ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

சுவிஷேகனின் பாதங்கள்..(1)
…..(….சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன..ஏசாயா…52:7..).
நீண்ட யோசனைக்குபின் இந்த கட்டுரையை எழுதலாம் என்று  முடிவெடுத்தேன்…..எப்போதும் போல தேவன் என்னோடு இருப்பாராக..உங்கள் ஆதரவுக்கும் நன்றி..
முதலில் ஒரு சாதனையாளரிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்…..இன்று மிகமிக முதிர்வயதில் இருக்கும் அருமைப் போதகர்…அவர் பாஸ்டர்  KJஆபிரகாம் அவர்கள்..
அவர் ஆண்டவருக்காக தன்னை அர்பணித்த போது
அவர் வீட்டைவிட்டு துரத்தப்பட்டார்…
அவரின் துனியை ஒருதகர பெட்டியில் அடைத்து ,,அவரின் தாயாரும் தகப்பனாரும் தெருவில் வீசிவிட்டார்களாம்.
அந்த பெட்டி தெருவில் கிடக்கும்போது…மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் (சென்ஸஸ் எடுப்பவர்…)அங்கே வந்தாராம்.
இவர்கள் சண்டை அவருக்கு தெரியாது.ஆகவே மிக நிதானமாக பாஸ்டர் கேஜே ஆபிரகாம் அவர்கள் தகப்பனிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்.?அவர்கள் என்ன என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டாராம்….
ஏற்கனவே கோபத்தில் கொதித்த   போயிருந்த அவர் தகப்பனார் தனது மற்ற பிள்ளைகளை பற்றி சரியாக சொல்லிவிட்டு ..எனக்கு இன்னும் ஒருவன் இருக்கிறான்..
அவன் பிச்சகக்காரனாகிவிட்டான்.
.இப்போது பிச்சைத்தான் எடுக்கிறான்.
இனியும் பிச்சைத்தான் எடுப்பான் என்றாராம்.
கணக்கெடுத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை…எதற்கு இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டாராம்……தகப்பனோ வெறுப்பாகி… அவன் இப்போது ஒரு கூட்டத்தாரோடு சேர்ந்து  கிறிஸ்தவ..பிரசங்கியாரகிவிட்டான் என்று கோபமாக சொன்னாராம்…
கணக்கெடுக்க வந்தவருக்கு ஒரளவு புரிந்து விட்டது..ஒ..அவன் ஊழியக்காரானா..?அப்படியென்றால் கடவுளின் வேலையாள் என்று எழுதிவிட்டு சென்று விட்டாராம்…
.தெருவில் கிடந்த தகர பெட்டியை எடுத்துக்கொண்டு …
லோகம் வேண்டாம்..
ஒன்றும்  வேண்டாம் இயேசுபோதும் எனக்கு
சாத்தானே உன் இன்பம் வேண்டாம் கொண்டு போ உன் சரக்கு..
என்ற பல்லவியை கண்ணீரோடு பாடிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு கடந்து சென்றாராம்…..இவர் பல இடத்தில் சபைகளை ஸ்தாபித்த அருமையான ஊழியக்காரன்…
இப்படித்தான் அனேக ஊழியரின் பாதைகள் ஆரம்பிக்கிறது..
ஆண்டவர் அழைத்த அழைப்பு மட்டுமே தெரியும்.
ஆனால் அடுத்து என்ன செய்வது என்று எதுவுமே அவர்களுக்கு தெரியாது…
…இந்த மாதிரி அழைப்பைபெற்ற  இளம் ஊழியர்கள் அடுத்து ஆண்டவர் வழி காட்டும்வரை எதாவது ஒரு பெரிய போதகரிடம் போய் புகலிடம் தேடுவார்கள்…அந்த போதகர் இவரை அன்பாக அனைத்து இனிதாக பேசி இனிமையான வாழ்வை ஒன்றும் தரமாட்டார்…..
முதலில் இவன் கர்த்தரால் அழைக்கபட்டவன் தானா..? சோதனை வந்தால் நிலை நிற்பானா…என்பதை பல முறைகளில் பரிட்சித்து பார்ப்பார்….
பையனின் அழைப்பு சரிதான் என்று கண்டுகொண்டு மெதுவாக கிறிஸ்தவ உபதேசங்களை அவனுக்கு போதிப்பர்.
நான் பாளையங்கோட்டையில் இப்படி பட்ட காட்சியை பார்த்திருக்கிறேன்….
.பாஸ்டர் SPடேனியேல் அவர்களிடம் இப்படி ஊழியத்திற்கு அழைப்பை பெற்ற பலர் வந்திருக்கின்றனர்.
அவர்களின் முதல்வேலை விசுவாசவீட்டில் எடுபிடி வேலை செய்வதுதான்..சி
ல சமயம் மாட்டிற்கு சாணி கூட அள்ளவேண்டும்…..இவற்றை எல்லாம் முகம்கோனாமல் செய்கிறானா..? என்று சோதிக்கபடும்.
சில மாதங்கள் ஆகும்..அவனை தனியே உட்கார வைத்து வேத வசனம் முறையாய்  பாதிக்கப்படும்.
அப்போது பைபிள் காலேஜ்.அல்லது வேதாகம சாலை எதுவும் கிடையாது….
மூத்த போதகர்களிடம் இருந்து வேதத்தை கற்றுக்கொள்ள வேண்டும்..
இப்படிபட்ட காலத்தில் அந்த இளம் ஊழியர்கள் தினமும் கண்ணீர் வடிப்பார்கள்….ஆண்டவரே என் எதிர்காலம் என்ன..? என் நிலமை இப்படியே முடிந்து போகுமா ,? என்றுதான் நினைப்பார்கள்……இப்படி சில வருடம் கடந்து போகும் ..
……
இதற்குள் சபை எப்படி நடத்த வேண்டும்…
.பாடல் ஆராதனை எப்படி நடத்த வேண்டும்…
சங்கீத விளக்கம் எவ்வாறு  கொடுக்க வேண்டும்….
வியாதிபட்டு வருபவர்களை எவ்வாறு கவனிக்கவேண்டும்…
பிரசங்கம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கபடும்.
