மரண வாசல்—நெடுங்கதை…..
பெயர் …………………...சர்தார் மான்சிங்
தொழில்…………………பல நிறுவனங்களின் தலைவர்..
பிறந்த வருடம்……………1948…..ஜனவரி 3ம் தேதி
இறக்க போவது ………2015….ஜனவரி…….8ம்தேதி இரவு 1மணி..30 வினாடி..
இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு.
ஐந்து நிமிடம் 10 வினாடி….
முடிச்சிரவா.
முடிச்சிரு….
பச்சை விளக்கு அணைந்தது.
என் இதயத்தை பிளந்து ஈரக்குலையை பிடித்து வெளியே இழுப்பது போன்ற
வலி.
ஐய்யோ..அலறினேன்…சத்தம் வெளியே வரவில்லை..
துடித்து அப்படியே எழுந்து என் படுக்கையில் உட்கார்ந்தேன்….
சே……இது என்ன கனவா….?.கண்களை திற்ந்து பார்த்தேன்.
எதிரே நான்கு பேர் நின்று கொண்டு .. என்னையே
(2)
…..எங்களையே…….(நானும் என் மனைவியையும்..) உற்றுப்பார்த்து கொண்டிருந்ததார்கள்.
எனக்கு பகீர் என்றது…
யார் இவர்கள்..?
அதுவும் என் படுக்கை அறைக்குள்….
என் வீடு மிகப்பெரியது.
.அது மாளிகை..
இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்…?
ஏய் யாரடா நீங்கள்…..?.அவர்கள் பதிலே பேசவில்லை
என்னை உற்று பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.
திருடர்களாய் இருப்பார்களோ…?1
நான் தலையணைக்கு கீழே இருக்கும் என் கைத்துப்பாக்கியை எடுக்க
நினைத்தேன்.
அதற்கு முயற்சியும் பண்ணினேன்.
கை துப்பாக்கி கைகளில் அகப்படவே இல்லை.
என் கைகள் தண்ணீருக்குள் மூழ்கி அசைவது போல் சும்மா ஆடுகிறது… எதையும் பிடிக்க முடியவில்லை
…என்ன ஆயிற்று..?
எழுந்து நின்றேன்.
(3)
அவர்களுக்கு முன் நான் குள்ளமானவனாக தெரிந்தேன்.
அவர்கள் ஏழு அடி உயரம் இருப்பார்கள்….
சுத்தமான வெள்ள நிற ஆடை…..அல்லது அங்கி….அல்லது ஏதோ ஒன்று சரியாக
சொல்ல முடியவில்லை..
யாரு நீங்க..?
சரி முடிந்தது..எங்களோடு
வா…
என்னடா சொல்றீங்க..என்னய கடத்துறீங்களா..?
அப்படீன்ன……?
இதுக்கு எப்படி பதில் சொல்ல…
.
அதற்குள் ஒருவன் அவன் கையில் உள்ள தகடுபோல் உள்ள ஒன்றில் ஏதோ
டைப் செய்து தன் பக்கத்தில் நின்றவனிடம் காட்டினான்.
அவன் என்னைப் பார்த்தான்…..
கடத்தல் என்றால் திருடுவது போன்றதா…?
ஆம்…
…இவர்கள் மனிதர்களா…இல்லை வேற்று கிரக வாசிகளா..?கடத்தலுக்கு
அர்த்தம் கேட்கிறார்கள்…
உன்னை அழைத்து செல்லப் போகிறோம்….
ம்………எனக்கு பயங்கர கோபம் வந்தது…
(4)
திருட்டு பசங்களா….ஒருவனை அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினேன்.
.அவன் பாறை போல நின்று கொண்டிருந்தான்…..
நான் பின் வாங்கினேன்..
என் மனைவியை இவர்கள் எதுவும் செய்து விடக்கூடாதே..
வாட்ச்மேன்…….கத்தினேன்..
பூட்டிய கதவுக்குள்
என் சத்தம் எங்கே வெளியே கேட்க போகிறது.
அது சரி…….. பூட்டிய வீட்டுக்குள் இவர்கள் எப்படி வந்தார்கள்…
.
அவர்களில் ஒருவன் ஒரு சதுரமான கண்ணாடி பெட்டி போன்ற ஒன்றை அவன்
இடுப்பளவு உயரத்தில் வைத்தான்.
அது அந்தரத்தில் நின்றது…
அந்த பெட்டியை திறந்து…அதற்கு உள்ளே இருக்கும் டார்ச்போன்ற ஒரு லைட்டை அறையில் எல்லா பக்கத்திலும் ஒளிர விட்டான்…
.என் அறைக்குள் எல்லா பக்கத்திலும் இருந்து ஒலி அலைகள் போன்று
அந்த பெட்டிக்குள் பாய்ந்து வந்தது.
நான் பெட்டியை உற்றுப் பார்த்தேன்.அந்த பெட்டியின் உள்ளே வட்டவடிவில்
தட்டு போன்ற ஒன்று சுழன்று கொண்டிருந்தது…
என் பக்கத்திலிருந்தவன் அந்த பெட்டிக்காரனை பார்த்து முடிந்ததா
.?என்றான்….
(5)
பெட்டிக்காரான் ஆம் என்றான்..
சரி புறப்படலாம்..
எனக்கு ஆத்திரமாக வந்தது….ஏய் என்ன நடக்குது இங்கே.கத்தினேன்
அவன் என்னை பார்த்து சொன்னான்……………..நீ இறந்து விட்டாய்….
நான்……….. என்ன இறந்து விட்டேனா..?.
என் படுக்கையை பார்த்தேன்…
…அங்கே என்னைப்போல ஒருவன் படுத்து இருந்தான்..
அவன் அருகே என் மனைவி அமைதியாக தூங்கி கொண்டிருந்தாள்…
படுத்திருந்த அந்த மனிதனை நான் கவனமாக பார்த்தேன்.
அந்த முகம் எனக்கு பரிச்சியமானதுதான்…..அது நான்தான்
அப்போ நான் இறந்து விட்டேனா..?
இவர்கள் சொல்வது உண்மைதானா..?
அப்படியெனின் நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்….அது எப்படி….?
எனக்கு இந்த விஷயம்
உடனே தெரிந்தாக வேண்டும்…
என் மனைவியின் காலை தட்டி அவளை பெயர் சொல்லி கூப்பிட்டேன்.
அவள் கால்கள் என் கைக்கு தட்டுப்படவே இல்லை..
தோல்வியுடன் நிமிர்ந்தேன்.
என் தோள்களின் மேல் அவன் கையை வைத்தான்..
(6)
சரி வா போகலாம்….
எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது….
இருய்யா…
.அவன் கையை எடுத்து கொண்டான்….
.நான் அவனை பார்த்து கேட்டேன் .
நீங்கள் யார்……..தேவ தூதர்களா..?
அப்படியும் வைத்து கொள்ளலாம்…
நீங்கள்……………தூதர்கள் இல்லையா..?
எங்களில் பலர் பல வேலைகளை செய்வது உண்டு.அதில் எங்களின் வேலை
இது..
ம்……
….அவர்கள் தயார் ஆனார்கள்.
நான் என் பிள்ளைகளை நினைத்து கொண்டேன்…
..வெளிநாட்டில் இருக்கிறார்கள்…..வியாபார மும்முரத்தில் அவர்களிடம்
போசவே இல்லை…..
நடந்த எந்த காரியமும் தெரியாமல் நிம்மதியாக தூங்குகிறாள் என்
மனைவி….
கடைசியாக என்ன பேசினேன்…..
இனி நான் இவர்களை பார்க்கவே முடியாதா..?
(7)
இதை என் அருகில் இருந்தவனிடமே கேட்டேன்….
இப்போது யாரை பார்க்க வேண்டும்…?
என் பிள்ளைகளை…..
அவன் கையில் உள்ள சதுரமான தட்டில் கை வைத்து அழுத்தினான்.
அதில் என் மகன் படம் தெரிந்தது..
என் மகன்..யாருடனோ சிரித்து
பேசிக்கொண்டிருக்கிறான்…
இரண்டாவது அழுத்தினான் …
என் மகள் அவள் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..
நான் இறந்து விட்டேன் என்று தெரிந்தால்
இவர்கள் எவ்வளவு துக்கபடுவார்கள்……?
நான் அவனிடம் கேட்டேன்… என் மனைவியிடம்
பேச முடியுமா,?,ஃ
முடியாது..உனக்கும் இவர்களுக்கும்
உள்ள தொடர்பு துண்டிக்கபட்டு விட்டது…
ஒ……..அது தான் சாவா..?
எனக்கு தாகம் எடுப்பது போல் இருந்தது….பக்கத்தில்
இருந்த தண்ணீர் குவளையை எடுத்தேன்.அது கைகளுக்கு வரவில்லை…..
பயங்கர தாகம் எடுப்பது போல் தோன்றியது..
எனக்கு தாகம் எடுக்கிறது என்றேன்…..
சரி குடி என்று அவனே அந்த குவளையை
எடுத்து தந்தான்..
(8)
நான் குடித்தேன்…..
இப்போது புரிகிறது.
தண்ணர் குடிப்பது போலிருந்தது…ஆனால்
எந்த உணர்வும் இல்லை……எல்லாம் முடிந்து விட்டது. அடுத்த வாழ்கைக்கு தயார் ஆக வேண்டியது
தான்.
சரி போகலாம் என்றேன்..
