புதன், 1 அக்டோபர், 2014

நீதி.....(...குழந்தைகளுக்கான...நாடகம்...)






நீதி..1

நீதிபதியாக..பிதா….

வழக்கு  தொடுப்பவர் …லூசிபர்

எதிர் வழக்காடுபவர்..பரிசுத்த ஆவியானவர்
……..
(...நீதிபதி.)--------------வழக்கை நீங்கள் கூறலாம்

.லூசிபர்--------------
இந்த வழக்கு பாதிக்க பட்ட ஐந்து கன்னிகைகளை பற்றியது...
நடு இரவில் மனிதாபிமானம் இல்லாமல் வெளியே தள்ளி கதவை அடைத்த மணவாளனுக்கும்..அவரை சார்ந்தவர்களுக்கும். தக்க தண்டனை தரவேண்டும்..நீதிபதி அவர்களே …இது தான் வழக்கு..

நீதிபதி…--------------….அவரைச் சார்ந்தவர்கள் யார் யார்…?
.
.லூசிபர்--------------முதலாவது மணவாளனின் தகப்பனார்…ஹீ..ஹீ..---தாங்கள் தான்……
இந்த வழக்கை
நீங்கள் விசாரிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆட்சேபணைத்தான்.

மனவாளனுடைய வக்கில்…(பரிசுத்த ஆவியானவர்..)…………………
இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்…..
நீதிபதியவர்கள் தன் மகனையே அதாவது மணவாளணை சிலுவை வரை யில் ஒப்புக்கொடுத்தவர் என்பதை எதிர் கட்சி வக்கில் மறந்து விடவேண்டாம்..
...
லூசிபர்................சரி..சரி………ஆ…. வூன்னா உடனே சிலுவைன் னுருவாங்க.
.பரவாயில்லை ..நீங்களே விசாரியுங்க….
(பரிசுத்த ஆவியானவர்..)…………………

கனம் கோர்ட்டார் அவர்களே ….எதிர் கட்சிவக்கில் ஏற்கனவே மணவாளன் மேல் பகை உணர்வு கொண்டவர்…ஆகவேதான் இந்த வழக்கை தொடுக்கிறார்.இது ஏற்கனவே முடிந்து போன விவகாரம்…
..
லூசிபர்…..)-------------எது முடிந்துபோன விவகாரம்..உங்களை பொறுத்த வரையில்  அது முடிந்து போனதுதான்…
பாதிக்கபட்டது நாங்கள்….எங்களுக்கு நீதிவேண்டும்….
(பரிசுத்த ஆவியானவர்..)…………………
என்ன நீதி உமக்கு வேண்டும்..சொல்லப்போனால் நாங்கள் தான் உம்மேலும் உம் ஆட்கள் மேலும் வழக்கு தொடரவேண்டும்…
.
லூசிபர்…..)-------------
இது என்ன புதுக்கதை…..நாங்கள் அப்படி என்ன குற்றம் செய்தோம்..

பரிசுத்த ஆவியானவர்……----------
என்ன குற்றமா..?ஒன்றல்ல இரண்டல்ல..நிறைய குற்றங்கள்…
லூசிபர்…..)-------------கூறும் கூறிப்பாரும்..

--ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்தீர்..காயினை கொலை செய்ய தூண்டிணீர்.

லூசிபர்…..)-------------

இந்த சம்பவத்துக்கு ..காரணமான பாம்புக்கும் காயினுக்கும் ஏற்கனவே தீர்ப்பு வழங்கபட்டு விட்டது….இது பழைய கேஸ்…..உமக்கு வயதான காரணத்தால் இது மறந்திருக்கும்.
..
பரிசுத்த ஆவியானவர்……-----------
அது மட்டமல்ல மணவாளன் குழந்தையாய் இருக்கும்போது ஏரோது மூலமாக கொல்லப்பார்த்தீர்..
..
லூசிபர்…..)-------------
ஆம் அப்படித்தான் செய்தேன்..
பூமி இப்போது என் ஆழுகைக்கு உட்பட்டு இருக்கிறது..நீங்கள் தான் அத்துமீறி அதற்குள் நுழைந்தீர்கள்……நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா..?

