே FAITH
HOME ல் விசுவாசத்துக்கு பஞ்சமே இருந்ததில்லை..
அப்போது தான் விசுவாசிகள்……
பிடி அரிசி….என்ற ஒன்றை நடைமுறை படுத்தினார்கள்.
அதாவது சோறு பொங்கும்
போது…முதலில் தண்ணீரை சூடுபடுத்துவார்கள்..ஓரளவு தண்ணீர் சூடானபின் அதில் அரிசியை போடுவார்கள்.
அப்படி அரிசியை
போடும் முன் அந்த அரிசியில் ஒரு கைநிறைய அள்ளி அதை தனியே ஒரு பையில் போட்டு வைத்து
..கொஞ்சம் சேர்ந்த பின் அதை கொண்டுபோய் FAITH HOMEல் கொடுப்பார்கள்.
அனேகமாக ஞாயிற்று
கிழமை ஆராதனையில் இந்தபைகள் பிரசங்க மேஜைமுன் வரிசையாக இருக்கும்..
இப்படி பல வீடுகளிலும்
உள்ள அரிசி FAITH HOME ல் பசியை போக்க உதவிசெய்தது.
என்னதான் பசியுடன் இருந்தாலும் .
பொதுமக்கள்கேலியும்
கிண்டலும்செய்தாலும் அவர்கள் விசுவாசத்தை கொஞ்சமும் குறைத்து கொள்ளவில்லை..
சபையில் அற்புதங்கள்
சாதாரணமாக நடைபெற்றது.
சுகவீனமானவர்கள்
FAITH HOMEல் கொண்டு போய் விடபட்டார்கள்.
மருந்து எடுக்காமல்
நோயாளிகள் சுகமடைந்தார்கள்.
அற்புதங்களும்
அடையாளங்களும் அதிகமாக நடை பெற்றதால் சபை சீராக
வளர ஆரம்பித்தது….உபதேசத்தில் எந்த விட்டு கொடுத்தலும்(compromise.)நடக்கவில்லை..
.
உபதேசத்தில் உறுதியாய் இருந்த பெந்தேகோஸ்தே சபையின் வளர்ச்சி மிக மெதுவாய் இருந்தாலும் சரியான முறையில் வளர்ந்தது.
விசுவாசிகள் குடும்பம்
குடும்பமாக சேர்ந்தனர்.
(1)இரட்சிப்பு…
(2)ஞானஸ்நானம்..
(3) அந்நிய பாஷை
பேசுதல் அல்லது பரிசுத்த ஆவியின் அபிஷேகம்..
(4)வேறுபட்ட வாழ்க்கை……..இதில்
நகை கழட்டுதல் அடங்கும்…
இப்படி சில உபதேசங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களை வேறுபடுத்தி காட்டியது.
இப்படி சில உபதேசங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களை வேறுபடுத்தி காட்டியது.
இவர்களின் மேற்கண்ட உபதேசத்தை கத்தோலிக்கர்கள் ஏற்றுகொள்ளவே இல்லை..
இப்போதுதான் மெல்ல
அந்நிய பாஷை பேசவேண்டும் என்று நம்புகிறார்கள்..
அதுவும் சாலைக்குடி
போகவேண்டும்.
அங்கேதான் அதற்கான
விஷேச ஆராதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள்….
கத்தோலிக்க சபையில் இப்போது விஷேச கூட்டங்கள் நடைபெறுகிறது..
அதற்கென நற்செய்தி
குழுக்கள் ஆரம்பிக்கபட்டுள்ளன..அந்த குழுவில் அவர்கள் போதகர் (சாமியார்..)இருப்பதாக
தெரியவில்லை…..
வேறு சகோதரர்கள்
நடத்துகிறார்கள்…
எனது ஊரில் வருடத்துக்கு
சில முறை இந்த கூட்டங்கள் நடக்கிறது.
(எனது குடும்பமும்
முதலில் கத்தோலிக்க சபையில் அங்கத்தினராக இருந்தது…)
சரி போகட்டும்…
ஆனால் CSI மக்கள் இந்த உபதேசத்தை ஆழமாக கவனித்தார்கள்…..
அல்லேலூயா….. சத்தம் போட்டு போடுவதும். அன்னியபாஷை பேசுவதும் அவர்களுக்கு முதலில் பிடிக்காததால் பெந்தேகோஸ்தே சபை கூடுகைக்கு CSI மக்கள் வருவது இல்லை….
ஆனால் காலப் போக்கில்
ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் என்ன என்று நினைக்கஆரம்பித்தார்கள்.
மெதுவாக யாருக்கும்
தெரியாமல் அல்லது வெளியூருக்கு போய் ஞானஸ்நானம் எடுத்து விட்டு நிம்மதியாய் இருந்தார்கள்.
பாளையங்கோட்டையில் லங்கர்கானாத் தெருவில் இருக்கும் பெந்தேகோஸ்தே சபையில் அப்போது பாஸ்டராக இருந்த SPடேனியேல் அவர்களிடம் இரவு 10 மணிக்கு மேல் பலர் வந்து பக்கத்தில் இருக்கும் வாய்க்காலில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்த பலபேரை நான் அறிவேன்…
நகை அனிந்து இருந்தால் ஞானஸ்நானம் கொடுக்க மாட்டார்கள்..
ஆகவே ஞானஸ்நானம்
எடுக்கும் மக்கள் கரையில் நகையை கழட்டி வைத்துவிட்டு… ஞானஸ்நானம் எடுத்தபின் நகை அனிந்து
செல்வதையும் பார்த்து இருக்கிறேன்.
அப்போது CSI சபையில் முழ்கி ஞானஸ்நானம் கொடுப்பது இல்லை.
இப்போது CSI சபையில் புதிதாய் சபைக்கு வருபவர்களுக்கு மூழ்கி ஞானஸ்நானம் கொடுப்பதாக
தெரிகிறது..பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் இதற்கான தொட்டியை பார்த்தேன் ..ஆனால்
ஞானஸ்நானம் கொடுப்பதை நான் நேரில் பார்த்ததில்லை .
தெரிந்தவர்கள்
இதைபற்றி கூறுங்கள்….மூழ்கி ஞானஸ்நானம் கொடுப்பதில்லை எனின் அதையும் சொல்லுங்கள் …நான் வாபஸ் வாங்கி கொள்கிறேன்…
இப்படி மறைமுகமாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த பெந்தேகோஸ்தே பாஸ்டருடன் இணக்கமாக இருந்தனர்.
அதாவது இவர்கள்
மறைமுக விசுவாசிகள்…
.முடிந்த அழவு
காணிக்கை கொடுப்பார்கள்…கண்வென்சன் நாட்களில் அதிகம் உதவி செய்வாகள்…
ஆனால் சபை ஆராதனைக்கு வரமாட்டார்கள்…..
கண்வென்ஷன் நாட்களில்
பின்னால் அமர்ந்து பிரசங்கம் கேட்பார்கள்….
ஆகவே கட்டாயம்
கண்வென்சனுக்கு வருவார்கள்…..
கன்வென்ஷன் நாட்களில் ….
முதல் நாள் இரட்சிப்பு
பற்றி பிரசிங்கிக்கபடும் ..
இரண்டாம்நாள் ஞானஸ்நானம்,
அபிஷேகம்..
மூன்றாம் நாள்
இரண்டாம் வருகை .இவைகள் வரிசையாய் கட்டாயம் பேசப்படும்…
மதியம் மூன்று
மணிக்கு காத்திருப்பு கூட்டம் நடைபெறும்..
ஞானஸ்நானம் பெற்ற
மக்கள் காத்திருப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அபிஷேகம்பெற்றார்கள்.
