மரணவாசல்..(2ம்பாகம்.)
(41)
ஆனால்
புயலில் அடிபட்டவர்கள் போல கிழிந்த உடையுடன் கலைந்த தலையுடன் பையித்தியகாரர்கள் போல
இருக்கிறார்கள்..
யார்
இவர்கள் ..?என்று கேட்டேன்..
இவர்கள்
பூமியில் தற்கொலை செய்து உயிரை விட்டவர்கள்.
தங்கள்
நேரம் வரும் வரை இப்படித்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்…
இவர்களுக்கு
எந்த பாதுகாப்பும் கிடைக்காது..
நான்
கேட்டேன்..
இருளின்
மைந்தர்கள் இவர்களை துன்ப படுத்துவார்களா..?
நிச்சயமாக..அவர்கள்
கையில் இவர்கள் சிக்கி கொண்டால் இவர்களை பயங்கரமாக தாக்குவார்கள்.
அந்த
வேதனையில் அவர்கள் சொல்வதையெல்லாம் இவர்கள் செய்வார்கள்…..
நான்
கேட்டேன்……..என்ன செய்ய சொல்வார்கள்?
பூமியில்
இவர்களை பேயாய் மாறச்சொல்வார்கள்…
ஆம்…..இவர்கள்
எந்த மனிதருக்குள்ளாவது புகுந்து இவர்கள் தாகத்தை தனித்து கொள்வார்கள்..
இருளின்
மைந்தர்களிடம் இருந்து இவர்கள் தப்பிக்கவே
முடியாதா..?
முடியாது ..இவர்களைத்தேடி நாங்கள்
வருவோம்..அதுவும் இவர்கள் வாழ்நாட்கள் காலம்
எப்போது முடியுமோ அப்போது வரை
இங்கும்
தாகம் பசி உண்டா..?
(42)
உண்டு…ஆனால்
பூமியை போல் அல்ல …
எங்கள்
உணவை பற்றி உங்கள் வேதத்தில் குறிப்பிடபட்டுள்ளது
…தெரியுமா உனக்கு..?
நான்
யோசித்தேன்…..தெரியவில்லை என்றேன்..ஆனால் எனக்கு பசிக்கவில்லையே என்றேன்….
தூதன்
சொன்னான்…நீ பாதுகாப்பாய் இருக்கிறாய் ஆகவே நாங்கள் உன்னைக்கொண்டு சேர்க்கும் வரை உனக்கு
பசி இருக்காது…..அதற்கான ஏற்பாடு உனக்கு செய்யபட்டிருக்கிறது..என்றான்.
வெளியே
இருக்கும் மனிதர்கள் தட்டுவதை நிறுத்தவே இல்லை….
எங்கள்
வாகனம் திடீரென்று சிலிர்த்தது போலிருந்தது.
.
அந்த
மனிதர்கள் அனைவரும் தூரமாய் போய் விழுந்தார்கள்..அதன் பின் கதறிக்கொண்டே இருட்டில்
ஓடி மறைந்து விட்டார்கள்…
நான்
இரக்கமாய் அவர்களைப் பார்த்தேன்…பூமியில். எனக்கு அந்த உடன்படிக்கையின் அடையாளம் தரப்படவில்லையென்றால் எனக்கும் இதே கதிதான்…
நான்
ஞானஸ்நானம் பெற்றதே ஒரு தனிக்கதை.
.அதற்கு
காரணம் ஒரு பெண்….
.அவள்
பெயர் பூர்ணிமா சௌத்திரி…உத்திர பிரதேசக்காரி…..
பூர்ணிமா
என் வாழ்கையில் நான் சந்தித்த அழகிய பெண்…
.வாலிபத்தில்
காதலில் அவள் வீழ்த்தினாளா..?
நான் விழுந்தேனா ,,?என்று தெரியவில்லை…
. (43)
முழுவதையும்
கூறுகிறேன் அதன் பின் முடிவு செய்யலாம்..(
ஒரு மனிதனுக்கு பல உணர்வுகள் உள்ள
காலங்கள் பூமியில் கிடைக்கின்றன்.
குழந்தையாய் இருக்கிறான்..
வாலிபனாக ஆகிறான்.முதிர் வயதில்
சாகிறான்…
……மாறுபட்ட காலச் சூழ்நிலைகள்….எல்லாமே
உடல் சம்பத்தபட்டது.
.ஒரு பருவத்தில் விரும்பி செய்த
ஒரு காரியம் அடுத்த பருவத்தில் வெறுக்கபடுகிறது….