அவன் கேட்டான் .எதாவது இங்கிருந்து
கொண்டு செல்ல விரும்புகிறாயா…?
என்ன சொன்னாய்…?
இங்கிருந்து எதாவது கொண்டு வர
விரும்புகிறாயா..?மனிதர்களை தவிர
நான் நிமிர்ந்தேன்..இது சாத்தியமா
என்றேன்…?
ஆம்..ஆனால் ஒரு நிபந்தனை.
அவைகளை உன்னுடனே வைத்திருக்க வேண்டும்..அல்லது
அவைகள் இருக்கும் இடத்தில் நீயும் இருக்கவேண்டும்….சம்மதித்தால் எடுத்து வரலாம்…..
நான் எதை எடுத்துப் போவது…இது எப்படி சாத்தியம்……சரி
முயற்சித்து பார்ப்போம்.
குற்றாலம் அருகே நான் இப்போது
கட்டிய மாளிகையை நினைத்தேன்.
(9)
நான் நினைத்த உடன் அவர்கள் வைத்திருக்கும்
கண்ணாடி பெட்டிக்குள் அந்த மாளிகை 3டி வடிவத்தில் தெரிந்தது..
வந்து விட்டது …என்றான்…
வேறு என்ன வேண்டும்.?
நான் அந்த பேட்டிக்குள் இருக்கும்
என் மாளிகையை காட்டி….. இது என்ன பொம்மை போலிருக்கிறது…இப்படித்தான் கொண்டு வருவீர்களா
என்றேன்….
.இல்லை.. இது அங்கு சென்ற பின்
இதை பெரிதாக ஆக்கப்படும் என்றான்..
என் மனைவியை கடைசி முறையாக பார்த்தேன்.அவள்
பக்கத்தில் கிடக்கும் எனது உடலே எனக்கு அருவருப்பாய் தெரிந்தது..
அவர்கள் வேகமாக வெளியேறினார்கள்.
கதவு அவர்களை தடை செய்யவில்லை..ஊடுருவிச் சென்றார்கள்…
நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்…எல்லா
அறைகளையும் தாண்டி சென்றோம்
….பியானோ இருக்கும் அறையை கடக்கும்
போது நான் நின்றேன்…..
எனக்கு ஜெபம் பண்ண வேண்டும் போலிருந்தது..உள்ளே
சென்று முழங்காலிட்டேன்.
(10)
நான் முழங்காலில் நின்று ஜெபித்து
எத்தனையோ வருடங்கள் இருக்கும்..சொல்லப்போனால் ஜெபிப்பதே இல்லை…இப்போது ஆசையாய் இருக்கிறது..
ஜெபிக்க ஆரம்பித்தேன்….ஆனால் நான்
ஜெபத்தில் நினைப்பது எல்லாமே திரும்பி என் காதிலயே கேட்டது .என்னால் ஜெபம் பண்ண முடியவில்லை…எழுந்து
விட்டேன்..
அவர்கள் வாசலில் நின்று என்னை
பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்..
நான் திரும்பிச்சென்றேன்……
அவர்களில் ஒருவன் சொன்னான்…
….ஜெபம் என்பது மனிதர்களுக்கு
மட்டுமே….மனித உடலில் இருந்து ஜெபிக்கபடும் ஜெபம்தான் உடனடியாக கேட்கபடும்.
நீ இப்போது மனித உடலில் இல்லை.ஆகவே
இனி நீ ஜெபிக்க முடியாது.
நான் ஒரு காரியத்தை உணர்ந்தேன்…
நான் கடவுளிடமும் பேச முடியாது..மனிதர்களிடமும் பேச முடியாது..
ஆக எனக்கு கிருபையின் வாசல் அடைக்க
பட்டு விட்டது.
மனித உடலும் அதனோடு வாழ்ந்து இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு முக்கியமானது என்று உணர்ந்தேன். ..அழ நினைத்தேன்……கண்ணீர்
வரவில்லை
(11)
(11)
என்னுடைய பெலன் ஒடுங்கி போய்விட்டது.
அனாதையாகி போனேன்….
.இதோ பக்கத்தில் இருக்கும் இவர்களைத் தவிர வேறு யாருடனும் பேச
முடியாது…
இவர்கள் மனித உணர்வை புரியாதவர்கள்…
.பேசாமல் அவர்களோடு நடந்து முன் வாசலுக்கு வந்தேன்…
முகப்புக்கு வந்து விட்டேன்…
.
வாசலுக்கு அருகில் ரோட்டு ஒரத்தில் ஓரு பிச்சைக்காரன் இருப்பான்…
.அவன் எங்களை கண்டதும் எழுந்து நின்றான்…
….என்னைப் பார்த்து சிரித்தான் …
.இவன் எப்படி என்னை அடையாம் கண்டு கொண்டான்.
எனக்கு ஒன்று புரிந்தது.
இவன் மனிதன் அல்ல..பயத்துடனே அவனைப் பார்த்தேன்..
எங்கள் பக்கத்தில் வந்து நின்றான்….அவ்வளவுதான்…..
அவன் உடுத்தியிருந்த…அல்லது போர்த்தியிருந்த அந்த உடை..(மனிதனைப்
போன்ற உருவம்..) அவன் காலடியில் கழண்டு விழுந்தது..
நான் அதிர்ச்சியடைந்தேன்….
.அவனும் இவர்களைப் போலவே ஆகிவிட்டான்.
(12)
அவர்களுக்குள் ஏதோ பேசினார்கள்..(அது வேறு மொழியாய் இருந்தது….)
அவன் என் பக்கத்தில் வந்தான்…
.
என்கைகளை பிடித்து என் கைகளுக்குள் ஏதோ வைத்தான்..நான் திறந்து
பார்த்தேன்.ஒரு நூறு ரூபாய் நோட்டு.நிறைய சில்லரைகள்…..
வைத்துக்கொள் இது உனக்கு
உதவும்…
நான் வாயடைத்து நின்றேன்..
அவனே பேசினான்……என்ன பார்க்கிறாய்…எல்லாம் நீ எனக்கு அவ்வப்போது
கொடுத்ததுதான்..
நான் அவனை பிச்சைக்காரன் என்று நினைத்து பூமியில் வாழும்போது
அவனுக்கு கொடுத்தவைகள்…..
நான் பசியாய் இருந்தேன் எனக்கு ஆகாரம் கொடுத்தீர்கள்….(வேதவசனம்..)
இப்படி தெரிந்திருந்தால் நிறைய செய்திருக்கலாம்….
அவனும் எங்களோடு வர ஆயத்தமானான்..
அவர்கள் வரிசையாய் நின்றார்கள்
ஒருவன் கைகளை மேல்நோக்கி
அசைத்தான்.
நாங்கள் நின்ற இடத்தில் ஒரு பறக்கும் தட்டுபோல் ஒருவாகனம் வந்து
இறங்கியது.
(13)
அதன் அடிப்பாகம் கப்பல்போலவும் மேல்பாகம் பறக்கும் தட்டு போலவும்
இருந்தது…
.ஆனால் உள்ளே யாரும் இல்லை..
தானாகவே இயங்குகிறது.
என்னை ஒரு தனி இருக்கையில் அமர வைத்தார்கள்.எனக்கு முன்னே
ஒரு கண்ணாடி திரை இருந்தது.
அவர்கள் அனைவரும் எனக்கு முன்னும் பின்னும் அமர்ந்து கொண்டார்கள்….
அது முழுவதும் கண்ணாடியால் செய்யபட்டது போல இருந்தது..
உள்ளே அனைவரும் அமர்ந்தவுடன் அது மெல்ல அதிர்ந்தது.
.அந்த வாகனத்திற்கு எது முன்பாகம் எது பின்பாகம் என்று தெரியவில்லை.
மெதுவாக மேலே எழும்பியது.
இப்போது என்வீட்டின் மேல் பக்கத்தை முழுவதுமாக நெருக்கமாக பார்த்தேன்.
ஆசை ஆசையாய் கட்டிய வீடு…
..இன்னும் கொஞ்சம் மேலே
போனது அந்த வாகனம்…
….என் வீடும் அந்த தெருவும் தெரிந்தது..
(14)
இதோ நான் எங்கேயோ போகிறேன்…
…மெதுவாக ஒரு நீள் வட்டம் அடித்தது எங்கள் வாகனம்…..
இப்போது கொஞ்சம் உயரும் போது என் ஊர் தெரிந்தது.
இன்னும் உயரம்
ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் தெரியுமே அது போல்
பூமி தெரிந்தது……
ரோடுகள் நீள நீளமாக கோடுகளாய் கண்ணில் பட்டது
இது வரை கீழேயே பார்த்து கொண்டிருந்தேன்..
இப்போது நான் எங்கே போகவேண்டும்; என்று மேல் நோக்கி பார்த்தேன்.
.தலைக்கு மேல் நீளமாக வெண்மையான கலரில் ரோடு போன்று தெரிந்தது.
அது எங்கயோ நீளமாய் போய் கொண்டிருந்தது.
என்னை சுற்றிலும் கருப்பாக இருள்……
இதற்குள் எங்கள் வாகனம் மிக உயரத்தில் வந்து விட்டது……
பூமி உருண்டை நன்றாக தெரிந்தது…..
அப்போது விதியாசமான ஒரு காட்சியை கண்டேன்….
பூமியின் மேற்பரப்பில் இருந்து புகை போன்ற ஒன்று பல இடங்களில்
மேல்நோக்கி வந்து கொண்டிருந்தது…..
(15)
அந்த புகை போன்றவைகளும் நேர் கோட்டில் மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது….
நிறைய புகை கோடுகள்…பூமி பந்து சுற்றிலும் இருந்து வந்தது….
நான் என் பக்கத்தில் முன்னால் இருந்தவனிடம் இது என்ன வென்று
கேட்டேன்…..
அதற்குள் வேகமாக பல வாகனங்கள் எங்களை கடந்து கீழ்நோக்கி சென்று
கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
எல்லாமே பல வடிவங்களில்.
சில கூர்மையான மூக்குகள்
உள்ளது.
சிலது நீள் சதுரமாக
இருந்தது.
சிலது வட்டமான..அதாவது
எங்கள் வாகனம் போல இருந்தது…..
இடையிடையே என் மனைவியின் ஞாபகம் வந்து கொண்டு இருந்தது……
இனி அவளை பார்க்க முடியுமா….?
பூமியில் வாழ்ந்த நாட்களில் அவள் எனக்கு செய்திருக்கும் பணிவிடைகளை
நினத்தேன்…
….மொத்தத்தில் நான் எவ்வளவு தூரம் அவளிடம் உண்மையாக நடந்திருக்கிறேன்
.யோசித்தேன்
….நான் சரியில்லை என்றே தோன்றியது…
இப்படி பட்ட வாழ்க்கை இறந்த பின்னும் இருக்கிறது என்ற அறிவு அப்போது சுத்தமாக இல்லாததை நினைத்து
கவலைப்பட்டேன்…
உங்களுக்கு உதவி தேவைபடுகிறதா….?
(16)
என்ன கேட்டாய்..?என் முன் பக்கத்தில் இருப்பவன் என்னை பார்த்து
கேட்டான்.
சட்டென்று நினைவுக்கு வர வில்லை……….----என்ன கேட்டேன்
..
ஆ…….அது என்ன புகை போன்ற ஒன்று பூமியில் இருந்து வருகிறதே..?
அதுவா……..அது மணிதர்களின் விண்ணப்பங்கள்…..வேண்டுதல்கள்..
….விண்ணப்பங்களா…..?
ஆம்…..
எல்லா விண்ணப்பங்களும் கேட்கப்படுமா..?
நிச்சயமாக….பதிலும் உடனுக்குடன் செய்யப்படும்…..எல்லாமே சட்டதிட்டத்திற்கு
உட்பட்டு….
என்ன சட்ட திட்டம் ..புரியவில்லையே……
புரியவில்லையென்றால் விட்டுவிடு இனி புரிந்து என்ன செய்யப் போகிறாய்…..?
நான் நினைத்தேன்.
.
நான் விண்ணப்பம் செய்திருக்கிறேனா..?
அதிகமாக இல்லையென்றே கூறவேண்டும்…
.நான் பூமியில் பணக்காரன்.ஆகவே அனேகமாக பணத்தாலயே எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுவேன்…
(17)
.ஆனால் என் மனைவி ஜெபிப்பதை பார்த்திருக்கிறேன்..அதுவும் அதிகாலையில்…..ஒரு
வேளை என் வசதிக்கு காரணம் அவள் ஜெபம் தானோ…..? தெரியவில்லை
சரி இவர்களிடம் கடவுளை பற்றி கேட்கலாமே என்று நினைத்தேன்.
அறிவு பூர்வமாக இருக்கட்டுமே என்று நினைத்து
நீங்கள் பிதாவை பார்த்திருக்கிறிர்களா ..?என்றேன்
.
சட்டென்று அந்த ஜந்து பேரும் என்னை பார்த்தார்கள்..
அவர்கள் முகம் முதலில் மஞ்சளாயிற்று..
பின்பு சிவந்து தீப்பிழம்பாய் ஆனது..அப்படியே முழங்கால் படியிட்டு
முகம் குப்புற விழுந்தார்கள்..
அந்த சூட்டினால் என் உடம்பு உஷ்ணத்தால் தகித்தது….எங்கள் வாகனம் நின்று விட்டது….
இவர்கள் முகம் குப்புற விழுந்து கிடக்கையில்….வாகனத்தின் உட்
புறத்தில் மேல் பக்கமாக ஒரு ஒலிபெருக்கி போன்ற அமைப்பு திற்நது கொண்டது…..
அதிலிருந்து சத்தம் வந்தது….
எழுந்திருங்கள்…….எல்லாவற்றையும் நாங்கள் கேட்டோம்.
.நீங்கள் கோப படக்கூடாது என்பது உத்தரவு..
ஆனால் அவனுக்கு விளக்கமாக சொல்லுங்கள் ..இனி இப்படி சொல்லாதிருக்வேண்டும்
என்று தெளிவாய் கூறுங்கள்……
(18)
எங்கள் வாகனத்தின் முல்பகுதியில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு
திரவம் அவாகள் மீது பீச்சியடித்தது…
.அவர்கள் ஜந்து பேரும் எழுந்து உட்கார்ந்தர்கள்.
எனக்கு குலை நடுக்கமாயிற்று..
நான் என்ன தப்பாய் சொல்லி விட்டேன்..இப்படி நினைத்து கொண்டிருக்கையில்.
அவர்களில் ஒருவன் என்ன திருமபி பார்த்தான்.
மெதுவாக பேசினானன்..ஆனால் குரல் நடுக்கமாய் இருந்தது…
அவர்.. பரிசுத்தர்.
.வல்லமையுள்ளவர்
…நித்தியமானவர்.
ஒருவரும் ஒருக்காலும் காண முடியாதவர்…..
இவை எல்லாவற்றையும் குறிக்கும் படியாக ஒரு பெயரும் அவருக்கு
வைக்கபடவில்லை..
காரணம்.
எங்களில் யாரும் அவரை பேர் சொல்லி அழைக்க கூடாது….
அதற்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல….
(19)
நீ இப்போது காணும் யாவையும் இனிக்காணப்போகும் எல்லாமே.அவர் வார்த்தையாலே
படைக்கபட்டது…
மனிதர்களாகிய உங்களை மட்டும் தன் கரத்தினாலயே உண்டு பண்ணனார்….
அது மட்டுமல்ல..
உங்கள் மீது அவர் வைத்த
அன்பினால் தனக்கு ஒரு பெயர் வைத்து யேகோவா என்று அதை உங்களுக்கு சொல்லியும் கொடுத்தார்.
என் பெயரை வீணாய் சொல்லாதே என்றும் கட்டளையிட்டார்
…..யேகோவா….. என்று சொல்லும் போது அவன் முழங்கால் படியிட்டு
மீண்டும் வணங்கினான்…
ஆனால் மனிதர்களாகிய. நீங்கள்….
(இப்போது அவன் கண்கள் மீண்டும் தீபிளம்பாய் ஆனது…..)
எதற்கொடுத்தாலும் அவர்
பெயரைச் சொல்லிச் சொல்லி அவமான படுத்தினீர்கள்…
அதை கேட்கும் போது எல்லாம் நாங்கள் கோபமடைவோம்..ஆனாலும்
அவர் உங்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறார் என்பதாலும்
தன் ஒரே மகனை உங்களுக்காக
பூமியில் பிறக்கச்செய்தார் என்பதாலும் நாங்கள்
அமைதியாகி விடுவோம்..
ஆகவே இனி அப்படி அவர் பெயரை நீ சொல்ல வேண்டாம்…
அது மட்டுமல்ல இப்போது நீ மானிடன் அல்ல.அந்த தகுதி உனக்கு இல்லை..ஆகவே
இனி அதை பற்றி பேசக்கூடாது என்றான்..
(20)
கடவுளுக்கு இவர்கள் எப்படி பயப்படுகிறார்கள்..?பூமியில் யாரும்
இப்படி பயந்தது கிடையாது…….அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன்…
மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது.
இரண்டு நொடிக்குள் எங்கள் வாகனத்தின் முன் மிகப்பெரிய கருப்பு
வாகனம் வந்து நின்றது..அதிலிருந்து இருபது அடி உய்ரம் இருக்கும்
.அரக்கர்கள் போல் வலுவான
உடலமைப்பைக் கொண்ட பத்துபேர் இறங்கினர்கள்….
என் பக்கத்திருந்தவன்
..அவர்கள் வந்து விட்டார்கள்… என்றான்….
நான் யார் என்றேன்…….
அவன் ………இருளின் மைந்தர்கள் ….. என்றான்
எனக்கு கொஞ்சமாக புரிந்தது…..
வெளியே நின்று கத்துகிறார்கள்..
எங்களில் ஒருவன் எங்கள் வாகனத்தின் உள்ள சிறு திரப்பை திறந்தான்….
அவர்கள் பயங்கர கூச்சலிடுவது அதன்மூலம் கேட்டது..
என்ன சொல்கிறாகள் என்று கேட்டேன்….
நீ அவர்களுக்கு வேண்டுமாம்…நீ அவர்களை சேந்தவனாம்.என்றான்
எனக்கு உடல் முழுவதும் சில்லிட்டது..
என்னை அவர்களிடம் ஒப்படைக்க
போகிறார்களா,,?
(21)
நான் அவர்களுக்கு தேவை …..என்று அவர்கள் சொன்னது ஓரளவுக்கு புரிந்தது….
அரக்கர்கள் போலிருக்கும் இவர்கள் கையில் நான் சிக்கினால் என்
கதி ..?
நான் நடுங்கி கொண்டிருந்தேன்..
என் பக்கத்திலிருந்தவன் என்னைப் பார்த்து….
நீ பயப்படவேண்டாம் என்றான்.
என்னால் எப்படி பயப்படாமல் இருக்க முடியும்..?
அவர்களின் கருப்பு வாகனம் எங்கள் வாகனத்தின் முன் வந்து வழி
மறித்து நின்று கொண்டது…
.அவர்களைப் பார்த்து விட்டு என் கூட இருப்பவர்களை பார்த்தால்…..இவர்கள்
மிகவும் சிறியதாய் காணப்பட்டார்கள்….
இருளின் மைந்தர்கள் கையை அசைத்து எங்களை வெளியே வரச்சொன்னார்கள்.
அப்போதுதான் அந்த பயங்கரம் நடந்தது..
சரி வருகிறேன் ….என்று எங்கள் ஜவரில் ஒருவன் மட்டும் வெளியே
எங்கள் வாகனத்தில் இருந்து இறங்கினான்…
வெளியே கால்வைத்த உடன்………
நான் பிரமித்தேன்…………………..
அந்த தூதன் மிகவும் பெரியவனாய்………
……. (22)
ஆதாவது சில ஆங்கில திரைப்டங்களில் வரும் இயந்திர மனிதர்கள் போல்
சுமார் இருபது அடி உயரமுமாய் மிகப்பெரிய உருவமுடன் இறங்கி நின்றான்…..
நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன்.
என்ன ஒரு கம்பீரம்……………...சுத்த வெண்மையும் ஓரத்தில் இள நீலமுமான
உருவத்தில் இருந்தான்
.அங்கி போன்ற எந்த உடையும் இல்லை.
முழுவதும் கவசமும் ஆயதமும் தரித்த ஒரு தேவ தூதனைக் கண்டேன்.
இந்த தூதனுக்கு முன்பாக இருளின் மைந்தர்கள் நிறம்மங்கி மங்கலாய்
அசிங்கமாய் காணப்பட்டார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து கத்தி சத்தமிட்டார்கள்…
இதற்கிடையில் எங்கள்
வாகனத்தில் உட்பக்கத்தில் ஒரு அறிவிப்பு கேட்டது…
எங்கிருந்து அந்த சத்தம் வந்தது என்று தெரியிவல்லை.ஆனால் ஒரு
ஸ்பீக்கர் மூலம் கேட்டது போல இருந்தது.
உங்களுக்கு உதவி தேவைபடுகிறதா….?
உங்களுக்கு உதவி தேவைபடுகிறதா….?
உங்களுக்கு உதவி தேவைபடுகிறதா….?
.
(23)
..…….என் முன்னால் இருந்தவன் ..இப்போது தேவையில்லை..தேவை ஏற்பட்டால்
அழைக்கிறேன் என்றான்.
நான் இப்போது தைரியமாக வெளியே பார்த்தேன்..
நமது பக்கம் ஒருவன்
அவர்கள் பக்கம் குறைந்தது இருபது முப்பது பேர் இருப்பார்கள்….
இன்னும் வந்து கொண்டு இருந்தார்கள்….
அவர்கள் என்ன பேசினர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
மகா சத்தமிட்டு கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள்….
அப்போது இடி முழக்கம் போன்ற ஒரு சப்தம்…போர் விமானம் நம் தலைக்கு
மேல் பறந்தால் எப்படி இருக்கும் அதே போல்…
நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் பாதைக்கு மிக அருகில் இன்னொரு
டிராக் (…பாதை..)தெரிந்தது.
அந்த டிராக் மிக வெண்மையாய் பிரகாசமாய் இருந்தது..
வர வர..சத்தம் அதிகமாகி கொண்டே வந்தது..வெளிச்சமும் கூடிக் கொண்டே
வந்தது
..) மிக அருகில் வந்து விட்டது..
அந்த வெளிச்சம் இருளின் மைந்தர்கள் மேல்பட்டு ஒளிர்ந்தது..
அவர்கள் அனைவரும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு தரையோடு தரையாக
விழுந்தார்கள்.
(24)
.(அங்கு தரை கிடையாது…நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக..)
எங்கள் வாகனம் அதிர்ந்தது..
அங்கே கவனித்தேன் ..
ஒரு நபர் ஒரு ஆசனத்தில்
அமர்ந்து இருக்கிறார்…அவரை சுற்றி நீள்வட்டத்தில் மிக அழகான தூதர்கள் போல..( இறக்கைகள்
இவர்களுக்கும் இல்லை..)
…கையில் இசைக்கருவி போல ஏதேதோ வைத்திருக்கிறார்கள்
அந்த மனிதர் கம்பீரமாக உட்கர்ந்து பயணம் செய்தார்….யாரும் அவரை
தடுப்பார் இல்லை…
என்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை…..
யார் அவர் என்றேன்…..?
அவர் மிக நல்லவராக இருக்கலாம்……..
அல்லது மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்தவராக இருக்கலாம்.
அல்லது……
..இதை சொல்லும் முன் எழுந்து முகம் குப்புற விழுந்து பணிந்து
கொண்டு..
பரிசுத்தரின் ஊழிக்காரனாய் இருக்கலாம்….(..குரல் நடுங்கியது..)
(25)
நான் நினைத்தேன்….அவர் பயமில்லாமல் வேகமாக பயணம் செய்கிறார்.
என்னப் பாருங்கள்..நடு வழியில் நிறுத்தி பங்கு போடுகிறார்கள்…
இப்போது வெளியே மீண்டும் சண்டை ஆயத்தமாகியது….
இப்போது அவர்கள் பேசுவது எனக்கு புரிந்தது..
இருளின் மைந்தன் ஒருவன் இப்படி சொன்னான்..
அவன் எங்களுக்கு சொந்த மானவன்..நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள்..என்றான்..
இதை கேட்டதும் ……..தேவ தூதன் கடும் கோபம் கொண்டான்..அவன் முகம்
தீ பந்தம் போல காணப்பட்டது.உடல் சிவந்து ஒளிர்ந்தது.
யாரைப்பார்த்து ஏமாற்றுக்காரன் என்கிறாய்…….அது உன் தலைவனும்
நீயுமே என்று
எதிரே நிற்கும் இருளின் மைந்தனை அவன் இடுப்பில் எட்டி மிதித்தான்….
அவர்கள் அனைவரும் நம் தூதனை தாக்குவதற்கு ஆயத்தமானார்கள் இதை
பார்த்து கொண்டிருந்த வாகனத்திற்குள் இருந்த மீதமுள்ள நான்கு பேரும் வெளியே பாய்ந்தார்கள்.
வெளியே போகும் போது ஒருவன் என்னைப் பார்த்து சொன்னான்
.நீ எக்காரணம் கொண்டும் வெளியே பார்க்காதே என்றான்…
…இப்போது நம்மவர்கள் ஐந்துபேர் .
அவர்கள் அனேகர்.
(26)
அப்போது நான் என்னை அறியாமல் ஒரு தவறு செய்து விட்டேன்.
வெளியே என்ன நடக்கிறது என்று ஆர்வத்தால் எட்டிப்பார்த்து விட்டேன்.
பயங்கரமாக மோதிக்கொண்டார்கள்…
மின்னல் போன்ற ஏதோ ஒன்று …அவர்கள் ஆயுதத்தில் இருந்து தொடர்ந்து
வந்து கொண்டிருந்தது.
நானும் யார் யாரைத் தாக்குகிறார்கள் என்று புரியாதவனாய் பார்த்து
கொண்டிருந்தேன்…
.திடிரென்று யானை தூம்பிக்கை போன்ற ஒன்று என் கழுத்தை பிடித்து
கொண்டது.
அது என்னை வெளியே இழுத்தது.
.நான் வெளியே வந்து விழுந்தேன்.
ஏய் அவனை விடு …என்று நமது தூதன் அந்த தும்பிக்கையை பிடித்துக்கொண்டான்.
இப்போது சண்டை நின்று விட்டது.
அவன் தலையை பாருங்கள் அவன் தலையை பாருங்கள் என்று இருளின் மைந்தர்கள்
சத்தமிட்டார்கள்..
தேவ தூதன் காட்ட முடியாது என்று தடுத்தான்….
இல்லை நாங்கள் பார்க்க வேண்டும்:.சரியாக இருக்குமானால் நாங்கள்
போக அனுமதிப்போம் என்றான்.
(27)
.நீ என்ன எனக்கு அனுமதி கொடுப்பது…..உங்கள் அனைவரையும் நான்
சங்காரம் செய்வேன் .தானாய் வழி கிடைக்கும் …..என்று தேவ தூதன் சத்தமிட்டான்..
எனக்கு ஒன்றும் புரியவில்ல.
என் தலையில் எதை பார்க்க போகிறார்கள்.
ஆனால் பிடி இருகியது.
வலி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ ஒரு மயக்கம் வந்தது போலிருந்தது…
இப்போது என் கழுத்தில் இருந்து அந்த தும்பிக்கை அகன்று விட்டது….
நான் அப்பாடா என்று நிமிர்ந்த அவர்கள் கால்களுக்கு இடையில் நின்றேன்
அப்போது எங்கள் வாகனத்தில் இருந்து ஒரு அறிவிப்பு…
அவன் தலையில் இருக்கும் ஒப்பந்த அடையாளத்தை காட்டலாம்….
மீண்டும் அனைவரும் என்ன உற்றுப்பார்த்தார்கள்…
தேவ தூதன் ஒருவன் என்அருகில் வந்து என் தலை மீது கைகளை வைத்தான்.