இதில் ஒரு சில CSI மக்களும் அபிஷேகம் பெற்றார்கள். நான் CSI மக்களை சொல்லக்காரணம்.அன்றும் சரி இன்றும் சரி
பெந்தேகோஸ்தே சபை
வளர்ச்சியில் அல்லது மாற்றத்தில் CSI மக்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது..
இப்போது இரட்சிப்பு..அன்னிய பாஷை பேசுதல், முழ்கி ஞானஸ்நானம் எடுத்தல் மூன்றும் CSI விசுவாசிகளும் ஏற்றுகொண்ட ஒன்றாகிவிட்டது...
இல்லை என்று மறுப்பவர்கள்
மறுக்கலாம்.
ஆனால் நகை கழட்டுவது தாலிபோடாமல் இருப்பது ….இதை பெந்தேகோஸ்தே விசுவாசிகள் மட்டும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்…..
அன்றய பெந்தேகோஸ்தே
விசுவாசிகள் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் நகை அணியாமல் வாழ்ந்தனர்.
பிள்ளைகள் வளரும்போது
அல்லது திருமணத்திற்கு பின் சிலர் இந்த கொள்கையில் இருந்து பின் வாங்கி தாங்களும் தங்கள்
பிள்ளைகளும் நகை அனிவதற்காக வேறு சபையில் தங்களை இனைத்து கொண்டனர்.
அது எந்த சபை என்று
நான் சொல்ல போவது இல்லை …
அன்றய பெந்தேகோஸ்தே சபையில் பாடல்கள் ஒரு பெறும் பிரச்சனையாக இருந்தது.
இவர்கள் கத்தேலிக்கர் பாடல்களை பாடவில்லை..
CSI சபையின் பாடல்களையும் பாடவில்ல.
அப்படியெனின் இவர்கள்
பாடலுக்கு என்ன செய்தார்கள்…
தொடர்ந்து பார்க்கலாம்
எல்லா திருச்சபைகளும்
முதல் முதலில் தமிழில் பாடல் இல்லாமல் சங்கடபடத்தான் செய்தன..
.கத்தோலிக்கர்களுக்கு
முதலில் அவர்கள் ஆராதனை லத்தீன் மொழியில் நடைபெற்றதால் மக்களுக்கு அது எதுவும் புரியவில்லை……
மக்களும் தங்களுக்கு
புரியாத விஷயத்தை குறித்து அலட்டி கொள்ளவில்லை..
பின்பு பல வருடங்களுக்கு பின்புதான் தமிழில் ஆரதனையும் பாடல்களும் வந்தது.
அதில் கூட புரியாத
மொழியில் ஒரு வார்த்தை ஒரு பாடலில் உண்டு.
..
எல்லா வரமும் நிரம்பி ததும்பும் இனிய….. ஸ்பிரித்து சாந்துவே..
எல்லா வரமும் நிரம்பி ததும்பும் இனிய….. ஸ்பிரித்து சாந்துவே..
அடியோர் மனதில்
எழுந்து வருவீர்……………
இந்த பாடலில் வரும்
….ஸ்பிரித்து சாந்துவே….இது எந்த மொழி என்று எனக்கு தெரியவில்லை .யாராவது சொன்னால்
புரிந்து கொள்கிறேன்.
அடுத்து ..CSI
சபை.
இவர்களுக்கும் முதலில் தமிழில் பாடல்கள் இல்லை.
ஆங்கில பாடல்களும்
…ஆங்கில பாடல்களை தமிழில் மொழி மாற்றம் செய்தும் பாடினார்கள்.
அங்கேயும் சில
சிக்கல்கள் இருந்தது.
ஆங்கில பாடல்களை
தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது அப்படியே அதன் கருத்தை தமிழில் கூற மிகுந்த சிரம
பட்டிருக்கிறர்கள்…
பல இடங்களில் குறில் நெடிலாக பல பாடல்களில் வருகிறது.
பல பாடல்கள் ஒத்த
கருத்து உடையதாய் மொழி மாற்றம் செய்து இருந்தாலும்… தமிழில் பல இடங்களில் கருத்து சேராமல்
மாறி வருகிறது.உதாரணமாக silent night பாடலின் தமிழாக்கம்..
..
பின்பு அழகான இலக்கிய தமிழ் போல் அனேக சமஸ்கிரத வார்த்தைகள் கலந்து அக்கால கவிஞர்கள் பல அருமையான பாடல்களை கொடுத்தார்கள்..
பின்பு அழகான இலக்கிய தமிழ் போல் அனேக சமஸ்கிரத வார்த்தைகள் கலந்து அக்கால கவிஞர்கள் பல அருமையான பாடல்களை கொடுத்தார்கள்..
...
சருவலோகாதிபா நமஸ்காரம்..
சருவலோகாதிபா நமஸ்காரம்..
சர்வ சிருஷ்டிகனே
நமஸ்காரம்…..
சமஸ்கிரத மொழியை
நம்மைபோல் இவ்வளவு அழகாக கையாள எவராலும் முடியாது.
எப்படியோ நல்ல
பாடல்கள் கிடைத்தன
புதிதாக முளைத்த பெந்தேகோஸ்தே சபைக்கு உடனடியாக பாடல்கள் தேவைபட்டது.
அப்போது தமிழகத்தை
போலவே கேரள நாட்டிலும் பெந்தேகோஸ்தே சபை வேரூன்றிய நேரம்..
ஆகவே மலையாள பாடல்கள்
பலவற்றை தமிழாக்கம் செய்தனர்.
அத்தனை பாடல்களும்
இன்றுவரை மலையாள மொழிக்கு உரிய அடையாளத்தோடு தான் இருக்கிறது
...
ஸ்தோத்திரம் இயேசு நாதா.
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
இயேசுவைப்போல்
அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
ஆ..சுந்தர வீடே
மாட்சிமிகும் மோட்ச
நகர் மகிமை என் சொல்வேன்
இப்படி பல பல பாடல்கள்…….
இதில் ஒரு வேடிக்கையான
விஷயம்…
.பாடல்கள் அதிகம்
தேவைபட்டதால்
அக்கால சினிமா
பாடல்களை அதன் இராகத்திலும் பல பாடல்கள் எழுதி சந்தோசமாக பாடி இருக்கிறார்கள்.
.
உதாரனமாக
உதாரனமாக
பொங்குதே ஆனந்தம்
(தெலுங்கு சினிமா பாடல்..)
ஒடி வாரேயா நன்பா..(
ஹிந்தி சினிமா பாடல்…)
காலமோ கடைசி ஆச்சுதே..(MGR
தமிழ் படத்திலுள்ள பாடல்..)
நான் வாழும் மா
எருசலேம் இன்பமே…..(சிவாஜி தமிழ் படத்திலுள்ள பாடல்..)
இவைகள் குறுகிய
காலத்தில் மக்களால் பாடி பின் கைவிட்டபாடல்…
இப்படி சினிமாத்தனமான
பாடல் வந்த ஒரு சம்பவத்தை நான் சொல்கிறேன்……
..
பாஸ்டர் PVஆசாரி என்பவர் கேரளத்துக்காரர் ….
பாஸ்டர் PVஆசாரி என்பவர் கேரளத்துக்காரர் ….
அவர் கம்னியூஸ்ட்
கட்சியிலிருந்து இரட்சிக்கபட்டு ஆண்டவருக்காக ஊழியம்செய்த நல்ல ஊழியக்காரர்….
அவரின் சாட்சி
அனேகரை ஆண்டவருக்குள் வழி நடத்தியது.
அவர் பாளையங்கோட்டையில்
கன்வென்ஷனுக்காக வந்திருந்தார்..
ஒரு நாள் காலையில்
பாளையங்கோட்டை மார்க்கட் வரை நடந்து சென்றிருக்கிறார்.
அந்த காலத்தில்
சிலோன் ரேடியோ மிகவும் பிரபலம்.
