அழகாய் நிற்கும் யாரிவர்கள்..?
அழகாய் நிற்கும் யாரிவர்கள்(1)
முன்று நாள் பள்ளிக்கு லீவு போட வேண்டும் …என்று எனக்கு சொல்லபட்டது.
பாளையங்கோட்டை faith homeல் கன்வென்சன்.ஆகவே வியாழன் அன்று மாலைக்குள் போய்விடவேண்டும்..
ஞாயிறு இரவு வரை அங்கேதான் இருக்க வேண்டும்.
எனக்கு இது அளவில்லா மகிழ்ச்சியை தரும் காரியம்.
கன்வென்சனில் புதிய பாடல்கள் பாடப்படும்.
.
கேரளாவில் இருந்து பிரசங்கிமார்கள் வரவழைக்கபட்டால் அவர்கள் பிரசங்கம் பண்ணுவதை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்..
.
கேரளாவில் இருந்து பிரசங்கிமார்கள் வரவழைக்கபட்டால் அவர்கள் பிரசங்கம் பண்ணுவதை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்..
மலையாள மொழி பிரசங்கத்தை தமிழில் ஒருவர் மொழி பெயர்ப்பார்…
.கேரள பிரசங்கிமார்கள் நின்ற இடத்திலே குதித்து ..குதித்து… பிரசங்கிப்பார்கள். .
.கன்வென்சன் நேரத்தில் விசுவாசிகள் அனைவரும் faith homeல் குடும்பமாக தங்கிவிடுவார்கள்…
கன்வென்ஷன் நாட்களில் தினமும்..காலையில் தெரு பிரசங்கம் பண்ண சகோதரர்கள் குழுவாக போவார்கள்….
.சிறுவர்களாகிய நாங்கள் தான் கைப்பிரதி கொடுக்க வேண்டும்…
.சிறுவர்களாகிய நாங்கள் தான் கைப்பிரதி கொடுக்க வேண்டும்…
அதிகாலையில் இந்த பணி எனக்கு மிகவும் பிடிக்கும்.
பல தெருக்களில் ஆண்டவரை அறிவித்து விட்டு காலை ஒன்பது மணிக்கு திரும்பி வருவோம்.
காலை உணவு அளிக்கபடும்.
பின்பு
காலை பத்து மணிக்குகூட்டம் ஆரம்பித்து விட்டால் மதியம் ஒரு மணிக்குதான் முடியும்.
மதியம் உணவு முடித்து …..மாலை மூன்று மணிக்கு காத்திருப்பு கூட்டம் நடைபெறும்.
காலை பத்து மணிக்குகூட்டம் ஆரம்பித்து விட்டால் மதியம் ஒரு மணிக்குதான் முடியும்.
மதியம் உணவு முடித்து …..மாலை மூன்று மணிக்கு காத்திருப்பு கூட்டம் நடைபெறும்.
மாலையில் மீண்டும் சகோதரர்கள் வெளிப்பிரசங்கத்துக்கு புறப்பட்டு விடுவார்கள்.;;
மீண்டும் கைப்பிரதி வினியோகம் ..
..சிறுவர்களாகிய எங்களையும் பழக்கினார்கள்…..அது பிற்காலத்தில் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
மீண்டும் கைப்பிரதி வினியோகம் ..
..சிறுவர்களாகிய எங்களையும் பழக்கினார்கள்…..அது பிற்காலத்தில் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
அந்த கன்வென்ஷனுக்கு சிறப்பு பிரசங்கியாராக திரு .ஜீவானந்தம் அவர்களையும் அழைத்திருந்தார்கள்.
நான்கு நாட்கள் கூட்டததில் பேச இரண்டு பிரசங்கிமார்கள்
மற்றவர் பெயர் மறந்து விட்டேன்.
மற்றவர் பெயர் மறந்து விட்டேன்.
வியாழக்கிழமை கூட்டம் ஆரம்பித்தது
.முதல் நாளில் ஜீவானந்தம் பேசினார்.
.முதல் நாளில் ஜீவானந்தம் பேசினார்.
பிரசங்கம் ஆரம்பித்தவுடன்.
இயேசு என்னை கைவிட மாட்டார்
இயேசு என்னை கைவிட மாட்டார்
கடும்புயல் வரினும் பெரும்காற்று வீசினும்
அவர் என்னை கைவிட மாட்டார்.
இயேசு என்னை கைவிட மாட்டார்
இயேசு என்னை கைவிட மாட்டார்
கடும்புயல் வரினும் பெரும்காற்று வீசினும்
அவர் என்னை கைவிட மாட்டார்.
இந்த சிறிய கோரஸ் பாடி பின்பு…. அவரின் அனுபவசாட்சியை வெகு நேர்த்தியாக சொன்னார்..
இன்றும் அவர் சொன்ன சாட்சி என் நெஞ்சில் ஆணி அடித்தாற்போல் இருக்கிறது.
அன்று அவர் பேசிய பிரசங்க வசனம்……
இன்றும் அவர் சொன்ன சாட்சி என் நெஞ்சில் ஆணி அடித்தாற்போல் இருக்கிறது.
அன்று அவர் பேசிய பிரசங்க வசனம்……
.மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்……..வண்டி வண்டியாய் மூட்டை மூட்டையாய்..(இது அவர் சேர்த்து கொண்டது…..)
பிரசங்கம் வல்லமையாக இருந்தது.
பிரசங்கம் வல்லமையாக இருந்தது.
சரி..இது போகட்டும்…
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
…நமக்கு ஒரு சின்ன break…..

குமரி மாவட்டம் தக்கலையை தாண்டிப் போனால். சாமியார்மடம் என்ற ஊர் வரும் .
அதன் உள்ளே சென்றால் …தெற்றை. என்ற சிறிய குடியிருப்பு
.(சுத்தமான தமிழ்பெயர்….தெளிவான….என்று பொருள்..)
அதன் உள்ளே சென்றால் …தெற்றை. என்ற சிறிய குடியிருப்பு
.(சுத்தமான தமிழ்பெயர்….தெளிவான….என்று பொருள்..)
அங்கே கிருபாசன சபை ஒன்று இருக்கிறது .அதனுடைய பாஸ்டர் என் மனைவிக்கு அண்ணன் முறை வேண்டும்.அவரை பார்த்து வரலாம் என்று போன மே மாதம் (2014) நான்.சென்றிருந்தேன்.
அழகிய ஆலயம் கட்டபட்டு இருந்தது.
இப்போது தான் கட்டி இருக்கிறார்கள்.
ஆலயத்தின் மேல்பாகத்தில் இரண்டு அறைகள்.. காற்று பதனாக்கி (air conditioner)பொருத்தபட்டு அருமையாக அமைக்கபட்டு இருந்தது…
நான் அந்த பாஸ்டரிடம் இந்த அறைகள் எதற்காக .என்று கேட்டேன்..
அவர் சோகமுடன் சொல்லிய வார்த்தைகளை அப்படியே எழுதுகிறேன்.
அவர் சோகமுடன் சொல்லிய வார்த்தைகளை அப்படியே எழுதுகிறேன்.
விஷேச கூட்டங்கள் வைக்கும்போது வரும் பிரசங்கிமார்கள் தங்குவதற்காக கட்டபட்டது.
ஆனா ….ஒருவரும் இதுல தங்க மாட்டங்கிறாங்க…
அங்களுக்கு ….லாட்ஜிலத்தான் ரூம்போட சொல்றாங்க….
ஏனாம்…….?(நான்..)
இங்க காலையில அஞ்சு மணிக்கு ஜெபம் பண்ணுவோம்.
அதுக்கு முன்னே… ஸ்பீக்ர்ல இரண்டு பாட்டு போடுவோம்..
அதுக்கு முன்னே… ஸ்பீக்ர்ல இரண்டு பாட்டு போடுவோம்..
பிரசங்கியாருக்கு இது இடைஞ்சலா இருக்காம்…
..ஏசி அரைக்குள்ள சத்தம் கொஞ்சமாத்தான் கேட்கும்
..ஆனாலும் அவங்களுக்கு பிடிக்கல…..
..ஆனாலும் அவங்களுக்கு பிடிக்கல…..
அவங்களுக்கு லாட்ஜீலதான் ஏசி ரூம் போடணுமாம்.
எப்பவும் ஒரு கார் தயாராய் அங்கேயே நிற்கணும்.
தினமும் பக்கத்தில எங்கேயாவது பேயிட்டு வருவாங்க.
தினமும் பக்கத்தில எங்கேயாவது பேயிட்டு வருவாங்க.
அதுக்கு ஆகும் செலவையும் நாமதான் கொடுக்கணும்….
இரண்டு பிரசங்கியார் வந்தால் ரொம்ப சிரமமாய் இருக்கும்..என்றார்
சரி..அவர்களுக்கு சம்பளம் எப்படி.. என்றேன்..
அது…. பேமஸ் பிரசங்கியார்னா கொஞ்சம் அதிகம்…...
மற்றவங்களுக்கு கொஞ்சம் குறைவு…
மற்றவங்களுக்கு கொஞ்சம் குறைவு…
சரி …எவ்வளவுதான் கொடுக்கிறீங்க…?என்றேன்
ஒரு பிரசங்கத்துக்கு ………………………இவ்வளவு..
நான்..(அடேயப்பா..)
எத்தனை பிரசங்கம் பண்ணுகிறார்களோ அதை பொறுத்துதான் சம்பளமும் என்றார்…...
-------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------
இப்போ break முடிந்து விட்டது
மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.

ஜீவானந்தம் அப்போது சகோதரர் ஜீவானந்தம்தான்.
தன் ஆசிரியர் பணியை விடவில்லை.
அன்று
கூட்டம் முடிந்த பின் எங்களோடு தான் தங்கியிருந்தார்.
