தேடுகிறேன் ..காணவில்லை….(1)
மழை தண்ணீர் தலையில் கொட்ட கொட்ட நனைந்து கொண்டு விசுவாசிகளைப்
பார்த்து இந்த வார்த்தை சொன்னார். பாஸ்டர் இயேசு பாதம்……….
.
நான் பெந்தே கோஸதே சபைகளைத் தேடுகிறேன்..ஆனால் அவைகள் எங்கும்
காணப்பட வில்லை…
.
அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கும் கேட்டது..
இந்த வார்த்தை……..
1990 என்று நினைக்கிறேன்…….ஏதோ ஒரு சூழ் நிலையில் நான் அவரைப் பார்த்தேன்..அந்த நாட்களில் நான் பயங்கர பிஸியாக இருந்தேன் .
மேடை நிகழ்ச்சிகள்.
.கேஸட் ஒலிப்பதிவு செய்வதற்கு இசையமைப்பது….
.புதிய பாடல்கள் தினமும் எழுதுவது..என வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன்….
.
.ஒரு நாள் பாஸ்டர் இயேசுபாதம் என்னிடம் கேட்டார்…
.
ஒரு இசைநாடா வெளியிட என்ன செலவாகும்..பிரதர் ...? .
ஒரு இசைநாடா வெளியிட என்ன செலவாகும்..பிரதர் ...? .
.நான் திருநெல்வேலியில் (விஸ்வவானி ஸ்டுடியோவில் )ஒலிப்பதிவு செய்தால் இவ்வளவு ஆகும் என்று ஒரு தொகையை கூறினேன்…
…அதற்கு அவர்…….என்ன பிரதர் ….சென்னையில் இதற்கு லட்ச ரூபாய் ஆகும் என்கிறார்கள்..நீங்கள் கொஞ்ச தொகையிலே முடித்து விடலாம் என்கிறீர்களே....! இது சாத்தியமான காரியமா..? என்றார்
.
….கவலையை விடுங்க பாஸ்டர்….நான் முடித்து தருகிறேன் ….என்றேன்…..அதே
போல் சிறப்பாக முடிந்தது.
.
தமிழகத்தில் ஊற்றுத்தண்ணீரே எந்தன் தேவ ஆவியே …என்ற பாடல் முதல் முறையாக அன்று ஒலிப்பதிவானது…அது யாருடைய பாடல் என்று எனக்கு தெரியாது.
தமிழகத்தில் ஊற்றுத்தண்ணீரே எந்தன் தேவ ஆவியே …என்ற பாடல் முதல் முறையாக அன்று ஒலிப்பதிவானது…அது யாருடைய பாடல் என்று எனக்கு தெரியாது.
.திருநெல்வேலியின் அன்றய முன்னணி இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட அற்புதமான ஒலிநாடா அது..
.அதில் பாடல் குழுவினராக ……. சிங்கிங் ஏரோஸ்..குழுவினர் கலந்து கொண்டு
சிறந்த முறையில் பின்னணி இசை (குரூப் வாய்ஸ்.) உதவிச் செய்தார்கள்…..
அதன்பின் பாஸ்டர் வெளியிட்ட பல இசைநாடா வெளிவருவதற்கு காரணமாய் இருந்தேன்…
..பாஸ்டர் இயேசுபாதம் களியக்காவிளை என்ற ஊரில் ஊழியம் செய்கின்றார்…
.
அவரை பற்றி எனக்கு தெரியும்…..அவர் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான்…
திருமணம் செய்யாமல் ஊழியம் செய்கிறார்…
.
தனது குடும்பத்தில் அவருக்கு பிரித்து கொடுத்த சொத்தின் பங்கு தொகையை முழுவதும் களியக்காவிளையில் ஆலயம் கட்டுவதற்காகவும் மற்ற ஊழியத்திற்காகவும் செலவு செய்தவர்…
முக்கியமாக பெந்தேகோஸ்தே உபதேசத்தில் நிலை நிற்பவர்…அதில் சந்தேகம கிடையாது...
தனது குடும்பத்தில் அவருக்கு பிரித்து கொடுத்த சொத்தின் பங்கு தொகையை முழுவதும் களியக்காவிளையில் ஆலயம் கட்டுவதற்காகவும் மற்ற ஊழியத்திற்காகவும் செலவு செய்தவர்…
முக்கியமாக பெந்தேகோஸ்தே உபதேசத்தில் நிலை நிற்பவர்…அதில் சந்தேகம கிடையாது...
…
அவரால் இப்போது பெந்தேகோஸதே
சபை என்ற பெயரில் நடக்கும் பல நிகழ்வுகள்..அவரால்
தாங்க முடியவில்ல போலும்..
ஆகவேதான் அப்படி சொன்னார் என்று நினைக்கிறேன்…..
ஆகவேதான் அப்படி சொன்னார் என்று நினைக்கிறேன்…..
ஆதி பெந்தேகோஸ்தே சபைக்கும் இப்போதய பெந்தேகோஸ்தே சபைக்கும் பல மைல்தூரம் வித்யாசமாகிவிட்டது..
அப்போது பாஸ்டர்கள் கையிலும் விசுவாசிகள் பையிலும் பணம் இல்லை….
ஆனால் கொள்கையும் கோட்பாடும் இருந்தது…
இப்போது வசதியும் ஆடம்பரமும் இருக்கிறது..உபதேசம் காணாமல் போய்விட்டது…அல்லது
உபதேசம் மாறிவிட்டது..
ஆராதனை முறை மாறிவிட்டது
ஊழியர் வாழ்க்கை முறை மாறிவிட்டது
விசுவாசிகள் அடியோடு மாறிவிட்டனர்
பாடல்கள் மாறிவிட்டது
பிரசங்கம் மாறிவிட்டது..
மீதி என்ன இருக்கிறது…?……அப்புறம் தேடத்தானே செய்யவேண்டும்….
பாஸ்டர் இயேசுபாதம் இன்று எதற்காக பெந்தேகோஸ்தே சபையை எதைத் தேடினாரோ..?...அது எனக்கு தெரியவில்லை….
.
ஆனால்…எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது.அது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்…
ஆனால்…எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது.அது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்…
உபதேசம் மாறிவிட்டது…என்று நான் சொன்னவுடன்…
இவனுக்கு இது தான் வேலையா ..? என்று கூட இதை படிப்பவர்களுக்கு யோசனை வரலாம்.
.
.என்ன செய்ய..?
இது எங்கள் வாழ்க்கை பிரச்சனை.
இது எங்கள் வாழ்க்கை பிரச்சனை.
.
ஆகவேதான் திரும்ப திரும்ப பேசுகிறேன்.
நான் மற்ற சபையினரை குற்றம் சுமத்தி பேசவில்லை..
குறைந்த பட்சம் என் வீடாவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டு மல்லவா..?.
நான் மற்ற சபையினரை குற்றம் சுமத்தி பேசவில்லை..
குறைந்த பட்சம் என் வீடாவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டு மல்லவா..?.
..
ஒரு நாள் நான் என் மகனிடம் சாதாரனமாக பேசிக்கொண்டிருந்தேன்….
என் மகன் எனக்கு ஒரு விஷயத்தை சொன்னான்…
என் மகன் எனக்கு ஒரு விஷயத்தை சொன்னான்…
.
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
.
அது என்னவென்றால்..
அப்பா ..நான் உங்களைப்போல் என்னால் வாழ முடியாது .உங்கள் வாழ்க்கை. முறை வேறு என் வாழ்க்கை முறை வேறு….
நீங்கள் ஐம்பது ரூபாயை சட்டை பையில் வைத்து கொண்டு இந்த ஊரை பல முறை சுற்றி வந்து விடுவீர்கள்.
என்னால் ஐநூறு ரூபாய் இல்லாமல் வெளியே போகமுடியாது…
ஏன் என்றால் என் பழக்க வழக்கமும் வேறு விதமானது என்றான்….
.நானும் யோசித்து பார்த்து அது உண்மைதான் என ஒத்துக்கொண்டேன்…
.இது தான் இன்று சபைக்குள்ளும் நடக்கிறது…
.
.பழைய சிந்தனைகள் நடைமுறைகள் ஒழிந்து விட்டது…
.
.
.அது என்ன உபதேசம்…?.
முந்தய காலங்களில் அதாவது ஐம்பது வருடத்திற்கு முன் பெந்தேகோஸ்தே சபையில் மொத்தமே சில நூறு பேர்தான் ஆராதனைக்கு கூடுவார்கள்....
அன்று உபதேசம் தான் முக்கியம் என்று போதகர்கள் நினைத்தார்கள்..ஆட்களின் எண்ணிக்கையை பற்றி கவலைப்படவில்லை..மேலும் பூமியில் வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்றும் யாரும் நினைக்கவில்லை....
ஆனால் காலப்போக்கில் போதகர்கள் வாழ்க்கை முறை மாறிவிட எண்ணங்களும் சிந்தனையும் மாறிவிட்டது
.அது என்ன உபதேசம்…?.
முந்தய காலங்களில் அதாவது ஐம்பது வருடத்திற்கு முன் பெந்தேகோஸ்தே சபையில் மொத்தமே சில நூறு பேர்தான் ஆராதனைக்கு கூடுவார்கள்....
அன்று உபதேசம் தான் முக்கியம் என்று போதகர்கள் நினைத்தார்கள்..ஆட்களின் எண்ணிக்கையை பற்றி கவலைப்படவில்லை..மேலும் பூமியில் வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்றும் யாரும் நினைக்கவில்லை....
ஆனால் காலப்போக்கில் போதகர்கள் வாழ்க்கை முறை மாறிவிட எண்ணங்களும் சிந்தனையும் மாறிவிட்டது
…சபையில் இரண்டு பேரை வைத்து கொண்டு என்ன உபதேசம் செய்வது….
.
முதலில் கூட்டத்தை கூட்டு….
முதலில் கூட்டத்தை கூட்டு….
.
அப்புறமா மற்றதை பார்க்கலாம்,என்று நினைத்து பழைய உபதேசங்களை
மூட்டை கட்டி பரன் மேல் தூக்கி போட்டுவிட்டனர்…
உபதேசம் என்றால் என்னவென்று சிறிய உதாரணம் சொல்கிறேன்..
என் திருமணத்திற்காக பெண் பார்க்க போன போது என் மனைவியின் சபை ஊழியக்காரி(..என் மனைவியின் சித்தி..) கேன்சர் கட்டி வந்து மரணப் படுக்கையில் இருந்தார்கள் ..
என் திருமணத்திற்காக பெண் பார்க்க போன போது என் மனைவியின் சபை ஊழியக்காரி(..என் மனைவியின் சித்தி..) கேன்சர் கட்டி வந்து மரணப் படுக்கையில் இருந்தார்கள் ..
அந்த வேதனையின் நடுவிலும் அவர்கள் என்னை பார்த்து.. . முகத்துக்கு முகம் நேராக பார்த்து ..நீங்கள் இரட்சிக்கபட்டவரா என்று கேள்வி கேட்டார்கள்..? நான் ஆம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் திகைத்து போனேன்....என்ன ஒரு வைராக்கியமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள் .
இது தான் உபதேசம்……
.
இன்று எந்த ஊழியக்காரனின் மணைவியாவது இப்படி கேள்வி கேட்கிறார்களா..? அல்லது கேட்கத்தான் முடியுமா..?
எதற்கு இப்படி வீணான கேள்வி…கேட்கவேண்டும்
இன்று எந்த ஊழியக்காரனின் மணைவியாவது இப்படி கேள்வி கேட்கிறார்களா..? அல்லது கேட்கத்தான் முடியுமா..?
எதற்கு இப்படி வீணான கேள்வி…கேட்கவேண்டும்
.கேட்க படுபவரின் மனது புண்படுமே..?.என்பார்கள்….
ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மெதுவாக கூறுவார்கள்…
.
….இரட்சிக்கபடுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் மலையளவு வித்தியாசம்
உண்டு..
அது மட்டுமல்ல காத்திருப்பு ஆராதனை என்ற ஒன்று காணாமல் போய் பல வருடம் ஆகிவிட்டது…
.
.ஆனால் முன்னேவிட இப்போது தீர்க்கத்தரிசனம் கூறுதல் அதிகமாக
காணப்படுகிறது….
.
தீர்க்கத்தரிசியிடம் .நீங்கள் கூறியபடி ஏன் நடக்கவில்லை..? என்று யாரும் குறை. கூற
முடியாது
…இதைபற்றி அதிகம் பேச வேண்டாம்…..விட்டுவிடுவோம்...
இன்னும் வேறுபட்ட வாழ்க்கை…என்ற உபதேசம் உண்டு……..அது என்ன வேறுபட்ட வாழ்க்கை…..?
…மற்றவர்களிடம் (..இரட்சிக்கபடாதவர்களிடம் இருந்து..) இருந்து
நம்மை பல விஷயங்களில் அன்னிய படுத்தி கொள்வது..
.
அதாவது அவர்கள் செய்வது போல் நாமும் செய்யாமல் இருப்பது…..
.
திருமணத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது….
திருமணத்தில் தாலிகட்டாதது.
.நகை அணியாதது...
.நல்ல நாள் பார்த்து காரியங்கள் செய்வது…
உலக காரியங்களுக்காக வேதனைப்படுவது…
(இன்னும் மற்றவைகளை பின்னால் சொல்கிறன்...)
திருமணத்தில் தாலிகட்டாதது.
.நகை அணியாதது...
.நல்ல நாள் பார்த்து காரியங்கள் செய்வது…
உலக காரியங்களுக்காக வேதனைப்படுவது…
(இன்னும் மற்றவைகளை பின்னால் சொல்கிறன்...)
.
.
நான் ஒரு வீட்டிற்கு திடிரென்று வேறு வேலை விஷயமாக செல்ல வேண்டியது
இருந்தது..அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் .கதவு திறக்கபட்டது….உள்ளே சென்றேன்
.
.
குடும்ப உறுப்பினர் மொத்தமும் ஆழ்ந்த அமைதியுடன் இருந்தனர்.
.
துயரமும் சோகமும் காணப்பட்டது..மெதுவாக என்ன விஷயம் என்று விசாரித்தேன்….
.
அவர்கள் ஒரு கார் வாங்க போகிறார்கள்..
பெரிய கார் வாங்க வேண்டுமென்பது பிள்ளைகள் விருப்பம்.
.பெரிய காருக்கு பணம் அதிகம் செலவாகுமே….. சின்னகாரையே வாங்கலாம் என்பது பெரியவர்களின் முடிவு…..
பெரிய கார் வாங்க வேண்டுமென்பது பிள்ளைகள் விருப்பம்.
.பெரிய காருக்கு பணம் அதிகம் செலவாகுமே….. சின்னகாரையே வாங்கலாம் என்பது பெரியவர்களின் முடிவு…..
ஆகவே குடும்பமே சோகத்தில் இருந்தது.. அதனால் துயரம்…இதை என்ன சொல்வது……
.
இந்த குடும்பத்திற்கு சரியான உபதேசம் கிடைகாததால் உலக பொருளை
குறித்து கவலை மொத்த குடும்பத்தையும் ஆட்டுகிறது
.
இன்னும்..
…பெந்தே கோஸ்தே சபைகளில் இயேசு வருகிறார் என்ற செய்தி இப்போது பிரசங்கிக்க படுவதே இல்லை….
…பெந்தே கோஸ்தே சபைகளில் இயேசு வருகிறார் என்ற செய்தி இப்போது பிரசங்கிக்க படுவதே இல்லை….
ஊழியக்காரன் எப்போதும் நினைவுபடுத்தி கொண்டு இருந்தாலே விசுவாசிகள் மறந்து விடுவார்கள்..
ஆனால் இப்போது யாரும் அதைபற்றி பேசுவது இல்லையே…
பின் எப்படி இருக்கும்..இன்றய நிலை.
.
மிக முக்கியமாக பாரம்பரிய சபையிலும் பெந்தேகோஸ்தே சபையிலும் ஒரே நபர் அங்கும்
இங்கும் நிலைத்திருக்கிறார்….
.இப்போதெல்லாம் இதுதான் நடைமுறை ஸ்டைலாக இருக்கிறது……
சொந்தம் கொண்டாட தங்கள் தாய் சபை....
ஆராதனை செய்ய பெந்தே கோஸ்தே சபை..
இப்படி பட்வர்களிடம்களிடம் பழகி பழகி பாஸ்டர் நாளடைவில் முனை மழுங்கிய கத்தியாகிவிடுகிறார்....
ஆக வேகமாக எல்லாம் ஒன்றாகி வருகிறது..
அடையாளம் கண்டு கொள்வது கடினம்….
.
இயேசு பாதம் பாஸ்டர் போன்றவர்கள் தேடினாலும் இனி பழைய பெந்தேகோஸ்தே முறையை
கான்பது கடினம்தான்.
(2) பெந்தேகோஸ்தேஆராதனை முறையை பார்க்கலாம்
ஆராதனை என்பது …….
(1)பாடுவது…..
(2)நன்றி கூறுவது...
(3).வேண்டுதல் செய்வது...
பாடுவது என்றால் உணர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துவது
நன்றி கூறுவது என்பது .கடவுள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் நினைத்து நன்றி கூறுவது…..
.
சிலர் பாடல் எழுதவார்கள்…
.
நீர் செய்த நன்மைகளை சொல்ல ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
என்று…எழுதுவார்கள்..
…
.நல்லது……
அவர்கள். ஒரு நாவை வைத்து எதற்கெல்லாம் நன்றி சொன்னார்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை..
.
ஆகவே ஆராதனையில் விசுவாசியை பார்த்து பாஸ்டர் நீயே ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து நன்றி சொல்லு என்று கூறினால் விசுவாசி ஒன்றையுமே நினைக்கவும் மாட்டான்..
நன்றி கூறவும் மாட்டான்..
நன்றி கூறவும் மாட்டான்..
.
ஆகவே அந்த காலத்தில் இதற்கு ஒரு வழி செய்தார்கள்…
.
ஆராதனை நடத்தும் பிரசங்கியார்.பொதுவாக ஒவ்வொன்றாக எடுத்து சொல்லுவார்..
.
அதாவது…நம்மை இந்த நாள்வரைக்கும் பாதுகாத்த பரிசுத்த தேவனை ஸ்தோதரிப்போம்.
.உடனே சபையார் ..ஸ்தோத்திரம் சொல்வார்கள்…
.இப்படி ஒரு கால்மணி நேரம் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல விசுவாசிகள் அனல் கொண்டு துதிக்க ஆரம்பிப்பார்கள்…இந்த முறை இப்போது அழிந்து போய்விட்டது.
.உடனே சபையார் ..ஸ்தோத்திரம் சொல்வார்கள்…
.இப்படி ஒரு கால்மணி நேரம் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல விசுவாசிகள் அனல் கொண்டு துதிக்க ஆரம்பிப்பார்கள்…இந்த முறை இப்போது அழிந்து போய்விட்டது.
.
பல பாடல்களை தொகுத்து அரைகுறையாக வெள்ளாடு மேய்ந்தது போல இந்த பாடலில் நாலுவரி..அடுத்த
பாடலில் நாலுவரி….வேகத்தை கூட்டி அடுத்த பாடலில் நாலுவரி..இப்படி பாடி விட்டால் அது
துதி ஆராதனையாம்
…ஆக எந்த பாடலையுமே முழுவதுமாக பாடுவது கிடையாது.
.
.பாடுவது என்பது வேறு ..
நமது வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்துவது என்பது வேறு…..
நமது வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்துவது என்பது வேறு…..
அடுத்து பிரசங்கம்………
.
..அதிகமாக இப்போது அறிவுரை
பிரசங்கம் அதிகமாக காணப்படுகிறது……
அறிவுரை தேவைதான்.ஆனால் அறிவுரையோடு தன் அனுபவத்தையும் அதே அளவு கூற வேண்டும்..
ஆனால் ஒன்றை கூறுகிறார்கள்….நான் நன்றாக இருக்கிறேன்…
அறிவுரை தேவைதான்.ஆனால் அறிவுரையோடு தன் அனுபவத்தையும் அதே அளவு கூற வேண்டும்..
ஆனால் ஒன்றை கூறுகிறார்கள்….நான் நன்றாக இருக்கிறேன்…
.அதாவது ஆசீர்வாதமாக..அதாவது பணத்தில்
..நீங்களும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
.
பணக்காரனாய்.நாம் மட்டுமா இருக்கிறோம்..?
.
மற்ற மதத்தினரும்தான்
பணக்காரராய் இருக்கிறார்கள்…
.
.இருப்பது போதும் என்ற மனதை விசுவாசிகளுக்கு சொல்லிக் கொடுக்க
வேண்டும்…அது தான் முக்கியம்
.
பணத்தின் மீது வாழ்க்கையை அமைக்ககூடாது…
.தேவையானதை தேவையான நேரத்தில் கர்த்தர் தருவார் என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்..அது பாஸ்டரின் கடமை ஆகும்
.தேவையானதை தேவையான நேரத்தில் கர்த்தர் தருவார் என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்..அது பாஸ்டரின் கடமை ஆகும்
.
ஒரு சபைக்கு ஒரு நாள் நான் தற்செயலாய் போயிருந்தேன்.அங்கே அன்று
பாஸ்டர் பிரசங்கம் பண்ணினார் …என்னதெரியுமா..?
…கர்த்தர் உனக்கு எல்லாமே..THE BEST..அக தருவார்…இதுதான் அவரின் பிரசங்க பொருள் .
.
கர்த்தர் பெஸ்டாத்தான் தருவார்..அதில் சந்தேமே இல்லை..
.ஆனால் நீங்கள் எதையோ நினைத்து கொண்டு அதான் பெஸ்ட் அதான் எனக்கு வேண்டும் என்று தேவ சமுகத்தில் நிற்பது நல்ல விஷயமா..?
எனக்கு தேவையானதை கர்த்தர் தந்தால் போதும் என்றும்... .கர்த்தர் தருவதை பெஸ்டாகத்தான் நினைக்க வேண்டும்
அதைவிட்டு இருப்பதில் பெஸ்ட் என்றால் உதாரணமாக எனக்கு
ஒரு கார் வேண்டும் என்று வைத்து கொள்வோம்..
.ஆனால் நீங்கள் எதையோ நினைத்து கொண்டு அதான் பெஸ்ட் அதான் எனக்கு வேண்டும் என்று தேவ சமுகத்தில் நிற்பது நல்ல விஷயமா..?
எனக்கு தேவையானதை கர்த்தர் தந்தால் போதும் என்றும்... .கர்த்தர் தருவதை பெஸ்டாகத்தான் நினைக்க வேண்டும்
அதைவிட்டு இருப்பதில் பெஸ்ட் என்றால் உதாரணமாக எனக்கு
ஒரு கார் வேண்டும் என்று வைத்து கொள்வோம்..