இவர் ஒரு கடையில்
டீ குடித்துக் கொண்டிருந்த போது சிலோன் ரேடியோவில்
இனிமையான பாடல் ஒன்று ஒலிபரப்ப பட்டிருக்கிறது
..அதன் இராகம்
இவரை சொக்க வைத்து விட்டது.
எப்படியோ இராகத்தை
மனப்பாடம் பண்ணி அன்று சாயங்காலமே கண்வென்ஷனில் அதை மலையாள மொழியில் பாடிக்காட்டனார்…..(தமிழில்அச்சிடபட்ட..)இதோ
அந்த பாடல்
காலும் கரமும்
ஆணிகள் ஏல்கன்
பரனின் தலையில்
முள்முடி சூடன்
மந்தம் மந்தம்
கால்வரி மேட்டில்
போகுந்நவனே என்
பிராண நாதா….
.இந்தபாடலில்.. நான் சொல்வதில் மொழியில் தவறு இருக்கலாம்… ஒரு முறைதானே கேட்டேன்… வருடம் கடந்து விட்டதல்லவா….மன்னிக்கலாமே..
இது தமிழில் எந்த
சினிமா பாடல் தெரியுமா…….
பாலும் பழமும்
கைகளில் ஏந்தி ..பவள வாயில் புன்னகை சிந்தி..
அன்றய விசுவாசிகள் எல்லோரும் சூப்பராக பாடினார்கள்.(…நான் அப்போது சிறுவன்..)
இப்படி அனேக பாடல்கள்
வந்து கொண்டிருக்கும் போது நடராஜ மதலியார் என்ற ஆப்பிரிக்க தமிழர்..ஒருவர் …
.இவர் அங்கே இரட்சிக்கபட்டு
இந்தியாவிற்கு வந்தார்.
அவருக்கு தமிழ்
படிக்க தெரியாது.தமிழ் சுமாராக பேசுவார்.
ஆனால் அவர் ஆற்றிய
பாடல் ஊழியம் மகத்தானது
தமிழ் கிறிஸ்தவ உலகில் நடராஜ முதலியார் என்ற ஒரு பெந்தேகோஸ்தே விசுவாசி இசைதட்டில் பாடிய பாடல்தான் முதன் முதலில் வெளிவந்தது.
அது
எந்த காலத்திலும்
எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன்..இன்றுவரை பாடப்படுகிறது….கேட்கபடுகிறது…..
.
சகோ.நடராஜமுதலியார்
அவர்கள் எந்த தமிழ்பாடலையும் இயற்றியவர் அல்ல.
ஆனேக பாடல்கள்
இலங்கை பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்த பாஸ்டர் பாபி என்பவர் எழுதிய பாடலைத்தான் பாடியதாக
சொல்கிறார்கள்…
பாஸ்டர் பாபி கேரள
மாநிலத்தை சேர்ந்தவர்..
ஆகவேதான் அந்த
பாடல்களில் வார்த்தை வாக்கிய அமைப்பு கொஞ்சம் மாறி இருப்பதை பார்க்கலாம்.
உதாரணமாக…
அன்பில் என்னை
பரிசுத்தனாக்க
உம்மை கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர்
முதற் பேரானீரோ
தந்தை நோக்கம்
அனாதியன்றோ
எம்இயேசுவே நேசித்தீரோ
எம் மாத்திரம்
மண்ணான நான்………………………….
இந்த பாடலில் முதல்
வரியை தவிர மற்றவை எல்லாம் …வார்த்தைகள் இடம்
மாறி இருக்கும்……ஆனால் அர்த்தம் பொதிந்த பாட்டு..
….கணலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே…….
.இப்படி வீரமான
வரிகள் கொண்ட பாடல்கள் பாஸ்டர் பாபி என்பவரால் எழுத பட்டு சகோதரர் நடராஜ முதலியாரால்
பாடப்பட்டது.
…அவர்…வான் அமுதம்…..குழுவினர்
பாடலையும் பாடி இருக்கிறார்…
.பிற்காலத்தில்
அவர் மனைவி இயற்றிய பாடல்களும் அவர் மூலமாய் வெளி வந்தது.
ஏனென்று கேட்க
உரிமை இல்லையே……………….
கர்த்தரையே நம்பிடும்
தேவ ஜனமே.. இந்த பாடல்களும் அவரால் பாடபட்டதே
இவருக்கு அடுத்து
சகோதரி சாராள் நவரோஜி எழும்பினார்கள்.
அவர்களே இயற்றிய
நூற்றுகணக்கான பாடல்கள் வெளிவந்தது. 1980 வாக்கில் சகோதரி சாராள் நவரோஜி பாடலை மற்றவர்களும்
பாடி இசை தட்டாக வர ஆரம்பித்தது.
முக்கியமாக ஜாலி ஆபிரகாம்
கர்த்தரை நம்பியே
ஜீவிப்போம்
கர்த்தரின் சத்தம்
வல்லமையுள்ளது..
ஆயிரம் வருட அரசாட்சியே…
என்கின்ற பாடல்களைப் பாடினார்.
ஜாலி ஆபிரகாமை
சத்தி விக்டர் என்ற இசை அமைப்பாளர்.அறிமுகபடுத்தினார்.
1985ல் MPI (மெட்ராஸ் பென்டிக்காஸ்ட் சர்ச் )அவர்களின் அனேக பாடல்
பிரபலமானது…
அரனும் கோட்டையும்…
என்இயேசுவே நான்
என்றும் உந்தன் சொந்தம்…
.ஆகிய பாடல்கள்
பயங்கர ஹிட் ஆகியது..
அதே நேரத்தில்
டாக்டர் கிள்பர்ட் குமார் அவர்களின் பாடல்களும்.
.என் இயேசுவே
என் இரட்சகா..
என்ற பாடலும் இன்னும்
சில பாடல்களும் ஹிட் ஆனது.
பின்பு சிறிது
காலம் ஒரு இடைவெளி .
.....
அதன் பின் பாதர்
பொர்க்மான்ஸ் வந்தார்…
.இவர் பாடல் கேஸட் சினிமா பாடல் கேஸட் விற்பனையை விட அதிகம் விற்பனை செய்து சாதனை படைத்தது….
எல்லா கிராமங்களிலும்
இன்றுவரை பாடப்படுகிறது..
முக்கியமாக இவர்
கத்தோலிக்க சபையில் இருந்து பொந்தேகோஸ்தே இயக்கத்துக்கு மாறினாலும் பாதர் பெர்க்மான்ஸை
கத்தோலிக்கர்கள் இன்றும் அதிகம் நேசிக்கிறார்கள்.
.
அவர்கள் கூடுகையில் பாதர் அவர்கள் பாடலைத்தான் பாடுகிறார்கள்….
அவர்கள் கூடுகையில் பாதர் அவர்கள் பாடலைத்தான் பாடுகிறார்கள்….
தற்சமயம் வரும் பாடல்களை பற்றி நான் எழுத விம்பவில்லை..
எனக்கு அதைபற்றி
அதிகம் தெரியாது…..
என்னுடைய கட்டுரையில்
பாடல்களைபற்றி எழுதவேண்டியது வந்ததால் இவ்வளவு தூரம் வந்து விட்டேன்…..
இனி பழைய இடத்துக்கே
போய்விடலாம் ..
.
அசெம்பிளி ஆப் காட் என்ற வெளிநாட்டு பெந்தேகோஸ்தே சபை தமிழ்நாட்டில் துவங்கபட்டது.
அசெம்பிளி ஆப் காட் என்ற வெளிநாட்டு பெந்தேகோஸ்தே சபை தமிழ்நாட்டில் துவங்கபட்டது.
அது வரையில் இருந்த
பெந்தேகோஸ்தே சபையின் அமைப்பு.