மறு நாள் வெள்ளிக்கிழமை
அன்று
கூட்டம் முடிந்த பின் எங்களோடு தான் தங்கியிருந்தார்.
மறு நாள் வெள்ளிக்கிழமை
அன்று. அழைக்கபட்ட இன்னொரு பிரசங்கியார் பிரசங்கம் பண்ணினார்.
அன்று பாஸ்டர் ஜீவானந்தம் மேடைக்கு போக வில்லை.
அன்று பாஸ்டர் ஜீவானந்தம் மேடைக்கு போக வில்லை.
ஆனால் கூட்டம் முடியுமட்டும்…மக்களோடு மக்களாக அமர்ந்து அவர் பிரசங்கத்தை முழுவதும் கேட்டார்.
பின்பு நான் அவரை பல பெரிய கூட்டங்களில பார்த்து இருக்கிறேன்….ஒரு நாள்.
திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள மருதகுளத்திற்கு பாஸ்டர் ஜீவானந்தம் வருகிறார் என கேள்விபட்டோம்.
நாங்கள் ஐந்து பேர்
ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிளை எடுத்து கொண்டு கூட்டத்திற்கு சென்றோம்.
நாங்கள் ஐந்து பேர்
ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிளை எடுத்து கொண்டு கூட்டத்திற்கு சென்றோம்.
இடைபட்ட பல வருடங்களில் பாஸ்டர் ஜீவானந்தம் மிக உன்னத நிலைக்கு வந்து விட்டார்… சொல்லப் போனால் கர்த்தர் சாதாரண ஆசிரியனை உலகமெங்கும் வல்லமையாய் பயன்படுத்தினார் …என கொள்ளலாம்.
மருதகுளம் ஊருக்கு இரவு ஏழுமணிக்குள் சென்று விட்டோம்.
போஸ்டர்கள் இல்லை
.மேடையில்லை ..
எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது..
விசாரித்து பார்த்ததில்
போஸ்டர்கள் இல்லை
.மேடையில்லை ..
எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது..
விசாரித்து பார்த்ததில்
ஒரு சிறிய வீடு……அதன் முற்றத்தில் பாய்கள் விரிக்கபட்டு இருந்தது.
முன்னால் ஒரு மேஜை போடபட்டு இருந்தது.
இரண்டு பாடல்கள் கைதட்டி பாடினார்கள்.அதற்குள் பாஸ்டர் ஜீவானந்தம் வந்து விட்டார்..
முன்னால் ஒரு மேஜை போடபட்டு இருந்தது.
இரண்டு பாடல்கள் கைதட்டி பாடினார்கள்.அதற்குள் பாஸ்டர் ஜீவானந்தம் வந்து விட்டார்..
அவர் வந்த உடன் … அவரை பேச சொல்லி கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் அவரிடம் ஒப்படைத்தர்கள்.
நான் சுற்றிலும் பார்த்தேன்.
ஏழை எளிய மக்கள்..சுமார் முப்பது பேர் இருப்பார்கள்..மொத்த கூட்டமும் அவ்வளவே…
ஏழை எளிய மக்கள்..சுமார் முப்பது பேர் இருப்பார்கள்..மொத்த கூட்டமும் அவ்வளவே…
ஜீவானந்தம் வந்து நின்றவுடன்…………………… .
.இந்த ஜீவானந்தத்தை முன்னமே தெரிந்தவர்கள் எத்தனைபேர் என்று கேட்டார்.
.இந்த ஜீவானந்தத்தை முன்னமே தெரிந்தவர்கள் எத்தனைபேர் என்று கேட்டார்.
நாங்கள் ஐந்து பேர் மட்டுமே கைததூக்கினோம்..
ரொம்ப நல்லது …..என் அனுபவ சாட்சியை சொல்லி வசனத்துக்குள் போகிறேன் என்று சொல்லிவிட்டு
இயேசு என்னை கைவிட மாட்டார்
இயேசு என்னை கைவிட மாட்டார்
கடும்புயல் வரினும் பெரும்காற்று வீசினும்
அவர் என்னை கைவிட மாட்டார்.
இயேசு என்னை கைவிட மாட்டார்
கடும்புயல் வரினும் பெரும்காற்று வீசினும்
அவர் என்னை கைவிட மாட்டார்.
அன்று பாடிய அதே பாடலை அதைவிட மேன்மையாய் பாடினார்.
பின்பு வல்லமையான பிரசங்கம்.
பனிரெண்டு வருடத்தில்… உலகத்தில் அவர் அடைந்த மேன்மை அவர் கண்ணை மறைக்கவில்லை..
உலகம் எங்கும் மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய எனக்கு இதென்ன கிரமத்தில்…..அதுவும் முப்பது பேர்…….
என கோபம் அடைய வில்லை..?
என கோபம் அடைய வில்லை..?
உலகத்திலே உயர்வு வரும்..
அது கர்த்தரின் வேலையை வேகமாக செய்வதற்கு
அது கர்த்தரின் வேலையை வேகமாக செய்வதற்கு
எனக்கு கொடுக்கபட்டுள்ள வேலையை யார் நடுவிலும்.
எந்த சூழ்நிலையிலும் மன மடிவின்றி செய்வேன் என்ற உறுதியை அந்த கர்த்தருடைய மனிதனிடம் கண்டேன்……
வருடங்கள் .
.காலங்கள்…
.உயர்வுகள்…
.வசதிகள்..
அவரை மாற்றி விடவில்லை..
எந்த சூழ்நிலையிலும் மன மடிவின்றி செய்வேன் என்ற உறுதியை அந்த கர்த்தருடைய மனிதனிடம் கண்டேன்……
வருடங்கள் .
.காலங்கள்…
.உயர்வுகள்…
.வசதிகள்..
அவரை மாற்றி விடவில்லை..
(..அடுத்து நான் முகமறியாத ஒரு ஊழியக்காரனை பற்றி..
அழகாய் நிற்கும் யாரிவர்கள்…3
நான் என் இசைக் குழுவினரோடு வண்டிப்பெரியார் போய் சேரும்போது மதியம் ஆகிவிட்டது.
அப்போது எங்கள் குழுவில்
எனக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது…
மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள வண்டிப்பெரியார் என்ற இடத்தில் இருந்து அர்னக்கல் எஸ்டேட் போக ஜீப்பில் பயணம் செய்ய வேண்டும்.
அப்போது எங்கள் குழுவில்
எனக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது…
மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள வண்டிப்பெரியார் என்ற இடத்தில் இருந்து அர்னக்கல் எஸ்டேட் போக ஜீப்பில் பயணம் செய்ய வேண்டும்.
அங்கு உள்ள அசெம்பிளி ஆப் காட் சர்ச்சில் கன்வென்ஷன்.
பாஸ்டர் மனோஸ் பைபிள் ஸ்கூல் முடித்து விட்டு.. பின் அவர் ஊழியம் செய்வதற்காக முதலில் பொறுப்பேற்ற சபை அது.
அங்கு கண்வென்ஷனில் நான் பாட வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இவர்களை அழைத்து சென்றேன்.
என்னோடு வந்தவர்கள்.
கீபோர்ட்..சகோ: டேவிட் ராஜசெல்வன்.
கிட்டார்….சகோ…ஜெம் கபிரியேல்
கிட்டார்….சகோ..ஜான் துரை
டிரம்ஸ்…சகோ:;காட்வின்.அவர் சகோதரனுடன்
பேஸ்கிட்டார்….சகோ…சாம்.
கிட்டார்….சகோ…ஜெம் கபிரியேல்
கிட்டார்….சகோ..ஜான் துரை
டிரம்ஸ்…சகோ:;காட்வின்.அவர் சகோதரனுடன்
பேஸ்கிட்டார்….சகோ…சாம்.
இவர்கள் எல்லாம் இப்போது இசை உலகில் உன்னத நிலையில் இருக்கிறார்கள்..என்பது நீங்கள் அறிந்த ஒன்று..
பாடுவது வழக்கம்போல் நான்..
(…நான் அன்று போலவே இன்றும்.. ..)….
(…நான் அன்று போலவே இன்றும்.. ..)….
முதல் நாள் கூட்டம் ஆரம்பமானது….….
அந்த எஸ்டேட்டில் அதிகமான குளிருக்கு மத்தியல் .ஒரு சிறிய ஆலய கட்டடத்தில் இந்த கூட்டம் நடந்தது…
மொத்தமே ஒரு நூறு பேர் கூடியிருப்பார்கள்
அங்கு பிரசங்கம் பண்ண அழைக்கபட்டிருந்தவர்.பாஸ்டர் கேஜே ஆபிரகாம்.
அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.
ஆகவே மலையாளத்திலும்…மலையாளம் கலந்த தமிழிலும் செய்தி கொடுத்தார்….
ஆகவே மலையாளத்திலும்…மலையாளம் கலந்த தமிழிலும் செய்தி கொடுத்தார்….
ஒரு விஷயம்…
நான் பார்த்து பிரமித்த கர்த்தருடைய உழியர்கள் அனைவரும் பக்திவைராக்கியத்திலும்… வேதவசனத்தை கூறுவதிலும் .அவர்கள் கோபமடைவதும்..எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருந்தது..
நான் பார்த்து பிரமித்த கர்த்தருடைய உழியர்கள் அனைவரும் பக்திவைராக்கியத்திலும்… வேதவசனத்தை கூறுவதிலும் .அவர்கள் கோபமடைவதும்..எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருந்தது..
பெந்தேகோஸ்தே உபதேசத்தை ஏற்றுக்கொண்டதால் ..பாஸ்டர் கே.ஜே. ஆபிரகாமை ..அவருடைய பெற்றோரே அவரை வீட்டைவிட்டு வெளியே துரத்தினார்களாம்..