.தவறாய் பிரசங்கம் செய்தால் அதே இடத்தில் கண்டித்து திருத்த பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்..
ஆக சபையின் எல்லா நடைமுறையும் கற்றுத்தரப்படும்…இப்படி கண்ணீரும் வேதனையுமாய் கடந்த அந்த இளம் ஊழியனுக்கு
ஒரு நாள்  இன்ப அதிர்சியும் அதோடு இனி என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்பும் பதட்டமும் வரும்….
சுவிஷேகனின் பாதங்கள்..(2)
தலைமை போதகர் சொல்வார்..
உனக்கென்று ஒரு சபை தருகிறேன்.நீ அங்கே போய் ஊழியம் செய்யலாம்.ஆனால் அதற்கு முன் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தனியாக ஊழியம் செய்வது தேவையில்லாத சங்கடங்களை உண்டு பண்ணும் என சொல்வார்.
இது சிலருக்கு நியாயமாக படும். ஆகவே திருமணம் செய்து கொண்டு குறிப்பிட்ட இடத்தில் ஊழியம் செய்வார்கள்.
சிலர் இப்போது திருமணம் தேவையில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள்…..இங்கே நான் சொல்ப்போகும் ஊழியர் திருமணம் செய்து கொண்டவர் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த ஊழியர் தன் தலைமைப் போதகர் சொன்ன இடத்திற்கு தன் மனைவியுடன் சென்று ஊழியத்தை ஆரம்பிப்பார்..
இனிதான் முக்கிய கதையே இருக்கிறது…..
அந்த சபை ஒரு கிராமமாக இருக்கலாம்.அல்லது ஒரு பட்டணத்தின் ஒதுக்கு புறமாகவும் இருக்கலாம்…
மிகச் சிறிய கட்டடம்…விசுவாசிகள் என்று நான்கு குடும்பம் ஒட்டிக்கொண்டிருக்கும்…அதுவும் ஆராதனைக்கு அந்த குடும்பங்களில் இருந்து ஒருசிலர் மட்டுமே வருவார்கள்……
ஊழியர் முதல் ஆராதனையில் இதை கவனிப்பார்…பத்து அல்லது பதினைந்து பேர் மட்டும் கலந்து கொண்ட ஆராதனையை முடித்துவிட்டு ஊழியர் மனக்கிலேசத்துடன் இருப்பார். எப்படி இந்த சபையை கட்டுவது..?
-------------
முதற்காரியமாக ஏற்கனவே சபையில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் ஆராதனையில் கலந்துகொள்ள செய்யவேண்டும்.ஆகவே அந்த குடும்பங்களின் உள்ள சகலரையும் சந்தித்து பேசி ஆராதனைக்கு வரச்சொல்வார்.
அடுத்த வாரம் கொஞ்சம் முன்னேற்றமாக இருக்கும்….
இதற்கிடையில் தன் சாப்பாட்டிற்கும் ஆலயத்தின் கரண்ட்பில் கட்ட இப்படி பல செலவுகளுக்கும் என்ன செய்ய..?
யாரிடமும் கேட்க முடியாது…
தலைமை ஸ்தாபணம் கொஞ்சமாய் உதவித்தொகை அனுப்பும்..அதுவும் மாதா மாதம் சரியாய் வராது….
.இங்கே சபையிலே போடப்படும் காணிக்கை சில்லைரையாகத்தான் இருக்கும்…காரணம் சபையில் வறுமையில் இருக்கும் மக்களே அதிகம்….ஆக சபையினர் வளமாக வேண்டும்.இதெல்லாம் உடனே நடக்காது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும்..
சபை செழிப்படையும் வரை தான் உயிரோடு இருக்க போஜனம் வேண்டுமே..
என்ன செய்ய..முழங்காலிடு……முழங்காலிடு…..யாருக்கும் தெரியாமல் போராடு……இதுதான் அவருக்கு சொல்லிக் கொடுக்கபட்டுள்ள போதனை……
ஆகவே இவரும்  போராடுவார்.
கர்த்தர் அந்த ஊரில் கிரியை செய்ய ஆரம்பிப்பார்….
வேறு ஒரு நிகழ்வை சொல்கிறேன்
-------------------------------------------------------------------------------
ஒரு போதகர் அவருக்கு தலைமை போதகரை பற்றி இவ்விதமாக சொன்னார்…
.இதை சொல்லும்போது அவர் பிரசங்கித்த வசனம் இதுதான்…
(உன்னதபாட்டு..2:12..காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது..)
காட்டுப்புறாவின் சத்தம் கேட்டிருக்கிறீர்களா..?க்கூ..க்கூ..என்று இதயத்தில் ஆழத்தில் இருந்து விம்முவதுபொல இருக்கும்….
அந்த ஊழியர் காட்டத்துறையில் ஊழியம் செய்த காலஞ்சென்ற தாமஸ் பாஸ்டரை பற்றி இப்படி சொன்னார்…..
ஆராதனை முடிந்த உடனே காணிக்கையை ஒரு தட்டில் வைத்து அவர் முன்னே கொண்டு வைப்பார்களாம்.
அவர் அதை கையில் வாங்கி கொண்டு ஆல்டரின் பின்புறம் முழங்காலில் நின்று அந்த காணிக்கையின் மேல் கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாராம்.
அப்போது அவரிடம் இருந்து வெறும் விம்மலின் சத்தம் மட்டும்தான் வருமாம்….
அந்த சமயம் அவருக்கு உதவி போதகனாய் இருந்த இவருக்கு இது வித்யாசமாய் இருந்ததாம்..தன் முன்னே இருக்கும் மொத்த பணத்தை பார்த்து சந்தேஷபடாமல் விம்மி அழுகிறாரே.. இது ஏன் என்று நினைத்தாராம்..