(1)ஒரு சபைக்கு
ஒரு பாஸ்டர் என்பவர் இருப்பார்..அவர்தான் அந்த சபையின் தலைவர்
(2)சபை FAITH
HOME என்று அழைக்கபட்டது.
(3) FAITH HOME
ல் கைவிடபட்டவர்களும் ஊழியத்திற்கு அழைக்கபட்டவர்களும்…பெந்தேகோஸ்தே
சபைக்கு வந்ததால் வீட்டைவிட்டு துரத்தபட்டவர்களும் இருப்பார்கள்.
(4)அனைத்து விசுவாசிகளையும்
அந்த சபையின் போதகர் நன்றாக அறிவார்.
(5)விசுவாசிகளின்
திருமணத்தில் பாஸ்டரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.
(6)கிளை சபைகள்
ஆரம்பிப்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது
இதில் கவனிக்கபட
வேண்டியது பாஸ்டரின் வாழ்கை தரமும் விசுவாசிகள் வாழ்கை தரமும் ஒரே மாதிரி தான் இருந்தது.
சபையில் திரள் கூட்டம் இல்லை. இதுவும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்
அது மட்டுமல்லாமல்
சபையின் பெயர்கள் அனேகமாக பெந்தேகோஸ்தே சபை என்றும்
புரண சவிஷேச சபை
என்றும்தான் இருந்தது.
ஆகவே ஆங்கில பெயருடன்
அட்டகாசமாக புதிய சபை ஒன்று வரவும் மக்களின் கவனம்.இந்திய புதிய சபையின் மீது திரும்பியது.
மக்களின் கவனம் மட்டுமல்ல புதிதாய் ஊழியம் செய்ய வந்த பாஸ்டர்களின் பார்வையும் அசம்பிளி ஆப்காட் சபையின் பக்கமாக திரும்பியது..
அசம்பிளி ஆப்காட்
புதிய பாதையை இவர்களுக்கு காட்டியது. இது பெந்தேகோஸ்தே வரலராற்றின் இரண்டாம் பாகம்
ஆகும்….
...
அசம்பிளி ஆப்காட்
திருச்சபை தான் செய்வதை வலு கட்டாயமாக யாரிடமும் திணிக்கவில்லை…..
தான் போகின்ற பாதையில்
… தன் பாதைக்கு மற்றவர்களை தானே வர வைத்ததுதான் அவர்களின் வெற்றியாகும்...
ஏஜி(அசெம்பிளி
ஆப் காட்..)சபை …வெளிநாட்டு ஆதரவுடன் செயல்பட்டதால் .பணத்திற்கு அதிக கஷ்டபடவில்லை…
ஏஜி சபை வாடகை வீட்டீல் அதிக நாள் ஆராதனை செய்வதை விரும்பவில்லை.
தனக்கு சொந்தமாக
இடத்தை வாங்கி அதிலே ஆராதனையை ஆரம்பித்தது…
ஊழியர்களுக்கு உதவித்தொகை கொடுத்து அவர்களை ஆதரித்தது.
இதனால் பசியோடுகூடிய
ஊழியம் என்பது மறைந்து விட்டது….
அடுத்து தன் ஊழியர்களை
….வேதாகம பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்தவர்களைத்தான் ஏஜி சபை போதகர்களாக ஏற்றுக்
கொண்டது.
ஆகவே படித்தவர்கள்
அதிகமாக போதகர்களாக முடிந்தது.
பழைய பெந்தேகோஸ்தே முறையில் படிப்பு மிக முக்கியம் அல்ல.
அந்த நபர் .ஊழியத்திற்கு
தேவனால் அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.
எதாவது ஒரு போதகரிடம்
பல வருடங்கள் உதவியாளராக (எல்லா வேலையும் செய்து கொடுத்து..) இருந்து வேதத்தை அவரிடமே
கற்று அந்த போதகர் ஒரு சபையை அவர் கையில் கொடுக்கும்
அளவும் பொறுமையாக அடங்கி இருக்கவேண்டும்..
இந்த அடங்கி இருத்தல்
எத்தனைவருடம் என்பது யாருக்கும் தெரியாது…
ஆகவே புதிதாக ஊழியத்திற்கு
வருபவர்கள் இந்த
……..அடங்கி இருப்பது……. பிடிக்காமல் வேதாகம பள்ளியில்
பயின்று
உடனடியாக சபை பொறுப்பை
ஏற்க துடித்தார்கள்.
.ஏஜி சபையிலும் வேதாகமபள்ளி முடித்தவுடன் யாருக்கும் சபை பொறுப்பை கொடுக்காமல் கொஞ்சநாள் உதவியாளராக வைத்து பின் சபை பொறுப்பு கொடுக்கபட்டது…
பழைய பெந்தேகோஸ்தே சபையில் பாஸ்டர்கள் உடை…..வேஷ்டி…ஜிப்பாதான்…
ஏஜி சபை இந்த உடையை…
ரெக்கமண்ட்….. செய்யவில்லை..
ஆனால் அதிலும்
விடாப்பிடியாக சில பழைய போதகர்கள் வேஷ்டி ஜிப்பாவை விடவில்லை..
ஆனால் ஏஜி சபை
இதை கண்டுகோள்ளவே இல்லை..
பாஸ்டர்கள் கோட் சூட் டுடன் வலம் வந்தனர்….
சிலர் சப்பாரி
உடை அணிந்தனர்..
ஒரு சிலர் வெள்ளை
கலர் பேண்ட் வெள்ளை கலர் சட்டையை அணிந்தனர்….
எப்படி வேண்டுமானாலும்
உடை அணியலாம்….
கத்தோலிக்கர்களுக்கும் CSI போதகர்களுக்கும் ஆராதனையின் போது வெள்ளை நிற
அங்கி அணிவது இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
பழைய பெந்தேகோஸ்தே
பாஸ்டர்களிடமும் வேஷ்டி ஜிப்பா என்ற ஒழுங்கு
இருந்தது.
ஏஜி சபை இதை தகர்த்து விட்டது.
இன்று கலர் கலர் ஜிகினா சட்டையுடன் பலரும் மேடையில் சினிமா பாடகர்போல காட்சி தருவதற்கு முன்னோடியாக இது இருந்ததாக நான் நினைக்கிறேன்.
ஏஜி சபை கட்டாயம்
ஒரு உடையில் ஒரு ஒழுங்கை நடைமுறை படுத்தியிருக்கவேண்டும்.
அனால் அதை செய்யவில்லை..
ஆகவே பாஸ்டர்கள்
தங்கள் விருப்பப்படி உடை அணிந்தனர்.
பழைய …ஜிப்பா ….மெல்ல
மெல்ல மற்ற பெந்தேகோஸ்தே சபையிலும் குறைய ஆரம்பித்தது…
ஏஜி சபை வாலிபர்களை நோக்கி அதிக அக்கறை காட்ட ஆரம்பித்தது…
வாலிபர்களுக்கு…..யூத்
கேம்ப்…
.ஊழியர்களுக்கு
மினிஸ்டர் கான்ப்ரன்ஸ்..
ஆங்கிலத்தில் ஆராதனை
செய்வது....
ஆங்கிலத்தில் செமினார்…என
கலக்கியது….
போதகர்கள் கோட் சூட்டுடன் ..அல்லது சப்பாரி உடையுடன் நுனிநாக்கில் ஆங்கில மொழியுடன் தேவ செய்திகளை அளிப்பது.
ஆங்கிலத்தில் பாடல்கள்
பாடுவது
இதெல்லாம் பழைய
பெந்தேகோஸ்தே காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது..
ஏஜிசபை …………….வாலிபர்களை ….டிவி விளம்பரத்தில் வருவதுபோல் .
.சும்மா சுண்டி
இழுத்தது….
ஏஜி சபை கிடுகிடுவென
வளர்ந்தது….