ஒரு பெட்டியில் அவருடைய துணிகளை வைத்து அதை தூக்கி ரோட்டில் வீசி எறிந்து விட்டு…. அப்படியே போய்விடு ….என்று துரத்தி இருக்கிறார்கள்..
இவர் போய் அந்த பெட்டியை தூக்க செல்லும் போது …அவர் தகப்பனார் அருகே வந்து…..
இதே ரோட்டில் நீ பிச்சைக்காரனாய் வருவாய் இது சத்தியம் என்றாராம்..
பாஸ்டர் அழுது கொண்டே…….
இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பின்னோக்கேன் நான்….பின்னோக்கேன் நான்………….என்று பாடிய படியே கடந்து போனாராம்.
பல இன்னல்களை சகித்து.
பலரை கர்த்தருக்குள் வழிநடத்தி,
பல சபைகளை கட்டி எழுப்பிய அந்த மனிதனின் சாட்சியையும் பிரசங்கத்தையும் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது..
+
…இயேசு என்னை அழைத்ததால் என் தகப்பனும் தாயும் என்னை கைவிட்டு விட்டார்கள்….
ஆனால் இயேசு என்னை
கைவிடவே இல்லை ..என்றார்.

பல வருடங்கள் கழிந்தது பாளையங்கோட்டையில் ஒரு வேலையாக என்மகனும் ,மனோஸ் பாஸ்டரும்,..அவர் மகனும்
அன்னப்பூர்ணா ஹோட்டிலின் முன்னே நின்று கொண்டிருக்கும்போது.
அன்னப்பூர்ணா ஹோட்டிலின் முன்னே நின்று கொண்டிருக்கும்போது.
அந்த ஹோட்டலில் எதிர்புறம் கார் கதவை
திறந்து வைத்தபடி ஒரு வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்..
திறந்து வைத்தபடி ஒரு வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்..
அவரை தற்செயலாக எதிர்புறத்தில் இருந்து பார்த்த மனேஸ் பாஸ்டர்…
ஆ…..ஆது பாஸ்டர்..கே.ஜே ஆபிரகாம் அல்லவா..?..என்று இந்த இரண்டு பிள்ளைகளையும். கையை பிடித்து இழுத்து கொண்டு பயங்கர டிராபிக் நடுவில் வேகமாக சாலையை கடந்து சென்று பாஸ்டர்கேஜே ஆபிரகாம் முன்னே நிறுத்தி…
பாஸ்டர் ஸதோத்திரம்.. என்று கூறியிருக்கிறார்.

பதிலுக்கு அவர்….ஆராணு….?(யாரது..)
நான் தான் ..பாஸ்டர் மனோஸ்…
பாஸ்டர்..கே.ஜே .ஆபிரகாமால் மனோஸ் பாஸ்டரை அடையாளம் கூற முடியவில்லை.
ஒரு காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்த அந்த தேவதாசன் இன்று வயோதிகத்தில் குன்றிப்போய் இருந்திருக்கிறார்.
பாஸ்டர் மனோஸ்…மனதிற்குள்… தன்னை அடையானம் கண்டு கொள்ளா விட்டாலும் பரவாயில்லை ..என நினைத்து கொண்டு..
…
இவர்களுக்கு ஜெபம்பண்ணுங்க பாஸ்டர் என்று இரண்டு பிள்ளைகளையும் அவர் முன்னே நகர்த்தி இருக்கிறார் .
…
இவர்களுக்கு ஜெபம்பண்ணுங்க பாஸ்டர் என்று இரண்டு பிள்ளைகளையும் அவர் முன்னே நகர்த்தி இருக்கிறார் .
என் மகனுக்கு அப்போது இருபத்தியிரண்டு வயது.
இதற்கு முன்னே அவன் பாஸ்டர் கேஜே ஆபிரகாமை பார்த்ததில்லை.
.
அவன் என்னிடம் வந்து சொன்னான்..
இதற்கு முன்னே அவன் பாஸ்டர் கேஜே ஆபிரகாமை பார்த்ததில்லை.
.
அவன் என்னிடம் வந்து சொன்னான்..
அவர் (..பாஸ்டர்.கே.ஜே ஆபிரகாம்…) பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக இருந்தார்.
என் தலையில் கைவைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடன் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டார்….
என்ன ஒரு ஜெபம்……!…
என் தலையில் கைவைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடன் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டார்….
என்ன ஒரு ஜெபம்……!…
.என் மீது வல்லமை இறங்கியதை நான் உணர்ந்தேன்…என்றான்.
நான் என் மனதிற்குள் நினைத்து கொண்டேன்..
என் தேவன்
வளருகின்ற பிள்ளைகளிடமும் எவ்வளவு கரிசனை உள்ளவராய் இருக்கிறார்…
இது சாதாரண காரியமா…..உலகத்தை மொத்தமாக அந்த தேவ மனிதனின் முன்னே வைத்தாலும் .ஊழியம் செய்ய நடந்து திரிந்த அவர் கால்களின் தூசிக்கு உலகம் ஈடாகாதே

….அந்த கார்த்தருடைய மனிதனின் ஆசிர்வாதம் தலைமுறை தலைமுறையாய் என் மகன்மேல நிற்கும் என நம்புகிறேன்.
இப்போது பாஸ்டர் கேஜே. ஆபிரகாம் வயோதிகத்தில் இருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டில் கால் மிதித்து விட்டு வந்தால் எந்த அளவு ஆசீர்வாதம் என்று நானறியேன்.
ஆனால் இவரைப்போல் ஒருதேவ மனிதனின் கரம் நம் பிள்ளைகள் சிரசின் மேல் பட்டால் அது அவனை உயிரோடு காப்பாற்றும்.
வேதத்தை சுமந்து திரிந்த கைகள் அல்லவா…
..(அடுத்து சாது ஏசுதாசன் அவர்களை பற்றி..)
வேதத்தை சுமந்து திரிந்த கைகள் அல்லவா…
..(அடுத்து சாது ஏசுதாசன் அவர்களை பற்றி..)
அழகாய் நிற்கும் யாரிவர்கள்—4
காஞ்சிரகோடு மெயின் ரோட்டுக்கு வந்து நின்று கொண்டு நிதானமாக கிழக்கே பார்த்தார் சாது ஏசுதாசன்…..
ரோடு வெறிச்சோடி கிடந்தது..
வானத்தை ….பாதி கண்ணை மூடியபடி பார்த்தார்.
மேக மூட்டமாக இருந்தது. மழை வரலாம்..
தன் கையில் இருந்த மிகப்பொரிய குடையை அசைத்து பாரத்து கொண்டார்.
பின் ரோட்டில் இறங்கி கிழக்கே தக்கலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
பின் ரோட்டில் இறங்கி கிழக்கே தக்கலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
தக்கலைக்கும் காஞ்சிரக்கோட்டுக்கும் அல்லது மார்தாண்டத்துக்கும் தக்கலைக்கும் நடுவாக இருப்பது சுவாமியார்மடம்..
சுவாமியார் மடத்துக்கு உள்ளே தென்பக்கமாக உள்ள ஊர் தெற்றை…
அங்கே உள்ள ஜெபவீட்டில் கன்வென்ஷன்
நடத்துவதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நடத்துவதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை முதல் ஞாயிறு இரவு வரை கன்வென்ஷன் நடக்கும்.
சாது ஏசுதாசன் திங்கட்கிழமை காலையிலேயே வந்து விடுவார்.
குமரி மாவட்டத்தில் ..கன்வென்ஷனுக்கு பந்தல் போடுவதென்றால் அதிக செலவும் நேரமும் ஆகும்…
பந்தலை மோடுவைத்து உயர்த்தி கட்டவேண்டும்…
நான்கு பக்கமும் ஒரு ஆள் உயரத்திற்கு தட்டியால் மறைக்க பட வேண்டும்..
பந்தலை மோடுவைத்து உயர்த்தி கட்டவேண்டும்…
நான்கு பக்கமும் ஒரு ஆள் உயரத்திற்கு தட்டியால் மறைக்க பட வேண்டும்..
பந்தலுக்கு உள்ளே ஒரு அடி உயரமுள்ள சிறிய மேடை அமைக்க வேண்டும்..
மிக முக்கியமான ஒருவிஷயம் பந்தலுக்கு பக்கத்தில் சிறிய குடில் ஒன்று அமைக்கபடவேண்டும்
.முன்பக்கம் திறந்திருக்ககவும் .மற்ற மூன்று பக்கமும் சிறிய அடைப்பும் இருக்கவேண்டும்.
.குடிலுக்கு உள்ளே ஒரு பாய் மட்டும் விரிக்கபட்டிருக்கும்.
.குடிலுக்கு உள்ளே ஒரு பாய் மட்டும் விரிக்கபட்டிருக்கும்.
கன்வென்ஷன் முடியும் மட்டும்..இரவும் பகலும் சாது ஏசுதாசன் என்ற தேவ மனிதன் அந்த குடிசையிலே இருப்பார்.
யார் வேண்டுமானாலும் ..எப்போது வேண்டுமானாலும் அவரைப் பார்க்கலாம்… ஜெபிக்கலாம்..
விசுவாசிகள் ஜெபித்துவிட்டு அவரிடம் காணிக்கை கொடுத்தால்…..அவர் அவர்களிடம்………காணிக்கையை. கொண்டுபொய் காணிக்கை பெட்டியில் போடு என்று கூறிவிடுவார்….
விசுவாசிகள் ஜெபித்துவிட்டு அவரிடம் காணிக்கை கொடுத்தால்…..அவர் அவர்களிடம்………காணிக்கையை. கொண்டுபொய் காணிக்கை பெட்டியில் போடு என்று கூறிவிடுவார்….
எவரிடமும் கை நீட்டி காணிக்கை வாங்கியது இல்லை.