பின்பு
டார்ச் போன்ற ஒன்றை என் நெற்றியில் அடித்தான் .
அந்த வெளிச்சம் என் நெற்றியில் பட்டதும் என் நெற்றிய்ல் இருந்து
ஒரு அடையாளம் மின்னியது.
என் எதிரே நின்று கொண்டிருந்த தேவதூதன் உடைகளில் அந்த அடையாளம்
பட்டு பிரதி பலித்தது..
(28)
அவன் இடுப்பில் கட்டியிருந்த கவசத்தில் என் முகம் நன்றாக தெரிந்தது.
அதாவது என் நெற்றியில்…. சிவப்பு கலரில் சிலுவை அடையாளம் பிரகாசித்து
கொண்டிருந்தது.
இதை கண்டதும் இருளின் மைந்தர்களின் முகம் தொங்கிப்போனது.
உடனே அவர்கள்; கிளம்பி சென்று விட்டார்கள்….
தூதுர்கள் ஐந்து பேரும் மறுபடியும் வாகனத்திற்குள் வந்துவிட்டார்கள்..
அதில் ஒருவன் நீ எதற்காக வெளியே பார்த்தாய் என்று என்னிடம கேட்டான்.
நான் பதிலே சொல்லவில்லை.
ஒப்பந்த அடையாளம் உனக்கு இருந்ததால் சிக்கல் இல்லாமல் முடிந்து
விட்டது.என்றான்
என்ன ஒப்பந்தம்..? யாரோடு ஒப்பந்தம்..என்றேன்.
தூதன் என்னைப் பார்த்தான்.
அவன் எழுந்து ஒரு முறை பணிந்து கொண்டு.என்னைப் பார்த்து கூறினான்.
அது பரிசுத்த ஓப்பந்தம்…அல்லது உடன்படிக்கை…
நீ பூமியில் இருக்கும் போது பரிசுத்தரோடு செய்து கொண்ட உடன்படிக்கையின்
அடையாளம்….
(29)
எனக்கு புரியவில்ல நான் எப்போது கடவுளோடு உடன்படிக்கை செய்து
கொண்டேன்..
எனக்கு புரியவில்ல என்றேன்..
அவன் என்னை உற்றுப்பர்த்தான்….அவனே சொன்னான்.
உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் என்பது …ஞானஸ்நானம்…எடுக்கும்
போது உனக்கு கிடைப்பது….
கடவுளே…………………………………..ஞானஸ்நானம் அவ்வளவு முக்கியமானதா..?
ஏதோ சடங்கு என்றல்லவா நினைத்தேன்…..பூமியில் யாருமே இதை ஒரு
பொருட்டாக எண்ணுவதில்லையே…..
என் பிள்ளைகள் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை….இதன் முக்கியத்துவத்தை யார் போய் அவர்களுக்கு சொல்வது…?
பூமியில் எதையெல்லாம் அற்பமாய் எண்ணினேனோ. அவை எல்லாம் பூதாகரமாய்
இப்போது தெரிகிறது…
பூமியில் மிகவும் முக்கியமாக நான் நினைத்தது இப்போது எண்ணப்படாமலேயே
போய்விட்டது..
கண்களை மூடி மௌனமாய் ஆனேன்.
பக்கத்திலிருந்த தேவ தூதன் என்னை ஆதரவாக தலையை தடவினான்.
நான் மிகுந்த மனமடிவானேன்..தூரத்தில் புள்ளியாய் எங்கள் பாதை
நீண்டு தெரிந்தது…
எவ்வளவு நேரம் அயர்ந்து இருந்தேன் என்று கூறமுடியவில்லை..
(30)
அது தூக்கம் அல்ல.
.தூக்கம் எல்லாம் பூமியோடு முடிந்து விட்டது..
ஒன்று உணர்வாயிருக்க வேண்டும் இல்லையெனின் உணர்வற்ற நிலையில்
இருக்கவேண்டும் .அவ்வளவே.
இங்கு வேதனை என்பது உடல் சம்பந்தபட்டது அல்ல.
பூமியில் உடல் வேதனை படும்போது மனம் சாதாரணமாக இருக்கும்.ஆனால்
இங்கு அப்படி அல்ல மனதில்தான் எல்லாமே நடக்கிறது.
.இதை பூமியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வது கடினம்….
நான் என் பக்கத்தில் இருந்த தூதனிடம் ஒரு கேள்வி கேட்டேன்…
நீங்கள் இருளின் மைந்தர்களோடு சண்டையிடுகிறீர்கள்….அதில் யாராவது
செத்துப் போவார்களா…..?
தூதன் அமைதியாக இருந்தான்……
பின்பு நிதானமாக என்னைப் பார்த்து கூறினான்.
.
இங்கு மரணம் என்பது கிடையாது…
.
பூமியில்தான் மரணம்.
இங்கு வெற்றி என்பது…. எதிரிகள் செயல் இழப்பார்கள்.
.
(31)
பின்பு மீண்டும் அவர்கள் செயல்பட ..உங்கள் பூமியின் கணக்குபடி பல மாதங்கள் ஆகலாம்….
மரணம் என்பது பூமியில்தான்.
ஆனால் ஒன்று …
பூமியின் மனிதர்களுக்கும் .அந்த இருளின் மைந்தர்களுக்கும் இரண்டாம்
மரணம் காத்து கொண்டிருக்கிறது.
.
இதைச் சொல்லும் போது அவன் கண்கள் கோபத்தால் சிவ்ந்தது..
அது சீக்கிரம் நடக்கும்…இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது….
எனக்கு
புரியவில்லை…என்றேன்
யார்
சொன்னார்கள்…?.அங்கு(..பூமியில்..).
.
இதை பற்றியெல்லாம் யாரும் பூமியில் பேசுவதே இல்லையே…..என்றேன்…
அவன்
சிறிது நேரம் அமைதியாய் இருந்தான்…பின்பு அவனே பேசினான்…
.அதற்கு
முன் எழுந்து நின்று பின்பு முகம் குப்புற விழுந்து பணிந்தான்.
.
நான்
புரிந்து கொண்டேன் இவன் கடவுளை பற்றி ஏதோ பேசப்போகிறான் என்று..சரி பேசட்டும் என்று
காத்திருந்தேன்..
.
(32)
தூதன்
தொடர்ந்தான்…
.
இருளின்
மைந்தர்கள் அழிக்கபட வேண்டியவர்கள்.
.ஆனால்
மனிதர்கள் அப்படி அல்ல.
.
பரிசுத்தர்
உங்களுக்கு எல்லாமே நன்மையாகத்தானே செய்தார்…
.ஆனால்
நீங்கள் அவரை தொடர்ந்து அவமான படுத்தி கொண்டே இருக்கிறீர்கள்…..ஆனாலும் பரிசுத்தர்
உங்கள் மீது அளவு கடந்த அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறார்..என்றான்
..
மனிதர்கள்
அவரை அப்படி என்ன அவமதித்தார்கள் .?...என்றேன்……
அவன்
என்னை கோபமாக பார்த்தான்….
ஒன்றா
இரண்டா…?
….இப்போது
நீ வழி நெடுக கண்டு கொண்டே வருகிறாயே எல்லாவற்றையும் படைத்தது அவர்..
.
.உங்களுக்கு
பூமியிலே உயிர் வாழத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.
ஒரு காரியம்
நினைவில் வைத்துக்கொள்…
..நீ
பூமியில் கண்ட அறிவியல் படைப்பு அத்தனையும் முன்பு எங்களிடம் பழக்கத்தில் இருந்தவைதான்…
.
இனி மனிதன்
கண்டு பிடிக்க போவதும் அப்படியே ஃ.
.
.
(33)
இவை எல்லாம்
எங்களைப் பொறுத்த வரையில் மிகவும் பழமையானது…
…இங்கு
உள்ள எல்லா கருவிகளும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும்.
நான்
தினம் என்று சொல்வது நீ விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காகவே..
.
நான்
கேட்டேன்… ஒ…..இங்கு கடிகாரம் உண்டா ..?என்றேன்…..
.
இருக்கிறது..அது
ஒருமுறை சூழன்று வர உங்கள் கணக்கபடி ஆயிரம் வருடம் ஆகும்….
.
அப்படியென்றால்
உங்கள் வாழ் நாட்கள் எவ்வளவு அற்பமானது என்று எண்ணிப்பார் .என்றான்…;
மிக குறைவுதான்
.சந்தேகமே இல்லை….அது சரி உங்கள் ஆயுள் எவ்வளவு நாள்…? என்றேன்.
அவன்
சொன்னான்……நான் நோவா கப்பல் செய்யும் போது அவனுக்கு உதவி இருக்கிறேன்…..எங்களுக்கு
மரணம் இல்லை…..
.
உங்கள்
வாழ்க்கை பூமியில் மிக குறுகியது…
.இந்த
சிறிய வாழ்நாளில் நீங்கள் கல்வி என்ற ஒன்றைக் கற்றுக் கொள்கிறீர்கள்…
.
.அதன்
மூலம் பூமி தானாய் உண்டானது என்று அனைவருக்கும் போதனை செய்து பரிசுத்தரை உங்கள் சிறுவயதிலேயே
அவமதிக்கிறீர்கள்………
.
(34)
இதற்கெல்லாம்
காரணம் அந்த இருளின் மைந்தர்கள்தான்…
இதைவிட
மகிப்பொரிய அவ மதிப்பு….பரிசுத்தருக்கு நிகராக மிருகங்களை போன்ற பொம்மைகளை செய்து வைத்து
இதுதான் எங்கள் கடவுள் என்று ஆராதிக்கிறீர்கள்……
.
அவர்
ஒருவரும் ஒருக்காலும் கானக்கூடாத ஒளியாய் இருக்கிறார்.
.
விஞ்ஞானத்தின்
உச்சம் அவரே.
.அவர்தான்
ஞானம்…
.நீங்கள்
அவரை (.கடவுள்..)……இப்படி யாருமே இல்லையென்று பறை சாற்றுகிறீர்கள்.
.
.உங்கள்
கல்வி ஒழிக்கபட வேண்டிய ஒன்று…
.
மனிதர்கள்
வேண்டும் என்றே இதைச் செய்கிறார்கள்….
.
உன்னைப்
போல் உடன்படிக்கை செய்தவர்களும் இப்படியே செய்கிறார்கள்…
.
நீங்களும்
(.கிறிஸ்தவர்களும்..) மாறுபடவில்லை..என்றான்
.
எனக்கு
அவன் சொன்னது புரிந்தது ..அவன் கிறிஸ்தவர்களை பற்றித்தான் பேசுகிறான் என்று புரிந்து
கொண்டேன்.
சரி.
இதைபற்றி அவனிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்தேன்…
.
நாங்கள்
எவ்வாறு அவமதிக்கிறோம்..
அவன்
தொடர்ந்தான்.
மற்றவர்களை
மன்னித்து விடலாம்.
(35)
ஏனேன்றால்
அவர்களிடம் பரிசுத்தரின் வார்த்தை இல்லை
.ஆனால்
உங்களிடம் இருக்கிறது..
.
எதை இவன்
வார்த்தை என்கிறான்..?அது என்ன வார்த்தை..?என்றேன்
.
அது பரிசுத்த
வேதம்..அதில் பரிசுத்தரின் வார்த்தைகள் இருக்கிறது.
.
அவர்
ஒன்றையும் உங்களிடம் மறைக்கவில்லை..
.
இங்கு
நாங்கள் பரிசுத்தரின் பெயரை கூறக்கூட அஞ்சுவோம்.
ஆனால்
உங்களுக்கு அவரை அப்பா என்று கூப்பிடலாம் என்று உரிமையை நீ பெற்ற அடையாளத்துடனே அதையையும்
கொடுத்தார்….
.
.ஆனால்
நீங்கள் அவரை கடு அளவு கூட நம்புவது இல்லை…
.
பின்பு
அமைதியானான்.
நாங்கள்
நம்பத்தானே செய்கிறோம்……
.
அவன்
என்னை திரும்பிப் பார்த்தான்……நம்பிக்கை உள்ளவர்கள் எப்படி கவலைப்படலாம்…?.
நம்பிக்கை
உள்ளவர்கள் எப்படி பயப்படலாம்.?
கவலைப்படாதே.பயப்படாதே
என்று எத்தனை முறை அந்தவேத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது….
யாருமே
இதை நம்புவது இல்லை..
உங்கள்
வாழ்க்கை முழுவதும் பயத்திலும் கவலையிலுமே கழிகிறது.
. (36)
ஆனால்
பெயரில் மட்டும் விசுவாசி என்கிறீர்கள்
.
நான்
ஒரு காரியம் சொல்கிறேன் கேள்……
.இங்கே
உன்னோடு இருக்கும் நாங்கள் ஐந்து பேர் போதும்….
மொத்த பூமியையும் ஒரு நாளில் சங்கரம் செய்து விடுவோம்….எங்கள்
பெலன் அப்படி பட்டது.
ஆனால்
.. .ஒரு மனிதனுக்காக….
. ஒரே ஒரு மனிதனை பூமியில் காப்பாற்ற…. தூதர்களின்
மொத்த திரள் கூட்டத்தையும் பரிசுத்தர் பூமிக்கு அனுப்பி வைப்பார்..
அவர்
உங்கள் மீது வைத்த அன்புக்கு அளவே இல்லை.யென்று கூறி முடித்தான்..
இதெல்லாம்
எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
.நான்
இதைபற்றி யோசித்ததே இல்லை என்றேன்…
.
ஒருவேளை
கர்த்தரின் ஊழியம் செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் .என்றேன்…..
.
.ஊழியர்களும்
உங்களைப் போலவே வாழ்கிறார்கள்….
ஊழியம்
செய்பவர்களுக்கு பரிசுத்தர் கொடுத்த முதல் கட்டளையே பணத்தை பற்றியது.
.
.பணத்துக்கும்
அவர்களுக்கும் உள்ள நெருக்கம்
உலகத்தில்
உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்று….
.
இதைபற்றி
இதற்கு மேல் பேசவேண்டாம் என்று கூறி முடித்தான்…
.
(37)
நான்
தொடர்ந்தேன்….சரி……..உலகத்தின் பற்று அதிகம்
இருந்தால் என்ன நடக்கும் என்று கேட்டேன்..
.
உனக்கு
நேர்ந்தது போல் அவர்களுக்கும் நடக்கும்..என்றான்.
எனக்கு
நடந்தது போல என்றால் ………விளங்க வில்லை….என்றேன்..
உன் உயிர்
உடலைவிட்டு நீக்கும் போது உனக்கு வலித்தது அல்லவா…….அது போலவே………
அவர்களின்
உலக ஆசை அதிக வலியையும் வேதனையையும் இன்னும் அதிகமாய் உருவாக்கும் …..என்றான்…
.
என்ன
செய்வது..எல்லாம் முடிந்து விட்டது..
என் வீடு
இப்போது எப்படி இருக்குமோ தெரியவில்லை என்று
கவலையுடன் அவனிடம் கூறினேன்..
அந்த
தூதன் என் கண்களைப் பார்த்தான்…
…
மெதுவாக
கேட்டான்……நீ உன் வீட்டை இப்போது பார்க்க வேண்டுமா..? என்றான்..
ஆம் பார்த்தால்
நன்றாக இருக்கும்…..என் மனைவி அதிக சோகமாய் இருப்பாள் என்றேன்…
.
கட்டாயம்
பார்க்கவேண்டும் எனின் காட்டுகிறேன்..என்றான்….
எனக்கு
ஆர்வம் அதிகமானது…சரி…..காட்டுங்கள் பார்க்கிறேன் என்றேன்..
.
(38)
அந்த
தூதன் என் இருக்கைக்கு முன்னே இருக்கின்ற கண்ணாடி திறை முன்னே தன்கையை நீட்டினான்.
திரை
ஒளிர்ந்தது…
.அங்கே
என் வீடு தெரிந்தது..பிள்ளைகளைக் காணோம்…..
.
பின்…
என் மனைவி தெரிந்தாள்………
.
அவள்
எங்கள் வீட்டு நாய் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்…சந்தோசமாக……
செய்யலாம்..(
எனக்கு
மிகப்பெரிய அதிர்ச்சி….
என் மனைவியின்
முகத்தை பார்த்தேன்.அவள் இயல்பாகவே இருந்தாள்…
துயரத்தின்
சாயல் இல்லவே இல்லை.
நான்
என் மனைவியை பற்றி வேறு மாதிரி நினைத்திருந்தேன்…
அவள்
எனக்காகவே வாழ்பவள் என்று.
அது தவறு…..
.இப்போது
அதை காண்கின்றேனே..
பூமியில்
இரவு பகல் மாறி மாறி வருவதன் காரணம் சோகங்கள்
மறக்கபடவே…
என் பிள்ளைகளும்
மனைவியும் என்னை மறந்து விட்டார்கள்….
தங்கள்
தங்கள் வாழ்க்கையில் மூழ்கி போய் விட்டார்கள்.
(39)
பூமியில்
ஏதோ ஒரு கட்டு… ஒவ்வொருவரையும் மற்றவர்களோடு கட்டி வைத்திருக்கிறது
அது உறவு
என்ற பெயரில் .பாசம் என்ற பெயரில் .காதல் என்ற பெயரில் நட்பு என்ற பெயரில் இயங்குகிறது…
மரணத்திற்கு
பின் அந்த கட்டுக்கள் அவிழ்ந்து மறைந்து விடுகிறது.
ஆனாலும்
இவ்வளவு சீக்கரமாகவா மறப்பார்கள்..?
நான்
இறந்து எத்தனை நாள் ஆகிவிட்டது…..தூதனிடம் கேட்டேன்..
அவன்
சொன்னான்.. பூமியின் கணக்குபடி இன்றோடு இருபத்தி எட்டு நாட்கள்.
அவ்வளவு
நாட்கள்ஆகிவிட்டதா….?…இப்படி சிந்தித்து கொண்டிருக்கும் போதே எங்கள் வாகனம் நின்றது..
என்ன
ஆயிற்று..மீண்டும் ஏதேனும் சிக்கலா..?
என்னோடு
இருந்த தூதர்கள் அமைதியாய் இருந்தார்கள்.
அப்போதுதான்
கவனித்தேன் நாங்கள் பயணித்து கொண்டிருந்த கொண்டிருந்த அந்த டிராக் சில அடி தூரத்தில்
இருந்து காணாமல் போய்விட்டது..
எனக்கு
ஒன்றும் புரியவில்லை..
வாகனம்
நின்றது.
யாரும்
யாருடனும் பேசவில்லை…அமைதி…..
ஒரு அறிவிப்பு
வாகனத்தின் உள்ளே கேட்டது.
மத்திய
ஆகாயத்தில் யுத்தம் நடக்கிறது….யுத்தம் முடிந்த பின் நீங்கள் வரலாம்…
இப்போது
அவசர தேவைக்கான அனைத்தையும் பயன்படுத்தலாம்….
முக்கியமாக
உங்களோடிருப்பவனை வாகனத்தை விட்டு வெளியே இறக்கிவிட அனுமதி இல்லை…
(40)
என்ன
சண்டை …?….என்றேன்..
இருளின்
மைந்தர்களுக்கும் எங்களுக்கும்.. என்றான்
எப்போதும்
இப்படி நடக்குமா..?
அவர்கள்
வழி மறிப்பார்கள்…..தானியேல் தீர்க்கதரிசி ஜெபத்திற்க்கான பதிலை தூதன் கொண்டு வரும்போது
வழி மறித்ததாக வேதத்தில் எழுதியதை நீ படிக்கவில்லையா…?
ம்…கொஞ்சம்
ஞாபகம் இருக்கிறது…….பயங்கர சண்டையாய் இருக்குமோ..?
ஆமாம்……நிச்சயமாக
சில நேரம் நாங்கள் பின் வாங்குவோம்..ஆனால் உடனே அது சரி செய்யப்படும்.
எப்படி
சரி செய்வீர்கள்….?
உதவிக்கு
எங்கள் தூதர்கள் வந்து விடுவார்கள்…சிலநேரம் பிரதான தூதன் மிகாவேலும் கூட வருவார்..
ஓ..நான்
வியந்தேன்..
அப்போது
பட பட பட வென்று சத்தம்….
என்னவென்று
வெளியே பார்த்தேன் …..
ஒரு முப்பது
பேர் இருக்கும் எங்கள் வாகனத்தை சுற்றி நின்று கொண்டு வாகனத்தை தட்டி கொண்டிருந்தார்கள்….
நான்
பதறி விட்டேன் ..
இவர்கள்
மனிதர்கள்போல் தெரிகிறது.
(41)
ஆனால்
புயலில் அடிபட்டவர்கள் போல கிழிந்த உடையுடன் கலைந்த தலையுடன் பையித்தியகாரர்கள் போல
இருக்கிறார்கள்..
யார்
இவர்கள் ..?என்று கேட்டேன்..
இவர்கள்
பூமியில் தற்கொலை செய்து உயிரை விட்டவர்கள்.
தங்கள்
நேரம் வரும் வரை இப்படித்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்…
இவர்களுக்கு
எந்த பாதுகாப்பும் கிடைக்காது..
நான்
கேட்டேன்..
இருளின்
மைந்தர்கள் இவர்களை துன்ப படுத்துவார்களா..?
நிச்சயமாக..அவர்கள்
கையில் இவர்கள் சிக்கி கொண்டால் இவர்களை பயங்கரமாக தாக்குவார்கள்.
அந்த
வேதனையில் அவர்கள் சொல்வதையெல்லாம் இவர்கள் செய்வார்கள்…..
நான்
கேட்டேன்……..என்ன செய்ய சொல்வார்கள்?
பூமியில்
இவர்களை பேயாய் மாறச்சொல்வார்கள்…
ஆம்…..இவர்கள்
எந்த மனிதருக்குள்ளாவது புகுந்து இவர்கள் தாகத்தை தனித்து கொள்வார்கள்..
இருளின்
மைந்தர்களிடம் இருந்து இவர்கள் தப்பிக்கவே
முடியாதா..?
முடியாது ..இவர்களைத்தேடி நாங்கள்
வருவோம்..அதுவும் இவர்கள் வாழ்நாட்கள் காலம்
எப்போது முடியுமோ அப்போது வரை
இங்கும்
தாகம் பசி உண்டா..?
(42)
உண்டு…ஆனால்
பூமியை போல் அல்ல …
எங்கள்
உணவை பற்றி உங்கள் வேதத்தில் குறிப்பிடபட்டுள்ளது
…தெரியுமா உனக்கு..?
நான்
யோசித்தேன்…..தெரியவில்லை என்றேன்..ஆனால் எனக்கு பசிக்கவில்லையே என்றேன்….
தூதன்
சொன்னான்…நீ பாதுகாப்பாய் இருக்கிறாய் ஆகவே நாங்கள் உன்னைக்கொண்டு சேர்க்கும் வரை உனக்கு
பசி இருக்காது…..அதற்கான ஏற்பாடு உனக்கு செய்யபட்டிருக்கிறது..என்றான்.
வெளியே
இருக்கும் மனிதர்கள் தட்டுவதை நிறுத்தவே இல்லை….
எங்கள்
வாகனம் திடீரென்று சிலிர்த்தது போலிருந்தது.
.
அந்த
மனிதர்கள் அனைவரும் தூரமாய் போய் விழுந்தார்கள்..அதன் பின் கதறிக்கொண்டே இருட்டில்
ஓடி மறைந்து விட்டார்கள்…
நான்
இரக்கமாய் அவர்களைப் பார்த்தேன்…
பூமியில். எனக்கு அந்த உடன்படிக்கையின் அடையாளம் தரப்படவில்லையென்றால் எனக்கும் இதே கதிதான்…
நான்
ஞானஸ்நானம் பெற்றதே ஒரு தனிக்கதை.
.அதற்கு
காரணம் ஒரு பெண்….
.அவள்
பெயர் பூர்ணிமா சௌத்திரி…உத்திர பிரதேசக்காரி…..
பூர்ணிமா
என் வாழ்கையில் நான் சந்தித்த அழகிய பெண்…
.வாலிபத்தில்
காதலில் அவள் வீழ்த்தினாளா..?
நான் விழுந்தேனா ,,?என்று தெரியவில்லை…
. (43)
முழுவதையும்
கூறுகிறேன் அதன் பின் முடிவு செய்யலாம்..(
ஒரு மனிதனுக்கு பல உணர்வுகள் உள்ள
காலங்கள் பூமியில் கிடைக்கின்றன்.
குழந்தையாய் இருக்கிறான்..
வாலிபனாக ஆகிறான்.முதிர் வயதில்
சாகிறான்…
……மாறுபட்ட காலச் சூழ்நிலைகள்….எல்லாமே
உடல் சம்பத்தபட்டது.
.ஒரு பருவத்தில் விரும்பி செய்த
ஒரு காரியம் அடுத்த பருவத்தில் வெறுக்கபடுகிறது….
.எதுவுமே பூமியில் நிரந்தரம் கிடையாது.
ஆண் பெண் இருவருக்கும் வேறு வேறு
உடலமைப்பு..
வேறு வேறு பார்வைகள்…இதனால் எடுக்கும்
முடிவுகள் வேறுபட்டே இருக்கிறது..
ஒரு அழகிய பெண்ணுக்கு முன் எந்த
ஒரு வீரமான ஆணும் கொஞ்சம் கோழையாகி விடுகிறான்.
பாலுணர்வு என்ற ஒன்றுதான் மனிதனையும்
மனுஷியையும் இணைக்கிறது….அது இல்லையெனின் இருவரும் வேறு வேறு உருவங்கள்….
.
அல்லது வேறு வேறு மனித உருவங்கள்...
நான் சென்னையில் பொறியியற் கல்லூரியில்
முதல் ஆண்டு படிக்கும் போது பூர்ணிமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..
இரண்டாம் ஆண்டு பயிலும் போது அவளை
சந்தித்தேன்…
ஒரு ப்ராஜக்ட் காரியமாக நாங்கள்
ஒரு குழுவாய் ஆக்கப்பட்டோம்.
எங்கள் குழுவில் இரண்டு பெண்கள்….
(44)
ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திக்
கொண்டோம்.
அவள் தன்னை பூர்ணிமா சௌத்திரி
என்று அறிமுகப் படுத்தினாள்…
அடுத்தவள் தன்னை சுவாதிகா ரெட்டி
என்றாள்…..(ஆந்திராக்காரி..)
எனக்கு கோபம் வந்து விட்டது..
இது என்ன உங்கள் ஜாதிப்பெயரையும்
சேர்த்து சொல்கிறீர்கள்…?.
தமிழ் நாட்டில் இப்படி பழக்கம்
இல்லையென்றேன்..
குழு அமைதியானது…
பூர்ணிமாவுக்கு நான் இப்படி சொன்னது
கொஞ்சம் அவமானமாகிவிட்டது……முகம் சிவந்து விட்டது….
அதன் பின் நானும் உணர்ந்தேன் கொஞ்சம்
அவசரபட்டுவிட்டேன் என்று.
ஆனாலும் எப்படி இதை சமாளிப்பது.
ஏதோ ஒன்று அவளிடம் என்னை ஈர்த்தது.
இரண்டாம் ஆணடு கல்லூரி ஆண்டு விழாவில் நாங்கள் ஒன்று சேர ஒரு வாய்ப்பு
வந்தது.
.
பூர்ணிமா அழகாக பாடுவாள்..நானும்
நன்றாக பாடுவேன்…ஆகவே நாங்கள்
இருவரும் சேர்ந்து பாடவேண்டும் என்று முடிவானது.
அது ஒரு ஹிந்தி சினிமாப்பாடல்.பாடவேண்டும்
என்று தேர்வானது
.அந்த பாடல் திரையில் ஓடும் அதற்கு
ஏற்றவாறு நாங்கள் பாடவேண்டும்..
ஆர்கெஸ்ட்ராவில் கல்லூரி மாணவர்களுடன்
இரண்டு ஆர்டிஸ்ட்டை வெளியில் இருந்து கொண்டு
வந்து எங்களோடு சேர்த்து கொண்டேன்
(45)
அந்த காலத்தில் வீடியோ டெக் வரவில்லை.ஆகவே
புரஜெக்டர் வாடகைக்கு எடுத்தேன்.
எனக்கு பணத்தை பற்றி எந்த கவலையும்
இல்லை.
தண்ணீராய் செலவழித்தேன்.
அது ஹிந்தி பாடலாய் இருந்ததால்
பாட மிகுந்த சிரமபட்டேன்…
அதன் அர்த்தத்தை அவளிடமே கேட்டேன்.அவள்
சொன்னாள்.
அது ஒரு காதல் பாட்டு..
முன் ஜென்மத்தில் இருந்து நமது
சொந்தம் தொடர்கிறது என்ற பொருள் கொண்டது…
.எனக்கு என்னவோ ஆனது..
அடிக்கடி அவளைப் பார்த்தேன்…
.எப்படியாவது என் காதலை அவளிடம்
சொல்லிவிடவேண்டும் என்று துடித்தேன்.
.எப்படியோ நான்காம் ஆண்டும் வந்தது.
நான்காம் ஆண்டு மிகப்பெரிய சோதனை வந்தது…
எங்கள் கல்லூரியில் விரிவுரையாளராக
அவள் ஊர்க்காரன் (உத்திரபிரதேசத்துக்காரன்.) ஒருவன் வந்தான்….
.ஆறு மாதத்திற்குள்.அவளிடம் அவன்
நெருக்கமாக பழகினான்…
(46)
.அவன் இவளை பற்றி அவன் பெற்றோரிடம்
சொல்லி… இரு வீட்டாரும் பேசி…அவள் கல்லூரி படிப்பை முடித்த உடன் திருமணம் என்று நிச்சயயிக்கபட்டது…
இதை கேள்விபட்ட உடனே எனக்கு பூமி பிளந்து என்னை விழுங்கவது
போல் பிரமை.
அவ்வளவுதான்.
என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை..
இறுதி வருடம் பாதியிலே என் படிப்பு
நின்றது..
என் தகப்பனார் என்னிடம் எதுவுமே
கேட்கவில்லை.
ஆனால் அவர் ஒரு காரியம் செய்தார்
.எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஊழியர் ஒருவர் இருந்தார்.அவரிடம் என் தகப்பனார்
என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது….
அந்த ஊழியக்காரர் அடிக்கடி என்னை
வந்து சந்தித்தார்……
என் நிலையை பற்றி அவர் எதுவும்
கேட்தில்லை.
மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம்.
அவரிடம் நான் மிகுந்த மரியாதை
வைத்திருந்தேன்..
ஒரு நாள் அவர் என்னிடம்.தம்பி
இன்று ஒரு ஸ்பெஷல் மீட்டிங் ஒன்று இருக்கிறது.
அது கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்காக நடத்தபடுகிறது…..என்
மனைவி அதில் கடைசியாக பாடுவாள்.
நீ கிட்டார் வாசிக்க முடீயுமா.?
என்றார்…
(47)
.நான் யோசித்தேன் .வீட்டிலேயே இருப்பதை விட இவருடன் போகலாம் மனதுக்கு
கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாமே என்று யோசித்தேன்..
அவருடன் சென்றேன்…
…காலை பத்து மணிக்கு மீட்டிங்
துவங்கியது..
நிறைய சொன்னார்கள்.
.எனக்கு பாதி புரிந்தது.பாதி புரியவில்லை..
ஒன்று மட்டும் சரியாக புரிந்து
கொண்டேன். இப்போது எனக்கு என்னைவிட ஒரு பெரிய சக்தி உதவிக்கு தேவைபடுகிறது….ஆனால் அதை
எப்படி கேட்பது அதுதான் தெரியிவில்லை.
இது வரையில் நான் கடவுளிடம் ஜெபித்தது
இல்லை.
என் தேவைகள் எல்லாமே எனக்கு என்
வீட்டில் கிடைத்தது….ஆக கடவுளிடம் கேட்பதற்கு ஒன்றும் இருந்ததில்லை…
ஒரு போராட்டமான நிலைதான்.
மாலை வந்தது….
அதற்குள் என் மனதுக்குள் ஒரு முடிவுக்கு
வந்து விட்டேன்…..கடவுளிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்…
கூட்டத்தின் முடிவுக்கு முன் அந்த
தேவ ஊழியர் மனைவி பாட ஆரம்பித்தார்கள்.நான் கிட்டார் வாசிக்க ஆரம்பத்தேன்…
அந்தப் பாடல்………….
(48)
என்னைப் படைத்தவரே
நான் பயனற்று போனேனே
இதய வீட்டை இருளாய் மாற்றி மூடி
வைத்தேனே
உணர்வு என்ற பாதையில் மாறினேன்
காற்றில் ஆடும் தீபமாயினேன்…………………………….
…
பாடலை முடிக்கு
முன் என் மனதில் தேவ சமாதானம் நிறைந்தது.
அதுவரையிலும்
போட்டோவிலும்.. எங்கள் வீட்டுச் சுவரிலும்
இருந்த
ஆண்டவர் இயேசுகிறிஸ்து
என் பக்கத்தில் நிற்பது போனற உணர்வு…
நான் இயேசுவை
சினேகமுடன் பார்த்தேன்.
அவர் என் கைகளை
பற்றியது போல இருந்தது……
கூட்டம் முடிந்து வரும்போது நான் அந்த ஊழியரிடம்
நான் இன்று
இயேசுவை பார்த்தேன் என்று கூறினேன்.அவர் சிரித்தார்…
தெரியும் என்றார்…
…எப்படி என்றேன்…
….அவர்தான் உன்னை இங்கு அழைத்து வரச்சொன்னார்.
என்றார்….
.எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது..
நான் அந்த ஊழியரை ஆச்சரியமுடன் பார்த்தேன்…….இவர்
வேறு உலகத்தை சேர்ந்தவரா..?
ஆண்டவர் சொன்னதால் அழைத்தேன் என்கிறார்…….நான்
கேட்டேன்
வேறு அவர் என்ன சொன்னார்..?
(49)
உங்கள் நட்பை உறுதிபடுத்த சொன்னார்..?
நட்பா..நானா…?அதுவும் கடவுளிடமா..?எப்படி என்றேன்…….
ஞானஸ்நானம்..என்றார்….
நான் வீட்டிற்கு தெரியாமலயே ஞானஸ்நானம் எடுத்தேன்.
அடுத்த இரண்டு நாளில் கல்லூரிக்கு சென்றுவிட்டேன்….
அப்போதும் என் தகப்பனார் ஒன்றும் தெரியாதவர்
போலவே நடந்து கொண்டார்..
ஆகவே இதற்கு எல்லாம் காரணம் பூர்ணிமாதான்..
பூமியல் எனக்கு நடந்த உருப்படியான காரியம்
ஒன்று உண்டென்றால் அது உடன்படிக்கை என்ற ஞானஸ்நானமே..
இவைகளை நான் நினைத்து கொணடிருக்கும் போது எங்கள
வாகனத்தின் அருகில் கூக்குரல் சத்தம் கேட்டது……
என்னவென்று திரும்பி பார்த்தேன்.
இருளின் மைந்தர்கள் மிகப் பெரிய கருப்பு தேர்
போன்ற ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அதிலிருந்துதான் கூக்குரல் வந்து கொண்டிருந்தது..
நான் கொஞ்சம் கவனித்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த
விஷயம் அது முழுவதும் மனித உடல்களால் செய்யபட்டது.மனித உடல்கள் துடித்து கொண்டு இருந்தது…
(50)
இருளின் மைந்தர்கள்
அந்த மனித உடல்களை துடிக்க துடிக்க சவுக்கு போன்ற ஒன்றால் சுற்றி நின்று கொண்டு அடித்து
துவைத்து கொண்டிருந்தார்கள்…
.
இவர்கள் அடி
தாங்க முடியாமல் அந்த மனித உடல்கள் அலறுவது மிக கடுமையாக இருந்தது….
.
எங்கள் வாகனம்
மெதுவாக நின்றது..
ஏன் நிறுத்தப்பட்டோம்
..? தெரியவில்லை…என்றான்
நான் இப்போது
இருளின் மைந்தர்களை மிக நெருக்கத்தில் பார்த்தேன்.
மிக அசிங்கமாக
இருந்தார்கள்..
வறண்ட தோல்களும்
கரடு முரடான உடல் அமைப்பும் கொண்டவர்கள்.
அவர்கள் கையிலுள்ள
ஆயுதம் விதவிதமாக தானாகவே மாறிக்கொண்டே இருந்தது….
.
.
அடிவாங்கும்
அந்த மனிதர்களை நெருக்கத்தில் பார்த்ததும் திடுக்கிட்டேன் ..
காரணம் அவர்கள்
உடலில் எந்த ஆடையையும் அணிந்திருக்கவில்லை
.
நான் ..அவர்கள்
ஏன் நிர்வாணமாக இருக்கிறார்கள் …?..என்றேன்.
.
என் பக்கத்திலிருந்த
தூதன் ……..ஆமாம் ……அவர்கள் நிர்வாணமாக ஆக்கபட்டிருக்கிறார்கள்…என்றான்……