இரட்சிப்பை அழகாக போதனை செய்து அதை மக்களுக்கு சொந்த மாக்கியது.
நிறைய பேர் இரட்சிக்பட்டனர்.
டாக்டர் ஜஸ்டின்
பிரபாகரன் என்பவர் 1983 என்று நினைக்கிறேன் .அவர் வேதகாமம் விஞ்ஞானத்தை ஒட்டியது என்றும்
வேதத்தின் மகிமையை பற்றியும் பல ஆதாரங்களுடன் பேசி நிறைய பேரை இரட்சிப்புக்குள்ளும்
ஞானஸ்நானத்திற்குள்ளும் வழிநடத்தினார்.
நகை போடக்கூடாது
என்று பாடல்கள் பாடினார்.
பின்பு என்னவானதோ
நிறைய நகை போட்ட பெண்ணை திருமனம் செய்து கொண்டார்…
சிறிது காலத்தில் ஏதோ வியாதிபட்டு இறந்து விட்டார்..
சொல் ஒன்று செயல்
ஒன்றாக அவர் ஊழியம் முடிந்து போனது…ஆனால் அவர் மூலமாக …. எக்கசக்கமான ….பேர் ஞானஸ்நானம்
எடுத்தனர்….
பழைய பெந்தேகோஸ்தேகாரர்கள்
ஒரே ஒருவரை இரட்சிப்புக்குள் நடத்துவதற்கு பொரும்பாடு பட்டார்கள்…ஆனால் ஏஜி சபை
புதிய உபதேச முறையில்
அனேகரை இரட்சிப்புக்குள் வழி நடத்தியது.என்பது மிகவும் உண்மையான விஷயம்….
.
இரட்சிக்கபட்டவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமே.
இரட்சிக்கபட்டவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமே.
அதற்கம் உடனடியாக
ஏற்பாடு செய்யப்பட்டது.
பழயை பெந்தேகோஸதே
காரர்கள் நகை போட்டிருந்தால் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை…
ஏஜி சபை இதையெல்லாம்
கண்டுகொள்ளவே இல்லை… ஞானஸ்நானம் கேட்பவனுக்கு
எதற்கு தடை பண்ண வேண்டும்.
ஆகவே மக்களுக்கு
எந்த தடையும் இன்றி உடனடியாக ஞானஸ்நானம் கிடைத்தது…
ஆகவே சபை வேகமாக வளர்ந்து அங்கத்தினர் அதிகமாக அதிகமாக
இன்னும் சில காரியங்களை ஏஜிசபை கைவிட்டது.FAITH HOME என்ற ஒன்று ஏஜி சபையில் இல்லாமல் போனது…
இன்னும் சில காரியங்களை ஏஜிசபை கைவிட்டது.FAITH HOME என்ற ஒன்று ஏஜி சபையில் இல்லாமல் போனது…
இதில் பாஸ்டர்களுக்கு
பரம திருப்தி..
அதை பராமரிப்பு
செய்வது …..தேவையில்லாத தலைவலி…. இதிலெல்லாம் விடுதலை கிடைத்தது
இரட்சிப்பு …ஞானஸ்நானம்
…நகை அணிவது பற்றிய போதனைகளை … எப்படி கையாள வேண்டும் என்று ஏஜி சபை மற்றவர்களுக்கு
முன்மாதிரியாக வழிகாட்டியது.
ஞானஸ்நான விஷயத்தில்
இன்று பல பெந்தேகோஸ்தே சபைகள் ஏஜியை பின்பற்றி மெதுவாக தங்களை மாற்றி கொண்டனர்
……
…..(…நான் CPM சபையை பற்றி இங்கு பேசவே இல்லை .காரணம் அவர்கள்
.மற்ற எந்த பெந்தேகோஸ்தே சபையினருடனும் எந்த தொடர்பும்(…கொள்வினை கொடுப்பினை…) வைத்து
கொள்வதில்லை..மற்ற சபையினர் கொடுக்கும் முழுக்கு ஞானஸ்நானத்தை அங்கீகரிப்பதும் கிடையாது..ஆகவே
அவர்களை பற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்…)
பாளையங்கோட்டையில் ஏஜி சபை கட்டும்போது வெளியே சுவரில் மிகப்பெரிய சிலுவை ஒன்று வைக்கபட்டது..
அப்போது அதை எதிர்த்து
மற்ற பெந்தேகோஸ்தே சபைகள்.. ஐயோ அப்பா என கத்த ஆரம்பித்தார்கள்…..
ஆனால் ஏஜி சபையினர் எதையும் காதில் போட்டுக்கொள்வில்லை இன்றளவும் அந்த சிலுவை ஏஜி ஆலய சுவரில் ..ஜம்..மென்று இருக்கிறது.
------
இன்னும் .மிக முக்கியமாக ஒர் சீர்திருத்தம் செய்தனர்.
இன்னும் .மிக முக்கியமாக ஒர் சீர்திருத்தம் செய்தனர்.
அது திருமணத்தில்
செய்யப்பட்டது. அதுவே பழைய பெந்தேகோஸ்தே கொள்கைக்கு மொத்தத்தில் முடிவு கட்ட பட்டதாக
நினைக்கிறேன்….
---
எனக்கு அந்த சம்பவம்
நடந்தது எந்த வருடம் என்று சரியாக நினைவில்லை….
அது மதுரையோ ..சென்னையோ…
என்றோ நினைவில்லை..
இங்குள்ள (நெல்லையில்..)என்
அம்மாவிடம் மற்ற விசுவாசிகள் .பதற பதற பேசிக்கொண்டார்கள்….
அசம்பிளி ஆப் காட்
சபையில் திருமணம் நடந்ததாம் அதில் நகை போட்டு திருமணத்தை நடத்தி வைத்தார்களாம்..
நகை போட்டு திருமணம்
செய்தால் தாலி கட்ட வேண்டுமே என்று ஒருவர் கேள்வி எழுப்ப …..
ஆமாம்….. அது ஆலயத்தின்
அலுவலகத்தில் வைத்து தாலி கட்டபட்டதாம்..
திருமணம் ஆலயத்தில்
உள்ளேயும்….. தாலிகட்டும் வைபவம் ஆலயத்தில் அலுவலகத்திலும் நடந்ததாம் …..என்று பேசிக்கொண்டார்கள்…
அப்போது எனக்கு அவர்களின் பதற்றம் சிரிப்பாய் இருந்தது….
.திருமணம் என்றால் தாலிகட்டுவது இயற்கைதானே ..
இது ஊர் உலகத்தில்
நடக்காததா…இதற்கு போய் இப்படி பதறுவது ஏன் என்று என்னை நானே கேட்டுகொண்டேன்….
இப்போதுதான் எனக்கு
தெரிகிறது அன்று அவர்கள் பதறியது நியாயமே என்று….
இதை படிப்பவர்களுக்கும் இது சாதாரண காரியமாக படலாம்…ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல…..
ஒரு கொள்கையை முறித்து போடுவது அதை நம்பி இருக்கும் பலரை கொலை
செய்வதற்கு சமம்….
நகை போடாத பெண் பிள்ளைகளுக்கு ..மணமகன் வானத்திலிருந்து குதித்து வரமாட்டான்.. …
இதே நம்பிக்கை
உள்ள சபையில் இருந்துதான் வருவான்….
இனி நகைபோடலாம் தாலிகட்டலாம் என்று புதிய கொள்கையை அமுல்படுத்தி
விட்டால் என்ன நடக்கும்….பல நகை கழட்டிய பெண்
பிள்ளைகளின் வாழ்க்கை முறை பாதிக்கபடும்..
அதிக பட்சமாக முப்பது
வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க
வேண்டும்.