யார் எவ்வளவு பணம் தருபவர்கள் என்கின்ற விபரமும் அவருக்கு தெரியாது.
இதனால் அவருக்கு அனைவரும் சமமே..
நான் தான் நிறைய காணிக்கையை தருகிறேனே.என்வீட்டிற்கு வந்து ஜெபித்து விட்டு போனால் என்ன…. என்று அவரிடம் விரல் நீட்ட முடியாது..
சாது ஏசதாசன் வித்யாசமான மனிதர்.
சாது ஏசதாசன் வித்யாசமான மனிதர்.
ஒரு பைசா கூட அவர் கைகளில் கொண்டு போவது கிடையாது…அவருக்கு வேண்டியது தானாகவே வரும்.
யார் வீட்டுக்கதவை தட்டியும் நான் கூட்டம் நடத்தபோகிறேன் உங்கள் மனதில் கர்த்தர் ஏவிய படி செய்யுங்கள் என இறங்கி கேட்டதும் இல்லை…
.
கூட்டம் நடத்தி முடிந்த பின் ..
.
கூட்டம் நடத்தி முடிந்த பின் ..
பந்தல் காரனுக்கும் மற்றவர்களுக்கும் கணக்கு சரி செய்யப்படும்.
ஒருவேளை அவரிடம் அப்போது பணம் இல்லை என்றாலும்…அவர்கூப்பிட்டு கொடுக்கும் வரை யாரும் அவரிடம் பணம் கேட்க போவதும் இல்லை….
அவ்வளவு பயமும் மரியாதையும் அவரிடம் மக்களுக்கு உண்டு..
சபைக்கு வரும் ஒவ்வொருவருடைய பெயரும் அவருக்கு தெரியும் …
தெற்றையை ஊடுருவி ஒரு கால்வாய் போகிறது.
அதின் கரையயில் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் பேர் சொல்லி கூப்பிடுவார்.
சில நிமிடத்தில் அவரை சுற்றி சிறிய கூட்டம் கூடிவிடும். அனைவரையும் விசாரிப்பர்.
உபதேசம் பண்ணுவார்.
மொத்தமாக ஜெபம் பண்ணுவார்.கிளம்பி போய்விடுவார்..

என்வீட்டுக்கு வாருங்கள் என்று யாராவது அழைத்தால் வருகிறேன் என்பார்.
ஆனால் எப்போது போவார் என அவருக்கும் தெரியாது அழைத்தவனுக்கும் தெரியாது.
தெய்வ வழி நடத்துதல் இருந்தால் போவார்.
ஆனால் எப்போது போவார் என அவருக்கும் தெரியாது அழைத்தவனுக்கும் தெரியாது.
தெய்வ வழி நடத்துதல் இருந்தால் போவார்.
இல்லையெனின் வருகிறேன் என்று மட்டும் கூறி முடித்து விடுவார்…
சாது ஏசுதாசன் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
வேத அறிவு நிறைந்தவர்..
கன்வென்ஷனுக்கு வரும் பிரசங்கியார் எதாவது தவறாக பிரசங்கித்தாரெனின் அவர் பிரசங்கத்தை முடித்தவுடன் சாது எழும்புவார்...சிறியதாய் திருத்தம் செய்து சொல்ல வேண்டியதை சொல்லி முடிப்பார்.
வேத அறிவு நிறைந்தவர்..
கன்வென்ஷனுக்கு வரும் பிரசங்கியார் எதாவது தவறாக பிரசங்கித்தாரெனின் அவர் பிரசங்கத்தை முடித்தவுடன் சாது எழும்புவார்...சிறியதாய் திருத்தம் செய்து சொல்ல வேண்டியதை சொல்லி முடிப்பார்.
சாது கன்வென்ஷன் பந்தலுக்கு வரும்போது காலை பத்து மணியாகிவிட்டது .
.
அந்த இடத்தில் ஊழியம்செய்து பாஸ்டர் செல்லையா என்பவர்
சாதுவை வரவேற்றார்.
சாது நலம் விசாரித்து விட்டு குடிக்க தண்ணீர் கேட்டார் .
தண்ணீரும் கருப்பு கட்டியும் அவருக்கு தரப்பட்டது.
.
அந்த இடத்தில் ஊழியம்செய்து பாஸ்டர் செல்லையா என்பவர்
சாதுவை வரவேற்றார்.
சாது நலம் விசாரித்து விட்டு குடிக்க தண்ணீர் கேட்டார் .
தண்ணீரும் கருப்பு கட்டியும் அவருக்கு தரப்பட்டது.
தனது குடிசைக்கு கொண்டு வரும்படி சொல்லிவிட்டு. குடிசையை நோக்கி போக ஆரம்பித்தார்..
குடிசைக்குள் போய் உடகார்ந்து கொண்டு கண்களை மூடி தெய்வமே மழை வந்து கொட்டி தீர்த்து விட்டால் கூட்டம் தடைபடுமே.
இரவு வரை மட்டும் மழையை தடை செய்து வையும் கர்த்தாவே என்று பிராத்தனை செய்தவாறு இருந்தார்.
குடிசைக்குள் போய் உடகார்ந்து கொண்டு கண்களை மூடி தெய்வமே மழை வந்து கொட்டி தீர்த்து விட்டால் கூட்டம் தடைபடுமே.
இரவு வரை மட்டும் மழையை தடை செய்து வையும் கர்த்தாவே என்று பிராத்தனை செய்தவாறு இருந்தார்.
கன்வென்சன் பிரசங்கியார் கேரளாவில் இருந்து வரவேண்டும்.
ஜெபித்து கொண்டே இருந்தவர்…..
ஏதொ ஒன்று தன்னை ஜெபிக்கவிடாமல் தடையாய் இருந்து பின் தாண்டிப்போவது போல உணர்ந்தார்.
எதுவாயிருக்கும்.அல்லது யாராயிருக்கும்.ஜெபத்திற்கு இடைஞ்சலாய்….
கண்ணை திறந்து பார்த்தார். ……
நேர் எதிரே உள்ள நடைபாதையில் ஒரு பெண் நடந்து போய் கொண்டிருந்தாள்.
நேர் எதிரே உள்ள நடைபாதையில் ஒரு பெண் நடந்து போய் கொண்டிருந்தாள்.
இவள் எதற்கு என் ஜெபத்தின் குறுக்கே வருகிறாள்.
பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த ஒரு பையனை அழைத்து அதோ போகிறாள் பார்…அவளை அழைத்து கொண்டு வா என்றார்..
அவன் போய் அவளிடம் சாது ஐயா உங்கள கூப்பிடுறாங்க என்றான்.
அவள் திரும்பி சாதுவைப் பார்த்தாள்.
அவள் திரும்பி சாதுவைப் பார்த்தாள்.
பின் பையனிடம் …..
வீட்டுக்கு போயிட்டு வாரேன்னு சொல்லு..என்று கூறிவிட்டு சென்று விட்டாள்…
சாது மீண்டும் ;கண்களை மூடினார்.
வீட்டுக்கு போயிட்டு வாரேன்னு சொல்லு..என்று கூறிவிட்டு சென்று விட்டாள்…
சாது மீண்டும் ;கண்களை மூடினார்.
இவளை மறந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.
ஐயா..
கண்களைத் திறந்தார்..எதிரே அந்த பெண் பயபக்தியோடு நின்று கொண்டிருந்தாள்..
கண்களில் பயம் இருந்தது….நேராக பார்க்காமல் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது…
கண்களைத் திறந்தார்..எதிரே அந்த பெண் பயபக்தியோடு நின்று கொண்டிருந்தாள்..
கண்களில் பயம் இருந்தது….நேராக பார்க்காமல் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது…
இவளை எங்கோ பார்த்திருக்கிறேன்….. எதற்கு என்னை கண்டு அஞ்சுகிறாள்…
மீண்டும் கண்களை மூடினார். அந்த காரியம் தெளிவாக தெரிந்தது.
போனவருடம் இதே போல் கன்வென்ஷன் நேரம் கணவனுடன் வந்து எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை என்று அழுதார்கள்.
ஏற்ற காலத்தில் குழந்தையை கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்னார்.
குழந்தை அவ்வாறே பிறந்தது.
அது வரைக்கும் ஆராதனைக்கு ஒழுங்காக வந்தவள் …குழந்தை பிறந்த பின் ஆராதனைக்கு வரவேயில்லை.
அது வரைக்கும் ஆராதனைக்கு ஒழுங்காக வந்தவள் …குழந்தை பிறந்த பின் ஆராதனைக்கு வரவேயில்லை.
அவள் வேறு மதத்தை சேர்ந்தவள். தன் மதத்து ஒழுங்கின் படியே அதற்கு காது குத்தி செய்யவேண்டிய சடங்குகளை செய்து முடித்தாள் .
.கர்த்தரை மறந்தாள்.
.கர்த்தரை மறந்தாள்.
ஆதனால் சாதுவை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க விரும்பினாள்.
கர்த்தர் அவளை விடுவதாக இல்லை…
அவளை நேசித்தார்.
கர்த்தர் அவளை விடுவதாக இல்லை…
அவளை நேசித்தார்.
சாது ஏசுதாசன் அவளை பார்த்து..எப்படி இருக்கிறாய்..என்றார்.
நல்லா இருக்கேன் ஐயா..
ம்…பிள்ளை எப்படி இருக்கிறது…
ம்…பிள்ளை எப்படி இருக்கிறது…
நல்ல சுகமா இருக்குது ஐயா..
சரி… ஆராதனைக்கு ஒழுங்கா வருகிறாயா…?
அவள் திணறினாள்….என்ன சொல்வது……?
ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே….குழந்தை மீது பழியை போட வேண்டியது தான்..
ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே….குழந்தை மீது பழியை போட வேண்டியது தான்..