ஒருநாள் திரு தாமஸ் பாஸ்டரிடம் இதைபற்றி கேட்டாராம்…
அதற்கு தாமஸ் பாஸ்டர் இதன் அர்த்தம் உனக்கு இப்போது புரியாது .ஒருநாள் வரும் ….அப்போது தானாய் உனக்கு இது விளங்கும் என்றாராம்…
------------------------------
இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒருபோதகருக்கு கானிக்கையை அவர் சபையார் செலுத்துவது சாதாரணகாரியம் அல்ல…
ஒவ்வொரு செங்கலாய் பார்த்துப் பார்த்து கட்டி எழுப்பவேண்டும்……
அந்த காணிக்கை பணத்தை பார்க்கும் ஒவ்வொரு நாளும் தன் பழைய நாட்களை நினைத்துக்கொள்வான்…..
இந்த ஜனம் ஆசீர்வாதத்தில் நிலை நிற்க வேண்டும்… என்று ஜெபிப்பான்…..அதற்கு இந்த வருமையின் நாட்கள் அவசியம்……
--------------------------------------
.ஒருபோதகரை பார்த்து நான் கேட்டேன்.
அவர் சகோதரர்களில் சிலர் இரட்சிக்கபடவில்லை.
ஒருவர் மட்டும் நல்ல விசுவாசி.
.இந்த போதகர் இரட்சிக்பட்ட சகோதரனுக்கு வேண்டிய உதவிகள் செய்வார்.ஆனால் இரட்சிக்கபடாத மற்ற சகோதரனுக்கு செய்யமாட்டார்….
நான் அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் அவரும் பாவம் தானே என்றேன்…
அதற்கு அந்த போதகர் இப்படி சொன்னார்.
இது காணிக்கை பணம்.
இதை மீட்பின் எல்லைக்குள் வராதவன் சாப்பிட கூடாது என்றார்…
------------------------------------------------------------
சரி நான் மீண்டும் தலைப்புக்குள் வருகிறேன்……
அந்த சிறிய சபையின் ஊழியன் முழங்கால்கள் தேயத் தேய அழுது ஜெபிப்பான்…..
அந்த ஊரில் காட்டுப் புறாவின் சத்தமாக அது கேட்கப்படும்.
அது ஏக்கமாக பெருமூச்சாக மாறும்…
இது பலரை கிறிஸ்துவின் அருகே இழுக்கும்…..எப்படியென்றால்……?(தொடர்கிறேன்…)
சுவிஷேகனின் பாதங்கள்..(3)
இதை போன்ற காரியங்களை புரிந்து கொள்வது கடினம்….
அதாவது ஊழியத்திற்கென்று அழைக்கப்படுதல்,
ஏதோ ஒரு ஊரில் போய் சுவிஷேச வேலை ஆரம்பித்தல்.
பின்பு அந்த ஊரில் ஒரு சபையை ஸ்தாபித்து அங்கிருந்து இன்னும் ஊழியரை உருவாக்குதல்.
இவை எல்லாமே தொடர் சங்கிலியாக நடந்து கொண்டே இருக்கிறது…….
கிறிஸ்தவர்கள் மத்தியில் ஊழியம் செய்வது பிழைப்பு..
வடதேசத்தில்போய் ஊழியம் செய்வதுதான் அழைப்பு.என்று அடுக்கு மொழியில் பேசுவதும் அதை முகநூலில் போட்டு அதற்கு லைக் கொடுத்து சிலேகிப்பதின் பின்னனி நான் எழுதும் இந்த ஊழியர்களை பற்றி உள்ள எரிச்சலினாலேயே என்று நான் நினைக்கிறேன்…..
கர்த்தர் ஒருவனை அழைப்பது உண்மை.
அப்படி அழைத்தவனுக்கு ஒரு இடத்தை காட்டியதும் உண்மை.
அங்கே அவன் நிலைத்திருப்பதும் உண்மையெனின் இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது…?
சில சமயம் சிலரை தன்பக்தத்தில் தேவன் இழுக்க இப்படி நடக்கிறது……..
மூன்று உதாரனம் சொல்கிறேன்..
முதல் உதாரணம்
குட்நீயூஸ் ஸ்தாபக நிறுவனர்..பாஸ்டர் ராஜேந்திரன் அவர்கள் இந்து மதத்தில் இருந்து  கர்த்தரால் அழைக்கபட்டவர்.
அவர் முதல் ஊழியம் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ஆரம்பித்தது.
அவர் சொல்ல நான் கேட்ட சம்பவம் இது…
அந்த ஊரில் பாஸ்டர் இருக்கும் போது, ஒரு நபர் அவரை எங்கு கண்டாலும் இவர் சாதி பெயரைச் சொல்லி செல்லி திட்டுவாராம்..
பாஸ்டர் இராஜேந்திரன் அவர்களுக்கு இது மிகப்பெரிய தொந்தரவாக இருந்திருக்கிறது.
ஒரு சமயம் அந்த நபர் மிகவும் எல்லை மீறவே இவர் ஒருநாள் ஆண்டவரிடம் கண்ணீர் விட்டிருக்கிறார்….
அதன் விளைவு அடுத்த சில நாட்களிலே நடந்தது..
அந்த நபர் மரத்தில் இருந்து கீழே விழுந்து முதுகு தண்டில் அடிபட்டு படுத்த படுக்கையாகி விட்டார்..
தான் அடிபட்டு படுத்த படுக்கையாகி விட்டதும் இது தெய்வத் தண்டணைதான் என்று அவர் நினைத்திருக்கிறார்…
ஒரு ஆளை அனுப்பி பாஸ்டர் இராஜேந்திரன் அவர்களை அழைத்து வர செய்திருக்கிறார்……
பாஸ்டர் போய் பக்கத்தில் நின்று இருக்கிறார்..
படுக்கையில் கிடக்கும் அந்த நபர் பாஸ்டர் கைகளை பிடித்து தான் செய்த தவறை மன்னியுங்கள் என்று கதறி இருக்கிறார்.
பாஸ்டர் அவர்கள் அவரின் தலையில் கைகளை வைத்து ஜெபித்துவிட்டு வந்து விட்டார்.
அற்புதமாக சில நாட்களில். முற்றிலும் குணமாகி அந்த நபர் எழுந்துவிட்டார்.
எழுந்ததும் அவர் முதலாவது செய்தது….பாஸ்டரிடம் வந்து எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறி சபையில் ஐக்கியமாகி விட்டார்…இது பல வருடங்களுக்கு முன்னே நடந்தது. இப்படியும் சபையில் சேர்கிறார்கள்.
இரண்டாவது..
எனக்கு  ஊஸ்மான் என்ற ஒரு முஸ்லீம் நன்பர் உண்டு.அவர் ஒருஇஸ்லாமிய பாடகர்…தீன் முரசு என்ற பட்டமுமம் அவருக்கு உண்டு….
அந்த நன்பர் திருநெல்வேலி டவுன் பக்கம் போகும் போது .காளிமுத்துநாடார் டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம்..அந்த கடையில் நிறைய இந்து கடவுள்களின் படம் இருக்குமாம்……
ஒரு நாள் உஸ்மான பாய் டீ குடிக்கும்பேது கவனித்திருக்கிறார்..அங்கு மிகப்பெரிய அதிசயமாய் எந்த இந்து கடவுள்களின் படமும் இல்லை….
.காளி முத்து நாடார் கல்லாவில்; ஒரு பைபிள் சிரித்தபடி இருந்திருக்கிறது..
என்ன அண்ணாச்சி…இது?என்று பைபிளை காட்டி உஸ்மான் பாய் சிரித்திருக்கிறார்..
அதற்கு டீக்கடைக்காரர் சொன்னாராம்.
ஆமாம் பாய் நான் இப்போ கிறிஸ்தவன் ஆகிவிட்டேன்.. முன்பு வீட்டில் ஒரே பிரச்சனையாய் இருந்தது ..ஒருநாள் நாலுமாவடி மோகன் சி லாசரஸ் கூட்டத்திற்கு சென்றேன்….அங்கே நான் மனம் மாறிவிட்டேன்….இப்போது மிகுந்த சந்தூஷமாக இருக்கிறேன்.என்றாராம்….இதை என்னிடம் உஸ்மான் பாய் சொல்லி ஆச்சரியபட்டார்…
போனவாரம்…… என் மனைவி என்னிடம் சொன்னார்கள் என்னிடம் ஒரு பட்டுச்சேலை இருக்கிறது.அதை எனக்கு கட்டுவதற்கு மனதே இல்லை.தண்டமாக வீட்டில் இருப்பதை விட பட்டுசேலை எடுப்பவர் கடையில் இதை விற்றுவிடலாமே என்றார்கள்….
சரி வாங்க போகலாம் என்று அழைத்து சென்றேன்…..டவுன் ஆர்ச் பக்கத்தில் இந்த பழைய பட்டுசேலை வாங்கும் கடை இருக்கிறது.அதில்போய் இதை விற்றோம் .
அப்போது பக்கத்து கடையை கவனித்தேன் அதில் ஆள் இல்லை..பெரிய எழுத்தில் வேத வசனம் எழுதபட்டிருந்தது.
நான் விற்ற கடையில் இந்திய சாமிகள் நிறைந்து இருந்தார்கள்….அந்த கடையில் ஆள் இல்லையே அது யார்கடை..? என்றேன்….அதுவும் நம்ம கடைதான்..அது என் தம்பிக்கு சொந்தமானது….அவன் இப்போது கிறிஸ்தவனாக ஆகிவிட்டான் என்றார்….
மூன்றாவது
போனவருடம் ஒருவர் எங்கள் சபையில் சாட்சிசொன்னார்.அவர் நான் பங்கெடுக்கும் சபையின் விசுவாசிதான்…இப்போது ஊட்டி பக்கத்தில் உள்ள ஒரு கிரமத்தில் நான் சொல்லும் இந்த முறைப்படி ஊழியத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்…
நன்றாக படித்தவார்.அவர் மனைவி அரசாங்க வேலை பார்க்கிறார்கள்.
அவருக்கு ஊழியத்தின் அழைப்பு வந்தது.
உடனே கிளம்பி போய்விட்டார்.ஊட்டி அருகே ஒரு கிராமம்..அங்கே அந்த கிராமத்தில் இவருக்கு இந்து முன்னனி கட்சியினரால் பயங்கர எதிர்ப்பு..
ஊழியம் செய்ய முடியாதபடி ஒருசிலர் மிகவும் உக்கிரமாக எதிர்திருக்கின்றனர்….
அவர்களுக்காக ஜெபியுங்கள் என்று எங்களிடம் ஜெபவேண்டுகோள் வைத்தார்..
சபையார் அதை மனிதில் வைத்து ஜெபித்தார்கள்….
சமீபத்தில் ஒருநாள் அவர் மீண்டும் வந்து சாட்சி கொடுத்தார்.
இப்போது  ஊழியத்தின் வாசல் திறந்திருக்கிறது..என்றார்…
அவரை எதிர்த்த பலர் அந்த ஊரில் இப்போது இல்லை.எங்கோ சென்றுவிட்டனர் என்றார்..
இப்படித்தான் சபை வளர வேண்டும்.
ஒவ்வொரு செடியாக தோட்டத்தில் நடப்பட வேண்டும்…
ஒவ்வொரு செடிக்கு பின்னும் அந்த ஊழியனின் கண்ணீர் இருக்கும்….வெளியில் இருந்து பார்ப்பவர்க்கு இது புரியாது…ஆவிக்குறிய கண்களுடன் பர்ப்பவர்களுக்கு மட்டுமே இது தெரியும் ..
சபை வளர வளர அந்த போதகனுக்கு சுமையும் அதிகரித்து கொண்டே போகும்..
எந்த மாதிரியான சுமை என்று சொல்கிறேன்……(தொடரும்..)
சுவிஷேகனின் பாதங்கள்..(4)
உண்மையிலே சபையில் ஆட்கள் பெறுக பெறுக போதகருக்கு சுமை அதிகரித்துக்கொண்டே போகும்
பிரசங்க பீடத்தில் ஏறி நின்றவுடன் அவர் கண்கள் சபையை சுற்றிலும் கவனிக்கும்.
அனேகமாக சபைக்கு வருகை தரும் எல்லோரும் அவரவர்க்கு ஒரு இடத்தை குறிப்பிட்டு வைத்திருப்பார்கள்.