மணமகன் கிடைக்காத
பட்சத்தில் திருமணம் பிந்தும் ..அல்லது வயதாகிவிட்டதால் நடக்காமலே போகும்……
இது அந்த பெண்ணால் உண்டாக போகும் ஒரு சந்ததியை வேரோடு அழித்தது போலவே ஆகும்….
…ஏஜி
சபையினர் இப்படியும் கேட்கலாம் ..எங்களை நம்பியா வாழவேண்டும்..?
இயேசு
நாதரை நம்பித்தானே நகை கழட்டினார்கள்….அவர் பார்த்து கொள்வார்.
நாங்கள்
எப்படி மொத்த பெந்தேகோஸ்தே சபைக்கும் பொறுப்பாளியாக முடியுமா..?என்று கேட்கலாம்…(காயின்போல…..)அதுவும்
நியாயமே…
ஆனால் நீங்கள் ஆரம்பம் முதலே நாங்கள் வேறு..
இங்கே
உள்ள பெந்தேகோஸ்தே சபைகள் வேறு என்று கொஞ்சம் தெளிவு படுத்தி இருக்கலாம் …
அதை செய்யவில்லை…பரவாயில்லை…..உங்களை நம்பி ஏமாந்தவர்கள்அனேகம் என்று சொல்வதைவிட….
.நீங்கள்
வேறு ஒரு புதிய சபைகள் வளர காரணராகி விட்டீர்கள்..என்பதை உணர்ந்தால் போதும்….
..
அதன்பின் பெந்தேகோஸ்தே
சபை என்று தன்னை கூறிக்கொண்டும் ……கூறிக்கொள்ளாமலும் பல சபைகள் ஆரம்பிக்கபட்டன…..
எல்லாமே சுயதீன
சபைகள்….
வெளியே இருந்து பார்த்தால் பெந்தேகோஸதே சபைபோன்று தோற்றத்துடன் …பலபேரை வீழ்த்துகிறது….
வெளியே இருந்து பார்த்தால் பெந்தேகோஸதே சபைபோன்று தோற்றத்துடன் …பலபேரை வீழ்த்துகிறது….
இந்த சபைகளுக்கு
எந்த கெள்கைகளும் இல்லை….
விடுதலையோடு ஆராதிப்போம்.வெற்றியோடு
ஆராதிப்போம் என்று கூறிக்கொள்ளும்…
--
.உபதேசம் என்று
எதுவும் இல்லை.
நகை போடவேண்டுமா…?
போட்டுக்கொள்.
நகை கழட்டவேண்டுமா…?
கழட்டிக்கொள்….
அன்நியபாஷை பேசவேண்டுமா…?
பேசலாம்….
.FAST TEMPOவில்
பாட்டு . பாடலாம்..ஆட்டம் ஆடலாம் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.
...
திருமண வயதில் இருக்கும் உங்கள் பெண் பிள்ளைகளை பற்றி பாஸ்டருக்கு எந்த கவலையும் கிடையாது….
திருமண வயதில் இருக்கும் உங்கள் பெண் பிள்ளைகளை பற்றி பாஸ்டருக்கு எந்த கவலையும் கிடையாது….
அவர் என்ன செய்வார்..பாவம்…
அவர் மனைவி நகை
கழட்டி இருப்பார்.
ஆனால் அவர் பெண்
பிள்ளைக்கு நகை போட்டு அழகு பார்ப்பார்……
மூவரும் சேர்ந்து
முகநூலில் போஸ்கொடுப்பார்கள்..(உண்மையாகவே நான் FBயில் பார்த்தது
.
அதையும் ஆயிரம்பேர் அருமையான குடும்பம் என்று வாழ்த்துவார்கள்.
அதையும் ஆயிரம்பேர் அருமையான குடும்பம் என்று வாழ்த்துவார்கள்.
இப்படி மீனுக்கு
வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் பாஸ்டர்களிடம் எனக்கு ஒருகேள்வி உண்டு.
உங்கள் புகைப்படம் பார்த்தேன்……உங்கள் மனைவி நகை போடவில்லை.
உங்கள் செல்ல மகள்
காதிலே கழுத்திலே அழகான நகை அணிந்திருக்கிறாள்….இதன்மூலம் நீங்கள் இதர மக்களுக்கு கூறுவது
என்ன..?
முதலாவது
என் இனிய மக்களே……
என் மனைவி கர்த்தருடைய சித்தத்தின் படி நகை
அணிய வில்லை …………ஆனால் என் மகளோ………………..சித்தப்படி நகை அணிந்து………….செல்ல ஆயத்தமாகி
விட்டாள் என்றா….?
இரண்டாவது
என் மனைவி அந்த காலத்தில் யாருடைய உபதேசத்தை கேட்டோ
இந்தகோலம் ஆகிவிட்டாள்…ஆனால் நான் என்மகளை என் உபதேசத்தின் படி நகைபோட்டு அலங்காரம்
செய்திருக்கிறதை பாருங்கள்..என்றா….?
மூன்றாவது…..
உங்கள் மனைவியை பார்த்து …….தாங்களும் நகை கழட்டிவிட்டு ..
அல்லது இவர்களும்
நம்மைப்போல விசுவாசத்தில் உள்ளவர்கள் தான் என நம்பி உங்களிடம் விசுவாசிகளாக இருக்கும்
அந்த நகை கழட்டிய பேதைகளுக்கு .
அல்லது அவர்கள்
வீட்டில் திருமணத்திற்காக இருக்கிற பெண்பிள்ளைகளுக்கு உங்களின் பதில் என்ன..?
--------
நீங்கள் எதற்காக
இரட்டை வேடம் போடுகிறீர்கள்..இதனால் அப்பாவி பிள்ளைகள் பாதிக்க படுகிறார்கள் என்பதை
கொஞ்சமாவது நினைத்து பார்த்தீர்களா..?
----
நீங்கள் நகை போட
வேண்டுமா ,?உங்கள் முழுக் குடும்பமும் போட்டுக்
கொள்ளுங்கள்….யார் வேண்டாம் என்றது..?
அப்போது தான் உங்களை
இனங்காண இலகுவாய் இருக்கும்
பாதிப்பாதியாய்
…. அர்த்தநாரி…. போல் காட்சித்தர வேண்டாம் என்கிறேன்….
எனக்கு இன்று ஒரு
நிகழ்ச்சி நடந்தது. (உண்மை)
என்னுடைய வேலை
சிறு குழந்தைகளுக்கு இசை சொல்லி கொடுப்பது…
.நான் ஒரு சிறுமியிடம் உன் பெயர் என்ன ..?என்றேன்..
அவள் ஒரு பைபிள்
பெயரைச் சொன்னாள்
அந்த பெயருக்கு
என்ன அர்த்தம் தெரியுமா ..?என்று கேட்டேன்
தெரியவில்லை என்றாள்
நான் அவளுக்கு
அந்த பெயரின் அர்த்தத்தை தெளிவுபடுத்தினேன்..
உன் அப்பா என்னவாக
இருக்கிறார் என்றேன்..
எங்க அப்பா சர்ச்
வச்சு நடத்துறாங்க …என்றாள்
அப்போ.. நீ பாஸ்டர்
மகளா…?என்றேன் …..ஆம் என்றாள்….
நான் அந்த பிள்ளையை
கவனித்தேன் சிறிய காதணிகள் அணிந்திருந்தாள்..
இது ……..மேற்படி…(..புதிய
பெந்தேகோஸ்தே )….பாஸ்டர் குடும்பம் என்று அறிந்து கொண்டேன்….
அப்போது அவள் பக்கத்தில்
இருந்த சிறுமி என்னைப்பார்த்து
…மாஸ்டர் …..அவங்களுக்கு
சொந்தமா நகை கடையே இருக்கு …என்றாள்…எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதற்குள் இன்னொரு
குழந்தை அவங்க அப்பா பேங்கில வேல பார்க்கிறாங்க என்றாள்…
உண்மையாகவே எனக்கு
தலை சுத்தியது..