ஐயா..ஆராதனைக்கு வந்து கொஞ்சகாலம் ஆச்சு..
ஏன்..?
அந்த புள்ள பயங்கர சேட்டைங்க..ஒரு நிமிட்ம கூட சும்மாவே இருக்கமாட்டங்குது. அத வச்சி கிட்டு எப்படி கோயிலுக்கு வரமுடியும்..அதான் வர்ரது இல்லைங்க.
ம்..சரி….ஆராதனைக்கு வர முடியாமல் தடைபண்ணுகிற தடையை கர்த்தர் உன்னிடம் இருந்து நீக்குவாராக……சரி நீ போகலாம்.
அவள் போய்விட்டாள்.
சாது மீண்டும் கண்களை முடிக்கொண்டார்
கர்த்தர் அவளிடம் கோபமாய் இருப்பது அவருக்கு தெரிந்தது.
அவளை மன்னிக்குமாறு கர்த்தரிடம் வேண்டுதல் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு இருபது நிமிடம் கழிந்து இருக்கும்….ஒரு பயங்கரமான ஓலம்..
ஜயோ போச்சே…..ஐயோ போச்சே….
அதே பெண்மணி அலறியபடி ஓடி வந்து கொண்டிருந்தாள்.அவள் கைகளில் செத்து விரைத்து போன நிலையில் அவள் குழந்தை…
சாதுவின் குடிசை கன்வென்சன் நடக்க இருக்கும் இடத்திறகு தென்பக்கமாக இருக்கிறது.
அவருக்கு வடக்கு பக்கத்தில் ஜெப வீடு.
அவருக்கு வடக்கு பக்கத்தில் ஜெப வீடு.
அவள் சாதுவின் குடிசையை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள். குழந்தைக்கு விரைத்து கால்கள் நீண்டு போய் இருந்தது…
தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் .ஐயா மன்னியுங்க.
அவள் அலறிய சத்தம் அங்கிருக்கும் அடர்ந்த மரங்களில் மோதி எதிரொலித்தது.
சாது எழுந்து குடிலுக்கு வெளியே வந்தார். ஓடி வந்தவளை பார்த்து ஜெபவீட்டை நோக்கி கையை காட்டினார்.
சாது எழுந்து குடிலுக்கு வெளியே வந்தார். ஓடி வந்தவளை பார்த்து ஜெபவீட்டை நோக்கி கையை காட்டினார்.
அவள் புரிந்து கொண்டு செத்துப்போன குழந்தையுடன்
ஜெப வீட்டிற்குள் ஓடினாள்.
ஜெப வீட்டிற்குள் ஓடினாள்.
குழந்தையை கிடத்திவிட்டு முகங்குப்புற விழுந்து நீண்ட பெருமுச்சுடன் அழ ஆரம்பித்தாள்.
சாது மெதுவாக அவள் அருகே சென்று..இப்போ எதுக்கு இப்படி சத்தம் போடுகிறாய் ..என்றார்.
சாது மெதுவாக அவள் அருகே சென்று..இப்போ எதுக்கு இப்படி சத்தம் போடுகிறாய் ..என்றார்.
என் பிள்ள செத்து போச்சே என்றாள்…
சாது அவளை அமைதியாய் இரு… என்று சொல்லிவிட்டு
குழந்தையின் கண்களில் கையை வைத்து
இயேசுவின் இரத்தம் ஜெயம்… இயேசுவின் இரத்தம் ஜெயம்… .உயிரைக்கொடும் ஆண்டவரே..
குழந்தையின் கண்களில் கையை வைத்து
இயேசுவின் இரத்தம் ஜெயம்… இயேசுவின் இரத்தம் ஜெயம்… .உயிரைக்கொடும் ஆண்டவரே..
குழந்தையின் முகத்தில் இருந்து கையை எடுத்தார்.
குழந்தை கண் விழித்து அவரை பார்த்தான்.
சாது அவளைப் பார்த்து….
பிள்ளையை எடுத்துக்கொள்..ஆராதனையை தவறவிடாதே..இந்த பிள்ளை கர்த்தரின் ஊழியத்துக்கு ஒப்புக்கொடு என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார்.
குழந்தை கண் விழித்து அவரை பார்த்தான்.
சாது அவளைப் பார்த்து….
பிள்ளையை எடுத்துக்கொள்..ஆராதனையை தவறவிடாதே..இந்த பிள்ளை கர்த்தரின் ஊழியத்துக்கு ஒப்புக்கொடு என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார்.
குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிட்டாள் அந்த தாய்.
அதன் பின் வந்த நாட்களில் இவரைக் கடவுளாக மக்கள் நினைக்க ஆரம்பித்தனர்..ஆகவே அவர் தனிபட்ட முறையில் ஜெபம் செய்வதை நிறுத்தி ஆராதனைக்கு வரச்சொல்லுவார்.மொத்தமாக ஜெபிப்பார்…
அவர் மீது பாசத்தினால் யாராவது போட்டோ எடுத்து அவரிடம் கொண்டு போய் காட்டினால் அவர் அதை வாங்கி துண்டு துண்டாக கிழித்து வீசி விடுவாராம்.
என் மனைவி கிருபாசன சபையின் விசுவாசி.
சாது ஏசுதாசனை பலதடவை பார்த்தவள் .அவரிடம் இருந்து வேதத்தை கற்றவள். நான் இப்போது சொன்ன சம்பவம் இன்னும் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்…ஆனால் யாருமே இந்த இடத்தில்
இது நடந்தது என்று கூற முடியவில்லை.ஆகவே இது நடந்ததாக நான் கூறும் இடம் மட்டும் என் கற்பனையே….ஆனால் சம்பவம் உண்மையே..

அவரை பற்றிய பயம் இன்னமும் விசுவாசிகள் மனதில் இருக்கிறது.
பணத்தை காலின் கீழ்போட்டு மிதித்த கர்த்தரின் ஊழியக்காரன்..
யாரும் அவருக்கு விலை பேச முடியவில்லை..
கன்னியாகுமரி முதல் மும்பைவரையிலும் அவர் சபைகளை ஸ்தாபித்தார்….
எலியாவைப்போல் கர்த்தரின் ஆவியை பெற்றவர்.
கன்னியாகுமரி முதல் மும்பைவரையிலும் அவர் சபைகளை ஸ்தாபித்தார்….
எலியாவைப்போல் கர்த்தரின் ஆவியை பெற்றவர்.
கர்த்தருக்கு மட்டும் பயந்து நடந்த அற்புதமான தேவ மனிதன்…
(நாளை இன்னொரு சம்பவத்துடன்..)
(நாளை இன்னொரு சம்பவத்துடன்..)
சாது ஏசுதாசன் ஐயா அவர்களுக்கு நடந்து போவது மிகவும் பிடிக்கும்,
அதுவும் நடந்து போகும்போது விசுவாச குடும்பங்களை நினைத்து ஜெபித்து கொண்டே செல்லுவார்.
அதுவும் நடந்து போகும்போது விசுவாச குடும்பங்களை நினைத்து ஜெபித்து கொண்டே செல்லுவார்.
ஆகவே விசுவாசிகள் பிள்ளைகள் திருமண விஷயத்தில் சாதுவை கேட்காமல் அவரின் விசுவாசிகள் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள்.
அவர் வேண்டாம் என்று சொல்லி அதை மீறி திருமணம் நடந்தது எனின் அவர்கள் வாழ்க்கை மிகவும் சோகமாகவே அமைந்திருக்கிறது..
அன்றும் சாது ஏசுதாசன் வழக்கம்போலவே ஜெபித்து கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தார்.
அவர் வேண்டாம் என்று சொல்லி அதை மீறி திருமணம் நடந்தது எனின் அவர்கள் வாழ்க்கை மிகவும் சோகமாகவே அமைந்திருக்கிறது..
அன்றும் சாது ஏசுதாசன் வழக்கம்போலவே ஜெபித்து கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தார்.
வேதமாணிக்கத்துக்கு ஐம்பது வயது இருக்கும்.
வீடு கட்டும் வேலையில் .கொத்தனாரின் கையாளாக வேலை செய்பவர்.
இரண்டு பெண் பிள்ளைகள்.
இரண்டு பேருமே திருமண பருவத்தில் இருப்பவர்கள்.வேதமாணிக்கம் பாரம்பரிய கிறிஸ்த்தவர்.
எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் கோவிலுக்கு போவார்.

எந்த கவலையும் அவர் பட்டதே இல்லை.காய்ச்சல் வந்து அவர் படுத்ததும் இல்லை..
சித்தாளாகவே சுமார் முப்பது வருடங்கள் காலத்தை கழித்து விட்டார்.எழுத படிக்க மட்டுமே தெரியும்.மிகப்பெரிய சம்பாத்தியம் கிடையாது.
ஏதோ …கொஞ்சம் நகைகள் செய்து வைத்து இருந்தார்.
ஆனால் பிள்ளைகளின் கல்யாண பேச்சு ஆரம்பமானவுடன் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் தொகையும் போடும் நிபந்தனைகளும் மிக அதிகமாக அவர் மனதை பாதித்தது..
இத்தனை வருடமாக எப்படி வெறும் கையாளாகவே வாழ்ந்து விட்டேன்.
கொத்தனார் ஆவதற்கு எல்லா தகுதியும் இருந்தும் ஏதோ ஒரு தயக்கம் அவரை சித்தாளாகவே வைத்து விட்டது.

கொத்தனார் ஆகியிருக்கலாம்.
பின் சின்ன வேலைகளை சொந்தமாக எடுத்து நடத்தி இருக்கலாம்.மொத்தத்தில் நாலு காசு சேர்த்திருக்கலாம்.
பின் சின்ன வேலைகளை சொந்தமாக எடுத்து நடத்தி இருக்கலாம்.மொத்தத்தில் நாலு காசு சேர்த்திருக்கலாம்.