அந்த இடத்தில்தான் அமருவார்கள்.இதில் நானும் இதில் அடக்கம்
ஆகவே போதகருக்கு இன்று யார் சபைக்கு வரவில்லை என்பது எளிதாக கண்டுபிடித்துவிடலாம்..(நான் தவறாக இதை சொன்னால் இதை படிக்கும் போதகர்கள் இதை திருத்தலாம்)
குறிப்பிட்ட ஒரு நபர் ஏன் வரவில்லை என்று ஆராதனை முடிந்தவுடன் இதை விசாரிப்பார்……
சுகவீனமாக இருந்தால் திங்கட்கிழமை அவரை போய் பார்த்து அவருக்காக ஜெபிப்பார்.
இப்படி எல்லேரையும் விசாரிக்க வேண்டும்.
வசதி உள்ளவன் இல்லாதவன் என்றெல்லாம் இதில் பார்க்ககூடாது..
அப்படி செய்யவும் மாட்டார்கள்…….
நான் இப்போது முன் மாதிரியான ஊழியரை பற்றித்தான் பேசுகிறேன்
இன்னும் யாராவது சுகவீனமாகி மருத்துவ மனையில் இருந்தால் அவர்களை போய் பார்த்து பிறருக்கு தெரியாமல் சில உதவிகள் செய்யவேண்டும்..
மிகப்பெரிய சபை ஆகும் போது உதவி ஊழியர்களை இந்த வேலைக்கு பயன் படுத்துவார்கள்…….இன்னும் யாராவது விசுவாசி மரித்து போனால் சிலநேரம் முழு அடக்க செலவும் சபையே கவனித்துக் கொள்ள வேண்டியது வரும் .இதில் சபை என்றால் அந்த போதகர்தான்கவனிக்கவேண்டும்
..வளர்கின்ற சபைக்கு இது மிகப்பெரிய சுமையாய் இருக்கும்.
போதகர் கண்விழி பிதுங்கிப்போகும்……
ஒரு போதகனின் வேலையை பாருங்கள்
(1)
ஞாயிற்று கிழமை சபை ஆராதனை..(இதற்கு வாரம் தோறும் புதிய செய்தி ஆயத்தம் செய்யவேண்டும்.)
(2)
திங்கட்கிழமை வீடு சந்திப்பு..
(3)
செவ்வாய் கிழமை புதிய இடத்தில் வீட்டுக் கூட்டம் நடத்துதல்…….(இப்படி ஆரம்பித்தால்தான் பின் நாட்களில் கிளை சபையை ஆரம்பிக்க முடியும்)
(3)
புதன் கிழமை வேதபாடம்.(இதற்கு செய்தி ஆயத்தம் பண்ண வேண்டும்)
(4)
வியாழக்கிழமை மீண்டும் வீடு சந்திக்க வேண்டும்அல்லது வாலிபர் கூட்டம்..அதிலும் செய்தி கொடுக்க வேண்டும்
(5)
வெள்ளிக்கிழமை உபவாசக் கூட்டம்.அதிலும் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்சின்னதாய் செய்தி கொடுக்கவேண்டும்……
(6)
சனிக்கிழமை ஞாயிற்று கிழமைக்கான ஆயத்தக் கூட்டம்..அல்லது காத்திருப்பு கூட்டம்..அல்லது திருவிருந்துக்கான ஆயத்தக் கூட்டம்.(அனேக சபைகளில் திருவிருந்து மாதம் ஒருதடவை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் நடைபெறும்…….,,.
இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்ஒருபோதகர் நம்மைப்போல் சாதாரண இரத்தமும் சதையுமான மனிதர்தான்.அவருக்கும் துக்கங்கள் துயரங்கள் எல்லாம் வரத்தான் செய்யும்.அத்தனையும் உதறிவிட்டு
எல்லா நாளும் ஜெபிக்கவேவண்டும் செய்தி கொடுக்கவேண்டும்.இது மிகவும் கடினாமான ஒன்றாகும்……ஆனாலும் செய்வார்..அது தேவனாலே கூடும்
ஒரு போதகர் தூத்துக்குடியில் ஆரம்பகால ஊழியத்தில் இருக்கும்போது……ஒரு நாள் அவர் சபையில் ஒரு குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஜெபித்து பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இவரும் சரி என்றார்..
ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் போதகரின் சொந்த குழந்தை பிறந்த உடன் இறந்து விட்டது.
இப்போது என்ன செய்ய?
.
ஞாயிறு ஆராதனை நடத்த முடியாதே……
னால் அந்த போதகர் என்ன செய்தார் தெரியுமா..?
போதகர் குழந்தையை அப்படியே வீட்டிற்குள் வைத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் மனைவியை ஆறுதல் படுத்துவிட்டு ஆராதனைக்கு வந்துவிட்டார்..
ஆராதனை சந்தேஷமாக முடிந்தது.
.
போதகர் குழந்தை இறந்ததை யாரிடமும் சொல்லவில்லை
எல்லோரும் போன பின்போதகர் வீட்டிற்கு போய் வீட்டிற்கு அருகிலேயே ஒரு குழியைத் தோண்டி தன் கையாலேயே அதை புதைத்தாராம்..
இந்த சம்பவம் உண்மையா என்று அவரிடம் ஒருமுறை விசாரித்து விட்டு;தான் இதை எழுதுகிறேன்..
அந்த போதகர் பெயர் டேனியேல்..இப்போது திருக்குறுங்குடியில் ஊழியம் செய்கிறார்……ஆராதனைக்கு அவ்வளவு முக்யத்துவம் கொடுக்கவேண்டும்.
சபையை கட்டுவது சாதாரண காரியம் அல்லவே..
விசுவாசிகளின் விசுவாசம் ஊழியக்காரணை பார்த்துதான் வளரும்.
ஊழியக்காரன் எப்போதும் ஆவியில் அணல் உள்ளவனாய் இருக்க வேண்டும்…….
எனக்கு (சுமார்)ஐந்து வயது ஆகி இருக்கும் போது ஒருநாள் என் டவுசர் முழுவதும் நனைந்து இருந்தது.
என் தாயார் இது என்னவென்று பார்த்தார்கள்..
அது வேறு ஒன்றுமில்லை .சிறுநீர் தானாய் பேய்க்கொண்டே இருந்ததின் விளைவு.
அதாவது நீரிழிவு நோய்.
என் தாய் அலறி விட்டார்கள்.
இந்த சம்பவம் இன்றும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது,
என்னை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள்..
எங்கே தெரியுமா?
.எங்கள் போதகர் வீட்டிற்கு.அது என் வீட்டில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரம் இருக்கும்..
ஒரு வாடகை வீட்டில் அவர் தங்கி இருந்தார்.
.
பெயர் ராசையா பாஸ்டர்.அதிகம் படிக்காதவர்..
நாங்கள் போய் சோந்த உடனே.. என்னவென்று கேட்டார்……உடனே கொஞ்சம் தேங்காய் எண்ணையை என் உச்சியில் வைத்து ஜெபித்தார்
அவ்வளவுதான். சிறு நீர் வடிவது நின்றுவிட்டது.
.
அதன் பின் வீட்டிற்கு என்ன நடத்தியே கூட்டிவந்தார்கள்……அதுவும் சந்தேஷமாக
இதுதான் விசுவாசிக்கும் பாஸ்டருக்கும் உள்ள ஐக்கியம்
..
இக்காலத்தில் இப்படி காண்பது அறிது.
ஆனாலும் நடக்கிறது..இரவு ஒருமணிக்கு வீட்டிற்கு அழைத்து ஜெபிக்க சொல்லும் மக்களும்,முகம்கோணமல் விசுவாசியின் வீட்டிற்கு சென்று ஜெபிக்கும் போதகர்களையும் நான் அறிவேன்.
விசுவாசியின் சுக துக்கங்களின் போதகருக்கும் பங்கு உண்டு..ஒரு அதிசயமான உண்மை நிகழ்வை சொல்கிறேன்……(தொடர்கிறேன்..)

சுவிஷேகனின் பாதங்கள்..(5)
ஒரு அழைக்கபட்ட ஊழியனை மற்றவர்கள் விமர்சிப்பதைவிட கிறிஸ்தவர்கள் விமர்சித்து விளாசுவதுதான் மிக அதிகம்…..
புதிய ஊழியம் இளக்காரமாகவும் ஏளனமாகவும் மற்றவர்களால் எள்ளி நகையாடவும் படுகிறது…..
ஆயிரம்போர் கூடும்; ஒரு சபையின் போதகரை நேருக்கு நேர் பார்த்தால் மிகவும் மரியாதையாக பேசுவார்கள்…
ஆனால் பத்துபேர் வைத்து ஒரு ஆராதனையை ஆரம்பித்தால் பிழைப்புக்காக கூட்டம் நடத்துகிறான் என்பார்கள்..
எல்லாவற்றையும் சகிக்க வேண்டும்…
…இந்த ஊழியத்தில் அழைப்பு இல்லாமல் வந்தால் சிலகாலத்தில் காணாமல் போய்விடுவார்கள்….
உண்மை அழைப்பு உள்ளவனை எதுவும் அசைக்க முடியாது……
இரண்டு மாதத்திற்கு முன் மாலை நான்கு மணிக்கு என் பணிக்கு புறப்பட்டேன்….
.என் ஊரில் இருந்து மெயின்ரோட்டை நெருங்கும் போது …ஒரு ஆட்டோ என்னை நோக்கி உருண்டு வருகிறது..
நான் என் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினேன்.
எனக்கு முன்பாக அந்த ஆட்டோ குடை சாய்ந்து கவிழ்ந்தது.
அந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவுக்கு அடியில் சிக்கி கொண்டார்..நான் ஓடிப்போய் ஆட்டோவை தூக்க முயற்சித்தேன்..
அதற்குள் அனேகர் வந்துவிட்டனர்…
ஆட்டேவை தூக்கி நிறுத்தினோம்…..
அங்கே கொஞ்ச தூரத்தில் ஒரு முதியவர் அடிபட்டு நடு ரோட்டில் கிடக்கிறார்.
அவர் யார் என்று ஓடிப்போய் பார்த்தோம்.அவரை தூக்கி உட்கார வைத்தோம்.அவர் யாரென்று தெரியவில்லை..
ஆனால் அவர் என்ன கண்டுகொண்டார்.
சாலோமோன் பிரதர்…. நான்தான் பாஸ்டர் …………இன்னாரென்றார்…
ஓ……..கடவுளே…இவர் அவரா..?......
கொஞ்ச வருடத்திறகு முன் அதாவது  சுமார் இருபது வருடத்திற்கு முன் என் வீட்டுப் பக்கத்தில் ஆரவாரமாக ஊழியத்தை ஆரம்பித்தவர்….
ஏக தடாபுடல் கூட்டம்…….கம்பீரமாக பாஸ்டராக வலம் வந்தவர்..
ஒரே ஒரு முறைதான் அவரிடம் பேசி இருக்கிறேன்…
அதன்பின் அந்த இடத்தை காலிபண்ணி விட்டு சென்று விட்டார்…
கர்த்தர் இந்த இடத்தைதான் எனக்கு கான்பித்தார் என்று ஒரு விசுவாசியிடம் கூறி அந்த இடத்தை பாதி விலைக்கு வாங்கி..ஆரவாரமாக ஊழியம் ஆரம்பித்து பின் கொஞ்ச நாட்களில் அட்ரஸ் இல்லாமல் போனவர்.
அவர் உடையை பார்த்தேன்..ஏதோ கம்பேனியில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார்…(நீல நிறத்தில் பேண்ட் புளு கவரில் சட்டை..)….
எப்படி இருக்கிறது பாருங்கள்…
வேறு ஒரு ஆட்டோவில் அவரை அனுப்ப சொல்லிவிட்டு நான் என் வழியே போனேன்…..
போலிகள் நிலை நிற்பதில்லை….
ஒரு போதகர் புதிய ஊழியம் ஒன்றை ஓர் இடத்தில் ஆரம்பித்தார்.
ஆரம்பித்த சில நாட்களிலே பைக் விபத்தில் கால் முட்டு இடம் பெயர்ந்து விட்டது..
எழுந்து நடமாட நான்ககு மாதம் ஆயிற்று……
இந்த நான்கு மாதமும் அவரை போசித்தது யார்..?
வீட்டு வாடகை கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு படிப்பு சொலவுக்கு பணம் வேண்டும்….
சாப்பிட சாப்பாடு வேண்டும்…
புதிய இடம்..பத்து விசுவாசிகள்..அதுவும் எளிய ஜனங்கள்……மிகவும் கஷ்டமான அந்த சூழ்நிலையில் ஜெபித்துக்கொண்டே தூங்கி விட்டேன்
பின் நாட்களில்.அவர் சொன்னார்..நான் கால்ஒடிந்து கிடக்கும்போது ஒருநாள் ஒரு தரிசனம் கண்டேன்….அதில் தேவதூதர்கள் ஒருபாட்டு பாடுவதை கேட்டேன்..
அந்த பாட்டு------------------------
எந்தன் ஜீவனிலும் மா அருமை
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமே இல்லா அன்பின் ஆழமதை 
எண்ணி நான் துதித்திடுவேனே
சரணம்
-------------------------------------------------
இகமதில் என் பெலன் குறைந்திடினும்
அகமதில் உம் பெலன் பெருகுவதால்
கழுகினைப்போல் புது வாலிபம் என்னுள்ளில்
கிருபையாய் அனுதினம் வளர்கிறதே….
இந்த பாடலை தூதர்கள் பாட நான் கேட்டேன்……
கண்விழித்து பார்த்தேன்.
.ஒடிந்த கால்களுடன் நான் பெலன் குறைந்து இருந்தாலும்…..புதிய பெலன் வந்து சேரும்
என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது என்றார்….

இந்த பாடல் சகோதரர் நடராஜமுதலியாரால் இசை தட்டில் பாடபட்டது..)
போதகர்களின் வாழ்வில் நடக்கும் அதிசயங்களை விசுவாசிகள் கவனிக்க வேண்டும்.
விசுவாசிகள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை சபையில் சாட்சியாக சொல்லவேண்டும்…அது மற்றவர்களை உயிப்பிக்கும்…
------------------------------------
ஒரு அம்மா சாட்சி சொல்வதற்கு மட்டுமே ஒரு சபைக்கு வருவார்கள்…..அவர்கள் பாரம்பறிய சபையை சேர்ந்தவர்கள்….
அங்கு சாட்சி சொல்ல ஆராதனையில் அனுமதி இல்லை.
.ஆகவே எதாவது சாட்சி சொல்ல வேண்டும் என்றால் உடனே இந்த சபைக்கு வந்து சாட்சி சொல்வார்கள்…
இப்போது இரண்டு வருடத்திற்கு முன் அவர்கள் மகனை கர்த்தர் ஊழியத்திற்கு அழைத்துவிட்டார்.
அவன் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு ஊழியத்திற்கு வந்துவிட்டான்..
ஆரம்ப நாட்கள் அல்லவா..?பயங்கர நெருக்கடி…..
இந்த அம்மாவுக்கு அவன் படும் கஸ்டத்தை பார்த்து தாங்க முடியவில்லை…
அவன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அற்புதமாக இந்த அம்மாவுக்கு தெரிகிறது.
ஆகவே அதை சாட்சியாக சொல்ல வேண்டுமே….
தனது சபையில் இதற்கு அனுமதி இல்லயே..
பின் என்ன செய்ய..இப்போது வாரம் தவறாமல் ஆராதனைக்கு ஒழுங்காக வருகிறார்கள்…..அவ்வப்பொது சாட்சியும் சொல்கிறார்கள்…
இவ்விதமாகவும் புதிய ஆட்கள் சேருகிறார்கள்.
சபைக்கு வா என்று.யாரும் யாரையும் கட்டாய படுத்து முடியாது….
அதுவும் புதிய சபையில் இருக்கையில் இருந்து எல்லாமே வசதி குறைவாக இருக்கும்….
ஆனால் தேவனால் அங்கு நடப்பட்ட  செடிகள் மட்டுமே நிலைத்து நிற்கும்…..இது கர்த்தரின் வேலை………
புதிய ஊழியத்தையும் ஊழியரையும கிண்டல் அடிக்கும் முன் யோசியுங்கள்…….
ஒரு வேளை உங்களையும் தேவன் அங்கே நடுவதற்கு சித்தமாகலாமே….யார் கண்டது…..
இன்னும் ஒரு நிகழ்வை மட்டும் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன்….
சுவிஷேகனின் பாதங்கள்..(6)
இயேசு கிறிஸ்துவின் சபை என்பது பூமியில் ஒன்றுதான் இருக்கிறது……
அது முழவதுமாக கர்த்தரின் வருகையில் மணவாட்டியாக வெளிப்படும்….
ஆனால் இப்போது அந்த சபைக்கான மக்களை பகுதி பகுதியாக ஊழியர்கள் தகுதி படுத்துகின்றனர்.
அப்படி தகுதிபடுத்தும் இடத்தைதான் நான் சபை என்று இங்கே குறிப்பிடுகிறேன்….
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும்,
இரண்டாவது தீர்க்கதரிசிகளையும்,
மூன்றாவது போதகர்களையும்,
பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும்,
 பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்….
இத்தனையும் இந்த சபைக்குள் இருக்கவேண்டும்…….
இது உடனே இப்படி இல்லாவிட்டாலும் சபை வளரும் போது இந்த பிரகாரமே இருக்கும்……
இது தெய்வ கட்டளை……
இதற்குமிஞ்சி ஒன்றும் நடக்க கூடாது…
இயேசு அழைக்கிறார் நிர்வாகம் (அது சபை அல்ல..)ஒரு பைபிள் வகுப்பு நடத்தியது ..இப்போதும் நடத்துகிறது……அதில் பயிற்சி பெற்று வந்தவர்கள் உடனே ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்….இதைப்போல் பல ஸ்தபனங்கள் செய்கின்றன…ஆனால் இவைகள் சபை அல்ல…….ஆனாலும் இப்படி செய்யலாம் என்று அதிகாரம் கொடுத்து அனுப்புகிறது..இது எனக்கு புரியாத புதிராய்த்தான் இருக்கிறது..
.ஒரு சபைபோதகன் அவன் ஊழியத்தில் முதல்கட்டமாக அவனை விட மூத்த சபை போதகரிடம் ஜெபித்து ஊழியத்திற்கென பிரித்துவிடவேண்டும்…..இது வேதத்தின் நியதி
  1. அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

  1. அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்அப்போஸ்தலர்…13:2..
இப்படி செய்வது ஒரு சபை போதகன்தான் செய்ய வேண்டும்….மற்றவர்கள் எப்படி செய்கிறார்களோ தெரியவில்லை..
இரண்டாவது எல்லோரும் எல்லோர் தலையிலும் கை வைக்கவும் கூடாது..வைக்கவும் முடியாது……
என் தலையை பொறுத்த வரை
என் தலையில் முதலாவது என் திருமுழுக்கு பெறும்போது பாஸ்டர் M இராஜேந்திரன் கைகளை வைத்தார்……

இரண்டாவது என்னை பாடல் ஊழியத்தில் அதற்கென வரங்களை தந்தேன் என்று கர்த்தர் சொல்லி அதனை உறுதிபடுத்தி பாஸ்டர் அருமைநாயகமும்..பாஸ்டர் .மனாசே யும் சேர்ந்து என் தலையில் கைகளை வைத்தார்கள்…..

மூன்றாவது  என் திருமணத்தில் கிருபாசன சபையின்  மூத்த போதகர் (1)பாஸ்டர் மோட்சக்கண்….(2) அந்த ஸ்தல சபையின் போதகர் பாஸ்டர் செல்லையா…இவர்களைவிட வயதில் மூத்தவர் (3) பாஸ்டர் SP டேனியேல்..இந்த மூவரும் என் தலையில் கைவைத்து ஜெபித்தார்கள்……அதன் பின் இதுவரை எவரும் என் தலையில் கைவைக்க வில்லை……அதற்கு அனுமதியும் இல்லை……தேவையும் இல்லை…..
ஒருவர் நகை கடை வைத்துக்கொண்டு சபை நடத்துவதும்..
இன்னும் அரசாங்க உத்யோகத்தில் இருந்து கொண்டே சபை நடத்துவதும்.
இன்னும் சுய தெழில் செய்து கொண்டு சபை நடத்துவது வேதம் எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை……
.உடனே பவுலை உதாரணம் காட்டக்கூடாது….. அவரின் சூழ்நிலை எப்படியோ..? பவுல் கமாலியேல் என்ற ஆசிரியரிடம் கல்வி கற்றவர் ..அவருக்கு தேவை என்றால்  அன்று அரசு பதவியில் அழகாக அமர்ந்திருக்கலாம்……கூடை பின்னுவது என்பது மிக்சாதராண தொழில்…மற்ற அப்போஸ்தலர்கள் வேலை செய்ததாக தெியவில்லை……
அடுத்து இன்னும் எனக்கு புரியாத புதிர்..ஒரு வாரத்தில்
ஒரு போதகனின் வேலையை பாருங்கள்
(1)
ஞாயிற்று கிழமை சபை ஆராதனை..(இதற்கு வாரம் தோறும் புதிய செய்தி ஆயத்தம் செய்யவேண்டும்.)
(2)
திங்கட்கிழமை வீடு சந்திப்பு..
(3)
செவ்வாய் கிழமை புதிய இடத்தில் வீட்டுக் கூட்டம் நடத்துதல்…….(இப்படி ஆரம்பித்தால்தான் பின் நாட்களில் கிளை சபையை ஆரம்பிக்க முடியும்)
(3)
புதன் கிழமை வேதபாடம்.(இதற்கு செய்தி ஆயத்தம் பண்ண வேண்டும்)
(4)
வியாழக்கிழமை மீண்டும் வீடு சந்திக்க வேண்டும்அல்லது வாலிபர் கூட்டம்..அதிலும் செய்தி கொடுக்க வேண்டும்
(5)
வெள்ளிக்கிழமை உபவாசக் கூட்டம்.அதிலும் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்சின்னதாய் செய்தி கொடுக்கவேண்டும்……
(6)
சனிக்கிழமை ஞாயிற்று கிழமைக்கான ஆயத்தக் கூட்டம்..அல்லது காத்திருப்பு கூட்டம்..அல்லது திருவிருந்துக்கான ஆயத்தக் கூட்டம்.(அனேக சபைகளில் திருவிருந்து மாதம் ஒருதடவை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் நடைபெறும்…….,,.
இவையெல்லாம் இருக்க சுய வேலையை பார்த்துக் கொண்டு இதையும் எப்படி செய்ய முடியும்..எனக்கு புரியவில்லை…..
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.2 தீமொத்தேயு..2:4..
அப்படி வேலை பார்த்துக்கொண்டே சபை நடத்துவதை இன்நாளில் பாஸ்டர் ஜக்கியமே அங்கரித்திருக்கிறது என்பதும் உண்மை……
என்னை பொறுத்த வரையில் முன் மாதிரியான பல ஊழியர்களை பார்த்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறவன்..அவர்கள் வல்லமையாக ஊழியத்தில் நிற்கிறார்கள்……அவர்களை பார்த்து அந்த காலடியில் நானும் என்னைப் போன்றவர்களும் நடக்கிறோம்…..
அந்த காலடித் தடங்கள் அழகானவைகள்……அதையு பின்பற்ற வேண்டும் என்பதே என் ஆசையும் நோக்கமுமாய் இருக்கிறது……..
ஒரு ஊழியன் பல ஆத்துமாக்களை கர்த்தரின் வருகைக்கு ஆயத்தபடுதும் வேலையில் இருப்பதால் இது மேன்மையான ஒன்றாகும் ..
இதை புரிந்து கொள்ளும் நல்ல மனதை கர்த்தர் தருவாராக……





Top of Form

Like
Love
Hah
Wow
Sad
Angry

Bottom of Form