(1)..பாஸ்டர்
(2)….நகைக்கடை
(3)…..பேங்கில்
வேலை
.
நான் அந்த சின்ன பிள்ளையிடம் …….நகை கடையை யார் பார்த்து கொள்வது என்றேன்….
நான் அந்த சின்ன பிள்ளையிடம் …….நகை கடையை யார் பார்த்து கொள்வது என்றேன்….
பகலில் அம்மா பார்த்து
கொள்வார்கள்..இரவில் அப்பா பார்த்து கொள்வார்கள் என்றாள் வெகுளியாய்..
கடைசி பகுதியை நானே என்மனதில் கூறி முடித்துகொண்டேன்.
அதாவது …..
ஞாயிற்று கிழமை
சும்மாதானே இருக்கிறோம்..அகவே சர்ச் துவங்கி
நடத்தலாமே என்று எண்ணி இருப்பார். ..ஆகவே சர்ச் நடத்துகிறார்…….
இப்படியும் பாஸ்டர்கள்……
.என் வீட்டு பக்கத்தில்
கார் வியபாரம் (..பழைய கார்..)செய்து கொண்டே ஒருவர் சர்ச் நடத்துதுகிறார்.
இதில் இன்னோரு
முக்கியமான காரியம்….. இப்படி கண்டபடி சர்ச் துவங்கிய அனைவரும் பாஸ்டர்கள் ஐக்கியத்தில்
அங்கத்தினராக இருக்கிறார்கள்.
....
சர்ச் துவக்குவது
ஆராதனைசெய்வது எல்லாம் அவரவர் விருப்பம்…..அதைபற்றி நான் என்ன சொல்ல முடியும்….ஆனால்
அவருக்கு கீழே விசுவாசிகளாய் ஒரு சிறு கூட்டம் இருக்கிறதே….
இவர்களுடைய கதி…..
அவர்களுக்கு என்ன
சொல்வது ..?எப்படி புரிய வைப்பது என்றுதான் குழம்புகிறேன்..?
(
நீங்கள் நல்ல பெந்தேகோஸ்தே
விசுவாச குடும்பத்தை சேர்ந்தவர் என்று வைத்து கொள்வோம்..
ஆகவே உங்கள் மனைவி நகை அணியவில்லை.
உங்கள் பெண் மக்களுக்கு
காது கூட குத்தவில்லை…
சரி இப்போது உங்கள்
பிள்ளை வளர்ந்து விட்டாள்…
இருபத்தைந்து வயதை
கடந்த உடன்… நீங்கள் உங்கள் போதகரிடத்தில் போய் மகளுக்கு திருமணம் செய்யவேண்டும் ஆகவே
ஒரு நல்ல பையனை பார்க்கவேண்டும் என்கிறீர்கள்.
உங்கள் பாஸ்டர்
ஜெபிப்போம் கர்த்தர் வழிநடத்துவார் என்கிறார்..
இது வரை நல்லதுதான்.
ஜெபிப்போம் என்று
சொன்ன பாஸ்டர் …
அதன்பின் ஒரு நாள் உங்களை அழைத்து இன்னொரு சபையில் ஒரு பையன் இருக்கிறான் அந்த சபை பாஸ்டரிடம் நான் பேசினேன் …… நீங்கள் போய் பாருங்கள் என்று சொன்னால் அவர் சிறந்த பாஸ்டர்.
உண்மையாகவே உங்கள்
மீது கரிசனை உள்ளவர்.
நீங்கள் அவர் சபையில்
இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது…
இன்னொரு விஷயம்…
நீங்கள் மற்ற சபை நடத்தும் கூட்டத்திற்கு போக மாட்டீர்கள்..
ஏனெனில் நீங்கள் நல்ல விசுவாசி..ஆகவே
உங்களுக்கு மற்ற
சபை பாஸ்டருடன் எந்த தொடர்பும் இருக்காது.
இந்த சூழ் நிலையில்
அவர் அமைதியாக இருந்துவிட்டால்…(அதாவது உங்கள் மகள் திருமணத்திற்கு எந்த முயற்சியும்
பண்ணாமல்..)
உங்கள் நிலை என்னவாகும்….
உங்கள் மகள் நகை
அணியாமல் இருப்பது உங்கள் விருப்பத்தின்படியே அல்லாமல் அவள் விருப்பத்தின்படி அல்ல
என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இப்போது பாஸ்டர் கைவிட்ட நிலையில் நீங்களே மணமகனை தேடுகிறீர்கள்…
அப்போது ஒரு குடும்பத்தினருக்கு
உங்கள் மகளை பிடித்திருக்கிறது.என்று வைத்து கொள்வோம்
அவர்கள் ஒரே ஒரு
நிபந்தனை மட்டும் போடுகிறார்கள்.
அதாவது திருமணத்தில்
ஒரு சின்ன செயின் மட்டும் போட்டால் போதும் திருமணத்தை நடத்திவிடலாம் என்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்வீர்கள்.
சின்ன செயினுக்கு
சம்மதித்தால்…..
அவர்கள் சின்ன
செயினின் அளவை இன்னும் சொல்லவே இல்லை .
சின்ன செயினுக்கு
சம்மதம் தெரிவித்தவுடன் அதன் மொத்த அளவு உங்களுக்கு வரும்…
அது முழுதாய் நகை
போட்டு கல்யாணம் பண்ணும் அளவுக்கு கொண்டுபோய்விடும்..
ஆகவே அதனை வேண்டாம்
என்று மறுப்பீர்கள்.
அப்போது உங்கள் மகள் இவ்வாறு நினைக்கலாம்..
.நகை போடும் அளவுக்கு
உங்களிடம் வசதி உண்டு..
பாஸ்டரும் நகை
போட்டு தாலி கட்டி திருமணத்தை நடத்திவைக்க தயார்…பின் அப்பா(..நீங்கள்..) சம்மதித்தால்
என்ன .?என்று உங்கள் மகள் உங்களை நோக்கி கேள்வி எழுப்புவாள்.
நகை போட்ட திருமணத்தை பாஸ்டரே நடத்த சம்மதிக்கும்போது நீங்கள் ஏன் மறுக்குறீர்கள் என்று கேட்டால் அவளுக்கு என்ன பதில் கூறுவீர்கள்….
உங்களிடம் பணம் இல்லை என்று வைத்து கொள்வோம் ..
நகை எல்லாம் சிறுவயதில்
இருந்தே சேர்த்து வைத்திருக்க வேண்டும் ..இப்படி திடீர் என்று நகைபோடச் சொன்னால் பணத்திற்கு
எங்கேபோவது என்று மனதிற்குள் அழுவீர்கள்..
பாஸ்டரும் சபையும் கைவிட்ட நிலையில்..
நீங்கள் இவ்வாறு நினைக்கலாம்
நாம் தவறான பாதையில் வந்து விட்டோமோ ?...
இதெல்லாம்(….பெந்தேகோஸ்தே
கொள்கை…) இந்த காலத்திற்கு சரிபட்டு வராதோ….? என்று சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்..
திருமணம் நடத்தவும்
வழியில்லாமல்.. கொள்கையை விடவும் மனதில்லாமல் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருப்பீர்கள்.
---
ஆனால் பாஸ்டர்
வீட்டிலோ………
தனது செல்ல பிள்ளைக்கு எந்த கார் வாங்குவது…அவன்
கேட்கும் கார் வாங்க இன்னும் சில லட்சம் தேவை படுமே கர்த்தாவே உதவிச் செய்யும் என்று….
பெருங் கவலையில் இருப்பார்…உங்கள் அருமை பாஸ்டர்….
இப்போது வேறு வழியைத்தான் நீங்கள் தேர்தெடுக்க வேண்டும்..