.அது என் நிலமைக்கு தகுந்தவாறு அது இருந்தால் போதும் அதைவிட்டு
எனக்கு ஆடி ….கார்தான் வேண்டும் என்று நான் கவலை படுவது சரியல்ல..
இதனால் நிம்மதி போகும்..இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால்
உலகத்தை காலின் கீழ் மிதித்து வாழ்கையை நடத்து என்பது போய்..
உலகத்தை பெஸ்டாக அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆணித்தரமாகிவிட்டது..இதற்கென ஜெபங்களும் ஆராதனைகளும் நிறைய வந்து விட்டது...இனி இதை மாற்ற முடியாது..
உலகத்தை பெஸ்டாக அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆணித்தரமாகிவிட்டது..இதற்கென ஜெபங்களும் ஆராதனைகளும் நிறைய வந்து விட்டது...இனி இதை மாற்ற முடியாது..
ஆனால் ஒன்றை மறுக்க முடியாது...இப்போது நிறைய வளமான பெந்தே கோஸ்தே சபைகள் பெருகி விட்டது
இங்கே நான் சொல்வது வளமான ,செழிப்பான சபையை பற்றி மட்டும்தான்….
அப்படியெனின் சின்ன சின்ன சபைகள் எல்லாம் சரியாக இயங்குகின்றனவா…..?
இந்த சின்ன சபைகளின் பாஸ்டர்களுக்கு. இப்போது வளமாக வாழ்ந்து
கொண்டிருக்கும் சபையும் அந்த பாஸ்டர்களுமே கதா நாயகர்கள்..அவர்களைப்போல் ஆகவேண்டும்
என்பதே இவர்கள் வாஞ்சையாய் இருக்கிறது..
…நாங்கள் அப்படி எல்லாம் இல்லையென்று சொன்னால் அது வரவேற்கதக்கது…..
ஒரு காரியத்தை அனைவரும் கவனிக்க வேண்டும்……
எளிமை ..
பொறுமை…
.தாழ்மை..
அன்பு செலுத்துதல்..
தன் சக ஊழியனை கண்ணியமாக நடத்துதல்.
மற்றவர்கள் கஷ்டத்தில் பங்கு கொள்ளுதல்.
இவை எல்லாவற்றையும் ஒரு விசுவாசி யாரிடம் இருந்து கற்றுக்கொள்வான்..
தன்னுடைய போதகரிடம் இருந்துதான்..
ஒரு நல்ல விசுவாசி ஒரு போதகரின் நகல் என்பேன்..
நல்ல போதகர் இருந்தால் சபையும் நன்றாகவே இருக்கும்..
பாஸடர் இயேசுபாதம் தேடும் போது பெந்தேகோஸ்தே சபை காணப்படவில்லையெனின் அங்கே சரியான பெந்தே கோஸ்தே போதகர் இல்லையென்றே அர்த்தமாகும்.
.
ஆகவே முதலில் பாஸ்டர்களை பற்றி அறிந்து கொள்வோம்…
ஆகவே முதலில் பாஸ்டர்களை பற்றி அறிந்து கொள்வோம்…
எனக்கு தெரிந்த போதகர் ஒருவர் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால்
அந்த படம் அவரின் ஆவிக்குறிய தகப்பன் சாயல் போலவே இருக்கும்….
எப்படி இது நடந்தது..
.
அது அப்படித்தான்.
அது அப்படித்தான்.
.
.
சகோதரர் தினகரன் உயிருடன் இருக்கும் போது அவரைப் போலவே பேசவும்
பாடவும் செய்த பலரை உங்களுக்கும் தெரியுமே..
.
இப்போதும் அவர்கள் அவர் போலவே இராகம் போடுகிறார்கள்…
இப்போதும் அவர்கள் அவர் போலவே இராகம் போடுகிறார்கள்…
.
இவையெல்லாமே ஒரு பாதிப்புதான்
முதலில் எளிமையை பற்றி பார்க்கலாம்….
அனேக கத்தோலிக்க பாடல்களுக்கு இசையமைத்த முன்னனி இசையமப்பாளர்..சகோதரர் ஜேசுராஜ் அவர்களுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன்…
.அவர் சொன்னார்..
.
சென்னையில் மிகப்பெரிய பாஸ்டருடைய மகன் சில சமயம் பாடல் பதிவு செய்ய ஸ்டுடியோவுக்கு வருவாராம்…
அவர் வருவதற்கு முன்னமே பத்துபேர் வரிசையாக ஸ்டுடியோவுக்குள்
நிற்பார்களாம்….(பூனைப்படைபோல்.)…இவர்கள் நடுவில்தான் அவர் கர்வமாக நடந்து வருவாராம்….)
எதற்கு இந்த பந்தா ..?..என்று என்னிடம் வருத்தபட்டார்.
இதுதான் எளிமையா..?
.
ஒரு பாஸ்டர் வீட்டில்
எத்தனை கார்கள்தான் வேண்டும்…?
கொஞ்சம் மனதை தளரவிட்டு யோசியுங்கள் .
இந்த கார்கள் அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கியது அல்ல.
.
மக்களின் காணிக்கை பணம்….உலகத்தில் மற்றவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் ன்பதை மறந்துபோக வேண்டாம்
.
தசம பாகம் செலுத்துவது சரியா..? தப்பா ..? என்று இன்னும் விவாதம்
நடந்து கொண்டுதான் இருக்கிறது….
சரி எப்படியோ தசமபாகம் காணிக்கை தருகிறார்கள்….அது மொத்தமும் ஒரு நபருக்கா..?.
.இல்லை அவரோடு பணிபுரியும் அனைவருக்குமா…?அதுதான் கேள்வி..
.
ஊழியக்காரன் நன்றாக வாழட்டும்….வசதியாக இருக்கட்டும் தவரில்லை.
ஊழியக்காரன் நன்றாக வாழட்டும்….வசதியாக இருக்கட்டும் தவரில்லை.
ஆனால் அவர் வாழும் வாழ்க்கை கர்த்தராலும் மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்வது போல் இருக்கவேண்டும்…..
.தர்மபுரியில் ஊழியம் செய்யும் பாஸ்டர் ஜான் ராஜ் ஒருநாள் என்னை பார்க்க வந்திருந்தார் .
.
அவர் சென்னயைில் உள்ள மிகப்பெரிய பாஸ்டரின் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.
அவர் சென்னயைில் உள்ள மிகப்பெரிய பாஸ்டரின் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.
.
அங்கே இரண்டு வாரத்துக்கு முன் சபையில் எடுத்த காணிக்கையை எண்ணாமல்
(…எண்ண முடியாமல்)..ஒரு சாக்கு பையில் கட்டி ஒரு மூலையில் போடப் பட்டிருந்ததாம்…
.
இவருக்கோ பயங்கர பணக் கஸ்டம்…ஆனால் அங்கே பணம் எண்ணப்படாமல் இருக்கிறது…
இவருக்கோ பயங்கர பணக் கஸ்டம்…ஆனால் அங்கே பணம் எண்ணப்படாமல் இருக்கிறது…
.
இதில் யாரை குறை சொல்ல…?
இதில் யாரை குறை சொல்ல…?
.ஒருபக்கம் செலவு பண்ண முடியாத அளவு பணம் வருகிறது..
மறு பக்கம் தேவையான செலவு பண்ணவே பணமே இல்லாத துயரம்…
.
விசுவாசி அல்லாத ஒருவன் ஒரு பாஸ்டரை காட்டி அவர் எவ்வளவு எளிமையானவர்
என்று சொன்னால் அது தான் உண்மையான நிலைப்பாடாகும்..
.
..பாஸ்டர் இயேசுபாதம் அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் காமர்ஸ்
ஸ்டுடியோவில் ஒரு ஒலிநாடா பதிவு செய்து கொடுக்க போயிருந்தேன்.(பல வருடத்திற்கு முன்.).
அன்று இரவு நான் அவருடனே தங்கினேன்.
அவர் படுத்திருந்த அந்த கட்டிலைப் பார்த்தேன் ..அது ஒரு நார்
கட்டில்.
அதற்கு மேல் ஒரு விரிப்புக்காக ஒரு துணி அவ்வளவே…
எனக்கும் அது போலவே குழிவிழுந்த நார்கட்டில் கிடைத்தது.
.
அவருடைய எளிமை என்னை கவர்ந்தது…
அவருடைய எளிமை என்னை கவர்ந்தது…
அதன்பின் சுமார் இருபது வருடம் கழித்து என் மகள் திருமணத்திற்கு
அழைப்பிதழ் கொடுக்க அவர் இருப்பிடம் போனேன்..
முன்பு நான் பார்த்தது போல் சிறிய அறை…
.இப்போது அவருக்கு வயதாகிவிட்டது.
சர்க்கரை வியாதியினால் அவதிப்படுகிறார்.இப்போது கொஞ்சம் வசதி செய்யபட்டிருக்கிறது….இது
தேவையான ஒரு காரியமே…
இதைத்தான் நான் சொல்கிறேன்..
ஆடம்பரம் இல்லாமல் தேவைக்கான பொருட்களுடன் சிக்கனமாக வாழுங்கள்..
ஒரு வேளை இதைப்படிக்கும் விசுவாசிகள் இப்படிக்கூட பேசலாம்…
..எங்கள் பாஸ்டருக்கு நாங்கள் அள்ளிக் கொடுக்கிறோம்..இடையில்
நீ என்ன கேட்பது ..?என்று…
.
..நான் அவர்களுக்கு சொல்கிறேன்…
நீங்களும் உங்கள் பாஸ்டரும் மற்றவர் கண்களில் படாமல் எதாவது ஒரு தீவில் வாழ்ந்தீர்கள் என்றால் பரவாயில்லை…
உங்கள் அருகே கிறிஸ்துவை அறியாதவர்கள் வாழ்கிறார்கள்……அவர்கள் உங்கள் வாழ்க்கை முறையை அளவெடுக்கிறார்கள்..
தமிழகத்தில் மிகப்பெரிய ஊழியக்காரன்…(..இவர் பாஸ்டர் அல்ல ..)..தனி இராஜ்யம் நடத்துபவர்…
அவர் வீட்டிற்கு டிஸ் DISH மாட்டிக்கொடுக்க ஒருவர் போயிருக்கிறார்.அவர்
இன்னொரு நபரிடம் பேசும்போது நான் அருகில் நின்றேன்.
அவர் சொன்னார்..
ஆடம்பரம்..(..வசதியான வாழ்க்கை..) என்றால் என்ன வென்று அவர்(..ஊழியரின்..) வீட்டை பார்த்த;பின்தான் எனக்கு தெரியும் என்றார்….
காமராஜர் ஆடம்பரமாய் வாழ்ந்தார் என்று சொன்னால் யார். ஒத்து
கொள்வார்கள்..?….
.(ஆடம்பர.வாழ்க்கை.)இந்த காரியத்தை மட்டும் எந்த பாஸ்டரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்…
ஆனால் முப்பது வருடத்திற்கு முன் போதகரும் விசுவாசிகளும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள்
விசுவாசிகள் கண்களுக்கு
தங்கள் பாஸ்டரின் வாழ்க்கை முறை சரியென்று தோன்றலாம்.
அவர்கள் மனதுக்கு அவர் பிடித்தவர்..ஆகவே அது சரியென்றே சொல்வார்கள்…
ஆனால் பொதுவான பார்வையில் அது ஆடம்பரமாக தெரிகிறது..
..(பொருமை..)
மேலப்பாளையத்தில் எலக்ரானிக்ஸ் கடைவைத்திருக்கும் ஒரு தம்பியுடன்
பேசிக்கொண்டிருந்தேன்..அந்த தம்பி திருநெல்வேலியல்
உள்ள ஒரு சபைக்கு ஒருநாள் போயிருக்கிறான்..
அந்த சபையின் பிரசங்க நேரத்தில் பாஸ்டர் கையில் வைத்திருக்கும் கார்ட் லெஸ் மைக் சரியாக வேலை செய்யவில்லை.அந்த பாஸ்டர் சபை நடுவிலே உதவி ஊழியக்காரனை திட்டோ திட்டென்று திட்டி தீர்த்து விட்டார்.
அந்த சபையின் பிரசங்க நேரத்தில் பாஸ்டர் கையில் வைத்திருக்கும் கார்ட் லெஸ் மைக் சரியாக வேலை செய்யவில்லை.அந்த பாஸ்டர் சபை நடுவிலே உதவி ஊழியக்காரனை திட்டோ திட்டென்று திட்டி தீர்த்து விட்டார்.
இந்த காரியம் அந்த தம்பிக்கு அதிர்ச்சியாகவும் அருவெருப்பாகவும்
இருந்திருக்கிறது.
.அதிலிருந்து அந்த சபை பக்கம் போவதை நிறத்தி கொண்டான்……
இதை கூட அந்த சபை விசுவாசிகள் நியாயப்படுத்தலாம்…..
ஆனால் மற்றவர் பார்வையில் இது தவறாக படுகிறதே …
கொஞ்சம் பொறுமையாக இருந்தால் என்ன,,?.
கொஞ்சம் பொறுமையாக இருந்தால் என்ன,,?.
இப்படி எளிமையும் தாழ்மையும் பொறுமையும் அற்ற சபைகளாய் கண்ணில்
படுகிறது…..
பாஸ்டர் இயேசுபாதம் அவர்கள் தேடினது இனி கிடைக்குமா என்பது சந்தேகமே....
முன்பு இருந்த பாஸ்டர்கள் எல்லாம் தங்களுக்கு வேதத்தில் சந்தேகம்
இருந்தால் தன்னை விட மூத்த போதகரிடத்தில் போய் …அதை குறித்த விளக்கம் கேட்பார்கள்..
இப்போது எதாவது சந்தேகம் வந்தால் இன்டர் நெட்போய் தேடுகிறார்கள்.
அங்கே தேவையானதும் கிடைக்கும் ..தேவையில்லாததும் வண்டி வண்டியாய்
கிடைக்கும்..
அது மட்டுமல்ல .
.சுத்தமாக கையில் காசு இல்லாதவன் தமிழ்நாட்டு பைபிள் ஸ்கூல் போய் பைபிளை படிக்கிறான்…
.
கொஞ்சம் வசதி இருந்தால் பைபிள் காலேஜ் படிக்கிறான்..
வசதியான பார்ட்டியாக இருந்தால் அமெரிக்கா. கனடா…சிங்கப்பூர்.இப்படி
எதாவது நாட்டுக்கு போய் படிக்கிறார்கள்
.
……பின்பு அங்கிருந்து இங்கு வந்து தான் படித்த சரக்குகளை பெரிய
வெள்ளை திரை கட்டி அதில் பாய்ண்ட் பாயிண்டாக அலசுகிறார்கள்….
.
நல்ல விசயம்தான்….இதில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் ..வெளிநாட்ல போய் படிச்சிட்டு வந்து அப்படி எதை தான் புதிதய் சொல்லிவிட்டார்கள்….?.
நல்ல விசயம்தான்….இதில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் ..வெளிநாட்ல போய் படிச்சிட்டு வந்து அப்படி எதை தான் புதிதய் சொல்லிவிட்டார்கள்….?.
எனக்கு புரியவில்லை…..
மேலும் நிறைய போதகர்கள் அவர்கள் நல்ல வசதியடைந்த பின் தங்களின் பழைய நாட்களை சுட்டிக்காட்டி .அன்று இப்படி கஷ்டபட்டேன் இன்று கர்த்தர் என்னை ஆசீர்வதித்து விட்டார் என்று தங்களின் அனுபவிப்பை நியாயப்படுத்துகிறார்கள்….
…
ஒரு போதகர் இப்படி சொன்னார்…
.
.ஆண்டவர் என்ன அழைக்கும் போது நான் ஒன்றும் ஏழ்மையில் இல்லை..
என் கைவசம் பல லட்சத்திற்கான ஆர்டர் (பிசினஸ் சம்பந்தமாக..)..இருந்தது…
..ஆண்டவர் அழைத்ததின் பெயரில் அவற்றை விட்டுவிட்டு வந்தேன் என்றார்…
என்னுடைய கேள்வி……இவர் …அவர் ஏற்கனவே செய்து கொண்டிருந்ததை பெரியது என்கிறாரா…?
ஏதோ ஆண்டவருக்காக இந்த மட்டமான வேலையை (ஊழியத்தை.) செய்ய வேண்டியது இருக்கிறதே என்று கவலைப்படுகிறாரா..?
ஊழியத்தை முதன்மையாக கருதினால் நீங்கள் விட்டு வந்தது குப்பை…..அந்த
குப்பையை நீங்கள் விட்டது எப்படி தியாகமாகும்..?
இன்னொரு போதகர்.
.நான் இந்து மதத்தில் இருந்து இரட்சிக்கபட்டு வந்தவன்…
இயேசுவை ஏற்றுக்கொண்ட காரணத்தால் எனக்கு என் வீட்டில் சொத்தில்
பங்கு தரவில்லை என்று கூறினார்….
.அவர் சொந்த ஊருக்கு தற்செயலாக நான் போக வேண்டியது இருந்தது…அவர் குடும்பத்தை பற்றி நான் அறிந்தது… அவர் விட்டு வந்தது…...சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை…
கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவித்து கொண்டு ஆண்டவர் மீது கொஞ்சம் கூட விசனப்படாமல் இருக்கும் பல விசுவாசிகளை எனக்கு தெரியும்…
ஒரு உண்மை சம்பத்தை கூறுகிறேன்...
ஒரு கடையின் முன்னே ஒரு பைக் நின்று கொண்டு இருக்கிறது..
ஒரு கடையின் முன்னே ஒரு பைக் நின்று கொண்டு இருக்கிறது..
அந்த கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வந்த இளம்ஜோடி மீண்டும்
அந்த பைக்கில் ஏறி அமர்கிறது.
பைக் யூ டேன் பண்ணுகிறது..
அவ்வளவுதான் .
.எதிர் புறம் இருந்து வந்த லாரி வேகமாக மோதுகிறது .
இருவரும் சம்பவ இடத்திலயே காலி…..
இறந்து போன அந்த வாலிபனின் தகப்பனார்..ஒரு நாடக நடிகர்…
.
.நான் காட்டுப்புறா என்ற வீடியோ படம் எடுக்கும்போது
அந்த நடிகரை நடிப்பதற்காக கேட்க அவர் வீட்டிற்கு போயிருந்தேன்..
என்னை அழைத்து போன சகோதரன் ஐசக் மில்டன் என்னிடம் இந்த சம்பவத்தை கூறி……அவர் இப்போது நடிப்பதில்லை …..நாம் வேண்டுமானால் கேட்டு பார்ப்போம் என்று கூறினார்….
.நானும் சகோதரர் ஐசக் மில்டனும் அவரை பார்த்தோம்…..
அவரிடம் துக்கம் விசாரித்தோம்.
அவரின் துயரம் மகா கொடியது என்று கண்டு கொண்டு பேசாமல் திரும்பி விட நினைத்தோம்..
(நடிகர்..)அவர்தான் எங்களை இடைமறித்து ..நீங்கள் என்னை பார்க்கவந்த காரணம் வேறு எதாவது உண்டா..? என்று கேட்டார்..
நான் எச்சிலை விழுங்கிய படி விபரத்தை சொன்னேன்….
.அவர் இது கிறிஸ்துவை அறிவிக்கும் ஒரு படம்..
இதை நான் செய்யாமல் வேறு யார் செய்வார்.என் துயரம் என்னோடு போகட்டும்..நான் எப்போது நடிக்க வரவேண்டும்; என்றார்…
இதை நான் செய்யாமல் வேறு யார் செய்வார்.என் துயரம் என்னோடு போகட்டும்..நான் எப்போது நடிக்க வரவேண்டும்; என்றார்…
.எனக்கு கண்களில் தண்ணீர் கொட்டியது.
கிறிஸ்துவின்மேல் அவரின் அன்பு விலைமதிக்க முடியாதது…
போன வருடம் ஒரு வாலிப பையன் தன் நன்பர்களுடன் கிணற்றிற்கு குளிக்க சென்றான்….அங்கு
.என்ன நடந்தது என்று தெரியவில்லை.
தண்ணீரில் முழ்கி….அல்லது முழ்கடிக்கபட்டு இறந்து விட்டான்..
இதை கேள்விபட்ட என் இதயம் உடைந்தது….எப்படி இந்த இழப்பை அந்த குடும்பம் தாங்கும் என்று நினைத்தேன்..
சில மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டுச் சுவரில் பெயிண்டினால் பெரிதாக எழுத பட்டிருந்தது…
கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்து பாருங்கள் என்று…..
இதன் மூலம் ஊழியர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்….
உங்களை விட துயரத்தை அதிகம் அனுபவித்தவர்கள் இப்போதும் உண்டு..அவர்களுக்கு பதில் செய்யப்பட வில்லை….
உங்களை விட துயரத்தை அதிகம் அனுபவித்தவர்கள் இப்போதும் உண்டு..அவர்களுக்கு பதில் செய்யப்பட வில்லை….
.ஆனாலும் அவர்கள் தேவனை அதிகம் நேசிக்கிறார்கள்…
.
எளிமை தியாகம் என ஆரம்பித்த
பெந்தேகோஸ்தே ஊழியங்களை இப்போது தேட வேண்டியது இருக்கிறது….
.
குடும்பம் என்று வந்தவுடன் எளிதாக ஆடம்பரத்தில் மூழ்கிவிடுகிறார்கள்…
குடும்பம் என்று வந்தவுடன் எளிதாக ஆடம்பரத்தில் மூழ்கிவிடுகிறார்கள்…
பாவம் ஊழியக்காரன்….மனைவிக்காக ..பிள்ளைகளுக்காக தன் உபதேசத்தை தியாகம் செய்கிறான்……
சிலர் இதை பற்றி சிந்திப்பதே இல்லை
…எல்லோரும் போதனை செய்யவே விரும்புகின்றனர்…
…ஊழியரை குறை சொல்வதே இவர்களின் பிழைப்பாய் இருக்கிறது என்று
கூட சொல்லலாம்…
ஊழியர்களின் மேன்மையை பற்றி முகநூலில் ….அழகாய் நிற்கும் யார் இவர்கள் தலைப்பில் எழுதியதும்.. நான்தானே…….
இந்த தலைப்புக்கு உயிர் கொடுத்தவர் பாஸ்டர் இயேசுபாதம் அவரோடு
தேடியவன் இந்த நெல்லை சாலமோன்…….
பாஸ்டர் இயேசுபாதம் அவர்கள் தேடியதைப்போல் நானும் தேடுகிறேன்… இன்னும் தேடுவேன்…..தற்காலிகமாக இப்போது முடிக்கிறேன்….
பாஸ்டர் இயேசுபாதம் அவர்கள் தேடியதைப்போல் நானும் தேடுகிறேன்… இன்னும் தேடுவேன்…..தற்காலிகமாக இப்போது முடிக்கிறேன்….