.எதுவுமே பூமியில் நிரந்தரம் கிடையாது.
ஆண் பெண் இருவருக்கும் வேறு வேறு
உடலமைப்பு..
வேறு வேறு பார்வைகள்…இதனால் எடுக்கும்
முடிவுகள் வேறுபட்டே இருக்கிறது..
ஒரு அழகிய பெண்ணுக்கு முன் எந்த
ஒரு வீரமான ஆணும் கொஞ்சம் கோழையாகி விடுகிறான்.
பாலுணர்வு என்ற ஒன்றுதான் மனிதனையும்
மனுஷியையும் இணைக்கிறது….அது இல்லையெனின் இருவரும் வேறு வேறு உருவங்கள்….
.அல்லது வேறு வேறு மனித உருவங்கள்...
நான் சென்னையில் பொறியியற் கல்லூரியில்
முதல் ஆண்டு படிக்கும் போது பூர்ணிமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..
இரண்டாம் ஆண்டு பயிலும் போது அவளை
சந்தித்தேன்…
ஒரு ப்ராஜக்ட் காரியமாக நாங்கள்
ஒரு குழுவாய் ஆக்கப்பட்டோம்.
எங்கள் குழுவில் இரண்டு பெண்கள்….
(44)
ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திக்
கொண்டோம்.
அவள் தன்னை பூர்ணிமா சௌத்திரி
என்று அறிமுகப் படுத்தினாள்…
அடுத்தவள் தன்னை சுவாதிகா ரெட்டி
என்றாள்…..(ஆந்திராக்காரி..)
எனக்கு கோபம் வந்து விட்டது..
இது என்ன உங்கள் ஜாதிப்பெயரையும்
சேர்த்து சொல்கிறீர்கள்…?.
தமிழ் நாட்டில் இப்படி பழக்கம்
இல்லையென்றேன்..
குழு அமைதியானது…
பூர்ணிமாவுக்கு நான் இப்படி சொன்னது
கொஞ்சம் அவமானமாகிவிட்டது……முகம் சிவந்து விட்டது….
அதன் பின் நானும் உணர்ந்தேன் கொஞ்சம்
அவசரபட்டுவிட்டேன் என்று.
ஆனாலும் எப்படி இதை சமாளிப்பது.
ஏதோ ஒன்று அவளிடம் என்னை ஈர்த்தது.
இரண்டாம் ஆணடு கல்லூரி ஆண்டு விழாவில் நாங்கள் ஒன்று சேர ஒரு வாய்ப்பு
வந்தது.
.பூர்ணிமா அழகாக பாடுவாள்..நானும்
நன்றாக பாடுவேன்…ஆகவே நாங்கள் இருவரும் சேர்ந்து பாடவேண்டும் என்று முடிவானது.
அது ஒரு ஹிந்தி சினிமாப்பாடல்.பாடவேண்டும்
என்று தேர்வானது
.அந்த பாடல் திரையில் ஓடும் அதற்கு
ஏற்றவாறு நாங்கள் பாடவேண்டும்..
ஆர்கெஸ்ட்ராவில் கல்லூரி மாணவர்களுடன்
இரண்டு ஆர்டிஸ்ட்டை வெளியில் இருந்து கொண்டு
வந்து எங்களோடு சேர்த்து கொண்டேன்
(45)
அந்த காலத்தில் வீடியோ டெக் வரவில்லை.ஆகவே
புரஜெக்டர் வாடகைக்கு எடுத்தேன்.
எனக்கு பணத்தை பற்றி எந்த கவலையும்
இல்லை.
தண்ணீராய் செலவழித்தேன்.
அது ஹிந்தி பாடலாய் இருந்ததால்
பாட மிகுந்த சிரமபட்டேன்…
அதன் அர்த்தத்தை அவளிடமே கேட்டேன்.அவள்
சொன்னாள்.
அது ஒரு காதல் பாட்டு..
முன் ஜென்மத்தில் இருந்து நமது
சொந்தம் தொடர்கிறது என்ற பொருள் கொண்டது…
.எனக்கு என்னவோ ஆனது..
அடிக்கடி அவளைப் பார்த்தேன்…
.எப்படியாவது என் காதலை அவளிடம்
சொல்லிவிடவேண்டும் என்று துடித்தேன்.
.எப்படியோ நான்காம் ஆண்டும் வந்தது.
நான்காம் ஆண்டு மிகப்பெரிய சோதனை வந்தது…
எங்கள் கல்லூரியில் விரிவுரையாளராக
அவள் ஊர்க்காரன் (உத்திரபிரதேசத்துக்காரன்.) ஒருவன் வந்தான்….
.ஆறு மாதத்திற்குள்.அவளிடம் அவன்
நெருக்கமாக பழகினான்…
(46)
.அவன் இவளை பற்றி அவன் பெற்றோரிடம்
சொல்லி… இரு வீட்டாரும் பேசி…அவள் கல்லூரி படிப்பை முடித்த உடன் திருமணம் என்று நிச்சயயிக்கபட்டது…
இதை கேள்விபட்ட உடனே எனக்கு பூமி பிளந்து என்னை விழுங்கவது
போல் பிரமை.
அவ்வளவுதான்.
என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை..
இறுதி வருடம் பாதியிலே என் படிப்பு
நின்றது..
என் தகப்பனார் என்னிடம் எதுவுமே
கேட்கவில்லை.
ஆனால் அவர் ஒரு காரியம் செய்தார்
.எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஊழியர் ஒருவர் இருந்தார்.அவரிடம் என் தகப்பனார்
என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது….
அந்த ஊழியக்காரர் அடிக்கடி என்னை
வந்து சந்தித்தார்……
என் நிலையை பற்றி அவர் எதுவும்
கேட்தில்லை.
மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம்.
அவரிடம் நான் மிகுந்த மரியாதை
வைத்திருந்தேன்..
ஒரு நாள் அவர் என்னிடம்.தம்பி
இன்று ஒரு ஸ்பெஷல் மீட்டிங் ஒன்று இருக்கிறது.
அது கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்காக நடத்தபடுகிறது…..என்
மனைவி அதில் கடைசியாக பாடுவாள்.
நீ கிட்டார் வாசிக்க முடீயுமா.?
என்றார்…
(47)
.நான் யோசித்தேன் .வீட்டிலேயே இருப்பதை விட இவருடன் போகலாம் மனதுக்கு
கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாமே என்று யோசித்தேன்..
அவருடன் சென்றேன்…
…காலை பத்து மணிக்கு மீட்டிங்
துவங்கியது..
நிறைய சொன்னார்கள்.
.எனக்கு பாதி புரிந்தது.பாதி புரியவில்லை..
ஒன்று மட்டும் சரியாக புரிந்து
கொண்டேன். இப்போது எனக்கு என்னைவிட ஒரு பெரிய சக்தி உதவிக்கு தேவைபடுகிறது….ஆனால் அதை
எப்படி கேட்பது அதுதான் தெரியிவில்லை.
இது வரையில் நான் கடவுளிடம் ஜெபித்தது
இல்லை.
என் தேவைகள் எல்லாமே எனக்கு என்
வீட்டில் கிடைத்தது….ஆக கடவுளிடம் கேட்பதற்கு ஒன்றும் இருந்ததில்லை…
ஒரு போராட்டமான நிலைதான்.
மாலை வந்தது….
அதற்குள் என் மனதுக்குள் ஒரு முடிவுக்கு
வந்து விட்டேன்…..கடவுளிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்…
கூட்டத்தின் முடிவுக்கு முன் அந்த
தேவ ஊழியர் மனைவி பாட ஆரம்பித்தார்கள்.நான் கிட்டார் வாசிக்க ஆரம்பத்தேன்…
அந்தப் பாடல்………….
(48)
என்னைப் படைத்தவரே
நான் பயனற்று போனேனே
இதய
வீட்டை இருளாய் மாற்றி மூடி வைத்தேனே
உணர்வு என்ற பாதையில் மாறினேன்
காற்றில் ஆடும் தீபமாயினேன்…………………………….
…
பாடலை முடிக்கு முன் என் மனதில் தேவ சமாதானம் நிறைந்தது.
அதுவரையிலும் போட்டோவிலும்.. எங்கள் வீட்டுச் சுவரிலும் இருந்த
ஆண்டவர் இயேசுகிறிஸ்து என் பக்கத்தில் நிற்பது போனற உணர்வு…
நான் இயேசுவை சினேகமுடன் பார்த்தேன்.
அவர் என் கைகளை பற்றியது போல இருந்தது……
கூட்டம் முடிந்து வரும்போது நான் அந்த ஊழியரிடம் நான் இன்று இயேசுவை பார்த்தேன் என்று கூறினேன்.அவர் சிரித்தார்…
தெரியும் என்றார்…
…எப்படி என்றேன்…
….அவர்தான் உன்னை இங்கு அழைத்து வரச்சொன்னார். என்றார்….
.எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது..
நான் அந்த ஊழியரை ஆச்சரியமுடன் பார்த்தேன்…….இவர் வேறு உலகத்தை சேர்ந்தவரா..?
ஆண்டவர் சொன்னதால் அழைத்தேன் என்கிறார்…….நான் கேட்டேன்
வேறு அவர் என்ன சொன்னார்..?
(49)
உங்கள் நட்பை உறுதிபடுத்த சொன்னார்..?
நட்பா..நானா…?அதுவும் கடவுளிடமா..?எப்படி என்றேன்…….
ஞானஸ்நானம்..என்றார்….
நான் வீட்டிற்கு தெரியாமலயே ஞானஸ்நானம் எடுத்தேன்.
அடுத்த இரண்டு நாளில் கல்லூரிக்கு சென்றுவிட்டேன்….
அப்போதும் என் தகப்பனார் ஒன்றும் தெரியாதவர் போலவே நடந்து கொண்டார்..
ஆகவே இதற்கு எல்லாம் காரணம் பூர்ணிமாதான்..
பூமியல் எனக்கு நடந்த உருப்படியான காரியம் ஒன்று உண்டென்றால் அது உடன்படிக்கை என்ற ஞானஸ்நானமே..
இவைகளை நான் நினைத்து கொணடிருக்கும் போது எங்கள வாகனத்தின் அருகில் கூக்குரல் சத்தம் கேட்டது……
என்னவென்று திரும்பி பார்த்தேன்.
இருளின் மைந்தர்கள் மிகப் பெரிய கருப்பு தேர் போன்ற ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அதிலிருந்துதான் கூக்குரல் வந்து கொண்டிருந்தது..
நான் கொஞ்சம் கவனித்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த விஷயம் அது முழுவதும் மனித உடல்களால் செய்யபட்டது.மனித உடல்கள் துடித்து கொண்டு இருந்தது…
(50)
இருளின் மைந்தர்கள் அந்த மனித உடல்களை துடிக்க துடிக்க சவுக்கு போன்ற ஒன்றால் சுற்றி நின்று கொண்டு அடித்து துவைத்து கொண்டிருந்தார்கள்…
.
இவர்கள் அடி தாங்க முடியாமல் அந்த மனித உடல்கள் அலறுவது மிக கடுமையாக இருந்தது….
.எங்கள் வாகனம் மெதுவாக நின்றது..
ஏன்
நிறுத்தப்பட்டோம் ..? தெரியவில்லை…என்றான்
நான் இப்போது இருளின் மைந்தர்களை மிக நெருக்கத்தில் பார்த்தேன்.
மிக
அசிங்கமாக இருந்தார்கள்..
வறண்ட தோல்களும் கரடு முரடான உடல் அமைப்பும் கொண்டவர்கள்.
அவர்கள் கையிலுள்ள ஆயுதம் விதவிதமாக தானாகவே மாறிக்கொண்டே இருந்தது….
..
அடிவாங்கும் அந்த மனிதர்களை நெருக்கத்தில் பார்த்ததும் திடுக்கிட்டேன் ..
காரணம் அவர்கள் உடலில் எந்த ஆடையையும் அணிந்திருக்கவில்லை
.
நான் ..அவர்கள் ஏன் நிர்வாணமாக இருக்கிறார்கள் …?..என்றேன்.
.
என்
பக்கத்திலிருந்த தூதன் ……..ஆமாம் ……அவர்கள் நிர்வாணமாக ஆக்கபட்டிருக்கிறார்கள்…என்றான்……
(51)
ஆக்கபட்டிருக்கிறார்களா…?...யாரால்…?
அந்த இருளின் மைந்தர்களால்…..
இவர்கள் பூமியில் என்னவாயிருந்தார்கள்…..?
பொறு …பார்த்து சொல்கிறேன்…என்றான்….
என்
அருகில் இருந்த தூதன் …எங்கள் முன் பக்கமிருந்த தூதனிடம் ஏதோ கூறினான்..
அந்த தூதன்…டார்ச் லைட்
போன்ற ஒன்றை எடுத்து ..அடுத்த டிராக்கில் இருக்கும் அந்த மனித உடல்கள் மேல் ஒளியை பாய்ச்சினான்..
அந்த ஒளி அவர்கள் மீது பட்டதும்….. ஒவ்வொரு
உடல்கள் மீதும் ஒரு இலக்கம் தெரிந்தது….