அதாவது கல்யாண
சந்தையில்போய் மாப்பிள்ளை தேட வேண்டும்….அல்லது
கல்யாண புரோக்கரை போய் பார்க்கவேண்டும்.
அந்த வேலையையும்
குட்டிக் குட்டி பாஸ்டர்கள் பொறுப்பாக செய்கிறார்கள்….(…பாராட்டுகிறேன்…)
நீங்கள் அவர்களை அணுகினால் உடனே பையனை கொண்டு வந்து நிறுத்துவார்கள் .
ஆனால் அவர்களுக்கு
மூன்று சதவீதம் கமிசன் கொடுக்கவேண்டும்…..(கண்டிப்பாக..)…..
ஆனால் அவர்கள்தான்
இப்போதைக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள்….எப்படியாவது துப்பு கொடுத்து விடுகிறார்கள்….
இப்படிபட்ட பாஸ்டர்கள் இன்று வர காரணமாணவர்கள் யார்..?
சபைக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்…
சபைக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்…
----------------------------------------------------------------------------
பிள்ளை பிறந்த
உடன் காணிக்கை.
பெயர் வைக்கும்
போது காணிக்கை.
முதலாவது பள்ளிக்கூடம்போகும்
போது காணிக்கை..
ஒவ்வொரு வருடமும்
அடுத்த வகுப்பு போகும்போது காணிக்கை
வயதுக்கு வந்த
உடன் காணிக்கை.
கல்லூரிக்கு போகும்போது
காணிக்கை.
நினைத்த கல்லூரியில்
இடம் கிடைத்தால் பொருத்தனை காணிக்கை
வேலை கிடைத்தவுடன்
முதல்மாத சம்பளம் மொத்தமும் காணிக்கை
பின் மாதா மாதம்
தசமபாகம் சரியாக பிரித்து கொடுக்கும் காணிக்கை.
இன்னும் எல்லா
கூட்டத்திலும் காணிக்கை
இதை எல்லாம் ஒழுங்காக
செய்த பிள்ளைக்கு …
.ஒரு பையனை பார்த்து வைக்க மனதில்லை..அல்லது ..முடியவில்லை……
.ஒரு பையனை பார்த்து வைக்க மனதில்லை..அல்லது ..முடியவில்லை……
அதற்கான எந்த முயற்சியும்
இல்லை.
பாஸ்டர்கள் கூடுகையில்
இதைப்பற்றி எந்தபேச்சும் இல்லை..
-------
இந்த பாவம் அல்லவா….இது
உங்களை தலை முறை தலைமுறையாய் துரத்தும்..
அந்த மகள் படும்
வேதனை உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் குறுக்கே நிற்கும் …..
வயது போய்விட்டதே
திருமணம் இனி நடக்காதே என்று இரவில் அவள் வடிக்கும்
கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் ..
தெய்வ தண்டனைக்கு
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தப்பவே முடியாது….
சரி விடுங்கள்……
.....
நாம் மாட்டிக் கொண்டோம் என்பதுதான் உண்மை…
நாம் மாட்டிக் கொண்டோம் என்பதுதான் உண்மை…
அவர்களை குற்றபடுத்தி
என்னஆகபோகிறது..
நாம் பிழைப்பதற்கு
வழியை பார்ப்போம்..
எனக்கு தெரிந்த ஆலோசனை இதுதான்…….
நீங்கள் இருக்கும்
சபையை நன்றாக கவனித்து பாருங்கள்….
திரள் கூட்டமான சபையை விட்டு மெல்ல மெல்ல விலகுங்கள்……
எந்த பாஸ்டரையும்
பகைத்து கொள்ளாதிருங்கள்…பகைத்து கொண்டால் திருமண காரியத்தில் அது உங்களை பாதிக்கும்.
உங்களை பற்றி மாப்பிள்ளை வீட்டார் அவரிடம்தான் முதலில் கேடபார்கள்……பாஸ்டர்கள் மனிதர்கள் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்..
சிறிய சபையை தேர்தெடுங்கள்.
அந்த சபையின் பாஸ்டர்
தன் பிள்ளகைளை எப்படி வளர்க்கிறார் என்பதை பாருங்கள்.
அதுதான் அவரின்
அளவுகோல் ….அவர் இரு நாக்கு உள்ளவர் என்பதை கண்டால் விலகுங்கள்…
பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள்(விசுவாசிகள்..) மற்ற பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளுடன் எப்படியாவது நட்புறவை வளர்த்து கொள்ளுங்கள்.அது உங்களுக்கு உதவி செய்யும்.
உங்கள் சபைக்கு உள்ளே நடத்தும் நகை போட்ட திருமண ஆராதனையில் கலந்து கொள்ளவேண்டாம்..அதனால் உங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஒன்றும் வந்து விடாது..
உங்கள் பாஸ்டரிடம் ….அவர் இப்படி செய்வது நல்லதல்ல என்று மெல்ல மென்மையாக உணர்த்துங்கள்.
நீங்கள் இப்படி சொன்னால் அவர் முகநாடி உடனே வேறுபடும்…..அவர் என்ன சொல்வார் என்றால்..
பிரதர் அந்த குடும்பம் பத்து வருஷமா நம்ம சபைக்குதான் வாறாங்க.
நாம இப்போ திருமணம்
நடத்தி வைக்கலண்ணா அவங்க வேறு சபைக்கு போயிடுவாங்க என்பார்.
போனால் போகட்டும் பாஸ்டர்…..
அவங்க இன்னும் பத்து வருஷம் நம்மகூட இருந்தாலும் அவங்க நகை கழட்டபோவது இல்லை என்று சொல்லிப்பாருங்கள்.
அன்றையில் இருந்து
உங்களுக்கும் உங்கள் பாஸ்டருக்கும் உள்ள உறவு முறிந்து போகும்..
எப்படியும் அவர் நம் பக்கம் இல்லை என்றால் விலகுவது நல்லது……
இன்று வரை பெந்தேகோஸ்தே சபையில் பெண் பிள்ளைகள் திருமணம் மிக சிக்கலாகத்தான் இருக்கிறது..
பாஸ்டர்மார்கள் மனந்திரும்பி ஆதி பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் போல ஆகிவிட்டால் பெந்தேகோஸ்தே விசுவாசிகளுக்கு திருமணம் என்பது லேசான காரியமாக இருக்கும்……
இப்போதைக்கு அதைப்போல்
வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்…..
உங்களுக்கு தெரிந்தபடி.. விசுவாசிகளிடம் பாசமும் பொறுப்பும் உள்ள பாஸ்டர் இருக்கிறார் என்றால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்……குறைந்தபட்சம் ஏக மனதாக பாராட்டுவோம்….
என்னதான் குறைபாடுகள்
இருந்தாலும்
இன்றும் தாங்கள்
திருமணம் செய்து கொள்ள நகைபோடாத பெண்கள் தான் திருமணத்திற்கு வேண்டும் என்று சொல்லக்கூடிய
ஆண் பிள்ளைகளும் எழும்பத்தான் செய்கிறார்கள்…..
அது தேவ சித்தம்
என்றுதான் நினைக்கிறேன்..
என் இதய குமுறலைதான் வெளிப்படுத்தினேன்…..
தமிழகத்தில் இப்படி குறைகளை சுட்டிக்காட்டும் ஆயிரம் குரலில் என்குரலும் சேர்ந்து ஒலித்தால் எனக்கு சந்தோசமே…..
இதனால் ஒருவருக்காவது விழிப்புணர்வு வந்தால் மிகவும் சந்தோசமே…மேலும்
இதற்கான தீர்வை என்னால் சொல்ல முடிய வில்லை என்று ஒத்துகொண்டு முடிக்கிறேன்……….(முற்றும்..)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)