மனிதனுடைய முயற்சிகள் அனைத்துமே பணத்தில்தானே முடிகிறது…பணத்தை சேர்ப்பவனே வாழ்க்கையில் ஜெயித்தவன்….நல்ல மனிதனாக இருப்பவனும் பணத்தை சேர்த்து வைக்காவிட்டால் உறவுகள் அவனை மதிக்காது….உறவுகள் பலப்பட பணம் தானே இணைப்பு கயிறாய் இருக்கிறது.
இருப்பதை கொண்டு மூத்த மகளின் கல்யாணத்தை முடித்து விடலாம்.
அடுத்து இளைய மகளுக்கு இனி உழைத்து சொத்து சேர்க்கமுடியுமா..?
சில சமயம் வயோதிகத்தன் அடையாளமாய் தன் கால்கள் தள்ளாடுவதை அவர் அறிந்திருக்கிறார்…..
அடுத்து இளைய மகளுக்கு இனி உழைத்து சொத்து சேர்க்கமுடியுமா..?
சில சமயம் வயோதிகத்தன் அடையாளமாய் தன் கால்கள் தள்ளாடுவதை அவர் அறிந்திருக்கிறார்…..
மூத்தவளுக்கு போட்ட நகை அளவு இளையவளுக்கும் போடச்சொல்லி கட்டாயபடுத்தபடுமே….
.எப்படி என்னால் முடியும். இனி எனக்கு பொலனான நாட்கள் வருமோ..
இப்படி நினைத்து நினைத்து தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார்.
.எப்படி என்னால் முடியும். இனி எனக்கு பொலனான நாட்கள் வருமோ..
இப்படி நினைத்து நினைத்து தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார்.
தெய்வமே தெய்வமே என்றுபல தடவை…. வானத்தை….. வானத்தை….. பார்த்துகொள்வார்….
அன்று கட்டுமானத்திற்கு வேண்டிய செங்கல்களை கீழிருந்து மேல்நோக்கி வீசுகிறார்.மேலே நிற்பவன் அதை லாவகமாக பிடித்து அடுக்கி வைக்க வேண்டும்.சுமார் நூறு செங்கல் மேலே பேன பின் சுவர் கட்டப்படும்.
மேலே செங்கலை கையால் பிடித்து அடுக்கி கொண்டிருப்பவன் இளைஞன்.அவன் அடிக்கடி ரோட்டைபார்த்து கொண்டே கீழே இருந்து வேத மாணிக்கம் வீசும் செங்கலை பிடித்து அடுக்கி கொண்டிருந்தான்..
சாது ஏசுதாசன் ஜெபித்து கொண்டே நடந்துகொண்டிருந்தார்.
வேதமானிக்கம் வேலை பார்த்துகொண்டிருக்கும் கட்டிடம் அருகில் வரவும்.கர்த்தர் சாதுவை பார்த்து…… அதோ நிற்கிறானே அவனுக்காக ஜெபம் பண்ணு …என்றார்…
சாது ஏசுதாசன் வேதமாணிக்கத்தை நடந்து கொண்டே பார்த்தார்.
வேதமாணிக்த்தின் வேதனை நிறைந்த உள்ளம் சாதுவுக்கு காட்டபட்டது..
இரக்கத்தோடு வேதமாணிக்கததை பார்த்து கொண்டிருக்கும்போது…………………..
இரக்கத்தோடு வேதமாணிக்கததை பார்த்து கொண்டிருக்கும்போது…………………..
வேதமாணிக்கம் கீழ்இருந்து மேலே வீசும் செங்கலை பிடிக்கும் வாலிபனின் கண்கள் ரோட்டில் யாரையோ தேடிக்கொண்டிருந்தன..
அவன் தேடுவது ஒரு பெண்ணை.
அவள் சாதுவுக்கு கொஞ்சம் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
தினமும் குறிப்பிட்ட இதே நேரத்தில் எங்கோ செல்பவள்.இன்று கொஞ்சம் தாமதமாக வருகிறாள்.
அவன் தேடுவது ஒரு பெண்ணை.
அவள் சாதுவுக்கு கொஞ்சம் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
தினமும் குறிப்பிட்ட இதே நேரத்தில் எங்கோ செல்பவள்.இன்று கொஞ்சம் தாமதமாக வருகிறாள்.
அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் கண்கள் அவளை பார்த்ததும்
ஒரு நொடி செயல் இழந்தது.
ஒரு நொடி செயல் இழந்தது.
மேல்நோக்கி வந்து கொணடிருந்த செங்கலை பிடிக்க தவறி விட்டான்.
செங்கல் அவன் பின்னங்கையில் பட்டு தெறித்து வேகமாக கீழ்நோக்கி …அதாவது வேதமாணிக்கத்தின் உச்சந்தலையை நோக்கி வந்து கொண்டிருந்தது..
சாது ஏசுதாசன் இதை நன்றாக கவனித்து விட்டார்..
செங்கல் வேதமாணிக்கத்தின் தலையை தாக்கும் முன்……

…..சாது ஏசுதாசன் அவசரமாக வலது கையை நீட்டி இயேசுவே ..என்றார்…..
மேலிருந்து வந்த செங்கல் கொஞ்சம் வழி விலகியது…….சாது உணர்ச்சிவசப்பட்டதால் சற்று தள்ளாடினார்.
அவரின் வலது காலின் சுண்டு விரல் ரோட்டில் பதித்திருந்த ஒருபெரிய கல்லின் ஓரத்தில் வேகமாக மோதியதால் நகம் கிழிந்து இரத்தம் கசிந்தது.
அந்த பெண் அவரை கடந்து சென்றுவிட்டாள்..வேத மாணிக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சாது தன்காலை பார்த்தார் .வலி பயங்கரமாக இருந்தது.ரோட்டின் ஓரத்தில் பேய் நின்றுகொண்டு யோசித்தார்..
நடக்க முடியவில்லை..இனி விரைவாக நடக்கமுடியாது.என்ன செய்யலாம் ..யோசித்தார்.
நடக்க முடியவில்லை..இனி விரைவாக நடக்கமுடியாது.என்ன செய்யலாம் ..யோசித்தார்.
கர்த்தர் சொன்னார் பேருந்தில் போ என்றார்.
சாதுவிடம் கையில் பணம் எதுவும் இல்லை
பணம் இல்லையே ..ஆண்டவரே
உன்னிடம் யார் பணம் கேட்கிறார்கள் என்று நான் பார்த்து கொள்கிறேன்.
.நீ பேருந்தில் பயணம் செய்வாயாக.
சரி..என்று சொல்லிவிட்டு கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்தார்.நாகர்கோவில் வரை செல்லும் பஸ் ஒன்று களியக்காவிளையில் இருந்து வருகிறது.
சாது கையை நீட்டினார். பஸ் நின்றது..பின் மெதுவாக ஏறி பின் வாசல் அருகில் அமர்ந்து கொண்டார்..
சில வினாடிகழித்து பஸ் நடத்துனர் வந்து அருகே நின்றுகொண்டு ……எங்கே பொகவேண்டும்…?.
முளகுமூடு
கட்டணவிபரம் சொல்லப்பட்டது
சாது ஜன்னல்வழியாக வெளியே பார்த்து கொண்டிருந்தார்
நடத்துனர் சற்று சத்தமாக …….ஐயா காசை தாங்க..
சாது ஏசதாசன் கண்டக்டரின் முகத்துக்கு முகம் பார்த்தார்.
என்னிடம் காசு இல்லை …என்னை முளகு மூடுவரை கொண்டுபோக முடியுமா.. முடியாதா…?
சாதுவின் கம்பீரமான பேச்சு கண்டக்டரை கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்தது..
கண்டக்டருக்கு கோபம் வந்து விட்டது.
.காசு இல்லாம கூட்டிகிட்டுபோவதற்கு இது எங்க அப்பன்வீட்டு வண்டி இல்ல .கவர்மென்ட் வண்டி…காசு இல்லன்னா கீழ இறங்கும்..
இது யாரு அப்பன் வீட்டு வண்டின்னு இப்ப பார்க்கலாம்…
சாதுகோபத்துடன் பேருந்தை விட்டு இறங்கி பேருந்தின் பின் பக்கமாக ஒரு பத்தடிபோய் சாலையின் அருகில் இருந்த ஒரு கல்லில்மேல் உடகார்ந்துகொண்டார்..
நடந்த அனைத்தையும் பேருந்தின் ஓட்டுனர் தன் இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தார்..
சாது ஏசுதாசன் பின்வாசல் வழியாக இறங்கவும் …பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை கியரை மாற்றி ஆக்ஸிலேட்டரை மிதித்து கிளட்சியில் இருந்து தன் காலை மெதுவாக தூக்கினார்.இப்போது பேருந்து வேகம் எடுத்திருக்கவேண்டும்.
ஆனால் நடந்தது வேறு..
ஆனால் நடந்தது வேறு..
அது இயக்கத்தை நிறுத்தி அமைதியாகிவட்டது..டிரைவர் சாவியை திருகி செல்ப் மோட்டாரை இயக்கி பார்த்தார்…ம்…..அது சத்தம் கொடுக்கவே இல்லை.
சாது தூர உடகார்ந்து கொண்டு இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் .டிரைவர் மெதுவாக தன்சீட்டில் இருந்து திரும்பி கண்டக்டரை பார்த்து சத்தமாக சிரித்தார்..
என்ன பார்க்க….
.இது அவரு அப்பன் வீட்டு பஸ்..அவரு வராம இது கிளம்பாது….நீ தான அவர இறக்கி விட்ட.
.இப்ப நீயே போய்கூட்டிகிட்டுவா……..
.இது அவரு அப்பன் வீட்டு பஸ்..அவரு வராம இது கிளம்பாது….நீ தான அவர இறக்கி விட்ட.