நான் அதை பாத்தேன்
..ஆனால் அனைவர் மீதும் ஒரே இலக்கம் தான் தெரிந்தது..
இப்போது தூதன் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடி போன்ற திரையில்
ஏதோ எழுதினான்…..
அதில் என்னால்
படிக்க முடியாத ஏதோ
ஒரு மொழி தெரிந்தது…
.தூதன் அதனை கவனமாக படித்தான்.
(52)
பின்பு என் அருகில் இருந்த தூதனிடம் ஏதோ கூறினான்.
அதை
கேட்டு கொண்ட தூதன் என்னிடமாக …..அவர்கள் பூமியில் போதை மருந்து விற்றவர்கள்….இதனால்
பூமியின் காவலர்களால் கொல்லபட்டார்கள்..
நான் கேட்டேன் பூமியின் காவலர்களா..?...அது யார்…..?
தூதன் கூறினான்.
உங்கள் மொழியில் சொன்னால் …..அவர்கள் போலிஸாரால் கொல்லப் பட்டவர்கள்.
சரி…..அவர்கள் உடைகளை
யார் பிடுங்கியது..?
இருளின் மைந்தர்கள்தான் …என்றான்
அப்போது மிகவும் பிரகாசமான ஒரு வாகனம் எங்களுக்கு எதிராக வந்து நின்றது …
அதிலிருந்து படை வீரர்கள் போல் பல தூதர்கள் இறங்கினார்கள்….அவர்கள் .இருளின் மைந்தர்களை பலமாக தாக்கினார்கள்.
இருளின் மைந்தர்கள் அலறினார்கள்….
இதுவரை நான் அப்படி பட்ட ஓலத்தை கேட்கவில்லை..
இருளின் மைந்தர்கள் அந்த மனித உடல்களை விட்டுவிட்டு ஒடி மறைந்தனர்…
(53)
மனித உடல்களின் கட்டுகளை ஒரு தூதன் தன்கையிலிருந்த கத்தி போன்ற ஒன்றால்
வேகமாக வெட்டினான்.
மொத்தமாக ஒரு குவியல்போல் கிடந்தார்கள்…
திடீரென்று .அவர்கள் மேல் பெரிய காற்றாடி போல் ஒன்று சுழன்று வீசியது….
அதன் பின் நான் கவனித்தேன் .அவர்கள் இப்போது நிர்வாணமாக இல்லை.
உடை
அணிந்திருந்தார்கள்.ஆனால் அந்த உடை கருப்பாக இருந்தது…..
மேலிருந்து மிகப்பெரிய மூங்கில் தொட்டிபோல ஒரு அமைப்பு இறங்கியது…
ஒரு
தூதன் அனைவரையும் அந்த தொட்டிக்கு உள்ளே போகுமாறு கட்டளயைிட்டான்.
பின்…அது தானாக முன்னோக்கி நகர ஆரம்பித்து.ஆனால்.
அந்த தொட்டியின் நான்கு பக்கத்திலும் பெரிய மின்விசிறி இறக்கைகள் போல
நான்கு விசிறிகள் சுழன்று கொண்டே இருந்தது.
அதில் இருந்து தீப்பொறிகள் பறந்த வண்ணம் இருந்தது..
நான் இது என்னது ..?என்றேன்.
அது
சுடரொளி பட்டையம்
என்றான்…
அந்த தொட்டி வேகமாக எங்கள் முன்னே சென்று இருளில் மறைந்தது..
(54)
எனக்கு தலை சுற்றியது…
….ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது….
.அவர்களுக்கு கொடுக்கபட்ட உடை கருப்பாக இருந்தது ஏன்..?
இதை
என் அருகில் இருந்த தூதனிடம் கேட்டேன்..
.அவன் சொன்னான்..உனது உடை எந்த நிறத்தில் இருக்கிறது என்றான்.
சுமார் வெள்ளையாக இருக்கிறது….என்றேன்…
எங்கள் உடை எப்படி இருக்கிறது என்றான்…….
அது…சிலநேரம் வெள்ளையாக ..சிலநேரம் இளம் மஞ்சள் நிறம்..சில நேரம் பல வண்ணங்கள்..இப்படி மாறி மாறி வருகிறது… என்றேன்.
அந்த தூதன் என்னைப் பார்த்து கொண்டே எழுந்தான்…
பின்பு முகம் குப்புற பணிந்தான்….
நான் புரிந்து கொண்டேன் இப்போது கடவுளை பற்றி ஏதோ கூறப்போகிறான் என்று…
சரி
காத்திருப்போம்..
அந்த தூதன் எழுந்து உட்கார்ந்தான்….
என்னை பார்த்து நிதானமாக கூறினான்….
(55)
பரிசுத்தர் யாரையும் நிர்வாணமாக ஆக்குகிறவர் அல்ல…
ஏதேன் தோட்டத்தில்
ஆதாம் ஏவாளுக்கு முதலில் மகிமையின் ஆடை கொடுக்கபட்டிருந்தது..
அவர்கள் பாவம் செய்ததாலே அது தானாய் அவர்கள் உடம்பிலிருந்து கழண்டு கொண்டது……
அப்போது அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று கண்டு கொண்டார்கள்…
ஆனாலும் பரிசுத்தர் அவர்களுக்கு ஒரு ஆடையை உடனே உண்டு பண்ணி கொடுத்தார்…
.
ஆடைய எப்படி உண்டாக்குவது என்று முதன் முதலில் ஆதாமுக்கு விளக்கபட்டது…..
அதன் பின் ஆதாம் ..தன் சந்ததிகளுக்கு
ஆடை செய்யவது எப்படி என்று
சொல்லி கொடுத்து அவர்கள் நிர்வாணத்தை மறைத்தான்….
.
இது
உங்களுக்கு ஒரு முன் மாதிரி..
.
ஆனால் ஒரு மனிதனின் உள்ளான மனிதன் ………. அதாவது இப்போது நீ இருக்கிறாயே இந்த உடலுக்கான ஆடை அப்போது கொடுக்கபடவில்லை…..நீ நிர்வாணமாகவே இருந்தாய்..
.
.
நான் இடைமறித்தேன்……..ஆனால் இப்போது நான் ஆடையுடன்தானே இருக்கிறேன்..
(56)
தூதன் தொடர்ந்தான்…இந்த ஆடை உனக்கு உன் வாழ்க்கையின் இடையில் கொடுக்கபட்டது….
எப்போது…?
நீ
காப்பாற்ற பட்டபோது.
காப்பாற்ற பட்டபோது………… விளங்க வில்லை…
விளங்கவில்லையா….?…..
நான்………. ஆம்…….எதிலிருந்து..?
ஆதாமின் சாபத்திலிருந்து…….
எனக்கு கொஞ்சம் புரிந்தது……..அதாவது இரட்சிப்பு………
ஆம்
…நீ ஞானஸ்நானம் எடுக்கும் போது….அதாவது தண்ணீரில் மூழ்கும் போது நீ சாகிறாய்…
…தண்ணீரை விட்டு வெளியே வரும் போது உயிர்த்தெழுந்த ஆவியுடன் புதிய உடை அணியபட்டவனாய் எழும்புகிறாய்……
நான் என் உடையை பார்த்தேன்……
தூதன் சொன்னான் ஆதாமுக்கு உடையை உண்டாக்கி கொடுத்த பரிசுத்தர் உனக்கும் கொடுத்திருக்கிறார் என்று கூறி முடித்தான்……
நான் உடையை பார்த்தேன் அது நிறம் மங்கி அழுக்காய் இருந்தது..
(57)
நான் கேட்டேன்….ஆனால் என் உடை நிறம் மங்கி அழுக்காய் இருக்கிறதே என்றேன்..
தூதன் அமைதியாக கொஞ்சம் நேரம் இருந்தான்..பிறகு சொன்னான்..
குற்றப்படுத்துவது எங்கள் வேலை அல்ல..ஆனால் இதை நீ ஒரு குற்றம் போல் சொல்லியதாலே மீண்டும் சொல்கிறேன்….
உனக்கு கிடைத்த இந்த ஆடையை பற்றி என்றாவது நீ எண்ணிப்பார்த்தது உண்டா என்றான்…?
இல்லை என்றேன்….
.
உன்
செய்கைகளால் அது நிறம் மங்கிவிட்டது…..என்றான்….
.
எனக்கு மிகுந்த கவலை வந்து விட்டது… பூமியில் வாழும் போது இது இவ்வளவு முக்கியமான ஒரு காரியம் என்று யாரும் சொல்லவில்லையே…….
.
அப்படி பதற்றத்தோடு வாழ்ந்த ஒரு நபரையும் நான் காணவில்லையே என்று என் மனதிற்குள் நினைத்தேன்……..
இதை
நான் நினைத்த உடனே என் எதிரே இருந்த விளக்குள் பிரகாசமாயின…
…எங்கள் வாகனத்திற்குள் ஒரு அறிவிப்பு
கேட்டது.