பரிசுத்த ஆவியானவர்……-------
-மணவாளன் உபவாசம் இருந்து முடிந்த உடன் சோதித்தீர்..சிலுவை வரையில் அவரை விடாமல் தொந்தரவு செய்தீர்.
..
லூசிபர்…..)-------------சண்டையில கிழியாத சட்டை உண்டா நீதிபதி அவர்களே…இவர் சொல்வதை குறித்து தனியாக அவர் வழக்கு தொடுக்கட்டும்.அதற்கு நாங்கள் பதில் சொல்லுவோம் .
இப்போது…இந்த வழக்குக்கும் அந்த பழங்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆகவே விசாரனைக்கு இதைஎடுக்க வேண்டும்
நீதிபதி…………….சம்பந்தபட்டவர்கள் நாளை மறுநாள் விசாரனைககு வரவேண்டுமாறு உத்தரவிடுகிறேன்
               
               




          நீதி….(2)
கோர்ட் வளாகத்தில் சரியான கூட்டம்.
ஒருவர்--------------இன்னைக்கி மணவாளன் வருவாரா..?
.
மற்றவர்……….கட்டாயம் வந்து தானே ஆகவேண்டும்…
-
-
லூசிபரும் அவன் ஆட்களும் கூட்டமாக கோர்ட்டில் நுழைகின்றனர்…
-
-
சற்று நேரத்தில். பரிசுத்த ஆவியானவர் தூதர்கள் படையுடன் நீதிமன்றத்தில் நுழைகின்றார்.
-
        நீதிமன்றம் ஆரம்பமாகிறது….

நீதிபதி ---------------அனைவரும் வந்துவிட்டார்களா.?

ஆம் வந்து விட்டனர்…

லூசிபர்……………………இல்லை… மணவாளன் வரவில்லை….
அவர் எப்போதுமே தாமதம்தான்..
...

பரிசுத்த ஆவியானவர்…………..மணவாளன் வரவேண்டிய நேரத்தில் தவறாமல் வந்துவிடுடவார்......இப்போது வந்துவிடுவார்……
-
(அப்போது மணவாளன் கோர்ட்டுக்குள் நுழைகின்றார்…)

நீதிபதி---சரி ஆரம்பமாகட்டும்—
-
முதலாவது பாதிக்கபட்ட கன்னிகைகளில் ஒருத்தியை விசாரிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது…
.
ஐந்து கன்னிகைகளில் ஒருத்தி விசாரனை கூண்டீல் ஏறுகிறாள்…..
.
லூசிபர் அவளை விசாரிக்கிறார்.--------------.
அன்று நடந்ததை கூற முடியுமா.?
-
கன்னிகை--------- அதோ நிற்கிறாரே மணவாளன்..
அவர் திருமணத்திற்கு தீவெட்டி பிடிப்பதற்காக எங்களை அழைத்திருந்தார்கள்..
நாங்கள் பத்துபேர்..
அன்று மணவாளன் இரவு நெடுநேரமாகியும் வரவேயில்லை .
நாங்கள் தூங்கி விட்டோம்.
நடு ஜாமத்தில் மணவாளன் வருகிறார் உங்கள் தீவெட்டியை எரிய விடுங்கள் என்றனர்
எங்கள் ஐந்து பேரிடத்தில் அப்போது எண்ணை இல்லை .உடனே வெளியே போய் எண்ணை ,வாங்கிவரச் சென்றோம்.
திரும்பி வந்ததும்  .எங்களை வீட்டிற்குள் மணவாளன் விடவில்லை ….
கதவை திறக்க முடியாது என்று கூறிவிட்டார்..(அழுகை..)
..
லூசிபர்…........----சரி ..சரி அழாதே……
கனம் நீதிபதி அவர்களே ..இப்பேர் பட்ட கல் நெஞ்சக்காரருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்…
.இவர்கள் திருமணம் ஆகாதவர்கள்….கன்னிகைகள் என்று வேத புத்தகத்திலேயே ஆதாரம் இருக்கிறது..ஆக கன்னிப் பெண்களுக்கு  இவ்வாறு செய்திருப்பது.மிக கொடுமையான காரியம்.
-
நீதிபதி………-----…..பொறுங்கள்……மணவாளன் என்ன சொல்கிறார் என்று கேட்போம்…

மணவாளன் விசாரணை கூண்டில் ஏறுகின்றார்……..
-
லூசிபர்……-------------..நீர்தான் மணவாளன் என்பவரா..?

மணவாளன்    ………………            ஆம்..
-
லூசிபர்……-------------..அதோ  நிற்கிறாளே…--அந்த பெண்ணை உமக்கு தெரியுமா..?
..
மணவாளன்----------------தெரியாது…
.
லூசிபர்……-------------..பாருங்கள் நீதிபதி அவர்களே ….செய்வதை செய்து விட்டு தெரியாது என்கிறார்..?
.
மணவாளன்----------.-என்ன செய்தேன்..?
.
லூசிபர்……-------------..இந்த பெண்ணுக்கு நீர் கதவை திறக்கவில்லை
.
மணவாளன்----------------ஏன் திறக்கவேண்டும்…?
.
லூசிபர்……..------ஐயோ …ஐயோ…..அவள் உம் திருமணத்திற்கு  தீவெட்டி பிடிக்க வந்தவள்…..
.
பரிசுத்த ஆவியானவர்--------------இதை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம்…வேறு எதாவது..நீர் மணவாளனிடத்தில் கேட்கவேண்டுமா…
.
லூசிபர்---------------  கல்யாண தினத்தன்று ஏன் பிந்தி வந்தீர்……

மணவாளன்----------------எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்பது என் சொந்த விஷயம் .அதை இங்கே கூற வேண்டும் என்று அவசியம் இல்லை….
.
லூசிபர்--------------அப்படி அல்ல இவ்வளவு குழப்பத்துக்கும்  காரணம் நீர்  பிந்தி வந்ததுதான்…
.
பரிசுத்த ஆவியானவர்…………மணவாளன் .பிந்திவந்ததால் எதாவது பிரச்சனை என்றால் அது மணமகள் அல்லது அவள் சார்பில் வேறு யாராவது தான் மனு செய்யவேண்டும்….தீவெட்டி பிடிக்கிறவளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது..

லூசிபர்………………(…..இவர் வேறு இடையில புகுந்து எல்லாத்தையும் உடைக்கிறாரே..)..
யுவர் ஆனர்……..அப்படி அல்ல..அது மிக முக்கியமான கேள்வி…….
-
அன்று மணமகன் ஏன் பிந்திவந்தார் ..?

நீதிபதி------------சரி…மனுதாரர் கேட்கிறார் அல்லவா..?நீங்கள் ஏன் பிந்திவந்தீர்கள்…
.
மணவாளன்--------------------நான் சரியான நேரத்தில்தான் வந்தேன்…….என்னுடைய பாதையில் சிலர் பல தடைகளை போட்டு பல இடைஞ்சலை செய்து விட்டனர்..அதனால்தான் பிந்திவிட்டது…..
நீதிபதி……….என்ன தடை யார் போட்டது..?
மணவாளன்……….அதை பற்றி எனது காவலன் காபிரியேல் விரிவாக இங்கே கூறுவார்….
.
நீதிபதி……..அப்படியெனின் கபிரியேலை அழையுங்கள்..
..
(கபிரியேல் வருகின்றார்………)

லூசிபர்…………..(வாடா வா…..முதல்ல உன்ன ஒழிக்கணும்….)ம்…….நீர் தான் காபிரியேலா..?
.
காபிரியேல்…….-----------ஆம் நான்தான்..
.
.லூசிபர்...............மணவாளனை அவர் திருமணததிற்கு சரியான நேரத்தில் நீர் அழைத்து கொண்டு வரவில்லை என்று உம்மீது குற்றம் சுமத்துகிறேன்.
காபிரியேல்…….-----------
நாங்கள் சரியான நேரத்திற்கு தான் புறப்பட்டோம் .வழியிலே சிலர் செய்த சதி வேலைகளினால் எங்கள் பயணம் தடைபட்டது.

லூசிபர்……..-----அவர்கள் யாரென்று கண்டு பிடித்தீர்களா..?அதற்கு எதாவது ஆதாரம் உண்டா..?
.
.
காபிரியேல்…….-----------ஆம் எல்லா ஆதாரத்தையும் சேகரித்து விட்டோம்—

லூசிபர்---------------அதை காட்ட முடியுமா-?

காபிரியேல்..........இப்போது  காட்ட முடியாது..
..
லூசிபர்ஏன் முடியாது..?நீர் பொய் சொல்கிறீர்—

-காபிரியேல்--------பொய் அல்ல……ஆதாரங்கள் சரியா இருக்கிறது..ஆனால் தண்டனை கூடம் இன்னும் தயாராக வில்லை….தண்டனைக்கூடம் தயாரான உடன் வழக்கு தொடுக்கபடும்…..யாரையும் தப்ப விடமாட்டோம்
.
லூசிபர்-----------ஏதோ …சொல்லி தப்பிக்கபார்க்கிறீர்…ஆமா…அது என்ன வகையான தண்டனைக்கூடம்…..

 காபிரியேல்--------------அக்கினியும் கந்தகமும்  எரியும் மரணக்கடல்……மொத்த கூட்டமும் அன்றோடு காலியாகிவிடும்……அதன் பின் மணவாளனுக்கோ மணவாட்டிக்கோ எந்த இடைஞ்சலும் வராது…

 லூசிபர்….---------(..குப்பென்று வியர்க்கிறது…அடப்பாவமே …நமக்கே ஆப்பு வைக்கான்…)சரி…..சரி நீர் போகலாம்..
..

லூசிபர்…--------------கனம் நீதிபதியவர்களே….இப்படித்தான்  எல்லா காலமும் எதாவது சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள்…..இவர்கள சாதாரன ஆட்கள் அல்ல ..நானூறு வருடம் உதவி செய்த பார்வோனையும் அவன் கூட்டத்தையும் கொலை செய்தவர்கள்..நன்றி மறந்தவர்கள்…..
..
பரிசுத்த ஆவியானவர்………..நான் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன்….(தொடரும்..)



              நீதி----3
பரிசுத்த ஆவியானவர்……….
.எகிப்து மன்னன் எம் மக்களை பஞ்சத்தில் ஆதரித்தான் என்பதற்காக நானூறு  வருடம் அந்த நாட்டிலேயே இருந்து அவர்கள் நாட்டிற்காக உழைத்தார்கள்……
.இறுதியாக .இவரின் (…லூசிபர்..) ஆட்கள் எகிப்து மன்னின் இதயத்தை கடினபடுத்தின படியினால்  எம் மக்களை அவன் கொடுமை படுத்தினான்  .ஆகவே நாங்கள் வெளியேறினோம்…….

லூசிபர்--------------சும்மா  எங்கே வெளியேறினீர்கள்..?அவர்கள் தலைப் பிள்ளைகளை கொன்று விட்டல்லவா வெளியேறினீர்கள்………

பரிசுத்த ஆவியானவர்……….
.தலைப்பிள்ளைகள் கொல்லப்பட்டது உண்மை. ஆனால் அதற்கும் காரணம் நீரும் உம் அட்களும்தான்….முதலில் இஸ்ரவேல் ஜனத்தின்   தலைப் பிள்ளைகளை
கொல்லச் சொல்லி உத்தரவிட்டது யார்…?.
எகிப்து மன்னனுக்கு இதயத்திலே அதை செய்யச் சொல்லி அவனை ஏவியது யார்?.....அதைச்….சொல்லவா……?
.
லூசிபர்-------------ஓ…---எல்லாவற்றிர்க்கும்….. நான்தான் காரணமா……?
.சரி அப்படியே வைத்து கொள்வோம்…
பார்வோனையும் அவன் சேனையையும் மொத்தமாக கடலில் தள்ளி ஜல சமாதி செய்தது யார்…..அதுவும் நானா..?
.
பரிசுத்த ஆவியானவர்………..நிச்சயமாக   நீர்தான்….?
.
லூசிபர்----------------எப்படி…….?

பரிசுத்த ஆவியானவர்………..
பார்வோனுக்கு …எச்சரிக்கை  பலமுறை செய்தோம்….அவன் தேர்களை ஓடாமல் செய்தோம்..
காற்றினால் எதிர்த்தோம்…
..பயத்தை உண்டாக்கினோம்..ஆனால்………உமது கூட்டத்தார் மொத்தமாக அவனுக்கு மேட்டிமையின் ஆவியை உண்டாக்கி கடலுக்குள்  தள்ளினீர்கள்…ஆக அவர்களை கொலை செய்தது நீங்கள்தான்……
.
. லூசிபர்----------------சரி அதை விடுவோம்…..இப்போது இந்த பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும்….மணவாளனுக்கு தண்டனை தரவேண்டும்.

பரிசுத்த ஆவியானவர்……….
.இவர் சொல்வதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்…….இந்த கன்னியர்களை நான் குறுக்கு விசாரனை செய்ய அனுமதிக்க வேண்டும்…..
..
நீதிபதி……..அனுமதியளிக்க படுகிறது…
.
பரிசுத்த ஆவியானவர்…………(..கன்னிகைகளை பார்த்து..)…
.மனவாளன் வரும்போது நீங்கள் என்னசெய்து கொண்டிருந்தீர்கள்…?
.
கன்னிகைகள்………………..தூங்கி கொண்டிருந்தோம்.
. பரிசுத்த ஆவியானவர்………..மணவாளன் எப்போது வந்தார்…?
கன்னிகைகள்……………….வெகு நேரம் கழித்துதான் வந்தார்.
பரிசுத்த ஆவியானவர்………..மணவாளன் வருகிறார் என்று தெரிந்தவுடன் என்ன செய்தீர்கள்..? ..
….
கன்னிகைகள்……………….தீவெட்டியை பற்ற வைத்தோம்..
.
பரிசுத்த ஆவியானவர்………..சரி…..எரிந்ததா..?

கன்னிகைகள்……………….எரியவில்லை….
பரிசுத்த ஆவியானவர்……….. ஏ.ன் எரிய வில்லை...?
கன்னிகைகள்……………….எண்ணை  இல்லை ஆகவே எரியவில்ல…

பரிசுத்த ஆவியானவர்………..எண்ணை கலயத்தில் எண்ணை இருக்கிறதா என்று முன் கூட்டியே ஏன் பார்க்கவில்லை….?

லூசிபர்………அவர்கள் எப்படி பார்ப்பார்கள்..?
.
பரிசுத்த ஆவியானவர்………..ஏன் பார்க்க மாட்டார்கள்……..?
.
லூசிபர்………அவர்கள் தான் புத்தி இல்லாதவர்கள் ஆச்சுதே.. இது வேதத்தில் பதிவு செய்ய பட்டிருக்கிறது…..

பரிசுத்த ஆவியானவர்………..சரி…பின்பு என்ன செய்தீர்கள்…
கன்னிகைகள்……………….எங்களுடன் வந்த மற்ற கன்னிகைகளிடம் எண்ணை கேட்டோம்…அவர்கள் தரவில்லை….

பரிசுத்த ஆவியானவர்………..அவர்கள் தராதது குற்றம் என்று நினைக்கிறீர்களா..?
கன்னிகைகள்……………….ம்…..எங்களுக்கு  கொஞ்சம் தந்திருக்கலாம்..

பரிசுத்த ஆவியானவர்………..சரி..எண்ணை இல்லை என்ற உடனே நீங்கள் மணப்பெண் வீட்டாரிடம்…அதாவது என்னிடம் கேட்டீர்களா..?
.
கன்னிகைகள்……………….இல்லை….. நாங்கள் உடனே கடைவீதிக்கு எண்ணை வாங்க சென்று விட்டோம்….

பரிசுத்த ஆவியானவர்………..எண்ணை கிடைத்ததா,?
கன்னிகைகள்……………….கிடைத்தது..

பரிசுத்த ஆவியானவர்……….
.அந்த இரவில் கன்னிப் பெண்களாகிய நீங்கள் தைரியமாக கடை வீதிக்கு சென்றது பாராட்ட தக்கது..அப்படித்தானே..?
கன்னிகைகள்……………….ஆம் எங்களுக்கு பயமே கிடையாது……

லூசிபர்……………………..(….சொதப்புதாங்களே.முக்கியமான பாய்ண்ட ஒத்துக்கிட்டாங்க……..)…
நீதிபதி அவர்களே  ..இவர்கள் புத்தியில்லாதவர்கள்…..நாட்டு விவரம் தெரியாதவர்கள்…..
பரிசுத்த ஆவியானவர்………..கடைசியாக ஒரு கேள்வி..நீங்கள் விருந்துக்கு அழைக்கபட்டவர்களா..?அல்லது தீவெட்டி பிடிக்கும் வேலையாட்களா..?
கன்னிகைகள்……………….வேலையாட்கள்தான்..?

பரிசுத்த ஆவியானவர்………..மாண்பு மிகு நீதிபதி அவர்களே  இவர்கள் வேலைக்காரர்கள்……இவர்களின் அசமந்தத்தினால்   அன்று  கல்யாண வீடு சற்று இருளாகிவட்டது….அதற்காக நியாயப்படி இவர்களுக்கு தண்டனைத் தரவேண்டும்….ஆனால் மணவாளன் அன்புள்ளவர்..ஆகவே இவர்களுக்கு கதவை அடைத்ததோடு நிறுத்திக்கொண்டார்..
..
நீதிபதி…….வழக்கை முழுமையாக விசாரித்ததில்  வேலையாட்கள் தங்கள் கவனக்குறைவாலும்..புத்தியீனத்தினாலும் கல்யாண வீட்டின் சந்தோசத்திற்கு இடைஞ்சலை உண்டு பண்ணினார்கள்….
ஆகவே அவர்களை தண்டிக்கவேண்டும்..ஆனாலும் மணவாளன் இரக்கம் வைத்ததினால் இப்போதும் மன்னிக்க படுகிறது…..ஆனாலும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்த
இந்த காரணத்திற்காக எதிர் கட்சிக்கு ..அபராதம் விதிக்கபடுகிறது……இனி ஐந்து வருடத்திற்கு லூசிபர் இந்த பக்கம் வரக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறேன்..

(வெளியே வருகிறான் லூசிபர்.பத்திரிக்கை காரர்கள் சந்திக்கிறார்கள்……)
நிருபர்………என்ன ஸார்
கேஸ் வழக்கம்போல ஊத்திக்கிட்டா’..?
லூசிபர்………………..ஆமா ….அது போகட்டும்…..எனக்கு பூமியில நிறைய பேர் இருக்காங்க…..அவங்கள வைச்சி  இவங்க பேரை கெடுப்பேன்….இவங்க சொல்ற எல்லாத்தையும் பொய் ன்னு சொல்ல சொல்லுவேன்…..
நிருபர்………அப்ப இத செய்தியாய் போடவா..?

லூசிபர்……….போடு…….அப்பத்தான் என்னோடு வழக்காட வருவாங்க…..பூமியில நான்தான் ஜெயிப்பேன்..
நிருபர்..(மனதுக்குள்..)ஆமா …லூசிபர் இதுவரைக்கும் எப்பவாவது மணவாளன ஜெயிச்சிருக்காரா..?....பேச்சப்பாரு……

          (முடிந்தது..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக