புதன், 23 செப்டம்பர், 2020
திங்கள், 21 செப்டம்பர், 2020
மண் மர்மம்
------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று என் தம்பி
மகன் என்னிடம் கிணற்றுக்கு குளிக்க போகலாமா .?என்றான்..
அவன் சொன்ன கிணறு
என் வீட்டில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.
நான் சிறுவனாக
இருக்கும்போது என் வீட்டை சுற்றி நிறைய கிணறுகள் இருந்தது.
சிலவற்றில் மீன்
பிடிப்போம்,.
சிலவற்றில் நீந்தி களிப்போம் .
இதில் கமலைக் கிணற்றில்
தண்ணீர் சுத்தமாக இருக்கும்.
இப்போது இருக்கும்
வேயந்தான் குளம் அருகே ஒரு கைவிடப்பட்ட கிணறு
ஒன்று உண்டு.
அதன் நீளம் நாற்பது
அடி ..அகலம் இருபது அடி இருக்கும்.
என் கதைகளில் என்
ஊரில் எனக்கு வாய்த்த நன்பர்களை பற்றி எழுதி இருப்பேன்.
அதில் அந்தோனிராஜ்
என்பவர் முக்கிய பாத்திரம்..
சில தினங்களுக்கு
முன் என்னைப்பார்த்து என் வீட்டிற்கு நீ வரவே இல்லையே என்று வருத்தப்பட்டான் ..உடனே
சரி வா என்று அவனோடு அவன் வீட்டிற்கு போனேன்…அடுத்த தெருதான்….
என்ன இருந்தாலும்
நான் இரட்சிக்கப்பட்டு (கிராமத்து பாசையில் )கோயில் குளம் என்று வந்த பின் பழைய சினேகங்கள் ஒட்ட
முடியவில்லை.
சரி இப்போது கதைக்கு
வருவோம்….நாங்கள் குளிக்க கிளம்பிவிட்டால் குளம் ஆனாலும் சரி கிணறு ஆனாலும் சரி தூள்
பறக்கும்..குறைந்தது குளிப்பு என்பது இரண்டு
மணி நேரம்.
கண்கள் சிவந்து
வயிறு பிசி எடுக்க ஆரம்பிக்கும்.. அப்போதுதான் வீட்டு நினைவு வரும்….
அந்த நாற்பதடி
கிணறு சரியான ஆழம்…
அடிக்கடி அதில்
குளிக்கும்போது ஒரு போட்டி வரும் ..அதாவது கிணற்றில் தூர் மண்ணை யார் அள்ளி வருவது
என்று .
ஒன் டூ திரி
என்று யாரோ சொல்ல மொத்தாக முங்குவோம் (மூழ்குவோம்)…
தலை கீழாக வேகமாக
செல்வோம்..
காது இரண்டும் “கிண்” என்று இரைச்சலிடும் ..
என் முன்னால் ஆழம்
நோக்கி போகிறவர்கள் உள்ளங்கால்கள் பளிச் பளிச்சென்று மின்னும்.அவ்வளவுதான் .நான் திரும்பி
விடுவேன்.
ழூழ்கிய அனைவரும்
ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மேல் தளத்துக்கு வருவோம்.இரண்டு பேர் மட்டும் மிஸ்ஸிங்.
ஒன்று அந்தோனி ராஜ் மற்றவர் செல்வராஜ்….என்ன ஆச்சு.. தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருப்’போம்.
கொஞ்ச நேரத்தில் அந்தோனிராஜ் தலை வெளியே வரும்..அடுத்து கொஞ்ச நேரத்தில் செல்வராஜ்
உயர்த்திய கையோடு தண்ணீரைவிட்டு வெளியே வருவான் .
அவன்
கையில் கையில் பாசிபடிந்த மணலும் சகதியும் இருக்கும் இன்று வரை அந்த கிணற்றில் வேறு
யாரும் தூர் மண்ணை கையில் அள்ளியது கிடையாது..
ஒன்று மண் மற்றது
மணல்…
.மணல் என்பது ஆற்று
நீர் ஓடும் போது தண்ணீர் உராய்வினால் பாறைகள் மோதி அது சிதறி அதனால் உண்டானது மணல்.
.ஆனால்இந்த மண்
எப்படி வந்தது?….
கரிசல் காட்டு
மண்.
களிமண்…
செவக்காட்டு மண்.
அதாவது உடன் குடி
பக்கம் உள்ள சிவப்பு மண்….
இந்த மண்கள் காற்றில்
பாறையில் உராய்ந்து வந்தது என்றால்
உடன் குடியில்
சிவப்பு மலை கிடையாது.
.இது கடவுளின்
தனி படைப்பு.
ஒவ்வொரு ஊருக்கும்
ஒரு மண்…
இதை பற்றி ஆதியாகமத்தில்
விளக்கம் இல்லை ..
ஆனால் நீதிமொழிகளில்
இருக்கிறது..
நேற்று நடு இரவில்
நான் ஜெபிப்பதும் சில அதிகாரம் வாசிப்பதும் வழக்கம்..
இந்த வசனம் என்
கண்களில் பட்டதும் அதைபற்றியே இன்று சிந்தித்து கொண்டிருந்தேன்..
இன்று கிணற்று
குளிப்பின் மூலமாக அந்த மண்ணை பற்றியும் யோசித்தேன்.
இரண்டுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை..எப்படியாவது சம்பந்தபடுத்த எந்த அவசியமும் இல்லை..
இந்த மண்ணை பற்றிய
இரகசியம் என்ன.? சிந்திக்கிறேன்…..விளக்கம் கிடைத்தால் உங்களிடம் பகிர்கிறேன்
(அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். நீதிமொழிகள்8:26)