.இப்ப நீயே போய்கூட்டிகிட்டுவா……..
கண்டக்டர் சொன்னார்..
நான் என்ன தப்பு பண்ணினேன்..டிக்கட் இல்லாம எப்படி ஏத்திகிட்டு போறது.
நான் என்ன தப்பு பண்ணினேன்..டிக்கட் இல்லாம எப்படி ஏத்திகிட்டு போறது.
அப்போது பஸ்ஸில் இருந்த ஒருவர் கண்டக்டரிடம் ..இந்தாங்க..அவருக்கு உரிய பணம்.அவரு எங்க போகவேண்டுமோ அதுக்கு நான் காசு தாறேன்.முதல்ல அவர வண்டியில ஏறச்சொல்லுங்க….
நான் எப்படி போய் சொல்றது……கண்டக்டர் திகைத்ததார்.
உடனே பஸ்ஸில் பயணம் செய்த பலருமாக சேர்ந்து சாதுவிடம் போய் ..தங்களோடு வருமாறு பரிவாக கேட்டனர்.
சாது கண்டக்டரை பார்த்து நீ உன் கடமையத்தான் செய்தே..சரிவாறேன் ..என்று மெதுவாக ஏறி உள்ளே போய் உடகார்ந்தார்……
கண்டக்டர் …விசிலடித்து…….ம்……..ரைட். போட்டும்…….
பஸ் விரைவாக ஓட்டம் எடுத்தது..
கர்த்தர் சாதுவிடம் சொன்னார்….
…யாரு உங்கிட்ட காசு கேட்பான்னு பர்க்கிறேன்..?....சாது தன் காலில் அடிபட்ட வேதனையை மறந்து சிரித்து கொண்டார்
…யாரு உங்கிட்ட காசு கேட்பான்னு பர்க்கிறேன்..?....சாது தன் காலில் அடிபட்ட வேதனையை மறந்து சிரித்து கொண்டார்
அழகாய் நிற்கும் யாரிவர்கள்...6
பாஸ்டர் SPடேனியேலை பற்றி முக்கியமான சில தகவல்கள் தேவைப்படுகிறது..ஆகவே அவரை பற்றி எழுத கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறேன்…
இன்று புளியரை ரத்தனம் பிரசங்கியார்..பற்றி…..
இவரை நான் பார்த்து சுமார் முப்பது வருடம் இருக்கும்.
ஒருநாள் கிராம ஊழியம் செய்ய வேண்டும் என்று சபையார் கிளம்பினார்கள்;;
.இரண்டு குழுக்களாக பிரிந்து ஊழியத்துக்கு சென்றோம்.
.இரண்டு குழுக்களாக பிரிந்து ஊழியத்துக்கு சென்றோம்.
திருநெல்வேலி பேட்டையை தாண்டி கல்லூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது.அதை மையமாக வைத்து ஊழியம் செய்யவேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.
நான் சென்ற குழு கல்லூரின் சுற்றுப்புறத்தில் ஊழியம் செய்தது.
எங்களுக்கு ஒன்றும் சேதம் இல்லை.
ஆனால் கல்லூரின் உட்புறமாக ஊழியம் செய்தவர்களுக்கு பலத்த சேதாரம்…
கல்லூர் மக்கள் மண்ணை அள்ளி சுற்றி நின்று வீசியும்….
கொண்டு போன டிரம்மை(கொட்டு..) கையால் குத்தி கிழித்தும் விட்டார்கள்.
இரண்டு குழுக்களும் மதியம் சாப்பாடு நேரத்தில் ஒன்றாய் சந்தித்தோம்.பின் அவர்களையும் எங்களோடு சேர்த்து கொண்டு ஊழியத்தை மாலை வரை கல்லூரின் சுற்றுப்புறங்களில் செய்து முடித்து விட்டு வந்தோம்.

அடுத்த நாள் வாலிபர் கூட்டம்…
அதில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஊழியத்தில் நடந்த சம்பவங்களை சாட்சியாக சொல்லவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அன்று முக்கியமான சாட்சி புளியரை ரத்னம் பிரசங்கியார் சாட்சி.
ரத்னம் பிரசங்கியாருக்கு சும்மா இருப்பது என்பது பிடிக்காத ஒன்று…
.யாரிடமாவது ஏசுநாதரை பற்றி சொல்லி ஏடாகூடமாய் வாங்கி கட்டி கொள்வது வழக்கம்.
உதாரணமாக சொல்கிறேன்..
ஒருநாள் கன்வென்ஷனுக்கு வால்போஸ்டர் ஒட்டுவதற்காக சகோதரர்கள் சென்றார்கள்.(அந்தக்காலத்தில் கன்வென்ஷன் வால்போஸ்டர் விசுவாசிகள்தான் ஒட்டுவார்கள்.

ஒவ்வொரு வால்போஸ்டர் ஓட்டும்போதும் ஜெபத்துடனே ஒட்டப்படும்.
இரவு முழுவதும் கண் விழித்து ஒட்டுவார்கள்.
அன்றும் அப்படியே நடந்தது .
இரவு 2மணி இருக்கும் பாளையங்கோட்டை வா.ஊ.சி மைதானம் அருகே வால்போஸ்ட் ஒட்டப்படும் போது .. போலீஸ் ஜீப் ஒன்று வந்து இவர்களை விசாரித்திருக்கிறது.

அப்போது அந்த வால்போஸ்ட் ஒட்டும் குழுவில் ரத்னம் பிரசங்கியாரும் உண்டு….
கேள்வி கேட்கும் போலிசாருக்கு இந்த குழுவில் ஒருவர் பெறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கேள்வி கேட்கும் போலிசாருக்கு இந்த குழுவில் ஒருவர் பெறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நமது ரத்னம் பிரசங்கியாருக்கு திடீர் எழுப்புதல்.
அவர் ஒரு வால்போஸ்டை கொண்டுபோய் ஜீப்பில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் நீட்டி..
இத கொண்டுபோய் உங்க வீட்ல ஒட்டிக்காங்க ..அப்போத்தான் தேவ ஆசீர்வாதம் கிடைக்கும் .என்று போலீஸ் அதிகாரியின் முகத்துக்கு முன்னே வால்போஸ்ட்டை காட்டி ஆட்டி இருக்கிறார்..
இத கொண்டுபோய் உங்க வீட்ல ஒட்டிக்காங்க ..அப்போத்தான் தேவ ஆசீர்வாதம் கிடைக்கும் .என்று போலீஸ் அதிகாரியின் முகத்துக்கு முன்னே வால்போஸ்ட்டை காட்டி ஆட்டி இருக்கிறார்..
அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
ஆக ….இப்போது ரத்னம் பிரசங்கியார் சாட்சி சொல்ல போகிறார் என்றதும் எங்களுக்கு ஒரே சந்தோசம்.
ஏனேன்றால் அவர் குழந்தை மாதிரி.
எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்வார்.நகைச்சுவையாக பேசுவார்.
ஏனேன்றால் அவர் குழந்தை மாதிரி.
எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்வார்.நகைச்சுவையாக பேசுவார்.
அன்று அவரின் சாட்சி……
ரத்னம் பிரசங்கியார் கிராமம் கிராமமாக செல்வார்.
கிடைத்ததை சாப்பிடுவார்.
எங்கேயாவது தூங்குவார்.அது மரத்தடியாக இருக்கலாம் .அல்லது யார் வீட்டு திண்ணையாக கூட இருக்கலாம்.
எங்கேயாவது தூங்குவார்.அது மரத்தடியாக இருக்கலாம் .அல்லது யார் வீட்டு திண்ணையாக கூட இருக்கலாம்.
அதெல்லாம் அவருக்கு பெரிய காரியம் அல்ல.ஆனால் அதிகாலையில் எழுந்து முச்சந்தியில் போய் நின்று கொண்டு .
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உன்னை இரட்சிக்கிறார் என்று சத்தம் போட்டு பிரசங்கம் பண்ணவேண்டும்..அது தான் அவருக்கு பேரானந்தம்.
அன்றும் இவர் ஒரு கிரமத்தின் வீட்டு திண்ணையில் படுத்து கொண்டார்…
ஒரு அயர்ந்த தூக்கம் …
அப்போது பக்கத்து வீட்டு கோழி கொக்கரக்கோ என கூவ …....ரத்தனம் பிரசங்கியாருக்கு முழிப்பு வந்து விட்டது…
ஒரு அயர்ந்த தூக்கம் …
அப்போது பக்கத்து வீட்டு கோழி கொக்கரக்கோ என கூவ …....ரத்தனம் பிரசங்கியாருக்கு முழிப்பு வந்து விட்டது…
….அட….விடியப்போகுது….அதான் கோழி கூவிட்டே….என்று நினைத்து கொண்டு…
தெருவின் மையத்திற்கு போய் நின்று கொண்டு யோசித்தார்…
இப்படி செய்தால் என்ன…
தெருவின் மையத்திற்கு போய் நின்று கொண்டு யோசித்தார்…
இப்படி செய்தால் என்ன…
உடனே பக்கத்தில் இருந்த மரத்தை நோக்கி சென்றார்.
கிடுகிடுவென ஏறி மரத்தின் உச்சிக்கு சென்றார்…
அங்கு இருந்து கொண்டு சத்தம்போட ஆரம்பித்தார்…..
அங்கு இருந்து கொண்டு சத்தம்போட ஆரம்பித்தார்…..
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உனக்காகவே பூமிக்கு வந்தார்…………………………..அப்போது எதிர் திசையில் இருந்து பயங்கரமாக ஒரு சத்தம்…………………
…....யார்டா அது..நடுச்சாமத்துல மரத்தல ஏறிநின்னு கத்றது
…....யார்டா அது..நடுச்சாமத்துல மரத்தல ஏறிநின்னு கத்றது
ஐயா விடிஞ்சிட்டுதுங்கோ…………………இது ரத்னம் பிரசங்கியார்…
அட ப்போய்யா .ஜாமக்கோழி இப்பத்தான கூவிச்சு……..விடிய இன்னும் அஞ்சு மணிநேரம் இருக்கு.
அதுக்குள்ள இப்படியா..
நடுச்சாமத்துல மரத்துல ஏறிநின்னு உயிர வாங்காத;;;;வாய்யா …வா..வந்து படு…..
அதுக்குள்ள இப்படியா..
நடுச்சாமத்துல மரத்துல ஏறிநின்னு உயிர வாங்காத;;;;வாய்யா …வா..வந்து படு…..
அப்போ சரிங்க…… விடியட்டும் அப்புறமா பேசுறேன்………
ரத்னம் பிரசங்கியார் கையில …கை கடிகாரம் கிடையாது.
ஒரு கை கடிகாரம் இருந்திருந்தால் வசதியாய் இருந்திருக்கும்..இப்படி கண்டவங்க கிட்ட எல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டாம் என நகைச் சுவையுடன் அலுத்து கொண்டார்…
(..இதை கேட்டுக்கொண்டிருந்த பாஸ்டர் இராஜேந்திரன் அவர்கள் ரத்னம் பிரசங்கியாருக்கு புதிய கைகடிகாரம் ஒன்றை வாங்கி அன்பளிப்பாக அளித்தார்….)
இவரைப் போல் ஊழிய வாஞ்சையுள்ளவர்களிடம் நானும் பேசிமகிழ்ந்த அந்த நாட்களை நினைக்கிறேன்.
இந்த கட்டுரை எழுதும் போது அன்று வால்போஸட் ஒட்டிய குழுவில் இருந்த( எனக்கு தம்பி ) பாஸ்டர்ஜான்ராஜிடம் புளியரை ரத்னம் பரசங்கியாரை பற்றி விசாரித்தேன்.
அவர் இப்போதும் ஆரோக்கியமான நிலையில் புளியரையில் இருப்பதாக சொன்னார்…ஒரு நாள் நான் போய் அந்த தேவ மனிதனைக் நேரில் பார்க்க வேண்டும் …
அவர் இப்போதும் ஆரோக்கியமான நிலையில் புளியரையில் இருப்பதாக சொன்னார்…ஒரு நாள் நான் போய் அந்த தேவ மனிதனைக் நேரில் பார்க்க வேண்டும் …
இந்த கட்டுரையை எழுதி மூன்று மாதத்திற்குள்
கர்த்தருடைய மனிதனை இன்று கண்டேன்…
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
இன்று மாலை 6 மணிக்கு என் செல்போனில் அழைப்பு (செய்தி..) வந்தது…
நீங்கள் பார்க்கவேண்டும் என்று ஆசைபட்ட புளியரை ரத்தினம் பிரசங்கியார் இப்போது பாளையங்கோட்டையில்தான் இருக்கிறார்.
அவர் பாஸ்டர் இராஜேந்திரன் நல் அடக்கத்திற்கு வந்திருக்கிறார்…வந்த இடத்தில் தன் பையை எங்கோ தொலைத்து விட்டு .பதைபதைப்புடன் இருக்கிறார்…
இப்போது வந்தால் அவரை பார்க்கலாம் ..என்பதே அந்த செய்தி..
நான் என் வேலைகளை எல்லாவற்றையும் சற்று நேரம் ஒதுக்கி வைத்து விட்டு எனது பைக்கில் வேகமாக அவரை பார்க்க சென்றேன்..
நான் என் வேலைகளை எல்லாவற்றையும் சற்று நேரம் ஒதுக்கி வைத்து விட்டு எனது பைக்கில் வேகமாக அவரை பார்க்க சென்றேன்..
குட் நியூஸ் மிஷன் சர்ச் வாசலில் நின்று கொண்டிருந்தார்…
பார்த்தவுடன் அவரை இனம் கண்டு கொண்டேன்…
…சுமார் முப்பது வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது……அவரிடம்
மெதுவாக… ஸ்தோத்திரம் பாஸ்டர்…. என்றேன்….
அவரும் ஸ்தோத்திரம் என்றார்…
அவரும் ஸ்தோத்திரம் என்றார்…
எப்படி இருக்கிறீர்கள் சபை நடத்துகிறீர்களா..? என்றேன்..அவ்வளவுதான் அதன் பின் நான் பேசவே இல்லை….
(..அவர் என்னை பேச விடவில்லை..)
சபை எல்லாம் இல்லை பிரதர்..நான் சுவிஷேசகன்…ஊர் ஊராய் போய் சுவிஷேசம் சொல்வேன்.அதான் என் வேலையே..
ஓ……...மீட்டிங்ல பேசுவீங்களா….------இது நான்
ஓ……...மீட்டிங்ல பேசுவீங்களா….------இது நான்
அவர்….பதிலுக்கு
மீட்டிங்கா…நமக்கு எல்லா நேரமும் மீட்டிங்தான்..இப்போ பாருங்க
மீட்டிங்கா…நமக்கு எல்லா நேரமும் மீட்டிங்தான்..இப்போ பாருங்க
கைகளை குவித்து வாய் பக்கத்தில் குழல் போல் வைத்து கொண்டு..
சத்தமாக ..மிக சத்தமாக…
சத்தமாக ..மிக சத்தமாக…
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்போது உங்கள் பாவத்திலிருந்து மீட்க படுவீர்கள்………………
.இப்போது எங்களை சுற்றி வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.
.இப்போது எங்களை சுற்றி வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.
எனக்கு அந்த மனிதரின் வைராக்கியத்தை பார்த்து என் கண்கள் கலங்கி சத்தமிட்டு அழவேண்டும் போல் இருந்தது..
ஒரு வழியாக அவரை சமாதான படுத்தி……என்னிடம் இருந்த கொஞ்சபணத்தை அவர் கைகளில் வைத்தேன்..அதற்கு அவர் பண்ணிய ஜெபம் இருக்கிறதே…….அது ஆடம்பரமில்லாத இதயத்தின் ஆழத்திலிருந்து அந்த ஜெபம் வந்தது.
ஒரு வழியாக அவரை சமாதான படுத்தி……என்னிடம் இருந்த கொஞ்சபணத்தை அவர் கைகளில் வைத்தேன்..அதற்கு அவர் பண்ணிய ஜெபம் இருக்கிறதே…….அது ஆடம்பரமில்லாத இதயத்தின் ஆழத்திலிருந்து அந்த ஜெபம் வந்தது.
ஐயா என்னைக்கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் விட முடியுமா..? ..?என்றார்…
வாருங்கள் …என்று அழைத்து சென்றேன்….
வாருங்கள் …என்று அழைத்து சென்றேன்….
பை தொலைந்து விட்டது...அதனுள் பைபிள் இருக்கிறது..எடுத்தவருக்கு உபயோகபடட்டும்...என்றார்
போகும் போது என்னிடம் இரண்டு கேள்விகள்கேட்டார்.
(1)சொந்த வீட்டில் குடியிருக்கிறீர்களா..?
ஆம் என்றேன்..(அது ஆசீர்வாதமாம்..)
(1)சொந்த வீட்டில் குடியிருக்கிறீர்களா..?
ஆம் என்றேன்..(அது ஆசீர்வாதமாம்..)
(2) கடன் எதாவது உண்டா என்றார்..?
ஆம் ஐயா ..கொஞ்சம் இருக்கிறது என்றேன்….
கடனாளியாய் பரலோகம் போக முடியாது ..திருப்பி கொடுத்துவிடுங்கள் என்றார்....(.கடனை கொடுத்துவிட்டு போ என்று சொல்வானாம்..)
குழந்தையைப்போல் பேசுகிறார்..சிரிக்கிறார்.
ஆம் ஐயா ..கொஞ்சம் இருக்கிறது என்றேன்….
கடனாளியாய் பரலோகம் போக முடியாது ..திருப்பி கொடுத்துவிடுங்கள் என்றார்....(.கடனை கொடுத்துவிட்டு போ என்று சொல்வானாம்..)
குழந்தையைப்போல் பேசுகிறார்..சிரிக்கிறார்.
புது பஸ்டான்ட் வந்தது.
.இறங்கினார் ..
.இறங்கினார் ..
இறங்கினவர் என் தோள்களில் தன் கைகளை வைத்து ஆவியில் நிறைந்து மகா சத்தமாய் ஜெபித்தார்…என் சிறிய கடனுக்காக….(..எல்லோரும் பார்த்தார்கள்..)
விடைபெற்றுக்கொண்டார்..
முப்பது வருடத்திற்கு முன் எப்படி கிறிஸ்துவுக்காய் வேலை செய்தாரோ அதற்கும் மேலாய் வேகமாக இருக்கிறார் .இப்போது அவருக்கு வயது எழுபத்தி ஆறாம்…..
இவரின் வேகமும் சுவிசேச வாஞ்சையையும் பார்க்கும் போது இவர்கள் யோவான் ஸ்னானகனின் ஆவியை(..முன் குறிக்கபட்டவர்கள்..) உடையவர்கள் என்று எண்ணினேன்.
.
வெகு நேரம் தேவைப் பட்டது…. எனக்கு என்னுடைய சுய நினைவு வர….
.
வெகு நேரம் தேவைப் பட்டது…. எனக்கு என்னுடைய சுய நினைவு வர….
ஊழியர்கள் ஒவ்வொருவரும் வாசித்தறிந்து பயன்பெறவும் அறியாதவர்கள் அறிந்து கொள்ளவும் வேண்டிய நல்ல ஆவிக்குரிய அனுபவங்கள். மறைவானவைகளை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல. நல்ல எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு